Labels

Haiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (20) கலை (1) கவிதை (332) கவிதை. (7) கவிதைகள். (7) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (2) குறுங்கவிதைகள் (12) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (55) ஹைபுன் (48)

Thursday, 28 April 2016

பிறந்த தாள்...!!

இன்று பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்.

கவிதை.
வானுக்கு நிலவு வேண்டும்
வாழ்வுக்குப் புகழ் வேண்டும்
தேனுக்குப் பலாச்சுளை வேண்டும் – என்
செங்கரும்பே நீ எனக்கு வேண்டும்.

மீனுக்கு பொய்கை வேண்டும்
வெற்றிக்கு வீரம் வேண்டும்
கானுக்கு வேங்கைப் புலி வேண்டும் – என்
கண்ணாட்டியே நீ எனக்கு வேண்டும்.

வாளுக்குக் கூர்மை வேண்டும்
வண்டுக்குத் தேன் வேண்டும்
தோளுக்குப் பூமாலை வேண்டும் – அடி
தோகையே நீ எனக்கு வேண்டும்.

நாளுக்குப் புதுமை வேண்டும்
நாட்டுக்கு உரிமை வேண்டும்
கேளுக்கு ஆதரவு வேண்டும் – என்
கிள்ளையே நீ எனக்கு வேண்டும்!.
ஆதாரம் ; பாரதிதாசன் கவிதைகள் தொகுப்பு – பக்கம் – 348.
தகவல் : ந.க.துறைவன்.

*

Wednesday, 27 April 2016

உச்சம்...!! ( கவிதை )


*
வெளிவராத ரகசியம்
வெளியில் வந்து சந்தி சிரித்தது.
*
மாப்பிள்ளையின் மீதே வைத்தாள் கண்
கல்யாணத்திற்கு வந்த மணமாகாதப் பெண்
*
தேடி வந்து சேர்கின்றது
வாக்காளர்களின் கைகளில் பணம்
*
இலவசமாகவே கொடுத்தார்கள்
தேர்தல் அறிக்கை.
*
தங்கம் விலை உச்சம்
வாங்குவோர்க்கு அச்சம்.
*
படிப் படியாகக் குடிப்பழகு
படிப் படியாக மதுவிலக்கு.

*

தவளை...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English;
*
குளத்து நீரில் விளையாட்டு
தாமரை இலையின் கீழ்
கூட்டமாய் தவளைகள்.
*
Water tank in the game
Under the lotus leaf
Frogs mass.
*

Tuesday, 26 April 2016

சிக்னல்...!! ( கவிதை )


*
நீ காட்டிய சிக்னல் பார்த்து விட்டு
எவனோ ஒருத்தன் சிரிக்கிறான்.
அக்கம் பக்கம் பார்த்து சிக்னல் காட்டு.
அப்பொழுது தான்
அடுத்தவனுக்குப் புரியாது.
அதில் எந்த சிக்கலும் இருக்காது?
பாதுகாப்பானதாக இருக்கவேண்டும்
ஆபத்தானதாக இருக்கக் கூடாது
காதல் சிக்னல்!!.

*

Saturday, 23 April 2016

பூவின் பதில்...!! ( கவிதை )


*
ஒன்றுமே செய்ய முடியவில்லை
என்னால் அந்தப் பூவை
கடந்து போனாலும் – அதன்மீது
நடந்துப் போனாலும்
கசக்கிப் போட்டாலும்
நசுக்கிப் போட்டாலும்
பறித்துப் எறிந்தாலும்
முகர்ந்து பார்த்தாலும்
மென்று பார்த்தாலும்
மன்னித்து விடுகிறது அந்தப்பூ
தாயைப் போல
தாய்மையும் பூமையும்
ஒன்றுதான் போலும்
என்னதான செய்யினும்
அதன் ஒரே பதில்
நெஞ்சம் நிறைக்கும் நறுமணம்!
நாகூர் ரூமி – சிற்றகல் –கெவிதைத் தொகுப்பு – பக்கம் – 142
தகவல் : ந.க.துறைவன்.

*

Friday, 22 April 2016

உலகப் புத்தகத் தினம்...!!புத்தகம் நல்ல புத்தகம் – தேடிப்
படிப்போம்  நல்ல புத்தகம்.
எழுத்துக்கள் நிறைந்தப் புத்தகம் – மன
எழுச்சியை ஊட்டிடும் புத்தகம்.

