Labels

Haiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (20) கலை (1) கவிதை (332) கவிதை. (7) கவிதைகள். (7) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (2) குறுங்கவிதைகள் (12) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (55) ஹைபுன் (48)

Friday, 31 July 2015

பிடிப்பு...!! [ கவிதை ]


*
பிடிப்பில்லாத வாழ்க்கையில்
பிடிப்போடு வாழ்கிறார்கள்.
*
செத்துவிட்டது சத்தியம்
உயிர் வாழ்கிறது பொய்.
*
யாரும் அள்ளிப் பருகுவதில்லை
சொட்டும் தேன்.
*

Thursday, 30 July 2015

சேலை....!! [ கவிதை ]


*
ஆடிவெள்ளிக்கு அழகாய் கட்டினாள்
வேப்பிலைச் சேலை.
*
பிரார்த்தனைச் செய்து ஊற்றி கூழ்
பள்ளத்தில் நிறைந்திருந்தது.
*
அன்னியன் மகள் அன்பானவள்
அத்தை மகள் சொத்துள்ளவள்.

*

வெட்கம்

எப்படித் தெரியும்?
முகத்தில்
வெட்கம் கெட்ட வெட்கம்.


Wednesday, 29 July 2015

மனஅவசங்கள்....!!


*
மௌனமாய் இருப்பதாகத் தெரிகிறது
பரந்த வெளியெங்கும் சூழ்ந்திருக்கும்
மனஅவசங்கள் தோற்றத்தில் உள்ளதைச்
சற்றே வெளியேற்ற வழிதேடுகிறது மனம்.
அவரவர்களுக்குள்ளேயே பகிர்ந்து
வெளியில் சொல்ல இயலாது உள்ளே
தீயெனப் பற்றி எரியும் பிரச்சினைகள்
எங்கும் ஓயாதப் போராட்டங்கள்
ஆர்ப்பாட்டங்கள் உண்ணாநோன்புகள்
நிகழ்த்திய வண்ணமாய் ஊழியர்கள்.
பொதுமக்கள் என்றேனும் தீர்வுக்
காணலாமென்றக் கனவுகளோடு
வாழ்ந்துக் கழிக்கின்றனர்
நாள்தோறும் தகவல்கள் எதிர்ப்பார்த்து
உட்கார வைத்திருக்கிறது ஊடகங்கள்.
பேச்சு வார்த்தைத் தோல்வியென்றத்
தலைப்புச் செய்தியோடு முடிந்தது
இன்றொரு நாள்….!!Monday, 27 July 2015

லால்சலாம்...லால்சலாம்...!!


*
லால் சலாம் லால் சலாம்
ஜனாதிபதி அப்துல்கலாம்
லால் சலாம் லால் சலாம்
ஜனாதிபதி அப்துல்கலாம்.
*
தொன்மை மிக்க இந்தியாவின்
பண்பாட்டுச் சிறப்பை விதைக்கலாம்
தொழிர் நுட்பக் கல்வி கற்று
தொழில் வளத்தைப் பெருக்கலாம்.
*
மனப்பயிற்சி உடற்பயிற்சியில்
ஆழ்மனத்தைப் பழக்கலாம்
கனவு காணச் சொன்னக் கருத்தை
என்றும் நினைவில் பதிக்கலாம்.
*
எண்ணம் உறுதி முனைப்பினை
மனதில் எழுச்சியடன் வளர்க்கலாம்
உள்ளே ஒளிரும் மூலக் கனலை
உணர்ந்து மலர்ந்து திளைக்கலாம்.
*
விண்வெளி ஆய்வு அணு சோதனையில்
வெற்றி தனைக் குவிக்கலாம்
மண்வளம் பெருக்கி உழைத்து
மானுடப் பசியைப் போக்கலாம்.
*
இந்தியக் கலை இலக்கியங்கள்
காலமெல்லாம் படிக்கலாம்
சிந்தனையில் புதமை செய்து
விருது வாங்கி குவிக்கலாம்.
*
எதிர்கால இளைஞர்களே வாங்க போகலாம்
ஜனாதிபதி கலாமை நேரில் சந்திக்கலாம்
புதிரானக் கேள்விக் பலக்கேட்டுத் துளைக்கலாம்
தெளிவான பதில் பெற்று அறிவினைப் பெருக்கலாம்.
*
கவிஞர்.ந.க.துறைவன் எழுதிய “ பாப்பா பாடும் பாட்டு ” – என்ற
நூலிலிருந்து – பக்கம் – 50.

