Labels

Haiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (20) கலை (1) கவிதை (332) கவிதை. (7) கவிதைகள். (7) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (2) குறுங்கவிதைகள் (12) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (55) ஹைபுன் (48)

Wednesday, 30 August 2017

ஆர்மா மலை...!! ( கட்டுரை )
*

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் இருக்கும் ஆர்மா மலைக் குகையில் இருக்கும் ஓவியங்கள், கல்வெட்டுக்கள், செங்கல் கோயில் ஒன்றையும் ஆய்வாளர் பாஸ்கரன் ஆராய்ந்து இருக்கிறார். 1970 – ல் கிராமவாசிகள் இந்த மலையை “ அரவான் மலை ” என்கிறார்கள். அரவன் அல்லது அருகன் என்ற சொல் தீர்த்தங்கரைக் குறிக்கும். ஒரு ஓவியத்தின் பரப்பு 7 மீட்டர் நீளம், அகலம் 3.5 மீட்டர். அது ஒரு தாமரைக் குளத்தின் சித்திரம். அதில் வாத்துக்கள், பறவைகள், தாமரை இலைகள், மொட்டுக்கள் இடம் பெற்றுள்ளன. ஓர் ஓவியத்தில் ஆடு ஒன்றின் மேல் சவாரி செய்யும் அக்னி. இன்னொரு ஓவியம் எமன், சித்தன்னவாசல் ஓவிய முறை. இதன் காலம் 10 அல்லது 11-ம் நூற்றாண்டு என்று கணிக்கிறார் ஆய்வாளர். பல்லவர்கள், ராஷ்ரகூடர்கள், சோழர்கள் தமக்குள் அதிகாரப் போட்டி நடத்திக் கொண்டிருந்த காலத்தில் எல்லோரா, ஆர்மா மலை, சித்தன்னவாசல் ஓவியங்கள், ஓவியங்களில் இருக்கும் கலாச்சாரப் பிணைப்பைக் காட்டுகின்றன. அதோடு, ; கிடக்கட்டும் பதவிச் சண்டை, நாம் ஸ்தாபிப்போம் கலை ஒற்றுமையை!’ என்கின்றன ஒவியங்கள்.
ஆதாரம் ;  பிரபஞ்சன் கட்டுரை - தி இந்து – 30-08-201 நாளிதழ். .
தகவல் ; ந.க. துறைவன்.

*

Tuesday, 29 August 2017

சீனக் கவிதை.
ஆசையின் பின்னால் ஓட்டமா?
*
வாழ்வில் எது முக்கியம்?
பெயரா, புகழா, மனநிறைவா?
எப்போது வாழ்வு அர்த்தமுள்ளதாகும்?
மனிதாபிமானத்துடன் வாழ்வதிலா?
பணம் சேர்ப்பதிலா?
வாழ்வில் துன்பம் தருவது எது?
லாபா, நஷ்டமா?
அதிகமான ஆசை அநாவசியச் செலவுகளில் முடிகிறது.
அளவுக்கு மீறிச் சேர்ப்பது அழிவில் கொண்டு விடுகிறது.
போதுமென்ற மனம் பெற்றிருக்கும்போது
பழிச்சொல் நம்மைப் பாதிப்பதில்லை.
எடுத்த காரியத்தை எப்போது நிறுத்த வேண்டும் என்ற
நிதானம் இருக்கும்போது
ஆபத்துக்கள் அணுகுவதில்லை.
இவனே, வாழத்தெரிந்த மனிதன்
காலத்தை வென்றவன்!.
ஆதாரம் ; சீன ஞானம் – வாழ்க்கை வெளிச்சம் – நூல்.       
          மொழிபெயர்ப்பு. எம்.எஸ் உதயமூர்த்தி. – பக்கம் – 141.
தகவல் ; ந.க. துறைவன்.

*

Friday, 25 August 2017

மழை...!! ( கவிதை )1.
எல்லா கவிதைகளும்
மழைக் குறித்து
பேசுகின்றன
மழை தான்
மனிதனைக் குறித்து
பேசியதில்லை.
2.
மழையில் நனைந்து
ஒதுங்க இடம் தேடி
தவிக்கிறது
பூனை.
3..
மலர்ந்த மலருக்கு
மாலை வரைதான்
மரியாதை.
4.
எங்கே கிடைக்கும்
இளைப்பாற
குளிர் நிழல்.
5.
கடுப்பாய் இருந்தாள்
கலகலப்பானாள்
புதிய
படவையைப்
பாராட்டியபோது!
5.
எல்லோருக்கு
பிடிக்கும் அந்த
வளையல்
வட்டம்.
6.
மண் வாசம்
உணர்ந்து
அனுபவிக்கிறதோ?
தெரு நாய்.
ந.க. துறைவன்.


