Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Tuesday 31 December 2013

natpu



CôK¡
ÜPºè ï†H¡ï†¹
ܵ° º¬ø«ò
Ü¡ð£è Þ¼‚°‹

CôK¡
Üøºè ï†H¡
ܵ° º¬ø«ò
ܼªõ¼Šð£è Þ¼‚°ñ


âŠð® ð†ì
Þ¼‚è «õ‡´‹
Ièˆ ¶œOòñ£Œ
õœÀõ¡ ªê£¡ù£¡,

"Üè ºè ï†ð¶
".

       

Sunday 29 December 2013

நீல வானம்



செடிகளைச்  சிற்பங்களாக்கி 
பூங்காவை  அழகு  படுத்தினான் 
புல்  செதுக்கும்  மனிதன். 

தெளிந்த  நீல  வானம் 
தாலாட்டும்  அலைகள் 
கடல்  நீருக்குள்  நிலா. 

உடனே  யாரும்  எழுதுவதில்லை 
இட்டுக்  கட்டிப்  பாடுவார்கள் 
ஒப்பாரிப்  பாட்டு, 

எவ்வளவு  தான்  தாங்கும் 
அலைகளின்  மோதல்  அடி 
கரையில்  நிற்கும்  பாறைகள். 

பாதுகாப்பா  யிருக்கிறது 
காக்கைக்  கூட்டில் 
குயில்  முட்டை, 

தேவாரம்



கிராமத்துச்  சிறுவர்கள் 
உற் சாகமாய்  விளையாடுகிறார்கள் 
பூவரசம்  காய்  பம்பரம்

அபசகுனமாய்  நினைத்தனர் 
சுபநிகழ்வின்  போது 
அணைந்தது  குத்து  விளக்கு, 

மரணமடைந்தவர்  அருகில்  
ஓதுவார்  பாடினார் 
மனம்  உருகத்  தேவாரம், 

களவாடிப்  போகிறார்கள் 
மணல்  கொள்ளையர்கள் 
அழகழகான  கூழாங்கற்கள், 

குழந்தைகளைச்  சுமக்கிறது 
விலங்கு  பொம்மைகள் 
பெரிய  குடை  ராட்டினம்,

நினைவாய்  வைத்திருக்கிறார்கள் 
ரகசியமா  இன்னும் 
கல்யாணப்  பரிசுப்  பொருள், 

தேனீர்

தேனீர் 


ரொம்பவும்  பிடித்தது 
சுவையானமலாய்
போடடத்  தேனீர், 

ஆழ்துளைக்  கிணறுகள்  தோண்ட
நகர்ப்  புறங்களில்  திணறுகிறார்கள் 
நீர்மடடம்  பார்க்கும்  நிபுணர்கள், 

உலகைக்  காக்கும்  அம்மன் 
கண்ணெதிரே  களவு  போகிறது 
சீல்  வைத்த  உண்டியல் 

ரிசர்வேசன்  செய்து  காத்திருக்கிறார்கள் 
இன்னொருவர்  படித்து  முடிக்கும்  வரை 
நூலகத்தில்  வாசகர்கள் 

அகதியாய்  அலைந்தான்  அரிச்சந்திரன் 
அந்நிய  தேசத்தில்  கிடைத்தது 
வெடடியான்  வேலை, 

Monday 23 December 2013

சிட்டுக் குருவிகள்

 
 

 

வெளியில்  
விளையாடிக்  கொண்டிருந்த 
சின்னக்  குழந்தைகளின் 
கவனத்தைத் 
திசைத்  திருப்பியது 
வாசல்  «கே†டின்  மீது 
வந்தமர்ந்தச் 
சு†டுக்  குருவிகள், 

அவைகளை 
வேடிக்கைப்  பார்க்கும் 
சாருஹாசினி  சாருஹாசா 
சிரித்துச்  சிரித்து 
மகிழ்கிறார்கள 
துளசி  செடியின்  மீது 
அமர்ந்து  இலைகளைக் 
கொத்தும் 
கண்ணாடிச்  
சன்னலின்  மேலமர்ந்து 
தன்  உருவத்தைப்  பார்த்து 
அலகால்  கொத்திக்  கொத்தி 
வேகமாய்   
தரையில்  சிந்தியிருக்கும் 
தானியங்களைத்  தேடிக் 
கொத்தியுண்டு  திடீரென 
மேலே  பறக்கும் 
வீ†டுச்  சுவற்றின் 
ஓதுக்குப்  புறமான 
மறைவான  முலையில் 
கூடு  க†டிட  
மெல்லிய  நார்களைச் 
சேகரித்து  வைத்துள்ளன, 
அங்கும்  இங்குமாய் 
பிடித்தமான  இடங்களில் 
உ†கார்ந்தும்  பறந்தும் 
திரிகின்ற 
சி†டுக்  குருவிகளின் 
சுதந்திரங்  கூட 
வாய்க்கவில்லை 
எனக்கு  இன்னும்... 


