Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Sunday 28 July 2013

விளையாட்டு

உலக கிரிக்கெட் விளையாட்டு
உள்நாட்டு கிரிக்கெட் விளையாட்டு
உலகம் பார்த்து ரசிக்கிறது – அதனை
உயர்த்தி பேசி மகிழ்கிறது

வட்ட வடிவ மைதானத்தில் – நீள
மட்டை அடிக்கும் விளையாட்டு
நெட்டையான வீரர்களின் – நெறி
கெட்ட வீச்சு விளையாட்டு

லட்சம் கணக்கில் ரசிகர்களை
கிரங்க வைக்கும் விளையாட்டு
ஓடி ஓடி ரன் குவித்து
கோடிகள் சேர்க்கும் விளையாட்டு

கோப்பை வென்றிடப் போராடும்
கூட்டுத் திறமை விளையாட்டு – மது
கோப்பை விருந்தில் விலைபேசி
நேர்மை விற்கும் விளையாட்டு

களத்தில் எங்கும் பங்கு கொள்ளும்
விளம்பர கம்பனிகளின் விளையாட்டு
கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும்
பொறுப்பான பொது விளையாட்டு

பெரிய புள்ளிகள் போட்டிப் போடும்
கிரிக்கெட் பந்தைய சூதாட்டம்
கோடி கோடி பணம் புரட்டும்
கௌரவமான விளையாட்டு

தடை செய்ய மடியாது என்றும்
உச்ச நீதி மன்ற தீர்ப்பு – பெரும்
ஊழலுக்குப் பச்சைக் கொடியை

உயர்த்திக் காட்டும் உயர் தீர்ப்பு

ந.க.துறைவன் ஹைபுன் – 1

தமிழ் நாட்டின்  பழம் பெரும் கோவில் ஒன்றினுள் நுழைந்தார்கள். அங்குள்ள  கற்றூண்களில், கற்சுவர்களில் இருக்கும் புரிந்தும் புரியாததுமான  பழந்தமிழ்க் கல்வெட்டுகள், தேவநாகரி எழுத்துக்கள், அழகழகான கற்சிற்பங்கள், சிரிக்கும் கோமாளி பொம்மைகள், உக்கிரமான கோர ரூப உருவங்கள், பெரிய பெரிய யாழி, யானைகளின் விரைப்பான தோற்றங்கள், கவர்ச்சியான பெண் தேவதைகளின் அரை  நிர்வாண சிலைகள், கோரை பல் நீண்டு கம்பீரமாக நிற்கும் வாயிற் காவல் தெய்வங்கள் எல்லாம் கண் குளிரப் பார்த்து ரசித்து சிற்பிகளின் கலை நுட்ப அறிவை வியந்த வண்ணம் நடந்தனர்.

மூலவருக்குத் தெரியுமா?
தனக்காக சேர்த்துவைத்திருக்கும்

சொத்தின் மதிப்பு!

வளர்ச்சி

தெருக் கூத்துப் பர்த்து
மெய்சிலிர்த்து
பொழுதுபோக்கி வாழ்ந்தார்
என் தாத்தா

வானொலிப்
பெட்டிவாங்கி
பாட்டுக்கேட்டார்
என் அப்பா

கலர் டி.வி
பெட்டி வாங்கி
படம்பார்க்கிறேன்
நான்

மடிக்கணினி
வாங்கிப்பலதைப்
படிக்கிறான்
என் மகன்

கைபேசி
இன்டெர்நெட்டில்
உலக நடப்பை
அறிகிறான்
என் பேரன்

நாளை...
என்ன கருவி
புதியதாய் இருக்கும் -என்
கொள்ளுபேரன்

கைகளில்...

Saturday 27 July 2013

உயிர்

உயிரிலிருந்து
உயிர்கள் தோன்றி,
உயிரிலேயே
உயிர் வாழ்ந்து,
இறுதியில்
எங்கிருந்து
தோன்றியதோ
அங்கேயே
சென்றடைகிறது
உயிர்.

ந.க.துறைவன் லிமரைக்கூ

இசையில்தான் எத்தனை உணர்வுகள்
ரசனையோடு கேட்டு இன்புற்றான் மெல்ல
நீங்கி விடுகிறது மன தளர்வுகள்

எல்லோர் கையில் இருக்கனும் காசு
மனம் கலகலப்பாக்க வேண்டுமானால்
சிரிக்க சிரிக்க நீ பேசு

ஆனந்த நடனம் ஆடுகிறது வயலில் நாற்று
கட்டிலில் படுத்து ஓய்வெடுக்கிறார் அப்பா
சுகமாய் வீசுகிறது வேப்பங் காற்று

பாஸ்ட் புட் உணவுகள் வயிற்றுக்குத் தீமை
ஆரோக்கியம் பேணிட விரும்புவோர் தவிர்த்தால்
உடலுக்கு என்றென்றும் நன்மை

காதலர்களின் தலை எப்பொழுதும் தாழாது
தர்மபுரி சம்பவங்கள் நாட்டில் தோன்றிடின்

காதல் என்பது உலகில் உயிர் வாழாது

Thursday 25 July 2013

ஆசை

ஆசைகள் 
அழிவதில்லை
நாமே 
அழிகிறோம்

Saturday 20 July 2013

நொடி

வாழ்க்கையின்
விதியை
எப்படி மாற்றி
அமைத்துவிடுகிறது?
இந்த
அற்புதமான
ஒரே
ஒரு நொடி!