*
கிளியக்கா கிளியக்கா
இலை நிறம் கிளியக்கா
சிறகை விரித்து
பறந்து
எங்கே போறே கிளியக்கா
!.
*
கோவைப் பழம் தின்னியா?
சிவந்த உதடு கிளியக்கா
எனக்கு ஒரு முத்தம்
தா
ஆசைக் கொஞ்சி கிளியக்கா
!.
*
பஞ்ச வர்ண கிளியக்கா
பாச முள்ள கிளியக்கா
பேசிப் பேசிப்
பழகிடவே
பறந்து வா கிளியக்கா
!.
*
மரம் நிழலில் அமர்ந்து
ஒய்வெடுக்கும்
கிளியக்கா
நேரம் கிடைக்கும்
போது
வீட்டுப் பக்கம்
வா கிளியக்கா !.
*
அன்னை மீனாட்சி
தோளில்
அழகு செய்யும்
கிளியக்கா
அன்பாக என்னோடு
பேசி
விளையாட வா கிளியக்கா…!!.
*
No comments:
Post a Comment