Labels

Haiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (20) கலை (1) கவிதை (332) கவிதை. (7) கவிதைகள். (7) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (2) குறுங்கவிதைகள் (12) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (55) ஹைபுன் (48)

Wednesday, 31 August 2016

உணர்வுகள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
சொல்லத் தெரியாத உணர்வுகள்
உள்ளே பதுங்கி இருக்கிறது
பாய்ந்தோடுகிறது முயல்குட்டி.
*
Feelings do not tell
Have sneaked in
Bunny and flows.

*

Tuesday, 30 August 2016

உடன் இருத்தல்...!!“ எனக்குக் குழந்தை பிறக்கும் சமயத்தில் என் கணவர் என்னுடன் இருபபதற்கு அனுமதிப்பீர்களா..? ” என்று பிரசவ வலியில் இருந்த  மேரி, டாக்டரிடம் கேட்டாள்.
“ ஓ… அவர் இருக்கலாமே… குழந்தை பிறக்கும்போது அதனுடைய அப்பா இருக்க வேண்டும் என்பதில் எனக்கும் கூட நம்பிக்கை உண்டு…” என்று டாக்டர் பதிலளித்தார்.
“ எனக்கு அது நல்ல யோசனையாகத் தெரியவில்லை. அவருக்கும் என் கணவருக்கும் அவ்வளவாக ஒத்துவராது… ” என்று சொன்னாள் மேரி.
ஆதாரம் ; ஓஷோவின் – “ கிளச்சியாளன் ஆன்மிகத்தின் ஆதார சுருதி ” நூல்
பக்கம் – 24.

தகவல் ; ந.க.துறைவன்.

Monday, 29 August 2016

வனம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
வனத்தில் சீதை, தேடலில் ராமன்
ஆட்சியில் பரதன்
அயோத்தியில் சோகம்.
*
Sita in the forest in search of Rama
Successive shots
In Ayodhya tragedy.

*

பெயர்ச் சொல்லி அழைக்கலாமா?“ ஏன் உங்களை எல்லோரும் பெயர்ச்சொல்லி அழைக்கிறார்கள்? ”

நான் தான் அப்படி அழைக்கும்படி சொன்னேன். அழைப்பதற்காகத்தானே பெயர் இருக்கிறது. ஒரு சிறுமி என்னை பெயர்ச் சொல்லி அழைக்கும்போது, அந்தச் சிறுமியின் வயதுடையவளாகவே நான் ஆகிவிடுகிறேன். அந்த ஆனந்தம் எனக்குத் தேவையாக இருக்கிறது. அது கொடுக்கும் புத்துணர்ச்சி எனக்குப் பிடித்திருக்கிறது. அம்மா, அப்பா, கணவன் ஆகியோர் மட்டுமே வழக்கமாகப் பெயர்ச் சொல்லி அழைப்பார்கள். என் வாழ்வில் இவர்கள் அனைவரையும் நான் வரிசையாக இழந்துவிட்டேன். என் பெயரையும் நான் இழக்கக் கூடாது அல்லவா? எனது பெயரைச் சொல்லி அழைக்கப்படும் ஒவ்வொருமுறையும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்தப் புத்துணர்ச்சியிலிருந்து ஒவ்வொரு நாளையும் கழிக்கத் தேவையான சக்தியை நான் பெற்றுக்கொள்கிறேன்.
ஆதாரம் ; சாருஸ்ரீ – கங்கோத்ரி – சிறுகதை தொகுப்பு – பக்கம் – 8.
தகவல் :  ந.க.துறைவன்.

*

நீரோடை...!! ( ஹைக்கூ )


Haiku – Tamil / English.
*
ஊருக்கு அழகு சேர்க்கிறது
ஊற்று நீர் பாய்ந்து
மலை சரிவின் கீழ் நீரோடை.
*
Adding to the beauty of the city,
Spring water flowing
Stream under the mountain slope.

*

Thursday, 25 August 2016

செய்திகள் என்ன சொல்லுது?1.
ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன் அமெரிக்காவால் திணிக்கப்பட்டவர்கள். – சுப்பிரமணிய சுவாமி விமர்சனம்.
        சு.சுவாமி நீங்க கூட அமெரிக்காவால் திணிக்கப்பட்டவர் என்று அரசியல் வட்டாரங்களே பேசிக்கிறாங்க..
2.
மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா? – திருமாவளவன் பதில்.
     தேர்தல் நேரத்திலே வைகோவும் , கேப்டனும் நடந்திகிட்டதைப் பார்த்தும் இன்னுமா அவங்ககோட சேரணுமுன்னு நினைக்கிறீங்க. தொல்.
3.
வெங்காயம் விலை 5 பைசா! விரக்தியடைந்த விவசாயி.
       ஐந்து பைசா, பத்து பைசா, 25 பைசா எல்லாம் காலாவதியாகி விட்டதே. ஐம்பது பைசாவுக்கு கூடவா விவசாயிடம் வாங்கக் கூடாது.


தொகுப்பு ; ந.க.துறைவன்.

Wednesday, 24 August 2016

நல்வாழ்த்துக்கள்...!!


இனிய காலை வணக்கம் நண்பர்களே

அனைவருக்கும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் – ந.க.துறைவன்.  

கண்ணன் - என் குழந்தை.

சொல்லும் மழலையிலே  - கண்ணம்மா!
துன்பங்கள் தீர்த்திடுவாய்;
முல்லைச் சிரி்ப்பாலே – எனது
மூர்க்கந் தவிர்த்திடுவாய்.

மார்பில் அணிவதற்கே – உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே – உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ?

