Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Friday 27 February 2015

நிலைமை...!! [ கவிதை ]


*
ஒதுங்கிக் கொள்பவன் கோழை அல்ல
ஒதுக்கி வைப்பவன் தோழனல்ல.
*
வசதியைக் காட்டுகிறது தங்கத் தாலி
ஏழ்மையைக் காட்டுகிறது மஞ்சள் தாலிக் கயிறு.
*
நீரில்லாத நிலம் பாழ்
பெண் வாழாத வீடு பாழ்.
* 

Thursday 26 February 2015

ஏமாற்றம்...!! [ கஜல் ]


*
அவனை உறுதியாக
மணப்பதாகச் சொன்னாய்
அவன் நம்பி ஏமாந்தான்.
அதை நினைத்து
அவன் வேதனைப்படுகிறான்
உன்னிடம் பெரும்
மாற்றம் வருமென்று
எதிர்ப்பார்த்தான்
இல்லையென்பதை
இலைமறை காயாய்
உணர்த்தி விட்டாய்.
இப்பொழுது
அவனின் அவல நிலை
நினைத்தால்
நீயே
நிலைக் குலைந்துப் போவாய்.
மனத் தடுமாற்றம்
மனநிலையைப் பாதிக்கும்
மன உறுதியே
மனநிம்மதியைத் தரும்
மறந்து விடாதே…?

Wednesday 25 February 2015

துயரம்...!! [ சென்ரியு ]


*
பறவைகள் அறிகின்றன
வெட்டப்படும்
மரங்களின் துயரம்.
*
எங்கே போயின?
சத்தமிடும் தவளைகள்
நீரில்லாதக் குளம்.
*
பொழுதடைந்த நேரம்
கூடு திரும்பின பறவைகள்
மழையில் நனைந்து…!
*

Tuesday 24 February 2015

அவகாசம்...!! [ கவிதை ]


*
பேசிக் கொண்டிருந்தவர்கள்
பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள்.
பேசாமலிருந்தவர்கள் மெல்ல
பேசத் துவங்கினார்கள்.
இப்பொழுது தான் அவர்களுக்கு
எந்தப் பூ என்ன மணமென்று
புரிந்துக் கொள்ள
கால அவகாசம்
வாய்ந்திருக்கிறதோ?
*
பொன் கிடைத்தாலும்
புதன் கிடைக்காது என்கிறார்கள்
பெண் கிடைத்தாலும் இப்பொழுது
கல்யாணமண்டபம் கிடைப்பதில்லை.
*

Monday 23 February 2015

காதல்...!! [ சென்ரியு ]


*
உணர்வுகளை வெல்கிறது
மொழிகளைக் கடக்கிறது
உன்னதமான காதல்.
*
உயிர்மையத்தின் உண்மைத் தெளிய
இயற்கைக் கற்றுக் கொடுத்தப்
பேரின்ப விளையாட்டு காதல்.
*
இரத்தக்கறைப் படிந்திருக்கிறது
கல்லறையில் உறங்குகின்றது
வரலாறு படைத்தக் காதல்
*

Saturday 21 February 2015

விருந்து...!! [ ஹைக்கூ ]


*
சுற்றுச் சூழல் மாசு
தோல்கழிவு நீரில் மூழ்கி
கூலித் தொழிலாளர்கள் பலி.
*
வாழையிலையில்
விருந்து சாப்பிட்டன
தெரு நாய்கள்.

*

காட்சிகள்....!! [ புதுக்கவிதை ]

காட்சிகள்.
*
பேரூந்து நிற்குமிடம்
மக்கள் கூட்டம்
வருகின்ற பேரூந்தின்
எண், செல்லுமிடம்
உற்றுக் கவனித்தபடி
நின்றிருக்கின்றனர்
பஸ் ஏற்ற வந்த
உறவினர்கள்
அவசரமாய் ஆபிஸ்
போகிறவர்கள்.
பள்ளி கல்லூரிச் செல்லும்
மாணவ, மாணவிகள்
காதலியை வழியனுப்ப வந்த
காதலர்கள்.
வேறொரு தினுசாய்
பார்வையை மேய விடும்
காமர்கள் என
எத்தனையோ பேருக்கு
நிழல் தரும்
நிழற்குடையின் கீழ்
அமர்ந்திருக்கும்
அனாதைப் பாட்டி
அறிவாள் இன்னும்
எத்தனையோ அன்றாடக்
காட்சிகள்.

*

Friday 20 February 2015

வாழ்த்துக்கள்...!!

