Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Saturday 29 July 2017

சாரல்...!! ( ஹைக்கூ )


Haiku – Tamil / English.

காற்றின் பேரோசை
மழைத்துளிகள் சத்தம்
அருவியின் சாரல் அழகு.

Air eruption
Rainy noise
Beauty of the Falls

N.G.Thuraivan.

சிவப்பு குறியீடு...!! ( கவிதை )




1.
ஆடிவெள்ளியில்
அழகாய் அம்மன் சிரிக்கிறாள்               
பக்தைகள் மனசுக்குள்ளே
ஆயிரம்
பிரார்த்தனைகள்.
2.
சிவப்பு தான்
அவளின் குறியீடு.
3.
நெற்றியில் தானிருக்கிறது
அவளின் வெற்றித் திலகம்.
4.
அவள் என்
மானசீக
சௌந்தர்ய லஹரி.
5.
ஆடி தள்ளுபடியில்
வாங்கிய
பட்டுப்புடவையைச்
சாத்தினால்
கன்னிப்பெண்.

ந.க. துறைவன். 

நீ...நான்...காதல்...!! ( கவிதை )



1.
அவள் நீ என்றாள்
அவன் நீ என்றான்
நாம் என்ற வார்த்தை
இன்னும்
உருப்பெறவில்லை.
2.
மழை பெய்து வருகிறது
அவள் இன்னும்
வீடு திரும்பவில்லை
வீட்டிலேயே இருக்கிறது
குடை.
3.
இப்பொழுது
பெய்து வருகிறது
தவளைகள்
வேண்டிய மழை.
4.
மழை நின்றது
சலசலப்பு நின்றது
பேச்சு மட்டும்
ஓயவில்லை.
5.
அக்காவும்
மழையும்
ஒன்று என்றான்
தம்பி
இருவருமே
நீர் பொழிபவர்கள்.

ந.க. துறைவன். 

Friday 28 July 2017

பகல் நிலா...!! ( சென்ரியு )



Haiku – Tamil / English.

சூட்டில் மரங்கள்
காதல் கனவுகள்
பகலில் தெரிந்த நிலா.

Trees in the heat
Love dreams
Moon know in the day.
N.G,Thuraivan.

*

ஆனந்த பைரவி...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.

அடர்ந்த காட்டில்
காற்றின் மெல்லிசை
ஆனந்த பைரவி.
*
In the thick forest
The melody of the air       
Ananda Bhairavi.

N.G.Thuraivan.

Monday 24 July 2017

பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். ( துணுக்குகள் )




1.
தமிழக மக்கள் வாழ்வில் முழுமையான சுபிட்சம் அடைவார்கள்.
2.
பிரச்சினை இன்றி குடும்பங்கள் முன்னேற்றம் காணும்.
3.
வேலையற்ற இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெற்று முன்னேறுவார்கள்.
4.
பெண்கள் பெண்ணுரிமை முழுமையாக பெற்று சமத்துவமடைவார்கள்.
5.
விலைவாசி குறைந்து மலிவு விலையில் பொருட்கள் கிடைக்கும்.
6.
கல்வியில் முதுமுனைவர் பட்டம் வரை இலவசமாகக் கிடைக்கும்.
7.
போக்குவரத்து கட்டணம் எல்லோருக்கும் 60% தள்ளுபடி கிடைக்கும்.
8.
நகைகள் மற்றும் துணி வகைகள் எந்தவிதமான வரிகள் இன்றி நிர்ணயித்த விலையை விட குறைத்து வழங்கப்படும்.
9.
முதியோர்கள் குடும்பத்தில் மிகவும் போற்றி மதிக்கப்படுவார்கள்.
10.
அயல்நாடு சென்று பணிபுரிய விரும்பும் வாலிபர்களுக்கு இலவசமாகவே விசா கிடைக்கும்.


இன்னும்… இன்னும்… நிறையவே தமிழக மக்கள் எதிர்ப்பார்த்து காத்து கிடக்கிறார்கள்.

நன்றி நண்பர்களே.


ந.க.துறைவன்.

Sunday 23 July 2017

ஈரம்

ஈரம் ஆடை
உற்று நோக்குகிறாள்
ரசிக்கும் தாமரைபூக்கள்.
ந. க. துறைவன்.

