Labels

Haiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (20) கலை (1) கவிதை (332) கவிதை. (7) கவிதைகள். (7) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (2) குறுங்கவிதைகள் (12) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (55) ஹைபுன் (48)

Wednesday, 31 May 2017

தோள் சுமக்கும் கோணிப்பை..!! ( நிகழ்வு )
பெரியார் பார்க்கில் நண்பர்களோடு ஒரு சந்திப்பு. மதியம் சாப்பிட்டு முடித்த பின் சிறிய உரையாடல். ஓய்வு. அதற்குப் பிறகு புறப்படுவதற்கு ஆயத்தம். அமர்ந்திருந்த இடத்தில் என்ன என்ன வைத்திருந்தோம் என ஒர் பார்வை. தண்ணீர் பாட்டிலில் இருந்தத் தண்ணீரைக் குடித்தேன்.
அக்காலித் தண்ணீர் பாட்டிலைப் புல்தரையி்ல் எறிவதா? குப்பையில் எறிவதா? என்று யோசித்தேன். சட்டென வேகமாகப் புல்தரையில் வீசினேன். எங்கிருந்தோ வேகமாக வந்த பேப்பர் பொறுக்கும் பையன் அதனை எடுத்து தனது கோணிப் பையில் போட்டுக் கொண்டான். மேலும் ஏதேனும் கிடைக்குமா என்று சுற்றுமுற்றும் பார்த்து விட்டு வேறிடம் பார்த்து நடந்தான்.
மனம் கொஞ்சம் அவனுக்காக அனுதாபப்பட்டது. இத்தனைச் சிறிய வயதில் எத்தனைப் பொறுப்பான அக்கரையுடன் கூடிய உழைப்பு. இவனைப் போன்று இன்னும் எத்தனை ஆயிரமாயிரம் சிறுவர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வயிறு வளர்த்து வருகிறார்கள். அவன் முகம் என் மண்டையில் இரவெல்லாம் நிழலாடியது.

ந.க.துறைவன்

சும்மா இரு...


சும்மா
இருப்பவனைப்
பற்றி தான்
சதா நேரம்
பாடுகிறார்கள்.
பேசுகிறார்கள்.
ந. க. துறைவன்.

யானைகள் பற்றி சில தகவல்கள்...!! ( துணுக்குகள் )
*
1. ஒரு யானையின் சராசரி ஆயுள் 60 – 70 ஆண்டுகள்.
2. யானைகள் சுமார் 60% சதவீதம் அளவுக்கு புல்லை மட்டுமே  
  உணவாக எடுத்துக் கொள்கின்றன.
3. ஒரு யானைக்கு தினமும் 250 – 300 கிலோ உணவு தேவைப்படுகிறது
   இதை உண்டு முடிக்க 16 மணிநேரம் எடுத்துக்கொள்கின்றன.
4. ஒரு நாளைக்கு ஒரு யானைக்கு அதிகபட்சம் 150 லிட்டர்
  தண்ணீர் தேவைப்படும்.
5. தமிழகத்தி்ல் யானைகளின் எண்ணிக்கை ஒரளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதே சமயம் ஆண் யானைகளின் எண்ணிக்கை கணிசமாக சரிந்து வருகிறது.
6. கர்நாடகத்தில் நாகர்ஹோலே சரணாலயம், தமிழகத்தில் முதுமலை சரணாலயம், கேரளத்தில் பெரியார் சரணாலயம் இயங்கி வருகின்றன.
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 29-05-2017.

தகவல் ; ந.க.துறைவன். 

Monday, 29 May 2017

வாட்ஸப் சர்க்கார்...!! ( துணுக்கு )வாரணாசியில் என்னை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சுற்றிய ராம் சர்வ சாதாரணமாகக் கேட்டார். ” யோகி என்ன, சின்ஹா என்ன, முதல்வராக யார் இருந்தால் என்ன? நாட்டில் நடப்பது இப்போது வாட்ஸப் சர்க்கார் தானே!

கட்டுரையாளர் சமஸ் - தி இந்து – 29-05-2017. 

புல்வெளி

நடைமுறை...!!

நீங்கள் மக்களை சரியான முறையில் நடத்துகிறீர்கள் என்றால், அவர்களும் உங்களை சரியான முறையில் நடத்துவார்கள்.
      - பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்.

சிந்தனைக்கு.

