Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Monday 29 February 2016

இறகு...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
இறகு உதிர்ந்தது
எதற்கு அடையாளமாய்
இணைத் தேடிய பறவை.
*
Feather falls
Pictured
Twitter co-scouring.

*

சிந்தனைக்கு...!!

எத்தனை மகான்கள்? எத்தனை அறிஞர்கள்? எத்தனையோ அறநூல்களில் நேர்மையாக வாழ்ந்திட அறநெறிகள் போதித்தப் போதிலும், நல்ல தீயன நடப்பவைகள் நடந்துக் கொண்டுதானே இருக்கின்றன. மக்களின் மனமாற்றத்திற்கான எவ்வளவோ சிறந்தக் கருத்துக்களை யார் சொன்னாலும், அதை ஏற்று நடக்கின்ற மனப்பக்குவம் எத்தனைப் பேர் இதயங்களைத் தொட்டிருக்கிறது. படிப்பதற்கு, பார்ப்பதற்கு, கேட்பதற்கு இருக்கின்ற ஆர்வம் அதை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் இல்லை என்பதே உண்மையாக இருக்கின்றது. சத்தியம் எப்பொழுதும் வாழ்கிறது. அசத்தியம் எப்பொழுதும் வீழ்ச்சியடையவே செய்கிறது.

*

Monday 8 February 2016

அழகிய பெண்...!!

முல்லா கதை.
*
ஒரு அழகானப் பெண் கடந்து செல்லும் போது முல்லா நஸ்ருதீன் பார்ப்பதற்கு திரும்பினார். அவரது மனைவி தனது உதட்டைப் பிதுக்கி கொண்டு, “ ஒவ்வொரு முறை நீங்கள் ஒரு அழகான பெண்ணைப் பார்க்கும்போதும், நீங்கள் திருமணமானவர் என்பதை மறந்து விடுகிறீர்கள் ” என்று கூறினாள்.ள
அதற்கு முல்லா, “ அங்குதான் நீ தவறு செய்கிறாய். அந்த உண்மை குறித்து எதுவும் எனக்கு விழிப்புணர்வைக் கொடுப்பதில்லை ” என்றார்.
ஆதாரம் : ஓஷோவின் – திடீர் இடியோசை – நூல் – பக்கம் 197.
தகவல் : ந.க.துறைவன்.

Sunday 7 February 2016

முத்துச்சிப்பி...!! ( ஹைக்கூ)

Haiku – Tamil / English;.
*
விழுந்தது  மழைத்துளி
மூடிக்கொண்டது
உள்ளே முத்துச்சிப்பி,
*
The rains fell
Covered
Inside the Pearl,

கவிஞன்...!!

போலந்து கவிஞரான டேட்யூஸ் ரோஸ்விக்ஸின் ஒரு கவிதை.
*
கவிஞன் என்பவன் யார்?
கவிஞன் என்பவன் கவிதை எழுதுகிறவன்
கவிஞன் என்பவன் கவிதை எழுதாமல் இருக்கிறவன்.
கவிஞன் என்பவன் தளைகளைத் தகர்ப்பவன்
கவிஞன் என்பவன் தளைகளைப் பூணுகிறவன்
கவிஞன் என்பவன் நம்புகிறவன்
கவிஞன் என்பவன் நம்ப முடியாமல் போகிறவன்
கவிஞன் என்பவன் பொய் சொன்னவன்
கவிஞன் என்பவன் பொய்களைப் பெற்றுக் கொண்டவன்.
வீழ முனைபவன்
தன்னைத்தானே உயர்த்திக் கொள்கிறவன்
கவிஞன் என்பவன் விலகிப்போக முயல்பவன்
கவிஞன் என்பவன் விலகவே இயலாதவனும் கூட.
*
ஆதாரம் ; காலச்சுவடு – பிப்ரவரி – 2016 – பக்கம் 69.
தகவல் : ந.க.துறைவன்.
*

Saturday 6 February 2016

சிந்தனைத் துளிகள் - 2


*
1.
அகற்றி விட்டு நடந்தால் முள் நிறைந்தப் பாதைகள் பாதுகாப்பு தருகின்றன.
முள்ளில்லாதத் தார்ச்சாலையில் விபத்தில் உயிர்கள் பலியாகின்றன.
*
2.
எது தடையாக இருக்கிறது? எங்கோ வெளியில் போய் திரிந்து வர சொல்கிறது மனம். எதற்காக இருக்கும்?                        
*
3.
இலவசங்களின் மொத்தக் கூட்டுத் தொகையே ஒரு வாக்காளரின் உயர்ந்த விலை.
4
உழுதொழில் உயிர் வளர்க்கும் உன்னதத் தொழில்.
5.
.சிரிப்பு என்பது மனிதனின் முகத்திற்கு மிக உயர்ந்த அழகு. அதை எப்படியெல்லாம் தவறவிட்டிருக்கிறோம் என்று எண்ணிப் பார்ப்பதில்லை.  
ந.க.துறைவன்

*

ஞாளம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
அவமானங்கள்
இலவசமாய்  கற்று தரும்
அனுபவ ஞானம்.
ந.க.துறைவன்.
*
Insults
Enjoy learning free
Empirical knowledge.

*

பதிலென்ன?


