Labels

Haiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (20) கலை (1) கவிதை (332) கவிதை. (7) கவிதைகள். (7) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (2) குறுங்கவிதைகள் (12) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (55) ஹைபுன் (48)

Thursday, 30 June 2016

கச்சேரி...!! ( சென்ரியு )பொம்மை கல்யாணம்
கலை கட்டியது
ஊமத்தம்பூ நாதஸ்சுர கச்சேரி.

*

கிரகங்கள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
பார்க்காமலிருக்க முடியாது?
பார்த்தாலும் யாருக்கும் தெரியாது?
விண்ணில் கிரகங்கள்.

Can not to?
Who do you look for?
Planets in the sky.
*

Wednesday, 29 June 2016

நண்பனா? பகைவனா?ஒரு குள்ள நரி, தோட்டத்தைச் சுற்றி முள்கம்பி வேலி. குள்ளநரி வேலியைத் தாண்டியது. தவறி விட்டது நரி. உடனே வேலிக்கம்பியைப் பிடித்துக் கொண்டது.
முள்கம்பி கையைக் கீரி, கிழித்து விட்டது. இரத்தம் பெருகி ஓட கதறி ஊளையிட்டது.
“ வேலியே! உன் உதவியை நாடினேன். உதவtவில்லை. எனக்கு காயத்தை ஏற்படுத்திக் கதற வைத்தாயே! சரியா? நியாயமா? ”
“ நண்பா! நீ பெரிய தவறு செய்தாய். என்னை ஏன் பிடித்தாய்? நான் எல்லோரையும் தடுக்கத் தானே இருக்கிறேன். என்னைத் தாண்ட முயன்றதே தவறு? ”
“ ஆம். உண்மைதான், உதவி கேட்டு ஓடி வருவது பெரிய தவறு. இப்போதே உணர்கின்றேன். ”
பாடம் கேட்டேன், கற்றேன். இப்போது நன்கு புரிந்துக் கொண்டேன்.
ஆதாரம் : ஈசாப் நீதிக்கதைகள் – ஆ.மா.சகதீசன் – பக்கம் – 19.
தகவல்  ந.க.துறைவன்.

*

Tuesday, 28 June 2016

கல்வியோ கல்வி...!! ( கட்டுரை )

கல்வி என்பது அறிவு வளர்ச்சி சார்ந்தது. விழிப்புணர்வை உண்டாக்கக் கூடியது. அனைத்து துறைகளைப் பற்றி கற்றறிதல் என்பது கல்வியால் மட்டுமே சாத்தியப்படும். பழங்காலக் கல்வி முறை குருகுலக் கல்வியைச் சார்ந்தே வளர்ந்து வந்திருக்கிறது. அன்று கல்வி கற்க ஒரு குருவிடம் பிள்ளையைக் கொண்டு போய்விடும் பெற்றோர்,  குருவிற்கு காணிக்கையாகக் குருதட்சிணை அளி்த்து, கலாச்சாரப் பண்பாட்டு ரீதியாக சேர்த்து விட்டிருக்கிறார்கள். அந்நாளைய குருவிடம் நேர்மை உண்மை மனசாட்சி கற்பித்தல் மீதான அக்கறை என தீவிர வைராக்கியக் குணம் இருந்திருக்கிறது.  அன்று குருதட்சிணையாகத் தொடங்கியதான் இன்று தனியார்த்துறைக் கல்வி நிறுவனங்களில் பெரும் அன்பளிப்பாக,  நன்கொடையாக மாறி பணம் சம்பாதிக்கும் நோக்கம் வலுப்பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.  இன்றைய கல்வி நிறுவனங்களின் நோக்கம் தரமான கல்வியை அளிப்பதை விட, காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்ற பழமொழி்க்கேற்ப, இச்சந்தர்ப்பத்திலேயே பணத்தைச் சம்பாதித்துக் கொள்வோம் என்று நடுத்தர, மத்தியதர வர்க்கத்தினரிடம் பணத்தை கொள்ளடிக்கிறார்கள். அவர்களும் பிள்ளைகளின் எதிர்காலமாயிற்றே என்று பணத்தை எப்படியாவது சேர்த்து பிள்ளைகளைச் அங்குச் சேர்த்துவிட்டு, பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இன்றைய கல்வியின் நிலைப்பாடு ஆரோக்கியமானதாக இல்லையென்றே சொல்லலாம். கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. அரசு தரப்பில் அங்கீகாரம், கண்காணிப்பு, செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் என பல இருந்தாலும், நிறுவனங்கள் அவையெல்லாவற்றையும் மீறி அரசின் கண்ணில் மிளகாய் தூளைத் தூவிவிட்டு எமாற்றவே செய்து வருகின்றன. கல்விக்காகப் பெற்றோர்களை வசியம் செய்யும் மந்திரம் கல்விநிறுவனர்கள் தெளிவாகவே கற்றறிருந்திருக்கிறார்கள். இன்று அல்லல்படும் மக்களின் குமுறல்களைக் கொஞ்சம் காண்போமா?.

