Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Thursday 29 September 2016

விதி...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*       
விதியை பற்றி
விளக்கமாக பேசினார்
அவரை வென்றது விதி.
*
About the fate
Description spoke
Won him the rule.

*

Wednesday 28 September 2016

இருக்கிறது

இருக்கிறது என்று தான்
நினைக்கிறோம்
இருப்பதில்லை
இல்லை என்று தான்
நினைக்கிறோம்
இருக்கிறது

ந. க. துறைவன்.


ஒன்றுமில்லை...!! ( புதுக்கவிதை )



குளிர்க் காற்றின் மென்மையில்
காலை நடைபயிற்சியில் இருக்கும்போது
எதிரே வந்த நெருங்கிய நண்பர்
என்னிடம் பேச்சுக் கொடுத்து
நலம் விசாரித்தார் கவனமாய்
பரிமாற்றலுக்குப் பிறகு
மீண்டும் வேறேன்ன செய்தி என்றேன்.
ஓன்றுமில்லை என்றார்
ஒன்றுமில்லை என்று சொன்னவர்
அரைமணி நேரம் தன் சோகச்
சுமைகளைக் கொட்டித் தீர்த்தார்.
ஒன்றுமில்லை என்பதில் தான்
எத்தனை உருவகங்கள் அவர்
உள்மனதில்
புதைந்திருக்கிறதெனப் புரிந்தது.
வெங்காயத்தின்
உள்ளே ஒன்றுமில்லை தான்
அதன் மேலே அடர்த்தியாக
அடுக்கியிருக்கிறது ஒவ்வொன்றாகக்
காய்ந்த சருகுகள்.

*

Monday 26 September 2016

நினைவு...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
இன்றும் நினைவிலிருக்கிறது
இருவரும்  நனைந்த
அந்த மழை நாள்.
*
Today we remember
Both wet
That rainy day.
*

Saturday 24 September 2016

செய்திகள் என்ன சொல்லுது?



1.
இரவில் மலர்ந்து காலையில் வாடும் ‘ நிஷா காந்தி ‘ மலர் பூத்து குலுங்குகிறது.
நள்ளிரவில் மட்டுமே பூக்கும் “ நிஷா காந்தி ” பூக்கள் தற்போது நாகர்கோவில் ராமன்புதூரில் உள்ள ஆலன் ஜோ என்பவரது இல்லத்தில் பூத்துள்ளது.  நிஷா காந்தி பூக்கள் நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே மலர்ந்திருக்கும். இந்த பூக்கள் இரவில் பூப்பதால் “ இரவு ராணி ‘  என்றும் அழைக்கப்படுகின்றன.
     குறிஞ்சி மலரைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால்,  இரவில் மலர்ந்து காலையில் வாடும் இம்மலர் பற்றி இப்பொழுது தான் கேள்விப்படுகிறோம் அல்லவா! எப்பொழுதும் மலர் இனங்கள் அதிசயமானவையே. மலர்க. நிஷா மலர்க…!!

2.
எல்ஐசி  ; 60 ஆண்டு ஆச்சரியம்.. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் தனது 60-வது வயதை நிறைவு செய்து வைர விழாவைக் கொண்டாடுகிறது.
     .இந்தியாவில் ஒரு வலுவான பொதுத் துறை நிறுவனம் எல்ஐசி. இந்திய பொருளாதாரத்தின் ஒரு மையப் புள்ளியாகத் திகழ்வது. அதன் வளர்ச்சியைப் பாராட்டி வாழ்த்துவோம்.
3.
ரயில்வே தறையை தனியார்மயமாக்க முயற்சி
     இன்னும் கொஞ்ச நாள்லே இந்தியாவையே தனியாருக்கு வித்திட்டுப் போயிடுவாங்க போல இகுக்கு.
ந.க.து்றைவன்.


மனதிற்கிசைவாய்...!!



