Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Sunday 19 February 2017

உடைந்து வரும் பிம்பங்கள்...!! ( கட்டுரை )




*
அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ஆட்சியாளர்கள், மன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் சட்டம் நிறைவேற்றுகிறார்கள். அவர்களே அதனை மீறுகிறார்கள். சட்டசபையில் கலவரம் கலாட்டா செய்கிறார்கள். ஊழல் லஞ்சம் என்று பல்வேறு குற்ற செயல்பாடுகளால் தண்டனை பெற்றும் சந்தோஷமாக உலா வருகிறார்கள். ஜாமினில் வெளியே வந்துவிடுகிறார்கள். இவர்கள் தான் சட்டம் இயற்ற ஒப்புதல் அளிக்கிறார்கள் என்பதை என்னும்போது வெட்கமாகவே இருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் அக்காட்சிகளை ஊடகங்களில் காண்கிறார்கள். வாக்காளர்களாகிய அவர்கள் மனதில் என்ன மாதிரியானதொரு பிம்பம் உருவாகும் என்பதை எண்ணிப் பார்ப்பதே இல்லையோ? எப்படியும் பணம் இலவசப் பொருள்கள் அள்ளிவீசியால் /  கொடுத்தால் வாக்களிக்கப் போகிறார்கள் என்ற மனோபாவத்தில் தான் இத்தனையும் செய்ய முயல்கிறார்கள். இதையே தான் சுழற்சி முறையில் எல்லா கட்சிகளுமே செய்து வருகின்றன. இப்படியே எல்லா காலத்திற்கும் தொடர்ந்து செய்துக் கொண்டிருக்க முடியுமா? மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பாடுவதற்கான வாய்ப்பே இல்லையா?
“ அரசியல்வாதிகள் தான் மக்களை நன்கு பரிந்துக் கொண்டு ஏமாற்றுகின்ற தந்திரசாலிகள் ” என்று அறிஞர் ஒருவர் சொன்னக் கணிப்பைப் படித்தது நினைவுக்கு வருகிறது.
எந்தவொரு மனிதனும் அரசியல் சார்ந்துதான் வாழ வேண்டியிருக்கிறது. நான் எந்த அரசியலும் சார்ந்தவனில்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது? சொல்லவும் மாட்டார்கள்.  அதற்காக அரசியல் செய்பவர்கள் எதை வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்று அர்த்தமில்லை. அதை அரசியல் நாகரீகத்தோடு செய்தால் யாரும் வரவேற்பார்கள். மன்னிப்பார்கள். அரசியல்வாதிகள் மீது வெறுப்பு என்பது ஏற்பாடாது. அச்செயல்பாடுகள் நல்லெண்ணத்தைப்  பெறவே உதவிபுரியும்.
இன்று தமிழகத்தில் நடைபெற்று வரும் அவலக்காட்சிகளும், அரசியல் செயல்பாடுகளும் எதிர்கால இளைய சமூதாயத்திற்கு ஆரோக்கியமான அரசியல் தளத்திற்கு, இக்காரியங்கள் விதைகளாக விருட்சமாக அமைந்திடுமா? உதவிடுமா? என்பதை யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்க வேண்டியிருக்கிறது. சமீபத்தில் நடந்த மெரினா தைப்போராட்டம் எதனை உணர்த்துகிறது என்று ஆய்வு செய்துப் பார்க்க வேண்டும்.


ந.க.துறைவன். 

No comments:

Post a Comment