*  

அஞ்சலி கவிதை.

ஜனாதிபதி ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் கவிதை.
*
ஒ! மனிதா,
எனது படைப்பில் சிறந்தவனே!
உனது வாழ்வு நிற்காத நீண்ட பயணம்!
அதில் மாந்தர் அனைவரும் இணையும் வரை
மற்றவர் சுகத்தில்
மற்றவர் துயரத்தில்
மனதார மூழகுங்கள்
எனது வடிவான பேரானந்தம்
உன்னுள் பிறக்கும்
அதுதான் மனிதத்தின் அழியாத அடையாளம்.
வாழ்வின் பாதையில்
தினமும் உங்களுக்குத் திகட்டும் வரை பாடம்.
அதனாலேயே
நீங்கள் தாம்
எனது படைப்பில் சிறந்த படைப்பு.
*
ஆதாரம் ;- எழுச்சி தீபங்கள் – நூல் – பக்கம் – 26.

*

அஞ்சலி...!!


*
கனவுச் சிறகுகளை விரித்துப் பறந்த
அக்னி சிறகுப் பறப்பதை நிறுத்திக் கொண்டது
*.
மறைந்த முன்னாள் ஜானாதிபதி
டாக்டர்.ஆ.பெ.ஜெ. அப்துல்கலாம் அவர்களின்
மறைவிற்கு எனது ஆழந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
*

Sunday, 26 July 2015

கீரைக்காரி...!! [ கவிதை [


*
உடல் வதங்கியிருக்கிறாள் கீரைக்காரி
பச்சென்றிருக்கிறது கீரை.
*
பூம்பூம் மாட்டுக்காரன் வாசலில் நின்றான்
தலையாட்டி காசு கேட்டது மாடு.
*
எப்படியிருக்கீங்க என்று கேட்டான்
ஏதோ இருக்கேன் என்றான்.
*

நொடி

எனக்குச் சொந்தமானது
இந்த நொடி மட்டுமே
கடந்து சென்ற நொடியல்ல.
*


Saturday, 25 July 2015

கோட்டு...!!

*
Haiku – English / Tamil.
*
Winter downpour
Even the monkey
Needs a raincoat.
*
குளிர்கால மழை
குரங்குக்குக் கூட
மழைக் கோட்டு தேவை.
-P.A. Krishnan. Kalankiyanathi – Navel – Page -97.

Collection By : N.G.Thuraivan.

அழகு...!!

அழகு பஞ்சத்தின் ஊதுகுழல். சாவு நெருங்கியக் கொண்டிருக்கும் செய்தியின் அறிவிப்பு. இந்தப் பூக்கள் உதிரும்போது மூங்கில் விதைகளும் உதிர்கின்றன. மூங்கில் விதைகள். எலிகளுக்கு மிகவும் பிடிக்கும். எலிகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன. மழையும் சேர்ந்து வருகிறது. மழையில் விதைகள் சில நாட்களில் செடிகளாக மாறிவிடுகின்றன. விதைகள் கிடைக்காத எலிகள் வயல்களையும் நெற்கிடங்குகளையும் தேடத் தொடங்குகின்றன. யுத்தம் தொடங்குகிறது.
“ இந்த யுத்தம் விவசாயிகளுக்கும் எலிகளுக்கும் மத்தியில் நடக்கிறது. தங்களால் முடிந்தவரை தானியங்களைத் தின்றுவிட்டு எலிகள் கோடிக்கணக்கில் சாகின்றன. இந்த இழப்பை ஈடுகட்ட விவசாயிகள் பல வருடங்கள் பாடுபட வேண்டியிருக்கி்றது. இப்போது நடப்பது எலிகளில் வருடங்கள்.         .
ஆதாரம் :-எழுத்தாளர். திரு.பி.ஏ.கிருஷ்ணன் – கலங்கிய நதி – நாவல் –பக்கம்.95
தகவல் :- ந.க.துறைவன்.