தொடங்கிய வேலைகள் இன்னும்
முடிவுபெறாமல் அப்படியே இருக்கிறது.
அதற்கடுத்ததாய் காத்திருக்கும் வேலைகள்
எப்பொழுது தொடங்குவதென
வழியறியாமல் திகைக்கிறது மனம்
திட்டமிட்ட வேலைககள் முடிக்கவே
இயலாத சுமையின் பாரம் தாங்காமல்
தவிக்கையில் சட்டென எதிர்பாராமல்
நிறைவேறி விட்டது எந்தவொரு
வில்லங்கமுமில்லாமல் திட்டமிடாத
சிலவேலைகள் மனதிற்கிசைவாய்...!!

*

Friday 23 September 2016

செய்திகள் என்ன சொல்லுது?



1.
இந்தியாவில் கடந்த ஆண்டில் கர்ப்ப கால மற்றும் பிரசவ காலத்தில் இறந்த
பெண்களின் எண்ணிக்கை 45,000. இதில் இந்தியாதான் முதலிடம்.
     முழக்கங்கள் தான் இங்கு முக்கிய பங்கு வகிக்கிறதே தவிர சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறோம் என்பதற்கு இதுவே சிறந்ந உதாரணம்.
2.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம் வரை நிகழ்ந்த சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 377. இதில் உயிரிழப்பு 143. காயமடைந்தவர்கள் 353. இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துகளில், தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
     குடிபோதை தான் இதற்கு முதன்மையான காரணம் என்று சாலை விபத்துக்கான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
3.
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் புதுமைப்பித்தன் வாழ்ந்த சாலைத் தெருவுக்கு “ புதுமைப்பித்தன் வீதி ” என்று பெயர் சூட்டியிருக்கிறது மாநகராட்சி நிர்வாகம்.
     படைப்பாளர்களுக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம்.
தகவல் தொகுப்பு ; ந.க.துறைவன்.

*

Thursday 22 September 2016

ஓஷோவின் சிந்தனைகள்..!!



1.
தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளும் மனிதன் அடுத்தவர்களையும் துன்புறுத்தத்தான் செய்வான்.
2.
ஒரு செயல் தவறானதை நீங்கள் மாற்றும்போது, மற்றொரு தவறான செயல் உங்களால் ஏற்பட்டு விடுகிறது.
3.
பகுத்தறிவாளன் எப்பொழுதும் சம்பிரதாயங்களில் அடைபடுவதில்லை. வெறும் மூடர்கள் தான் அதில் கட்டுண்டு விடுகிறார்கள்.
ஆதாரம் ; ஓஷோவின் “ விளக்கின் கீழே விதை. – நூல்ஃ
தொகுப்பு ‘ ந.க. துறைவன்.
*

சபல புத்தி...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
வேண்டுவது  வேண்டாமென
பொய்யாய்  உரைக்கிறது
மனிதனின் சபல புத்தி..
*
That you should not
Falsely says
Caprice of man

*

Wednesday 21 September 2016

உயிர் பறீக்கும் மின்வயர்...!! ( கவிதை )


*
மின்சார வயரைக் கடித்து
தற்கொலை செய்துக் கொள்ளும்  
புதியதொரு உத்தியை
அறிமுகமாக்கியுள்ளார்கள்
உங்கள் வீட்டில்
அவளோ / அவளோ இருந்தால்
பத்திரமான பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அவர்கள் மனப்போக்கை அறிந்து
சற்றே விட்டுக் கொடுத்து
பழகி பாசமாயிருங்கள்.
எதற்கெடுத்தாலும் அவர்கள் மீது
குற்றப் பத்திரிகை வாசிக்காதீர்கள்.
அவளோ / அவனோ எதற்கேனும்
கோபித்து முரண்டு பிடிக்க
இடம் தராதீர்கள்.
அவர்களி்ல் எவரேனும் தற்கொலைக்கு
முயற்சிக்கலாம் உங்களுக்கே தெரியாமல்
வீட்டில் எட்டாத உயரத்தில்
இருக்கும் அறுந்த மின்சாரவயர்களை
உடனே பழுது பாருங்கள்
குடும்பபப் பிரச்னையில் ஏடாகூடமாக
ஏதேனும் நடக்க வாய்ப்பில்லாமல்
உயிர்களைப் பாதுகாக்கலாம்.
*


