Labels

Haiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (20) கலை (1) கவிதை (332) கவிதை. (7) கவிதைகள். (7) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (2) குறுங்கவிதைகள் (12) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (55) ஹைபுன் (48)

Thursday, 29 December 2016

கடன்...!! ( சென்ரியு )TEA TIME  -  டீ டைம்.
13.
டீ  குடித்த  கடன்
கேட்டதால் தகராறு
கெடு விதித்து குடித்தார் டீ.
*
Tea swallowed credit
Asked dispute
Imposed deadline and drank tea.

*

மரம் வளர்ப்பு..!! ( கவிதை )வீட்டில் பிள்ளைகளை
வளர்த்தார்கள்.
வெளியில் மரங்களை
வளர்த்தார்கள்
மூன்று
தலைமுறைகளைக் கண்ட
முதிய மரங்களெலாம்
வாரிச் சுருட்டிப் போட்டு
சென்னையை மொட்டை
நகரமாக்கியது வார்தா புயல்

Tuesday, 27 December 2016

மண்சோறு...!! ( கவிதை )இன்று வங்கியில் 
பணம்
பத்தாயிரம் கிடைத்தால்
மண்சோறு சாப்பிடுவதாக
பிரார்த்தித்துக் கொண்டாள்.

*

Monday, 26 December 2016

அறிவுரை...!! ( துணுக்கு )ஜி.டி. பிர்லாவின் அறிவுரை.

தன் மகன் பசந்த்குமாருக்கு அவர் அடிக்கடி தந்த அறிவுரை.
‘  அதிகம் செலவிடாதே. பணத்தைக் கேளிக்கைகளில் வீணாக்காதே.
பேரனுக்கு எழுதிய கடிதம்.
சைவ உணவு மட்டுமே சாப்பிடு. ஒருபோதும் மது அருந்தாதே. புகை பிடிக்காதே.. அதிகாலையில் எழுந்திரு. சீக்கிரம் தூங்கப் போ. இளவயதில் திருமணம் செய்துக்கொள். அறையை விட்டு வெளியே போகும்போது மறக்காமல் விளக்கை அணைத்து விட்டுப் போ. நல்ல பழக்க வழக்கங்களைக் கடைப்பிடி. தினமும் நடைப் பயிற்சி மேற்கொள். குடும்பத்தோடு எப்போதும் தொடர்பில் இரு. எல்லாவற்றுக்கும் மேலாக, ஆடம்பரச் செலவு செய்யாதே.
இந்தியாவின் மாபெரும் பணக்காரரின் வார்த்தைகள் இவை என்றால் நம்ப முடிகிறதா?
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 27-12-2016.

தகவல் ; ந.க. துறைவன். 

அரங்கேற்றம்....!!ஒரு பொய்யை மறைக்க
ஒன்பதாயிரம் பொய்கள் அரங்கேறுகின்றன.
*
நடப்பதெல்லாம் ஏமாற்றமாகவே நடக்கிறது
மாற்றத்தை நோக்கி நடைபோடுகிறது இந்தியா.
*
தூணிலும் இருக்கிறது துரும்பிலும் இருக்கிறது
மண்ணிலும் இருக்கிறது நீரிலும் இருக்கிறது
கட்டுக் கட்டாய் ரூபாய் நோட்டுக்கள்.

*

Sunday, 25 December 2016

நாய்...!! ( சென்ரியு )TEA TIME  -  டீ டைம்.
12.
டீக் கடை வாசலில்
காத்திருக்கிறது நாளெல்லாம்
பொறைக்காக நாய்.
*
Tea shop threshold
All the days of waiting
Suffer for the dog.

*

நேர்த்திக் கடன்...!! ( கவிதை )அம்மாவின் கோயிலில்
அமைச்சர்கள் தொண்டர்கள்
வாக்காளப் பக்தர்கள்
பிரார்த்தனைச் செய்து
மொட்டைப் போட்டு
நிறைவேற்றினார்கள்
நேர்த்திக் கடன்.

