Labels

Haiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (20) கலை (1) கவிதை (332) கவிதை. (7) கவிதைகள். (7) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (2) குறுங்கவிதைகள் (12) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (55) ஹைபுன் (48)

Thursday, 31 December 2015

குளிர்ச்சி...!! ( ஹைக்கூ )

மார்கழி – 31.
*
தீமூட்டி அமர்ந்தனர்
வார்த்தைகளில் குளிர்ச்சி
பனிக் காலம்.
*
மார்கழி – 32.
*
நகரத்தில் கோழி கூவலில்லை
சங்கொலிப்பது கேட்டீரோ?
துயியெழுவீர் தோழியர்காள்.        

*

நல்வாழ்த்துக்கள்....!!

2016 - ,இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.
*
நிகழ்ந்தது, நிகழ்வது, நிகழப்பேவது அனைத்திற்கும் அதிபதியானவனே
இப் புத்தாண்டில் நிகழ்வன எல்லாம் நல்லதாகவே நிகழ்ந்திட அருள்புரிவாய்.
*.

Wednesday, 30 December 2015

துளசிசெடி....!! ( ஹைக்கூ )

மார்கழி – 29.
*
பசுமையாய் துளசிசெடி
மாடத்தில் அகல்விளக்கு
உள்மனதில் பிரார்த்தனைகள்.
*
மார்கழி – 30.
*
பனிசூழ்ந்த நெடுஞ்சாலையில்
யாருக்கு பாதுகாப்பாய்?
வானுயர்ந்த அனுமன்சிலைகள்.

*

Tuesday, 29 December 2015

தீர்த்தம்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 27.
*
கோயில்களில் கொடுப்பதுண்டு
நோய் தீர்க்கும் மருந்தாகும்
துளசி தீர்த்தம்.
*
மார்கழி – 28.
*
ஓடையின் கரையில் அமர்ந்து
பனியில் அலகைச் சிலிப்பிக்
கழுவிடும் சிட்டுக்குருவிகள்.
*

பரிசு...!! ( கவிதை )


*
1.
எனக்கு கொடுக்கப்போகும்
இன்பப் பரிசு என்னவென்று
சொல்லாமாட்டேன்
இரகசியமென்று சொன்னாய்?
உதடு உச்சரிப்பு சொன்ன
அசைவிலிருந்து உண்மைளைப்
புரிந்துக் கொண்டேன்
அதுவாகத் தானிருக்குமோ?
சத்தமற்ற சத்தம்.
* .
2.
நான் வளர்க்கும் பூச்செடிக்கு
உன் பெயர் வைத்திருக்கிறேன்
அது பூக்கும் ஒவ்வொரு பூவும்
உனக்கென்
அன்புக் காதல் பரிசு.  
*

Monday, 28 December 2015

நிலக்காட்சிகள்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 25.
*
காவல் பொம்மைகள்
தலையெலாம் எச்சங்கள்
கழுவி விடுகின்றன பனித்துளிகள்.
*
மார்கழி – 26.
*
ஏருழுதல் கமலை இறைத்தல்
நிலக்காட்சிகள் காணாமல் போனது
நவீன இயந்நதிரங்கள் ஆக்ரமிப்பு.

*

Sunday, 27 December 2015

கவிதை எங்கிருந்து...!!


1.
கவிதையை
வெளியில் தேடாதீர்
அவரவர் வாழ்க்கைக்குள்
இருப்பதுதான் கவிதை.
2.
உங்களுக்குள் இருக்கும் கவிதையைத்தான்
தேடி அலைந்தும்
குழப்பி – குழம்பியும்
பிறர் கவிதையில் காண்கிறீர்கள்.
உங்களுக்குள் இதை
வசப்படுத்தாமல் என்னதான் பேசுகிறீர்.
தேடுங்கள்
உங்களுக்குள் கவிதை கிடைக்கும்.
ஆதாரம் : கள்ளும் முள்ளும் கவிதைகளும் – கோவை ஞானி – பக்கம் 96.
தகவல் :ந.க.துறைவன்.

