Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Tuesday 28 February 2017

மௌன மொழி...!! ( கவிதை )




*
அவனை எல்லோருக்கும்
தெரிந்திருந்தது.
அவனுக்குத் தான் யாரையும்
தெரிந்திருக்கவில்லை.
தெரிந்து வைத்திருப்பவர்கள்
பார்க்கும்போது பேசுவதில்லை
தெரியாதிருப்பதால் இவன்
யாரிடமும் பேசுவதில்லை.
எப்பொழுதும் நிலவுகிறது
இடைவெளிகளில் ஆழ்ந்த
மௌன மொழி.

*

Monday 27 February 2017

வெற்றியின் ரகசியம்...!! ( துணுக்குகள் )



அமெரிக்க எழுத்தாளர். ரே. பிராட்பரி கூறுகிறார்.

1.
புத்தகங்களுக்கு மரணம் இல்லை. அவை எப்போதும் உயிருடனே இருக்கின்றன.
2.
நூலகங்கள் இல்லாவிட்டால் நமது நிலை என்ன? நமக்கான கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் இரண்டுமே கிடையாது.
3.
எப்படி படிக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரிந்திருந்தால், வாழ்க்கையைப் பற்றிய முழுமையான கல்வியை நீங்கள் பெற்றுள்ளீர்கள்.
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 27-02-2017.

தகவல் ; ந.க.துறைவன். 

Sunday 26 February 2017

தேங்காய்...!! ( சென்ரியு )



Senryu – Tamil / English.
*
அனைத்தும் ஏற்றி முடித்தனர்
களைப்பு நீங்க டீ குடித்தனர்
புறப்பட்டது தேங்காய் லாரி.
*
All Loader finished
Fatigue You drank tea
Larry sail coconut.

N.G.Thuraivan.

Saturday 25 February 2017

தன்முனைப்பு...!! ( கவிதை )



*
அடுத்தவர்களை
அவமானப்படுத்துகிறோம் என்று
யாரும் நினைப்பதில்லை.
அவர்கள் யாரிடமேனும்
அவமானப்படும் வரை. 
அவமானப்படுத்துதல் என்பது
கௌரவமல்ல.
தன்முனைப்பின் கர்வம்.

ந.க.துறைவன்.

செய்திகள் என்ன சொல்லுது? ( துணுக்குகள் )



*
1.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்யக்கோரி தீவிரமடைந்து வரும் போராட்டங்கள்.
     இயற்கை வளங்களையும், விளைநிலங்களையும் சீரழித்து வருகின்றன அரசும், கார்பரேட் நிறுவனங்களும்,  ,இவர்களை விட உயிர்வாழும் விலங்ககள் பிராணிகள் எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது. .
2.
169 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட, சாதனை மனிதர் “ நெல் ” ஜெயராமன் புற்றுநோயால் அவதிப்படும் பரிதாபம்.
     விவசாயத்தைப் பின்னுக்கு தள்ளிவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து வரும் அரசுகள். விவசாயிகளின் உயிரோடு விளையாடுகிறது இன்று அவர்களின் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமுமில்லை.
3.
சீனாவில் வாராக்கடன் 22, 000 கோடி டாலர்.
     இந்தியாவுக்கு சரிநிகர் சமமாய் தான் சீனாவும் திகழ்கிறது. எல்லா ஆட்சியாளர்களும் கார்பரேட்டுக்களின் கைகளைக் குலுக்கிக் கொண்டு தான் ஆட்சி புரிகிறார்கள்.
4.
உ.பி. 5 – ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 168 பேர் கோட்டீஸ்வரர்கள். 117 பேர் குற்றப் பின்னணி உடையவர்கள்.
     இந்திய ஜனநாயகமே குற்றவாளிகளின் ஆட்சியதிகாரத்தால் கட்டமைப்பட்டு வருகின்றது. இது எதிர்காலத்திற்கு மிகப் பெரிய ஆபத்தாக திகழும் என்பதை அதிகார வர்க்கத்தினர் உணர வேண்டும். இது மிகப் பெரிய எச்சரிக்கையாகவும் கருதி பரிசீலனைச் செய்ய வேண்டும்.
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 26-02-2017.  
தொகுப்பு  ந.க.துறைவன்.

*

Friday 24 February 2017

சிவராத்திரி...!! ( ஹைக்கூ )




Haiku – Tamil / English.
*
பக்தர்கள் விழித்திருந்தார்கள்
பார்வதி காத்திருந்தாள், நடனம்
முடித்து புறப்பட்டான் சிவன்
*
Devotees stay
Parvati and waited, dancing
Shiva went completes

*

கூட்டம்...!!

கூடினார்கள் பேசினார்கள். முந்திரி டீ சாப்பிட்டார்கள்
காரசார விவாதம் தொடர்ந்து பேச்சு வார்த்தை
உடன்பாடு ஏற்படவில்லை. இழுபறி.
தேதி குறிப்பிடாமல் கூட்டம் கலைந்தது.
ந.க.துறைவன்.


Wednesday 22 February 2017

அந்நியன்...!! ( ஹைக்கூ )




Haiku – Tamil / English.
*
கேட்ட குரல் இல்லை
பழகிய குரல் இல்லை
அந்நியன் குரல்.
*
No voice is heard
Not Familiar Voice
The stranger's voice.

*

Monday 20 February 2017

பதில் என்ன?


உரம்...!! ( சென்ரியு )




TEA  TIME  - Senryu – Tamil / English.
*
செடிகளுக்கு உரம்
தூக்கிச் சென்றாள்
டீத்தூள் கழிவு வாளி.
*
Plants fertilizer
Carried
Tea waste bucket.
N.G.Thuraivan.