மகாகவி பாரதியார்


Tuesday, 23 August 2016

செய்திகள் என்ன சொல்லுது?1.
குஜராத் பேரவையில் அமளி ; 50 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்.
        அடடா! தமிழ்நாட்டிலே 79 பேர் இடைநீக்கம். அப்போ எதுக்கு இவங்களை மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்புறாங்க. மக்கள் பிரச்சினையை பேசத்தானே அனுப்புறாங்க. சும்மா உட்கார்ந்து பென்ச் தட்டிட்டு வரவா?
2.
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்தவிடுவது சாத்தியமில்லை.
கர்நாடக சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா தெரிவித்தார்.
        தமிழகத்தைத் தண்ணி இல்லாத காடாக மாத்திடுவாங்க போல இருக்கே. இந்திய மக்கள் ஒற்றுமை என்பது இதுதானா?
3.
நான்கு ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு. முதல்வர் ஜெ.அறிவிப்பு.
       ஏற்கனவே  பி்எட். படிச்சவங்க வேலை கிடைக்காம காத்திருந்து காத்திருந்து கிழடாகி  இருக்காங்க. இனிமே நான்கு வருஷம்னா  சொல்லவே வேண்டியதில்லை. பாவம் பட்டதாரிகள்.
தொகுப்பு ; ந.க.துறைவன்.

*

விருப்பு வெறுப்பு...!!

வாசித்ததில் வசீகரித்தக் கதை.
*.


எப்படிப்பட்ட பெண்னை வீட்டிற்குக் கூட்டி வந்தாலும் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை என்பதால் நண்பனிடம் ஆலோசனைக் கேட்டான். டாம்.
“ உன்னுடைய அம்மாவைப“ போலவே ஒருத்தியைத் தேடிக் கண்டுபிடி. பிறகு பார் அவனை உன் அம்மாவிற்கு கண்டிப்பாய்ப் பிடித்துப் போகும் ” இது நண்பனின் ஆலோசனை.
தேடித் தேடிப“ பார்த்து, கடைசியில் அந்தப் பெண்ணை டாம் கண்டு பிடித்தான். “ நீ சொன்னதைப் போலவே ஒருத்தியைக் கண்டுபிடித்தேன். அவள் பேசுவது, ஆடை அணிவது… அவளுடைய தோற்றம் கூட என் அம்மாவைப் போலத்தான் …  நீ சொன்னது மாதிரியே என் அம்மாவிற்கும் அவளைப் பிடித்துப் போயிற்று…” என்நான்.
“ அப்படியா… பிறகென்ன நடந்தது…” நண்பன் கேட்டான்.
“ ஒன்றுமில்லை… என் அப்பா அவளை வெறுக்கிறார்… ”
ஆதாரம் ; ஓஷோவின் “ கிளச்சியாளன்  ஆன்மிகத்தின் ஆதார சுருதி ” – நூல் –பக்கம் – 14.
தகவல் ; ந.க.துறைவன்.
2

Monday, 22 August 2016

நொடியில்... !! ( ஹைபுன் )


*
மகிழ்ச்சியான நேரம் என்று ஒன்றிருக்கிறதா? துக்கமான நேரம் என்று ஒன்றிருக்கிறதா? இரண்டுமே இல்லை. எல்லாமே மனம் தீர்மானிப்பது தானே தவிர வேறொன்றுமில்லை. ஒரு நொடியிலே இரண்டும் மாறி மாறி நிகழ்ந்தேறும். இதனை நேரடியாக அனுபவத்திலே காணலாம். இரவு – பகல் அமாவாசை, பௌர்ணமி என எல்லாம் மாறி மாறி வருவது போன்று தான் மகிழ்ச்சியும் துக்கமும் வாழ்வில் நிகழ்ந்தேறி வருகின்றன. இயற்கை தகவமைத்துள்ள செயல்பாட்டு முறைப்படியே மனித மனமும் செயல்படுகின்றன என்பதை இதன் வாயிலான அறிந்துக் கொள்ள முடிகின்றது.

பூமியின் உருண்டை வடிவில்
காலம் வெளி கணக்கிட்டு
கடிகாரம் கண்டான் மனிதன்.

*

பறத்தல்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
மரங்களின் புன்சிரிப்பு
கீழே விழுந்த மலர்கள்
வண்ணத்துப்பூச்சிகள் பறத்தல்.
*
Tree's smile
Fall flowers
Butterflies fly.

*

Friday, 19 August 2016

மின் ( தடை ) நிறுத்தம்...!!
1.
தடையில்லாத மின்சாரம் வழங்குவதாகச் சொல்கிறார்கள். சட்டமன்றத்திலும் பேசுகிறார்கள். ஆனால் மறைமுகமாக தினமும் எப்படியும் ஒரு நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை மின்சாரம் கிடையாது. இதற்கு என்ன பெயர்?
2.
இன்று சனிக்கிழமை மின் பராமரிப்பு பணி நிமித்தமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை. வேலூர் சத்துவாச்சாரி பகுதியில்  மின் ( தடை ) நிறுத்தம் என்று பத்திரிகையில் செய்தி வந்நிருக்கிறது. இது மாதாமாதம் நடைபெறுகின்ற பணி. சில மாதங்களில் இந்த செய்தி கூட வெளி  வருவதில்லை. ஆனால் மின் தடை இருக்கும்.
3.
தமிழ் நாட்டிற்கே முறையாக மின் விநியோகம் இல்லாதபோது, பற்றாக்குறை இருக்கும்போது, உபரி மின்சாரத்தை வெளிமாநிலத்திற்கு விற்கப்போவதாக வேறு செய்திகள் வருகின்றன. அப்படியென்றால், தாராள மின் உற்பத்தி இருக்கும்போது எதற்காக மின் தடை?
பேச்சு ஒன்று செயல் ஒன்றாக இருக்கிறது. இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் என்ற குறள் தான் நினைவுக்கு வருகின்றது.
ந.க.துறைவன்.