*

மண் வணங்கும்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 23.
*
தூங்கும் பூக்களின்
உறக்கம் களைத்தெழுப்புவிறது
பொன்வண்டின் ரீங்காரம்..
*
மார்கழி – 24.
*
முற்றிய நெற்கதிர்கள்
பனிநீரின் பாரத்தால்
சிரம் தாழ்த்தி மண் வணங்கும்.

Saturday, 26 December 2015

ரசிகன்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 21..
*
கடலுக்குள் வெண்சங்குகள்
நீர்பரப்பில் அலையோசை
இசையை ரசிப்பானா சூரியன்.
*
மார்கழி – 22.
*
பற்றியெரிந்தனவாய்
குளத்தின் மேற்பரப்பில்
மார்கழி வெண்புகை.

*

கூந்தல் அழகு...!!

வாசிப்பில் ரசித்த வைரவரிகள்.
*
எனது கூந்தல் எவ்வளவு அழகு1 எனப் புகழ்ந்தார்கள். தலைமுடியைத் தவிர அழகென்று சொல்ல என்னிடத்தில் வேறேதுமில்லை.என்பதாக அதனைப் புரிந்துக் கொண்டேன். அத்தனை பாராட்டுக்குதலுக்குரிய அக்கூந்தலை எனது இருபத்து மூன்றாம் வயதில் அதாவது ஐந்து ஆண்டுவளுக்குப் பிறகு அம்மாவைப் பிரிந்திருந்தபோது. பாரீஸ்நகரில், முடிதிருத்ததும் நிலையமொன்றில் வெட்டச்சொல்லி விட்டேன். நான் “ வெட்டுங்கள் ” என்றேன். அவன் வெட்டினான். கண்சிமிட்டும் நேரம், தலைபாரத்தினை குறைக்க முனைத்ததுபோல கத்திரிக்கோல் செயல்பட்டு கழுத்தை உரச, தரையில் விழுந்தது. வீட்டிற்கு எடுத்துச் செல்ல விரும்பினால், பொட்டலாம்  கட்டித் தருவதாகச் சொன்னார்கள். வேண்டாமென்னு சொன்னேன். அச்சம்பவத்திற்குப் பிறகு ஒருவரும் எனது தலைமயிரைப் பற்றி பேசுவதில்லை. அதாவது நீண்ட தலைமயிர் இருக்கையில் வெட்டப்படுவதற்கு முன்னால் என்ன பொருளில் அதைக் குறிப்பிட்டு பேசினார்களோ?அது இல்லை என்றாகிவிட்டது. அதன்பிறகு எனது பார்வையையும், சிரிப்பினையும் புகழ்ந்தார்கள். எனக்கும் அது பரவாயில்லை போலிருந்தது.
ஆதாரம் ; காதலன் – மார்க்கெரித் துராஸ் – தமிழில் : நாகரத்தினம்கிருஷ்ணா.
பக்கம் ; 26.
தகவல  ந.க.துறைவன்.

*  

மூடுபனி...!! ( ஹைக்கூ )

மார்கழி – 19
*.
சில்லென்று மென்காற்று
இலையும் பூவும் குளிரில்
நுனியில் சொட்டும் பனித்துளிகள்.
*
மார்கழி – 20.
*
வெளியெங்கும் மூடுபனி
வீதியில் பஜளைக் கூட்டம்
கடந்து போகின்றன பறவைகள்.
*

வெள்ளி...!! ( ஹைக்கூ )

மார்கழி – 17.                               
*
பனிமூட்டம் சூழ்ந்ததடி
எங்கோ காணாமல் போச்சுதடி      
வானில் முளைத்த வெள்ளி.
*
மார்கழி – 18.
*
குளிக்கும் படித்துறையில்
பெண்களின் சிரிப்பலைகள்
வெட்கத்தில் செந்தாமரைகள்.
*

Friday, 25 December 2015

வாசிப்பில் ரசித்த வைரவரிகள்...!!