1.
1.மருத்துவம்
2. இன்சினியரிங்.  
3. சட்டம் என  தமது பிள்ளைகளின் மேற் படிப்பிற்காக மத்தியதர வர்க்கத்து மக்கள் சம்பாதித்துச் சேமித்தப் பணமெல்லாம் கல்வி நிறுவனங்களிடம் கொட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் மேலும் மேலும் கடன் வாங்கி வட்டிக் கட்டிக் கடன்காரர்களாக வேறு மாறி வருகிறார்கள்.
2.
மேற்படிப்பிற்காக மாணவ / மாணவிகள் கல்விப் பயிலும்போதே வங்கிகளில்
; கல்விக் கடன் ‘ வாங்கி கடன்காரர்களாகி விடுகிறார்கள். அவர்கள் படித்து, வேலையில் சேர்ந்து, சம்பாதித்தப் பிறகு அக்கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். இளமையிலேயே கடன்சுமையோடு தொடங்குகிறது அவர்களின் கல்வி வாழ்க்கை.  

3.
கல்வி என்பது முழுக்க முழுக்க வியாபாரமாகி விட்ட நிலையில்
பிள்ளைகளின் பெற்றோர்கள் கவலையோடு தவித்து வருகிறார்கள்.

கடந்த இருபது இருபத்தாண்டுகளுக்கு  மேலாக கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள் மிகப்பெரிய கோடிஸ்வரர்களாகி விட்டார்கள்
4.
பட்டம் பெற்ற வெளியில் வந்த உடன் தனியார் நிறவனங்களில் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்துவிட்டு திருப்தியில்லாமல் தவிக்கிறார்கள்.  வசதி படைத்த பணக்கார வீட்டு பிள்ளைகள் தனியாக தொழில் தொடங்கி இலாபமோ நஷ்டமோ தங்களது பெற்றோர்களின் உதவியுடன் தகுதியை உயர்த்திக் கொள்ள தொழில் செய்து முன்னேற முயற்சிக்கிறார்கள்.
5.
கிராமபுறத்து நகர்புறத்து மக்களின்  படித்தப் பிள்ளைகளுக்கோ  உரிய நேரத்தில் வேலை கிடைப்பதில்லை. பெற்றோர்களோ கடனில் கண்ணீர் வடித்து வெம்புகிறார்கள்
6.
இன்றைய கார்ப்பரேட் சந்தை உலகம் எல்லாவற்றையும் வியாபாரமாக்கி விட்டது. அதிலும கல்வி சந்தை என்பது பெருத்த இலாபம் சம்பாதிக்கும் வர்த்தக நிறுவனங்களாகி விட்டன.
7.
மத்திய / மாநில அரசுகள் கல்வியை தனியார்மயமாக்கியதால், அத்தனியார் நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்கள் நாடறிந்த செய்தியாகியிருக்கிறது. அங்கே மாணவ / மாணவிகளைச் சுரண்டும் போக்கும், பாலியல் வன்கொடுமைகளும் சர்வ சாதாரணமாகி விட்டன.. அவர்களுக்கு அங்கு தகுந்தப் பாதுகாப்பு என்பதேயில்லை. அப்படியென்றால் நாட்டில் என்ன தான் நடந்துக் கொண்டிருக்கிறது.
8.
கல்வி வியாபாரப் போக்கினைக் கண்டித்து கல்வியலாளர்களும், நிபுணர்களும் போராடி வருகிறார்கள். உச்சநீதிமன்றமும் தலையிட்டு அவ்வப்பொழுது சீர்திருத்தம் பற்றி கேள்விக் கணைகளைத் தொடுத்து கண்டிக்கவும் செய்கின்றன. ஆனால், அரசு தரப்பின் பதில் என்ன? மௌனம்…. நீண்டதொரு மௌனம்.
9.
இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? விடிவு?
ந.க.துறைவன்.

