Labels

Haiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (20) கலை (1) கவிதை (332) கவிதை. (7) கவிதைகள். (7) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (2) குறுங்கவிதைகள் (12) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (55) ஹைபுன் (48)

Tuesday, 30 June 2015

மெட்ரோ ரயில்...!! [ மரபுக் கவிதை ]


*
மக்கள் நெரிசல் மிகுந்தது
சென்னை மாநகரம்
போக்குவரத்து வாகனத்தில்
போகும் கூட்டம் அவசரம்.
*
பஸ் ரயில் ஆட்டோவில்
பயணிகள் கூட்டம் அதிகம்
முட்டிமோதி பயணம் செய்து
போய்சேரத் துடிப்பவர்கள் அதிகம்
*


அந்த காலம் டிராம் வண்டி
அழகாய் ஒடி நின்றது
என்றும் மறக்க முடியாமல்
இன்னும் நினைவில் நிற்பது.
*
எட்டாக் கனவாய் இருந்தத் திட்டம்
வெற்றி பெற்று விட்டது
பட்டாம்பூச்சிப் போலவே – இப்ப
மெட்ரோரயில்  பறக்குது.


*

Monday, 29 June 2015

கனல்...!! [ சென்ரியு }


சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றன
உடலில் எப்பொழுதுமொரு
அணையாதக் கனல்.
*

தங்கமே...!! [ புதுக்கவிதை ]


*
வாழ்க்கை முரண்களுக்கு எதிராகப்
பிறந்தக் குழந்தைக்குப் பெயர் வைத்து
அழகு பார்ப்பதில் தான்
எத்தனைச் சந்தோஷம்?
வறுமையில் வாடினாலும்
வஞ்சனையில்லாமல்
எத்தனையோ
ஆசைக் கனவுகளோடு
உனக்கு தங்கம் என்று
பெயர் வைத்திருக்கிறார்கள்
உன் பெற்றோர்கள்.
அழகு படுத்தி ஜொலிப்பதற்கு
உன் மேனியில் துளித்
தங்கமி்ல்லை.
உன் அங்கத்தினை
அலங்கரிக்கத் தங்கம்
இல்லாவிட்டால் என்ன?
என்னையே நீ
அங்கமாக்கிடும்போது
தங்கமே
நீதானே என் அசல்
சொக்கத் தங்கம்….!!
*

Sunday, 28 June 2015

அனுபவம்...!!

TAMIL HAKU / ஹைக்கூ
*
அலைந்து தேடுவதல்ல
உள்உணர்ந்து அறிவதே
அனுபவம்.

*

கற்பூரம்...!! [ கவிதை ]


*
நுழைவாயிலில் வரவேற்றார்
நம்பிக்கை தரும் தும்பிக்கையான்.
*
காசு தட்டில் விழுந்ததும்
கையில் விழுந்தது விபூதி்
*
தரிசிப்பவர்க்காக உருகி உருகி
ஒளிர்ந்துக் கரைகின்றது கற்பூரம்.


Saturday, 27 June 2015

கடினம்...!! [ கவிதை ]


*
ஒரு வீடே பெற முடியவில்லை
நான்கு வீடு பற்றிச் சொல்கின்றது குறள்.
*

எதையும் கடைபிடிப்பது கடினம்
கடைபிடிக்காமல் இருப்பதும் கடினம்
*
ஆரோக்கியமாய் இருப்பவனைப் பார்த்து
நலமா? என்று விசாரிக்கிறார் நோயாளி.

*

Tuesday, 23 June 2015

பிரார்த்தனை...!! HAIKU / ஹைக்கூ }

*
பிரார்த்தனைக்கு உதவியது
காற்றில் அணையாமல்

மரத்தின் கீழ் அகல்விளக்கு.
*

Monday, 22 June 2015

வாழ்க்கை...!1 [ HAIKU / ஹைக்கூ [}

*
வாழ்க்கைப் பற்றி
எப்பொழுதேனும் நினைக்குமா?
தினம் மலரும் பூக்கள்.
*

தவறு...!! [ கவிதை ]


*
மருத்துவர் கேட்ட கேள்விக்கு
தவறாமல் பதில் சொன்னாள்       
தவறை மறைத்து…
ஒரு நாள் வெளிப்பட்டது தவறு.
*

Sunday, 21 June 2015

காதல்....!! [ SENRYU / சென்ரியு ]


*
அவனுக்கும் அவளுக்கும்
இடையே இடைவெளி விலகி
நெருங்க வைத்தது காதல்.

