Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Sunday 28 September 2014

ஹியர்போன்...!! [ கவிதை ]


*
அவசர அவசரமாக
பேசிக் கொண்டிருந்தாள்
சற்றே கோபமாய்
அச்சமில்லைாமல்
கேட்டுக் கொண்டிருந்தார்
அருகில் நின்ற மனிதர்.
*
யார் என்ன சொன்னாலும்
யார் கூப்பிட்டாலும்
கேட்பதில்லை?
அவள் காதில்
ஹியர்போன் இருப்பதால்…
*
கடுகடுப்பாக இருந்தவளைச்
கலகலவென
சிரிக்க வைத்தது
செல் பேச்சு.
*

Tuesday 23 September 2014

வசிப்பு...!! [ ஹைக்கூ ]


*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
ஆழ்ந்தப் புத்தக வாசிப்பு
வரிகளின் வசீகரிப்பு
இடையிடையே புன்சிரிப்பு.
*
பெண்ணின் கண்ணீராய்
சொட்டிக் கொண்டிருந்தது
தெருக் குழாய்.
*
கைக் கூடி வந்த பின்
எதையோ செய்யத் தூண்டுகிறது
ஏதோவொரு அதீத நினைப்பு.
- ந.க. துறைவன் ஹைக்கூக்கள்.

*

கேள்வி - பதில்...!!

*
சிந்தனைக்கு விருந்தாகும் இக்கேள்வி – பதில் – களைப் படித்துப் பாருங்கள்.
நமக்குள் என்ன நிகழ்கிறது என்று நினைத்துப் யோசியுங்கள்.   
*
தேனை விட இனிமையானது எது? வாளை விட கூர்மையானது எது? விஷத்தை விட உடலில் வேகமாகப் பரவுவது எது? ஒரு நிமிடச் சுகம் எது? முடியாத கடன் எது? சுடுகாட்டுக்குப் போகும்போது பின்தொடர்கிற வேதனை எது? குடும்பஸ்தனின் தீராத துக்கம் எது? வாழ்க்கையில் கொடியது எது? தீராத நோய் எது? மறைக்க முடியாத அவமானம் எது?
தயா பதில் சொன்னாள் வரிசையாக:-
*
குழந்தைகளின் தூய அன்பு தேனை விட இனியது. வாளை விட கூர்மையானது நாக்கு. விஷத்தை விட வேகமாகப் பரவிப் பாதிப்பது கண்திருஷ்டி. காமத்தின் சந்தோஷம் ஒரு நிமிஷமே நிலைத்திருக்கும். ஏழு நாட்களுக்கு நிலைத்திருக்கும் சந்தோஷம் கல்யாண வைபோகம். கொடியவனுக்கு விட்டுத் தள்ள முடியாத கடன் மரணம். அவன் சந்ததியின் கெட்ட நடவடிக்கைகள். ஒருவன் இறந்த பின்பும் பின்தொடரும் குடும்பஸ்தனின் தீராத துக்கம் மோசமான வேலைக்காரன்தான். தரித்திரம்தான் வாழ்ககையில் கொடியது. தீராத நோய் துஷ்டபுத்தி. அழிக்க முடியாத மானக்கேடு சந்ததியினருக்கும் ஏற்படுகின்ற களங்கம்.
*
ஆதாரம் : - பிரபல மலையாள எழுத்தாளர்..எம் டி. வாசுதேவன் நாயர் எழுதிய “ தயா ” – என்ற நூல். மொழிபெயர்ப்பு :- உதயசங்கர் – சசிதரன்.
பக்கம். 26.
உங்களுக்காக வழங்குபவர் : -  ந.க.துறைவன்.