Friday, 24 July 2015

குறும்பு

படித்துக் கொண்டிருந்தவனைக்
கடித்து விட்டுப் போகிறது
குறும்பு எறும்பு.


மிளகு

உதட்டின் நுனியில்.
மிளகு
கருமச்சம்.


எந்த டீ பிடிக்கும்...!!


*
உங்களுக்கு கிரீன் டீ பிடிக்குமா?
உங்க எண்ணத்திற்கு பச்சை கொடி காட்டும்.
*
உங்களுக்கு பிளாக் டீ பிடிக்குமா?
உங்க மனம் வெறுப்பில் இருக்கிறது என்று அர்த்தம்.
*
உங்களுக்கு சைனா டீ பிடிக்குமா?
உங்களுக்கு பயந்த சுபாவம் உண்டெனலாம்
*
உங்களுக்கு பிளாக் & வையிட் டீ பிடிக்குமா?
உங்களுக்கு மனக்கலக்கம் அதிகமுண்டு.
*
உங்களுக்கு திரிரோசஸ் டீ பிடிக்குமா?
உங்கள் மனம் அன்பு ஆசை காதல்
மூன்றுக்கும் அடிமை.
ந.க.துறைவன்.

Thursday, 23 July 2015

முல்லாவின் கதை

கைத்தறி புடவையே அணியுங்கள்….!!
*
முல்லா நசருத்தீன் ஒருநாள் சிந்தனையில் மூழ்கியவாறு பேருந்தில் ஏறி அமர்ந்தார். சிகரெட் குடிக்கத் தொடங்கினார்.
‘” பெரிய எழுத்தில் “ இங்கே புகை பிடிக்கக் கூடாது ” என்று அறிவிப்பு இருக்கிறதே பார்க்கவில்லையா? ஏன் உமக்குப் படிக்க வராதா? “ நடத்துனர் அதட்டினார்.
” படிக்காமல் இருப்பேனா? பார்த்தேன். இந்தப் பஸ்ஸிலே பலதும் எழுதி வைச்சிருக்கீங்க. எல்லாத்தையும் கடைப்பிடிக்க முடியுமா?. அதைப் பாரு! “ கைத்தறிப் புடவைகளையே அணியுங்கள்.!” என்று எழுதியிருக்கிறது. அதைக் கடைபிடிக்க முடியுமா?. என்றார் முல்லா.
ஆதாரம் :- ஓஷோவின் அஷ்டாவக்ர மகாகீதை – பக்கம் – 236..
தகவல் : ந.க.துறைவன்.   
*


நிலம்... [ Senryu / சென்ரியு ]


*
தந்தையிடம் நிலமிருந்தது
மகனிடம் நிலமிருந்தது
இழந்த நிலத்தில் அடுக்கங்கள்

Wednesday, 22 July 2015

சக்தி...!! [ Haibun / ஹைபுன் ]


*
அவனிடம் ஏதோவொரு சக்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். அதென்னவென்று அவனுக்குத் தெரியும். அந்தச் சக்தியைப் பற்றி அவன் எப்பொழுதும், யாரிடமும் காட்டிக் கொண்டதில்லை. அவனுக்கே தெரிந்திருந்தும் எப்படி வெளியில் காட்டுவதென்று பெரும் தயக்கம். அப்படிக் காட்டிவிட்டால் பிரச்சினையாகும். நம்மை ஏதோவொரு அதீதமானவன் அல்லது பித்தன் என்று நினைத்துக் கொள்வார்கள் என்பதாக மனதில் நினைத்துக் கொண்டான் ஊரெல்லாம் அதே பேச்சு, அதைக் கேட்டுக் கேட்டு அவன் மௌனமாகி விடுகிறான். அவனது அந்தமௌனம் தான் சக்தியோ?. 
*
கேள்வி கேட்க எழுந்தான்
கேட்காமலேயே உட்கார்ந்தான்
மௌனமாய்…!!...

