Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Tuesday 17 December 2019

சத்தியம்

1.
சத்தியம் சத்தியம்
சத்தியம் மீது பொய்
சத்தியம் செய்தான்
சத்தியமாகவென...
2.
மழையில்லாத நள்ளிரவு
மின்னொளி வெளிச்சம்
என்ன அவசரமோ?
தனிமையில் நடக்கிறான்
துணிந்து வேகமாய்
சந்தேகப் பார்வைகள் 
எங்குமில்லை அந்நேரம்.
3.
இன்று வீட்டிற்கு வந்த நண்பன்
மீண்டும் சந்திப்போமென்று கூறி
விடைபெற்றான்
டீ கூட குடிக்காமல் 
அவசரமாய்...
4.
நூறாண்டு முன்னாள்
நன்கொடை அளித்தவர் பெயர்
பதிக்கப்பட்டிருக்கிறது 
அது இன்னும் அழியாமல் இருக்கிறது
மலைப் பாதைப் படிகளில்.
5.
மீண்டும் மீண்டும்
சத்தியம்
செய்துவிட்டு செய்துவிட்டு
தவறு செய்கிறான்
சத்தியம் என்பது
நேர்மையான பொய்யோ?
6.
உண்
உறங்கு
உடலுறவு கொள்
உறவு வளர்
உயிர் விடு.
7.
தரையில் ஈரம்
குறுக்கே மரக்குச்சிகள் மாற்று பாதையில்
பயணிக்கிறது
ரயில் பூச்சி.
8.
பட்டினத்தார் கையில்
ஞானக் கரும்பு
காமாட்சி அம்மன் கையில்
காமன் கரும்பு
குழந்தையின் கையில்
இனிக்கும் கரும்பு.
9.
சில்லென்று ஊதல்காற்று
அகல்விளக்கு சுடரொளி
அணையாமல் அசைகிறது
என் மனம் அங்கே
சாய்ந்து சாய்ந்து.
10.
நனையாமல் இருக்கும்
என்னை 
வெளியில் அழைக்கிறது மழை
என் தேகம் தழுவி
சில்லிட வைக்க...

ந க துறைவன்.



Monday 9 December 2019

ஆசைகள்

1.
ஆசையை நான் விட்டாலும்
ஆசை என்னை விடமாட்டேன் என்கிறது.
2.
ஆசையைப் பூர்த்தி செய்துக் கொள்வதற்கும்
மற்றொரு ஆசை தேவைபடுகிறது. 
3.
வீரியமற்றவனுக்கு
வீராப்பு அதிகம்.
4.
நினைத்தபோது நிறைவேறாதது
நினைக்காதபோது நிறைவேறியது.
5.
சிகரெட் கையில் வைத்துக்கொண்டு
அடுத்தவரிடம் தீப்பெட்டி கேட்கிறான்.
6.
முன் சாமத்தில் 
விழித்தெழுகிறது காமம்.
7.
தூற்றுவார்கள் மேல்
தூற்றுகிறது மாமழை.
8.
புகைப் பனி
உடலுக்கு பகைப்பனி.
9.
மறக்க முடியாததும் காதல்
மறக்கக் கூடியதும் காதல்.
10.
சோகங்களுக்குள் மறைந்திருக்கிறது
சொந்தமான புன்சிரிப்பு.

ந க துறைவன்.

தீபம்