*      

Monday 22 September 2014

நினைவலைகள்...!! [ கவிதை ]


*
மனச்சிறகை விரித்து அன்றொரு நாள்
அந்த மலைக் கோயிலுக்குப்
போனோம் ஞாபகமிருக்கிறதா?
மெல்ல மெல்ல படிகளில் ஏறியேறி
இயற்கையின் எழிலைப் பார்த்துப்
பார்த்து வழி நடந்தோம்.
எத்தனை எத்தனை கண்ணைக்
கவரும் அழகிய காட்சிகள்.
மறக்கமுடியுமா?
*
இளைப்பாற கொஞ்சநேரம்
கற்பாறையின் மீது அமர்ந்தோம்.
வி்ண்ணும் வெளியும் வெப்பமும்
மரங்கள் வீசும் காற்றை நுகர்ந்து
சுவாசித்து என்னவெல்லாம்
சலிப்பின்றி பேசினோம்
நினைவிருக்கிறதா?
*
இன்னும் மேலே ஏறினோம்
கோபுர வாயில் வரவேற்றது
அண்ணாந்துப் பார்த்து வியந்து
உள்நுழைந்தோம்.
மூலவரைத் தரிசித்து விட்டு
வெளியில் வந்துப் பிரகாரம் சுற்றுச்
சுவரில் பதிக்கப்பட்டிருந்தக்
கற்சிலைகளின் ஒவ்வொன்றையும்
ரசித்து நகர்ந்தோம்.
*
அச்சிலைகளின் வடிவமைப்பு
கண்களின் நயப்பார்வை
கைகளின் அபிநயனம்
ஆணோடு மார்தழுவிய கொஞ்சல்
வெட்கத்தில் தலைக்கவிழ்ந்து
நாணம் இப்படி எத்தனையோ
அழகழகானச் சிற்பங்களின்
அழகில் மனம் லயித்தோம்
நினைவிருக்கிறதா?
*
அத்தனையும் அந்த கற்சிலைகளை
வடித்தக் கலைஞனின் அகமனக்
கற்பனைக் கனவா? நிஜமானக் கனவா?.
அந்த அற்புதச் சிலைகளின்
கனவாய் நம் காதல் கனவும்
நிறைவேறுமென்று எத்தனை
நம்பிக்கையோடு காத்திருந்தோம்.
நினைவிருக்கிறதா?
*
நம் நம்பிக்கையைக் குலைத்த
சூறாவளி எது? கூனி யார்?
எப்படிப் பிரிந்தோம் என்பதை
நினைத்துப் பார்க்கவே இயலாது
நெஞ்சம் பதறித் தவித்தோம்.
அழுதோம் கதறினோம் பிரிந்தோம்
நெஞ்சம் மறந்தோமா?
இதோ, நாற்பதாண்டு காலம்
இலைகள் உதிரும் நேரமாய்
கடந்துப் போய்விட்டது.
இப்பொழுது நீ எங்கோ?
நான் எங்கோ? தனித்திருந்தாலும்
உன்னுள்ளும் என்னுள்ளும்
நிறைந்திருக்கும் நினைவலைகள்
அழித்திட முடியுமா? - அதை
நம் மரணம் மட்டுமே அழிக்கும்.
*


Sunday 21 September 2014

பழைய டைரி ...!!


*                     
பரணையிலிருந்து கிடைத்தது
தாத்தாவின் பழைய டைரி
பிரித்துப் படித்தால்
பக்கமெல்லாம் எழுதியிருந்தது
கடன் கணக்கு.
*
அந்தக் காலத்துப்
பாட்டிகளெல்லாம்
குடும்பத்திற்கு
வழிகாட்டிகள்
இப்பொழுது
அனைவருக்கும்
அவர்கள் வெறும்
மூதாட்டிகள்.
*
தாத்தா நிலம்
வாங்கிப் போட்டார்.
அப்பா வீடு
கட்டி வாழ்ந்தார்.
விற்று தீர்த்தான்
குடிகார மகன்.
*

Saturday 20 September 2014

பறத்தல்...!! [ ஹைக்கூ ]

*
NA.GA. YHURAIVAN'S HAIKU.
*
நினைவுகளிலிருந்து எழுகிறது
அவ்வப்பொழுது மறக்காமல்
மறக்க நினைத்தச் சம்பவம்.
*
இடுப்பிலிருந்தக் குழந்தை
கீழே இறங்கியோடியது
பறந்து விட்டது சிட்டுக்குருவி.
*
பார்க்காமலிருக்க முடியாது?
பார்த்தாலும் யாருக்கும் தெரியாது?
விண்ணில் கிரகங்கள்.