Saturday, 24 December 2016

விதி விலக்கு...!! ( கவிதை )ஏடிஎம் வாசலில்
மருத்துவமனை வாசலில்
தியேட்டர் வாசலில்
கூட்டம் நிரம்பியிருக்கிறது
கோயில் வாசலில்
கூட்டம் குறைந்திருக்கிறது
பெருமாள் மட்டும்
விதி விலக்கு.

*

Friday, 23 December 2016

இலவசம்...!! ( சென்ரியு )TEA TIME  - டீ டைம்.
11.
நாலு டீ வாங்கினாள்
கட்டிக் கொடுத்தார் மாஸ்டர்
இலவசமாக சர்க்கரை.
TEA got four
Master gave up

Sugar free.
*

நிலைமை ரொம்ப மோசமாக இல்லை...!! ( புதுக்கவிதை )


*

நிலைமை ரொம்ப மோசமாக இல்லை
சமாளிக்கக் கூடிய வகையில் தானிருக்கிறது
சமாளிப்பதற்கான சாத்தியக் கூறுகள்
அத்தனையும் ஆராயப்பட்டுள்ளது.
எப்படியும் சமாளிக்கலாம் என்றுதான்
மையக் குழு முடிவு செய்துள்ளது
நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
விமர்சகர்கள் கரித்துக் கொட்டுகிறார்கள்.
நிலைமை ரொம்ப மோசமாக இல்லை
சமாளிக்கக் கூடிய வகையில் தானிருக்கிறது
எப்படியும் சமாளித்தே தீர வேண்டும் என்பதில்
வைராக்கியமாக இருக்கிறோம் என்பதை மட்டும்
தைரியமாகச் சொல்லிக் கொள்கிறோம்.
சமாளித்து விடுவோம் என்று நம்புங்கள்.
சமாளிப்பது என்பதும் ஒருவகையில்
சர்க்கஸ் வித்தை தான் தெரியுமா?
நிலைமை ரொம்ப மோசமாக இல்லை
சமாளிக்கும் தருணத்தில் கொஞ்சம்
சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும்
அதை தாங்கிக் கொள்ள மனப்பக்குவம் தேவை.
உங்களுக்கும் இருக்கிறது எனக்கும் இருக்கிறது
சங்கடங்களை வென்றுதான் நாம்
சாதனைகளைப் படைக்க வேண்டும்
சமாளிப்பதற்குள் யாருக்கும் எதுவும்
நேர்ந்து விடாது பார்த்துக் கொள்வோம்.
நிலைமை ரொம்ப மோசமாக இல்லை
சமாளிக்கும் வகையில் தானிருக்கிறது
ஆனால், எப்படி சமாளிப்பது என்பதில்
கொஞ்சம் சிக்கல் உருவாகிவிட்டது?
சிக்கலிலிருந்து தான் சிக்கலை
விடுவிக்க வேண்டும்…??

ஓற்றுமை...!! ( சென்ரியு )TEA TIME  - டீ  டைம்.
10.
தேனீர் கடைகளில் வாழ்கின்றன
மக்களின் ஓற்றுமையின் வலிமை
இந்தியாவின் ஆன்மா.
*
Found in tea shops
The strength of the people unite,
India's soul.
*

Thursday, 22 December 2016

நேரம்...!! ( சென்ரியு )TEA TIME  - டீ டைம்
9.
பஸ் வரும்நேரம் கேட்டறிந்தான்
ஊர்போய் சேர்வதற்கு
தேனீர் குடித்த வெளியூர்க்காரன்.


பொய்களை நம்பாதீர்கள்...!! ( புதுக்கவிதை )


*

பொய்களை நம்பாதீர்கள்
புதிய நோட்டுகள்
தாராளமாக கிடைக்கிறது.
பொய்களை நம்பாதீர்கள்
யாரும் க்யூவில் நிற்பதில்லை
யாரும் மயங்கி சாகவில்லை.
பொய்களை நம்பாதீர்கள்
ஊடகங்கள் தான்
ஊருக்குள் நடப்பதை
தவறாகப் பொய்யுரைக்கிறது.
பொய்களை நம்பாதீர்கள்
ஊழல் கருப்பு பணம்
நிச்சயமாக வெளியே
வந்து விடும்.
யாரும் தப்பவே முடியாது?