*

புதிர்...!! [ கவிதை ]


*
பறவைகள் மொழி தெரிந்தவர்க்கு
வேற்றுமொழி எதுவும் தெரியவில்லை
*
பூடகமாக பேசுவது புதிரல்ல
புதிராக பேசுவது தான் வித்தை.
அவள் சொன்னபோது புரியவில்லை
பிறகு தான் புரிந்தது அதன் அர்த்தம்.

*

Saturday, 20 June 2015

இறுதி புள்ளி...!! [ HAIKU / ஹைக்கூ ]


*
எந்த வொன்றுக்கும்
வைக்கின்றார்கள்
இறுதி புள்ளி.

*

ஆவாரம்பூ...!! [ கவிதை ]


*
அத்தை மகளே அத்தை மகளே
அழகான ஆவாரம்பூவே
ஆசை அரும்பி எனக்கு
அனலாகக் கொதிக்குதடி
மாமன் எனைக் கொஞ்சம்
தலை நிமிர்ந்து பாரடியோ?
காமம் எனை எழும்பிவிட்டான்
கண்குளிரப் பாரடியோ?
காதல் கல்யாணத்திற்கு
சம்மதம் தருவாயோ?
ந.க.துறைவன்.

*

இருட்டு...!! [ ஹைக்கூ ]

*
உள்உணர்வுகள்
உணர்ச்சிகள் சிலிர்ப்புகள்
உள்வாங்கிக் கொள்கின்றன இருட்டு.
*

இடைவெளி...!! [ HAIKU / ஹைக்கூ ]

.
*
மரத்திற்கும் எனக்கும் இடையே
சிறிய இடைவெளி                 
கண்ணுக்குத் தெரியவில்லை காற்று.
*

Friday, 19 June 2015

மீன்கள்...!! [ SENRYU / சென்ரியு ]

*
மீன்கள் விளையாட்டை ரசித்தார்கள்
குடும்பத்தேடு
வறுவலை வாங்கி ருசித்தார்கள்.

*

ஹைக்கூ அழகியல் பூ...!!


*
.மரத்தில் ஆயிரம் பூக்கள் பூத்திருக்கலாம். அவையெல்லாமே அழகான பூக்களாகவே காட்சி தரும். இயற்கையின் சுற்றுச்சூழலினால் எத்தனையோ பூக்கள் பாதிக்கப்பட்டுள்ளது நமது கண்களுக்குக் கூடத் தெரியாது. ஆனாலும் அதில் சிலப் பூக்கள் மட்டுமே பாதிக்காமல் சாமளித்து தூய்மையானதாக இருக்க முடியும். அது போன்றது தான் ஹைக்கூ. ஆயிரமாயிரமாய் எழுதினாலும் ஏதோவொரு சில மட்டுமே ஹைக்கூவாக மிளிர்ந்து பளிச்சிடுகின்றது. அந்த ஒன்றே வாசகர் மனதைத் தொடும் தூண்டும். அந்த ஹைக்கூவை யாராலும் திரும்பச் சொல்ல முடியும். மறக்க முடியாது. அத்தகைய கவிதை எதுவோ அதுவே ஹைக்கூவாகும். ஹைக்கூ எழுதுங்கள். ஹைக்கூவாய் வாழுங்கள்.   
*

விளம்பரம்....!! [ LIMARAIKU / லிமரைக்கூ [


*
பாதையோரம் விளம்பரங்கள் பலப்பல உண்டு
கடந்துப் போகும் மனிதர்கள் முகஞ்சுளித்துப்
போகிறார்கள் வெறுப்போடு கண்டு.
*
 ஊரெல்லாம் அன்று ஒரே புரளி
அந்தப் பெண் தற்கொலைக்கு விரும்பி
அரைத்துக் குடித்த விதை அரளி.
*
அரிசியில் பொறுக்கக் கிடைக்கிறது கல்
வாட்டி வதைக்கின்றது எந்நாளும்
மனதில் நெருடலாய் பல சிக்கல்.