கண்ணாடி

 

குழந்தையின்  கன்னத்தில்  
முத்தமிட  முயன்ற  போது 
தடையாய்  மூக்குக்  கண்ணாடி, 

கொஞ்சம்  வித்தியாசமாய் 
சேகரித்துள்ளான் 
சின  மொழிகள், 

சிறுகதையின்  தலைப்பு 
படித்து  அதிர்ந்தேன் 
"ஒரு  சுமாரான  கணவன்". 

ரூபாய் நோட்டுப்  போன்று 
சிரிப்பிலும்  உண்டு 
கள்ளச்  சிரிப்பு, 

அம்மை  நோயா? 
சுவர்கள்  ரணமாய்
பாழடைந்த  வீடு, 





Sunday 22 December 2013

இரகசியம்


புதுக்  கவிதைகள்

இரகசியததிலும்
 இ ரகசியமானது  எது?
இரகசியத்தை
இரகசியமாய்  வைத்திருப்பதின்
இரகசிய  மென்ன?
அந்த  இரகசியத்தை
அறிந்தவர்  எவரோ?
பூவின்  இரகசியம்  தெரியு  மென்று
பறந்து  பறந்து  எல்லோரிடமும்
சொல்லி  இரகசியத்தை
உடைத்துப்  போட்டது  வண்டு,

தரையெங்கும்
சில்லறைகள்  சிந்தியிருக்கும்
சிவந்தப்  பூக்கள்  உதிர்ந்திருக்கும்
உறவுகள்  பின்  தொடரும்
பிணத்தைச்  சுமந்துப்  பயணிக்கும்
பூந்தேர்
எத்தனை  அழகானக்   காட்சி

Saturday 21 December 2013

சுகந்த மணம்




கிராமத்திற்குள்  நுழையுமுன்னே 
காற்றில்  மிதந்து  வந்தது
வெல்லம்  காய்ச்சும்  மணம், 

கிராமங்களில்  மறைந்து  போனது 
கருவிகள்  செய்யும்  கொல்லர்  
உலைகளங்கள், 

வயலில்  அத்துமீறி  மேய்கிறது 
விரடடப்  பயந்தார்கள் 
அரசின்  இலவச  ஆடுகள், 

குணசீலம்  போய்  வந்தும் 
குணமாகவில்லை 
மன  நோய், 


தினம்  டாஸ்மா  கடையில்  
போய்சேர்கிறது 
சம்பாதித்தப்   பணம், 

தாயில்லாத  நேரம் 
பால்குடி  நினைவில் 
விரல்  சூப்புகிறது  குழந்தை, 

லிங்கம

                         

அருபமாய் 
சொருப  தரிசனம்  
கருவறையில்  லிங்கம், 

பார்க்க  வெ†கமா? 
ஆடைப்  போர்த்து  விடுங்கள் 
கல்தூணில்  நிர்வாணச்  சிலை, 

அர்த்த  சாஸ்திரம்  படித்தவர் 
மனமெல்லாம்  ஆக்கிரமித்துள்ளது 
காம  சூத்திரம், 

விழுந்தது  மழைத்  துளி 
மூடிக்கொண்டது  இதழ் 
முத்துச்  சிப்பி, 

சொல்லிக்  கொடுத்ததைக்  குழந்தை 
அர்த்தம்  தெரியாமல்  சொல்கிறது 
பப்பி  சேம்   பப்பி  சேம், 

Friday 20 December 2013

பிரச்னைகள்

1. 
எந்தப்  பிரச்னையானாலும் 
†டாசாய் 
வெடித்துச்  சிதறும் 
கோபமாய்  பேச்சில் 
எந்தத்  தடையுமின்றி 
உதிர்வது 
பண்பான  இனிய 
சொற்கள்  அல்ல 
ஆபாசமான 
வன்சுடு  சொற்கள், 