சிலைகள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
சிலைகள் மீது
மலம் கழித்தன பறவைகள்
கழுவி விட்டன மழை.
*
On statues
Stools passed the Birds
Rain had washed away.

*

Tuesday 20 September 2016

இதழ்கள் சொல்லும் இனிய செய்திகள்.



மெல்ல வளரும் கூட்டுப் புழு.

1.
‘ காலத்தைப் போலக் காயத்தை ஆற்றும் மருந்து வேறில்லை  ‘ என்றும் ‘
‘ காலத்தைக் கனிய அனுமதிக்கும்போது அது நம்மை அழகழகான பசுஞ்சோலைக்குள் அழைத்துச் செல்லும் ‘ என்றும்  ‘ அவருக்கு எழுத முடிய வேண்டும், அவரது எழுத்தக்களின் ஒவியப்படாம் மென்மேலும் விரிந்து பரவ வேண்டும் ‘ என்றும் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு கூறுகின்றது. நல்ல மனநிலையைத் தோற்றுவிக்கும் இப்படியான வரிகளுடன் ஆதமார்த்தமாக உரையாடும் அத்தீர்ப்பின் இறுதிச் சொல் ‘ எழுது ‘ எனக் கட்டளையிடுவதாகவும் ‘ எழுதுக ‘ என ஆசிர்வதிப்பதாகவும் கருதுகிறேன்.
எழுத்தாளர் பெருமாள் முருகன் - 22-08-2016 அன்று டில்லியில் நடைபெற்ற ‘ கோழையின் பாடல்கள் ‘ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் நிகழ்த்திய ஏற்புரை.   
2.
தமிழகத்துக் கல்விச் சூழலில் நவீன இலக்கியங்களுகளைப் பற்றிப் பேச இடமில்லை. தமிழுக்குப் பெரிய இலக்கியப் பாரம்பரியம் உள்ளது. சங்க இலக்கியம் போன்றவற்றையே அவர்கள் இலக்கியங்களாக மதிக்கிறார்கள். நவீனப் படைப்புகளை அவர்கள் இலக்கியங்களாக ஏற்றுக் கொள்வதில்லை. நவீன இலக்கியங்கள், இதழ்கள் குறித்தெல்லாம் உரையாடவே கல்விச் சூழலில் ஆட்கள் இல்லை. இருப்பினும் என்னால் இயன்ற அளவுக்கு என் மாணவர்களுக்கு நவீன இலக்கியங்களை அறிமுகப்படுத்த நான் தவறியதில்லை.
        பெருமாள் முருகன் -  பேட்டி -  
ஆதாரம் ; காலச்சுவடு – இதழ் – எண் ; 201. – செப்டம்பர் – 2016.
தகவல் ; ந.க.துறைவன்.

*

பாஷோவின் அழகியல் ஹைக்கூ கவிதை.


Monday 19 September 2016

நினைவோடு...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
அனைவரிடமும் நினைவோடு
தொடர்பு கொள்கிறேன்
டெலிபதியில் நினைத்த போது….!
*
Everyone to remember
Contact
While the thought of telepathy ....!

*

Saturday 17 September 2016

செய்திகள் என்ன சொல்லுது?