Thursday, 18 June 2015

மனம் போல வாழணும்....!! [ கவிதை ]


*
மாமன் வாரான் பாருங்க
மாமன் வாரான் பாருங்க
மடக்கி விரட்டிப் பிடியுங்க
மஞ்சநீரை ஊத்துங்க
வெள்ளை சட்டை பூராவும்
மஞ்சக் கரையாக்குங்க
அக்கா கேட்டா சொல்லுங்க
அடிக்க வந்தா ஓடுங்க.
மச்சினிச்சி மஞ்ச தண்ணி
மனசு நிறைஞ்சி போகணும்
மாமன் எனை நினைச்சி நாளும்
மகிழ்ச்சி பொங்க சிரிக்கணும்.
மாப்பிள்ளைப் பாத்து வைச்சி
மச்சினிக் கல்யாணத்தை
மனம் போலமுடிக்கணும்
சீருசெனத்தி குறையில்லாம
நாளு பேரு பார்க்கணும்
மணமேடையில் வாயாற
மாமன் வாழ்த்த வாழணும்.

கரப்பான்...!! [ SENRYU / சென்ரியு ]

*
அவள் தைரியசாலி
பயமுறுத்தி விட்டுப் போகிறது
சமையலறையில் கரப்பான்.

*

Wednesday, 17 June 2015

சூன்யவெளி....!! [ HAIKU / ஹைக்கூ ]


*
பரந்த சூன்யவெளி எதுவும
பாதுகாப்பான இடமோ?
எந்த அசம்பாவிதமும் காண்பதரிது.
*
மௌனத்தைக் கலைத்து விட்டது
எட்டிப் பார்த்தேன் மனம் கசிந்தது
பாதையில் நடந்த கார்விபத்து.                  
*
அண்ணாந்து பார்த்தேன் வானம்
திடீரென மின்னலாய்
கீழ் நோக்கி வந்ததொரு ஓளி.
*

Monday, 15 June 2015

இன்னிசை....!! [ கவிதை ]


*
இசை விரும்பி நீயென்பது
எத்தனையோ முறைச்
எனக்குச் சொல்லி
விளக்கி இருக்கிறாய்.
மெல்லிசை கர்நாடக இசை
மேனாட்டு இசையென சில
கற்றிருப்பதாகச் சொல்லி
கொஞ்சம் பாடிக் காட்டினாய்.
நான் விரும்பி ரசித்தேன்.
இசைப் பிரியையின் ரசிகன்
என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
ஒரே ஒருமுறை எனக்காக
ஆனந்தபைரவி ராகம் மட்டும்
பாடு… பாடு….கேட்கிறேன்.
பாடல்களைப் பதிவேற்றம் செய்து
எனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பு
விரும்பிக் கேட்டு ரசிக்கிறேன்
இசை அலையில் கலந்து
இணைய விரும்புகிறேன்.
இருவர் வசமாகட்டும்
இனிய இன்னிசை.
**

Saturday, 13 June 2015

சலிப்பு....!! [ கவிதை ]


*
பக்தர்களைப் பயமுறுத்துகின்றது
மாலைப் பாதையில் குரங்குகள்.
*
மலையேறும் போது சலித்தவரகள்
இறங்கும்போது சிரித்தார்கள்
*
பொறுமை இல்லாதவர்களும் இல்லை
பொறாமை இல்லாதவர்களும் இல்லை.
*

Friday, 12 June 2015

ஞானப்பூ...!!