*
துரோகம் இழத்தவர்கள் என்று தெரிந்தும் அவர்களின் எதிர்மறைச் செயல்களை மறந்து, பகைமைப் பாராட்டாது, தோழமைக் கொண்டு வாழ்கின்ற ஒரு மனிதனைப் பற்றி, உங்கள் கருத்தென்ன? என்று நண்பர் ஒருவர் என்னிடம் கேள்விக் கேட்டார். அதற்கான பதில் என்னால் சொல்ல இயலவில்லை. இருப்பினும், அந்த நண்பர் எவ்வளவு குருரமாக மனம் புண்பட்டிருக்கிறார் என்பது அப்பொழுது தான் புரிந்துக் கொள்ள முடிந்தது. உங்களுக்குப் புரிந்தால் தக்க பதில்  சொல்லுங்க…!

*

Thursday 4 February 2016

என் பெயர் ரோஹித் வெமூலா.


*
ஒரு விபத்து
என் பிறப்பு
பின் எனது இருப்பில்
எங்கிருந்து இத்தனை வெறுப்பு?
சாதி சதி செய்தது
மதம் அப்படித்தான் என்றது.
பொருளாதாரம் சுரண்டியது
கல்வி குருடாய் இருக்கச் சொன்னது
இயற்கை தன்னை .இழந்து தவித்தது
கடவுள் காணக்கிடைக்கவில்லை
அனைத்தும் சந்தை என்றான பின்
அன்பும் சந்தைக்குச் சென்றது
விலைபோகாத அன்பு
அநாதையாய் நின்றது
மனிதம் அகதியாய் ஓடியது
மனம் ஏங்கித் தவித்தது
அன்பை விதைத்தது
அன்பை வளர்த்தது
அன்பைப் பறிமாறி
அன்பின்றி ஏதுமில்லையென
நட்பும் இலக்கியமும் மட்டுமே
கடைசிப் புகலிடமாய் காட்சியளித்தது
எனக்குள் உண்டான
வெறுமைக்கு விடைகண்டு
“ ஜெய்பீம் ” என்றேன்
அரசியல் சுருக்கால் இறுக்கியது
என் பெயர் ரோஹித் வெமூலா.
*
நன்றி :ஆதாரம் : உயிர்மை – பிப்ரவரி - 2016 இதழ் – பக்கம் 17.
தகவல் : ந.க.துறைவன்.

*

என் பெயர் ரோஹித் வெமூரா...!!


*
ஒரு விபத்து
என் பிறப்பு
பின் எனது இருப்பில்
எங்கிருந்து இத்தனை வெறுப்பு?
சாதி சதி செய்தது
மதம் அப்படித்தான் என்றது.
பொருளாதாரம் சுரண்டியது
கல்வி குருடாய் இருக்கச் சொன்னது
இயற்கை தன்னை .இழந்து தவித்தது
கடவுள் காணக்கிடைக்கவில்லை
அனைத்தும் சந்தை என்றான பின்
அன்பும் சந்தைக்குச் சென்றது
விலைபோகாத அன்பு
அநாதையாய் நின்றது
மனிதம் அகதியாய் ஓடியது
மனம் ஏங்கித் தவித்தது
அன்பை விதைத்தது
அன்பை வளர்த்தது
அன்பைப் பறிமாறி
அன்பின்றி ஏதுமில்லையென
நட்பும் இலக்கியமும் மட்டுமே
கடைசிப் புகலிடமாய் காட்சியளித்தது
எனக்குள் உண்டான
வெறுமைக்கு விடைகண்டு
“ ஜெய்பீம் ” என்றேன்
அரசியல் சுருக்கால் இறுக்கியது
என் பெயர் ரோஹித் வெமூலா.
*
நன்றி :ஆதாரம் : உயிர்மை – பிப்ரவரி - 2016 இதழ் – பக்கம் 17.
தகவல் : ந.க.துறைவன்.

*

Wednesday 3 February 2016

சூழல்....!! ( சென்ரியு )

Haiku – Tamil / English.
*
சுற்றுச் சூழல் மாசு
மாநாட்டில் விவாதித்தன
சிட்டுக் குருவிகள்.
*
Environmental pollution
The conference discussed
Sparrows.

*

வெற்றி...!!


1.
வாழ்வின் நிகழ்வுகளைக் குறைசொல்வதில் அர்த்தமில்லை. நல்லதும் கெட்டதுமான செயல்களை அது அறியாது. அதுபாட்டிற்கு நேரங்களை நகர்த்திக் கொண்டே செல்கிறது. வாழ்வை புரிந்துக் கொண்டு  தாம் அதை இனம் பிரித்து அனுசரித்துப் போய் வாழ்வதில் தான் வெற்றியே அமைந்திருக்கிறது.
2.
எதிர்ப்பாராமல் வருகின்ற பிரச்சினைகளை எதிர்க்கொண்டுச் சமாளித்து.  அதனைத் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு என்று நினைத்து ஆறுதல் அடைவதே மனநிம்மதியைத் தருகின்ற செயலாகும்.

*

Tuesday 2 February 2016

ஞானம்... !!


*
மூங்கில் காட்டை அழித்து
ஒரு புல்லாங்குழல் செய்தேன்
அப்பொழுதுதான் தெரிந்தது
அது ஊமையென…
ஆதாரம் : ஓஷோ டைம்ஸ் - தமிழ் இதழ் – செப்டம்பர் – 2001.- பக்கம் 11
தகவல் : ந.க.துறைவன்.

*