Labels

Haiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (20) கலை (1) கவிதை (332) கவிதை. (7) கவிதைகள். (7) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (2) குறுங்கவிதைகள் (12) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (55) ஹைபுன் (48)

Monday, 9 September 2013

காரசாரம்

ரசிகர்கள் காத்திருந்தார்கள் வெகுநேரம்
துவங்கிய அன்றைய தலைப்பிலான
பட்டிமன்ற விவாதமோ காரசாரம்.

பேச்சு என்பதொரு பரிமாற்றம்
என்ன பேசுகிறார்கள் என்று புரியாமல்
அவனுக்கோ ஏற்பட்டது தடுமாற்றம்.

பெண்ணின் உடல் அழகு நளினம்
பார்த்தவர்களைக் கவர்ந்தது
லாவகமாய் ஆடிய குச்சுபுடி நடனம்.

நண்பர்களுக்கு எல்லாமும் சம்மதம்
திருமணத்திற்குப் போவதற்காகப்
பயணத்தால் ஏற்பட்டது சற்று தாமதம்.

இளைஞர்களுக்கு புதிய வழிகாட்டு
உதவி என்று கேட்பவர்க்கு
உற்சாகமாய் நேசக்கரம் நீட்டு

உப்பு கரித்தது உதடு

இனிக்குமென நினைத்து
முத்தமிட்டான்
உப்பு கரித்தது உதடு.

பலரும் பாராட்டினார்கள்
பாட்டியின்
நாட்டு(கை) வைத்தியம்.

எழுபது வயது முதியவர்
நகைச்சுவை எழுதி அனுப்பினார்
பரிசாக் கிடைத்தது “டீ” சர்ட்.

ஒலி எழுப்பிப் பார்த்தார் ஓட்டுநர்
அசைந்து நகரவில்லை
பாதையின் குறுக்கே எருமை.

காலையில் மார்க்கெட் போகிறது
காரில் சொகுசாய்
வளர்ப்பு நாய்க் குட்டி.

ஜல்லிக்கட்டுப் போட்டியில்
தங்கப் பதக்கம் வென்றவன்
குடும்பவாழ்க்கையில் தோல்வி.

காற்றில் மிதந்து வந்தது
மூக்கைப் பொத்தினார்கள்
தோல் கழிவுநீர் நாற்றம்.

அபாரமான பயிற்சி
குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறது
மோப்ப நாய்கள்.

“தண்ணி வண்டி” என
குழந்தைகள் கேலி செய்தனர்
போதையில் போகும் குடிகாரன்

தங்கம் விலை தெரியுமா?
தங்கத் தேரில்
பவனிவரும் சாமிக்கு.

குடிநீர் தொட்டியில் விழுந்து
தற்கொலை செய்துகொண்டது
குதித்து விளையாடிய அணில்.

மனிதர்களால் இயலவில்லை
கள்ள நோட்டைக்
கண்டுபிடிக்கிறது கருவி.

உண்ணாமுலை

கனிந்திருக்கிறது
முலை
முனையில்
கருந்திராட்சை.

சின்ன முலை
பெரிய முலை
சரிந்த முலை
சாய்ந்த முலை
நிமிர்ந்த முலை
அம்சமாய்
பால் சுரக்காத
நாயுடுஹால் முலை.

யோனிகள் பற்றி
முலைகள் பற்றி
முனைப்புடன்
கவிதை முழங்கிய
கவிஞர்கள் எல்லாம்
இப்பொழுது
முழங்குவதை நிறுத்தி
முடங்கிப்போய்விட்டார்கள்
அவர்களிடம்
வற்றிவிட்டது பால்
மறந்து விட்டது குழந்தை.

மூலஸ்தானத்தில்
சிலையாய் நின்று
பக்தர்களுக்கு
அருள் பாலிக்கிறாள்
திருவண்ணாமலையில்
அண்ணாமலையின்
அருகில்
அம்மை
உண்ணாமுலை

பார்வை

பாதையில்
நடந்துக் கொண்டிருந்தவன்
திரும்பித்திரும்பிப் பார்த்தான்
எதற்காகத் திரும்பிப்
பார்க்கிறான் என்று
புரியவில்லை
பிறகுதான் தெரிந்தது
பின்னால் யாரோ
அழகானப் பெண் வருவது
அவன் பார்வை
மீண்டும் பின்னால்
முன்னால் இல்லை
வேகமாய் எதிரில் வந்த
மோட்டார் பைக்காரன்
“முன்னால பார்த்துப்போடா
முண்டம்
வீட்டுலே சொல்லிட்டு
வந்துட்டியா?” என்று
கத்தினான்
அப்பத்தான்
சுய நினைவுக்கு வந்தான்
வெட்கத்துடன்
வியர்த்துக்கொட்டியது
அவன் முகம்.