கூட்டணி

மேகங்கள்

ஊழல் இல்லாத
கூட்டணி
இயற்கையின் அழகு
பேரணி.
ந. க. துறைவன்

Saturday 22 July 2017

Friday 21 July 2017

வெளிச்சம்...!! ( ஹைக்கூ )



Haiku – Tamil / English.

இருட்டறையில்  யாருமில்லை.
தனிமையில் உடைந்த நாற்காலிகள்
ஜன்னல் வழியே வெளிச்சம்..

There is no one in the dark.
Broken chairs alone
The light through the window.

N.G.Thuraivan. 

Thursday 20 July 2017

செய்திகள் என்ன சொல்கின்றன? ( துணுக்குகள் )




*

1.
இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி.

அவருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
2.  
சிறு வயதில் இருந்தபோது மண் சுவரால் சூழ்ந்த கூரை வீட்டில் வசித்தோம். மழை பெய்தால் வீட்டுக்குள் ஒழுகும். இதனால் மழை விடும் வரை நானும் எனது சகோதர, சகோதரிகளும் சுவர் ஓரம் ஒதுங்கி நிற்போம்.
நாடு முழுவதும் என்னைப்போல பலர், இன்றும் விவசாயி வேலையிலும், கூலிவேலையிலும் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக மழையில் நனைந்தும் வியர்வை சிந்தியும் கஷ்டப்படுகின்றனர். உங்கள் அனைவரின் பிரதிநிதியாக நான் குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்குச் செல்கிறேன். நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வளமுடன் வாழ அயராது பாடுபடுவேன்.
இந்த உறுதி மொழியோடு நாட்டுக்கு பணியாற்றினால் போதும். ஆனால் மக்களுக்கு எதிராக செயல்பட்டால் எல்லோரையும் போல நீங்களும் ரப்பர் ஸ்டாம்பு தான் என்பது உண்மையாகி விடும்.
3.
மாதவிடாய் காலத்தில் முதல்நாளில் பெண் பணியாளர்களுக்கு விடுமுறை. அறிமுகப்படுத்துகிறது “ மாத்ரு பூமி ” செய்தி நிறுவனம்.
பாராட்டுக்குரிய செயல்பாடு. இந்திய அரசு இதனை முன்னுதாரமாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
ஆதாரம். தி இந்து – நாளிதழ் – 21-07-2017.
தகவல் ; ந.க.துறைவன்.


வலி தாங்குமா? ( ஹைக்கூ )


வளைந்து கொடுத்தல்...!!




ஆதார் எண் இணைத்து
திருமணப் பொருத்தம்
பார்க்கப்படும்.
 சோதிடர் சொக்கு.

*
வளைந்து கொடுத்துப் போவது
மனிதர்களின் சுபாவம்.
மலைகளின் பாதைகளையும்
அப்படியே
வளைய வைத்து விட்டார்கள்.
*
சட்டென இடிந்து விழுவதில்லை
மூங்கில் பாலங்கள்.
திடீரென
சரிந்து விழுகின்றன
சிமெண்ட் மேம்பாலங்கள்.

ந.க. துறைவன்.

*

பாய் பிரண்ட்....!!





உன் பேஸ்புக்லே எவ்வளவு பிரண்ட்ஸ் இருக்காங்க?

ஒருத்தர் மட்டுந்தா இருக்கார். என் பாய்பிரண்ட்.


How many friends are you on Facebook?

There is only one. My boyfriend.


.N.G.Thuraivan. 

Wednesday 19 July 2017

மொழி எதுவோ? ( ஹைக்கூ )




Haiku – Tamil / English.

பேரழகியின் மொழி எதுவோ?
ஒலிக்கிறது இசை உதட்டில்
முத்தமிடாத புல்லாங்குழல்.

What is the language of the mourning?
Sounds music lip
Unguarded flute.
N.G. Thurauvan.


Monday 17 July 2017

இலை குடை.

குழந்தைக்கு
நிழல் தருகிறது
இலை குடை.

         ந.க. துறைவன்.

Wednesday 12 July 2017

தியாகம்.

ஆயிரம் வார்த்தைகளால்
உன்னை அர்ச்சித்தேன் அரைநொடியில் அறுத்தெறிந்து போனாயே!
நீ செய்தது துரோகம்
நான் செய்த தியாகம்.

ந. க. துறைவன்.

செய்திகள் என்ன சொல்கிறது? ( துணுக்குகள் )


*

1.