*
பிறந்து வளர்ந்த குடும்பச் சூழ்நிலை காரணமாக எனது எழுத்தில் சில நெறிகளை கடைபிடிக்க வேண்டியதாயிற்று. அதுவும் தவிர, எழுத்தென்பது அவர்களுக்கு நீதியைச் சொல்வது, ஒழுக்கங்களைப் பேசுவது, அந்த நிலை இனி இல்லை. எதையும் எழுதலாம். எதையும் எழுதலாமென்றால், இதுதான் சொல்லப்பட்டிருக்கிறது என்று திட்டவட்டமாக அறிவிக்க முடியாதபடி எதையும் எழுதலாம். விளம்பரம் தேடிக்கொள்ளலாம். ஆனால் பெரும்பாலான நேரங்களில இம்மாதிரியான முடிவுகளிலிருந்து நான் மாறுபாடுவதை உணர்கிறேன். இப்போது எனது எழுத்து வெளிக்கு எல்லைகள் இல்லை. பிறர் அறியாமல் தன்னை ஒளிக்கவும். காரியம் ஆற்றவும், வாசிக்கப்படவும் அதற்கு இயலாது. அதை மறைத்து வைக்கவென்று ரகசிய அறைகள் இல்லை. அதன் பாதகங்களள் குறித்து கவலைகொள்ள எவருமில்லை. இதுபோன்ற எண்ணங்கள் இதற்கு முன்பு எனக்குத்தோன்றவும் இல்லை.
ஆதாரம் ; காதலன் – மார்க்கெரித் துராஸ். – தமிழில் ; நாகரத்தினம் கிருஷ்ணா. பக்கம் – 19.
தகவல் ; ந.க.துறைவன்.

*

காதல் கனா....!!

மார்கழி – 15.
*
காதல் கனாக் கண்டவர்கள்
ஆண்டாள் கவிமீரா
கண்ணனின் உயிர்த்தோழிகள்.
*
மார்கழி – 16.
*
பனியில் நிர்வாணச் சிலைகள்
நிழல் கொடுக்கும் மரங்கள்         
பூஉதிர்த்து வணங்கும் கருவிகள்.

சூடிக் கொடுத்த சுடர்கொடி...!! ( ஹைக்கூ )

மார்கழி – 13
*
காதலனுக்கு சூடிக் கொடுத்தாய்
பாமரர்க்குப் பாடக் கொடுத்தாய்
கன்னியரை வீதிக்கு அழைத்தாய் தோழி.
*
மார்கழி – 14.
*
கீழ்வானம் வெளுத்து வாசல்தெளித்து
வீடுகள் திறந்தன காண். உள்ளே
உடல் சலிக்கும் பெண்குலங்கள்.
*

அழகு பராமரிப்பு...!!

வாசிப்பில் ரசித்த வைரரிகள்.
*
பெண்களின் அழகைக் கூட்டவோ குறைக்கவோ ஆடைகளால் இயலாது. அவ்வாறே அழகுப் பராமரிப்போ, களிம்புகளுக்குக் கொடுக்கப்படும் விலையோ, அரிதென்று கருதப்படுபவையோ, அலங்காரங்களுக்கான விலையோ நமது அழகைத் தீர்மானிப்பதல்ல. அதைத் தேட வேண்டிய இடம் வேறு. .இவைகளை அனைத்துக்கும் மேலானதாக ஏதோவொன்று இருக்கிறது. எது? எங்கே? என்பதை நானறியேன். ஆனால், பெரும்பாலான பெண்கள் நம்பிப் கொண்டிருக்கிற இடத்தில் மட்டும் அது இல்லையென்று திட்டவட்டமாக சொல்ல முடியும்.
ஆதாரம் ; காதலன் – மார்க்கெரித் துராஸ் – தமிழில் ; நாகரத்தினம் கிருஷ்ணா- பக்கம் – 28.
தகவல் ; ந.க.துறைவன்.

*      

Thursday, 24 December 2015

நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
*
இகழ்பவனைக் கண்டிக்கிறவன் அவமானத்தைப் பெறுகிறான்.
தீயவனைக் கண்டிக்கிறவன் அவன் திட்டுக்களைப் பெற்றுக் கொள்கிறான்.
*
இகழ்பவனைக் கடிந்துக் கொள்ளாதே. அவன் உன்னை வெறுப்பான். ஞானமுள்ளவனைக் கடிந்துக்கொள் அவன் உன்னை நேசிப்பான்.   
*
ஞானமுள்ளவனக்கு அறிவுரை கொடு. அவன் ஞானத்தில் தேறுவான். நீதிமானுக்குப் போதனைசெய், அவன் அறிவில் விருத்தியடைவான்.
பைபிள் நீதிமொழிகள்.