1.
அமெரிக்க அருங்காட்சியகத்தில் தங்க கழிவறை. பொது பயன்பாட்டு திறப்பு.
18 கேரட் தங்க கழிவறை பொது பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
அமெரிக்காகாரன் எது செய்தாலும் அது மக்களுக்குச் சாதனையா         வெளிப்படை தெரியுது. நம்ம நாட்லே இருக்கிறது வெளியிலேயே தெரியாம உள்ளுக்குள்ளேயே மறைஞ்சிருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம்.
2.
11 இடங்களில் அம்மா திருமண மண்டபம். முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு.
எங்கும் அம்மா தான் நிறைஞ்சி இருக்காங்க. எத்தனை கோடி இன்பம் குறி வைத்தாய் அம்மா எத்தனையும் உனக்கே தான் சேரும் அம்மா.

3.
அடுத்த 20 ஆண்டுகளில் 100 ஆண்டுகளை மிஞ்மிய வளர்ச்சியை இந்தியா எட்டும். - தொழிலதிபர் முகேஷ் அம்பானி நம்பிக்கை.
     அடுத்த 20 ஆண்டுகள்லே இந்தியா வளர்ச்சியடையப் போகுதா? அம்பானி குடும்பம் வளச்சியடையப் போகுதா? எல்லாம் தொழில் மயம்?
தகவல் தொகுப்பு ந.க.துறைவன்.

*

இதழ்கள் சொல்லும் இனிய செய்திகள்...!!



1.
தமிழின் சேய்மொழியான மலையாளத்தில் ‘ ஓர்ம ‘ என்ற சொல்லே புழுக்கத்தில் உள்ளது. தாய்மொழியான தமிழிலோ பிரக்ஞை என்ற வடமொழிச்சொல்லே புழுக்கத்தில் உள்ளது. இதுதான் மொழிசார் உடல்களின் வரலாற்றுக் கட்டுமானம்.
2.
அமைப்பியல் சமிக்ஞைகளைக் கண்டுரைத்தல் என்ற தளத்தில் நிகழும்போதுதான் இது சாத்தியமாகும். அப்படி இயங்குவதற்கான சூழல் தமிழில் இல்லை என்பது பெரிய அவலம். ஆரோக்கியமான அறிவுசூழல் இல்லை.
3.
முத்தீ என்பது பசித்தீ, சினத்தீ, காமத்தீ என்பதை குறிக்கும் ஆரியமதம் சார்ந்த வேதாக்கனி எனப்படும் தீப்பண்பாட்டுச் சிந்தனையிலிருந்து பிறந்தது.

ஆதாரம் ; சிற்றேடு – காலாண்டிதழ் - ஏப்ரல் – ஜுன் – 2016.
தகவல் ; ந.க.துறைவன்.

*

Friday 16 September 2016

இரகசியம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
இருட்டில்  மறைந்திருக்கிறது
மனிதர்களின் ரகசியமான
மன்மத வாழ்க்கை.
*
Is hidden in the dark
Men's secret
Cupid life.

*

பச்ச மண்...!! ( ஒரு வரிக் கதை )



“ பொறந்தப் பத்து நாள்லேயே அப்பனை முழுங்கிடுச்சி. சனியெ. ” என்று ஊர் மக்கள் எல்லோரும் திட்டினார்கள். எந்த சலனமும் பிரச்னையும் அறியாமல் தூங்கிக் கொண்டிருக்கிறது அமைதியாய் அந்த பச்ச மண் குழந்தை

ந.க.துறைவன்.

Thursday 15 September 2016

இலைகள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English,
*
மனசில் பொறாமை
பூமிக்குள் மறைந்த வேர்களாய்
வெளியில் சிரிக்கும் இலைகள்.
*
Feel Envy
Late in the earth root
Smiling on the outside leaves.