*

உணர வைக்கும்...!! [ கவிதை ]


.*
எதற்காக சட்டென
நீ கோபித்துக் கொள்கிறாய்?
கோபித்துக் கொள்வது
தவறில்லை.
கோபம் மனஇறுக்கத்தைக்
கொடுக்கும் நோய்.
கோபத்திற்கு மாமருந்து
மௌனம்.
மௌனத்திற்குப் பிறகான
உன் முகம் சூரியகாந்தியாய்
பிரகாசிக்கிறது
கோபம் பனிப்போல் மறைந்து
உன்னை உணர வைக்கும்
உன்னுள்
புதிய சிந்தனைப் பிறக்கும்.
புரிந்துக் கொள்.
புரிந்து இணைய வைப்பதே
காதல்.

*

Friday 19 September 2014

பொட்டு...!!

*
நெற்றில் வைத்த குங்குமப் பொட்டு
வியர்வைியல் கரைகின்றது
ஸ்டிக்கர் பொட்டு கரைவதில்லை.
செயற்கையாகின்றது
இயற்கையான வாழ்க்கை

*

வில்...!! [ ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
இலையும் தெரியவில்லை
கிளியும் தெரியவில்லை
பாய்ந்தது அர்ச்சுனன் வில்.
ந.க. துறைவன் ஹைக்கூ.

*

Thursday 18 September 2014

பதிவுகள்...!! [ சென்ரியு ]

*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
வலிமையான நட்புடன்
இரகசியங்கள் பாதுகாத்தார்கள்
உயிர்த் தோழிகள்.
*
மரணம் வரைக்கும் அழியாதது
நட்பின் தொடர்ச்சி
நினைவு அடுக்கின் பதிவுகள்.
ந.க. துறைவன் சென்ரியு.
*

மறதி...!! [ கவிதை ]


*
புதிய மாற்றத்தை விரும்புகிறார்கள்
பழமையை மறவாமல் மக்கள்
*
மழை வரும்போது எடுத்துவர
மறந்து மறந்து போகிறது குடை.
*
எப்பொழுதுமே காதலர்களின் வாழ்வு
ஆறாத ரணகாயம்
*
வீட்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில்
வெற்றி பெற்றாள் செல்ல மகள்.
*
அதிகாரியின் திறனறிந்து
சகாயம் காட்டுகிறது நீதிமன்றம்.

*

Wednesday 17 September 2014

ந.ட்புடன்...!! [ சென்ரியு ]

*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
அறிமுகம் இல்லாதவரை
அறிமுகப் படுத்தினார்
அறிமுகமான நண்பர்.
*
பால்ய சினேகிதனிடம்
மனம் திறந்து சொன்னான்
மனசை அழுத்தும் பிரச்சினைகள்
*
துன்பத்தில் ஆறுதல்
இன்பத்தில் மகிழ்ச்சி
பகிர்ந்துக் கொண்டனர் நண்பர்கள்.
*
வலிமையான நட்புடன்
இரகசியங்கள் பாதுகாத்தார்கள்
உயிர்த் தோழிகள்.
*
மரணம் வரைக்கும் அழியாதது
நட்பின் தொடர்ச்சி
நினைவு அடுக்கின் பதிவுகள்.
*


Tuesday 16 September 2014

பாசமாய்...!! [ சென்ரியு ]

*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
அப்பாவை விரும்புகிறாள் மகள்
அம்மாவை வெறுக்கிறான் மகன்
ஆதிக்கம் செய்கிறது உளவியல்.
*
எட்ட நின்று  பார்க்கும் குழந்தை
அம்மாவின் மடியில்
வளர்ப்புப் பூனை.
*
கணவனின் கோபத் தெரிப்பு
மனைவி அழுகிறாள்
அருகில் சிரிக்கிறது குழந்தை.
*
அடிக்க வரும் அம்மாவை
வெறுப்பேற்றுகிறான்
குறும்புக்காரப் பாச மகன்.
*
பெண்ணின் துயர மனமாய்
காற்றில் பறந்துக் காய்கிறது

கொடியில் துணிகள்.