*

தும்பிகள்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 11.
*
கோபுரத்தில் புறாக்களின் குரல்
பூசைமணிச் சத்தம் மேட்டு
துதித்துப் பறந்தன தும்பிகள்.
*
மார்கழி – 12.
*
வைகறை நீராடி கூந்தல்முடித்து
ஆண்டாளின் தோழி
பாடிக் களித்தாள் திருப்பாவை.

*

Wednesday, 23 December 2015

உரையாடல்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil [ English.}
*
உணவு மேசையில்
கரண்டிகள் பேசின
நின்றது உரையாடல்.
*
Food on the table
Talked with spoon
Conversation stopped.

*

சிறுவண்டுகள்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 9.
*
பசுக்கள் பால் கறக்கும்
எருமைகள் மேயப் போகும்
வயல்களை மறைத்தது பனிப்புகை.
*
மார்கழி – 10.
*
பூக்களின் மேல் சிறுவண்டுகள்
விரட்ட மனம் வரவில்லை தோழி
பறிக்கத் துணிவு கொடு கண்ணா!.
*

Tuesday, 22 December 2015

கம்பீரம்....!! ( கவிதை )


*
கொடியில்
துவைத்த உள்ளாடைகள்
தொங்கிக் கொண்டிருந்தன
வெட்கப்பட்டு
உட்கார வந்தக் காகம்
நினைத்தது
மனித மனங்களின்
ஆசைகள் எண்ணி
*
 ஆண்மையின்
கம்பீர நிலை
ஆன்மீகத்தின்
ஆனந்த நிலை
இந்தியப் பாரம்பர்யப்
பரதக் கலை
வடிவமே
நடராஜரின்
நடனச் சிலை.
*

Monday, 21 December 2015

வலம்புரிசங்கு...!! ( ஹைக்கூ )


*
ஆழ்கடலில் மூச்சடக்கி
ஆயுட்காலமெலாம் எவர்க்காக?
உயிர் வாழ்கிறது வலம்புரிசங்கு.
*
வாயினால் பாடி
மனத்தினால் சிந்திக்க, நாளும்
சித்திக்குமாம் சிவனருள்.

*

Sunday, 20 December 2015

வெளிமனம்...!! ( கவிதை )


*
மனமது செம்மையானால்
மருந்துகள் எதுவும் வேண்டாம்.
*
மகிழ்ச்சியாயிருக்க விரும்புகிறான்
இருக்க விடுவதில்லை வெளிமனம்.
*
குற்றம் பார்க்கின் சுற்றமில்லை
சுற்றம் பார்க்கின் குற்றமில்லை.
*  
பகை பங்காளிகளாய் பிரிக்கிறது
வெறுப்பு வெறுப்பவரை அழிக்கிறது.
*
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தி
சித்திக்கு அதிகாரம் கிடைத்தால் எஜமானி.
*

Saturday, 19 December 2015

மார்கழி...!! ( ஹைக்கூ )


*
விடியல் பனிப் பொழிவு
நீராடும் குருவிகள்
வீதியில் திருப்பாவை ஓசை.
*
ஈர்க் குளிரில் பூக்கள்
நோன்பு பாவையர்கள் வலம்
கைகளில் கற்பூரத் தீபம்.
*
பனிக்காற்றின் இசைக் கேட்டு
குடம் நிறைக்கும் பசுக்கள்.
கழுத்து மணியசைக்கும்.
*

விஞ்ஞானம் பறித்துக் கொண்டது
அழகிய மங்கையர்கள்
தயிர்கடையும் மத்தோசை.

*

Wednesday, 16 December 2015

மார்கழி - உலக சர்வமத மாதம்...!!