முரண்பாடுகள்...!! ( ஹைபுன் )




எந்தவொரு பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும், அதில் இருவேறு கருத்துக்கள் உள்ளடங்கியிருக்கிறது. அதில் எது உண்மை? எது பொய்? என்று நிரூபிப்பது கடினமான காரியமாகும். வாழ்க்கை முழுக்கவுமே மனிதர்களிடையே இம்முரண்பாடுகள் மலிந்து காணப்படுகின்றன. பேச்சுக்கும் செயல்பாடுகளுக்கும் நடைமுறைக்குமான இம்முரண்பாடுகளை நேரிடையே கண்டறியலாம். முரண்பாடுகள் என்பது இயற்கையின் நியதியிலிருந்து தொடங்கி மனித வாழ்வின் எல்லை வரை தொடர்கின்றது. முரண்பாடுகள் இன்றி எதுவுமேயில்லை. முரண்பாடுகளோடு தான் சமூகமே வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.

முரண்பாடுகளை வென்றெடுத்து தான்
முளைவிட்டு எழுகின்றன
மண்ணில் விதைக்கும் விதைகள்.

ந.க.துறைவன்.

Tuesday 13 September 2016

அன்பை உணர்...!! ( ஹைக்கூ )



1.
பூக்கள் மலர்ந்தன
ஆம்! ஓசை இல்லை
மனத்துக்குள் மலர்ந்த காதல்.
2.
அழகில் மூழ்கு
அன்பை உண்
உன்னை உணர்வாய் நீ.
3.
உறவுக்குப் பெயர் வைத்தோம்
உணவுக்குப் பெயர் வைத்தோம்
உண்மைக்கு.
4.
நீரின்றித்
தாமரை மலருமா?
அட! மலைமேல் கற்றாழை.
5.
ஒற்றைத் தலையில்
எத்தனை உச்சி வகிடுகள்!
அழகே! தென்னங்கீற்றுகள்.
6.
சுவையான உணவின்றிச்
செத்துவிட்டது நாக்கு
இன்னும் முடியவில்லை சீரியல்.
7.
குளிரில் குளிப்பதற்காக
ஆடையை அவிழ்க்கும் அழகிகள்
இலையுதிர் கால மரங்கள்.
*
நன்றி : அ.விஜயன் – ” எல்லாமே பூக்கள் தான் ” – என்ற ஹைக்கூ தொகுப்பிலிருந்து.
தகவல் ; ந.க.துறைவன்.

*

Monday 12 September 2016

செய்திகள் என்ன சொல்லுது?



1.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உலக சாதனை.
ஓரே நேரத்தில் 430 நூல்கள் வெளியீடு.
       சாதனைப் படைத்துள்ள பல்கலைக்கழகத்திற்கு வாழ்த்துக்கள்.
2.
அஞ்சல் துறை புகார்களுக்கு  எண் ‘ 1924 ‘
கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்.
       எத்தனை பேர் உபயோகிப்பார்கள். புகார் கொடுத்தால் மட்டும் தக்க பதில் கிடைத்து விடுமா என்ன?
3.
இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும்
கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள்.
        பிரச்சினையை பெரியதாக்கியதே முதல்வர்தானே. அவர் பேச்சில் ஆரம்பத்தில் ஆணவம் இருந்தது. இதைப் பயன்படுத்தி யாரோ தூபம் போட்டு கலவரத்தை உண்டாக்கி விட்டார்கள் என்பது  தானே உண்மை.
4,
2015 – 16 –  காலகட்டத்தில், காவல் துறையினர் மீது மக்கள் கொடுத்திருக்கும் மனித உரிமை மீறல் புகார்களின் எண்ணிக்கை ; 35,831 ஆகும்.
       காவல் துறை ஆட்சியாளர்களின் நண்பன்.
ஆதாரம் ; தி இந்து நாளிதழ் – 13-09-2016.
தகவல் தொகுப்பு : ந.க.துறைவன்.

*

Three Haiku:s


செய்திகள் என்ன சொல்லுது?



இந்தியாவில் திருமணங்கள்.