சஞ்சலம் போக்கிடும் புத்தகம்
சத்தியம் உணர்த்திடும் புத்தகம்
மனஇருளைப் போக்கிடும் புத்தகம்
மனஆற்றலை வளர்த்திடும் புத்தகம்.

அறிவை வளர்த்திடும் புத்தகம் – உலக
அறிவியல் கொடுத்திடும் புத்தகம்
நெறியைப் புகட்டிடும் புத்தகம்
மெய்யறிவை விளக்கிடும் புத்தகம்.

தத்துவம் போதிக்கும் புத்தகம்
பித்தம் தெளிய வைத்திடும் புத்தகம்
பெரும் புகழைத் தந்திடும் புத்தகம்
பேராசையை ஒழித்திடும் புத்தகம்
.
செல்வம் அளித்திடும் புத்தகம்
செழிப்பை உண்டாக்கிடும் புத்தகம்
நோய்நொடிப் போக்கிடும் புத்தகம் – உயரிய
நோக்கம் சொல்லிடும் புத்தகம்.

பிரபஞ்ச இருப்பை காட்டிடும் புத்தகம்
பிறப்பின் இரகசியம் காத்திடும் புத்தகம்
இறப்பைத் தவிர்த்திடும் புத்தகம் – என்றும்
இவ்வுலகில் வாழ்ந்திடும் புத்தகம்.
ந.க.துறைவன்.

*

Thursday, 21 April 2016

சித்திரைத் திருவிழா...!!சித்திரையில் கள்ளழகர்
சிரித்து வாரார் மதுரைக்கு
தங்கையின் மணம் பார்த்து
திரும்புகிறார் அழகர்மலை.
வைகையில்  இறங்கும்  காட்சி 
தரிசிக்கும்  மக்களே சாட்சி.

*

Wednesday, 20 April 2016

பௌர்ணமி...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
காலங் கடந்த நிலை
நிகழ்கால நினைவலைகள்
புத்தனின் பௌர்ணமி அழகு.  
*
Level of hindsight
Present Memories
Buddha beauty of the full moon.

*

நினைவு நாள்...!!

இன்று பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்.
கவிதை. குழந்தை.
*
மெல்லென அதிர்ந்த மின்னல், அந்த
செல்வக் குழந்தையின் சிரிப்பு! நல்ல
இன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ
அருஞ்செயல் செய்ததான் அடைய வேண்டுமோ?
குளிர்வா ழைப்பூக் கொப்பூழ் போன்ற
ஒளிஇமை விலக்கி வெளிப்படும் கண்ணால்
முதுவை யத்தின் புதுமை கண்டதோ?
என்னவோ அதனை எவர்தாம் அறிவார்?
தங்க மாதுளைச் செங்கனி பிளந்த
மாணிக்கம் அந்த மழலையின் சிரிப்பு!
வாரீர்! அணைத்து மகிழவேண் டாமோ
பாரீர்! அள்ளிப் பருகமாட் டோமோ?
செம்பவ ழத்துச் சிமிழ்சாய்ந்த அமுதமாய்ச்
சிரித்தது, பிள்ளை சிரிக்கையில்
சிரித்தது வையம்! சிரித்தது வானமே!.
ஆதாரம் ; பாரதிதாசன் கவிதைகள் முழுதொகுப்பு – பக்கம் – 186.
தகவல் ; ந.க.துறை்வன்.

*

Tuesday, 19 April 2016

விழிப்பு... விழித்திருப்பான்
போய் எழுப்பலாமென
நெருங்கித்தொட்டால்
தூங்கிக்கொண்டிருந்தான்
அசந்து
எவ்வளவு நேரமாய்த்
தூங்குகிறான்?
அதிகத் தூக்கம்
உடம்புக்கு ஆகாதே
எழுப்பலாமெனக்
குரல் கொடுத்து
நெருங்கினால்
விழித்திருந்தான்
அவன்.
*


விழிப்பு...!! விழித்திருப்பான்
போய் எழுப்பலாமென
நெருங்கித்தொட்டால்
தூங்கிக்கொண்டிருந்தான்
அசந்து
எவ்வளவு நேரமாய்த்
தூங்குகிறான்?
அதிகத் தூக்கம்
உடம்புக்கு ஆகாதே
எழுப்பலாமெனக்
குரல் கொடுத்து
நெருங்கினால்
விழித்திருந்தான்
அவன்.
*


நிழல்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil /English;
*
நிழலுக்கு ஒதுங்கி நின்றான்
நிழல் கொடுத்தது
மரத்தின் நிழல்.
*
He stood aside for shadow
Shadow gave
The shadow of the tree.