அடைக்கலம்...!! [ கவிதை ]


*
வாய்விட்டு சொல்லாமல்
மனசுக்குள்ளேயே வைச்சி
எத்தனையோ பேருக்கு
இரகசியமாய்
அடைக்கலம் கொடுத்து
பாதுகாத்திருக்கின்றது
மௌனமான – அந்த
மறைவான
மலைக் குன்றுகள்…!!..
*



Sunday 14 September 2014

அத்திப் பழம்…!!


*
தவளைகள் தூங்கவில்லை
இரவெல்லாம் கனத்த மழை.
*
வண்டுகள் பொய் சொன்னாலும்
செவிமடுப்பதில்லை பூக்கள்.
*
உள்ளே புழு பூச்சிகள் நெளிகிறது
இனிக்கும் அழகான அத்திப் பழம்.
*
நெருப்பென்றால் வாய் சுடும்
ஐஸ் என்றால் வாய் இனிக்கும்
*
வெளியில் தெரியாது எப்பொழுதும்
உள்ளிருக்கும் பொறாமை.
-ந.க. துறைவன் கவிதைகள்.

*

Saturday 13 September 2014

வாத்துக்கள்...!! [ சென்ரியு ]


*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
மருத்துவ பயிற்சி முகாமுக்கு சென்று
இலவச பரிசோதனைச் செய்துக் கொண்டன
வயது முதிர்ந்த வாத்துக்கள்.
*
வீடு காலி செய்தபோது
கிடைத்தது பாட்டியின்
பாக்கு இடிக்கும் உரல்.
*
போக்குவரத்து மாற்றம்
திணறி தவிக்கின்றன
தெரு மாடுகள்.
ந.க. துறைவன் சென்ரியுகள்.
*

Friday 12 September 2014

மழை நாள்...!! [ ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
சன்னலோரம் ஓதுங்கியது
மழையில் நனைந்து ஈரமாய்
சிட்டுக் குருவிகள்.
*
இன்றும் நினைவிலிருக்கிறது
இருவரும் தொப்பலாய் நனைந்த
அந்த மழை நாள்.
*
எங்கும் ஒரே மாதிரியாய்
பெய்வது ஒய்வதில்லை
பருவ மழை.
*


கம்மங் கதிரு...!! [ கவிதை ]



காடுகழனிப் பார்த்து ரொம்ப
வருஷமாச்சின்னு
காலார நடந்துப் போய்
பார்த்து வரலாமுன்னு
நினைச்சி புறப்பட்டுப் போனேன்.
பச்சை பசேல்லுன்னு அங்கே
பசுமையான அழகு காட்சி.
வரப்பிலே நடந்து போகையில்
குருவிங்களெல்லாம் உற்சாகமா
தலைக்கு மேலே பறக்கின்றன.
வரப்பிலிருந்தவாறே
செண்டாக முதிர்ந்த ரெண்டு
கம்மங் கதிரை கைநீட்டி பறிச்சி
உள்ளங்கையில் வைச்சி
நுமிட்டி நுமிட்டி ஊதி ஊதி
வாயிலிட்டுச் சுவைத்தேன்
பச்சைக் கதிரி்ன் பால்சுவை
அத்தனையும் ருசியான
தெவிட்டாத தேன்சுவை.
செழிப்பான மண்ணின்சுவை.
மீண்டும் நடந்தபோது எதிரில்
எதிர்ப்பட்டது என் மாணவப்
பருவத்து காதலி.
அவள் இன்று இரண்டு
குழந்தைகளின் தாய்.
அவளின் அழகு முன்னைவிட
மங்கலமாய் பிரகாசிக்கின்றது.
அவளை நலம் விசாரித்து
அவளுக்கே தெரியாமல்
கண்ணீர் வெளியி்ல் தெரியாமல்
வரப்புப் பார்த்து வழிநடந்தேன்
பசுமையான நினைவுகளோடு…!!.
*.