ஹைபுன்

*
பருவகாலங்களில் மார்கழி பனிக்காலம் இயற்கை மனிதர்களுக்கு வழங்கிய அருட்கொடை.எனலாம். ‘ மாதங்களில் மார்கழி நான் ‘ என்கிறான் பகவத்கீதையில் கண்ணன்.. மார்கழி மாதத்தை எல்லா ஆன்மீக இலக்கியங்களும்  மிகப் போற்றி விதந்தோதுகின்றன. ஆண்டாள் மார்கழியில் மாதவனை துயில் எழுப்புகிறாள். சோம்பித் துயிலும் பெண்தோழிகளை எழுப்பி, விழி்ப்புணர்வையூட்டித் துணைக்கு அழைக்கிறாள். ஏசுவின் பிறப்பு, இஸ்லாமின் மிலாடி நபி என விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மார்கழி மாதம் உலகெங்கும் உள்ள ஆன்மீகவாதிகளின் புனித மாதமாகவும் திகழ்கின்றன.என்பதை வரலாற்றில் என்றும் காணலாம்.
*
1.                              
அமைதி மௌனம் சக்தி தரும் ` 
ஆன்மீக உலகம் போற்றும்      
மாதம் மார்கழி. 
*
2.
ஆண்டாள் போற்றும்
ஆன்மீக மாதம். 
மார்கழி்   
ந.க.துறைவன்.

ஹைபுள்...!!


*
மார்கழி – உலக சர்வமத மாதம்.
*
பருவகாலங்களில் மார்கழி பனிக்காலம் இயற்கை மனிதர்களுக்கு வழங்கிய அருட்கொடை.எனலாம். ‘ மாதங்களில் மார்கழி நான் ‘ என்கிறான் பகவத்கீதையில் கண்ணன்.. மார்கழி மாதத்தை எல்லா ஆன்மீக இலக்கியங்களும்  மிகப் போற்றி விதந்தோதுகின்றன. ஆண்டாள் மார்கழியில் மாதவனை துயில் எழுப்புகிறாள். சோம்பித் துயிலும் பெண்தோழிகளை எழுப்பி, விழி்ப்புணர்வையூட்டித் துணைக்கு அழைக்கிறாள். ஏசுவின் பிறப்பு, இஸ்லாமின் மிலாடி நபி என விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மார்கழி மாதம் உலகெங்கும் உள்ள ஆன்மீகவாதிகளின் புனித மாதமாகவும் திகழ்கின்றன.என்பதை வரலாற்றில் என்றும் காணலாம்.
*
1.                              
அமைதி மௌனம் சக்தி தரும் ` 
ஆன்மீக உலகம் போற்றும்      
மாதம் மார்கழி. 
*
2.
ஆண்டாள் போற்றும்
ஆன்மீக மாதம். 
மார்கழி்   
ந.க.துறைவன்.

மாரகழி - உலக சரவமத மாதம்...!! ( ஹைபுன் )


*
பருவகாலங்களில் மார்கழி பனிக்காலம் இயற்கை மனிதர்களுக்கு வழங்கிய அருட்கொடை.எனலாம். ‘ மாதங்களில் மார்கழி நான் ‘ என்கிறான் பகவத்கீதையில் கண்ணன்.. மார்கழி மாதத்தை எல்லா ஆன்மீக இலக்கியங்களும்  மிகப் போற்றி விதந்தோதுகின்றன. ஆண்டாள் மார்கழியில் மாதவனை துயில் எழுப்புகிறாள். சோம்பித் துயிலும் பெண்தோழிகளை எழுப்பி, விழி்ப்புணர்வையூட்டித் துணைக்கு அழைக்கிறாள். ஏசுவின் பிறப்பு, இஸ்லாமின் மிலாடி நபி என விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மார்கழி மாதம் உலகெங்கும் உள்ள ஆன்மீகவாதிகளின் புனித மாதமாகவும் திகழ்கின்றன.என்பதை வரலாற்றில் என்றும் காணலாம்.
*
1.                               2.
அமைதி மௌனம் சக்தி தரும் `  மார்கழி
ஆன்மீக உலகம் போற்றும்       ஆண்டாள் போற்றும் 
மாதம் மார்கழி.                  ஆன்மீக மாதம்.      

ந.க.துறைவன். 

Tuesday, 15 December 2015

வாசிப்பில் ரசித்த வரிகள்...!!