தனது மண் வளத்தை அழிக்கும் ஒரு நாடு தன்னையே அழித்துக் கொள்கிறது.
      - பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்.

Saturday, 27 May 2017

பருஉடல்...!! ( கவிதை )

பருஉடல்…!!
*
நேற்றைய மனச்சோர்வு இன்றும்
நீங்கவில்லையெனினும் உளம்
திடமான தெம்புடன் இருப்பதாகவே
உணர்கிறேன். யாரோ ஒருவரின்
குரலின் தொனி பார்வை என்மீதான
அக்கரையோடு அழைப்பு விடுக்கிறது.
இருப்பினும் அதனை செவியுறுகிறேன்
என்ன சொல்வாரோ என்ற தயக்கம்?
என்ன கேட்பாரோ என்ற வெட்கம்?
எப்படி உணர்வாரோ என்ற அமைதின்மை?
எனக்குள் வெளியேறாத வார்த்தைகள்
உள்ளுக்குள் ஒளிந்துக் கொண்டிருக்கிறது.
என்னறை எங்கும் வெளிச்சம் மறைந்து
இருள் சூழ்கிறது. வேம்புக் காற்றில் அலைகின்றன
இலைகள். மங்கிய ஒளியெங்கும் பரவிய நேரம்
பறவைகள் ரெண்டு கடந்து பறந்து போகின்றன.
திறந்த சன்னல் வழியே கருப்பு இருட்டை
ஊடுருவிப் பார்க்கிறேன். மின்கம்பத்தின் விளக்கின்
கீழ் விளையாடிக் களிக்கின்ற விட்டில்கள்
மரணத் தவிப்பில் உதிர்ந்து உதிர்ந்து வீழ்கின்ற
அந்நொடிப்பொழுது  கனத்துரைந்து அதிர்கின்றன
என்புதோல் போர்த்திய என் பருஉடல்…!!
ந.க.துறைவன்.

*

Friday, 26 May 2017

செய்திகள் என்ன சொல்கின்றன? ( துணுக்குகள் )*
1. “ கறிக்காக மட்டுமே வளர்க்கப்படும் கோழிகளின் உடலில் அதிக அளவில் ரசாயனம் செலுத்தப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு பிராய்லர் கோழிகளை அதிகம் தரக்கூடாது. நோய்வாயப்பட்டு இறக்கும் கோழிகளை உண்ணக்
கூடாது. அதனால் வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள் உள்ளிட்டவை ஏற்படும். தொடர்ந்து உண்டால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழக்கும் அபாயம் ஏற்படும். ”
               பெண் குழந்தைகளைக் காக்க பிராய்லர் கோழி கறியை தவிர்ப்பது நல்லது.       
2. புதுச்சேரி அரசு நிர்ணயித்த கட்டணத்தை தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஏற்க மறுப்பு.
               அரசு நிர்ணயிக்கும் கட்டணங்களை ஏற்க மறுக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது. அதற்கான சட்டத் திருத்தம் அரசு கொண்டு வரவேண்டும்.
3. யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம். நடிகர் கமல்ஹாசன் கருத்து.
              அயோத்தியை பாதரச்சை  நாட்டை ஆண்ட வரலாறு தானே நம்முடையது.
4. 3 ஆண்டு ஆட்சி எப்படி இருந்தது? கருத்து தெரிவிக்க மோடி அழைப்பு.
              மாடுகளுக்கு அதிருஷ்டம். மனிதர்களுக்கு துரதிருஷ்டம். உங்கள் மொபைல் செயலியில் உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்.    
5. 17 கட்சி தலைவர்களுக்கு சோனியா விருந்து.
             விருந்தும் மருந்தும் கூட்டணி உறவு வரை.
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 27-05-2017.
தகவல் ; ந.க.துறைவன். 

Tuesday, 23 May 2017

அக்னி நட்சத்திரம்...!! ( புதுக்கவிதை )
மதிய கோடை வெயில் உக்கிர
அனல் முகத்தைத் தீய்த்தது.
பாதையில் நடக்கையில்
கால்கள் தடுமாறின. கண்கள்
கிறங்கின அந்நொடியில் எங்கே 
ஒதுங்கி நிற்பதென புரியவில்லை.
இடமும் தென்படவில்லை.
கடந்து செல்லும் பாதசாரிகள்
வியர்வையை வழித்து வழித்து
சூரியனை நோக்கி வீசியெரிகிறார்கள்.
வீதியெங்கும் காய்கிறது
நெரிசல் இரைச்சல் எரிச்சல் உண்டாக்கி
விரைகின்ற புகைக்கக்கிய வாகனங்களின்
பெருநரக வாதை.
தலைக்கு மேலே இருக்கும்
சூரியனைப் பாத்தேன். கண்கள் கூசின.
மேகமில்லாத வெண்மை படர்ந்த
வானவெளியெலாரு காக்கை
குருவிகள் தென்படவில்லை.
எங்கும் வெப்பக் கதிரொளி.
ந.க. துறைவன்.