மயிலிறகு விசிறி

இயற்கையின் அற்புதம்
விலங்குகள் உணர்ந்துள்ளன
அருவிச் சாரலின் குளுமை.

மழைக்கு ரொம்ப பிடிக்குமாம்
குன்னக்குடியின்
அமிர்தவர்ஷிணி ராகம்

சுவாமிக்கு களைப்பு
வியர்க்கிற தென்று
வீசுகின்றனர் சாமரம்

தேர்ந்த கற்களையே
கனவு காண்கிறது
சிற்பியின் மனம்

எப்பொழுது பார்க்க வாய்க்குமோ
ஸ்ரீவில்லிப் புத்தூர்
அணில் சரணாலயம்

அந்த ஓவியம் பார்க்க பார்க்க
எத்தனை அர்த்தம் வெளிப்படுத்துகிறது?
ஓவியர் பாஸ்கரனின் பூனை.

புயல் வருகிறதே யென்று
துக்கப்படுவதில்லை
தும்பைப் பூக்கள்

படித்துக்கொண்டிருந்தேன்
புத்தகத்தின் மீது விழுந்தது
மனைவி முகத்தின் நிழல்

முதலைகள் எதுவுமில்லை
பாதுகாப்பான கோட்டை
அகழியில் படகு சவாரி

விளையாட்டுப் பொருளாய்
குழந்தையின் கையில்
மயிலிறகு விசிறி

வயல்வெளிகளில்
எங்கும் கிணறுகள் இல்லை
நீச்சல் பழக

மனஸ்தாபம்

முரண்பாடுகளால்
மனதிற்குள் மௌனமாக
முளைத்து வளர்கிறது
மனஸ்தாபம்
பணம் கொடுக்கல்வாங்கல்
பரிமாற்றத்தாலோ!
பூடகமாய்ப்
பேச்சில் தெறிக்கும்
உஷ்ணத்தினாலோ
அணுகுமுறையில் வெளிப்படும்
வித்தியாசத்தினாலோ
அவரவர்களுக்குள்
மனஸ்தாபம் உண்டாகி
மனம் முறிந்து
வளர்கிறது பகைமை.
மனஸ்தாபம்
கொண்டவர்களைப்பார்த்து
மற்றவர்கள் புன்சிரிப்புடன்
இன்னொருவருடன்
பகிர்ந்துகொள்வார்கள்
ரகசியமாய்.
மனஸ்தாபம்
மண்புற்றாய் வளர்வதால்
மனம் குழம்பித் தடுமாறி
கனல்கிறது நெஞ்சில்
வெறுப்பின் நெருப்பு
மனஸ்தாபம் கொண்டு
விலகியவர்க்குச்
சமாதானமாய்
பலரும் காட்டுவர்

அனுதாபம் பலவிதமாய்.

தம்பி பாலா!


ஈழத்தமிழர்த் தலைவனின்
வேழ முகத்து புதல்வனே
தமிழ் இளஞ்சிங்கமே
தம்பி பாலா!
கற்கும் பள்ளி வயதில் – நீ
குற்றம் ஏதும் செய்திடலையே
அப்பாவிக் குட்டிப் பாலகனே
தம்பி பாலா!
கருணையற்ற கொலை வெறியர்
துப்பாக்கிக் குண்டுக் கிரையாகி
உயிர் துறந்த இளங்கன்றே
தம்பி பாலா!
கண்களிலே கனவுத் தேக்கி-ஈழ
மண்ணை மீட்பதற்காய் என்ன
திட்டங்கள் வைத்திருந்தாய்
தம்பி பாலா!
நேசித்த உலகத் தமிழரெல்லாம்
வசித்த பூமியில் உறங்கும்
உனக்காக அஞ்சலி செய்கிறது
தம்பி பாலா!
கனவுகள் வெல்லும் பாலா
காட்சிகள் மாறும் பாலா-நாளை
மலரும் ஈழ மண்ணில் நீடுழி
வாழ்வாய் தம்பி பாலா!!