*
இரவில் மூழ்கி, சூன்யமொன்றில் அமிழ்ந்து, எந்தப் பூமியைச் சார்ந்திருந்ததோ அப்பூமியே பிரசவித்ததுப் போல கன்னங்கறேலெ்ன்றிருந்த வெளியில் காற்று சுழன்று அடித்தது. ஆண்டுகள் பலவாகப் பயணித்ததுப்போல காற்றுகொள்ள புழுதி மண்டலம் தொடுவானத்தின் மறுகரையில் எரியுண்ட நடசத்திரங்களும் ( black dwarf ) பழுத்துதிர்நத இலைகளும், சுழற்காற்றில் சிக்கித் தவிக்கின்றன. புடத்தில் உருக்கி எடுத்ததுபோல காட்சிகள்; எலும்புகள் அரக்குபோல இளகின. மூளைகளில்  இரத்தம் உறைந்தது. வழிதவறிய அலைகழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான உயிர்கள் ஒருமித்த குரலில் புலம்புவதுபோல ஒரு குரல். இருள் மூடிய ஆழமான அடர்த்தியான புகைமூட்டம். மனிதர்கள், காலங்களென்று எதுவுமற்ற சபிக்கப்பட்ட வெளி. வெறுப்பூட்டும் சூன்யம், நடுங்கச்செய்யும் குளிர். அச்சுறுத்தும் சூறைக்காற்று. அகன்ற வெண்திரை பின்னணியில் ஆகாயத்தில் ஒளிப்பட்டையைத் தீட்டியவண்ணம் முன்னேறும் மின்னல்.அனைத்துடனும் மோதிப்பார்ப்பதெனத் தீர்மானித்ததுபோல இரு மனித உயிர்கள். இடியுடன், திடீரென பெய்த மழையில் பூமி நனைந்தது. அனைத்தும் மூர்ச்சையாயின. வாயடைத்து, பதட்டத்துடன், குளிரைப் போர்த்திக்கொண்டிருந்த அம்மனிதர்களன்றி வேறு ஜீவன்கள் அங்கில்லை.
ஆதாரம் : உலகங்கள் விற்பனைக்கு – அதிர்வுக் கதைகள் - தமிழில் ; நாகரத்தினம் கிருஷ்ணா. – பக்கம் 40.
ரசித்தவர் ; ந.க.துறைவன்.

Monday, 14 December 2015

நக்கீரன்

ஹைக்கூ படித்தான் தருமி
அரசவையே ரசித்தது
குற்றம் கண்டான் நக்கீரன்.


Saturday, 12 December 2015

குரல்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
கேட்ட குரல் இல்லை
பழகிய குரல் இல்லை
அந்நியன் குரல்“
*
No voice is heard
Not Familiar Voice
Stranger voice

*

Friday, 11 December 2015

மழை...மழை... எங்கே பிழை...?? ( புதுக்கவிதை )


*
இனிய குரல் கொடுத்து எனை
அழைக்கும் சிநேகிதர்களைப்
பார்த்துப் இருபது நாள்களாயிற்று.
மழைவெள்ளப் பெருக்கின்போது
எங்கே போயிருந்தன?
அந்தமனப் பறவைகள்.
வெள்ளநீர் பார்வையிடப் போயிருந்ததா?
அணைகள் ஏரிகள் உடைப்புப் பார்த்து
ஆத்திரம் கொண்டு சிலிர்த்ததா?
விளைநிலங்களைப் பார்த்து அழுததா?
வாழ்நாளில் சேகரித்தப் பொருள்கள்
வாரிச்சுருட்டிப் போன அவலத்தைப்
பார்த்துக் கதறியழுததா?
கோரமுகங்காட்டியப் பேயாய் பாய்ந்து
மனிதஉயிர்களைப் பலிகொண்டதைப்
பார்த்து பதறித் துடித்ததா?
உணவின்றி நீரின்றி உறக்கமின்றி
அல்லல்பட்டவர்களைப் பார்த்து
ஆவேசப்பட்டதா?
மின்சாரமின்றி போக்குவரத்தின்றி
வீட்டுச் சிறையிலிருந்த மனிதங்களின்
இருட்டில் வாடிய முகங்களைப் பார்த்துக்
கண்ணீர் வடித்ததா?
நிவாரணப் பணியில் இயங்கும் சமூகத்
தொண்டர்களின் செயல்களின்
அர்ப்பணிப்புப் பாராட்டி உதவிக்கு துணை நின்றதா?
இன்னும் இயல்பு திரும்பாதா? என
ஏங்கித் தவிக்கும் மனிதக் கவலைகளை
எண்ணி ஆறுதல் சொல்லித் திரிந்ததா?
எப்பொழுதேனும் மகிழ்ச்சி தரும் நீர்த்துளிகள்
இப்பொழுது மட்டும் ஏனிந்த கோரமுகம்.
காட்டி பயமுறுத்தி விட்டது இப்பெருமழை….!!