*

Monday, 20 July 2015

மனம்...!!

Haiku – Tamil / English.
*
உள்ளே மலர்ச்சி வெளியே சாந்தம்
ஏகாந்த நிலையில்
சூன்யத்தில் இணைகின்றது மனம்.
Relax out in Bloom
Ekanta condition
Entering into the mind nothing

N.G. Thuraivan.

நீலமலர்...!! [ கவிதை ]


*
தாவணிப் பறந்தாட
துள்ளித் துள்ளிப் போறா…
தட்டாம்பூச்சிங்க அவ கூட
சிறகடித்துப் பறக்குது.
*
இலந்தம் பூவைப் போலவே
இளமை ரொம்ப அழகு
மயில்வண்ணத் தோகைப்போல
கட்டிய தாவணி யழகு.
*
ஆலமரம் விழுதுகள் போல
கருங்கூந்தல் நீளம்
ஆளானப் பொண்ணு
அவ பேருங் கூட நீலம்.
*
தண்ணிக் குடம் தூக்கிப் போனா
தளும்பவில்லை மனசு
கண்பார்வை வீசிப் போனா
காதல் விழிச்சுடரோ புதுசு.
*
செல்போனில் பேசிப் போனா
உதடு சிவந்து தெரியுது
பேசும் வார்த்தை என்னவென்று
காத்துக்கு மட்டும் தெரியுது.
*
காத்து வந்துச் சொன்னா
கட்டிக்க எனக்கு சம்மதம்
நீலமலர் அழகில் சொக்கி
நீண்ட காலம் வாழ்ந்திடுவேன்…!!

*

நினைப்பு...!! [ Haiku / ஹைக்கூ ]


*
திறந்திருக்கும் சன்னலில்
எட்டிப்பார்த்தது குருவி
அவளைக் காணவில்லை.
*
யாரைப் பார்த்தாலும்
தலையை யாட்டுகிறது
ஒணானுக்கு நக்கல் அதிகம்.
*
குருவி நினைத்தது
பனங்காய் விழுந்தது
எடுக்க யாருமில்லை?
*

Sunday, 19 July 2015

அணில்

குடிநீர்த் தொட்டியில்
தவறி விழுந்து மரணம்
குதித்து விளையாடிய அணில்.


நிழல்

அசையாமல் இருக்கிறது
மரத்தின் கீழ்
அவள் நிழல்.
ந.க.துறைவன்.


பயிற்சி

காலை நடை பயிற்சி
மாலை உடற் பயிற்சி
எல்லாமே ஆரோக்கிய முயற்சி.
ந.க.துறைவன்.


Thursday, 16 July 2015

சிரிப்பு...!! [ சென்ரியு ]

*
எதற்கு சிரிக்கிறான் தெரியவில்லை?
சிரிப்பை நிறுத்தவில்லை
அருகில் வந்தவரும் சிரித்தார்.

*

ஆடி....!! [ கவிதை ]


*
அம்மனாகி வருகிறாள்
ஆடி வெள்ளிக் கிழமையிலே
அம்மாகி வருகிறாள்
ஆசிர்வதிக்க வருகிறாள்.
*
கல்வி தரும் கலைமகளாய்
சரஸ்வதி வருகிறாள்
செல்வமளிக்கும் திருமகளாய்
இலட்சுமி வருகிறாள்
*
கருணை மழை பொழிபவளாய்
காமாட்சி வருகிறாள்
துன்பம் போக்கும் தேவியாக
துர்க்கையம்மன் வருகிறாள்.
*
அகிலம் ஆளும் அம்மனாகி
சக்தி ஜோதி வருகிறாள்
சகலருக்கும் அருள் பாலிக்கும்
ஸ்ரீசக்கர நாயகியாக வருகிறாள்

Wednesday, 15 July 2015

களஞ்சியம்...!! [ கவிதை ]