*

Monday, 18 April 2016

கவிதை...!!

கவிதை என்றால் என்ன?
*
புகழ்பெற்ற சீனக் கவிஞராகிய யங் வாங் லீ என்பவரிடம் யாரோ ஒருவர் கீழ்க்கண்டவாறு கேட்டார்.
“ இப்போது கவிதை என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு அந்தக் கவிஞர், “ அது வெறுமனே வார்த்தைகள் சம்பத்தப்பட்ட ஒரு விஷயம் என்று நீங்கள் கூறினால், ஒரு நல்ல கவிஞன் வார்த்தைகளை விட்டெழித்து விடுகிறான் என்று நான் கூறுவேன். கவிதை என்பது வெறுமனே அர்த்தம் சார்ந்த விஷயம் என்று நீங்கள் கூறினால். ஒரு நல்ல கவிஞன் அர்த்தங்களை விட்டொழித்து விட்டவன் என்று நான் கூறுவேன் ஆனால் வார்த்தைகளும் இல்லாமல், அர்த்தமும் இல்லாமல் கவிதை என்பது எங்கு உள்ளது. என்று நீங்கள் கேட்டால், அதற்கு வார்த்கைளை விட்டொழித்து விடுங்கள்.  மேலும் அர்த்தத்தை விட்டொழித்து விடுங்கள்  அப்போது கூட கவிதை இருக்கிறது. உண்மையில் அதன் பிறகு மட்டுமே கவிதை இருக்கிறது என்று நான் கூறுவேன்.  ” என்றார்.
வார்த்தைகள் ஒருபோதும் இல்லாத போது, அர்த்தங்கள் அங்கு ஒரு போதும் இல்லாத போது, அதன்பின்னர் திடீரென ஒரு கவிஞன் வெளிப்படுகிறான். வெடித்து வெளிவருகிறான். கவிதை என்பது உங்களது உயிர் உணர்வின் ஒரு மலர்ச்சியாக உள்ளது. மேலும் மதம் என்பது ஒரு தத்துவத்தை போன்றது என்பதை விடவும் ஒரு கவிதை போன்றதாகவே இருக்கிறது.
ஆதாரம் ;  ஓஷோவின் “ திடீர் இடியோசை ” என்று நூல் – பக்கம் – 18.
தகவல் : ந.க. துறைவன்.
*       

நல்வாழ்த்துக்கள்.

நண்பர்கள் அனைவருக்கும்
பகவான் மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

ந.க.துறைவன்.

4 )பருவமழை ..!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
எங்கும் ஒரே மாதிரியாய்
பொழிவதில்லை
பருவ மழை.
*
The same model everywhere
Showing
Monsoon.

*

Friday, 15 April 2016

தேவி சிரித்தாள்...!! ( கவிதை )


*
விடு
பார்வதி தேவி விடு.
லிங்கத்தை
ஆலிங்கனம் செய்தது போதும்,
சிவன்
மூச்சுத் திணறுகிறானே
உனக்குத் தெரியவில்லையா?
விடு தேவி விட்டு விடு
உன் அரவணைப்பில் மெய்
மறந்து செயலற்றவனாய்…
விடு
பார்வதி தேவி
சிவனை விட்டு விடு.
பார்வதி தேவி
சிவனை விடுத்தாள்
அப்பாடா, என்று பெருச்சு விட்டான்
சிவன்
அசைந்தது அகிலம்
இன்றைய விளைளாட்டு போதுமென்று
தேவி சிரித்தாள் பரமன் சிரித்தான்
தரிசித்தார்கள் பக்தர்கள் பரவசமாய்…!!
*

*

Thursday, 14 April 2016

உங்கள் அதிருஷ்டம் எப்படி?எப்பொழுதேனும் அக்காரியம் கைக்கூடி  வந்துவிடும் என்று நினைப்பது,  சில நேரங்களில் அக்காரியம் கைக்கூடி வருவதற்கு தாமதமாகிறது. ஆனால், அதை மறந்துவிட்டிருக்கும்போது வேறொரு முக்கிய காரியம் சட்டென கைகூடி வந்துவிடுகின்றது. இதையே தான் மக்கள் அதிருஷ்டம் என்றும் துரதிருஷ்டம் என்றும் அழைக்கின்றார்களோ? . உங்களுக்கு இது போன்ற நிகழ்வு வாழ்க்கையில் நடந்தேறியிருக்கிறதா? அப்படியென்றால் நீங்கள்…?