1.
இந்தியாவி்ல் ஒரு திருமணத்திற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை செலவிடப்படுகின்றன. சுமார் மூன்று மாதம் முதல் ஒரு ஆண்டு வரையிலும் திருமண திட்டமிடல் நீள்கிறது.
2.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் தோராயமாக 1 கோடி திருமணங்கள் நடக்கின்றன.
3.
இன்று திருமணம் என்பது கோடிகளில் புழுங்கும் தொழிலாக மட்டுமே பார்க்கப்படுகின்றன. திருமண அழைப்பிதழ் சந்தை ரூ.10 ஆயிரம்கோடி, மேக்கப் மற்றும் அலங்கார சந்தை ரூ.10 ஆயிரம் கோடி, அணிகலன்கள் சந்தை ரூ.10 ஆயிரம் கோடி, ஆபரண சந்தை ரூ.1 லட்சம் கோடி என தனித் தனியான சந்தை மதிப்பு கொண்டுள்ளது. உணவுக்கு கூட ஒரு இலைக்கு இவ்வளவு தொகை என்றுதான் குறிப்பிடப்படுகின்றன.   
4.
ஒவ்வொரு திருமண சீசனிலும் 3 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.
5.
ஒரு திருமணத்திற்கு சராசரியாக 30 முதல் 40 கிராம் ஆபரணம் நகை பயன்படுத்துகிறார்கள் என்றால் ஒரு ஆண்டில் நடக்கும் 1 கோடி திருமணத்துக்கு ஆண்டுக்கு 300 முதல் 400 டன் தங்கம் தேவையாக இருக்கிறது.
ஆதாரம்் தி இந்து – நாளிதழ் – 12-09-2016 – தொழில் வளம் தரும் இந்தியத் திருமணங்கள் – என்ற கட்டுரையிலிருந்து.
தகவல் ; ந.க.துறைவன்.


Saturday 10 September 2016

கூழாங்கற்கள்...!! ( ஹைக்கூ )



அமைதியான ஆறு
நீருக்குள் மௌனமாய்
தியானத்தில் கூழாங்கற்கள்.

ந.க.துறைவன்.

Friday 9 September 2016

வாசிப்பு...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
ஆழ்ந்தப் புத்தக வாசிப்பு
வரிகளின் வசீகரிப்பு
இடையிடையே புன்சிரிப்பு.
*
Plunged Book Reading
There's Seduction
Interspersed with a smile.

*

Wednesday 7 September 2016

செய்திகள் என்ன சொல்லுது?




1.
இந்தியாவில் 7 முதல் 13 வயதுக்கு உட்பட்ட 88% மாணவ / மாணவியர் பள்ளிக்கு கொண்டுசெல்லும் புத்தகச் சுமை, அவர்களது உடல் எடையில் 45% அளவுக்கு இருக்கிறது என்று அண்மையில் ‘ அசோசெம் ‘ அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
       புத்தகச் சுமையெ குழந்தைங்க தூக்கிட்டுப் போகும்போது பார்க்கணுமே. நாமக்கே பாவமாயிருக்கும். அதுங்க முதுகு வளைஞ்சி. அப்பப்பா…???
2.
மக்களைவை நெறிகள் குழுவின் தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்.
        மூத்த தலைவரை திருப்திப்படுத்த ஒரு பதவி. அத்வானி இனிமே நிசப்தமானி.
3.
காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்.
        65 வருஷமா காஷ்மீர் பிரச்னை நடந்துகிட்டிருக்கு. வழக்கமாக, ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் வம்பு சண்டைக்கு வரும்போதெல்லாம் அனைத்துக் கட்சிகள் கூடும் முடிவு காண முடியாம. நிர்ந்த முடிவு காண வேண்டும் என்று கூறி விட்டு கலைந்து விடும்.
4.
பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க இந்தியா தயாராகவில்லை.
மத்திய நிதியமைச்சர். அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.
        அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்திற்குப் பிறகு தானே இப்படி முழங்குகிறார் ஜேட்லி.
 5.
சமஸ்கிருத மொழியில் ஐ.நா.சாசனம்
ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர். சையது அக்பருதீன் கட்டுரை ( டுவிட்டர் ) வலைதளத்தில்  வெளிட்டுள்ளார்.
        சமஸ்கிருத மொழி திணிப்பின் இன்னொரு பரிமாணமாக இச்செய்தி வெளிவந்துள்ளது.
தொகுப்பு ; ந.க.துறைவன்.

