Labels

Haiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (20) கலை (1) கவிதை (332) கவிதை. (7) கவிதைகள். (7) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (2) குறுங்கவிதைகள் (12) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (55) ஹைபுன் (48)

Wednesday, 29 January 2014

யார் நீ?


நீ
யாராகவும்
இருந்ததில்லை.
நீ
யாராகவும்
இருக்கவில்லை.
நீ
யாராகவும்
இருக்கப் போவதில்லை.
நீ
நீயாகவே தான்
இருக்க முடியும்.
நீ என்பது
யார்?

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

*காற்றில் பறக்கவில்லை
வாயில் கரைந்தது
பஞ்சு மிட்டாய்.

*நகரக் குளிர் பானக் கடையில்
கோலி சோடா கேட்டு
அலைந்தார் கிராமவாசி

*உண்மையை மறைத்து
கையடித்துச்
சொல்கிறார்கள் பொய்
.
*அரசியலாகி வட்டது
அரும்பும் மொட்டுக்களின்
இன்றையக் காதல்
.
கொதித்து அழுகிறது
சூடேறிய
குளிர்ந்தத் தண்ணிர்

முள் குத்தி
காயம் பட்டது
சைக்கிள் டயர்.


Tuesday, 28 January 2014

முதல் போராளி.

 எமன்
அதிர்ந்துப் போனான்
நிசிகேதா,
நான் சொல்வதைக்கேள்
என்னிடம்
எதைவேண்டுமானாலும் கேள்
மரணத்தைப் பற்றிய
மர்மம் மட்டும் கேட்காதே
மன்னிக்க வேண்டும்
அய்யனே,
மரணம் என்றால்
என்னவென்று
அறியாமல் இங்கிருந்து
அகல மாட்டேன் என்று
நிசிகேதன்
மூன்று நாட்கள்
உண்ணாவிரதம் இருந்தான்
சத்தியாகிரகம் செய்தான்
இந்த
இளைஞன்தான்
எமனிடம்
உபதேசம் பெற்ற
முதல்சீடன்
வேத இலக்கியத்தில்
உண்ணாவிரதமிருந்த

முதல் போராளி.

வெட்கம்*பார்த்தவர்களை
பார்க்கவில்லை என்று
பொய் சொல்கிறது கண்கள்

*பெண்ணின் புன்னகைக்குள்
புதைந்திருக்கிறது
வேதனைப் புதையல்.

*குறுஞ் செய்தி
தொடர்பில் காதலர்கள்
வெட்கத்தில் எழுத்துக்கள்.
Friday, 24 January 2014

ஆசை

மனிதன் பேசும் மொழியைப்
புரிந்துக் கொள்கிறது
வாலாட்டிப் பேசும் நாய்.

நெடு நாட்களாக அப்பாவின்
நிறைவேறாத ஆசை
காசி யாத்திரை.

உள்ளுரிருந்துககொண்டே
உருப்படியாய்ப் பார்க்காத இடம்
மத்திய சிறைச் சாலை.

எந்நாட்டையேனும்
பொசுக்கிடத் துடிக்கிறது
உறங்கும் அணு ஆயுதங்கள்

உழைப்போரின் மூச்சுக்
காற்றை வெளியேற்றுகிறது
தொழிற்சாலைப் புகைப்போக்கி
.
பிரபஞ்சத்தில்
ஆற்றல் மிக்க கணிப்பொறி

மனிதனின் மனம்.

Thursday, 23 January 2014

உன்னதம்

ஃ பெண்ணைத் தேடு
காதலி
காதலை உணர்
அனுபவி.
காதல் உன்னதம்
உடலின் பேரின்பம்
வென்றவர்க்குத்
தென்றல் காற்று
தோற்றவர்க்கோ
டும்புயல்! !

ஃ நீரில்
எரிந்தக் கல்
வட்ட வட்ட
அலைப் பரப்பி
கரைத் தொட்டுத்
திரும்புகிறது
காதலி,
வீசியப் பார்வை
கனவில்
வந்து வந்து
போகிறது! !