Thursday 11 September 2014

பஞ்ச வர்ண கிளி...!! [ சிறுவர் பாடல் ]


*
கிளியக்கா கிளியக்கா
இலை நிறம் கிளியக்கா
சிறகை விரித்து பறந்து
எங்கே போறே கிளியக்கா !.
*
கோவைப் பழம் தின்னியா?
சிவந்த உதடு கிளியக்கா
எனக்கு ஒரு முத்தம் தா
ஆசைக் கொஞ்சி கிளியக்கா !.
*
பஞ்ச வர்ண கிளியக்கா
பாச முள்ள கிளியக்கா
பேசிப் பேசிப் பழகிடவே
பறந்து வா கிளியக்கா !.
*
மரம் நிழலில் அமர்ந்து
ஒய்வெடுக்கும் கிளியக்கா
நேரம் கிடைக்கும் போது
வீட்டுப் பக்கம் வா கிளியக்கா !.
*
அன்னை மீனாட்சி தோளில்
அழகு செய்யும் கிளியக்கா
அன்பாக என்னோடு பேசி
விளையாட வா கிளியக்கா…!!.

*

இழப்பு...!! [ கவிதை ]


*
இன்னிக்கி மதியம்
சாப்பாட்டு வேளையிலே
வீட்டு முன்புறமிருக்கிற
மரத்திலே வந்து உட்கார்ந்து
கா… கா.. ன்னு கத்திச்சி
காக்கா.
யாரோ உறவுக்காரங்க
வரப்போறாங்கன்னு
நினைச்சிக்கிட்டிருந்தே
வந்தது யார் தெரியுங்களா?
ஏதோ புதிய பொருள்
விளம்பரம் செய்யற
பொண்ணுங்க ரெண்டு
பேர் வந்து நின்னு
அதை வாங்கிக்கச் சொல்லி
ஓரே நச்சரிப்பு.
என்ன பண்றது?
கடைசியா பொருள்
வாங்கின பின்னாலேதான்
எடத்தைவிட்டே 
காலி பண்ணாங்கன்னா?
பார்த்துக்களேன்.
அவங்களுக்கு வருமானம்
எனக்கு சிறு இழப்பு….
*

Wednesday 10 September 2014

காத்திருந்து...!! [ கவிதை ]


*
அட, என்னப்பா கொடுமையிது
புரட்டாசி மாசம் முழுக்கவும்
கல்யாணமே நடக்காதாமே
கல்யாணம் ஆகப்போற
வாலிபன் வாலிபி இவங்க
மனசெல்லாம் என்னமாய்
கஷ்டப்படும் வேதனைப்படும்
கல்யாண ஏற்பாடெல்லாம்
செஞ்சி வைச்சி காத்திருக்கிறது
கொடுமையிலும் கொடுமைப்பா?
என்னமோ ராக்கெட்
வானத்திலே விட்டுக்கிட்டு
ஆராய்ச்சியெல்லாம் பண்ணிக்கிட்டு
விஞ்ஞானம்பத்தி பேசுறோம்.
முற்போக்கா சிந்திக்கிறோம்.
ஆனா, வாலிபங்களின்
மனசிலே இருக்கிற உணர்ச்சிகளை
இன்னும் புரிஞ்சிதாம்
இப்படி செய்றோமா?
மாப்பிள்ளைகளெல்லாம்
ஓண்ணு சேந்து
“ புரட்டாசி ” என்கிற
வார்த்தையிலே இருக்கிற
“ டா ” – வை எடுத்துட்டு
அதையாவது பண்ணுகப்பா?
புரட்டாசிக்குப் பிறகு
காத்திருந்து காத்திருந்துக்
கல்யாணம் பண்ணிக்கப் போற
மாப்பிள்ளைகளுக்கு
எனது அன்பான மணநாள்
நல்வாழ்த்துக்கள்
*


