Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Friday 29 March 2019

பேச்சு

காதில் விழுகின்ற பேச்சு காற்றோடு போகிறது. ந க துறைவன்.

Wednesday 27 March 2019

பயணம்

வாழ்க்கைக்குள் ஆசை

உயிருக்குள் மரணம்

கடைசியில் பயணம்.

ந க துறைவன்.

Saturday 23 March 2019

அலைதல்

நீர்நிலைத் தேடி அலைதல் நிழல் தேடி தூரப் பறத்தல் எங்கும் வெப்பம் உணர்த்தப் பறவைகள். ந க துறைவன்.

Thursday 21 March 2019

குட்டிக் கதை

ஜோதிடர் ஒரு ஜோதிடர் மேலே உள்ள நட்சத்திரங்களைப் பார்த்தவாறு நடந்து போய்க் கொண்டிருக்கையில் ஒரு கிணத்துக்குள் விழுந்து விட்டார். அருகில் வசித்து வந்த ஒரு ஏழைப் பெண் அவரை எப்படியோ வெளியே வர உதவி செய்தாள். ஜோதிடர் அந்தப் பெண்ணிடம் " நான் யார் என்று உனக்கு தெரியாது, நான் பெரிய ஜோதிடன், அரச ஜோதிடன். என் கட்டணம் அவ்வளவு அதிகமானதால் ராஜாக்கள் மற்றும் பணக்காரர்களுக்கு மட்டுமே கட்டுபடியாகும். ஆனால் நீ என் உயிரைக் காப்பாற்றி இருக்கிறாய். உன் வருங்காலத்தைப் பற்றி உனக்குத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் என்னிடம் வா, உன் கையைப் பார்க்கிறேன், உன் ஜாதகத்தைப் படித்துச் சொல்கிறேன்... எல்லாம் இலவசம், நீ என் உயிரைக் காப்பாற்றியவள்" என்றார். அந்தப் பெண் சிரித்தாள். " நீ ஒரு முட்டாளாக இருக்க வேண்டும்" என்றாள் அவள். " என்னது " என்று அதிர்ச்சியுற்றார் ஜோதிடர். அந்தப் பெண் சொன்னாள். " உனக்கு முன்னால் ஓரடியில் உள்ளதைக்கூட உன்னால் பார்க்க முடியவில்லை. வருங்காலத்தைப் பற்றி உன் கணிப்பை எப்படி நம்பமுடியும்" நீ என்னை ஏமாற்ற முடியாது" என்று பதில் சொன்னாள். ஆதாரம்: ஓஷோவின் ' உன்னால் கடக்க முடியும் ' நூல் பாகம் - 2 - பக்கம் - 184 - 185. தகவல்: ந க துறைவன்.

Wednesday 20 March 2019

அன்பு

Quotesஅன்பு காட்டுபவர்கள் குறைவு

வெறுப்பு விதைப்பவர்கள் அதிகம்

ந க துறைவன்.

Sunday 17 March 2019

நந்தி

நந்தியின் காதில் ரகசியமாய் பிரார்த்தனை சொல்லி முறையிட்டாள் மௌனமாய் கேட்டார் மீண்டும் அடுத்தொருவள்வந்து காதில் முணுமுணுத்தாள் நந்தி சலிக்காமல் கேட்டார் எல்லோரும் தொந்தரவு செய்வதறிந்து கம்பி வேலிப்போட்டு சிறைப்படுத்தி விட்டனர் நந்திதேவனை இப்பொழுது நிம்மதியாய் நந்தி... ந க துறைவன்.

Thursday 14 March 2019

ஓய்வு

ஓய்வு நாளில் ஓய்வறியாதவள் ஓய்வு எடுக்க நினைத்தாள் ஓய்வெடுக்க விடவில்லை ஓய்வு. ந க துறைவன்.

Saturday 9 March 2019

கோடை

கோடை காலம் வருகை ஓராண்டு கூடியது வயது பூத்துக்குலுங்கும் வேப்பம்பூக்கள். ந க துறைவன்.

தவளைகள்

1. மழைத் துளிகள் உடலில் பட்டதும் சிலிர்த்து எழுந்தன நீரின்றி வாடிய தவளைகள். 2. தவளைகள் நீண்ட உரையாடல் மகிழ்ச்சி ஆரவாரம் மழைக் குறித்து விமர்சனம். 3. எத்தனை நாளாச்சு? ஆரோக்கியமாய் குளிச்சி மழைநீரில் மரங்கள். 4. நிலவொளி அற்ற இரவு வெளியெங்கும் மழை இரைச்சல் வாகனங்கள் பாய்ச்சும் ஒளி. 5. மழைக்கு ஒதுங்க இடம் தேடி அலைகின்றன தெரு நாய்கள். ந க துறைவன்.

சுகம்

சுகம் எங்கே இருக்கிறதோ?

அங்கே யாருமில்லை

சும்மாவே தனிமையில்

சுகமாக சுகம் எனக்குள்ளே...

ந க துறைவன்.