143 பொருட்கள் மீது வரி நீக்கம். ஜிஸ்டி வரி விதிப்பு நிரந்தரமல்ல. – பேரவையில் நிதியமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்.

உங்க ஆட்சியும் நிரந்தரமல்ல.

2.
மக்கள் நலனக்காக நாடாளுமன்றத்தில் போராட வேண்டும்.
ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள சிரமங்களை எடுத்துச் சொல்லுங்கள்.
அதிமுக எம்.பி.க்களுக்கு முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தல்.

மெனனச் சாமியார்கள் எப்படி பேசுவார்கள்.

3.

காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் மாநிலங்களுக்கு இடையே மோதல் கூடாது. உச்ச நீதிமன்றம் கருத்து.

இந்த மோதல் இல்லாவிட்டால் மாநில கட்சிகள்  எப்படி நடத்த முடியும்?

ஆதாரம் : தி இந்து – நாளிதழ் – 13-07-2017.
தகவல் : ந.க. துறைவன்.


நகைச்சுவை...!!




1.
உங்க பொண்ணு நல்ல ஹைக்கூ கவிஞர் சார்.

எப்படி சொல்றே?

மூணு வரிக்கு மேலே பேசமாட்டேங்கிறாங்க.

2.
உனக்கு என்ன வேணும்னு கேள். வாங்கி தருகிறேன் என்றான்?

அவள் கேட்டாள்.

முட்டை பப்ஸ்.

3.
தமிழ் வகுப்பு ரொம்ப போரடிக்குதுடி.

என்னாச்சி?

விளிப்பா, கலிப்பா, வெண்பா, விருத்தப்பா – ன்னு கடிக்கிறார்டி.

ந.க. துறைவன்.


ஹைக்கூ.

பிரபஞ்ச பெருவெளி.
எங்கும் நிறைந்திருக்கிறது
இந்நீர்த் துளிகள்.

ந.க.துறைவன். 

Monday 10 July 2017

நூல் அறிமுகம்.




நூலின் பெயர் :  தனிமையில் வாடும் பொம்மை.
நூலாசிரியர்   :  க. இராமஜெயம்.
நூலின் வகை :  ஹைக்கூ / சென்ரியு.
வெளியீடு     :  அன்ளை ராஜேஸ்வரி பதிப்பகம்
 :               41, கல்யாணசுந்தரம் தெரு
                பெரம்பூர் சென்னை – 600 011.
விலை        : ரூ. 50/-

*
இயற்கை, மெய்யியல், மற்றும் கவித்துவம், குறியீடு, படிமம், தொன்மம் ஆகியவற்றையும் அவற்றின் வகைகயை உள்ளடக்கி கருத்து செறிவு கொண்டதாகக் கவிஞரின் ஹைக்கூக்கள் அடையாளம் காண முடிகிறது.


பிற சூழ்நிலைகளை இழித்துப் பேசும் தன்மை, கருத்தியல் நேர்த்திகளோடு பொதுவுடைமை அரசியலை எதிர்நோக்கும் பார்வை, வெளிப்படையான விமர்சனங்களை உள்ளடக்கிய கருத்துக்களை உள்ளடக்கிய சென்ரியுக்கள் சிறப்பாக அமைந்தள்ளன.
         நூலின் அணிந்துரையில் முனைவர். ம. இரமேஷ் அவர்களின் – இந்த வழிமொழிதலோடு படைப்பாளி முனைவர்
க. இராமஜெயம் அவர்களை மனமாற வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.
நன்றி
ந.க. துறைவன். வேலூர் – 632 009.
செல் ; 9442234832.

*

சருகு அலைகள்...!! ( கவிதைகள் )




1.
இதயத்தில்
இடம் கேட்டவளுக்கு
கிடைத்தது
கல்லறை.

2.
வருவோர் போவோர்
சிலநாள்
தங்குமிடம்
இந்த உலகம்.

3.
சுவையாய் இருந்தது
சைவம் இல்லாத
நகைச்சுவை
விருந்து.

4.
காதலுக்கும் உண்டு
அடைக்கும் தாழ்.

5.
மரணத்திற்கு
தெரியுமா?
மனிதனை…!

6.
உயிருக்கு ஆபத்தென்று
கயிலை மலைவிட்டு
வெளியேறினார் சிவன்.
7.
உயர் அதிகாரி மரணம்
எரிந்தப் பிணத்தின்
கை நீண்டது
சில்லறை வைத்தார்கள்
தாழ்ந்தது கை.