பொருளாதாரம் வெகு
ஸ்திரமாக இருக்கிறது.
பொய்களை நம்பாதீர்கள்
மக்கள் ரொம்ப நல்லவர்கள்
பணபரிமாற்றத் திட்டத்தை
மக்கள் பரிபூரணமாக
ஏற்றுக் கொண்டார்கள்.
அரசுக்கு
ஆதரவாக இருக்கிறார்கள்
பொய்களை நம்பாதீர்கள்
எதிர்க்கட்சி  நண்பர்கள்
என்னை விமர்சிக்கவில்லை
நான் எல்லோருக்குமே
உற்ற நண்பன்.
பொய்களை நம்புாதீர்கள்
மக்கள் சேவைக்காகவே நான்
எனக்காகவே மக்கள்.
இந்தியா மோ - டிஜிட்டில் நோக்கி
முன்னேற்றட்டும்.
( மோடிஜிக்கு சமர்ப்பணம் )

*

Wednesday, 21 December 2016

வாழ்த்துக்கள்...!!தமிழ் மொழிக்கான 2016 – ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் திரு. வண்ணதாசன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடைய ‘ ஒரு சிறு இசை ‘ என்ற சிறுகதை தொகுப்புக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.    

ந.க.துறைவன்.


வாசகர்கள்...!! ( சென்ரியு )

TEA TIME  -  டீ டைம்.
7.
பரபரப்பான செய்திகள் வாசிக்க
டீக் கடையில் காத்திருக்கிறார்கள்
கிராமத்து வாசகர்கள்.
*
Read the exciting news
Tea in the store waiting
Readers village.

*

Tuesday, 20 December 2016

புத்துணர்ச்சி...!! ( சென்ரியு )TEA TIME  -  டீ டைம்.
1.
அதிகாலை பனிப் பொழிவு
பாய்லர் எழுப்பிய புகை
தயாராகிறது புத்தம் தேனீர்
2.
அமைதியான விடியல் தருணம்
கொதிக்கிறது நுரைத்து
தேனீர்த் தூள் மணம்.

3.
கறந்த பால் கொண்டு வந்தான்
தேனீர் பருகி சென்றான்
பரபரப்பாய் பால்காரன்.
4.
உதட்டில் இனிப்பு
சூடான தேனீர் பருகுவோர்
மனதில் புத்துணர்ச்சி சிலிர்ப்பு.
5.
ஓட்டுநரும் நடத்துநரும் இறங்கி
தேனீர் பருகிய பின் புறப்படுகிறது
ஊரைக் கடந்து முதல் பஸ்..

Sunday, 18 December 2016

செய்திகள் என்ன சொல்லுது? ( துணுக்குகள் )


*
1.
என் கருத்தை விமர்சிக்க கட்சியின் தலைமையைத் தவிர வேறு யாருக்கும் தகுதி கிடையாது. - திருநாவுக்கரசர். ஆவேசம்.
     ஆமாம் ஆமாம். விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அரசர்கள்.
2.
உலகிலேயே அதிக சாலை விபத்துகள் இந்தியாவில்தான் நடக்கின்றன.
2014 – ம் ஆண்டு 85,462 பேர் பலி. – உச்ச நீதிமன்றம் கவலை.
     ஆட்சிக்கு வர்றவங்களுக்கு, எப்படி சம்பாதிக்கிறது என்கின்ற கவலையே பெரிசாயிருக்கு. இதிலே வேற சாலை விபத்துப் பற்றி கவலைபடனுமா? உட்கார்ந்துக் கொண்டு நீதி சொல்லிட்டா போதுமா? யாரு செயல்பட்றது.
3.
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு, சாதனைகள் விளக்கி அதிமுகவில் தயாராகும் 40 குறும்படங்கள். – சமூக வலைதளங்களில் வெளியிடத் திட்டம்.
     அம்மா சின்னம்மா ரெண்டு பேர் சாதனை கண்குளிர பார்க்கலாம் போல.
ஆதாரம் ;  தி இந்து – நாளிதழ் – 19-12-2016.
தகவல் ; ந.க.துறைவன்.