ஃகாதல், கனவு
நனவு, வாழ்வு
மரணம்
இந்த உலகிற்கு
நாம், வந்தவேளை
முடிந்து விட்டதோ?
உதிர்ந்தப் பூவாய்
மண்ணில்! ! !


Wednesday, 22 January 2014

கோமாளிகள்


வாசல்கேட்டில்
எப்பொழுதும் காத்திருக்கிறது
தபால் பெட்டி.
கடிதம் இருக்குமாவென
தினமும் திறந்துப் பார்ப்பது
வழக்கம்.
காலை நேரங்களில்
தவிட்டுக் குருவிகள்
தபால் பெட்டி மீது
அமர்ந்தும் பறந்தும் 
கொஞ்ச நேரம்
விளையாடிப் போகும்.
அவ்வப் போது தெருவில்
பந்து விளையாடும்
குசும்புக்காரப் பையன்கள்
அப்பெட்டியில்
எப்பொருளையேனும்
போட்டுக் கலாய்த்துக்
குறும்புத்தனம் செய்வர்.
ஓர் தினம் பெட்டியைக்
கவனமாய்த் திறந்துதேன்
உள்ளே
வண்ண அட்டைகளில்
முதியவர்களை,பேண்களை,
சிறுவர்களை,வீடுகளை,
குருவிகளை,விலங்குகளை,
ஸ்கெச்சில் வரைந்தக் 
கோமாளிச் சித்திரங்கள்
அச் சிறுவர்களின் கிறுக்கல்
சித்தரிப்புகளைப் பாராட்டிய
என் உதடுகள் மெல்ல
உதிர்த்தது புன்சிரிப்பு.

அழுகை நிறுத்தி

ஃ உலகத் தகவல்கள்
கைவிரல் நுனியில்
உள்ளூர் செய்திகள்
உடனுக்குடன்
ஒரு நொடியில்
இன்று, குடும்பத்தில்
என்ன நடந்ததென்றத்
துயரச் செய்தியே
தெரியாமல்போனது
அவனுக்கு
உறவினர் வந்து
தகவல் சொன்ன
விநாடி வரை

ஃ புகழ்பெற்ற பாலாறு
நீரின்றி அழுகிறது
மணல்வெளிவாழ்
நத்தைகள்
மரணித்து வீழ்கிறது
மழையே வருக
ஆறு நனைக
நீர் நிறைக

ஃ அழுதக் குழந்தையை எடுத்து
அணைத்து முத்தமிட்டபோது
கன்னத்து சிறுசிறு
ரோமங்கள் கிசுகிசு மூட்டிக்
குத்திய சொர சொரப்பான
உணர்வின் சிலிர்ப்பில்
என்ன சுகங்கண்டதோ?
அழுகை நிறுத்தி
மெல்ல சிரித்து, என்
கையிலிருந்து இறங்கி
வேகமாய் ஓடியது
வெளியில் விளையாடும்
துணைக் கிடைத்த தெம்பில்

பாடுபொருள் நீயெனக்கு....!

பனிமலை காஷ்மீரும் பகலவனை அதிகாலை
பணிவாக வணங்கும் தென்குமரி தேவியும்
கனிவளமும் நதிவளமும் முக்கடல் வளமும்
கனிமங்கள் வளமும் கொண்ட தாயே,
கொஞ்சும்எழில் தாஜ்மகலும் சாய்ந்த கோபுரமும்
கொட்டும் மழை சிரபுஞ்சி அதிசய அழகே,
தஞ்சையில் மணிநெல்லும் பஞ்சாபில் கோதுமையும்
தன்னிறையாய் விளைவிக்கும் தாயே போற்றி !
விவசாயப் புரட்சியும் விண்கலன் எழுச்சியும்
வேதாந்த சிந்தனையும் கண்டு தெளிந்து
நவநவமாய் புதுமைகள் புனைந்து உலக
நாடுகள் வியந்திட முன்னேறும் என்னாடே,
பன்மொழிகள் சமயங்கள் சாதிகள் வேறெனினும்
பண்பால் ஓர்நிறையாய் வாழ்வோர் இதயம்
புண்ணாகும்வன்முறை எதிர்த்(து)அன்பால்ஆள்பவளே
பாடுபொருள் நீயெனக்கு பாரதத் தாயே !