உலக மக்கள் அனைவருக்கும்
“ உலகத் தாய்மொழி நாள் ”
நல்வாழ்த்துக்கள்.
*

Thursday 19 February 2015

தெளிவு...!! [ கவிதை ]

தெளிவு…!!
*
எவரிடமும் பார்க்க முடிவதில்லை
தேங்காயின் வெள்ளை உள்ளம்.
*
நினைத்துக் கொண்டிருக்கும் போதே
மறந்து விடுகிறது அந்த நினைப்பு.
*
புரிந்துக் கொள்வது சிரமமானது
புரிந்து விட்டால் எளிமையானது.
*

பூனை...!! [ சென்ரியு ]

*
காலடிச் சத்தம் கேட்டு
குறுக்கே பதறியோடியது
இருட்டில் இருந்தப் பூனை.
*

Wednesday 18 February 2015

சுபம்...சுகம்...!! [ புதுக்கவிதை ]


*
பேரூந்தில், நடைபாதையில்
திருமணக் கூட்டம்
திருமண மண்டபங்களில்
மாப்பிள்ளை – பெண் வரவேற்பு
கலகலப்பானப் பேச்சுக்கள்
இசைக் கச்சேரியின் இரைச்சல்
வரிசையில் நின்று
பரிசுப் பொருள்கள்
அன்பளிப்புச் செய்து
வாழ்த்துபவர்கள்
சிரித்த முகத்தோடு
வீடீயோ, போட்டோவுக்கு
போஸ் கொடுத்துக்
கைக் குலுக்குகிறார்கள்.
உணவு கூடத்தில்
சத்தமிட்டு பரிமாறல்கள்
தேவையானவற்றைக் கேட்டு
விரும்பிச் சாப்பிடுபவர்களின்
அவசரச் சத்தங்கள்.
முடித்தவர்கள் விரைந்து
எழுந்துப் போய் கைகழுவி
வெளியேறுபவர்களின்
கைகளில் மஞ்சள் திருமணத்
தாம்பூலப் பைகள்.
பரபரப்பாய் விடைபெற்று
வெளியேறுபவர்கள்  
பஸ், கார், பைக்கிள் பயணம்.
விடியற்காலை
சுபமுகூர்த்தம்
சுபம்…சுபம்…சுபம்…
வாழ்க்கைத் துவங்கி
பகிர்ந்திடப் போகிறது     
சுகம்…சுகம்…சுகம்…!!
*

Tuesday 17 February 2015

மலைகள்...!! [ சென்ரியு ]

*
N.G. THURAIVAN"s SENRYU.
*
இயற்கைப் பெருஞ் செல்வங்கள்
வெட்டிக் கொலைச் செய்கிறார்கள்
ஆதரவற்ற மலைகள்.
*
சிரித்துப் பார்த்தே யில்லை
கூத்துக் கலைஞன்
கட்டியங்காரன் மனைவி.
*

வெற்றி...!! [ கவிதை ]


*
எப்பொழுதாவது தான் கிடைக்கும்
எப்பொழுதும் கிடைக்காது வெற்றி.
*
எல்லோரையும் டார்ச்சர் செய்கிறகனை
வீட்டில் டார்ச்சர் செய்கிறார்கள்.
*

Sunday 15 February 2015

துக்கப் பால்...!! [ கவிதை ]


*
உன் மரணச் செய்தி
உடனடியாய் அறிந்து
பரபரப்பாய் சுடலைக்கு வந்து
புன்னகைச் சிந்திய
உன் வாய்க்கு
வாக்கரிசிப் போட்டான்.
நன்றியோடு
இன்பத்துப் பால்
ஊட்டிய உனக்குத்
துக்கப் பால்
ஊற்றுகிறான் பார்….!!
*

Friday 13 February 2015

காதலர் தினம்....!! [ புதுக்கவிதை ]


*
கனியைக் கடித்தச்
சுவையிலிருந்து தான்
தொடங்கியது
ஆதிக் காதல்.
இச் சுவையின் இனிப்பு
மனிதனுக்கு மன்மதப்
போதையூட்டிவிட்டதால்
யுகயுகமாய் பருகி
ருசித்து வருகின்றான்.
உணர்ச்சிகளில் இரவு
உற்சாகக் கொண்டாட்டம்
உடல் வலி மெய் மறந்து
காமத்தை வென்று
உள்ளத் தெளிவு பெறுகின்றான்.
பிரபஞ்சத்தின் உள்நுழைந்து
உள்ளொளிக் காண்கின்றான்.
காதல் இயற்கையின்
உள்மன வெள்ளோட்டம்
உலகமெங்கும் ஊற்றெடுத்து
உற்சாக வெள்ளமாய் பாயும்
சிறுதுளிப் பெருவெள்ளம்
காதல் கொடுத்த பரிசுகளே
இந்த உலக மக்கள்
யாதும் ஊரே யாவரும் கேளீர்
யாவரும் காதலர் யாவரும் வாழ்வர்
தீது என்றும் பிறர் தர வாரா…!!
*

Thursday 12 February 2015

காதலர் தினம்...!!