கச்சத்தீவு


இந்திய இலங்கைக் கடல் நடுவிலே
இருப்பது எங்கள் கச்சத்தீவு
இயற்கை அழகு எழில் கொஞ்சும்
இந்தியச் சொத்துக் கச்சத்தீவு.
இந்திய மீனவர் மீன் பிடிக்கவும்
வலைகள் உலர்த்தி ஓய்வெடுக்கவும்
கடல் அன்னையைத் தொழுது வணங்கவும்
உரிமை யுள்ளது கச்சத்தீவு
எல்லை மீறா எங்கள் மீனவர்க்குத்
தொல்லைக் கொடுக்கும் சிங்கள ராணுவம்
துப்பாக்கி முனையில் நாளும் மி(வி)ரட்டியே
அப்பாவிகளைச் சுட்டுக் கொல்வதோ?
பரஸ்பர ஒப்பந்த நெறிமுறையினை
பண்புடன் மதியா இனவெறிய(ர்)ன்
பக்சே கும்பல் அத்துமீறிக் கச்சத்தீவில்
ஆதிக்கம் புரிவது பெரும் ஆணவமே
அன்னிய நாடுகள் தீவில் புகுந்து
கண்காணிப்பு பணியினை செய்வதோ?
தீவின் பசுமைப் பரப்பைக் கையகப் படுத்தி
தீவிர ராணுவத் தளங்களை நிறுவுவதோ?
இந்திய இறையாண்மைக் கெதிரான
எதிர்வினைச் செயல்களை முறியடிப்போம்
வளமான எம்மண் கச்சத்தீவை – இன்று

உளமாற மீட்பதொன்றே உரியத் தீர்வாம்!

Wednesday, 4 September 2013

வாழ்வின் ரகசியம்


விதைக்கு
மரம் தெரியாது
கடலுக்குப்
பூமிதெரியாது
மலைக்கு
விண்ணைத் தெரியாது
உயிருக்கு
உடலைத்தெரியாது
மனத்திற்கு
ஆன்மா தெரியாது
எதற்கும் எதுவும்
தெரியாமல் இயங்குவதோ
வாழ்வின் ரகசியம்

 மற்றவர் குறையறிந்து
பரிகாசம் செய்வதென்பது
பலரின் பொழுதுபோக்கு
வம்பளப்பு
யாரும்; யாருக்கும்
எதுவுந்தெரியாமல்
சாடைமாடையாய்
பரிகாசம் செய்கிறார்கள்
பேசுகிறார்கள்
பரிகாசம் எனும்
வன்மொழி
பிரியமான
சிட்டுக் குருவிகளுக்குப்
புரியுமா என்ன?

 முடித்திருத்தகம் கடையின்
மூலை முடுக்கெல்லாம்
தொங்கும்
பாலியல் படங்கள்
நாவிதருக்குத் தெரியுமோ?
நாடிவரும்
வாடிக்கையாளரின்
மன இயல்
உளவியல்.

 -கவிதா மண்டலம்-இதழ்

 சூன் 2012

பிரபஞ்ச ரகசியம்


*உலகில் வாழும் மானுடத்தின்
உண்மை ரகசிய மெல்லாம்
உனக்குத் தெரியுமா?
தெரியுமென்றால்,
அது அகந்தை
தெரியாது என்றால்,
அது தன்னடக்கம்
பிரபஞ்ச ரகசியம்
உணர்வது அவசியம்!

 

** எது, எதை, எப்படி
எடைபோட வேண்டுமென்று
நிர்ணயித்துள்ளவன் நீ
தங்கத்தை எடைபோட
குன்றிமணியை அல்லவா
பயன்படுத்த வைத்தாய்
இப்பொழுதோ
தங்கம் விலை உயர்வானது
குன்றி மணி விலை குறைவானது!

 

***எது தீட்டானது?
உங்கள்
உடலா? ஆன்மாவா?
பாதையோரம் ஒதுங்கி நின்று
புலையன் கேட்டக் கேள்வி
ஆதிசங்கரரை அதிர வைத்தது
இவர்களில்
யார் ஞானி?
யார் அஞ்ஞானி?

 ***ஆசைகள்
அழிவதில்லை
நாமே
அழிகிறோம்

 
கவிதா மண்டலம்-இதழ்
அக்டோபர் 2012.