Thursday, 10 December 2015

என்னவாகலாம்...??


*
எம்.பி.பி.எஸ்.படித்தால் மருத்துவர் ஆகலாம்
பி்.ஈ படித்தால் பொறியாளர் ஆகலாம்
பி.எல். படித்தால் வழக்கறிஞர் ஆகலாம்
ஐ.ஏ.எஸ். படித்தால் மாவட்டஆட்சியர் ஆகலாம்
எதுவுமே படிக்காமல் மந்திரி ஆகலாம்
ஆனால், என்ன படித்தால் மனிதர் ஆகலாம்
மனிதரைப் படித்தால்தான் நாமும் மனிதராகலாம்.
ஆதாரம் : “ முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே…! ”  நா.முத்துநிலவன் – நூல் – பக்கம் 62.
தகவல் : ந.க.துறைவன்

*

அழகு...!! ( ஹைக்கூ )


*
குளத்திற்குள் எத்தனை நாளிருந்தாலும்
தவளை அறிவதில்லை
தாமரையின் அழகு.
நா.முத்துநிலவன் – ‘ முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே..! “ – நூல் – பக்கம் 65.
தகவல் ந.க.துறைவன்.

*

Wednesday, 9 December 2015

அழகிய எளிமை...!!


*
எளிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை ஒரு புனித வாழ்க்கை.
அதிக அமைதியான வாழ்க்கை.
மிகக் குறைந்தச் சண்டை சச்சரவு வாழ்க்கை அது.
ஒ, என்ன அற்புதமான உண்மைகள் வெளிப்படுகின்றன.
முன்னர் தோல்விகண்ட திட்டங்கள் இப்பொழுது வெற்றி அடைகின்றன.
ஒ, வாழ்க்கை எவ்வளவு அழகானதாக இருக்கும்
அழகிய எளிமை.
ஆதாரம்  அமைதி யாத்திரியின் “ அமைதிய ” என்ற நூல் பக்கம் 116.
தகவல் ” ந.க. துறைவன்

*

Sunday, 6 December 2015

அதிர்ச்சி

புயல்மழையின் மிரட்டல்
புரியாமல் தவிக்கின்றறனர்
மனஅதிர்ச்சியில் மக்கள்.


Saturday, 5 December 2015

குள்ளன்...!!


*
ஒரு முறை முல்லா நசிருதீன் ஒரு சர்க்கஸ் கம்பனி நிர்வாகியைச் சந்தித்து வேலைக் கேட்டார்.
“ நான் ஒரு குள்ளன். என்னை உங்கள் சர்க்கஸில் வேலைக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ”
முல்லாவை அந்த நிர்வாகி மேலும் கீழும் பார்த்துவிட்டு எரிச்சலுடன் சொன்னார்.
“ என்ன நீ குள்ளனா?. ஆறடி இரண்டு அங்குலம் உயரம் இருப்பாய் போல் இருக்கிறது….”
“ ஆமாம், அதுதான் என் உயரம். ஆனால் இந்த உலகத்திலேயே மிகவும் உயரமான குள்ளன் நான்தான் ”.
ஆதாரம் : ஓஷோவின் “ பாதை சரியாக இருந்தால்…. ” – என்ற நூல் – பக்கம் – 224.
தகவல் ; ந.க.துறைவன்