அழகை அழகை
ஆராதிக்கும் காதல்
கண்ணும் கண்ணும்
பேசிடும் காதல்
மனமும் மனமும்
நெருங்கி இணைந்திடும் காதல்.
காதலர் தினமே வருக
காதலர்களை வாழ்த்திடுவாய்
நாளை உற்சாகமாய்
காதலர் தினமே வருக…!!
*

புரிதல்...!! [ ஹைபுன் ]

*
N.G. THURAIVAN'S HAIBUN.
*
இடுப்பில் இருக்கும் குழந்தை,  அம்மாவின் மாராப்புத் துணியை இழுத்து இழுத்து எதையோ சொல்ல விரும்புகிறது. அதைக் கவனிக்காமல், அப்படியென்ன தான் அடுத்த வீட்டம்மாளிடம் அவசரமானப் பேச்சோ? தெரியவில்லை. குழந்தையின் நச்சரிப்புத் தாங்காமல் “ என்னடா, சொல்லித் தொலையேன்? என்றாள் தாய். குழந்தைக் சுட்டிக் காட்டியப் பக்கம் பார்த்தாள்.
வீட்டுவாசற்படியில் எலியைப் பிடித்துக் குதறிக் கொண்டிருந்ததுப் பூனை. பதட்டமாய் பதறினாள் தாய்.
புரிய வைத்தது குழந்தை
பக்கத்து வீட்டார் உறவு                                               
எலியும் பூனையும் சண்டை.
*

Wednesday 11 February 2015

உணவகங்கள்...!! [ கவிதை ]


*
இந்திய நெடுஞ்சாலை
இரவு நேர உணவகங்களில்
கட்டிலில் அமர்ந்து
ஒய்வாய்
சாப்பிடுகிறார்கள்
வடமாநிலத்திலிருந்து
பயணித்து வரும்
சரக்கு லாரி ஓட்டுநர்கள்  
மொழி உணர்வைக் கடந்து
ஒற்றுமையைப் பேணுகிறது
பசி தீர்க்கும் உணவகங்கள்.
*

Tuesday 10 February 2015

குறும்புகள்...!! [ சென்ரியு ]

*
N.G. THURAIVAN'S SENRYU.
*
பூமியில் மிஞ்சப் போவதென்ன?
ஆறு, குளம், ஏரி, மலைகள்
களவு போனால்….!!
*
பக்கத்து இருக்கைக்காரர் பேச்சு
மற்றவர்களைச் சிரிக்க வைத்தது
அவர் சொன்ன நகைச் சுவை.

*

பதற்றம்...!! [ ஹைக்கூ [

*
N,G, THURAIVAN'S HAIKU.
*
பார்வை எதிலோ லயித்திருந்தது
எதையோ நினைக்கிறது மனம்
சுடர்விடும் சிந்தனையில் சூரியன்.
*
எதிர்ப் பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம்
ஏமாந்தவர்களுக்கு பதற்றம்
சலசலத்து ஒடுகிறது ஆற்றுநீர்.
*
இன்னும் எவரொருவராலும்              
முழுமையாக எழுதப்படவில்லை
எந்தக் கேள்விக்குமான பதில்.
*

Monday 9 February 2015

அழகு...!! [ கவிதை ]


*
மகளின் அழகை அம்மா பார்க்ககிறாள்
அம்மாவின் அழகை மகள் பார்க்கிறாள்.
*
மனதில் நிகழும் மாற்றத்தைக்
கண்ணாடியில் பார்த்து அறிகிறாள்.
*

Sunday 8 February 2015

இளநீர்க்காய்கள்...!! [ கவிதை ]

இளநீர்க் காய்கள்…!!
*
சின்ன இடம் கிடைத்தால்
நெடுஞ்சாலையோரமாய்
புதிய புதியதாய் கடைகள்
முளைத்து விடுகின்றன.
வேகமாய் வந்தும் போய்க்
கொண்டிருக்கும் பயணிகள்
வாகனங்களை நிறுத்தி
மறைவிடந் தேடிச்
சிறுநீர்க் கழிக்கப் போகிறார்கள்.
தாகம் தணி்த்திடுவதற்கு
என்ன கிடைக்குமென
நோட்டமிடுகிறார்கள்.
பலப் பயணிகளின்
பார்வையைக் கவர்கிறது
பெரிய சிறிய
இளநீர்க் காய்கள்.
கையில் இளநீர்
வாயில் உறிஞ்சிகுழல்
குடிப்பவர்கள்
பார்வையெல்லாம்
எங்கெங்கோ. அப்பொழுது
அருகில் வந்து நின்று
கை நீட்டுகிறாள்
அழுக்கு ஆடையணிந்த
அழகானச் சிறுமி….!!
* 

Friday 6 February 2015

பூண்டு மருத்துவம்...!!