*

கண்ணாடிப் பெட்டி...!! ( ஹைக்கூ )

 Haiku – Tamil / English.
*
கண்ணாடிப் பெட்டிக்குள்
நீர்க் காற்றில்
அசைவற்ற பூச்செடிகள்.
*
Mirror box
Water in the air
Flowers immobile.
*

Thursday, 18 August 2016

செய்திகள் என்ன சொல்லுது?1.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் 58 கிலோ ,.ப்ரிஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சாக்க்ஷி மாலிக் வெண்கலம் பதக்கம் வென்றார். இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
       வெண்கலம் பதக்கம் வாங்கியதற்கே இந்த அமர்க்களம் என்றால் தங்கம். வென்று இருந்தால் எப்படி கொண்டாடியிருப்பார்கள். இந்தியாவிலே தங்கம் விலையேறி போனதால் மக்களுக்கே தங்கம் கிடைக்க மாட்டேங்கிறதாலே, ரியோ ஒலிம்பிக்கிலும் இந்தியாவுக்கு தங்கம் பதக்கம் இன்னும் கிடைக்கலே போல இருக்கு.
2.
தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை தருவதற்கு மறுத்து, நதியின் குறக்கே அணைகள் கட்டி, காவிரியில் கர்நாடகம், முல்லைப் பெரியாரில் கேரளம், பாலாற்றில் ஆந்திரம் என்று செயல்படுகின்றனர். இவர்கள் தமிழகத்தையே சுற்றி வளைத்து பாலைவனமாக்கி விடுவார்கள் போல இருக்கிறது. தமிழ்நாடு இந்தியாவிற்குள் தானே இருக்கிறது? அப்படியென்றால் இப்பிரச்சினைக்கு ஏன் தீர்வு காண  முடியவில்லை. எல்லாமே அரசியல் உள்நோக்கம் தானே?
*
3. .
ஆந்திராவில் ‘ செடி வங்கி ‘ தொடங்க முடிவு.
        பாராட்டுக்குரிய செய்தி. இந்த செடி வங்கி தமிழ்நாட்டில் தொடங்கினா அதுக்கு என்ன பேரு வைப்பாங்க.
தொகுப்பு ; ந.க.து்றைவன்.

*

அமைதி..!!அமைதிக்கு ஒரேயொரு சுவைதான் உண்டு. அது அற்புதமான சுவை. இருத்தலின் இணையற்ற சுவையும் அதுதான். உனக்குத் தொல்லை தரும் எல்லாவற்றையும், குழப்பம் ஏற்படுத்தும் எல்லாவற்றையும், பதற்றம்,கவலை மற்றும் வேதனையைத் தரும் அனைத்தையும் நீ கைவிட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் உன்னால் அமைதியை எட்ட முடியாது. இதை நினைவிற்கொள். உனக்குள்ளே ஆழத்தில் ஏற்கனவே அமைதி இருக்கிறது. நீயே அமைதியிலிருந்துதான் படைக்கப்பட்டிருக்கிறாய். அதுதான் உனது ஆதார சுயஉணர்வு, அதுவே உனது இருப்பு.
ஆதாரம் ; ஓஷோவின் – “ கிளர்ச்சியாளன்  ஆன்மிகத்தின் ஆதார சுருதி ” – நூல் – பககம் – 12-13.
தகவல் ; ந.க.துறைவன்.

*

இருள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
உடம்பைக் காணவில்லை
உணர்வு தெரியவில்லை
கரைத்து கொள்கிறது இருள்
*
Missing bodies
Sense of wonder
Darkness is dissolved

*

Wednesday, 17 August 2016

அமைதி...!!அமைதிக்கு ஒரேயொரு சுவைதான் உண்டு. அது அற்புதமான சுவை. இருத்தலின் இணையற்ற சுவையும் அதுதான். உனக்குத் தொல்லை தரும் எல்லாவற்றையும், குழப்பம் ஏற்படுத்தும் எல்லாவற்றையும், பதற்றம்,கவலை மற்றும் வேதனையைத் தரும் அனைத்தையும் நீ கைவிட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் உன்னால் அமைதியை எட்ட முடியாது. இதை நினைவிற்கொள். உனக்குள்ளே ஆழத்தில் ஏற்கனவே அமைதி இருக்கிறது. நீயே அமைதியிலிருந்துதான் படைக்கப்பட்டிருக்கிறாய். அதுதான் உனது ஆதார சுயஉணர்வு, அதுவே உனது இருப்பு.
ஆதாரம் ; ஓஷோவின் – “ கிளர்ச்சியாளன்  ஆன்மிகத்தின் ஆதார சுருதி ” – நூல் – பககம் – 12-13.
தகவல் ; ந.க.துறைவன்.

*

பொருத்தம்...!!


*
பத்து பொருத்தத்தில்
ஆறு பொருந்தி வந்தது
மீதி நான்கு பொருந்தி
வரவில்லையென்று
கணித்துக் கொடுத்தது
கம்ப்யூட்டர் ஜாதகம்.
ந.க.துறைவன்.
*
முப்பது ஜாதகப்
பொருத்தம் பார்த்தார்கள்
பொருந்தி வரவில்லை.
பொருத்தமானவனோடு
அவள் ஒருநாள்
பறந்து போய்விட்டாள்.