*

கலவை...!! ( ஹைபுன் )



மற்றவர்கள் வாழ்கின்ற வாழ்க்கை என்னுடையதல்ல. நான் வாழ்கின்ற வாழ்க்கையே எனக்கு சொந்தம். - என்று எல்லோருமே நினைக்கின்றார்கள். அதிலென்ன தவறு இருக்கிறது? ஒவ்வொருவருக்குமான ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதைத் தான் அவர்கள் வாழ வேண்டியிருக்கிறது. இந்தியக் கலாச்சாரம், பண்பாடு, மக்களை எப்படி வாழ வேண்டுமென்று ஏராளமான ஆன்மீக நியதிகளை வகுத்தளித்துள்ளது. அதில் சரியான வழிக்காட்டுதலும் உண்டு. மரபு மீறிய தவறாக நெறிமுறைகளும் உண்டு மேலைக் கலாச்சாரம் சார்ந்துள்ள வாழ்க்கை முறைகளும் உண்டு. இந்தியக் கலாச்சார வாழ்க்கை என்பது கூட்டுக் கலவையான வாழ்க்கை முறையாகவே திகழ்கின்றது.

அடைக்கப்பட்ட இனிப்பான
மருந்து கலவையாய் இருக்கிறது
மனித சமூக வாழ் நெறிகள்.  

*                                          *

Tuesday 6 September 2016

சிந்தனைக்கு...


ஊஞ்சல்...!! ( கவிதை )



1.
உயிர் தருவேன் என்றாய்
உயிரைப் பறித்து கொண்டாய்.
2.
வாழும்போது ஊஞ்சல் ஆடுகிறார்கள்.
சாகும்போது ஊசலாடுகிறார்கள்.
3.
எல்லாமே இயங்குகின்றது
யாருமே இல்லாத சூன்யத்திற்குள்.
4.
அகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
முகநூல் நட்பே நட்பு.
5.
பாதையில மேடு பள்ளம்
நிரம்பி வழிகிறது மழைவெள்ளம்.

*

Monday 5 September 2016

செய்திகள் என்ன சொல்லுது?



1.
புனிதராக அறிவிக்கப்பட்டார் அன்னை தெரசா.
     அன்னை மறைந்தாலும் மங்காத புகழோடு வாழ்கிறார். வாழ்க அன்னை.
2.
இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமான மொபைல்போன் உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் 24 கோடிபேர் ஸ்மார்ட்போன்களை உபயோகிக்கின்றனர். அடுத்த 4 ஆண்டுகளில் இது 52 கோடியாக அதிகரிக்கும்.
      இனிமேல் வாழ்க்கை எல்லாமே மொபைல்போன் தான். பாக்கெட்டிற்குள்  மனிதக் கனவுகள்.
3.
சர்வதேச சந்தைக்கு பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 70% சந்தையை இந்தியா வைத்துள்ளது. 30% சந்தையை பாகிஸ்தான் வைத்துள்ளது.
        இந்தியாவில் இருக்கிற ஏழை மக்களின் கனவு அரிசி.
தொகுப்பு ; ந.க.துறைவன்.

*

Sunday 4 September 2016

தாய்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
குழந்தைக்குப் பால்
கொண்டு வரச் சொல்லி
கொக்கை அழைக்கிறாள் தாய்.
*
Baby milk
To come up with
Mother calls for coca.

*

ஸ்ரீவிநாயகர் பாடல்.- பாரதியார்.