Friday, 16 December 2016

செய்திகள் என்ன சொல்லுது? ( துணுக்குகள் )
*
1.
பணமதிப்பு நீக்கம், ஜெ.மறைவு, புயல் ஆகிய காரணங்களால்,
அடுத்தடுத்த 3 நிகழ்வுகளால் முடங்கியது கட்டுமானத் தொழி்ல்.
ரூ.20, 000/- கோடி மதிப்புள்ள திட்டப்பணிகள் ஸ்தம்பிப்பு.
     இன்னும் பலப்பல தொழில்களி்ன் திட்டப்பணிகள் முடங்கியுள்ளது. பொருளாதார நஷ்டம் ஏற்பட்டடுள்ளது என்கிறார்கள் பொருளியல் நிபுணர்கள்.
2.
பணமதிப்பு நீக்கம் 100 பேரைக் கொன்றுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா குற்றச்சாட்டு.
     இன்னும் எத்தனை பேர் பலியாவார்களோ தெரியவில்லை? மரண விளையாட்டில் ஒரு மகிழ்ச்சி.
3.
நாடாளமன்றம் வராத அதிமுக எம்.பி.க.கள்.
     அம்மாவுக்காக துக்கம் அனுசரிக்கிறார்கள்.
4.
முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலாதான்.
பொன்னையன் மீண்டும் திட்டவட்டம்.
சொல்லச் சொன்னதைச் சொல்கிறது ஆண்கிளி.
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 17-12-2016.
தகவல் ; ந.க.துறைவன்.
*

பணபரிமாற்றம்...!! ( துணுக்கு )
டிஜிட்டில் இந்தியாவின் பணபரிமாற்றம் பற்றி விளக்குகிறார்கள்.
அமைதியாக கேட்கிறார். அயோத்தி ராமன்.
நீங்கள் சொல்வது வேறாக இருக்கிறது. நாரதர் சேகரித்து வந்தள்ள செய்தி வேறாக இருக்கிறதே?
அப்படியென்ன செய்தி நாரதர் கூறினார்.
நீங்கள் கூறும் செய்தியில் மக்கள் பிரச்சினைப்பற்றி தகவலே இல்லை. நாரதர் கொண்டு வந்துள்ள  செய்தி முழுக்க மக்கள் படும் இன்னல்கள் பற்றி தெளிவானதாக இருக்கிறதே?
இல்லை அய்யனே! நாரதர் எங்கோ தவறான பகுதிக்குச் சென்று தகவல் சேகரித்துள்ளார்?
அப்படியா, நாரதர் பொய் சொல்கிறார் என்று கூறுகிறீர்களா?
மன்னிக்கனும் அய்யனே, நாரதர் அப்படியெல்லாம்…?
மக்கள் என்னை முழுக்கமுழுக்க மறந்து விட்டார்கள். பணபரிமாற்றம் பற்றித்தான் பேசுகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கென்ன பதி்ல் சொல்லப் போகிறீர்கள்.
இதைப்பற்றி மிக விரிவாக பிறகு பேசுகிறோம் சுவாமி. எங்களுக்கு கொஞ்சம் அவசரமான வேலை. விடைபெறுகிறோம் என்று கூறி வணங்கி விட்டு திணறிக் கொண்டு வெளியேறினார்கள்.
*


Wednesday, 14 December 2016

திரு. பத்மவாசன் ஓவியம்.

ஓவியம்.


அடைக்கலம்...!! ( கவிதை )*
ஆறுதலாய் முகடுகள் இரண்டும்
இறுக்கி அணைத்தது என்முகம்.
*
என் கண்ணீரோ  உப்பு
உன் கண்ணீரோ இனிப்பு
*
உடல் சூட்டின் வெப்பத்தில்
அடங்கியது கார்த்திகை குளிர்.
*
சிந்தியது தேன்
பூவை ருசித்த வண்ணத்துப்பூச்சி
*
குளிரில் நடுங்கிய பூனைக்கு
அடைக்கலம் தந்தது படுக்கையறை.
*
நனைந்தப் பூவிற்கு                      
முக்காடு எதற்கு…?