Tuesday, 21 January 2014

விலகல் வி


வெட்ட வெளியில்
பறந்துத் திரியும்
தும்பிகள்
முகத்தருகே வந்து
யாரோடும் பேசாமல்
விலகி  விலகிப்
போகிறது தொலைவாய்,
தன் காதலைச் சொல்லவோ
ஓரு முத்தம் பெறவோ
மலர்களை நெருங்கியும்
விலகியும் மீண்டும்
நெருங்கியும் பறக்கிறது
வண்ணத்துப் பூச்சிகள்
எந்நேரமும்,
அண்மித்துப் பேசிக்
களித்திருந்தக்
காதல் கிளிகள்
அருகே வந்தமர்ந்த
காக்கையைப் பார்த்து விட்டு
வெட்கிப் பறந்தன 
இன்னொரு மரந்தேடி,
மறைவிலிருந்தப்
பூனைகள்
ஏதோவொரு
சத்தங்கள் கேட்டு
பயந்துப் பதுங்கி
விலகியோடின
வேறொரு மறைவிடந்தேடி,
பூங்காவிற்குள்
இவ்வளவு நேரமாய்
மனங்கசிந்துருகிப்
பேசிக் கொண்டக்
காதலர்கள் எழுந்து
மௌனமாய்
விலகிப் போனார்கள்
வெளியே,
இப்படி
எந்த ஜீவராசிகளிடமும்
ஆட்கொண்டிருக்கிறது
இந்த
விலகல் விதி.

சம்பிரதாயம்


இடைவெளிக்குப் பிறகு
சந்தித்துக் கொள்ளும்
நண்பர்கள்
என்னடா,
நல்லா யிருக்கியா?
இருக்கேன்.
நீ எப்படி யிருக்கே?
இருக்கேன்.
இருவருமே
நல்லாயிருப்பதாகவே
அன்பாகப் பேசிக் கொண்டு
மெல்லியப் புன்னகையை
உதிர்க்கிறார்கள் கைக் குலுக்கி,
சம்பிரதாயமாக
நலம் விசாரித்துப் 
பரிமாறிக் கொள்வதிலும்
நிலவுகின்றதொரு
மனத் திருப்தி. 

Saturday, 18 January 2014

தெரியுமா?

 அழகழகாய்
ஆடையணிந்துப் பழகி
இந்த உடல்
இறப்புக்குப் பின்
அரைஞான் கயிற்றையும்
அறுத்தெறிந்து
நிர்வாணமாய்
குழியில்போட்டு
மூடிவிடுகிறார்கள்
அல்லது
எரித்துவிடுகிறார்கள்
மரணித்தவன்
ஏழையா?
பணக்காரனா?-என்பது
மண்ணுக்குத் தெரியுமா?

 மழையில்
நனைந்துக் குளித்து
மன அழுக்குகள் நீக்கி
எத்தனை உற்சாகமாய்
பூத்திருக்கிறது
அந்தப் பூக்கள்
உலகத்

துயரமெல்லாம் மறந்து.