மரம்.

மரம் வைத்தவர்கள் மறைந்து போகலாம் மரம் மறைவதில்லை.
மரம் - தொகுப்பு - பக்கம் 7.


தெரிந்து கொள்வோம்...!!ருசியை நம்பி புசிக்காதே…!!

ரொட்டி, பன்களில் இம்ப்ருவ் மிக்ஸ் என்ற பெயரில் பொட்டாசியம் புரோமேட்(KBrO3), பொட்டாசியம் அயோடேட் ( KIO3 ) ஆகிய நச்சுப் பொருள்கள் சேர்ப்பதைக் கண்டுபடித்துள்ளனர். மாவில் சேர்ந்த விஷம் ரொட்டியான பின்னும் எஞ்சியுள்ளதைப் பட்டியலிட்டுள்ளனர்.
ஒவ்வொரு வகை ரொட்டியிலும் எவ்வளவு விஷம் எஞ்சியுள்ளது என்ற விவரமும் வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் எவ்வளவு மடங்கு அதிகம் என்ற கணக்கைப் படித்தால் அது ரொட்டி சாப்பிட்டவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கும்.  ,இதோ அந்தக் கணக்கு.
ரொட்டி வகை                  விஷ அளவு
                               ( மில்லியனில் )
ஒயிட் பிரட்                    12 முதல் 17
ஹோல்வீட்பிரட்                3 முதல் 5
பிரவுன் பிரட்                   6 முதல் 8
மல்டி கிரைன் பிரட்             2 முதல் 4
சான்ட்விச் பிரட்                 21
பாவ் பிரட்                      15 முதல் 22
பன்                            17 முதல் 21
பர்கர் பிரட்                     6
பீட்ஸா பிரட்                    7
( அனைத்துலக உணவுப் பாதுகாப்பு தர விதிப்படி, அனுமதிக்கப்படும் அளவு என்பது மில்லியனில் 005 முதல் 010 தான். மேற்படி ரொட்டிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட விஷம் பல நூறு மடங்கு அதிகம் )
ஆதாரம்  ருசியை நம்பிப் புசிக்காதே! – ஆர்.எஸ். நாராயணன் – கட்டுரை – தினமணி – நாளிதழ் – 28-06-2016.
தகவல் ; ந.க.துறைவன்.