*

Monday, 22 May 2017

இருப்பை உணர்த்தி...!! ( கவிதை )
*
ஏகாந்தப் பெருவெளியில் பறக்கும்
வண்ணத்துக்களின் தேடல் எதுவென
இன்னும் அவைகளுக்குப் புலப்படவில்லயோ?
மலர்களின் மீதான காதல் பேரின்பப்
பெருங்களிப்பில் திளைத்து உற்சாக மன
உணர்வில்  பறந்து சிலிர்த்து திரிந்து
அவ்வப்போது வேறு வேறு
மலர்களிடம் போய் கலவியின் ரகசியம்
கற்றுத் திரும்புகிறதோ? கற்பிக்கிறதோ?
இலைகளின் மீதமர்ந்து இலைகளாகவும்
பூக்களின் மீதமர்ந்து பூக்களாகவும்
வண்ணங்களாவும் உருமாறி மாயவித்தைக்
காட்டி அவைகளின் மனங்களைக் கவர்ந்து
கிளர்ச்சியூட்டி காமப்பசியில் தவிக்க வைத்து
புன்னகைத்து வேறொரு மலர்த் தாவிப் பறக்கிறது
சட்டென நொடிப்பொழுதில் அடித்த காற்றில்
அசைந்தாடும் பூக்களின் அசைவைக் கண்டு
தூரப் பறக்கிறது. அலகிலா திருவிளையாடல்
புரிந்து அகிலத்தையே அசைய வைக்கின்ற
அழகிய வண்ணத்துப்பூச்சிகள் பிரபஞ்ச
வெளியில் தன்னிருப்பை உணர்த்தி…!!
ந.க.துறைவன்.

*

வீடு மாறி...!! ( குட்டிக் கதை )
தலைகுனிந்து தெருவெ பாத்துட்டே
வீடு தெரியாம பக்கத்து வீட்லே
போய் உக்காந்துட்டேன்.
அந்தம்மா, சீரியல்பாத்துட்டே டீ
போட்டு தந்துட்டு நிக்குது
மெதுவா எழுந்து               
வர்றேங்க என்றேன்
அடிக்கடி வாங்க என்றாள்
வாசலுக்கு வந்து ஓட்டம்
பிடிச்சி வீடு போய் சேந்தேன்.
*
வாட்ஸ் அப்பில் புதுமையிலிருந்து
ஆறுமுகம் நண்பர் அனுப்பியது.

ந.க.துறைவன். 

Sunday, 21 May 2017

கண்கள்...!! ( ஹைக்கூ )
Haiku – Tamil / English.
*
நுங்கு மூன்று கண்கள்
தேங்காய் மூன்று கண்கள்
சிவன் நெற்றியில் ஞானக் கண்.
*
Three eyes of nicotine
Coconut three eyes
Shiva's eye on the forehead

N.G.Thuraivan.

சேவல்...!! ( கவிதை )தெருவில்
ஒரு வீட்டில்
காணாமல் போனது
சேவல்
பக்கத்துத் தெருவில்
ஒரு வீட்டில் சமைக்கும்
கோழிக்கறி
குழம்பு வாசனை.


*

Thursday, 18 May 2017

செய்திகள் என்ன சொல்கின்றன...?