தலை  எழுத்தையே 
மாற்றி  விடது 
உயிலில் 
அவன்  போட 
ஓரே  யொரு 
கையெழுத்து, 

Thursday 19 December 2013

பாலியல் குற்றம்



பாலியல்  குற்றம்
பாலியல்  குற்றம்
இரத்த  நாளம்  தூண்டிடும்
இன்ப  வேடகைக்  குற்றம்,

பார்வையிலே  சுடடு  விடும்
பருவ  வயதுக்  குற்றம்  மனப்
பக்குவ  மில்லாதவரின்  இரு
பால்  உணர்வுக்  குற்றம்,

உடலைத்  தேடி  அலைந்திடும்
நாய்கள்  புணர்ச்சிக்  குற்றம்
விரைக்கும்  ஆண்மை  வெறியில்
திரைமறைவில்  நடக்கும்  குற்றம்

துடி  துடிக்கப்  புணர்ந்திடும்
துஷ்ட  விலங்கின்  குற்றம்
மலரைக்  கசக்கி  முகர்ந்திடும்
மன  நோயாளியின்  குற்றம்,

எத்தனைத்  தண்டணை  அளித்தாலும்
எத்தர்கள்  மீறி  செய்யும்  குற்றம்
பெண்களைப்  பாதுகாப்பதற்கு   அரசு
என்ன  சடடம்  இயற்றும்?

உடல்




மரணத்தின்  விளிம்பில்  நின்று  மன்றாடினார்  அப்பா
எதையோ  சொல்ல  வந்தார்,  சொல்ல  இயலவில்லை
சைகைக்  கா†டினார்,  யாருக்கும்  புரியவில்லை,
"போங்க,போய்ப்  பாருங்க"  என்றார்  ஓரு  பெரியவர்,
அருகிலிருந்தப்  பாலை  எடுத்து  ஊற்றினார்கள்
பெண்கள்,  துளசி  நீரை  எடுத்து  ஊற்றினார்கள்
உடன்  பிறந்த  சகோதரர்கள்,  காசை  நீரில்
போ†டுக்  கலக்கி  ஊற்றினான்  மைத்துனன்,
நிலத்து  மண்  நீரில்  கரைத்துக்  கொஞ்சம்
ஊற்றினான்  மகன்,  கோயிலிருந்து  வாங்கி
வந்த  விபூதியை  நெற்றியில்  வைத்து  வணங்கினாள்
மணைவி,  எல்லாம்  செய்தும்  பிரியவில்லை  உயிர்,
ஊசலா†டம்,  போரா†டம்  அவரின்  மனக்  குறை
எதுவென்று  எவருக்கும்  தெரியாது,  அவர்
கண்  திறந்துப்  பார்க்கவில்லை,  ஓரு  சொல்லும்
பேசவில்லை,  கொஞ்ச  நேரத்தில்  உயிர்  அடங்கிப்
போனது,

ஆன்மா  வெளியேறியது
மரணித்தது  உடல்,  என்றும்
மரணப்பதில்லைக்  கடல்.


குண இயல்பு



1.
தருமனுக்கு  எல்லாமே
நல்லெனத்  தெரியுமாம்
துரியோதனனுக்கு  எல்லாமே
கெ†டதெனத்  தெரியுமாம்
ஓவ்வொருவருக்கும்
ஓரு  குணம்  உண்டு
இதில்
உன்
குணம்  எது?

2,

துரியோதனன்
துச்சோதனன்
இப்  பெயர்களை
எந்தப்  பெற்றோரும்
தன்  குழந்தைகளுக்குச்
சூ†ட  விரும்புவதில்லை
ஏனெனில்
இப்பெயர்கள்
இஷ்†ப்  பெயர்கள்  அல்ல
துஷ்டப்  பெயர்கள்,





Wednesday 18 December 2013

மஞ்சள் சேலை



யார்  பரிமாறியது 
தாமரை Þ லையில் 
தண்ணீர்த்  துளிகள்,
பாதுகாப்பில்லை 
செடிகளுக்குப்  பயம் 
வெ†டுக்  கிளிகளின்  வருகை, 

