Labels

Haiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரைவீச்சு (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (23) கலை (1) கவிதை (336) கவிதை. (7) கவிதைகள். (8) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (5) குறுங்கவிதைகள் (13) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (56) ஹைபுன் (48)

Friday, 14 February 2014

நிலவைப் பார்த்து நாய்கள் குரைக்கலாமா?

கவியரங்கக் கவிதை.
தலைப்பு.
நிலவைப் பார்த்து
நாய்கள் குரைக்கலாமா?
--வாசிததவர்.ந.க.துறைவன்.

நாய்கள்
நன்றியுள்ள பிராணி
வெளியிலும் வளரும்
வீட்டிலும் வளர்க்கப்படும்

பொறையோ,பிஸ்கட்டோ
போட்டு விட்டால்
வாலை ஆட்டியாட்டி
நன்றிளோடு அருகில் வந்து
நின்று சாப்பிட்டு மெல்ல
நகர்ந்துப் போகும்
மறுநாளோ,அல்லது
வேறொரு நாளோ
நம்மைக் கண்டால்
நம் அருகில் வந்து குழையும்
நன்றியோடு
நின்று வாலையாட்டும்-இதுவே
நாய்களின் குணம்.

நல்ல சாதி நாய்கள்
வற்பனைக்குக் கிடைக்கின்றன
மனிதனின்
சாதிப் பெயர்கள் போன்று
நாய்களுக்கும் சாதிப் பெயர்கள்
பல உண்டு
.
வளர்க்கப்படுவதெல்லாம்
நல்ல சாதி நாய்கள் தான்.
மனிதனுக்கு
நாற்பது வயதில் வருவது
வள்…வள்…என்று குரைக்கும்
நாய் குணமென்கிறார்கள்-அது
நாய் குணமல்ல
நல்ல நற்குணங்கள்.

மனிதர்கள் திட்டும் போது
போடா,நாயே-என்று தான்
திட்டுகிறார்கள்.
பக்கத்துப் பக்கத்து
வீட்டுக்கார்களுக்கு
ஏதோவொரு காரணத்தினால்
வாய்ச் சண்டை
காரசாரமான வாய்ச் சண்டை
வாய் ஓய்ந்துப் போனபோது,
மலையைப் பார்த்து
நாய் குரைக்கட்டும்
வாடி உள்ளே-என்று
மனைவியை அழைத்துச் சென்றான்
.
மலையைப் பார்த்து
நாய்கள் குரைக்கின்றன
மலைகளில் செழித்து வளரும்
மரங்களை வெட்டிக் கடத்துகிறார்கள்
முலீகைச் செடிகளைக் கடத்துகிறார்கள்
விலங்குகளை வேட்டையாடி
வெளிநாடுகளுக்குக் கடத்துகிறார்கள்
கடத்தல்காரர்களுக்கு எதிராக
நாய்கள் குரைக்கின்றன
மலைகளுக்கு ஆதரவாகக் குரைக்கின்றன
நன்றாகக் குரைக்கட்டும்
.
வீடு தேடி வரும் அன்னியரைக்
கண்டால் துள்ளி எழுந்துக் குரைக்கும்
அதட்டினால் அடங்கி விடும்.
குலைக்கும் நாய்கள்
வேட்டையாடாது என்று சொல்கிறதர்கள்.
இப்பொழுது,வேட்டை நாய்கள்
எங்கே இருக்கிறது?
வீட்டு நாய்கள் தான்
காரில் பவனி வருகின்றன.

நாய்களுக்கு மோப்பச் சக்தி அதிகம்
நள்ளிரவு  வேளையில்
நடமாடும்
அன்னிரைக் கண்டால்
தொலைவிலிருந்தே குரைக்கும்
வேகமாய் குரைக்கும்

நள்ளிரவில் ஆனந்தமாக
நண்பர்களோடும்,காதலியோடும்
விளையாடிக் களிக்கும் நேரம்.
வெட்ட வெளி என்றும்
வெட்கப்படுவதில்லை
இரவு என்றும் தெரியாது
பகலென்றும் தெரியாது
 இணைத் தேடியலைந்து
புணர்ச்சியில் மெய் மறந்திருக்கும்
.
நிலவைப் பார்த்து
நாய்கள் குரைக்குமா?
நிலவைப் பார்த்து
நாய்கள் குறைப்பதில்லை
மேகங்கள் ஓடும்-நிழல்
உருவைப் பார்த்து திருடன் என்று
நினைத்துக் குரைக்கின்றனவோ?

நாய்கள்
நிலவைப் பார்த்து மட்டுமல்ல
எதைக் கண்டாலும்
குரைக்கவே செய்திடும்.
குரைத்து எச்சரிப்பது
அதன் பெருங் குணம்
குரைச்சலைக் குரைச்சி
மதிப்பீடு செய்வது
 மனிதனின் குணம்
குரைப்பது நல்லது
குரைக்காமலிருப்பது தவறு
.
நாய்களுக்கு எப்பொழுதும்
சத்தியம் பிடிக்குமாம்
உண்மை பேசிய
உத்தமர் தர்ம புத்திரர்
மோட்சம் அடைந்த போது
அவருடன் சென்ற நாயும்
மோட்சம் அடைந்ததாக
மகாபாரதம் சொல்கிறது

இப்பொழுது,
மனித சமுதாயத்திற்கு
மிகத் தேவையாகிறது
நாய்களின் சத்தியம்
நாய்களின் நன்றி