ந.க. துறைவன்.

*

Sunday 9 July 2017

அருமையான கிளிக்.


ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்...!! ( துணுக்கு )




தானாக இயங்கும் டூத்பிரஷை வடிவமைத்துள்ளனர். இதை நம் வாயில் மாட்டிவிட்டால் போதும் 10 நொடிகளில் உங்களது பற்களைச் சுத்தம் செய்துவிடுகிறது. இந்த டூத்பிரஷ் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

கார்ப்பரேட் கண்டுபிடிப்புகள் மனுஷனை எப்படி சோம்பேறி வருகிறதென்று படித்தீர்களா?

இயற்கை நம்மை ஆளவில்லையா? ஆனால் கார்ப்பரேட் கருவிகள் நம்மை முழுமையாகவே ஆள்கின்றன.


செய்தி ;  தி இந்து – வணிக வீதி – 10-07-2017.

தகவல் ;  ந.க. துறைவன்.

Saturday 8 July 2017

ஆட்டின் அழகான கொம்புகள்.


செய்திகள் என்ன சொல்லுது? ( துணுக்குகள் )


*

1.
அரசு விரைவு போக்குவரத்து கழகம். படுக்கைவசதி, ஏசி, வைபை
ஆகிய வசதிகளை பேருந்துகளில் அறிமுகம்.

அப்படியே கக்கூஸ் பாத்ரூம் வசதியும் செய்துட்டா. குடும்ப பேருந்து மாதிரி இருக்குமில்லே.
2.
ஜி 20 உச்சிமாநாட்டில், உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு.
உள்நாட்டிலே விவசாயி மக்களை மட்டும் சந்திக்கவே நேரமில்லை.
3.
தபால் – தந்தித் துறைப் பணியாளர் சங்கத்தின்  தேசீயப் பொதுச்செயலராக நீண்ட காலம் பொறுப்பு வகித்து, ஓய்வு பெற்ற தோழர் டி.ஞானையா காலமானார்.
தோழருக்கு வீரவணக்கம். ஆழ்ந்த அஞ்சலி.

ஆதாரம் : தி இந்து – நாளிதழ் – 09-07-2017.
தகவல் :  ந.க. துறைவன்.
*


வாழ்த்துக்கள்

Friday 7 July 2017

நேரம் அறிதல்...!! ( கட்டுரை )




உயிரினங்களின் ஒலிகளை வைத்தே மணித்துளிகளைக் கணித்தார்கள் நம் முன்னோர்கள். அவற்றில் அறிவியல் ஞானம் செறிந்திருந்ததென்றே கூறலாம். உதாரணமாக!

1. கரிச்சான் குருவி ஒலி கொடுத்தால் காலை 3 மணி
2. குயில் கூவினால் காலை 4 மணி
3. சேவல் கூவினால் காலை  4.30 மணி
4. காகம் கத்தினால் காலை 5 மணி
5. மீன் கொத்தி சத்தமிட்டால் காலை 6 மணி.

இன்று இவைகளையெல்லாம் நாமும் அறிந்திருக்கிறோமா? நம் குழந்தைகளுக்கும்  கற்றுத் தந்திருக்கிறோமா?

இவைகள் விஞ்ஞான அறிவே பெறாத காலத்தில், அனுபவ ஞான அறிவால் கண்டறிந்த உண்மைகள் அல்லவா!!.

ந.க. துறைவன்.

*

வாழ்த்துக்கள்

மலர் போல மனம் வேண்டும் தாயே

காலை வணக்கம் நண்பர்களே

ந.க.துறைவன்.

போதி நெறி


தியானம்.


Tuesday 4 July 2017

மனநிலை...!! ( குட்டிக் கதை )




திருமதி ஜோன்ஸ் என்பவர் கடுமையான மனஉலைச்சலுக்கு ஆளானதால், மனோதத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற்றார்.
“ என் கணவர் தான் ஒரு கோழியாக மாறிவிட்டதாக நம்பத் தொடங்கினார். வெளியே சென்று குப்பையைச் சதா கிளறுகிறார். உயரமான இடத்தில் இருக்கும் நீளமான பெரிய கழி மீது அமர்ந்து தூங்குகிறார் ” என்று அவள் டாக்டரிடம் சொன்னாள்.