1.
ஆண்டவனிடம் தான் கேட்க வேண்டும். ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி இல.கணேசன் கருத்து.
       ஆண்டவன் தான் வேண்டாமென்கிறார். யாரோ திணிக்கிறார்கள்.
2.
இரு அணிகளும் சேர்ந்து இரட்டை இலை சின்னத்தை உடனடியாக மீடக வேண்டும் ம.நடராஜன் வலியுறுத்தல்.
       உங்களையே  மீட்கப் பாருங்க.   
3.
இந்த முறை 7 கோடி தமிழர்களை ஏமாற்ற மாட்டார். ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி. நெருக்கமான பெங்களுரு நண்பர் ராஜ்பகதூர் பேட்டி.
       ஏழு கோடி தமிழர்கள் ஏற்கனவே ஏமாந்து போய் நிலைகுலைந்து கிடக்கிறார்கள்.  
4.
தமிழ்மொழி வளர்ச்சிக்க நீண்டகால திட்டம் வேண்டும். சிங்கப்பூர் வளர்தமிழ் இயக்க தலைவர் இராஜாராம் வலியுறுத்தல்.
      தமிழ் வெளிநாட்டில் வாழ்கிறது. தமிழ்நாட்டில் அழிகிறது.
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 19-05-2017.
தகவல் ; ந.க.துறைவன்.
*

சாதுர்யம்...!! ( கூழாங்கற்கள் )வளைந்து கொடுப்பவள்
வாழ்ந்து சாதிக்கிறாள்
வம்பு செய்கிறாள்
பிரச்னையால்
வெந்து சாகிறாள்
வளைந்து கொடுப்பது வாழ்க்கை
வம்பு செய்து தற்கொலை.
ந.க.துறைவன்.


Tuesday, 16 May 2017

நா ஒரு முறை சொன்னா..!!
அரசியலுக்கு வராதேன்னு சொல்றவரும்
ஆண்டவன் தான்
*
தமிழ்நாட்டு மக்கள் பொய்க் கால்குதிரைகளை
அரசியலுக்குத் தேர்வு செய்கிறார்கள்.
*
நிழல் உருவங்களின் பிம்பம் தான் தமிழக அரசியலில்
நிஜங்களாக மாறி மாறி காட்சியளிக்கிறது.
*
ஸ்விச்சை போடுகிறார்கள்      
இயந்திரம் இயங்குகிறது.
*
நூறு முறை சொன்னாலும் ஒரு முறை சொன்னாலும்
நம்புகிறவன் கேணையன்களா என்ன?
*
அப்போ, பால்காரன் பாட்டு எல்லோரும் பாடப் போறாங்க.


ந.க.துறைவன்

Sunday, 14 May 2017

கொஞ்சம் படிங்க சாரே...!! ( துணுக்கு )“ வெறுப்பரசியலில் நக்ஸல்களின் பங்கு என்ன? ” என்ற சமஸ் அவர்களின் முழுபக்கக் கட்டுரை, தி இந்து – 15-05-2017 நாளிதழில் வெளிவந்தள்ளது. இக்கட்டுரை இன்றைய இடது – வலதுசாரி அரசியல்களின் நடைமுறை போக்கினை அலசுவது மட்டுமல்ல, விவாதத்திற்கும் / விமர்சனத்திற்கும் உட்படுத்தி பலகேள்விகளை எழுப்பியுள்ளது. அவசியம் படிக்க வேண்டிய கட்டுரையாகவும் அமைந்துள்ளது.

ந.க.துறைவன். 

போராட்டம்...!!


Saturday, 13 May 2017

அதிசய கள்ளிப்பூக்கள்.


பொது அறிவு...!!*
1.
” உலகம் தட்டையானது ” என்ற சொற்பிரயோகத்தை முதலில் தந்தவர் நந்தன் நீல்கேனி என்ற இந்தியர்.
2.
முல்லைத்தீவைச் சேர்ந்த ரானேந்திரன், இன்று அமெரிக்காவில் விண்கலம் நுண்ணறிவியல் ஆய்வுகள் செய்கிறார். இவர் வடிவமைத்த ஏவுகணைக்கு
“ அசுரன் ” எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
3.
ஷேக்ஸ்பியர் காலத்தில் இங்கிலாந்தில் கொள்ளை நோய் பரவியிருந்தது. அவருடைய 37 நாடகங்களில் ஒன்றில் கூட கொள்ளை நோய் பற்றிய குறிப்பு கிடையாது.
4.
புதுமைப்பித்தன் காலத்தில் இந்திய சுதந்திரப் போராட்டம் நடந்தது. ஆனால், அவர் கதைகளில் அது கிடையாது.
ஆதாரம் ;  விகடன் தடம் – மே – 2017 இதழ்.

தொகுப்பு: ந.க.துறைவன். 

தவறுகள்...!!


Wednesday, 10 May 2017

புத்தர் சிந்தனை...!!