*
அன்றும் இன்றும் என்றும்  ஹைக்கூ எழுதுவது எளியதாகி வி்ட்டது ஹைக்கூ என்றாலே எழுதுவதற்கு சிறியதான ஒரு வரிவடிவம் என்று தான் புரிந்துள்ளார்கள். எது ஹைக்கூ என்ற கேள்வி இங்கே தொடர்ந்துக் கேட்கப்பட்டு வருகின்றன? அதற்கான விடைகள் பலரும் பலவிதமாக அளித்துள்ளது ஆறுதலடைகின்ற வண்ணமாகவே இல்லை எனலாம். ஹைக்கூவை யாரும் எழுத வேண்டாம் என்று சொல்லவில்லை. எழுதுங்கள் என்று தான் சொல்கின்றார்கள். ஆனால் அதைக் கொஞ்சம் புரிந்து எழுதங்கள என்று தான் கூறுகின்றார்கள். அதற்காக கொஞ்சம் மெனக்கெட்டு ஹைக்கூ நூலகள்  கவிதை வாசிப்பு அவசியம் என்றே சொல்லலாம் அப்பபொழுது தான் அதைப் பூரணமாக உள்வாங்கிக் கொ்ண்டு எழுதப் பழக முடியும் என்பதே என்து கருத்தாகும். ஹைக்கூ என்பது மனம் சார்ந்த தத்துவம். உணர்வுப்பூ. உணர்ச்சிப்பூ. அதொரு மௌனப்பூ.
*

Thursday, 11 June 2015

வலி...!! [ கவிதை ]


*
நீ
அனுப்பிய பிறந்த நாள்
வாழ்த்துச் செய்தியை
வாட்ஸ்அப்பில் படித்தேன்.
உயிர்எழுத்துக்களைப் படித்து
உன் உணர்வவுகளைப்
புரிந்துக் கொண்டேன்.
பூக்களுக்குத் தான் தெரியும்
பூக்களின் அருமை.
யாருக்குத் தெரியும்
நம் அவல நிலைமை.
நெருஞ்சி முள்ளாய்
தைக்கின்றன இன்னும்
நம்மிருவரின்
பிரிவின் வலி….!!
*

Wednesday, 10 June 2015

மண்...!! [ HAIKU / ஹைக்கூ ]


*
பசுமை நிறைந்த வெளி
பலத்த மழை
மகிழ்ச்சியில் மரங்கள்.
*
படித்துறையில் அமர்ந்து
விளையாட்டைப் பார்த்தேன்
அருகில் வரத் துடித்தன மீன்கள்.
*
பிணத்தை புதைத்து விட்டு
எல்லோரும் திரும்பினார்கள்
மழையில் கரைந்தது மண்மேடு.
*

Tuesday, 9 June 2015

தேடல்...!! [ HAIBUN / ஹைபுன் }


*
எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை. கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேடிக் கொண்டேயிருந்தான். எங்கு வைத்தோமென்று யோசித்துப் பார்த்தான். கவனத்திற்கு வரவில்லை ஞாபக மறதி வந்துவிட்டதோ என்று பயந்தான். பயம் பல நேரங்களில் மனிதர்களை பயமுறுத்திப் பார்க்கும். பயந்தவர்கள் யாரும் தைரியசாலிகள் இல்லையா என்ன?. முக்கியமான பொருள் என்பதால் மனதில் பதட்டம் அதிகரித்தது. எப்படியும் கிடைத்துவிடும் என்ற உறுதியோடு தேடினான். பளிச்சென்று ஞாபகம் வந்துவிட்டது. அங்கே போய் பார்த்தான். பொருள் வைத்த இடத்திலேயே பத்திரமாக இருந்தது. சிக்கலானப் பிரச்சினையிலிருந்து தப்பித்தோம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டான்.
தேடுவது்மில்லை தொலைப்பதுமில்லை
எந்தவொரு பொருளும் கைவசமில்லை
சேமித்து வாழத் தெரியாதப் பறவைகள்.