மறைந்துப்  போனத்  தொழில் 
மீண்டும்  உயிர்ப்  பெறுமா? 
பொம்மலா†டக்  கலை, 

காலையில்  முன்னால்  போகும் 
மாலையில்  பின்னால்  வரும் 
நடக்கும்  போது  நிழல், 

அமைதி  பெறுகிறது  ஆறு 
நீருக்குள்  மௌனமாய் 
தியானத்தில்  கூழாங்கற்கள், 

பொ†டு  வைத்துப்  பூ  வைத்து 
க†டயிருந்தது  வேப்ப  மரத்தில் 
மஞ்சள்  சேலை, 


Tuesday 17 December 2013

மனம் மாற்றம்



பெற்றோர்கள் 
வாழும் காலத்தின் 
பாசமாய்  மதித்து 
வணங்கி 
வழிபடாதவர்கள் 
செத்த  பிறகு 
பூசை  அறையில் 
படம்  வைத்து 
பக்தியோடு 
வழிபடுகிறார்கள் 
எது,  அவர்களின் 
மனதை  மாற்றியது? 
பாசமா  சொத்தா? 

சின்னக் குடை


 


எங்கிருந்தோ  கேடகிறது   இன்னியசை
தெருச்   சண்டையில்   நேர்முரணாய்   கேடகிறது
யாரோ   ஓருத்தியின்   நாகூசும்   வன்ம   வசை.

தெருவில்   போகிறது   கிருத்திகை   காவடிகள்
பக்தர்கள்   பாடிக்   களிக்கிறார்கள்
அண்ணாமலைச்    சிந்துப்   பாவடிகள்.

பார்வைக்   குறைவென்றுப்   போடடார்   லென்ஸ்
பாதையில்   நடந்த   விபத்தின்   போது
விரைந்து   வந்தது   108      ஆம்புலென்ஸ்.

மழை   வருவதற்கு   ஏதேனுமுண்டோ?   தடை
தீடீரென   வந்து   விடடால்   நனையாமல்
காப்பதற்கு   தேவையொரு   சின்னக்   குடை.

நம்பிக்கையே   வாழ்வின்   ஆதாரம்
முயற்சியில்லாதவர்களின்   கடும்
அவநம்பிக்கையே   பெரும்   சேதாரம்.















அளரிப் பூக்கள்



கண்  நோயால்  சிவன் 
கண் தானம்  அளித்தது  யார்? 
வேடன்  கண்ணப்பன். 

கோரிக்கைகள்  வைத்து 
நிசிகேதன்  உண்ணாத  விரதம் 
திணறினான்  எமன். 

பூனைகள்  அப்பத்திற்குப்  போ†டி 
க†டப்  பஞ்சாயத்து  செய்தது 
வஞ்சகப்  பூனைகள். 

தாகம்  தணிக்கக்  கொடுத்தார்கள் 
கறிவேப்பிலை  இஞ்சி  மணக்கும் 
வெண்ணெய்  நீக்கிய   மோர். 

கெ†ட  வார்த்தைகளைக்  கே†டு 
மு†டிக்  கொண்டு  வந்தது 
அடக்க  முடியாத  சிரிப்பு.  

Monday 16 December 2013

குப்பைத் தொட்டி



வட்ட  வடிவத்  தொட்டி 
வயிறு  பெருத்தத்  தொட்டி 
தெருவோரம்   மூலையிலே 
குடியிருககும்  தொட்டி 

குரங்கு  போல  பூங்காவில் 
குந்திருககும்  தொட்டி 
குப்பைக  கூளம்  ஏற்றிடும் 
தொப்பை  வயிறு  தொட்டி 

கழுதை  பூனைப்  படுத்துறங்க 
இடங்  கொடுககும்  தொட்டி 
கோழி  நாயின்  கடும்பசிககு 
உணவளிககும் தொட்டி

துப்புறவு  நண்பர்களுககு 
தோள்  கொடுககும்  தொட்டி 
தொற்று  நோய்கள்  பரவாமல் 
தொண்டு  செய்யும்  தொட்டி!! 

இன்பம்,...இன்பம்

.