*வேலுôர்-காட்பாடி.முத்தமிழ்மன்றம்
06-01-014 அன்று நடத்திய பொங்கல்
விழா கவியரங்கில் வாசிக்கப்பட்ட
கவிதை.
கவியரங்கக் கவிதை.
தலைப்பு.
நிலவைப் பார்த்து
நாய்கள் குரைக்கலாமா?
--வாசிததவர்.ந.க.துறைவன்.
நாய்கள்
நன்றியுள்ள பிராணி
வெளியிலும் வளரும்
வீட்டிலும் வளர்க்கப்படும்
பொறையோ,பிஸ்கட்டோ
போட்டு விட்டால்
வாலை ஆட்டியாட்டி
நன்றிளோடு அருகில் வந்து
நின்று சாப்பிட்டு மெல்ல
நகர்ந்துப் போகும்
மறுநாளோ,அல்லது
வேறொரு நாளோ
நம்மைக் கண்டால்
நம் அருகில் வந்து குழையும்
நன்றியோடு
நின்று வாலையாட்டும்-இதுவே
நாய்களின் குணம்.
நல்ல சாதி நாய்கள்
வற்பனைக்குக் கிடைக்கின்றன
மனிதனின்
சாதிப் பெயர்கள் போன்று
நாய்களுக்கும் சாதிப் பெயர்கள்
பல உண்டு.
வளர்க்கப்படுவதெல்லாம்
நல்ல சாதி நாய்கள் தான்.
மனிதனுக்கு
நாற்பது வயதில் வருவது
வள்…வள்…என்று குரைக்கும்
நாய் குணமென்கிறார்கள்-அது
நாய் குணமல்ல
நல்ல நற்குணங்கள்.
மனிதர்கள் திட்டும் போது
போடா,நாயே-என்று தான்
திட்டுகிறார்கள்.
பக்கத்துப் பக்கத்து
வீட்டுக்கார்களுக்கு
ஏதோவொரு காரணத்தினால்
வாய்ச் சண்டை
காரசாரமான வாய்ச் சண்டை
வாய் ஓய்ந்துப் போனபோது,
மலையைப் பார்த்து
நாய் குரைக்கட்டும்
வாடி உள்ளே-என்று
மனைவியை அழைத்துச் சென்றான்.
மலையைப் பார்த்து
நாய்கள் குரைக்கின்றன
மலைகளில் செழித்து வளரும்
மரங்களை வெட்டிக் கடத்துகிறார்கள்
முலீகைச் செடிகளைக் கடத்துகிறார்கள்
விலங்குகளை வேட்டையாடி
வெளிநாடுகளுக்குக் கடத்துகிறார்கள்
கடத்தல்காரர்களுக்கு எதிராக
நாய்கள் குரைக்கின்றன
மலைகளுக்கு ஆதரவாகக் குரைக்கின்றன
நன்றாகக் குரைக்கட்டும்.
வீடு தேடி வரும் அன்னியரைக்
கண்டால் துள்ளி எழுந்துக் குரைக்கும்
அதட்டினால் அடங்கி விடும்.
குலைக்கும் நாய்கள்
வேட்டையாடாது என்று சொல்கிறதர்கள்.
இப்பொழுது,வேட்டை நாய்கள்
எங்கே இருக்கிறது?
வீட்டு நாய்கள் தான்
காரில் பவனி வருகின்றன.
நாய்களுக்கு மோப்பச் சக்தி அதிகம்
நள்ளிரவு  வேளையில்
நடமாடும்
அன்னிரைக் கண்டால்
தொலைவிலிருந்தே குரைக்கும்
வேகமாய் குரைக்கும்
நள்ளிரவில் ஆனந்தமாக
நண்பர்களோடும்,காதலியோடும்
விளையாடிக் களிக்கும் நேரம்.
வெட்ட வெளி என்றும்
வெட்கப்படுவதில்லை
இரவு என்றும் தெரியாது
பகலென்றும் தெரியாது
 இணைத் தேடியலைந்து
புணர்ச்சியில் மெய் மறந்திருக்கும்.
நிலவைப் பார்த்து
நாய்கள் குரைக்குமா?
நிலவைப் பார்த்து
நாய்கள் குறைப்பதில்லை
மேகங்கள் ஓடும்-நிழல்
உருவைப் பார்த்து திருடன் என்று
நினைத்துக் குரைக்கின்றனவோ?
நாய்கள்
நிலவைப் பார்த்து மட்டுமல்ல
எதைக் கண்டாலும்
குரைக்கவே செய்திடும்.
குரைத்து எச்சரிப்பது
அதன் பெருங் குணம்
குரைச்சலைக் குரைச்சி
மதிப்பீடு செய்வது மனிதனின் குணம்
குரைப்பது நல்லது
குரைக்காமலிருப்பது தவறு.
நாய்களுக்கு எப்பொழுதும்
சத்தியம் பிடிக்குமாம்
உண்மை பேசிய
உத்தமர் தர்ம புத்திரர்
மோட்சம் அடைந்த போது
அவருடன் சென்ற நாயும்
மோட்சம் அடைந்ததாக
மகாபாரதம் சொல்கிறது
இப்பொழுது,
மனித சமுதாயத்திற்கு
மிகத் தேவையாகிறது
நாய்களின் சத்தியம்
நாய்களின் நன்றி
*வேலுôர்-காட்பாடி.முத்தமிழ்மன்றம்
06-01-014 அன்று நடத்திய பொங்கல்
விழா கவியரங்கில் வாசிக்கப்பட்ட
கவிதை.

No comments:

Post a Comment