எனக்கு வேண்டும் வரங்களை
     இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்திற் சலன மில்லாமல்,
     மதியில் இருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுன
     நிலைவந் திடநீ செயல் வேண்டும்.
கனக்கும் செல்வம், நூறு வயது:
     இவையும் தரநீ கடவாயே.

***

நல்வாழ்த்துக்கள்.


ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி  மற்றும் ஆசிரியர் தினம் 

நல்வாழ்த்துக்கள்.

Saturday 3 September 2016

செய்திகள் என்ன சொல்லுது?



1.
ஐயப்பன் பிரம்மச்சாரிதான் ஆனால் பெண்களை வெறுப்பவர் அல்ல.
கேரள மூத்த தலைவர் பேச்சு.
      பெண்களை வெறுக்காதவர் ஐயப்பன் என்கிறதாலேயே தான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய அனுமதி கேட்கிறாங்க. அனுமதி கொடுங்களேன். அதை ஏன் மறுக்கிறீங்க.
2.
ரிசர்வ் வங்கி சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
வங்கி ஆளுநர். ரகுராம் ராஜன்.
       சரிதான். அரசியல்வாதிகளின் ஆதிக்கமும செல்வாக்கும் மதிக்கப்படாது என்பதாலே தானே அவங்க தலையீடு உள்ளது.
3.
விஜய் மல்லையாவின் ரூ.பாய்.6,630 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்
அமலாக்கத் துறை நடவடிக்கை.
        சரியா காயை நகர்த்தி மல்லையாவை மல்லாத்திட்டாங்கப்பா.
தகவல் தொகுப்பு ; ந.க.துறைவன்.

*

Thursday 1 September 2016


செய்திகள் என்ன சொல்லுது?



1.
அமைச்சர்களின் சமோசா செலவு ரூபாய். 9 கோடி! உத்தரப்பிரதேச பேரவையில் தகவல்.
உத்தரப் பிரதேச அமைச்சர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் தங்களைச் சந்திக்க வருபவர்களுக்கு சமோசா, தேனீர், குலோப்ஜாமூன் உள்ளிட்டவை வாங்கிக் கொடுத்தற்காக மட்டும் சுமார் ரூ. 9 கோடி செலவிட்டுள்ளனர்.
       நம்ம வீட்லே ரெண்டு பையன்களுக்கு பத்து ரூபாய்க்கு நாலு சமோசா வாங்கிக் கொடுக்கவே முடியலே.  அரசு செலவிலே இத்தனைக் கோடி தின்கிறதுக்கு செலவு செஞ்சிருக்காங்கப்பா. வாழ்க இந்திய பொருளாதாரம். வாழ்க இந்தியா.
2.
தெலுங்கானாவில் ரூ.500/- - க்கு ஒரு நாள் சிறைவாசம்.

தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் உள்ள ஒரு முன்னாள் சிறைச்சாலை, சுற்றுலா பயணிகளுக்கு சிறைவாசம் என்றால் எப்படி இருக்கும் என்ற அனுபவத்தைத் தர காத்திருக்கிறது. ரூ.500/- செலுத்தினால், ஒரு நாள் முழுவதும் தங்கி சிறைவாசத்தை அனுபவிக்கலாம்.
        இந்தியாவிலேயே முதன்முதலில் பொது மக்களுக்காக சிறை வாசம் அனுபவத்தை உணர்த்த  இப்புதிய திட்டத்தை கொண்டு வந்து அறிமுகப்படுத்தியுள்ளது தெலுங்கானா அரசு.   
3.
சிங்கூர் டாடா நிறுவன நில ஒப்பந்தம் ரத்து. விவசாயிகளிடம் திருப்பித் தர உச்ச நீதிமன்றம் உத்தரவு.
கையகப்படுத்தியுள்ள நிலத்தை விவசாயிகளிடம் 12 வாரங்களுக்குள் திருப்பித் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
       ஏழை விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.
தகவல் தொகுப்பு ; ந.க.துறைவன்.

*