*

சலவை...!! ( சென்ரியு )

Senryu  – Tamil / English;
*
அழுக்காகி விடுகிறது
புதுப்பிக்கின்றார்கள்
மூளை சலவை.
*
Is spoiled
Revives
Brain wash.

*

Tuesday, 16 August 2016

செய்திகள் என்ன சொல்லுது?.
ஏழைகளே இல்லாத தமிழகம்.
சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா சூளுரை.
       நல்வாழ்த்துக்கள் அம்மா. சொல்லாததையும் சொல்லி செய்து காட்டப் போறீங்க. ஏழைகள் இருந்தா தானே இலவசம் கொடுக்க முடியும். இலவசம் கொடுத்தா தானே ஒட்டுப் போடு வாங்க. எந்தப் பணக்காரனும் ஓட்டே போட்றதேயில்லையே. எல்லோருமே பணக்காரங்க ஆயிட்டா ஓட்டே போட மாட்டாங்களே!. இதுதான் காதுலே பூவு சுத்துறதுங்கிறது.
2.
ஏழைகளுக்கு புதிய மருத்துவச் சலுகைகள்.
பிரதமர் மோடி அறிவிப்பு.
       கடந்த மூணு வருசத்துக்கும் மேலாக  BSNL ஓய்வு பெற்ற ஊழியர்களின் மருத்துவச் சலுகைகள் நிறுத்தி வைச்சி இருக்கீங்களே, அதை கொஞ்சம் கொடுக்க பரிந்துரை செய்யுங்க. இந்த செய்தி உங்க கவனத்துக்கு இன்னும் வரவில்லையோ?   போராட்டம் ஆர்ப்பாட்டம் எல்லாம் செஞ்சிக் கேட்டுப் பார்த்தாங்க. இன்னும் கிடைச்ச பாடில்லை. கொஞ்சம் மனசு வையுங்க பிரதமர் சாப்.
3.
மூத்த குடிமக்களை இளைஞர்கள் மதிக்க வேண்டும்.
கிரிக்கெட் வீரர். சச்சின் டெண்டுல்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
         எத்தனை இளைஞர்கள் இன்று பொறுப்புணர்வோடு நடந்து கொள்கிறார்கள். அவர்கள் சினிமா கலாச்சாரத்தில் தானே வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். மூத்த குடிமக்களை மதிச்சி நடந்தா சரி தான்!.
தொகுப்பு ;  ந.க.துறைவன்.
*

செய்திகள் என்ன சொல்லுது?


1.
ஒட்டு மொத்த தமிழர்களின் கோரிக்கையாக ஜல்லிக்கட்டை கருத முடியாது.
மத்திய அமைச்சர் மேனகா காந்தி.
அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ன்.
       இரு மத்திய அமைச்சர்களின் முரண்பாடான பேச்சு கேலிக்குரியதாக அல்லவா அமைந்துள்ளது.
2.
5.1 கிலோ எடையுடன் பிறந்த ஆண் குழந்தை. தமிழகத்தில் சுகப்பிரசவத்தின் மூலம் அதிக அளவு எடையுடன் குழந்தை பிறப்பது இதுவே முதல்முறை. என காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
          இப்படி அதிக எடையுடன் பிறப்பதற்கான சரியான காரணத்தை அறிய வேண்டியது மிக அவசியமானதாகும். சில நேரங்களில் இதுவே பிரச்சினையாகிவிடும் அல்லவா.

3.
காஞ்சிபுரம் பட்டில் தரம் குறைந்த ஜரிகையா?
        அசல் எது?  போலி எது? என்று கண்டு பிடிக்கத் தெரியாத அளவுக்கு அப்படியொரு நயம் பேச்சில் மயங்கி தான் மக்கள் காஞ்சி பட்டு எடுக்கிறாங்க. இது ரொம்ப பழைய சமாச்சாரம் தானே!
தொகுப்பு ; ந.க.துறைவன்.
*


பதில்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
இன்னும் எவரொருவராலும்              
முழுமையாக எழுதப்படவில்லை
எந்தக் கேள்விக்குமான பதில்.
*
Anyone who still
Is not completely written
No question and answer.

*

Monday, 15 August 2016

தந்திரங்கள்...!! ( ஹைபுன் )அசம்பாவிதமாக நடக்கின்ற செயல்கள் யாவும் அதிர்ச்சியைத் தருகி்ன்றது. அச்சம்பவங்கள் யாவும் எவருக்கும் அதிர்ச்சியாகத் தெரிவதில்லை. வேடிக்கையான சம்பவமாகவே பாவிக்கிறார்கள். அசட்டையான நடவடிக்கைகள் கண்டு கேலியாகப் பேசுகிறார்கள். இச்சமூக நிகழ்வுகள் யாவும் சர்க்கஸ் விளையாட்டு போன்று கண்டு களிக்கிறார்கள். அச்சம்பவங்கள் பற்றி கொஞ்ச நாள்கள் பேசுகிறார்கள். பிறகு, அதனை மறந்தே போகிறார்கள். மக்களின் இம்மனநிலையினை அறிந்துள்ள அரசியல்வாதிகள் சில இக்கட்டான சூழ்நிலையில், மக்களின் மனதை திசைதிருப்புவற்காக, இத்தந்திரங்களைப் பயன்படுத்தி வெற்றி காண்கிறார்கள்.
                                          
காலடி வைத்து திரும்புகின்றனர்
யார் என்றும் முகம் தெரியாது?
நிலாவிற்கு நினைவிருக்குமா?  

ந.க.துறைவன்.

Sunday, 14 August 2016

மௌனம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
நிர்மலமான பரந்த ஆகாயம்
எண்ணங்கள் கடந்த மனம்
வார்த்தைகளற்ற மௌனம்.
*
The vast sky clear
Thoughts mind over
Wordless silence.