முலைப் பால்


சிவந்து எரிந்துக்
காந்தியது கண்கள்
எரிச்சல்
திறந்துப் பார்ப்பதற்கே
சிரமப் படுத்தியது.
இருவிழிகளை
முடிப் படுத்துறங்கி
ஒய்வெடுத்தும்
உறுத்தி வதைத்தது
வலி.
அவசரத்திற்கு அருகில்
கண் மருத்துவ மனை
ஏதுமல்லை.
எப்படியிருக்கிறதென்று
அம்மா,வந்து வந்து
கேட்டுப் போவாள்.
அக்கம் பக்கத்தில்
யார் யாரிடமோ
அவசர சிகிச்சைக்கு
ஆலோசனைக் கேட்டாள்.
யாரோ வொரு
கைவைத்தியம் தெரிந்தப் 
பாட்டி
அப்படியா?
கொஞ்சம் இரு-என்றாள்.
சிறிது நேரத்தில்
உள்ளே நுழைந்தவள்
கண்ணா,
கண்ணைத் திறடா-என்றாள்.
முந்தானை மறைப்பில்
பாலாடையிலிருந்தப்
பாலைக் கண்களில்
துளித் துளியாய் விட்டாள்.
சில்லென்று குளிர்ந்து
முதல் உதவி செய்தது
பிரசவித்தப் பெண்ணின்
முலைப் பால்.

நிகழ்காலம்

யார் உனக்கு அழகிய
பெயர் வைத்தது?
மானிடர் விரும்பும் பூவே....

சிரிப்பின் அலைகள்
உணர்த்தும் சந்தோஷம்
துக்கம் மறந்த மனம்.

நதியில் மிதந்து மிதந்து
வாழ்நாளைக் கழிக்கிறது                               
கரையேறாத ஓடம்.

இரகசியங்கள் இருளில்தான்
ஜனிக்கின்றன
யார் பார்வைக்கும் படாமல்...

நிகழ்காலம் நம்மிடம்
அற்புதமான வாழ்க்கை

கணந்தோறும் இருப்பில்....

தவறுகள்

தவறுகள்
தவறுகள் செய்வது
மனித இயல்பு
பல நேரங்களில்
எதிர்ப்பாராமல்
நிகழ்வதுண்டு.
சில தருணங்களில்
சூழ்நிலைகளில்
சிக்கல்களில்
பலரது முன்னிலையில்
தெரிந்தே தவறுகள்
நேர்ந்து விடுவதுண்டு
தவறுகள்
செய்ய விரும்பாமல்
ஜாக்கிரதையாயிருந்து
தவறுகள் நேர்வதைத்
தவிர்க்க நினைக்கிறார்கள்.
தவறுகள் செய்கிறவன்
தொடர்ந்து
தவறுகள் செய்பவனாகவே
இருக்கிறான்.
தவறுகள்
செய்யப் போகிறவனுக்கு
தவறுகள்
செய்யாதே என்று
தவறுகள் செய்பவனே
புத்திமதிகள் கூறினால்
அவன்
தவறுகள்
செய்யாமவிருந்து
தப்பிக்க முடியுமா?
தவறுகள் செய்திடும்
கணினியின் தவறை
மனிதன் திருத்துகிறான்.
மனிதன் செய்திடும்
மனிதத் தவறை
யார் திருத்துவது?
இயற்கை
தவறு செய்து விட்டதாக
எங்கேனும்
நீதி மன்றத்தில்
தீர்ப்பு வழங்காமல்
வழக்கு
நிலுவையில் இருக்கிறதா?
சொல்லுங்கள்.Tuesday, 14 January 2014

வைரஸ்

வைரஸ் தாக்கியும்
டாக்டரை அணுகியதில்லை
கம்ப்யூட்டர்கள்.

விண்மீன்கள்
நீந்தி விளையாடின
ஆற்றுநீரில்...

சில மணித் துளிகளேனும்
உணர்ந்திருப்போமா?
மலர்களின் மௌனம்.

உயிரோடும்; இறந்த பின்னும்
நிலைத்திருப்பது எது?
அவரவருடைய பெயர்.

அணில்களின் பிரியமான
விளையாட்டை ரசித்து
பூக்களுக்குச் சிரிப்பு.

மரங்களற்ற
வெட்ட வெளியில்

நிழல் தேடும் மைனாக்கள்.