*

Wednesday, 13 April 2016

வாசிப்பு...!! 9 சென்ரியு )

Senryu – Tamil / English.
*
ஆழ்ந்த  புத்தக  வாசிப்பு
வரிகளின்  மீது வசீகரிப்பு
இடையிடையே  புன்சிரிப்பு.
*
Book reading deeper
Seduction on taxes
Interspersed with a smile.
*

துர்முகி - தமிழ்ப்புத்தாண்டு...!!

     
*
இளம் மங்கையாய் வருகின்றாள்
         இளந் தென்றலாய் வருகின்றாள்
உளம் நிறைந்தத் துர்முகி ஆண்டாய்
          புதிதாய் பிறந்து வருகின்றாள்.
மாரி பொழிய வைப்பாளா
         மண்ணைச் செழிக்க வைப்பாளா?
பாரில் எங்கும் உழவுத் தொழிலைப்
         பாங்காய் நடக்க செய்வாளா?
கசந்திடும் நிகழ்வை எங்கும் விலக்கி
         பசிப்பிணித்துயரைத் துடைப்பாளா?
வசந்தம் வீசி வருவாளா
         வாழ்க்கை செழிக்க வைப்பாளா?
சுற்றுச் சூழல் பாதுகாத்து
         சுகங்கள் நல்கிட வருவாளா?
சுற்றம் சூழும் உறவுகள் எல்லாம்
         சுகமாய் வாழ்ந்திட அருள்வாளா?
        
துர்முகி என்றொரு பெண்ணனங்கு
         புதுமைகள் படைக்க வருவாளா?.
துயர்முகம்  என்றும் காட்டாமல்
         இன்முகங் காட்டி வருவாளா?

ஆண்டின் அனைத்து  நாள்களிலும்
         ஆக்கப்பணிகள் செய்து களிப்பாளா?
கண்மணி அழகிய துர்முகி
         கலகங்கள் வென்றிட வருவாளா?.   
அறுபதாண்டுகள் கழித்து வருகின்றாள்
         ஆனந்தம் அள்ளித் தருவாளா?
சுறுசுறுப்பாகச்  சிரித்து சிரித்து
         சுந்தரி துர்முகி நீ வா வா!!
*

வாழ்த்துக்கள்.

சித்திரை முதல் நாள் காலை வணக்கம் நண்பர்களே

ஸ்ரீ துர்முகி – தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன். ந.க.துறைவன்.

*

Monday, 11 April 2016

பிம்பங்களின் மர்மம்...!!


*
அவள் சொன்னதைச் செய்வாள்
செய்ததைச் சொல்வாள்
அவள் சொல்லாமல் விட்டதை
என்னிடம் சொல்லியும் காட்டுவாள்.
நான் சொல்லாமல் இருப்பதை
எப்படியும் சொல்லக் கேட்பாள்
அவள் என்னிடம் எதை மறைத்தாளோ
எனக்குத் தெரியாது?
நான் மறைத்ததும்
அவளுக்குத் தெரியாது?
மறைத்தல் என்பது மனதின் மர்மம்
வெளிப்படுகிறது அவரவர் பிம்பம்.

*

பக்குவம்...!! ( சென்ரியு )கோவணமாய் காய்ந்து இருக்கிறது
நீர் வறண்டு போய்
பாலாறு.
*
சமைக்கும் சாமர்த்தியம்
கைப் பக்குவத்தில் தெரிந்தது
அம்மாவின் மனப்பக்குவம்.

*

செவ்வாய்...!!

மங்களகரமான செவ்வாய் கிழமை காலை வணக்கம். நண்பர்களே…
வாழ்க வளமுடன்.