Monday, 8 June 2015

மர [ ண] ம்....!! [ HAIBUN / ஹைபுன்

*
இடி பலத்தக் காற்று. மழையின்னும் ஆரம்பிக்கவில்லை. காற்றில் மரங்கள் பேயாட்டம் போட்டன. முருங்கைகள் பலமிழந்து முறிந்து விழுந்து விட்டன. அதில் உள்ள காய்களைக் கீரைகளைப் பறித்துக் கொள்ள, அருகில் வாழும் பெண்கள் ஓடிவந்து மடமடவென்று ஒடித்து எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் முகங்களில் ஓசியில் ஒருநாள் சமையலுக்கு காய்கள் கிடைத்ததென்று பெரும் மகிழ்ச்சி. மரத்தின் வீட்டுக்குச் சொந்தக்காரர் விரைந்து வந்து அவர்களை விரட்டியடித்தார். கிடைத்தவரை லாபமென்றுபெண்கள் ஒதுங்கிப் போய்விட்டார்கள். காற்று அடங்கி பலத்த மழைத் தொடங்கியது.
அருகில் யாருமில்லை.
அனாதைப் பிணமாய் கிடந்தது
முருங்கை மரம்.

*

Sunday, 7 June 2015

இல்லை...!! [ LIMARAIKU / லிமரைக்கூ ]

*
கல்வி கற்பிப்பதைப் புறந்தள்ளி
தமிழகத்தில் இன்றுமிருக்கிறது
மாணவரே இல்லாத பள்ளி.

*

வாட்ஸ்அப் காதல் தூது....!! [ கவிதை ]


*
செல்பி எடுத்து எடுத்து
வாட்ஸ்அப்பில் சளைக்காமல்
உன் உருவப் படத்தை
அனுப்பி வைக்கிறாய்.
உன் அழகான புன்னகையில்
மலர்ந்த முகம் நெற்றி பொட்டு
காதில் தொங்கும் கம்மல்
சுருட்டை முடி கூந்தல்
மல்லிகைப் பூவின் வெண்மை
பிடித்தமான நிறப் புடவையில்
உன்னைப் பார்த்து பார்த்து
ரசிக்கிறேன்…ருசிக்கிறேன்
என்னுடைய பதில் பதிவை
அவ்வப்போது உனக்கு
அனுப்பி விடுகிறேன்
அதைப் படித்து வெட்கத்தில்
நீ பதித்தப் பதில்கள்
எனக்கு தெம்பூட்டுகின்றன
உற்காசத்தில் நானும்
என்னை செல்பி எடுத்து
அனுப்பியதைப் பார்.
அழகாகயிருக்கிறேனா? சொல்.
செந்தாமரைப் பூவாய்
மலர்ந்து செழிக்கட்டும்
நம் காதல்.
தினம் தினம் தவறாமல்
பரிமாறிக் கொள்வோம்
செல்பி வாட்ஸ்அப் தூது
*

வாட்ஸ்அப் காதல்துது....!! [ கவிதை ]


*
செல்பி எடுத்து எடுத்து
வாட்ஸ்அப்பில் சளைக்காமல்
உன் உருவப் படத்தை
அனுப்பி வைக்கிறாய்.
உன் அழகான புன்னகையில்
மலர்ந்த முகம் நெற்றி பொட்டு
காதில் தொங்கும் கம்மல்
சுருட்டை முடி கூந்தல்
மல்லிகைப் பூவின் வெண்மை
பிடித்தமான நிறப் புடவையில்
உன்னைப் பார்த்து பார்த்து
ரசிக்கிறேன்…ருசிக்கிறேன்
என்னுடைய பதில் பதிவை
அவ்வப்போது உனக்கு
அனுப்பி விடுகிறேன்
அதைப் படித்து வெட்கத்தில்
நீ பதித்தப் பதில்கள்
எனக்கு தெம்பூட்டுகின்றன
உற்காசத்தில் நானும்
என்னை செல்பி எடுத்து
அனுப்பியதைப் பார்.
அழகாகயிருக்கிறேனா? சொல்.
செந்தாமரைப் பூவாய்
மலர்ந்து செழிக்கட்டும்
நம் காதல்.
தினம் தினம் தவறாமல்
பரிமாறிக் கொள்வோம்
செல்பி வாட்ஸ்அப் தூது