*

இதழ்கள் சொல்லும் இனிய செய்திகள்.“ சாதி ஒழிப்பு என்பதை, ஏதோ கொசு ஒழிப்புபோல சுலபமாகப் பேச முடியாது. சாதி என்ற அமைப்பு அவ்வளவு எளிமையானது கிடையாது. சாதியை ஒழிக்க முடியாது. ஆனால், சாதியைக் கரைக்க முடியும். சாம்பாரில் உப்பைக் கரைப்பது போல, சாதி என்பது தன்னைத்தானே மறுஉற்பத்தி செய்துகொள்ளும். சாதி தோன்றியதற்கு எண்ணற்ற தியரி சொல்ல முடியும். நீங்கள் எந்தக் காரணம் சொன்னாலும் அதில் சிறிது உண்மை இருக்கும். எனவே, இப்படித்தான் இதனால்தான் சாதி தோன்றியது என்பதை முழுமையாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படிக் கண்டுபிடிக்க முடியாததாலேயே அது அழிக்க முடியாததாக இருக்கிறது ”
ஆதாரம் ; நாட்டார் ஆய்வாளர். தொ.பரமசிவன் நேர்காணல் - விடகன் தடம் – ஜுலை – 2016 – இதழ். பக்கம் – 11
தகவல் ; ந.க.துறைவன்.

*  

Saturday, 13 August 2016

ஆழ்ந்த அஞ்சலி.சினிமா பாடலாசிரியர். நா.முத்துகுமார் காலமானார்.

     அவருக்கும் அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும்
எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ந.க.துறைவன்.

செய்திகள் என்ன சொல்லுது?


1.
இலவசங்களால் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை?
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு.
      நல்லா சொன்னீங்க நாயுடு சார். இலவசமே ஒட்டு வாங்கத்தானே. கொடுக்கிறாங்க. இலவசம் வாங்குகிறவங்க. வாங்காதவங்க – இரு பிரிவா வேற மக்களை பிரிச்சில்லே வைக்கிறீங்க. அரசாங்கப் பணத்திலே இலவசமே கொடுக்கக் கூடாதுன்னா சட்டம் கொண்டு வரவீங்களா?
*
`2.
ஹிந்துக்களை பிரதமர் அவமதித்துவிட்டார்.
விஎச்பி மூத்த தலைவர் பிரவீண் தொகாடியா தாக்கு.
      நீ அடிக்கிற மாதிரி அடி. நான் அழற மாதிரி நடிக்கிறே என்கிற கதையா இல்லே இருக்கு. உங்க பேச்சு.
*
3.
சிபாரிசுகளுக்கு இடமில்லை.
பணிநியமனம், பணியிடமாற்றம் குறித்து பிரதமர் மோடி.
        பிர்தமர் சாப். உங்க நல்ல எண்ணம் புரியுது. ஆனா ,அதிகாரிங்க சும்மா இருப்பாங்களா. சொல்றது உங்க கடமை. கேட்கிறது அவங்க கடமையில்லேயே. அப்புறம் அவங்க பொழைப்பு என்னவாகிறது?
தொகுப்பு ; ந.க.துறைவன்.

*. 

இரவு...!! ( சென்ரியு )உடம்பைக் காணவில்லை
உணர்வு தெரியவில்லை
கரைத்து கொள்கிறது இரவு.

Thursday, 11 August 2016

பத்து கட்டளைகள்...!! ( துணுக்குகள் )அன்பே,
நீ என்னிடம் பத்து கட்டளைகள் கேட்டிருந்தாய்.
இது மிகவம் கடினம்
ஏனெனில் நான் எந்தவிதமான கட்டளைக்கும் எதிரானவன்.
ஆனாலும் அதையும் ஒரு தாமாஷுக்காக நான் சொல்கிறேன்.
1.
எந்த உத்தரவுக்கும் கீழ்படியாதே. உனக்குள்ளிலிருந்து எழுவதைத் தவிர.
2.
எந்தக் கடவுளும் இல்லை. வாழ்க்கையைத் தவிர.
3.
சத்தியத்தை வெளியே தேடாதே. அது உனக்குள்ளேயே இருக்கிறது.
4.
பிரார்த்திப்பது என்பது எதையும் நோக்கி அல்ல. அன்பாயிருப்பதே.
5.
சூன்யம் தான் சத்தியத்தின் வாசல், வழி, முடிவு. அதன் வெற்றி.
6.
வாழ்க்கை என்பது இங்கு இப்போது இருப்பதுவே.
7.
முழுமையான விழிப்புணர்வோடு வாழு.
8. நீந்த வேண்டாம். மித.
9.
ஒ்வொரு வினாடியும் இற. அப்போதுதான் ஒவ்வொரு வினாடியும் நீ புதுப்பிப்படுபவாய்.
10.
தேடுவதை நிறுத்து. அது எதுவோ, அது இதுதான், நில். பார்!.
ஆதாரம் ; ஓஷோவின் – ஒரு கோப்பைத் தேனீர் – நூல் – பக்கம் – 34 – 35.
தகவல் ; ந.க.துறைவன்.

*

புல்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
கொதிக்கும் பாறையின் மேல்
தென்னையின் நிழல்
கீழே இளைப்பாறும் புல்.
*
Boiling Rock
Coconut's Shadow
Resting at the bottom of the grass.