*

Monday, 27 June 2016

தெரிந்து கொள்வோம்...!!1.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் தேசபக்தியை சந்தேகிக்க வேண்டாம். – சுப்பிரமணியன் சுவாமிக்கு பிரதமர் கண்டனம்.
    ரொம்ப லேட் மோடிஜி. அப்படியே உங்க ஆளுங்களையும் கண்டிச்சி வையுங்கஜி.
2.
டெல்லி நிர்பயா – வில் தொடங்கி சென்னை பெண் பொறியாளர் சுவாதி வரை நாடெங்கும் பரவி வருகின்றது தொடர்க் கொலைகள்.
     நாட்டில் பாதுகாப்பு என்பது இருக்கிறதா? என்று சந்தேகமாகவே இருக்கிறது. பெண்கள் கொலை என்றாலே ஓரே காரணத்தைக் காட்டி விடுகிறார்கள். அதன் பின்னணியைப் பற்றி தீர ஆராய்வதில்லை. பிறகு மக்கள் இப்படியொரு சம்பவம் நடந்ததையே மறந்து விடுவார்கள்.
3.
வறுமையை ஒழிப்பதே அரசின் பிரதான நோக்கம்.
மத்திய வீட்டுவசதி மற்றும் வறுமை ஒழிப்புத்தறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு.
     யாருடைய வறுமை ஒழிப்பு என்பது தான் கேள்வி?
செய்தியும் விமர்சனமும் ; ந.க.துறைவன்.

*      

தூண்டில்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
மீனின் இதயத்தை
குத்தி  கொல்கின்றது
தூண்டில்  கொக்கியின் நுனி.
*
Fish's heart
Kills stabbed
The tip of the hook bait.

*

முதுமை...வெறுமை...கொடுமை...!!1.
2001 – 2011 இடையிலான பத்து ஆண்டுகளில், இந்தியாவில் அகவை அறுபதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 35.5% அதிகரித்திருக்கிறது.
அதாவது, 2001 – இல் 7.66 கோடியாக இருந்த மணிவிழா கண்ட முதியவர்களின் எண்ணிக்கை 2011 – இல் 10.38% கோடியாக உயர்ந்திருக்கிறது.

2.
இந்தியாவில் முதியோர் மக்கள் தொகை வெறும் 8.6% தான் என்றாலும், வசதியுள்ளவர்களுக்கு மட்டுமே வசதியான முதியோர் இல்லப் பாதுகாப்பு கிடைக்கிறது.
3.
10.38 கோடி முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 15.88 கோடி ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் போலல்லாமல் முதியவர்கள் அனைவரும் வாக்காளர்கள். அவர்கள் தேர்தலில் வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்தும் சக்திப் படைத்தவர்கள்.
ஆதாரம் : தினமணி நாளிதழ் தலையங்கம் – 27-06-2016.
தகவல் ;  ந.க.துறைவன்.

*

கற்பிக்கும் முறையில் மாற்றம் தேவை.அரசு, தனியார் பள்ளிகளில் பிளஸ் -1 பாடங்கள் நடத்தப்படுவதேயில்லை. அனைவரையும் தேர்ச்சிகொடுத்து, பிளஸ் – 2 வகுப்பிற்கு அனுப்பிவிடுகின்றனர்.
உயர்கல்வி படிப்புகளுக்கும் அடித்தளமாக, அறிவை வளர்க்கும் 60 சதவீத விவரங்கள் இருப்பது பிளஸ் – 1 பாடத் திட்டங்கள்தான்.
இருப்பினும், பிளஸ் – 1 பாடங்களை எந்தவொரு பள்ளியும் நடத்துவதேயில்லை. நேரடியாக பிளஸ் 2 பாடங்களுக்குச் சென்று விடுகின்றனர். அவற்றை புரிதல்இன்றி மனப்பாட முறையில் படிக்கும் மாணவர்கள், மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர்ந்த பிறகு எதுமே பரியாமல் திணறுகின்றனர்.
எனவே, பாடங்களை கற்பிக்கும் முறையிலும், தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
திரு. சாமி கத்தியமூர்த்தி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்கத் தலைவர்
*

2.
கடந்த 10 ஆண்டுகளாக பிளஸ் – 1, பிளஸ் – 2 பாடத்திட்டத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவே இலலை. இதனால் 10 ஆண்டுகளாக பழைய பாடத் திட்டமே நடைமுறையில் உள்ளது.
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரன்.

ஆதாரம் ; தினமணி நாளிதழ் – 27-06-2016.
தகவல் தொகுப்பு ; ந.க.துறைவன்.

*

Sunday, 26 June 2016

அம்மா...!!