*
என்னைத் தெரியுமென்றார்
வந்திருந்தத் தெரியாதவர்.
*
மலர் நிறைய மணம்
மடி நிறைய பணம்.
*
எழுதியிருக்கும் வாசகங்கள் தொகுத்தால்
ஆட்டோ கலைக்களஞ்சியமாகி விடும்

Tuesday, 14 July 2015

சொத்து...!! [ கவிதை ]


*
பத்தாம் வகுப்பு படிக்கையில்
பக்கத்துப் பக்கத்தில்
உட்கார்ந்துப் படிச்சிப் பேசி
உரக்கச் சிரிச்சிக்கிட்டோம்.
இப்போ சிரிப்பதற்கு
என் பக்கத்திலே யாருமில்லே.
உன்னருகில் யாரிருக்கா?
உன் சிரிப்பலை
கால் நூற்றாண்டாக
நினைவில் பதிவாகி….
உன் சிரிப்பில் உதிர்ந்த முத்து
ஆயுள் முழுக்க மறக்க முடியாத
அழியாதச்  சொத்து…!!
*

Monday, 13 July 2015

அஞ்சலி்


*
இசையமைப்பாளர்
எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு.
*
மரணம் வந்தால் தெரிந்துவிடும் – நான்
மனிதன் என்று புரிந்துவிடும்.
ஊர் சுமந்து போகும்போது
உனக்கும் கூட புரிந்துவிடும்!!...
கவிஞர்.கண்ணதாசன் பாடல் – 369.

*

அஞ்சலி

இசைக்கு மரணமில்லை.
ந.க.துறைவன்.


நட்பு...!! [ கவிதை ]


*
தமிழ் இலக்கணத் தேர்வில் தோற்றார்
நட்புக்கு இலக்கணமாக இருந்தவர்
*
எதையும் கொண்டு வராதவர்
கையில் எதையோ கொண்டு செல்கிறார்.
*
அகமுக நட்பது நட்பன்று நெஞ்சத்து
முகநூல் வாட்ஸ்அப் நட்பே நட்பு.

*

Sunday, 12 July 2015

கேள்வி...[ HAIKU / ஹைக்கூ.


*
கேள்வி கேட்க எழுந்தான்
கேட்காமலேயே உட்கார்ந்தான்
மௌனமாய்…..
*
And stood up to ask a question
Sat without
Silent,,,!!

*

உள்ளிருப்பு...!! [ புதுக்கவிதை ]


*
உன்னைப் பார்த்ததாக
அம்மா வந்துச் சொன்னாள்
அப்பப் பார்த்தவளா இல்லை
மெலிந்திருக்கா சோம்பி
முகம் தெளிவில்லை எதையோ
பறிகொடுத்தவ மாதிரியிருக்கா?
மனம்விட்டு எதையும்
சொல்ல மறுக்கிறா?
நீ போயி தா அவகிட்ட
பேசிப் பாரேன்.
ஊங்கிட்ட வாச்சும்
கஷ்டத்தைச் சொல்லி….
நான் போயி எப்படிம்மா?
அவளிடம் கேட்பது?
நாளும் குமைந்துக்
கொண்டிருப்பவளிடம் போய்
எத்தனைப் பேர் கேட்டாலும்
உள்ளிருப்பதை வெளியில்
சொல்லுமா வெந்த மனம்….??

*

Saturday, 11 July 2015

நாவல்பழம்...!! [ Haiku / ஹைக“கூ ]


*
நிறமில்லாதது மனம்
மண்ணை நிறமாக்கியது
கீழே விழுந்த நாவல்பழம்.
*


சாபம்...!! [ லிமரைக்கூ ]

*
மனிதப் பிறப்பே இங்கொரு சாபம்
உயிர்களைப் பலி கொள்கின்றன
ஊழல் தேர்வு நிறுவனம் வியாபம்

*

Friday, 10 July 2015

சலிப்பு

மணியடித்து அடித்து
தூக்கத்தைக் கெடுத்தான்
ஐஸ் வண்டிக்காரன்.