*  

Wednesday, 10 August 2016

சிவப்பழகு...!!1.
உள்ளங் கையில் மருதாணி சிவப்பழகு.
2.                                           
நெற்றியில் வாசமில்லாத ஸ்டிக்கர் பொட்டு.
3.
DATA உள்ள வரை POSTING போடு.
4.
லைக் – கைப் பார்க்காதே. – LIFE – பைப் பாரு.
5.
காலை வணக்கம் என்று கவிதைக்கு COMMENT போட்டார்கள்.
*

ஆன்மீக ரகசியம்...!!உண்மையில் பாலுணர்வு செயலானது ஒர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடக்கின்ற உரையாடல் அல்ல. அது ஆண் பெண்ணின் மூலமாக இயற்கையோடு கொள்கின்ற உரையாடல். அதே போன்று பெண்ணும் ஆணின் மூலமாக இயற்கையோடு கொள்கின்ற உரையாடல் ஆகும். காமம் என்பது இயற்கையோடு கொள்ளும் உரையாடல். காமத்தில் ஒரு சிறு நொடிப்பொழுது இந்த பிரபஞ்ச ஒட்டத்தோடு ஒன்றுபடுகிறீர்கள். இந்த முழுமையோடு ஒன்றுபடுகிறீர்கள். விண்ணுலகத்தோடு ஒத்திசைந்து இருக்கிறீர்கள். இப்படிப்பட்டதொரு வழியில் பெண்ணின் மூலமாக ஆண் நிறைவடைகிறான். ஆணின் மூலமாக பெண் நிறைவடைகிறாள்.
ஆதாரம் ; ஓஷோவின் – ஆன்மீக ரகசியம் – நூல் – பக்கம் – 68.
தகவல் ; ந.க.தறைவன்.

*

இதழ்கள் சொல்லும் இனிய செய்திகள்..1.
தெய்வம்தான் சாதியைக் காப்பாற்றுகிறது என்று இல்லை. தெய்வமும் அதைக் காப்பாற்றுகிறது. உண்மையில் சாதிதான் தெய்வத்தைக்
காப்பாற்றுகிறதே தவிர, தெய்வம் சாதியைக் காப்பாற்றவில்லை.
2.
திராவிடக் கட்சிகள் தோற்றுள்ளன என்பது உண்மைதான். என்னைக் கேட்டால் காந்தி, “ காங்கிரஸைக் கலைத்துவிடலாம் ”  என்று சொன்னதுபோல “ திராவிட இயக்கங்களைக் கலைத்துவிட்டு புது இயக்கங்கள் செய்யலாம் ” என்று சொல்வேன்.
3.
இறந்தோர்க்குச் செய்யப்படும் சடங்குகளில் தொட்டு வணங்கும் பழக்கம் நம்மிடையே உள்ளது. பிராமணர்கள் சவத்தைத் தொட்டு வணங்க மாட்டார்கள்.
ஆதாரம் ; ஆனந்த விகடன் “ தடம் ” – இதழ் – ஜுலை -2016.
தகவல் ; ந.க.துறைவன்.

*                           

Sunday, 7 August 2016

செய்திகள் என்ன சொல்லுது?1.
என்னை தனிமைப்படுத்த துடிக்கிறார் கருணாநிதி. – வைகோ குற்றச்சாட்டு.
       எப்பவுமே பம்பரம் தனியாகத் தான் சுத்தும் வைகோ.
2.
கைத்தறிப் பொருள்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்.
பிரதமர் மோடி வேண்டுகோள்.
        மோடி சாப் நீங்க உபயோகிக்கப்பதெல்லாம் கைத்தறி பொருள்கள் தானா? உண்மை சொல்லுங்க.
3.
ஜிஎஸ்டி மசோதா மக்களைவையில் இன்று தாக்கல்.
        இந்தியா முழுவதும் ஒரே வரி கொள்கை அமுலாகப் போகிறது. , அடுத்து வரப்போவது ஒரே மொழி, ஒரே கல்வி, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு, எல்லாமே ஒரே அலை வரிசையில் இயங்கப்போகிறது.
தொகுப்பு ; ந.க.துறைவன்.

*

புத்திசாலி...!! ( நகைச்சுவை )மனநல மருத்துவ நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர், வெளியில் வந்து பார்த்தபோது, தன் காரின் ஒரு டயர் காற்றுப் போய் இருப்பதைக் கண்டார்.

டயரைக் கழற்றியபோது அதன் நட்டுகள் சாக்டையில் விழுந்து விட்டன. அதனால், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, உள்ளிருந்து வந்த ஒரு நோயாளி, அருகில் வந்து,  ‘ பதிய டயரை மாட்டி, மற்ற சக்கரங்களிலிருந்து ஒவ்வொரு நட்டைக் கழற்றி, இதில்போட்டு விடுங்கள். அப்புறம் பழுது பார்க்கும் இடம் சரி செய்து கொள்ளலாம். அதுவரை தாங்கும் ‘ என்றான்.

டாக்டர் மகிழ்ச்சியடைந்து, அருமையான யோசனை, நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாரய்? ” என்று கேட்டார்.
“ நான் பைத்தியக்காரன், ஆனால், முட்டாளில்லை, ” என்றான் அவன்.
ஆதாரம் ; ஓஷோவின் “ ஆரம்பம் நீதான்!. ” – நூல் –பக்கம் – 200.
தகவல் ; ந.க.துறைவன்.

*

வாசம்

தெருவெங்கும் வீசியது
கோழிக்கறிக் குழம்பு வாசம்
இரூட்டில் தெரியவில்லை வீடு.


Saturday, 6 August 2016

செய்திகள் என்ன சொல்லுது?