*

புற்கள்...!! ( ஹைக்கூ )Haiku – Tamil / English.
*
புயல்மழை காற்றுக்கு அஞ்சாமல்
துணிவாய் என்றும் வாழ்கின்றன
வெளி எங்கும் புற்கள்.
*                     
Defying wind and rainstorm
Who is willing to live
Nowhere outside grasses.
*


Tuesday, 13 December 2016

கால அளவு...!! ( ஜென் கதை )

ஜென் குரு ஒருவர், தனது சீடர்களிடம் “ நமது வாழ்க்கையின் கால அளவு என்ன? ” என்று ஒரு முறை கேட்டார்.
அதற்கு சீடர்களிடமிருந்து “ ஐம்பது வருடங்கள், எழுபது வருடங்கள், நூறு வருடங்கள் “ என பல்வேறு பதில்கள் கிடைத்தன. ஒவ்வொன்றிற்கும்
 “ இல்லை, தவறு ” என்பதையே பதிலாக கூறினார் குரு.
இறுதியாக, “ இரண்டு சுவாசங்களுக்கு இடைப்பட்ட காலமே, நமது வாழ்க்கையின் கால அளவு என்றார் குரு.
ஆதாரம்  தி இந்து – வணிகநூலகம்  பகுதி – 02-11-2016.
தகவல் . ந.க.துறைவன்.

*

Sunday, 11 December 2016

பரிசு பெற்ற ஓவியம்.

ஓவியம்.


செய்திகள் என்ன சொல்லுது? ( துணுக்கு )1.
ஒரு லட்சம் கிராமங்களுக்கு 2 லட்சம் மினி ஏடிஎம் மிஷன்கள்.
ரூ.120 கோடி செலவில் நபார்டு வங்கி வழங்குகிறது.
கிராம மக்களிடம் என்ன வருமானம் இருக்கிறது ஏடிஎம். வைப்பதற்கு, நகர்புறத்திலே இருக்கிற ஏடிஎம் – களை ஒழுங்கா வைச்சிருந்தா போதாதா?
2.
ஜெ.வின் அரசியல் வாரிசாக சசிகலா மட்டுமே - தம்பிதுரை எம்.பி.கருத்து.
     ஆமா ஆமா… பொழப்பு நடக்கனுமில்லே. தன்மானம் இல்லாத தம்பி.
3.
சேகர் ரெட்டியின் காட்பாடி வீட்டில் கத்தை கததையாக பணம், நகை பறிமுதல். மோடிக்கு துணை போனவர்கள் கைதாகிறார்கள்.
     மக்கள் புதிய 500, 2000 ரூபா நோட்டு கூட கிடைக்காம தவிச்சிகிட்டிருக்காங்க. இவங்களுக்கு மட்டும் எப்படி இப்படி கோடிகோடியா கிடைக்கிறது. எல்லாம் சிபாரிசு இல்லாம நடக்குமா?
4.
நாடாளமன்றத்தில் எந்த அலுவலும் நடைபெறவில்லை. செல்போன் மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
     வெளியிலே வாய்கிழிய பேசறீங்க. மன்றத்திலே போய்  பேச வேண்டியதுதானே.
5.
மாயவலையில் சிக்காத செங்கோட்டையன்.
     J J வலையில் சிக்கியவர்கள் SK வலையில் சிக்காமலா போவார்கள்.
ஆதாரம் ‘ தி இந்து – நாளிதழ் – 12-12-2016.
தகவல் ; ந.க.துறைவன்.


கார்த்திகை தீபம்...!! ( ஹைபுன் )கார்த்திகை தீபம்.