Thursday, 9 July 2015

வெற்றிடமே...!! [ கவிதை ]


*
வாழ்க்கை விலகிப் போகின்றது
மரணம் நெருங்கி வருகி்ன்றது.
*
எங்கும் காண்பதெல்லாம் வெற்றிடமே
வெற்றிடத்தில் தான் எல்லாமிருகின்றது

என்ன கேட்கிறாய் என்பது முக்கியமில்லை?
என்ன கேட்க வேண்டுமென்பதே முக்கியம்.
*

Wednesday, 8 July 2015

பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!! [ கட்டுரை ]


*
தமிழ்செய்தி செனல்களில் சில தினங்களுக்கு முன்னர் நான்கு வயது சிறுவர்களை மது குடிக்க வைத்து, அவர்களின் உறவினர்கள் ரசித்தக் காட்சிகள் ஒலிப்பரப்பாகி, தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சியுள்ளாக்க வைத்து பலரின் உள்ளங்களை உறைய வைத்தன. இதுபோன்ற சம்பங்கள் எங்கேனும் நடந்துக் கொண்டு தானிருக்கின்றன என்பதற்கு இக்காட்சித் தொகுப்புகள் சான்றாகும். மதுவை ஒழிக்க வேண்டுமென்ற குரல்கள் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தாலும், அது செவிடன் காதில் ஊதியச் சங்கொலியாகத் தானிருக்கின்றது. கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டின் இளம் தலைமுறை சீரழிந்து வருகின்றது என்கின்ற சம்பவங்களை புள்ளி விவரங்களோடு சமூகஆர்வலர்கள் எடுத்துக் கூறிளாலும், அதொரு புலம்பலாகவே தெரிகின்றது. மது விற்பனையை கருவூலத்தை நிரப்பும் வருவாய்த் துறையாகவே  வைத்திருக்கின்றது அரசு மது வருமானத்தை வைத்துத் தான் ஏழைமக்களுக்கு இலவசங்களை வாரி வழங்கி வருகின்றது. இவ்வருமானம் இழந்தால் அரசு இலவசங்கள் மடடுமல்ல, சிலபல திட்டங்களையும் அரசு நிறைவேற்ற முடியாது. என்பதே நிதர்சன உண்மையாகும். மது ஒழிப்பு நடக்குமா? மக்கள் ஒழிப்பு தான் நடக்குமா? அரசுக்கு வருவாய் தான் முக்கியமே ஒழிய மக்கள் வாழ்வாதாரம் முக்கியமில்லை என்கின்ற நிலை நீடித்தால் பண்பட்ட மனித சமுதாயம் காண்பதே அரிதாகிவிடும் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
ந.க.துறைவன்.


நன்கொடை

இயற்கை கொடுத்த நன்கொடை
பூக்கள் பழங்கள்  நிறைந்தது
அழகான மரங்கள்.
ந.க.துறைவன்.


துணை

தூக்கம் வரவில்லை என்று
தவிப்போர்க்குத்
தூக்க மாத்திரையே துணை.
ந.க.துறைவன்.


மயக்கம்

மாலை மயக்கம்
போதையில்லாதப் போதை
எனக்குள்ளொரு தயக்கம்.
ந.க.துறைவன்.

மயக்கம்

மாலை மயக்கம்
போதையில்லாதை போதை
எனக்குள்ளொரு தயக்கம்.
ந. க. துறைவன்.


சுருங்கல்

கைப்பட்ட உடன்
அச்சத்தோடு சுருங்கியது
தொட்டாற்சுருங்கி இலைகள்
ந.க.துறைவன்


காவல்

குடும்ப உறுப்பினர்கள் சகிதமாய்
திருத்தல யாத்திரைப் பயணம்
வீட்டிற்கு காவல் பூனை.
ந.க.துறைவன்.

அடம்

அடம் பிடித்து அழுது
காரியம் சாதித்தது
செல்லக் குழந்தை.
ந.க.துறைவன்.