பூவுக்கு  மலர்கள்  இன்பம்
மலர்ந்த  பின்  மனமே  இன்பம்
காய்க்கு  கனிதல்  இன்பம்
கனிந்த  பின்  சுவையே  இன்பம்,

மழைக்குப்  பொழிதல்  இன்பம்
நீருக்குப்  பாய்தல்  இன்பம்
அருவிக்கு  விழுதல்  இன்பம்
அணைக்கு விழுதல்  இன்பம்,

தென்னைக்கு  குலையே இன்பம்
வாழைக்குக்  கன்றே  இன்பம்
பயிருக்கு  நடனம்  இன்பம்
புடலைக்கு  தொங்கல்  இன்பம்,

தாமரைக்குத்  தண்ணீர்  இன்பம்
புல்லிற்குப்  பனிமகுடம்  இன்பம்
பனைக்குத்  தனிமை  இன்பம்
தொ†ட்டாற்  சிணுங்கிக்கி  சுருங்குதல்  இன்பம்,

இயற்கைப்  படைப்புகள்  அனைத்தும்
எத்தனைக்  கோடி  இன்பம்  இன்பம்
இத்தரணியில்  அற்புதமாய்  மனிதர்
வியந்துப்  பார்க்கவே  இன்பம்   இன்பம்,

Sunday 15 December 2013

மழைத் துளிகள்



மனிதன்  தான்  எழுதுகிறhன் 
சுயமாய்  பூக்கள் 
எழுதுவதில்லை  வரலாறு, 

அலசி  அலசித்  தேடுகிறான் 
சாக்கடையில்  மண் 
கிடைக்குமா?  பொன்  துகள்கள், 

கழுத்தில்  அணிந்திருந்தான் 
போ†டியில்  வென்றதல்ல 
புலிப்  பதக்கம், 

ராணுவ  வீரனாய்  நிற்கிறது 
ந†டு  வைத்த  முருங்கைக்  கிளை 
உச்சியில்  சாணித்  தொப்பி, 

சங்கீதம்  இசைத்தன 
அடுக்கி  ய  பானைகள்  மீது 
மழைத்  துளிகள்,  

நான்


1, 
அவளுள்  நான் 
என்னுள்  அவள் 
ஐக்கியமாகி 
சுதந்திரமாய் 
வாழ்கிறோமெனினும் 
தினந்தினம் 
எங்களிருவரையும் 
இருளில் 
அடிமைப்  படுத்தி 
வெல்கிறது   காமம், 
2, 
என்னுள்  நீ  பூரணமாய் 
நிரம்பி  விடு 
மௌனத்தை  வழங்கி  விடு 
உன்னுள் 
கரைகிறேன்  மறைகிறேன் 
சூ†சுமமாய், 
சூன்யத்தோடு  சூன்யமாய் 
உன் 
இருப்பில் 
நான், 
3, 

மழையில்  நனைந்துக்  குளித்து 
மன  அழுக்குகள்  நீக்கி 
எத்தனை  உற்சாகமாய் 
பூத்திருக்கிறது  அந்தப்  பூக்கள் 
உலகத  துயரமெல்லாம்  மறந்தும, 

பரிதாப உணர்வு

பரிதாப  உணர்வு

காலையில்  ரெண்டு  இ†லி
அல்லது
கோதுமைக்  கஞ்சி
மதியம்  கொஞ்சம்  சாதம்
இரவு  வற†டிச்  சப்பாத்தி
உப்பு  சேர்ப்பதேயில்லை
சர்க்கரை  என்றும்  எதிரி
வெண்ணெய்  எடுத்தப்   பால்
எண்ணெய்  இல்லாத   பொறியல்
கொழுப்பு  நீக்கிய  இறைச்சி
காரமில்லாதச்  சாம்பார்
மிதமான  காரம்  மோரும்
தயிரும்  தாராளம்
நொறக்குத்தீனி
நெருங்குவதில்லை
இது  தானய்யா
நோய்  கொண்ட
நோயாளியின்
அன்றாட  உணவு
அவர்களைப்  பார்க்கும்
தருணமெல்லாம்
எல்லோருக்கும்  தோன்றுகிறது
மனதில்
பரிதாப  உணர்வு.







சாந்தம்

சாந்தம் 


இரண்டு  பக்கமும்  இடிவாங்கும்  மத்தளம் 
சிதிலமடைந்துக்  கா†சியளிக்கிறது 
செஞ்சிக்  கோ†டைக்  கொத்தளம். 

ஊருக்கு  அவரோ  பெருந்தனம் 
பணியாளர்  செய்தத்  தவறு  கண்டு 
வார்த்தைகளில்  கா†டினார்  கடுஞ்சினம். 