கார்த்திகை மாதத்தில்தான் நாம் மலைகள் பற்றி நினைவுப்படுத்திக் கொள்கிறோம். நாம் எப்பொழுதும் மலைகளின் நேரடிப் பார்வையில் வாழ்கின்றோம். நாம் இல்லையென்றாலும், மலைகள், பிரபஞ்சம் இருக்கும் வரை உயிர்வாழும் தன்மைப் படைத்தவைகள். இயற்கை உபாதைகளால் அவைகளுக்கு ஊறுநேரும் போதுதான் வெடித்துச் சிதறி உயிரிழக்க நேரிடலாம்.  மக்கள் வளமாக வாழ்வதற்கு அவைகள் மழை தருவதற்கும் இன்னும் பிற வளங்கள் தருவதற்கும் உதவிகரமாக விளங்குகின்றன.
இன்னும் எவ்வளவோ வழிகளில்
வளம்தரும் கருப்பு சுரங்கம்
மக்கள் நேசிக்கும் மலைகள்.
*

Thursday, 8 December 2016

சேமிப்பு...!! ( சென்ரியு )
எல்லா ஆசைக் கனவுகளை
எப்பொழுதும் வங்கி சேமிப்பில்
நிரப்பி கொண்டேயிருக்கிறது மனம்.

*

Monday, 5 December 2016

நாடகமே...!!
வாழ்க்கை என்பது நாடகமே
வந்து போனவர் ஆயிரமே
கொண்டு சென்றவர் யாருமில்லை
கொடுத்துப் போனதும் நினைவுமில்லை.


கவிஞர் கண்ணதாசன்.

நிறைவு...!!
வாழ்க்கையை வாழாதவர்களுக்கு, அதனுடைய முழு வீச்சுடன் பூரணமாக வாழாதவர்களுக்கு மட்டுமே மரணம் என்பது நிஜம். வாழ்ந்திருப்பவர்களுக்கு மரணம் இல்லை.

இறப்பு வாழ்க்கையின் முடிவல்ல. உண்மையில் அது ஒரு பிறவியின் நிறைவு. ஒரு பிறவியின் உச்சக்கட்டம். சிகரம். கடைசி கட்டம்.

    ஓஷோ. 

மரணம்...

1.
பணம், சொத்து, அதிகாரம் உயிரைக் காப்பாற்றாது என்பதை மரணம் உறுதிபடுத்தி விட்டது.
2.                                                        
மரணம் எப்பொழுதுமே நிஜம்.
3.
டிசம்பர்

சுனாமி, சென்னை வெள்ளம், மதவெறி
ஆகியன நடந்த கருப்பு மாதமாகி விட்டது.

*

வாழ்ந்தவர்

J  J   என்று வாழ்ந்தவர்.


ஆழ்ந்த இரங்கல்...!!

இலை உதிர்ந்தது


Saturday, 3 December 2016

கோரிக்கை...!! ( சென்ரியு )

Senryu – Tamil / English.

செல்லக் குழந்தையின்
சிரிப்பில் இருக்கிறது
தேவையான கோரிக்கை.
*
The baby's
There's smile
The request.

*

Friday, 2 December 2016

மரணம்

மரணம்


கட்டுப்பாடு...தட்டுப்பாடு...!!
1.
மீண்டும் மொராஜி தேசாய் உயிர்த்தெழுந்தார்.
2.
அம்மாளுக்கும் பெருமாளுக்கும் தங்கம் உச்சவரம்பு இல்லை.
3
சில்லறை தங்கக் கடை வியாபாரிகள் தலையில் கை வைத்துக் கொண்டார்கள்.
4.
தோற்றுப்போனjத் திட்டங்களைக் கொண்டு வந்து, தோற்றுப் போகப் போகிறார்கள்.

ந.க.துறைவன்.

ஓடை மீன்கள்...‘‘

ஒடை மீனு பிடிச்சி போயி
அம்மா கிட்ட கொடு
குழம்பு வச்சிக் கொடுப்பாங்க
நாக்கு ருசிக்க சாப்பிடு.

ந.க.துறைவன். 

Thursday, 1 December 2016

வயல்...!! ( சென்ரியு )

வயல் நாற்றாங்காலோடு
ஒட்டியிருக்கிறது
விவசாயியின் வாழ்க்கை.

ந.க.துறைவன். 

