Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Thursday 27 June 2019

அம்மையப்பர்

அம்மையப்பர். 1. இலைகள் மெல்ல அசைந்தன இருட்டில் எதுவும் தெரியவில்லை பறவைகள் கலவி சத்தம். 2. நாலாபக்கமும் நறுமணம் ஊதுபத்தி புகை சுருளாய் அலர்ஜியில் தும்பினார் விநாயகர். 3. பௌர்ணமி கதிர்வீச்சு ஓசையற்ற அமைதி எறும்பின் பாதயாத்திரை. 4 விலை மதிப்பற்றது உலகில் குழந்தைகள் கட்டிய மணல் வீடு கரைத்து விட்டது பெருமழை. 5. விழாமல் காக்க மஞ்சள் கயிறு சுற்றினார்கள் நூறாண்டு வயது வேம்பு அரசு இணைந்த மரம். 6. நேற்று தான் விழுந்தான் ஆழம் அறியாமல் அவள் கன்னக்குழியில்... 7. லிங்கம் வணங்கி எழுந்தாள் சக்தி சிவன் உணர்ந்து விழித்தான் நாரதர் குரல் வெளியில். 8. மழை வேண்டி யாகங்கள் பெரும் கரும்புகைச் சூழ்ந்து மூச்சு திணறினார் அம்மையப்பர். 9. வானில் மின்னல் குடும்பத்தில் இன்னல் கடப்பவன் அறிவாளி. 10. வெட்கமில்லாமல் உலகமெங்கும் எந்நேரமும் நிர்வாணமாய் சுற்றுகிறது காற்று. 11. கோடை மழையில் நனைந்து தவிக்கிறது குழந்தை தவறவிட்ட பொம்மை. 12. நம்ப வைத்து ஏமாற்றுகிறார்கள் ஏமாற்றுக்காரர்களிடம் ஏமாற்றுபவர்கள் எப்பொழுதும். 13. அந்த பறவை எந்த மரத்தைத் தேடுகிறது மனமில்லாத இடத்தில் பறந்து. 14. மலைப் பாறையில் குருவி அடிவாரத்திற்கு வர யோசனை எது சுருக்கு வழியென பார்வை. 15. மரணித்தவர் மனம் குளிர்வித்து கல்லறையைக் குளிப்பாட்டியது பலத்த மழை. 16. இடம் கிடைக்கவில்லை அமர்வதற்கு புறப்பட இன்னும் சில நிமிடங்கள் குழந்தைகள் பொம்மை ரயில். 17. உன்னை நான் நினைக்கவில்லையே எப்படி சாப்பிடும்போது புரையேறுகிறது? உச்சி வரை. 18. துறவி இல்லாத மடம் தங்கி காலம் கழிக்கிறார்கள் ஊர் சுற்றும் நாடோடிகள். 19. நான் பேசுகிறேன் நீ மௌனம் சாதிக்கிறாய் என் மௌனம் உன்னை பேச வைக்கும். 20. களைத்துப் போய் இருக்கிறாய் சற்றே ஓய்வெடு உன் அருகிலிருக்கும் பூனையின் தூக்கம் கெடுக்காதே. 21. உச்சநிலை பேச்சு கவனியாமல் காத்திருக்கு டீப்பாய் மேல் சூடான டீ. 22. ஆத்திரம் அவசரப்பட்டான் எல்லா வேலைகளையும் வீணானது குழப்பத்தில் மனம். 23. ஒன்று குண்டு இன்னொன்று ஒல்லி மல்லி, முல்லை பூக்கள் ஒரே இனம். 24. வாழ்த்துவதற்கு போனவன் விசை வாங்கித் திரும்பினான் பிரச்சினையில் சிக்கி. 25. வெளியில் கொட்டும் மழை தொலைக்காட்சியில் காரசாரமான தண்ணீர் விவாதம். 26. இருட்டியது வானம் வழிதேடி அலைந்து மழையில் நனைகிறது தும்பி. 27. விசும்பின் விந்து மழை. 28. எந்த மொழியிலும் இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை அந்த பறவையின் பாடல். ந க துறைவன்.

Friday 21 June 2019

நூறாண்டு

நூறாண்டு 1. பௌர்ணமி சந்திரன் கதிர்வீச்சு ஓசையற்ற அமைதி எறும்பின் பாதயாத்திரை. 2. விலை மதிப்பற்றது உலகில் குழந்தைகள் கட்டிய மணல் வீடு கரைத்து விட்டது பெருமழை. 3. நாலாபக்கமும் நறுமணம் ஊதுபத்தி புகைச் சுருளாய் அலர்ஜியால் தும்மினார் விநாயகர். 4. விழாமல் காக்க மஞ்சள் கயிறு சுற்றினார்கள் நூறாண்டு வயது வேம்பு அரசு இணைந்த மரம். 5. நேற்று தான் விழுந்தான் ஆழம் அறியாமல் அவள் கன்னக்குழியில்... ந க துறைவன்.

நறுமணம்

நறுமணம் ஈசனின் கீழ் நோக்கு பார்வை சக்தி சிரித்தாள் அறையில் காமச் சாம்பிராணி புகை. * லிங்கம் வணங்கி எழுந்தாள் சிவன் விழித்தான் நாரதன் குரல் வெளியில்... ந க துறைவன்.

Monday 17 June 2019

பிறை

பிறை வயல் காட்டில் வாழ்ந்தார் வைரமாய் உடல் வளர்ந்தார் ஆயிரம் பிறை கண்ட தாத்தா. ந க துறைவன்.

Monday 10 June 2019

வழிகாட்டி

வழிகாட்டி

1.
ஊர் எல்லையில் மக்களைக் காத்து
குலதெய்வமாய் வீற்றிருக்கிறாள்
கூரையற்று தீப்பாஞ்ச அம்மன்.
2.
மகள் திருமணத் தாலி
பூசையில் வைத்து வணங்கினாள்
குலதெய்வம் உத்தரவு கேட்டு...
3.
எல்லையம்மன் உக்கிர உருவம்
இளமையில் பார்த்து பயந்தது
இன்றவள் குலதெய்வ வழிகாட்டி.
4.
காத்து கருப்பு அண்டாமல் காக்க
கன்னிமார்களுக்கு மாவிளக்கு ஏற்றினாள்
நோயால் குழந்தை பலி கொடுத்த தாய்.

ந க துறைவன்.

Friday 7 June 2019

கட்டைவிரல்

துரோணர் இறுதி மூச்சு நாசியைத் தொட்டு விலகுகிறது ஏகலைவன் கட்டைவிரல். ந க துறைவன்.

Thursday 6 June 2019

பிரச்சினைகள்

பலூன்களாய் வெடிக்கின்றன
சில பிரச்சினைகள்
சில நேரங்களில்
சில மனிதர்களால்
எதிர்பாராமல்...

ந க துறைவன்.

Sunday 2 June 2019

இசை

இசை இசையின் அதிர்வலைகள் உணர்கின்றன மௌனமாய் என்னை அறியாத ஆன்மா. + ஆற்று நீரின் இசை மீன்கள் ரசிகர்கள் கூட்டம் கூழாங்கற்கள் ஆழ்ந்த தியானம். ந க துறைவன்.