Monday, 6 July 2015

ஆமைத் தலைகள்....!! [ ஹைபுன் ]


*
நத்தை, ஆமை ஆகியன ஓரே இனத்தைச் சேர்ந்த நீர் வாழ்வனவாகும். அவைகள் கெட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ள ஓட்டிற்குள் தன் உடல் உறுப்புக்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு உயிர் வாழ்கின்றன. நத்தையின் ஆயுள் குறைவு என்றாலும், ஆமையின் ஆயுள் காலம் முந்நூறு ஆண்டுகள் என்று கூறுகின்றார்கள். இதன் வடிவைப்பைக் கண்டு தானோ என்னமோ இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களின் உயிர் பாதுகாப்புக்காக ஹெல்மெட் என்ற தலைக்கவசத்தை உருவாக்கியுள்ளார்கள். வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிவது அவசியம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதன்பேரில் பாதையில் எங்கும் விதவிதமானத் தலைக்கவசமணிந்துப் பயணிக்கின்றார்கள்..    
*
பக்தர்களைக் காப்பது கந்தசஷ்டிக் கவசம்
வாகன விபத்திலிருந்து மனிதஉயிர்களைக் காப்பது
ஹெல்மெட் மென்பொருள் தலைக்கவசம்.

Sunday, 5 July 2015

முடிவு...!! [ கவிதை ]


*
நட்சத்திரங்கள் நம்மைப் பார்க்கின்றன
அந்த அழகை நாம் தான் பார்ப்பதில்லை
*
இல்லை என்பது எதுவுமில்லை
இங்கே எல்லாமே இருக்கின்றது.
*
அவசரத்தில் எடுக்கின்ற முடிவு
அச்சத்தில் முடிகின்றது.
*

Friday, 3 July 2015

கிளி...!!

Haiku Tamil / English.
*
கிளி தெரியவில்லை
மூக்கு போல தெரிகிறது
பச்சை இலையின் நுனி.
Parrot unknown
Seemed like nose
The tip of green leaf.

*

காந்தமாய்...!! [ கவிதை


*
இதயம் கவர்ந்தவளே
இந்த தொடியில்
உன் மனம், அறிவு, ஆற்றல்
சுவாசம், உணர்வுகள்
உருவம் என அனைத்தும்
காந்தமாய்……
நம்
இருவருக்குள்ளும்
இணைந்துக் கொள்ளட்டும்.
*

காத்திரு...!! [ கவிதை ]*
மாலை நேரம் நெருங்குது
மனசு அலை பாயுது
எங்கே இருக்கேன்னு
கண்கள் தேடி அலையுது.
*
வெளுத்த மேகம் கருக்குது
மழை வரும்போல தெரியுது
எங்கே இருக்கேன்னு
ஏக்கமாக இருக்குது
*
அனல் தனிஞ்சி வருது
ஆடி காத்து வீசுது
எங்கே இருக்கேன்னு
எம்மனசு துடிக்குது.
*
தூறல் மெல்ல போடுது
மழை வேகமாக கொட்டுது
எங்கே இருக்கேன்னு
என் நெஞ்சும் பதறுது.
*
கஷ்டப்பட்டு வராதே
காத்து மழையில் நனையாதே
ஒதுங்கி எங்கும் நிக்காதே
உபத்திரத்தைத் தேடாதே.
*
எங்கே இருக்கேன்னு
செல்போனில் சொல்லிடு
ஸ்கூட்டரிலே வருகிறேன்
கொஞ்ச நேரம் காத்திரு.
*

Wednesday, 1 July 2015

நிலர...!!

Tamil  Haiku / ஹைக்கூ.
*
பாதுகாப்பிற்கு
துணை வருகின்றாள்
அழகு நிலா.
*
Security
Sub comes
Beauty moon.
*

அவளா...!! [ கவிதை ]

அவளா…!!
*
என்னைத் தெரியவில்லையா?
என்று கேட்டாய்.
தெரியவில்லையே என்றேன்
நான் தான் அவள்.
எவள்?
ஓ…நீ…. தான்
அந்த அவளா???.

*