Wednesday, 30 November 2016

நித்தியக்கல்யாணி...!! ( ஹைபுன் )குழந்தைகள் தனக்கு தேவையான ஆடைகளைத் தானே தேர்வு செய்துக் கொள்கின்றனர். அம்மாவோ அப்பாவோ தேர்வு செய்யும் ஆடைகளை நிராகரிக்கவே செய்கின்றனர். அதற்காக அடம்பிடிக்கவும் செய்கின்றனர். குழந்தைகள் தனக்கான சுதந்திரத்தை உரிமையை விட்டுக் கொடுக்காமல் செயல்படுகின்றனர். இந்த பிடிவாத குணம் நல்லதா? கெட்டதா? என்பதை தெளிவாகப் புரிந்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது. குழந்தைகளின் இப்பிடிவாதப் போக்கை விட்டுப் பிடித்து கவனித்து வரவேண்டும் என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள். இப்போக்கு எதிர்காலத்தில் பின்விளைவுகளை எற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர்.

மரத்தின் நிழலில் வளர்ந்தது
கர்வமில்லாமல் பாதுகாப்பாய்
நித்திய கல்யாணி செடிகள்.

ந.க.துறைவன். 

Monday, 28 November 2016

இருப்பு...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
உனக்குள் எதுவுமில்லை
ஆனாலும்,
எல்லாமே இருக்கிறது.

There is nothing in you
However,
Everything.
*

இனியொரு விதி செய்வோம்...!!1.
உண்டியலில் இருக்கின்றது பணம். ATM – ல் இல்லை பணம்.
2.
பணம் இல்லாமல் இரு. டெபிட்கார்டு வாங்கு. செலவு செய்.
3.
லஞ்சம் கூட மொபைல் பேங்க் மூலம் அனுப்பும் வசதி விரைவில் வரும்.
4.
கிராமத்து மக்கள் எல்லோரும் மொபைல் வங்கியில் இணைப்பார்கள்./ இணைவார்கள்.
5.
கிராமத்து ஒரு மால் திறக்கப்படும். எல்லாருமே அங்கே பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம்.
6
இதெல்லாம் டிஜிட்டல் இந்தியாவின் புதிய திட்டங்கள். வரவேற்போம்..
வாழ்க இந்தியா   வளர்க இந்தியா.

*

தேடல்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
அதுவல்ல அதுவல்ல
அது எது அல்ல?
தேடுதல் முடிவல்ல!
That is not the case,
What is it?
Search end!

*

Sunday, 27 November 2016

செம்பருத்திப்பூவே...!!


நாய்...!! ( கவிதை )
மகனுடன் ஆங்கிலத்தில் பேசாதவர்
நாயுடன் ஆங்கிலத்தில் பேசுகிறார்.
*
சொந்த மகனையே கடித்து விட்டது
சோறுபோட்டு வளர்த்த செல்ல நாய்.
*
அபசகுனமாய் நேரங்கெட்ட வேளையில்
தெருவில் அழுகின்றது நாய்.
*
போன வருஷம் நவம்பர் டிசம்பர்லே வெள்ளப்பெருக்கு
இந்ந வருஷம் நவம்பர் டிசம்பர்லே கள்ளப்பெருக்கு.
*
முதலைகளை விட்டு விட்டு
மீன்களை வேட்டையாடுகிறார்கள்.
*
கோடீஸ்வரர்கள் பாராட்டுகிறார்கள்
தொழிலாளிகள் சபிக்கிறார்கள்.


ந.க.துறைவன்.

Friday, 25 November 2016

தோழருக்கு ஆழ்ந்த அஞ்சலி...“ வரலாறு என்னை விடுதலை செய்யும் ” – என்று முழக்கமிட்டு வாழ்ந்த கீயூபாவின் அதிபர் பிடில் காஸ்ட்ரோவின் மரணம்.
உலகச் சமுதாயத்திற்கே பேரிழப்பாகும்.
அவருக்கு எனது சிரம் தாழ்ந்த செவ்வணக்கம். அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.


ந.க.து்றைவன்.

பூசணிப்பூக்கள்...!!

Haiku – Tamil / English.