அவருக்கு  இல்லை  குடும்பச்  சந்தானம் 
இறைவனைப்  பிரார்த்தனைச்  செய்து 
நூறு  பேருக்குப்  போ†டார்  அன்னதானம். 

பூங்காவில்  விளையாடுகிறது  குரங்கு 
வேடிக்கைப்  பார்க்கும்  சிறுவர்களின் 
உடம்பெல்லாம்  ரணமாகச்  சொரி  சிரங்கு. 

குழந்தைக்கு  நோயோ  வயிற்று  மாந்தம் 
நா†டு  மருந்தால்  குணமாகியப்  பின்னர் 
குடும்பத்தில்  நிலவியது  சாந்தம். 

கார்த்திகைப் பூக்கள்

கார்த்திகைப்   பூக்கள் 

கம்பளம்  விரித்து  வரவேற்பு  
மரத்தின்  கீழ்  உதிந்த 
பவழமல்லிப்  பூக்கள், 

கோடை  ஆரம்பம் 
ஊருக்குத்  திரும்பின 
வெளி  நாட்டுப்  பறவைகள், 

பிறந்தன  வளர்ந்தன  வாழ்ந்தன 
இறந்தன  பிறந்தன  மீண்டும் 
உடலில்  உயிர்  செல்கள், 

காற்று  இசைத்தது 
குயில்  பாடியது 
நடனமாடின  பூக்கள், 

எப்பொழுதும்  விழித்திருக்கிறது  
ஓதுங்குபவர்க்கு  நிழல்  தருகிறது 
தூங்குமூஞ்சி  மரங்கள், 


Thursday 28 November 2013

ந.க.துறைவன் ஹைக்கூ

பிரபஞ்ச இருப்பின்
இரகசிய உயிர்ப்பு
குழந்தைப் பிறப்பு

தாயின் கனவு
சுமப்பதில் சுகம்
அழகான குழந்தை

சிரிப்பு, அழுகை
சைகைகள்
குழந்தையின் மொழி

எறும்பு கடித்ததோ?
தூக்கம் கலைந்து
அமர்க்களம் செய்யும் குழந்தை

மீசையைத் தடவி
மகிழ்ந்து சிரிக்கிறது

தூக்கிக் கொஞ்சிய குழந்தை

Monday 14 October 2013

இயற்கையின் நியதி



தாமரை, ரோஜா,
மல்லி, முல்லையென
எத்தனையோ வகைப்
பூக்கள்
கடவுளுக்குப் படைக்கின்றனர்
அந்தப் பூக்களுக்குத் தான்
யாருக்குப் படைக்கிறோம்
என்பது தெரியுமா?
அதற்குத் தெரிந்ததெல்லாம்
மலர்தல், உதிர்தல் என்ற
இயற்கையின்
நியதி மட்டுமே…!

Sunday 6 October 2013

உடலின் பேரின்பம்

பெண்ணைத் தேடு
காதலி
காதலை உணர்
அனுபவி.
காதல் உன்னதம்
உடலின் பேரின்பம்
வென்றவர்க்குத்
தென்றல் காற்று
தோற்றவர்க்கோ

கடும்புயல்! !

அலைகளில் அலைகழிந்து...

அஸ்தியை
கடல் நீரில் உள்
அமுக்கியதும்
மேலெழுந்து
மிதந்து மிதந்து
முன்னும் பின்னும்
அலைகளில்
அலைகழிந்து
மெல்ல மெல்ல
கரையத் தொடங்கியது
அந்த
அஸ்தியின் வாசம்
பிடிக்காமலோ
என்னவோ
விலகி விலகி
ஓடின மீன்கள்!

---

கிராமங்களில்
அவ்வளவு
கண்டிப்புடன்
கடைபிடிக்கிறார்கள்
காலம் காலமாய்
மாலை நேரம்
விளக்கு வைச்சதும்
கைமாத்தாய்
எவருக்கும் எவரும்
கொடுப்பதில்லை
சமையல் உப்பு.

கவிதா மண்டலம்-இதழ்

சனவரி 2013.

அத்துமீறும் வன்முறைகள்

ஊரெங்கும்
வெடிகுண்டு,
கலவரம், மரணம்.
பயந்து ஒதுங்கும்
மக்கள் நெரிசல்,
அத்துமீறும்
வன்முறைகள்,
அமைதியாய்
அச்சமின்றி
வேடிக்கை பார்க்கும்
உயர்கோபுரத்திலிருந்து
வெண்புறாக்கள்.