நல்ல காரியங்கள் எதுவும் செவ்வாய்கிழமைகளில் செய்யக் கூடாது என்று சொல்லுகிறார்களே ஏன்? நடக்கின்ற எல்லா நிகழ்வுகளும் நன்றாகவே நடந்துக் கொண்டு தானேயிருக்கிறது. மங்கள்வார் ( மங்களமான நாள் ) என்றுதானே செவ்வாய்கிழமையை பெரும்பாலோர் அழைக்கிறார்கள். அப்படியிருக்கும்போது ஏன் இந்தத் தடை விதிப்பு? இது எவரால் கொண்டு வரப்பட்ட திணிப்பு.?  

*

Saturday, 9 April 2016

விருப்பம்...!! ( கவிதை )


*
அவள் சாக விரும்பவில்லை
சாவும் அவளை நெருங்கவில்லை.
*.
அவனுக்கு நாக்கிலே சனி
அடுத்தவனுக்கு  மூக்கிலே முனி
*
ஆறாதது ரணம்
ஆறுவது சினம்.
*
ஆள் காட்டி விரலில் மை. 
வாக்காளர் உரிமை
*
சிக்கலைத் தீர்த்து வைத்தவன்
சிக்கலின் மாட்டிக் கொண்டான்.
*
காற்றே வரவில்லை என்றான்
பொய் சொல்லாதே என்றது காற்று.
*
எது பிடிக்குமென்று கேட்டான்?
உன்னைப் பிடிக்குமென்றாள்.

*

மாம்பழம்...!! ( சென்ரியு )

Senryu  – Tamil / English.

மாம்பழம் கையில் வைத்து
பால் குடிக்கிறது
அழுகிற குழந்தை.
Put the mango in hand
Milk drinks
Crying baby.
*

Friday, 8 April 2016

செய்திகள்...!! ( ஹைபுன் )


N E W S .-  இவ்வுலகம் ஊடகங்களால் சூழ்ந்திருக்கிறது. எத்திசை நோக்கினும் வான்வெளியில் காற்றின் ,ஈரப்பதத்தோடு செய்திகள் நிறைந்து ததும்புகிறது. நொடிக்கு நொடி ஒலி / ஒளிப் பரப்பாகும் செய்திகள் மக்களிடம் சென்று சேர்கின்றன.  அச்செய்திகள் எப்பொழுதும் மகிழ்ச்சியும் துக்கமும் அதிர்ச்சியும் தருகின்றன. ஆனால் அதற்காக மக்கள் யாரும் மனச்சோர்வு அடைவதில்லை. .அதனை  இயல்பாகவே எடுத்துக் கொண்டு தங்களின் வேலைகளைப் பார்க்கிறார்கள். சில மணிநேரத்திற்குள் மறந்தும் விடுகிறார்கள். அடுத்த நொடியே புதிய செய்திக்கு மனம் தாவிவிடுகிறது.
*
உலகமே உள்ளடங்கியுள்ளது
சுருக்கமான ஆங்கில எழுத்தின்
திசைகளுக்குள் செய்திகள்.

*

Thursday, 7 April 2016

புள்ளி...!!


*.
புள்ளியிலிருந்து தான் தொடங்குகிறது முதலில்
எந்தக் கோடும் அடுத்தப் புள்ளி. அதற்கடுத்தப்
புள்ளியென எந்தப் புள்ளியை இணைத்து விட்டாலும்
இன்னொரு புள்ளியை இணக்கின்றது மற்றொரு கோடு.
புள்ளியை இணைப்பது கோடுகள் எள்றாலும்
கோட்டிற்குப் புள்ளி தான் மையப் பிறப்பிடம்

*

வாழ்த்துக்கள்...!!

இனிய காலை வணக்கம்

அனைவருக்கும் தெலுங்கு வருடப் பிறப்பு
நல்வாழ்த்துக்கள். நண்பர்களே

*

Wednesday, 6 April 2016

அத்திமரம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
கிளிகளும்  பார்த்ததில்லை
நானும்  பார்த்ததில்லை
அத்தி மரம் பூப்பதை இதுவரை.
*
Parrots seen
I've never seen
Fig tree flowering so far.
*


அக்கா...!! ( கவிதை )பல்லியின் வாலசைவில்
படத்திலிருந்தப் பூ சரிந்து
கீழே விழுந்தது நல்ல சகுணமென
உணர்ந்து அப்பூவை எடுத்து
கண்களில் ஒற்றித் தலையில்
சொருகி வைத்துக் கொண்டாள்
அக்கா
வெளியூரிலிருந்து கணவன் வரப் போகும்  
நேரத்தை நினைத்துக் கொண்டிருப்பாளோ?