1.
நல்லாட்சி என்பது மக்களின் குறைகளைக் கேட்பது மட்டுமல்ல, அவற்றுக்குத் தீர்வு காண்பதும் தான் ஜனநாயகத்தின் உண்மையான அடித்தளம். மத்திய அரசின் செயல்பாடுகளில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டி ஆட்சி நிர்வாகத்தில் பொதுமக்களும் பங்களிக்க வேண்டும்.  - பிரதமர் மோடி.
     பேச்சுக்கும் நடைமுறைக்கும் எங்கோ கொஞ்சம் இடிக்குதே! மோடி ஸாப்.
2.
ஹிந்து ஆன்மீக கண்காட்சி நடந்த நிகழ்வில்
10, 000 பேருக்கு துளசிச் செடி இலவசமாக வழங்கப்பட்டது.
       துளசிக் செடி இலவசமாக வாங்கிச் சென்றவர்களெல்லாம் யாருங்க?
3.
தூய்மை இந்தியா – திட்டம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும்.
வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்ஃ
        தூய்மை இந்தியா இன்னும் பாஜக இயக்கமாகத் தானிருக்குப் போல.
தொகுப்பு : ந.க.துறைவன்.
*

பேனா...!! ( சென்ரியு )

Senryu – Tamil / English.
*
கர்வம் பிடித்தது பேனா
காகிதங்கள் பற்றாக்குறை
கணினியில் எழுதும் பேரன்.
*
Haughty pen
Lack of papers
Grandson writing on the computer.

*

உணர்த்தல்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
பகிர்ந்துக் கொள்வதற்கு
பக்குவமான மனம் வேண்டும்
உணர்த்துகின்றன  பறவைகள்.
*
To share
Mature to be depressed
Birds are meant to.

*

செய்திகள் என்ன சொல்லுது?1
.அம்மா உணவகங்களில் 31.81 கோடி இட்லிகள் விற்பனை..
        அம்மாவின் சாதனை. தின்பவர்கள் சொல்வதோ வேதனை.
2.
மாநில அமைச்சர்களில் 34% பேர் மீது குற்ற வழக்குகள். 76% பேர் கோடீஸ்வரர்கள்.
        இவர்கள் தான் சுதந்திர இந்தியாவை ஆட்சி செய்கிறார்கள்.
3.
மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பு. – சீனா நம்பிக்கை.
       மோடியின் கை நாடியைப் பிடிச்சிப் பார்த்து நாடி ஜோசியம் சொல்கிறது சீனா.
ந.க.துறைவன்.      

*

Friday, 5 August 2016

சிகரங்கள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
பிரபஞ்ச செயல்களைக் கவனிக்கிறது
அசையாமல் நிற்கிறது உயர்ந்து
அமைதியான மலை சிகரங்கள்.
*
Listening to the Universe works
Stands Still Rising
Quiet mountain peaks.

*

செய்திகள் என்ன சொல்லுது?1.
படிப்படியாக மதுவிலக்கு அமல் உறுதி – அம்மா.
     அப்பத்தான் படிப்படியா போதை குறையும் மக்கா.
2.
பிரதமர் மன்மோகன்சிங் முடிவால் பலிகடா ஆக்கப்பட்டேன். – ஆ. ராசா.
      ராசா. கண்ணு. உன்னாலே நான் கெட்டேன். என்னாலே நீ கெட்டேங்கிற கதை சரியாத்தா இருக்கு. ஆனா, பலியாடு வெட்டுக்குப் பிறகு உறவெல்லாம் பங்குப் போட்டுக்கும் தெரியுமில்லே.
3.
31 – வது ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
       இந்திய வீரர்களே தங்கப் பதக்கம் வாங்கி குவிங்க. வெறும் வெள்ளி பித்தளைப் பதக்கத்தோடு வந்துடாதீங்க. நல்வாழ்த்துக்கள்.
ந.க.துறைவன்.

*

Thursday, 4 August 2016

உச்சநிலை...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
வாழ்வின் உச்சநிலை
பரிபூரணமாய் அடைந்து விட்டது
பூக்கள் பூத்த செடிகள்.
*
The culmination of life
Has become abundantly
Plants started to flower.

தரிசனம்...!! ( கவிதை )பணம் கொடுத்தால் பகட்டான தரிசனம்
இலவசம் என்றால் இன்னல் தரிசனம்.
*
விக்கல் எடுத்தால் யாரோ திட்டுகிறார்களாம்.
புரையேறினால் யாரோ நினைக்கிறார்களாம்.
*
தன் குறையை தானே அறியாதவன்.
அடுத்தவன் குறையைச் சுட்டுகிறான்.
*
ஒருவர் இல்லாதபோது அவரைப்பற்றி பேசுகிறார்கள்.
ஒருவர் இருக்கும்போது ஏதுவும் பேசுவதில்லை.
*
தேனீர் உதட்டில் வைத்து குடிக்கிறார்கள்.
குளிர்பானம் குழாய் வைத்து குடிக்கிறார்கள்.
நேரம் தமிழில் கேட்டான்
ஆங்கிலத்தில் பதில் சொன்னான்.
ந.க.துறைவன்.

*

தாய்மை...!!

ஆசையாய் கேட்டதும்
முகத்தோடு சேர்த்து அணைத்து
முத்தம் கொடுக்கும் அம்மா.

ந.க.துறைவன்.

அன்பு...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
புத்தர் உள்மனதில் சிரித்தார்
ஒவ்வொரு நொடியும் அன்பு
நேசிக்கிறது உலகம்.
*
Buddha laughed at within
Love every moment
The world loves.

*

Wednesday, 3 August 2016

பதஞ்சலி பாதங்களில் மிதிபடுகிறார்...!!