அருவி இதழ்

அக்-டிசம்2011

Monday 9 September 2013

காரசாரம்

ரசிகர்கள் காத்திருந்தார்கள் வெகுநேரம்
துவங்கிய அன்றைய தலைப்பிலான
பட்டிமன்ற விவாதமோ காரசாரம்.

பேச்சு என்பதொரு பரிமாற்றம்
என்ன பேசுகிறார்கள் என்று புரியாமல்
அவனுக்கோ ஏற்பட்டது தடுமாற்றம்.

பெண்ணின் உடல் அழகு நளினம்
பார்த்தவர்களைக் கவர்ந்தது
லாவகமாய் ஆடிய குச்சுபுடி நடனம்.

நண்பர்களுக்கு எல்லாமும் சம்மதம்
திருமணத்திற்குப் போவதற்காகப்
பயணத்தால் ஏற்பட்டது சற்று தாமதம்.

இளைஞர்களுக்கு புதிய வழிகாட்டு
உதவி என்று கேட்பவர்க்கு
உற்சாகமாய் நேசக்கரம் நீட்டு

உப்பு கரித்தது உதடு

இனிக்குமென நினைத்து
முத்தமிட்டான்
உப்பு கரித்தது உதடு.

பலரும் பாராட்டினார்கள்
பாட்டியின்
நாட்டு(கை) வைத்தியம்.

எழுபது வயது முதியவர்
நகைச்சுவை எழுதி அனுப்பினார்
பரிசாக் கிடைத்தது “டீ” சர்ட்.

ஒலி எழுப்பிப் பார்த்தார் ஓட்டுநர்
அசைந்து நகரவில்லை
பாதையின் குறுக்கே எருமை.

காலையில் மார்க்கெட் போகிறது
காரில் சொகுசாய்
வளர்ப்பு நாய்க் குட்டி.

ஜல்லிக்கட்டுப் போட்டியில்
தங்கப் பதக்கம் வென்றவன்
குடும்பவாழ்க்கையில் தோல்வி.

காற்றில் மிதந்து வந்தது
மூக்கைப் பொத்தினார்கள்
தோல் கழிவுநீர் நாற்றம்.

அபாரமான பயிற்சி
குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறது
மோப்ப நாய்கள்.

“தண்ணி வண்டி” என
குழந்தைகள் கேலி செய்தனர்
போதையில் போகும் குடிகாரன்

தங்கம் விலை தெரியுமா?
தங்கத் தேரில்
பவனிவரும் சாமிக்கு.

குடிநீர் தொட்டியில் விழுந்து
தற்கொலை செய்துகொண்டது
குதித்து விளையாடிய அணில்.

மனிதர்களால் இயலவில்லை
கள்ள நோட்டைக்
கண்டுபிடிக்கிறது கருவி.

உண்ணாமுலை

கனிந்திருக்கிறது
முலை
முனையில்
கருந்திராட்சை.

சின்ன முலை
பெரிய முலை
சரிந்த முலை
சாய்ந்த முலை
நிமிர்ந்த முலை
அம்சமாய்
பால் சுரக்காத
நாயுடுஹால் முலை.

யோனிகள் பற்றி
முலைகள் பற்றி
முனைப்புடன்
கவிதை முழங்கிய
கவிஞர்கள் எல்லாம்
இப்பொழுது
முழங்குவதை நிறுத்தி
முடங்கிப்போய்விட்டார்கள்
அவர்களிடம்
வற்றிவிட்டது பால்
மறந்து விட்டது குழந்தை.

மூலஸ்தானத்தில்
சிலையாய் நின்று
பக்தர்களுக்கு
அருள் பாலிக்கிறாள்
திருவண்ணாமலையில்
அண்ணாமலையின்
அருகில்
அம்மை
உண்ணாமுலை

பார்வை

பாதையில்
நடந்துக் கொண்டிருந்தவன்
திரும்பித்திரும்பிப் பார்த்தான்
எதற்காகத் திரும்பிப்
பார்க்கிறான் என்று
புரியவில்லை
பிறகுதான் தெரிந்தது
பின்னால் யாரோ
அழகானப் பெண் வருவது
அவன் பார்வை
மீண்டும் பின்னால்
முன்னால் இல்லை
வேகமாய் எதிரில் வந்த
மோட்டார் பைக்காரன்
“முன்னால பார்த்துப்போடா
முண்டம்
வீட்டுலே சொல்லிட்டு
வந்துட்டியா?” என்று
கத்தினான்
அப்பத்தான்
சுய நினைவுக்கு வந்தான்
வெட்கத்துடன்
வியர்த்துக்கொட்டியது
அவன் முகம்.