நவீன சுவடி


அம்மாவின் மேல் வெறுப்பு
ஆறாதது ரணம்
இகழ்வது உரிமை    
ஈக்களைக் கொல்
உடையைக் குறை
ஊக்க  மருந்து உண்
எளிமையை கைவிடு
ஏமாற்றிப் பிழை
ஐயம் கொள்
ஓற்றுமைச் சீர்க்குலை
ஓய்வை விரும்பு
ஓளடதமே உணவு
ஃ பயன்படாத அடுப்பு
      -பாட்டியும் பாட்டனும்
      இப்பேரனை மன்னிக்கட்டும்.


எதிர்ப்பார்ப்பு

எதிர்ப்பார்ப்பு
பழையன கழிதலும் 
புதியன புகுதலுமாய் 
புதிது புதியதாய்
எதிர்ப்பார்ப்புகளை 
உருவாக்கி
சேமித்துக் கொள்கிறது
உள் மனக் கணினி.
எதிர்ப்பார்ப்புகள்
இல்லாதவர்கள் என்று
எவருமில்லை யிந்த
அவனியில்,
யார் யாரோ
எப்பொழுதும் எதையோ
எதிபார்த்துக் காத்திருப்பர் 
ஒவ்வொரு நொடிதோறும்,
எதிர்ப் பார்ப்பது எதிர்பாராமல்
நடந்து விடும் சற்று
காலதாமதமாகவேனும்,
எங்கும்,எந்நேரத்திலும் 
யாரேனும் ஒருவர் 
எதை எதையோ எதிர்பார்த்து
எமாந்து விடுவது முண்டு.
எதிர்ப்பார்த்தது எதிப்பார்த்தபடி
நிகழ்ந்துவிடின் எண்ணங்கள்
மனச் சிறகை விரித்து
பறக்கிறது வானில்,
எத்தனை எத்தனையோ
எதிர்ப்பார்ப்புகளோடு
நகர்கிறது-இந்த
நித்திய வாழ்க்கை.

எதிர்ப்பார்ப்பு

எதிர்ப்பார்ப்பு
பழையன கழிதலும் 
புதியன புகுதலுமாய் 
புதிது புதியதாய்
எதிர்ப்பார்ப்புகளை 
உருவாக்கி
சேமித்துக் கொள்கிறது
உள் மனக் கணினி.
எதிர்ப்பார்ப்புகள்
இல்லாதவர்கள் என்று
எவருமில்லை யிந்த
அவனியில்,
யார் யாரோ
எப்பொழுதும் எதையோ
எதிபார்த்துக் காத்திருப்பர் 
ஒவ்வொரு நொடிதோறும்,
எதிர்ப் பார்ப்பது எதிர்பாராமல்
நடந்து விடும் சற்று
காலதாமதமாகவேனும்,
எங்கும்,எந்நேரத்திலும் 
யாரேனும் ஒருவர் 
எதை எதையோ எதிர்பார்த்து
எமாந்து விடுவது முண்டு.
எதிர்ப்பார்த்தது எதிப்பார்த்தபடி
நிகழ்ந்துவிடின் எண்ணங்கள்
மனச் சிறகை விரித்து
பறக்கிறது வானில்,
எத்தனை எத்தனையோ
எதிர்ப்பார்ப்புகளோடு
நகர்கிறது-இந்த
நித்திய வாழ்க்கை.