*
பாஜக, ஆர்எஸ்எஸ் கட்சிகள் ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்ற கட்சிகளாகும். தியானம் யோகம், வழிபாடு போன்றவற்றை முதன்மைப்படுத்தி செயல்படுகின்ற கட்சிகளாகும். இவர்கள் ஆன்மீகக் குருமார்களை மிகவும் போற்றி வணங்குகின்றவர்கள். சமீப காலமாக, வடஇந்தியாவின் மகாகுரு என்று போற்றப்படுகின்ற யோகி பாபா ராம்தேவ், அவர்கள் நடத்தி வரும் நிறுவனம் உற்பத்தி செய்கி்ற ஆயுர்வேத மருத்துவம் மற்றும் உணவுப் பொருள்கள் “பதஞ்சலி”  என்ற பெயரை இணைத்துக் கொண்டு பல பொருட்கள் வெளிவருகின்றன. அவைகள் வடஇந்தியாவில் மிகப் பெரிய சந்தைப் பொருட்களாகவும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகச் சொல்கிறரா்கள். பத்திரிகைகளில் அதிக அளவில் விளம்பரங்களும் வெளியாகி வருகின்றன.
அண்மையில் செருப்பு, காலணி விளம்பரம் ஒன்று தமிழ் நாளிதழில் காண நேரிட்டது. அதற்கும் ” பதஞ்சலி செருப்பு ” என்று பெயர்  வைக்கப்பட்டிருப்பதாக அந்த விளம்பரம் கூறுகிறது.
வரலாற்று சிறப்பு மிக்க தொன்மையான ஆன்மீகத்திற்கு பெரும் தொண்டாற்றிய பதஞ்சலி யோகியின் நினைவிடம் தமிழகத்திலே இருப்பதாக தலவரலாறுகள். கூறுகின்றன.
மனிதன் மெய்ஞானம் பெற்று உய்வதற்கும், அவன் உடல்நலம் பெற்று ஆரோக்கியமாக வாழ்வதற்கும் அவர் மெய்ஞானத்தால் கண்டறிந்து இயற்றி உலகிற்கு அளித்தத் தொகுப்பு நூல் தான் “ பதஞ்சலி யோகச. சூத்திரம் ” என்ற இலக்கண நூலாகும். ஆன்மீக உலகமே போற்றி புகமும் நூலாகும்.
தியானம் கற்பவர்கள் யாராயினும், ஆன்மீக ஆய்வு செய்வர்கள் யாராயினும் பதஞ்சலி தான் அவர்களுக்கு முதன்மை குருவாகத் தெரிவார். அவரிடமிரு்ந்து தான் தொடங்க வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட ஒரு மகானின் பெயரில் வியாபாரம் தொடங்கி விற்பனையில் கோடிகளைக் குவிக்கும் பாபா ராம்தேவ் தயாரிக்கும் செருப்புக்கு கூட பதஞ்சலியின் பெயரை வைத்து வெளிட்டு வருகிறார் என்றால், பதஞ்சலியை அவமானப் படுத்துவதாக, கேவலப்படுத்துவதாக அமைந்துள்ளது அவரின் செயல்பாடுகள்.
இவற்றையெல்லாம் ஆன்மீகவாதிகள் அரசியல்கட்சகள, பாஜக, ஆர்எஸ்எஸ், பாஜக மத்திய அரசு அறியாதவர்களா என்ன? அறிந்து தானே கோடிக்கணக்கான ரூபாய் செலவில் அவ்விளம்பங்கள் வெளிவருகின்றன.
இவர்களெல்லாம் பதஞ்சலி யோகியையப் போற்றுகிறார்களா? அவமானப்படுத்தி தூற்றுகிறார்களா? யோக சூத்திரம்  நூலின் வழி? யோகம் தியானம் கடவுளைக் காணுதல் போன்றவற்றைக் கற்றவர்கள் குருவையே நித்திக்கிறார்கள். என்று புரியவில்லையா?. தெரியவில்லையா?. ஆளும் கட்சியான பாஜக, “ பதஞ்சலி செருப்பு ” என்று பெயருடன் வெளிவந்தள்ள விளம்பரத்தை இன்னும் காணவில்லையா? அரசின் அங்கீகாரத்ததுடன், பொருட்கள் அனுமதியுடன், அ,ஃக் மார்க் முத்திரையுடன் தானே வெளிவர வேண்டியிருக்கும்.
யோகா குரு ராம்தேவ் அவர்களின் இச்செயல்பாடுகளை மத்திய பாஜக அரசு கவனிக்குமா? தகுந்த நடவடிக்கை எடுத்து பதஞ்சலி முனிவரின் நற்பெயகை் காப்பாற்றுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

பதஞ்சலியின் பெயரைப் பாதங்களின் கீழ்போட்டு மிதிக்காதீர்கள்.
ந.க.துறைவன்

*                       

வைர வரிகள்...!!

.
1.
எதை செய்தால் சந்தோஷம் வருமோ அதைச் செய்க. எதைச் செய்தால் துன்பம் வருமோ அதைச் செய்யாதிருங்கள்.
2.
கெடுதல் செய்வதால் யாரும் உண்மையில் பலனடைவது இல்லை.
3.
அதிகாரத்தால் போடப்படும் எந்த ஒரு சட்டமும் நீண்டநாள் இருந்ததில்லை.
4.
புலன்களின் மகிழ்ச்சி என்பது துன்பத்தின் கோட்டைக் கதவுதான்.
5.
மகிழ்ச்சியின் அடிப்படைக் குணம் அமைதி.

ஆதாரம் ; தவத்திரு தலாய் லாமாவின் - பழமையான ஞானம் பதுமையான உலகம் – நூல்

தகவல்: ந.க.துறைவன்.