பௌர்ணமி..!!11

கூழாங்கற்கள்...!! ( கவிதை )*
1. பௌர்ணமி நிலா…!!

என்னைத்தொடு
வா
என்னைத் தொடு
வா என்று அழைக்கிறது
பௌர்ணமி அலைகளை
இரவு  நிலா.

2. ஆசை…!!

கடலுக்கு ஆசை நிலவுக்கு ஆசை
எட்டிப் பிடிக்கும் போட்டியில்
இடையில் உயர்ந்து எழும்
அலைகளின் பேராசை
எண்ணி சிரிக்கிறது
பௌர்ணமி நிலா!

ந.க.துறைவன்.

புத்தர் போதனை...!!


Tuesday, 9 May 2017

முடிச்சு...!! ( கவிதை )
முடிச்சை அவிழ் முடிச்சை அவிழ்
முந்தானையில் முடிச்சி போட்டு
வைத்திருக்கும் அவனை விடு
முடிச்சை அவிழ்
விடுதலைக் கேட்கிறான்
அவனை விடு
விடுதலை என்பது சுதந்திரமல்ல.
அடிமை அன்பு
அவனை விடுவிப்பதே
உன் சுதந்திரம்.

ந.க.துறைவன்.

பரிசோதனை...!! ( கவிதை )மருத்துவப் பட்டப் படிப்பிற்கு
முன்பே
மாணவ / மாணவியர்களின்
அங்கப் பரிசோதனைகள் -இப்
பரிசோதனைகளில் தேர்ந்தால் தான்
மருத்துவத் தேர்வில்
வெற்றி பெற முடியுமோ?
மனித உரிமை மீறல்கள்
மனதில் விழுந்தக் கீறல்கள்.

ந.க.துறைவன்.

Sunday, 7 May 2017

இயங்குதல்...!! ( ஹைக்கூ )Haiku – Tamil / English.

ஓய்வில்லாமல் இயங்குகின்றது
நூற்றாண்டுகாலமாய் தோய்வின்றி
ஜென் ஹைக்கூ
*
It works without rest
Without a century
Zen Haiku

N.G.Thuraivan.

கோடை...!!


Saturday, 6 May 2017

செய்திகள் என்ன சொல்கின்றன?*
1.
மத்திய நகர்புற வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்தியாவின் தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு 235 – வது இடம் கிடைத்துள்ளது
       ஊழல், டாஸ்மாக் பிரச்சினையைக் கவனிக்கவே நேரமில்லே. இதிலே தூய்மை வேறயா? தூய்மை என்பது வெளிப்புறம் மட்டுமா?. அகத்திற்கு தேவையில்லையா?
2.
பிஹார் பாஜக பிரமுகர் வீட்டு முன்பு பசு மாடுகளை கட்டி வைத்ததாக லாலு உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு.
        யார் வீட்டு முன்னாலேயேயும் பசுமாடுகளைக் கட்டாதீங்கப்பா! அவங்க அவங்க வீட்டுக்குள்யே கட்டி வைச்சிகீங்க. மாடு தெய்வம். மனுஷன் நரன்.
3.
மணல் குவாரிகளை இனி அரசே ஏற்று நடத்தும். தமிழக அரசு முடிவு.
      டாஸ்மாக்கை விட இதுவும் அரசுக்கு ஒரு காமதேனு தான்.
4.
பூரண மதுவிலக்கு தமிழகத்தில் எப்போது? அரசுக்கு உயர்நீதிமன்றம் நீதிபதிகள் கேள்வி.
       வருமானத்திற் வழி செய்திட்டு பதில் சொல்றோம். இன்னும் கொஞ்ச நாள் அவகாசம் கொடுங்க என்று கேட்கிறது தமிழக அரசு.
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 07-05-2017.
தகவல் ; ந.க.துறைவன்.