Monday, 13 January 2014

பிறிதொருபொழுதில் -நூல் விமர்சனம்

கவிஞர் ந.க.துறைவன் பார்வையில் இராமஜெயத்தின் கவிதை நூல் “பிறிதொரு பொழுதில்”- விமர்சனம்
            கவிதை படிக்கிற ஆர்வம் எனக்கு இருப்பதால் எப்படியேனும் புதிய, படைய தொகுப்பு நூல்கள் அவ்வப்பொழுது படிக்கக் கிடைக்கின்றன. அப்படிக் கிடைத்த்தே புதிதாய்வந்துள்ள திரு.இராமஜெயத்தின் “பிறிதொரு பொழுதில்” – என்ற நூலாகும். கவிதைகளைப் படித்துப் பார்த்ததில் இக்கவிதைகளை உரைநடை கவிதையா? வசன கவிதையா? புதுக்கவிதையா? என்று எந்த வகைப்பிரிவில் வைத்து இனம் காண்பது என்றொரு பெரும் தயக்கம் என்னுள் ஏற்பட்டது.
            பொதுவாக, படைப்பாளி தன்னைச் சுற்றியுள்ள அகம், புறம் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து அதன் தாக்கத்தினால் மனதில் ஏற்படுகின்ற உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டுமென்ற முனைப்போடு எழுத முற்பட்டுள்ளார் என்பது புரிந்துகொள்ள முடிகிறது.  
            அப்படி, எனது வாசிப்புக்குட்பட்ட சில கவிதைகளைக் குறித்து கருத்துரைக்கலாம் என்று கருதுகிறேன்.
            குடும்பத்தில் ஒரு தாயின் வயிற்றுப் பிள்ளைகளின் மனவேற்றுமைகளைச் சொல்ல வரும்போது,
“நானும் அவனும்
ஒருதாய்
வயிற்றுப்பிள்ளைகள்
ஒருதாய்
பிள்ளைகள் என்பதைத் தவிர
வேறெதிலும் இல்லை
ஒற்றுமை”-என்றும்

“அதெல்லாம் ஒரு காலம்
இப்ப
யாருசெய்யுறா சொல்” (பக்.10-11)

என்று ஒற்றுமையே இல்லை என்று கூறிக் குறைப்பட்டுக்கொள்கிறார்.
            மனிதனுடைய முயற்சிகள் ஒவ்வொன்றும் வெற்றியடைவதும், தோல்வியடைவதும் பெண்ணின் பெருந்துணையோடு பெரும்பாலும் அமைகின்றன. தன் முயற்சிகளை, அவள் ஒன்றுமில்லாமல் செய்கிறாள் என்று வருத்தப்படுவது மட்டுமல்ல,
“கொஞசம் கொஞ்சமாய்
ஒவ்வொன்றிலும்
தோற்றுக்கொண்டிருக்கிறேன்
ஒன்றுமே இல்லாமல்
எளிமையாய் வெற்றிப்
பெறுகிறாள் அவள்” -(ப.42)
என்று தன் தோல்வியினை ஒத்துக்கொண்டு, அப்பெண் எளிமையாய் வெற்றிப் பெறுவதை ஏற்றுக்கொள்பவராகத் தெரிகிறார்.
            கரப்பான் பூச்சிக்குப் பயப்படாதவர்கள் எவருமில்லை. ஆண்களைவிட பெண்கள் அடுப்படியில் அதிகம் காணப்படும்போதுப் பயப்படுவார்கள். அக்கரப்பான்களின் மீசை மிரட்டும்படியாகக் காட்டும்போது,
“சொல்வாய் நீ
மருந்து வைக்கலாம்
மருந்து வைத்த
சுவடே தெரியாமல்
காற்றில் கலந்த
மணத்தில் கொல்ல்லாமென
இருந்தும் தொடரும்
அச்சம்” – ப.34)
 என்று அச்சம் என்பது எப்படியும் தொடரவே செய்திடும் என்கிறார்.
            பொங்கல் – பற்றி தன் அனுபவக் கருத்தை வெளிப்படுத்த வரும்போது, பழமையோ, புதுமையோ, பொதுமை நாட்டில் மலர வேண்டும் என்று எதிர்பார்க்கும் கவிஞர்,
“மாடுகள் முட்டிக் கொள்வது
இருக்கட்டும்
மனிதர்கள்
நாம்
மோதிக்கொள்ளாமல்
இருப்போம்” ப.23.
எனக்கூறி ஒற்றுமையினைக் காண விரும்புகிறார். அதுமட்டுமல்ல, காணும் பொங்கல் அன்று,
“காணும் பெரியோரை
காலை வாரி விடாமல்
கனிவாய் வணங்குவோம்” ப.23
 என்று பெரியவர்களை மரியாதையோடு வணங்கிட வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறார்.
            இவர் வெளியில், பாதைகளில் போகும்போதும், வரும்போதும், வீட்டைச்சுற்றியும் திரியும்
நாய்களை கவனித்து, அதன் வகைகள், செயல்பாடுகள் குறித்தும் விளக்கும்போது,
“இந்த நாய்கள்
எப்பொழுது குழையும்
எப்பொழுது குரைக்கும்
எப்பொழுது புணரும்
எதுவும் புரிவதில்லை
இந்த நாய்களே
இப்படித்தான்” ப.15
என்கிறார். இந்த நாய்கள் மட்டுமல்ல. வேறு எந்தவொரு நாயும் இப்படித்தான் இருக்கும். அது நாய்களின் குணம். நாய்வாலை நிமிர்த்த முடியுமா? இந்நாய்களின் வாயிலாக இச் சமூகத்தைக் கோபமாகச் சாட நினைக்கிறார் என்று புரிந்துகொள்ள முடிகிறது.
            அன்பரின் கவிதைகளில் கவித்துவம் குறைந்துக் காணப்பட்டாலும், வழக்குச் சொற்களாலும், பேச்சு மொழி, உரைநடையாலும், சாதாரணமான மக்களிடம் புழுங்கும் சொற்களாலும் பல கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. நிறைய கவிஞர்கள் தான் நினைக்கும் கவிதையை எழுத எண்ணித் தோற்றிருக்கிறார்கள். எப்பொழுதேனும், ஒருநாள் தான் நினைத்தக் கவிதை எழுத மாட்டோமா? என்று ஏங்கித் தவித்திருக்கிறார்கள். இவரும்,
“இது நான் எழுத
நினைத்தக் கவிதை
அவன் எழுதியிருக்கிறான்
ப்ச்...பரவாயில்லை
காதலித்தவள் போய்
கட்டிக்கொள்வதில்லையா
வேறொருத்தியை
நாளை எழுதுவேன்
மனைவியைப் போல”-ப.73
 என்று நாளை தான் நினைத்த கவிதை எழுதுவேன் என்று உறுதிகூறுகிறார். அன்பரே,
“நீங்கள்
எழுத நினைக்கும்
கவிதையை
வேறொருத்தியைக் கட்டிக் கொண்டு
நாளை கட்டாயம்
எழுதுங்கள்...
உங்கள் வாக்குமூலத்தையே வழிமொழிந்து நிறைவு செய்கிறேன். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
                                                                                                                         அன்புடன்,
                                                                                                 கவிஞர். ந.க.துறைவன்,
பிளாட் எண்.20. பகுதி-3
வசந்தம் நகர் விரிவு,
சத்துவாச்சாரி. வேலூர்.632 009.
பேச.9442234822, 8903905822
வாழ்த்துக்கள்