மைக்ரோ கதை.

“ தம்பி, உங்க அம்மா இறந்துட்டா. நீ உடனே புறப்பட்டு வாப்பா.”
“ நா எப்படிப்பா, உடனே புறப்பட்டு வர முடியும்? எல்லா ஏற்பாடும் முடிச்சி கிளம்ப வரவே ரெண்டு நாளாகுமே? ”
” முயற்சி செய்யிடாப்பா. ”
“ பார்க்கிறேன். இன்னும் அரைமணி நேரத்திலே சொல்றேன்ப்பா ”
சில மணித்துளிகள் கழித்து.
அப்பா, நா சனிக்கிழமைதா  புறப்பட முடியும். அதுவரைக்கும் காத்திருக்க வேணாம். அம்மாவுக்கு சடங்கெல்லாம் செஞ்சி முடிங்க. அதை என்னோட நண்பன் வீடியோ காண்பிரன்சிங்கிலே போட்டுக் காட்டுவா. இங்கிருந்தே  பாத்துக்கிறேன் மத்ததெல்லாம் ஊருக்கு வந்து பேசிக்கிறேன் ” என்று போனை துண்டித்துக் கொண்டான் வெளிநாட்டில் வசிக்கும் மகன்.

*

Saturday, 25 June 2016

அஷ்டாவக்ர கீதை.1.
எப்போது மனம் ஏதோ வொன்றை விரும்புவதும், வருந்துவதும், தள்ளுவதுங்
கொள்ளுவதும், உவப்பதுஞ் சீறுவதும் உண்டோ, அப்போதே பந்தம்.
2.
எப்போது சித்தம் எதனையும் விரும்பாது,  வருந்தாது,  தள்ளாது, கொள்ளாது, மகிழாது சீறாதிருக்குமோ அப்போதே முக்தி.
3.
எப்போது மனம் சில விஷயங்களிற் பற்றுறுமோ அப்போதே பந்தம். எப்போது சித்தம் எவ் விஷயத்திலுந் தோயாதோ அப்போதே வீடு.
4.
நானற்றபோழ்து விடுதலை.நானுற்ற காலை பந்தம் என்று விளையாடல்போ லறிந்து எதனையுங் கொள்ளாது   தள்ளாதிரு.
ஆதாரம் ; அஷ்டாவக்ர கீதை – நூல் – பக்கம் – 26 -27.
தகவல் ; ந.க.துறைவன். 

*

Friday, 24 June 2016

தாடி...!!


முல்லா கதை.


ஒரு சமயம் முல்லா நஸ்ருதீன் கொஞ்ச காலம் வெளியூருக்குச் சென்ற பிறகு ஒரு நீண்ட தாடியுடன் தன் ஊருக்குத் திரும்புகிறார். அப்பொழுது அவரது நண்பர்கள் தாடியைப் பார்த்துக் கிண்டல் செய்து “ இப்பொழுது ஏன் எதற்காக இதை வளர்க்கிறீர்கள் ” என்று கேட்டார்கள். அதற்கு முல்லா, தன் தாடியைப் பற்றி மிகவம் இழிவாகத் தூற்றுகிறார்கள். இதைக் கேட்ட அவரது நண்பர்கள் ஆச்சரியம் அடைந்து, “ பிடிக்காமல் எதற்கு இந்தத் தாடியை வைத்திருக்கிறீர்கள். ” என்று கேட்கிறார்கள்.
அதற்கு முல்லா, “ நான் இதை உண்மையிலேயே வெறுக்கிறேன் ” என்றார்.
“ அப்படியானால் அதை மழித்து எறிய வேண்டியது தானே ” என்று அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.
அப்பொழுது முல்லாவின் முகத்தில் ஒரு வில்லத்தனம் ஏற்பட்டு, “ ஏனெனில் என் மனைவியும் இதை வெறக்கிறாள் ” என்றார்.
ஆதாரம் ; ஓஷோவின் “ மனம் இறக்கம் கலை ” – நூல் – பக்கம் – 38 -39.
தகவல் ; ந.க.துறைவன்

*

Thursday, 23 June 2016

சிக்கல் சுப்பிரமணியம்...!!