*

Friday, 5 May 2017

வாசித்ததில் வசீகரித்தது...!!
*
1.
ஒரு புத்தகத்தை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அது உங்களுக்காக எழுதப்படவில்லை. என்று அர்த்தம். ஆம். இதுதான் உண்மை. எல்லாப் புத்தகங்களும் எல்லோருக்காகவும் எழுதப்படுவதில்லை. எல்லாப் புத்தகங்களையும் எல்லோரும் படிப்பதும் இல்லை. எல்லாப் புத்தகங்களையும் எல்லோரும் விரும்புவதும் இல்லை.
2.
படைப்பு என்பது சமூகம் கட்டமைக்கும் மதிப்பீடுகளின் குரல். விமர்சனம் என்பது அதற்கு எதிரான குரல். காலந்தோறும் மதிப்பீடுகளின் குரல் மாறி வந்திருக்கிறது.
3.
இரண்டு விதமான விமர்சனங்கள் இருக்கின்றன. ஒன்று, ஆக்கப்பூர்வமான விமர்சனம்.( Constructive criticism ) இரண்டு, அழிப்பு விமர்சனம்(destructive criticism )  ஆக்கப்பூர்வமான விமர்சனம் எழுத்தாளனுடன் நட்புடன் உரையாடி அவனுடைய குறை நிறைகளை அவனுடன் பகிர்ந்துகாள்ளும். அவன் தன்னை வளர்த்துக் கொள்ள உதவும். அழிவு விமர்சனமோ ஒரு “ ரப்பர் ” ஆக மாறி எதிராளி எழுதியதை அழிக்கத் துடிக்கும்.
ஆதாரம் ;  இருவாட்சி – பொங்கல் சிறப்பு மலர் – 8.

தொகுப்பு ; ந.க.துறைவன். 

வண்ணத்துப்பூச்சிகள்...!! ( துணுக்குகள் )
1.
இந்தியாவில் வண்ணத்துப்பூச்சிகள் அதிகபட்சம் 300 கி்.மீ வரை வலசை செல்கின்றன.
2.
தமிழகத்தில் வண்ணத்துப்பூச்சிகள் 100கி.மீ வரை வலசை செல்கின்றன.
3.
வண்ணத்துப்பூச்சியின் சராசரி ஆயுள்காலம் 4 – 6 மாதங்கள். இந்தக் காலக்கட்டத்தில், புழுவாக இருக்கும முதல் ஒன்றரை மாதம் தவிர்த்து, எஞ்சிய காலம் முழுவதும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான முறை மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடுகின்றன. இதன் மூலம் வனத்தின் பல்லுயிர் பெருக்கத்துக்கு உதவுகிறது.
4.
குறிப்பாக, மாற்று மகரந்தச் சேர்க்கை மூலம் இயற்கையான மரபணு மாற்றுப் பயிர்களும் பூக்களும் மனிதர்களுக்கு கிடைக்கின்றன.
ஆதாரம் ;  தி இந்து – நாளிதழ் – 06-05-2017.
தகவல் : ந.க.துறைவன்.


குடை...!! ( கவிதை )


சுருட்டல்...!! ( கவிதை )
பேப்பர் ரோஸ்ட்டாய்
சுருட்டி
கையில் வைத்திருந்தான்.
என்ன அது?
காட்டு பார்க்கலாம் என்றேன்.
பரிதாபமாய் விரிந்தது
கண்முன்னே
தமிழின் முன்னணி
நவீன இலக்கிய
மாத இதழ்!!

ந.க.துறைவன்.

Thursday, 4 May 2017

இந்திய நாணயங்கள் வெளியீடு...!!
*
1.
2001 – ஆம் ஆண்டு மகாவீரர் ஞானம் பெற்ற 2,600 ஆண்டுகள் நிறைவடைந்த தினத்தைக் குறிக்கும் வகையில் 5 ரூபாய் நாணயம் வெளியிட்டது.
2.
2009 – பார்வையற்றோர்களுக்கான எழுத்து முறையை உருவாக்கிய பிரெய்லியின் 200- ஆண்டு சிறப்பிக்கும் வகையில் ஒரு ரூபாய் நாணயம் வெளியிட்டது.
3.
2015 – ஆம் தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாத்மா காந்தி இந்தியா வந்து 100 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில் காந்தியடிகள் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயம் வெளியிட்டது.
4.
2010 – ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் 75 – ஆம் ஆண்டைக் கொண்டாடும் வகையில் ரிசர்வ் வங்கியின் இலச்சினையைக் கொண்ட 1,2,5,10 ருபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன.
தொகுப்பு ; ந.க.துறைவன்.

*

கோடை அச்சம்...!!


Wednesday, 3 May 2017

மலர்...!!


கார்ட்டூன்....