“ அப்படியா! இந்த மனநிலையில் உங்கள் கணவர் எவ்வளவு காலம் இருந்து கொண்டிருக்கிறார். ” என்று டாக்டர் கேட்டார்.

” சுமார் இரண்டு வருடகாலமாக இப்படி இருக்கிறார் ”

மனோதத்துவ நிபுணர் முகத்தில் சற்றே கோபம் தென்பட,
“ இவ்வளவு நாள் மருத்துவ ஆலோசனை பெறாமல் ஏன் தாமதம் செய்தீர்கள்? ” என்று கேட்டார்.

திருமதி ஜோன்ஸ் முகம் சிவக்க, “ தொடர்ந்து முட்டை கிடைத்தவரை பிர்சனை இல்லாதிருந்தது. ” என்றாள்.

ஆதாரம் ; ஓஷோவின் “ சப்தமில்லாத சப்தம் ” – நூல் – பக்கம் – 151 – 152.
தகவல் ; ந.க.துறைவன்.

இணைப்பு...!! ( உரை )




ஆதார் கார்டுடன் ரேசன் கார்டு இணைந்தது.
ஆதார் கார்டுடன் வங்கி எண் இணைந்தது.
ஆதார் கார்டுடன் தேர்தல் கார்டு இணைந்தது.
ஆதார் கார்டுடன் பான்கார்டு இணைந்தது
பாவிகள்
காதலர்களை
இணைய விடுவதில்லை

ந.க. துறைவன்.     

*

பிறை நிலா.

Monday 3 July 2017

கிராமத்து வயல் வெளி.

முலை வரி...!!




GST வரி வரின்னு கூப்பாடு போட்றீங்களே.
அந்த காலத்திலே நம்ம கொள்ளுபாட்டிங்க
முலை வரியை எதிர்த்துப்
போராடின வம்சம்டா!!

ந.க.துறைவன்.

GST - வரி...!! ( கவிதை )

GST – வரி...!!

*
ஓரே நாடு ஓரே மொழி ஓரே வரி
ஓரே ஊரு ஓரே மக்கள் ரெண்டு சுடுகாடு.
*
என்றேனும் ஒருநாள் குப்புறத்தள்ளும்
கண் தெரியாமல் வரிக்குதிரை.
*
வீட்டில் சாப்பிட்டால் வரியில்லை
பேசி நாக்குக்கு அடக்கமில்லை.
*
எந்த ஒன்றுக்கு வரிவிதிக்கவில்லை
எல்லாமே வரியின் கீழ் உள்ளடக்கம்.
*
வரியை ஏற்றுவார்கள் மக்கள் எதிர்த்தால்
குறைப்பதாய் சொல்லி ஏமாற்றுவார்கள்.
*
வரியோடு வாழ்வு
வரியோடு சாவு.
*

ந.க. துறைவன். 

Sunday 2 July 2017

கண்ணீர்த்துளிகள்...!!


விழிகளின் பார்வை
நேசத்தை விரும்பும்

உன் கண்ணீர்த்துளிகள்
தேசத்தை நொறுக்கும்.

ந.க.துறைவன்.

GST

வரியோடு வாழு
வரியோடு சாவு.

ந.க. துறைவன்.

Saturday 1 July 2017

மோகம்... !! ( ஹைக்கூ )


கடவுள் உண்டா? ( துணுக்கு )




ஒருவர் சுவாமி அரவிந்தரைப் பார்த்து “ உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? ” என்று கேட்டார். “ இல்லை ” என்று பதிலளித்தார் சுவாமி. கேள்வி கேட்டவர் அதிர்ந்து போனார். தொலைதூர தேசமான ஜெர்மனியில் இருந்து அவர் வந்திருந்தார். மிகுந்த கடவுள் நம்பிக்கையுடன் வந்திருந்த அந்த மனிதரிடம் அரவிந்தர், தனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது என்று சாதாரணமாக பதில் தந்துவிட்டார்.
“ நான் உங்களுக்குக் கடவுள் பற்றித் தெரியும் என்று நினைத்திருந்தேன் ” என்றார் ஜெர்மனியர்.
“ ஆமாம்! எனக்குத் தெரியும். ஆனால் நான் கடவுளை நம்பவில்லை ” என்று கூறினார் அரவிந்தர்.
ஆதாரம் ; “ சத்தமில்லாத சப்தம் ” – ஓஷோ – நூல் – பக்கம் – 112 – 113.

தகவல் ‘ந.க. துறைவன்.