கற்பக மூர்த்தி...!! ( பாடல் )
கற்பக மூர்த்தியே கருணை புரிவாய்…!!
*
அற்புதக் கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெலாம் பெருக வேண்டின்
கற்பக மூத்தி தெய்வக்
களஞ்சியம் இருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்!
பொய்யிலை! கண்ட உண்மை!
பிள்ளையார் பட்டி என்னும்
பேரருட் சுரங்கத்தின் கண்
உள்ளவன் மலையிற் பூத்த
உருவத்தன் இயற்கைத் தோன்றல்
தெள்ளிய மனத்தர்க் கெல்லாம்
திருவருள் வழங்கும் ஐயன்
கள்ளமில் பக்தர் தந்தை
கற்பக மூர்த்தி அன்றே!
        --- கவிஞர் கண்ணதாசன்.

*

Thursday, 24 August 2017

விநாயாகர் சதுர்த்தி.

அனைவருக்கும் அருள்வாய் கணபதி…!!

எனக்கு வேண்டும் வரங்களை
யிசைப்பேன் கேளாய் கணபதி
மனத்திற் சலன மில்லாமல்,
மதியி லிருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின் மவுன
நிலை வந்திட நீ செயல் வேண்டும்
கனக்கும் செல்வம் நூறு வய
திவையுந்தர நீ கடவாயே.


மகாகவி பாரதியார்.

நல்வாழ்த்துக்கள்.

இனிய காலை வணக்கம் நண்பர்களே
      
அனைவருக்கும்

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
      
ந.க. துறைவன்.

Wednesday, 23 August 2017

கண்ணாமூச்சி...!! ( கவிதை )1..
கண்ணாமூச்சி விளையாட்டில்
தேடிக் கட்டிப் பிடித்தாள்
தூண்.
2.
உலகில் அதிகமாக
எழுதப்படுவது எது?
க  வி  தை.
3.
யார் மீதும் பாயாத மரம்
வேங்கை.
4.
காதலியின் பெயரை
உரத்து ஒலிக்கிறான்
எதிரொலித்தது
மலை.
5.
விளக்கை அணை
சில
மணித்துளிகள்.
6.
ஆடிக் காற்று வீசுகிறது
வேம்பு பழம் உதிர்கிறது.
7.
டயட்டில் இருக்க
மாட்டார் போல
இருக்கிறது
தொப்கை கணபதி.
8.
உன் வெற்றிடம் தான்
நான் விலைக்கு
வாங்கி
புதிய சொத்து.
9.
எனக்குப“ பிடித்தது
எனக்காய் மலர்ந்தது
அழகான
காமத்திப்பூ.
10.
மலையின் நிழலில்
ஒய்வெடுக்கின்றன.
புற்கள்.
ந.க. துறைவன்.
Monday, 21 August 2017

நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! ( கட்டுரை )
*
தூரம் என்பது மிக அருகில் தான் தெரிகிறது. நடந்து போகப் போக தூரம் என்பது மிக நீண்டத் தொலைவாகவே தொடர்கிறது.
அந்த பாதையின் ஓரமெங்கும் புதர் புதராய் என்னவென்னவோ செடிகள் மரங்கள் பச்சைப் பசுமையாய் காணப்படுகின்றன. அங்கே பறவைகள், ஒணான்கள், பெயர் தெரியாதச் சிறுசிறுப் பூச்சிகள், ஆனந்தமாக விளையாடிக் களிக்கின்றன. அங்கிருந்த நாகமரத்தில் நீலநிறமாக பழங்கள் காய்த்து காணப்படுகின்றன. கிளிகள் பறவைகள் அவற்றை தன் விருப்பம் போல் கொத்திக் கொத்தித் தின்கின்றன. கொத்தும் அலகின் அசைவில் நாகப்பழங்கள் கீழ்நோக்கி விழுகின்றன. தரையில் விழுந்தப் பழங்கள் தரையை நீலநிறமாக்கி, மண்படிந்து, எடுப்பார் யாருக்காகவோ காத்திருக்கின்றன. அங்கே அப்பழங்களை எடுப்பார் யாருமில்லை?
மாடுகள் மேய்க்கும் கூட்டம் என்று எவருமில்லை. அந்த வனாந்தரத்தில் எவரிருப்பார்கள். அப்பழங்களை மண்தரையில் ஊர்ந்து செல்லும் உயிரினங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் சுவைத்துப் பார்க்கின்றன. அந்தப் பழம் எத்தனை மருத்துக் குணம் கொண்டதென்று சித்தர் கூறிச் சென்றிருக்கிறார்கள். அதனைக் காயகல்பம் என்றல்லவா புகழ்ந்துரைத்துள்ளார்கள்.
அப்பழத்தை தின்ன யாருக்குத் தான் ஆசை வராது. எனக்கு நாகப்பழத்தின் மீதான ஆசை பற்று அபரிமிதமானது. அந்த அற்புதமான நாகப்பழத்தைத் தான் விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு மக்கள் தேடித்தேடி வாங்கி அந்தத் தும்பிக்கையனுக்கு படைத்து அருள் வேண்டுகிறார்கள். அந்த ஏகாந்தமான இடம் போய் நீலம்பாரித்தப் பழத்தைத்  தேடி எடுத்து வந்து சுவைப்பதற்கு எனக்கு கொள்ளை ஆசையிருக்கிறது. ஆனால், யார் துணையாக வந்து உதவி புரிவார்கள். இருந்தாலும், அப்பழம் எனக்கு அவசியம் தேவையென்று படுகிறது. கொஞ்சமேனும் கிடைக்காமலா போகும். கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதோ, அந்தக் கடைத்தெருவின் ஒரு மூலையில் கூடையில் வைத்து விற்றுக் கொண்டிருக்கிறாள் வயதான மூதாட்டி. அவளிடம் விலைக் கேட்டேன். கால்கிலோ ரூபாய் 25/- என்றாள். பேரம் பேசும் புத்தி என்னையும் விட்டுப் போகவில்லை. குறைத்துக் கேட்டேன். கொடுக்க மறுத்து விட்டாள். பிறகு அரைகிலோ கேட்டு வாங்கினேன். வீட்டிற்கு வந்து மனைவியிடம் கொடுத்தேன்.
“ அட, நாகப்பழமா ” என்றாள். அந்நாகப்பழத்தைப் பார்த்த அவளுக்கு என்னை விட பெரு மகிழ்ச்சி. பூரிப்பு. அதனை இரண்டு நாள்கள் வைத்திருந்து சாப்பிட்டச் சந்தோஷம் இருக்கிறதே, அதை சொல்லி மாளாது. அத்தனை ஆர்வமாய் சுவைத்து சாப்பிட்டேன். ஆகா, இந்த ஆண்டு நாகப்பழம் மனத் திருப்தியாக சாப்பிட்டோம் என்ற ஆனந்தம் கிடைத்தது.

நாகப்பழம் என் நாக்குக்கு மட்டும் ருசியேற்றவில்லை. என் உடலின் நரம்புகள் வழியாக அதன் சத்துக்கள் எல்லாம் உள்ளிறங்கி இரத்தத்தில் கலந்து விட்டது. அப்பொழுது கண்ணாடியில் என் நாக்கைப் பார்த்தேன். என் நாக்கு நீலம் பாய்ந்து நீலகண்டமாகத் தெரிந்தது.

ந.க. துறைவன்.                                      

*

Saturday, 19 August 2017

மலர்ச்சி...!! ( கவிதைகள் )1.
இலைகள்
மரத்தில் ஒற்றுமையாக
இருந்தாலும்
தனித்து
சண்டைப்
போடுவதில்லை.
2.
பெரியது கடல்
எப்போதும்
கரையை மோதி
பார்க்கிறது
அலைகள்.
3.
வெளிச்சத்தைத்
திரைப் போட்டு
மறைக்கிறார்கள்.
அம்பலமாகின்றன
இரகசியங்கள்.
4.
நீளக் கோவணமாய் இருக்கிறது
மால்களில் GST வரியுடன்
சேர்த்து கொடுக்கும்
கம்ப்யூட்டர் பில்.
5.
வடை சுடப் போனான்
கை
சுட்டுக்கிட்டு
நிக்கிறான்.
6.
பச்சை பச்சையாய்
தட்டினான்
கலகப் பேச்சு
அடுத்தவனும்
அதே கலரில்
திட்டினான்.
7.
இரவில் பூக்கள்
மலர்ந்திருந்தாலும்
விழித்திருக்கவே
செய்கின்றன
யாருக்காகவே?
ந.க. துறைவன்.