*
மக்கள் நலத் திட்டங்களுக்குப் பெயர் வைக்கும்போது எல்லாவற்றிற்கும்   ‘அம்மா திட்டம் ‘ என்று பெயர் வைக்கிறார்கள். அதற்கு ‘அரசு திட்டம் ‘ என்று  பெயர் வைத்தால் என்ன?
*
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர். ரகுராம் ராஜன் மீது குற்றம் சாட்டிய சுப்பிரமணிய சுவாமி, தற்போது அரவிந்த சுப்பிரமணியன் மீதும் குற்றம் சுமந்துகிறார். இம்மூன்று பேருமே இந்திய வம்சாவளியனராக இருந்தாலும், அமெரிக்க குடியுரிமைப் பெற்றவர்கள். இவர்களுக்கு ஏன் இந்தியாவில் உயர்பதவிகள் கொடுத்து பிரச்சினைகளில் சிக்க வேண்டும். இதனை மத்திய அரசு தவிர்க்கலாமே?.

*

இரகசியம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
விண்ணில் மண்ணில் தேடினும் 
எளிதில் கிடைக்குமா?
வாழ்க்கை இரகசியம். .
*
Searching the skies in the soil
Easily available?
Secret life. .

*

இன்று கவிஞர்.கண்ணதாசன் பிறந்த நாள்..
நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

பாடல்.

ஆற்றும் கடமையை மறக்காதே – புயல்
காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே
போற்றும் மனிதர்கள் போற்றட்டுமே – நெஞ்சில்
பொறுமை இல்லாதவர் தூற்றட்டுமே!  ( ஆற்றும் )
எடுத்ததற் கெல்லாம் பயந்தவன் முன்னே
எலியும் புலியாகும் – கொடுமை
எவர் செய்தாலும் எதிர்ப்பவர் முன்னே
புலியும் எலியாகும்!         ( ஆற்றும் )

வெற்றியைக் கண்டு மயங்கி விடாதே
தோல்வியும் தொடர்ந்து வரும் – நீ
தோல்வியைக் கண்டு துவண்டு விடாதே
தொடர்ந்தொரு வெற்றி வரும்!.... ( ஆற்றும் )
நீயா நானா. -  படம்


Wednesday, 22 June 2016

மனோசக்தி...!! ( ஹைபுன் )இக்கணத்தில் நிகழும் சம்பவங்களும் உண்மைகளும் மனதில் நினைவு கொள்ளாமல், எப்பொழுதோ நடந்த சம்பவங்களை மறக்க முடியாமல் அசைப்போட்டு மனம் கலங்குகின்றது. அத்தவறுகளிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் தவிக்கிறது. கொஞ்ச காலம் கழித்து அதிலிருந்து விடுபடும்  யுத்தியை மனமே உருவாக்கி தருகிறது  அதுவே மீண்டும் வழக்கம்போல இயல்பாக செயல்படத் துவங்குகின்றது. இதைத் தான் மனோசக்தி என்று சொல்கிறார்கள்.
திசை தெரியாமல் தவித்தது
மீண்டு திரும்பியது இருப்பிடம்
கடல் கடந்து சென்ற பறவை
*

Tuesday, 21 June 2016

சிலைகள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English;
*
நூற்றாண்டு காலம் பழமையானது
குளத்தில் கிடைத்தன
கடவுள் சிலைகள்.
*
A century old
Were in the pool
God statues.