ஏழையின் குடிசை அருகில் பூத்து
ஏழ்மையை நேசிக்கும்
மஞ்சள் பூசணி பூக்கள்.
*
Poor's cottage near Booth
Misery loves
Yellow pumpkin flowers.

*

பெண் காது.சிறுவயதில் .இருந்தே சம்பவங்கள், சுவாரஸ்யங்கள், துக்கம், மகிழ்ச்சி, அழுகை, உரையாடல் என வாயின் எண்ணற்ற சொல் வெளிப்பாடுகளை அம்மா, அக்கா, மனைவி, காதலி, தோழி, மகள்…என ஏதாவது ஒரு பெண்ணின் காதுகளுக்குக் கடத்துவதில்தானே விருப்பமாக இருக்கிறோம். நிச்சயம் வெளியேறும் எனத் தெரிந்தும் பெண் காதுகளிடம் தானே ரகசியயங்களையும் பரிமாறிக் கொள்கிறோம்.
அதனால்தானோ என்னவோ… பெண்ணின் காதுக்கு மட்டுமே அவ்வளவு அணிகலன்களைப் பூட்டி அழகு பார்க்கிறார்கள். தோடு, தொங்கட்டான், திருகு, முதுமையில் சமணர்ளைப் போல் தொங்கு காது வளர்த்து தண்டட்டி, பாப்படம், காது உச்சியில் கோபுரம் என அணியும் பூடி.. வேறு எந்த நுண்உறுப்புக்கும் இவ்வளவு அணிகலன்கள் இல்லையே. வறுமையின் உச்சத்தில் இருக்கும்போதுகூட பெண் காதிடம்தானே கழற்றித் தரச்சொல்லிக் கேட்கிறோம்.
ஆதாரம்: பெண் காது – நரன் – சிறுகதை – விகடன் தடம் – இதழ் - பக்கம் ; 87.

தகவல் ; ந.க.துறைவன்.

Thursday, 24 November 2016

கிலி...!! ( லிமரைக்கூ )வெளியிலே புலி வீட்டிலே எலி
யாராச்சும் கேள்விக் கேட்டா?
மனசுக்குள்ளே ஓரே கிலி.

*

ஒன்றுமில்லை...!! (புதுக்கவிதை )குளிர்க் காற்றின் மென்மையில்
காலை நடைபயிற்சியில் இருக்கும்போது
எதிரே வந்த நெருங்கிய நண்பர்
என்னிடம் பேச்சுக் கொடுத்து
நலம் விசாரித்தார் கவனமாய்
பரிமாற்றலுக்குப் பிறகு
மீண்டும் வேறேன்ன செய்தி என்றேன்.
ஓன்றுமில்லை என்றார்
ஒன்றுமில்லை என்று சொன்னவர்
அரைமணி நேரம் தன் சோகச்
சுமைகளைக் கொட்டித் தீர்த்தார்.
ஒன்றுமில்லை என்பதில் தான்
எத்தனை உருவகங்கள் அவர்
உள்மனதில்
புதைந்திருக்கிறதெனப் புரிந்தது.
வெங்காயத்தின்
உள்ளே ஒன்றுமில்லை தான்
அதன் மேலே அடர்த்தியாக
அடுக்கியிருக்கின்றது ஒவ்வொன்றாகக்
காய்ந்த மனவெம்மைச் சருகுகள்.


*

Tuesday, 22 November 2016

பணம் பத்தும் செய்யும்...!!1.
எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கச் செய்யும்.
2.
தேவைக்கு மேல் செலவழிக்கச் செய்யும்.
3.
உபரி பணத்தைச் சேமிக்கச் செய்யும்
4.
கள்ளத்தனமாய் பதுங்கியிருக்கும்
5.
திடீரென செல்லாதவையாகும்.
6.
புதிய நோட்டுக்கள் பிறப்பெடுக்கும்.
7.
வங்கியில் வரிசையில் நிற்கச் செய்யும்.
8.
சில்லறை மாற்ற அலையச் செய்யும்.
9.
மக்களை வதைக்கச் செய்யும். உயிரை பலி கொள்ளும்.
10.
நாட்டைச் சீர்கேட்டு பாதையில் அழைத்துச் செல்லும்.
*