Thursday, 17 August 2017

திருடன்...!! ( குட்டிக் கதை )ஓஷோவின் குட்டிக் கதை.

ஒரு திருடன் ஒருமுறை அகப்பட்டுக் கொண்டான். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டான். வழக்கை விசாரித்த நீதிபதிக்கு வியப்பாகிவி்ட்டது. “ நீ அந்த சூப்பர் மார்க்கெட்டில் ஓரே இரவில் ஒன்பது தடவை நுழைந்தாயாமே. அது ஏன்? என்று காரணம் கேட்டார்.

“ எஜமான், வேற என்ன செய்யறது? பெரிய கடையாச்சே. நான் ஒண்டியாளே சுற்றி – சுற்றி கொள்ளயடிக்க வேண்டியிருந்தது. ” என்று திருடன் அப்பாவியாகப் பதில் சொன்னான்.

“ ஏன், உனக்கு கூட்டாளி யாரும் கிடைக்கலியா? ”

“ எசமான், காலம் ரொம்ப கெட்டப் போச்சுங்க. யாரை கூட்டாளியா சேத்துக்கிறது? எவனை சேர்த்துக்கிட்டாலும் ஏமாத்தி துரோகம் பண்ணிடுவானுங்க, ஐயா. ”
ஆதாரம் ; ஓஷோவின் – அஷ்டாவக்ர மகாகீதை – பக்கம் – 126
தகவல் ; ந.க. துறைவன்.

*

Wednesday, 16 August 2017

வளையம்...!! ( ஹைக்கூ )Haiku – Tamil / English.

வண்டுகள் பார்க்கவில்லை
மலர்ந்த பூக்கள் அழகு
காற்றின் பாதுகாப்பு வளையம்.
*
Beetles are not seen
Flowers bloom
Wind safety ring.
N.G.Thuraian.


Monday, 14 August 2017

முல்லா கதை
முல்லா நஸ்ருத்தீன் மனைவியுடன் திரைப்படம் பார்க்கச் சென்றார். ஆனால் இருவரும் படத்தைக் பார்க்காமல் சளசளவென்று உரையாடியபடியே இருந்தனர். சுற்றிலும் அமர்ந்து திரைப்படம் பார்த்தவர்களுக்கு இவர்களின் உரையாடல் தாங்க முடியாத தொந்தரவாகி விட்டது. முல்லாவின் இருக்கைக்குப் பின் இருக்கையில் இருந்த ஒருவர் எரிச்சலுடன், இதென்ன இரண்டு கழுதைகள் மாற்றி மாற்றிக் கத்தவதுபோல இருக்கிறதே! ஒரு நிமிஷம்கூட வாயை மூடமாட்டார்கள் போலுள்ளதே.” என்று கத்தினார்.

முல்லாவுக்கு கோபம் வந்துவிட்டது. அவர் திரும்பிப் பார்த்து,
“ யாரைக் கழுதைகள் கத்தற மாதிரி இருக்குன்னீங்க? எங்க ரெண்டு பேரையுமா சொல்றீங்க? ” என்று பதிலுக்கு கத்தினார்.

பின்னிருக்கையில் இருந்தவர் கிண்டலாக சமாதானப்படுத்தினார்.
“ சே. சே, உங்களைக் போய் குறைசொல்வேனா? சினிமாவுல நடிக்கிறவங்க பேசற சத்தம் தாங்க முடியலை. அவங்க வாயை மூடிசிட்டா தானே நீங்க ரெண்டு பேரும் பேசற காதல் பேச்சை நாங்களும் கேட்க முடியும்கிற அர்த்தத்தில் நடிகர்களைத்தான் திட்டினேன் ” என்றார் அவர்.
ஆதாரம் ; ஓஷோவின் – அஷ்டாவக்ர மகாகீதை – பக்கம் – 114.
தகவல் ; ந. க .துறைவன்.

*

Saturday, 12 August 2017

குழந்தைகள் மரணம்...!! ( துணுக்கு )
முதல்வர் ஆதித்யநாத்தின் சொந்த ஊரும் அவரது மக்களவைத் தொகுதியுமான கோரக்பூரில் அரசுக்கு சொந்தமான பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. அங்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாகுறை காரணமாக இங்கு கடந்த
5 நாட்களில் அடுத்தடுத்து 60 குழந்தைகள் உயிரிழந்தனர். ஆதாரம்; தி இந்து – நாளிதழ் – 13-08-2017.
    
     பசுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட பச்சிளங் குழந்தைகளுக்கு காட்டாத கொடுர மனம். யாருடையது?
எந்த ஆன்மீகம் தத்துவம் சார்ந்தது இந்த கொள்கைகள்?

     மாதா வயிறெரிய வைத்தவர்கள் இன்னொரு மாதாவைப் போற்றுகிறார்கள். எல்லாம் வேடம். கபடம்.

     அந்த குழந்தைகள் மற்றும் பெற்ற தாய்மார்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அஞ்சலி.
     ந.க.துறைவன்.


தேவி...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.

மீண்டும் ஆரம்பமாகிறது தேவி
அற்புதமாக ரசிக்கிறாய் ரசி
சிவனின் ஆலிங்க நடனம்.                       

Devi starts again
Excellently admired
Shiva's hymn dance

N.G.Thuraivan.

Thursday, 10 August 2017

இதழ்...!! ( துணுக்கு )

இதழ்.

உன்னுடைய இதழ் சிவப்பானது. பவளம் சிவப்பு நிறந்தான்.
ஆயினும், அதற்கு பழம் கிடையாது. உன் இதழ் சிவப்பிற்கு இணையான சிவப்பு எதுவும் உலகில்  உண்டோ? சொல்.
அந்த சிவந்த உதடுகளின் சிரிப்பில் எத்தனை எத்தனை அர்த்தம் பொதிந்த புன்னகைகள். அச்சிரிப்பின் எதிரொலி தான் எல்லாமாகவே இருக்கிறது.

ந.க. துறைவன்.


Wednesday, 9 August 2017

முல்லா கதை.
முல்லா நஸ்ருத்தீன் மிகவும் சோகமாகக் காணப்பட்டார். நண்பர் ஒருவர் காரணம் விசாரித்து ஆறுதல் சொன்னார். “ ஆம், உன் மனைவி மாண்டு விட்டாள்தான். ஆனால் நீ இன்னமும் இளமையாகத் தான் இருக்கிறாய். இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளலாமே. பல பேர் என்னிடம் தங்களுக்குத் திருமண வயதில் பெண் உள்ளதாகவும், முல்லாவைத் திருமணம் செய்துக் கொள்ள சம்மதிக்க வைக்குமாறும் சொல்லியிருக்கிறார்கள் ”

முல்லா பதிலளித்தார். “ மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம் தான். ஆனால் நாலு காரணங்களால் நான் கல்யாணம் செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ளேன்.”

நண்பர் சொன்னார். ” ஒரு பிரம்மசாரி கூட தனக்கு ஏன் திருமணமாகவில்லை என்பதற்கு ஒன்றிரண்டு காரணம்தான் சொல்ல முடியும். நான்கு காரணம் சொல்ல முடியாது. அப்படியிருக்க, உனக்கு அப்படி என்ன நான்கு காரணங்கள் தடையாக உள்ளன?

”மூன்று மகள். ஒரு மகன் ” முல்லாவின் பதில் பளிச்சென்று வந்தது. ஏற்கனவே உள்ள நான்கு குழந்தைகள்தான் மறுமணத்திற்குத் தடையாக உள்ளதை முல்லா நயமாகச் சுட்டிக்காட்டுகிறார்.
ஆதாரம்  ஓஷோவின் – அஷ்டாவக்ர மகாகீதை – பக்கம் – 15.
தகவல் ; ந.க. துறைவன்.


அம்மாவின் அழகு...!! ( கவிதை )
1.
வாழ்க்கை தொலைவதில்லை
நாம் தான்
தொலைக்கிறோம்
2.
உலகில் மீண்டும்
கிடைக்காத
ஓரே
சிம்மாசனம்
தாய்மடி.
3.
அழுவதில் தான்
அடங்கியிருக்கிறது
அம்மாவின்
ஆன்ம அழகு.
4.
அவளுக்கு
ஆயிரம் பெயர்கள்
இருந்தாலும்
எனக்கு பிடித்தது
அந்த ஒரு
பெயர் மட்டுமே!!
5.
உள்ளே அமைதி
வெளியே ஆர்பரிக்கும்
மன அலைகள்.
ந.க. துறைவன்.