*

Sunday 19 February 2017

உடைந்து வரும் பிம்பங்கள்...!! ( கட்டுரை )




*
அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ஆட்சியாளர்கள், மன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் சட்டம் நிறைவேற்றுகிறார்கள். அவர்களே அதனை மீறுகிறார்கள். சட்டசபையில் கலவரம் கலாட்டா செய்கிறார்கள். ஊழல் லஞ்சம் என்று பல்வேறு குற்ற செயல்பாடுகளால் தண்டனை பெற்றும் சந்தோஷமாக உலா வருகிறார்கள். ஜாமினில் வெளியே வந்துவிடுகிறார்கள். இவர்கள் தான் சட்டம் இயற்ற ஒப்புதல் அளிக்கிறார்கள் என்பதை என்னும்போது வெட்கமாகவே இருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் அக்காட்சிகளை ஊடகங்களில் காண்கிறார்கள். வாக்காளர்களாகிய அவர்கள் மனதில் என்ன மாதிரியானதொரு பிம்பம் உருவாகும் என்பதை எண்ணிப் பார்ப்பதே இல்லையோ? எப்படியும் பணம் இலவசப் பொருள்கள் அள்ளிவீசியால் /  கொடுத்தால் வாக்களிக்கப் போகிறார்கள் என்ற மனோபாவத்தில் தான் இத்தனையும் செய்ய முயல்கிறார்கள். இதையே தான் சுழற்சி முறையில் எல்லா கட்சிகளுமே செய்து வருகின்றன. இப்படியே எல்லா காலத்திற்கும் தொடர்ந்து செய்துக் கொண்டிருக்க முடியுமா? மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பாடுவதற்கான வாய்ப்பே இல்லையா?
“ அரசியல்வாதிகள் தான் மக்களை நன்கு பரிந்துக் கொண்டு ஏமாற்றுகின்ற தந்திரசாலிகள் ” என்று அறிஞர் ஒருவர் சொன்னக் கணிப்பைப் படித்தது நினைவுக்கு வருகிறது.
எந்தவொரு மனிதனும் அரசியல் சார்ந்துதான் வாழ வேண்டியிருக்கிறது. நான் எந்த அரசியலும் சார்ந்தவனில்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது? சொல்லவும் மாட்டார்கள்.  அதற்காக அரசியல் செய்பவர்கள் எதை வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்று அர்த்தமில்லை. அதை அரசியல் நாகரீகத்தோடு செய்தால் யாரும் வரவேற்பார்கள். மன்னிப்பார்கள். அரசியல்வாதிகள் மீது வெறுப்பு என்பது ஏற்பாடாது. அச்செயல்பாடுகள் நல்லெண்ணத்தைப்  பெறவே உதவிபுரியும்.
இன்று தமிழகத்தில் நடைபெற்று வரும் அவலக்காட்சிகளும், அரசியல் செயல்பாடுகளும் எதிர்கால இளைய சமூதாயத்திற்கு ஆரோக்கியமான அரசியல் தளத்திற்கு, இக்காரியங்கள் விதைகளாக விருட்சமாக அமைந்திடுமா? உதவிடுமா? என்பதை யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்க வேண்டியிருக்கிறது. சமீபத்தில் நடந்த மெரினா தைப்போராட்டம் எதனை உணர்த்துகிறது என்று ஆய்வு செய்துப் பார்க்க வேண்டும்.


ந.க.துறைவன். 

காலம்

நிகழ்காலம்
இருட்டாக இருக்கிறது
கடந்த காலம்
வெளிச்சமாக
இருக்கிறது.


Thursday 16 February 2017

செய்திகள் என்ன சொல்லுது? ( துணுக்குகள் )




*
1.
முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பு.
     இது எத்தனை நாளைக்கு பதவியோ? வாழ்த்துக்கள்.
2.
சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு. திமுக நடத்திய சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
     உங்க கட்சியிலேயும் வழக்கு நிலைவையில் இருக்குங்க. ஞாபமிருக்கட்டும் தலைவரே!
3.
சிறையில் வெள்ளை சேலை சீருடையில் சசிகலா.
     மனம் அமைதி பெற சிறந்த ஆடை வெள்ளை என்பதால் சிறைத்துறை தேர்வு செய்து கொடுத்துள்ளது.
4.
தமிழகம் எனது .இரண்டாவது தாய் வீடு. தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் நெகிழ்ச்சி.
     தமிழக கலாச்சாரமும், பாரம்பரியமும் தலைசிறந்த ஒன்று. இதைக் கண்டு ஆச்சியமடைந்தேன். காதல், வீரம், சுயமரியாதை எல்லாம் தமிழக்தின் அடையாளம். தமிழ்மொழி 5 ஆயிரம் ஆண்டு தொன்மையான பாரம்பரிய மொழி. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே “ யாதும் ஊரே யாவரும் கேளீர் ” என்றும் “ தீதும் நன்றும் பிறர் தர வாரா ” என்றும் சங்ககால தமிழ் புலவர் எழுதியுள்ளார்.
அத்தனை பாரமபரியம், கலாச்சாரம் மிக்க தமிழகத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழகத்தை எனது இரண்டாவது தாய் வீடாகத்தான் கருதுகிறேன்.
     நீதிபதிக்கு எழுதி கொடுத்ததைச் சரியாகவே படித்துள்ளார். போய் வாருங்கள் சார்.
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 17-02-2017.
தகவல் ; ந.க.துறைவன்.

*     

Wednesday 15 February 2017

வழிகாட்டி...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
கப்பல்களுக்கு வழிகாட்டி?
ஒளிரும் குமரியின்
வைர மூக்குத்தி.
*
Guide ships?
The fluorescent Kumari
Diamond nose ring.

*