*

Tuesday, 5 April 2016

அணில்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English;
*
அமைதியாயிருக்கிறது
அணில் பசியாறும் வரை
பப்பாளி பழம்.
*
Is silent
Until you are hungry squirrel
Papaya fruit.

*

பூனைக் குறும்பு...!! ( கவிதை )*
அறையெங்கும் பூனையின் தொல்லை
அன்றாடம் வழக்கமாகிப் போன
அலுப்பூட்டும் செயலாகி விட்டது.
வீட்டில் குறுக்கும் நெடுக்குமாகத் திரிந்து
திட்டு வாங்குவதும் அதற்குப்
பழக்கமாகி விட்டதில் ஒன்றும்
அதிசயமில்லை எப்பொழுதேனும்
அப்பூனைக் கண்ணில் தென்படவில்லை
எனில் எங்கே தொலைந்தது என்றுக் கேட்டுத்
தேடுவார்கள் அனைவரும். அக்குறும்புப்
பூனையோ? யாருக்கும் தெரியாமல்
படுக்கையறைக் கட்டிலின் கீழ்
பவ்வியமாக ஒளிந்துத்  திருட்டுத்
தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து
வெளியில் ஓடிவரும் யாரோ
உள்ளே நுழையும் காலடிச் கத்தம் கேட்டு..!!
*

Monday, 4 April 2016

நினைவு...!! ( சென்ரியு )

senryu Tamil / English.
*
இறப்புக் காலம் வரை
நினைவில் நிற்கின்றது             
பிறந்த ஊரின் நினைவு.
*
Until death
Remember stands
Recall of place.

*

தேடல்...!! ( கவிதை )

*
,இருட்டில் அலைகிறது
விளக்கைத் தேடி விட்டில்பூச்சிகள்.

Sunday, 3 April 2016

வசந்தக் கவிதை ...!! ( கவிதை )தேனினும் இனிமை சொட்டும்
செங்கனி பழுத்துத் தொங்கும்
வெனிலின் இளமைக் காலம்
வான்நிலா பாலில் நீந்தும்.
பூஞ்சுனைப் புனலில் மூழ்க
புதுவகை இன்பம் ஊறும்
தீஞ்சுவைப் பலாவும் வேரில்
தேன்குடம் எனவே தொங்கும்.
வந்தது வசந்தம என்று
சந்தனம் பூசும் தென்றல்
பந்தல்போல் பசுமை மின்னும்
சிந்துகள் குயில்கள். நிந்தும்.
மலைமகள் மார்பில் கூட
மாலைபோல் அருவி இங்கே
இலையுதிர் காலம் மாறி
மலர்ந்தது புதிதாய்க் காலம்.
சுடுவெயில் வெம்மை மாற
சுகந்தரும் நிழலின் தன்மை
கொடுமைக்கு மாற்றுண் டென்ற
கவிதையை வசந்தம் பாடும்.
கவிஞர். சி.விநாகமூர்த்தி – ஒளியின் நெசவு – நூல் – பக்கம் – 115.
தகவல் ; ந.க.துறைவன்.

*

Saturday, 2 April 2016

வந்தவள்...!!

*
அத்தை மகள் சொத்தோடு வந்தாள்

அன்னிய மகள் ஆடையோடு வந்தாள்.
*

பயணம்...!!

*
வாழ்க்கை சிலருக்கு ஆமை போல் மெதுவாக நகர்கிறது. சிலருக்கு மான்கள் போல் வேகமாய் துள்ளித் துள்ளி பாய்ந்தோடுகிறது. எப்பொழுதும் சூரியன் மட்டும் மனம் அலட்டிக் கொள்ளாமல் தன் இயல்பான நிலையிலேயே பயணக்கிறான். 
*

Friday, 1 April 2016

பறித்தல்...!! ( கவிதை )


*
வெட்டவெட்ட வாழைமரம் துளிர்க்கும்
பறிக்கப் பறிக்க உலகில் காதல் மலர் பூக்கும்
*
இங்கு நடப்பது எதுவும் விடியலுக்கு தெரியாது்
விடிவது மட்டுமே அதற்கு தெரிந்தது.
*                                             
வெட்கப்பட்டவன் துக்கப்படுகிறான்
ஆசைப்பட்டவன் தோல்வியடைகிறான்.
*