*

பெயர் சேர்க்கை...!! ( மைக்ரோ கதை )நடுத்தர வயது பெண் தாலுகா ஆபிஸ் போனாள்.
அங்கிருந்த ஒரு கிளார்க்கிடம் நின்றாள். விசாரித்தாள்.
“ இப்ப உனக்கு என்னம்மா வேணும். ” என்று கேட்டார்.          
“ சார், அவ செத்து ஒரு வருஷமாச்சி ” என்றாள்.
“ சரி “ சொல்லுங்க. ”  
” அவ பெயரை நீக்கிட்டு, இப்ப என்னோட பெயரைக்
குடும்ப அட்டையில் சேர்க்கணும் ” என்றாள்.
அந்தக் கிளார்க்…..???.
*

Sunday, 19 June 2016

நினைப்பதில்லை...!! ( கவிதை )


*
மனசு சொத்துப் பற்றி நினைப்பதில்லை
மரணத்தைப் பற்றியும் நினைப்பதில்லை.
*
சந்தோஷம் வந்தால் ஊஞ்சலாடுகிறது
பேராசையால் ஊழலில் திளைக்கிறது மனசு.
*
அன்பு நிறைஞ்சியிருக்கிற மனசிலே தான்
வன்மமும் மறைஞ்சியிருக்கிறது.  
*
உண்மையை உள்ளுக்குள் மறைச்சி வச்சி
பொய்யை உண்மைப் போல பேசும் மனசு.
*
தவறு செய்தவனையும் புரிஞ்சிக்கும்
தவறு செய்யாதவனையும் புரிஞ்சிக்கும் மனசு.
*
மரத்திற்கு நல்ல மனசு1
மனிதனுக்கு குரங்கு மனசு.

Saturday, 18 June 2016

தெரிந்து கொள்வோம்...!! ( துணுக்குகள் )

1.

பதவி நீடிப்பு வேண்டாம்.
ரிசர்வ் வங்கி கவர்னர். திரு. ரகுராம் ராஜன் அறிவிப்பு்
      சோசமுள்ள மனுஷர். பாஜக கொடுத்த நெருக்கடிக்கு நல்லதொரு தீர்வு. அவரைப் பாராட்டலாம். இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பு.

2.

காங்கிரஸ் ஒரு மூழ்கம் கப்பல்.
உள்துறை அமைச்சர். ராஜ்நாத்சிங் பேச்சு.
       பாஜக – வற்றிய குளத்தில் நிற்கும் காய்ந்த தாமரைப்பூவா?
3.

ஒற்றை யானை உயிருடன் பிடிக்க சிறப்பு பூசை.
வனத்துறை.
       யானை விநாயகர் அல்லவா. அதான் பூசைப் போட்டு பிடிக்கிறாங்க.
தொகுப்பு : ந.க.துறைவன்.    
*


Friday, 17 June 2016

கிராமியக் கதை.அவனும் மூடன் இவனும் மூடன்..!!

புத்திசாலி ஒருவனைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணி வெகு நாட்களாக ஒரு பெண் காத்திருந்தாள்.

அழகான இளைஞன் ஒருவன் வந்தான். அவனைச் சோதனை செய்வதற்காக அவனுடன் உரையாடினாள். அப்பொழுது அங்கே ‘ சட சட ‘ என்ற சத்தம் கேட்டது. “ அது என்ன? என்று கேட்டான். “ அது உடும்பு ” என்றாள்.

“ அதில் ஒரு இறகு எடுத்து வா, காது குடைய வேண்டும் ” என்றான் வந்தவன்.

அதைக் கேட்டு ஏளனத்தோடு “ உடு்ம்புக்கு இறகு இருக்குமா? முட்டாள் போ ” என்று துரத்திவிட்டாள் அவனை.

சில நாட்களுக்குப் பிறகு, மற்றொருன் வந்தான். அவனிடம் “முன்பு ஒரு மூடன் வந்து உடும்பிலே இறகு பிடுங்கி வரச் சொன்னான் “ என்றாள்.
அதற்கு அவன் சிரித்துக் கொண்டே,  அவன் ஆமை என்று நினைத்தான் போலும் ” என்றான்.
“ நீ அவனைக் காட்டிலும் மூடன் “ என்று இகழ்ந்து. அவனையும் துரத்தி விட்டாள்.
ஆதாரம் : தமிழகக் கிராமியக் கதைகள் – நூல் – பக்கம் – 74 – 75.
தகவல் ; ந.க.துறைவன்.

