*
அட, என்னப்பா கொடுமையிது
புரட்டாசி மாசம்
முழுக்கவும்
கல்யாணமே நடக்காதாமே
கல்யாணம் ஆகப்போற
வாலிபன் வாலிபி
இவங்க
மனசெல்லாம் என்னமாய்
கஷ்டப்படும் வேதனைப்படும்
கல்யாண ஏற்பாடெல்லாம்
செஞ்சி வைச்சி
காத்திருக்கிறது
கொடுமையிலும் கொடுமைப்பா?
என்னமோ ராக்கெட்
வானத்திலே விட்டுக்கிட்டு
ஆராய்ச்சியெல்லாம்
பண்ணிக்கிட்டு
விஞ்ஞானம்பத்தி
பேசுறோம்.
முற்போக்கா சிந்திக்கிறோம்.
ஆனா, வாலிபங்களின்
மனசிலே இருக்கிற
உணர்ச்சிகளை
இன்னும் புரிஞ்சிதாம்
இப்படி செய்றோமா?
மாப்பிள்ளைகளெல்லாம்
ஓண்ணு சேந்து
“ புரட்டாசி ”
என்கிற
வார்த்தையிலே இருக்கிற
“ டா ” – வை எடுத்துட்டு
அதையாவது பண்ணுகப்பா?
புரட்டாசிக்குப்
பிறகு
காத்திருந்து காத்திருந்துக்
கல்யாணம் பண்ணிக்கப்
போற
மாப்பிள்ளைகளுக்கு
எனது அன்பான மணநாள்
நல்வாழ்த்துக்கள்
*
No comments:
Post a Comment