‘ஜட்ஸ் டக்கோலா’ – பூண்டு மருத்துவம்.
*
மருத்துவக் குணம் நிறைந்த பூண்டுகளை ஜப்பானியர்கள் அதிக அளவில்
விரும்புகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் சூலை மாதம் பூண்டு விளைவிக்கப்படுகிறது. பூண்டுகளைப் பல விதங்களில் ஜப்பானியர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பூண்டு ஐஸ்க்ரீம், பூண்டு பியர் எல்லாம் கொண்டு வந்தவர்கள் கடந்த மாதம் பூண்டு கோலாவை அறிமுகம் செய்திருக்கிறார்கள். கோலாவில் பூண்டுகளை மிதக்க விட்டிருக்கிறார்கள். பூண்டுப் பிரியர்கள் கோலா குடிக்கும்போது பூண்டுகளை மென்று சாப்பிட்டுவிடலாம். பிடிக்காதவர்கள் கோலாவை மட்டும் குடித்து விடலாம்.
‘ஜட்ஸ் டக்கோலா’ என்ற பெயரில் வெளிவந்திருக்கும் பூண்டு கோலாவுக்கு ஜப்பானியர்கள் வரவேற்பு அளித்துவிட்டனர்.
ஆதாரம் :- தி இந்து – நாளிதழ் – சனி – 07-02-2015.
தகவல் :- ந.க. துறைவன்.

*    

மல்லிகைப் பூ...!! [ கவிதை ]



*
பிக்பாக்கெட்டில் பறிபோகுமென்று
பாக்கெட்டைத் தொட்டுப் பார்க்கிறான்.
*
அருகில் நிற்பவன் முகர்ந்து வருகிறான்
நிற்கும் பெண்ணின் மல்லிகைப் பூ வாசம்.
*
கஷ்டங்கள் தெரிந்தவன் கர்மவான்
கஷ்டங்களே தெரியாதவன் தர்மவான்.

*
ந.க. துறைவன். 

Thursday 5 February 2015

மனஅலைகள்...!! [ ஹைபுன் ]

*
N.G. THURAIVAN'S HAIBUN. 
*
அந்த மனிதனின் வாழ்வின் எந்தவொரு கூறுகளையும், நடைமுறைகளையும்,   அணுமுறைகளையும், அடையாளங்களையும், அறநெறிகளையும் அனுபவப் பூர்வமாகப் பழகிக் பார்க்காதவன், கேள்விப்படாதவன், வேறு எவரோ சொல்கின்ற வெற்று வார்த்தைகளின் பொய்மைகளைக் கேட்டு, அந்த மனிதனின் குணாதியங்களைப் பற்றி தவறாக பேசுவதும், அணுகுவதும், அவமானப்படுத்துவதும் எத்தனை அசிங்கமான மனஉணர்வின் வெளிப்பாடு.   
குளத்தில் கல் எரிந்தான்
அலைகள் விரிந்து அலைந்தது
நிமிர்ந்து நின்றன தாமரைப் பூக்கள்.

Wednesday 4 February 2015

விருட்சங்கள்...!! [ ஹைக்கூ ]

*
N.G. THURAIVAN'S HAIKU.
*
தொலைவில் வருகின்றன
கூட்டமாய் ஒட்டகச்சிவிங்கிகள்
ஈச்சமரங்களுக்கு அச்சம்.
*
வெளியே முள் உள்ளே பழம்
ஆசையோடு வாங்குகிறார்கள்
அன்னாசிப் பழம்
*
வயோதிகம் பற்றி அறியுமோ?
ஆயிரங்காலமாய் வளர்ந்து நிற்கும்
கற்பக விருட்சங்கள்.

*

அறிதல்...!! [ கவிதை ]


*
உன்னிதயச் சுவரில்
சித்திரமாய் வரைந்து
வைத்திருக்கிறாயே?
அவன் உருவம்.
அது யாருக்குமே
வெளியில் தெரியாமல்
வழிப்பட்டு,  நீயெங்யோ?
வாழ்ந்துக் கொண்டிருப்பது
அனுமானிக்க முடிகிறது.
அறிந்தவனுக்குத் தெரியும்
அது உனக்கும் புரியும்….!!

*

Tuesday 3 February 2015

தூங்காமல் தூங்கி...!! [ ஹைக்கூ ]

N.G. THURAIVAN'S HAIKU.
*
கிரிவலப் பாதை நெடுக
பக்தர்கள் பேச்சின் இரைச்சல்
அச்சத்தில் பறவைகள்.
*
கருந் திராட்சைப் பழம்
ருசித்துச் சாப்பிடும் தருணம்
பால் குடித்த நினைவு.
*
செடி மறைவில் ஒய்வாய்
தூங்காமல் தூங்கி அழகாய்
விழித்திருக்கிறது முயல்.

*