*

Saturday, 6 June 2015

கலப்பு...!! [ LIMARAIKU / லிமரைக்கூ [


*
நதிகளில் கழிவுநீர் கலப்பு
கங்கை காவிரியில் மக்கள்
புனிதநீர் முக்குளிப்பு.
*

மதிப்பெண்....!! HAIBUN / ஹைக்கூ ]


பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு, +2 வகுப்பு பாடங்களில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கின்றது. பாராட்டலாம். இந்த தேர்ச்சி எப்படிப்பட்து என்புது தான் கேள்வி. மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்து, அதை அப்படியே பரிட்சையில் பதிவு செய்ய வைப்பது ஒரு தேர்வா?  மனனம் செய்து எழுதியதை விடைத்தாள்கள் திருத்துபவர்கள் எப்படி முழுமையான சரியான விடையென்று மதிப்பெண் அளிக்கின்றார்கள்? அரசும் இதை எப்படி சரியானமுறையென்று அதிக மதிப்பெண் அள்ளிக் கொடுக்க அனுமதியளிக்கின்றது. இது தான் கல்விமுறையா?
அறிவிற்கு அளிக்கவில்லை
மனப்பாடத்திற்குத்தான்
அள்ளி வழங்கியது மதிப்பெண்.

*

Friday, 5 June 2015

மயில்....!! [ HAIKU / ஹைக்கூ ]


*
ஆடிக் களித்தக் களைப்பு
நாகலிங்க மரத்தில்
உறங்குகிறது மயில்.

*

SENRYU / சென்ரியு


*
தொழில்நுட்பம்
உலகைச் சுருக்கி விட்டது
ஹைக்கூகவிதையாய்…

*

தொடக்கம்...!! [ HAIKU / செனரியு }*
எங்கே தொடங்குகின்றது
அறிய முடிகின்றதா?
அறிவின் பிறப்பிடம்.

*

Thursday, 4 June 2015

மனஅலைகள்...!![ கவிதை ]


*
கடற்கரையில்
சுண்டல் விற்கும்
சிறுவர்கள் அறிவார்கள்
எத்தனையோ?
காதலர்களின் துயர
மனோ தத்துவம்.

*

Tuesday, 2 June 2015

வருத்தம்....!! [ கவிதை ]

வருத்தம்…!!
*
வருத்தமுமில்லை என்று சொன்னான்
வருந்தினான் உள்ளுக்குள்ளே….
*
சகிப்போடு தான் கழிகிறது
சந்தோஷமான நேரங்கள்.
(
எத்தனைத் பொருத்தம் பார்த்தாலும்
பொருந்தாமல் போகிறது திருமணம்
*

Monday, 1 June 2015

பரபரப்பு...!! [ கவிதை ]


*
உக்கிரமான கோடை வெயில்
உற்சாகமான மக்களை
அலுக்க வைக்கின்றன.
நடப்பவர்கள் புழுங்குகிறார்கள்
நடைபாதை வியாபாரிகள்
பழகிவிட்டார்கள்
முகங்களில் முகமுடியணிந்து
பறக்கிறார்கள் இருசக்கர
வாகனங்களில்
குளிர்சாதனம் பொருத்தி
கார்களில் இருப்பவர்கள்
வெயில் பற்றிய கவலையில்லை
நிழல்தேடி சோர்வில் ஒதுங்க
நினைப்பவர்கள் இருப்பிடமின்றி
தவித்து அலைகிறார்கள்.
தேனீர் கடைகளில்
சுமாரானக் கூட்டம்
குளிர்பானக் கடைகளில
கூட்டமோ கூட்டம்
கையில் பொருட்கள் வாங்கிய
கடையின் விளம்பரப் பைகள்.
நகரங்களில் நன்றாகவே
நடக்கின்றது வியாபாரம்
மனிதர்களின் முகங்களில்
நிலவுகிறது
தற்காலிக ஆரவாரம்.
*