செய்திகள் என்ன சொல்கின்றன? ( துணுக்குகள் )*
1.
மதுக்கடைகள் அகற்றக் கோரி ஏராளமான கிராம சபைகள் தீர்மானம்.
        அதிகாரிகள் பல இடங்களில் தீர்மானம் நிறைவேற்றுவதைத் தடுத்துள்ளனர். அதிகாரிகள் யாருக்காக சேவை செய்கிறார்கள?
2.
கடந்த 2005 ஆண்டு முதல் 2014 – ம் ஆண்டு வரை (10 ஆண்டுகளில் ) இந்தியாவில் குவிந்த 77,000 கோடி டாலர் கறுப்பு பணம் இந்தியாவிற்குள் வந்திருக்கிறது.     
       ஊழல் ஒழிப்பு பிரமாதமாக நடக்கிறது.
3.
சார் ஆட்சியருக்கும், எம்எல்ஏவுக்கும் இடையே மலர்ந்த காதல்.
       கேரளாவில் புதுமை. வாழ்த்துக்கள்.
4.
பொது இடத்தில் செல்போன் பயன்படுத்தும் பெண்களுக்க ரூ.21 ஆயிரம் அபராதம். உத்தரபிரதேச கிராம பஞ்சாயத்து உத்தரவு்
       ஆண்களுடன் பேசுவதைத் தடுக்கவே இந்த உத்தரவா?
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 04-05-2017.

தகவல் ; ந.க.துறைவன்.  

Tuesday, 2 May 2017

ஒன்னுமே புரியலே...!! ( கட்டுரை )
தமிழ்நாட்டில் நடந்து வரும் மர்மக் கொலைகள் சினிமா காட்சிகள் போன்று திடுக்கிடும் சம்பவங்கள் நிறைந்த காட்சிகளாகத் தினச் செய்திகள் தாங்கி வெளி வருகின்றன. இப்பொழுதெல்லாம் துப்பறியும் சினிமாக் கதைகள் அதிகம் வெளிவருவதில்லை. என்றாலும், அரசியல்சார்ந்த சம்பவங்களால் நடைபெறும் ஊழல்களால் இது போன்று மர்மக் கொலைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. பலருடைய வாழ்க்கையே மர்மங்கள் நிறைந்ததாக இச்சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன. தமிழகம் ஏன் இப்படியாகி விட்டது என்கின்ற விசனம் பலருடைய மனதில் கேள்விகளாக எழுகின்றன. இதற்கெல்லாம் யார் என்ன பதில் சொல்லப் போகிறார்கள். எங்கிருந்தும் எந்த பதிலும் வரப்போவதில்லை? எல்லாம் தமிழன் தலையெழுத்து அதை யாரால் அழிக்க முடியும்? அவன் இதையெல்லாம் அனுபவித்துத் தானே ஆக வேண்டும் என்று சொல்கிறார் ஜோதிட சிகாமணி.
குரங்கு ஜோதிடர் குல்லாசாமி.

*

நிழல்...!!
கொளுத்தும் வெயில்
தாங்கும் மரம்
வியர்வையில்
நனையாத என்
நிழல்.

ந.க.துறைவன்.

வாசித்ததில் வசீகரித்தது...!!*
1.
நான் கடவுள் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவன். பரவச உணர்வுகளைப் புறக்கணித்தவன். நடக்கும் அனுபவங்கள் எனக்குப் புதியவை. இந்தக் காற்றும் இந்த அமைதியுமே எனக்குப் புதியவைதாம். அந்தப் பிரார்த்தனை பூமியில் மனித மனங்கள் சுத்திகரிக்கப் படுகின்றன. அது தெரிகிறது. வெறும் துன்ப அலைகளில் தவித்தவர்களுக்கு, கரையொதுக்கும், தலை துவட்டும் சந்நதி மாத்திரம் அல்ல அது. அறிவுத்தினவு வாய்ந்தவருக்கு அதற்கும் அப்பால் என்னவென்னவோ பரிமாறப்படக் காத்திருக்கின்றன.
2.
மனைவி என்பவள் தாயா? சிநேகிதியா? காதலியா? குருவா?
யாதுமாகி நிற்கிறாள் அவள்.
3.
ஆண்களுக்கு  அணிகலன் கோபம்.  பெண்கள் பொறுமையை அணிந்து கொள்கிறார்கள்.
ஆதாரம் ; “ கைத்தலம் பற்ற ” - எஸ். ஷங்கரநாராயணன்  சிறுகதை நூல்.
தொகுப்பு ; ந.க.துறைவன்.

*