மயிலிறகு விசிறி

இயற்கையின் அற்புதம்
விலங்குகள் உணர்ந்துள்ளன
அருவிச் சாரலின் குளுமை.

மழைக்கு ரொம்ப பிடிக்குமாம்
குன்னக்குடியின்
அமிர்தவர்ஷிணி ராகம்

சுவாமிக்கு களைப்பு
வியர்க்கிற தென்று
வீசுகின்றனர் சாமரம்

தேர்ந்த கற்களையே
கனவு காண்கிறது
சிற்பியின் மனம்

எப்பொழுது பார்க்க வாய்க்குமோ
ஸ்ரீவில்லிப் புத்தூர்
அணில் சரணாலயம்

அந்த ஓவியம் பார்க்க பார்க்க
எத்தனை அர்த்தம் வெளிப்படுத்துகிறது?
ஓவியர் பாஸ்கரனின் பூனை.

புயல் வருகிறதே யென்று
துக்கப்படுவதில்லை
தும்பைப் பூக்கள்

படித்துக்கொண்டிருந்தேன்
புத்தகத்தின் மீது விழுந்தது
மனைவி முகத்தின் நிழல்

முதலைகள் எதுவுமில்லை
பாதுகாப்பான கோட்டை
அகழியில் படகு சவாரி

விளையாட்டுப் பொருளாய்
குழந்தையின் கையில்
மயிலிறகு விசிறி

வயல்வெளிகளில்
எங்கும் கிணறுகள் இல்லை
நீச்சல் பழக

மனஸ்தாபம்

முரண்பாடுகளால்
மனதிற்குள் மௌனமாக
முளைத்து வளர்கிறது
மனஸ்தாபம்
பணம் கொடுக்கல்வாங்கல்
பரிமாற்றத்தாலோ!
பூடகமாய்ப்
பேச்சில் தெறிக்கும்
உஷ்ணத்தினாலோ
அணுகுமுறையில் வெளிப்படும்
வித்தியாசத்தினாலோ
அவரவர்களுக்குள்
மனஸ்தாபம் உண்டாகி
மனம் முறிந்து
வளர்கிறது பகைமை.
மனஸ்தாபம்
கொண்டவர்களைப்பார்த்து
மற்றவர்கள் புன்சிரிப்புடன்
இன்னொருவருடன்
பகிர்ந்துகொள்வார்கள்
ரகசியமாய்.
மனஸ்தாபம்
மண்புற்றாய் வளர்வதால்
மனம் குழம்பித் தடுமாறி
கனல்கிறது நெஞ்சில்
வெறுப்பின் நெருப்பு
மனஸ்தாபம் கொண்டு
விலகியவர்க்குச்
சமாதானமாய்
பலரும் காட்டுவர்

அனுதாபம் பலவிதமாய்.

தம்பி பாலா!


ஈழத்தமிழர்த் தலைவனின்
வேழ முகத்து புதல்வனே
தமிழ் இளஞ்சிங்கமே
தம்பி பாலா!
கற்கும் பள்ளி வயதில் – நீ
குற்றம் ஏதும் செய்திடலையே
அப்பாவிக் குட்டிப் பாலகனே
தம்பி பாலா!
கருணையற்ற கொலை வெறியர்
துப்பாக்கிக் குண்டுக் கிரையாகி
உயிர் துறந்த இளங்கன்றே
தம்பி பாலா!
கண்களிலே கனவுத் தேக்கி-ஈழ
மண்ணை மீட்பதற்காய் என்ன
திட்டங்கள் வைத்திருந்தாய்
தம்பி பாலா!
நேசித்த உலகத் தமிழரெல்லாம்
வசித்த பூமியில் உறங்கும்
உனக்காக அஞ்சலி செய்கிறது
தம்பி பாலா!
கனவுகள் வெல்லும் பாலா
காட்சிகள் மாறும் பாலா-நாளை
மலரும் ஈழ மண்ணில் நீடுழி
வாழ்வாய் தம்பி பாலா!!