இணைய தளம்
வழியே
இணைந்திருக்கும்
அன்பு உள்ளங்களுக்கு
எனது
அன்பான
பொங்கல் திருநாள்
நல் வாழ்த்துக்கள்.
   -ந.க.துறைவன்.

Saturday, 11 January 2014

வாழ்த்து

அவள் முகம் எத்தனை அழகு
உன் எண்ணத்தை வெளிப்படுத்தி
மெல்ல காதல் கொண்டு பழகு.

அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்து
அவன் புரிந்தச் சாதனையைப்
பாராட்டி மனமார வாழ்த்து.

விழித்துக் கொண்டது ஆழ்மனம்
உணர்ந்து அனுபவம் பெற்றதினால்
அடங்கி ஒடுங்கியது பெரும்சினம்.

எப்பொழுதுக்கிட்டுமோ வாழ்வில் நிறைவு
ஏக்கமாய் வாட்டி வதைத்தது துயரம்
தாய்தந்தை இருவரின் மறைவு.

அகற்றினேன் கண்ணாடியில் தூசு
படிந்து கொண்டேயிருக்கிறது
மனதில் மாசு.

குரான், பைபிள், கீதை
மானுடத்திற்கு வழி காட்டுவது?

ஒரே இறை நெறிப் பாதை.