Tuesday 9 September 2014

முன்னேற்றம்...!! [ சென்ரியு ]

*
NA.GA.THURAIVAN'S SENRYU. 
*
கழுதைக்கு கல்யாணம் செய்கிறார்கள்
நாய்க்கு கல்யாணம் செய்கிறார்கள்
முற்போக்காக சிந்திக்கிறார்கள் மனிதர்கள்..
*
எந்த வேலையும் உருப்படியாகச் செய்யாமல்
அலைந்து அலைந்து எங்கும்
நிற்காமல் ஒடுகின்றன நாய்கள்.
 *
வெளியில் போய் வரவே பயம்
அஞ்சுகிறார்கள்  மனிதர்கள்
பாதுகாப்பாக இருக்கின்றது நாய்கள்.
*
எப்பொழுது நடந்ததோ தெரியவில்லை
சம்பவம் யாரும் பார்க்கவி்ல்லை
பாதையில் நசுங்கிக் கிடந்தது நாய்.
*
மனிதர்கள் சைகையில் காட்டுகிறார்கள்
வாலையாட்டிக் காட்டுகின்றது நாய்கள்
அன்புடன் நன்றி.

*

சிரிப்பின் அலை...! [ கவிதை ]


*
குழந்தைகளை
மிரட்டிக் கொண்டிருந்தது
குழந்தைகளும்
விரட்டிக் கொண்டிருந்தார்கள்
கலையவில்லை.
பிறகு, எண்ணெய் பேப்பரைக்
கட்டித் தொங்கவிட்டார் அப்பா.
அதில் ஒவ்வொன்றாகப் போய்
ஒட்டிக் கொண்டுத் தவித்தன
அந்தக் குழல்விளக்கைச் சுற்றி
அலைந்தப் பூச்சிகள். - அதனை
அதிசயமாக வேடிக்கைப் பார்த்தார்கள்
அப்பொழுது மெல்ல அடங்கியது
அப் பூச்சிகளின் தொல்லை
இனிமேல் இல்லையெனக்
கைக்கொட்டி மகிழ்ந்தக்
குழந்தைகளின் சிரிப்பின் அலை…!!

*

வெற்றி...!! [ கவிதை ]



இளமையில் தோல்வி
கல்வியில் தோல்வி
காதலில் தோல்வி
வேலையில் தோல்வி
வாழ்க்கையில் தோல்வி
கடைசியாய்
அவனுக்குக் கிடைத்தது
மரணத்தில் வெற்றி…!!
*

ந.க. துறைவன் கவிதை.
*

Sunday 7 September 2014

அணில் பிள்ளைகள்... !! [ கவிதை ]


காலையிலே
செடிகளின் மேல் மாடியின் மேல்
கேட்டின் மேல்
உற்சாகமாக சந்தோஷமாகத்
தாவித் தாவித் திரிகின்ற
அந்த அழகான
அணில்பிள்ளைகள்
விளையாடுவதைப் பார்த்துக்
கைத்தட்டிச் சிரித்து
மகிழ்கின்றன குழந்தைகள்,
*



Friday 5 September 2014

நிஜம்...!! [ சென்ரியு ]

NA.GA. THURAIVAN'S SENRYU.
*
வாழைப்பழத்தில்
நாற்று நட்டார்கள்
மணக்கும் ஊதுபத்திகள்.
*
சுற்றுச் சூழல் மாநாட்டில்
வாழ்உரிமைக்களுக்கான
கழுகுகளின் ஆவேச உரை
*
நிஜத்தைச் சொன்னான் நம்பவில்லை
பொய்யைச் சொன்னான்
எல்லோரும் பாராட்டினார்கள்.
*
எங்கோ வெறுப்போடுப் போனான்?
என்ன நடந்ததோ தெரியவில்லை
மகிழ்ச்சியோடு திரும்பினான் ஊர்.
*
ஆசையோடு கடைக்குப் போனார்கள்
கடைகள் மூடியிருந்தது திடீரெனக்
குழந்தைக்களுக்கு பெருத்த ஏமாற்றம்.
*

 யு