Saturday, 5 August 2017

எள்ளுருண்டை...!! ( துணுக்கு )*

எள்ளுருண்டை என்பது இனிப்புகளில் தனிரகம். எள்ளில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பதாலோ, அல்லது அதில் வைட்டமின்பி1, பி6, தையாமின், நியாஸின், கால்சியம், மெக்னீசியம் போன்ற எக்கச்கச்ச சத்து இருப்பதாலோ, மற்ற இனிப்பு பலகாரங்களுக்குக் கூடாத ஒரு பிரத்யேக ருசி எள்ளுருண்டைக்குச் சேரும்.

வெள்ளை எள்ளைக் காட்டிலும் கருப்பு எள்ளுக்கு ருசி அதிகம். கொஞ்சம் அலசி உலர்த்தி, கால்வாசி ஈரத்தோடு வாணலியில் போட்டு வறுத்து வெல்லப்பாகில் பிடித்து உருட்டினால் எள்ளுருண்டை தயார். கூடுதல் வாசனைக்குச் சற்று ஏலம். முடிந்தது.

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ஒரு பிரமாதமான மருந்து. தினசரி இரண்டு உருண்டைகள் சாப்பிட்டு வந்தால் பெரிய நிவாரணம் இருக்கும். ( ரத்த சர்க்கரை அளவு ஏறிவிட்டது என்றால் நான் பொறுப்பல்ல ) மாதவிடாய் வருகிற நேரம் சில பெண்களுக்கு மார்பக வலி இருக்கும். உடம்பு திடீரென்று கனமாகிவிட்டாற்போல இருக்கும். தலைவலி, முதுகுப்பக்க வலி, வயிறு உப்புசம் என்று என்னவாவது ஓர் இம்சை இருக்கும். இதற்கெல்லாம் நல்ல மருந்து.
ஆதாரம் ; பா. ராகவன் – ருசியியல் சமையல் பகுதி
தி இந்து – நாளிதழ் 05-08-2017.

தகவல் ; ந.க. துறைவன். 

Thursday, 3 August 2017

ஆகஸ்ட் - 2017 விடுமுறைகள்...!!
ஆகஸ்ட் 2017 – அரசு மற்றும் வங்கி
விடுமுறை தினங்கள்.

12-08-2017 – இரண்டாம் சனிக்கிழமை
13-08-2017 – ஞாயிற்றுக்கிழமை
14-08-2017 – கோகுலாஷ்டமி
15-08-2017 – சுதந்திர தினம்.

25-08-2017 – விநாயகர் சதுர்த்தி
26-08-2017 – நான்காம் சனிக்கிழமை
27-08-2017 – ஞலயிற்றுக்கிழமை.

தகவல் :  ந.க. துறைவன்.

*

Wednesday, 2 August 2017

ஈக்கள்...!! ( கவிதை )1.
காலியான
தேனீர்க் கோப்பையில்
மிச்சம் குடிக்க
வந்து அமர்ந்தன
ஈக்கள்.
2.
குழந்தைக்கு
விளையாட்டுக் காட்டி
பறந்து அமர்ந்து
திரிகின்றன ஈக்கள்.
3.
விரட்ட விரட்ட
அருகில் வந்து
தொலைக்கின்றன
ஈ  க்  க  ள்.
4.
நீர்த் தேங்கிய
குட்டைகள்
கொசுக்களின்
பெருங்கடல்.
5.
கடல் நீரின் மேல்
ஈக்கள் தங்க
இடமில்லை
விரட்டுகின்றன
அலைகள்.
6.
உயர்ந்தக் குப்பை
மேட்டில்
குடியிருக்கின்றன
ஈக்கள்.
7.
கால்வாய்கள்
நீரோடைகள்
நீர்த்தேக்கங்கள்
ஈக்கள்
குளிக்கும்
படித்துறைகள்.
8.
கொசு ஒழிப்பு
மாநாட்டு
சாப்பாட்டு அறையில்
ஈக்கள்
ஆக்ரமிப்பு.
9.
யாருக்கு நோய்
வந்தாலும்
என்னைத் திட்டுகிறார்கள்
என்று
குறைப்படுகின்றன
ஈக்கள்.
10.
மனிதரோடு உறைந்து
வாழ்ந்தே
கழிகின்றன
ஈக்களின் காலம்.
ந.க. துறைவன். .

*