*

Wednesday, 15 June 2016

மொழி....!!

மொழி பிரச்சினை. சில கேள்விகள்?
1.
சமஸ்கிருதம் உலக மொழி என்றால், அதை இந்தியாவிலே எத்தனை பேர் படிக்கிறார்கள்.. படிச்சியிருக்கிறார்கள்.. எத்தனைப் பேர் பேசுகிறார்கள்? உலக சனத்தொகையில் எவ்வளவு பேர் படிச்சிருக்கிறார்கள்? பேசுகிறார்கள்?
2.
சும்மாயிருக்கிற சங்கை எடுத்து ஊதினானாம் ஆண்டி என்கிற மாதிரி, இந்தி ஆட்சி மொழியைப் பின்னுக்குத் தள்ளி விட்டு இந்துத்துவச் சமஸ்கிருத மொழியைத் திணிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது மத்திய அரசு.
 3
இந்திய அரசால் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ள,  செம்மை மொழி அந்தஸ்து பெற்றுள்ள மாநில மொழிகளுக்கு சம அந்தஸ்தும் வாய்ப்பும் அளிக்காமல்,  இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு .மட்டும் அதிக முக்கியம் தருவதற்கான தக்க சூழ்நிலை இந்தியாவில் நிலவுகிறதா? இச் செயல் மற்ற மொழிகளை அவமானப்படுத்தும் காரியமாக அல்லவா கருத வேண்டியிருக்கிறது.
4.
இந்தி மொழியை மக்கள் விரும்பி படித்து வருகிறார்கள் அல்லவா. அதே போலவே சமஸ்கிருத மொழியை மக்கள் விரும்பி படித்து தான் வருகிறார்கள். அப்பணி தொடர்ந்து செயல்படுத்துவதை விடுத்து, அதை மாநில மக்களின் மீது திணிப்பது என்பது ஆத்திரமூட்டும் செயலாகவே கருத வேண்டியிருக்கிறது.
5.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு சமஸ்கிருத மொழி பற்றிய பிரச்சினைகள் அதிகம் எழுந்ததில்லை. பாஜக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்பிர்ச்சினையை கையில் எடுக்கிறதென்றால்,  அரசின் நோக்கம் சாதாரண மக்களுக்கும் புரியாமல் போய்விடுமா என்ன?
6.
ஒரு பிரச்சியை மறைக்க இன்னொரு பிரச்சினையை உருக்குவது அரசின் ராஜதந்திரம். அப்பொழுது தான்  மக்கள் ஒன்றை மறந்து இன்னொன்றை பேசுவார்கள். அதைப் பறறின மக்கள் கருத்தினை அறியலாம் என்ற நோக்கில் சமஸ்கிருத மொழி பிரச்சினையை உலவி விட்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகின்றது.
7.
மொழி பிரச்சினை என்பது உலக அளவில் சர்வதேசிய சிக்கல்களாக இன்னும் நீடிக்கின்றன. அப் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ந.க.துறைவன்
*


முயற்சி...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English;
*
சொல்வதற்கு முயற்சிக்கிறார்
கேட்பவர்க்கும் புரியவில்லை
நிதானமாய் சிந்திக்கிறது மனம்.
*
Trying to say
The listener does not understand
Slow-thinking mind.

*

Tuesday, 14 June 2016

சந்திப்பு...!! ( மைக்ரோ கதை )

Micro story. Tamil / English;.

சொர்க்கத்தில் சந்திப்பு / Meet in Heaven.

காதலன் வீதியில் கொலை செய்யப்பட்டான்.
காதலி கருணை கொலைக்குப் பலியானாள்
இருவரும் சொர்க்கத்தில் சந்தித்துக் கொண்டனர்.

Boyfriend was killed in the street.
Killing mercy killing girlfriend
Both met in heaven.

*

Monday, 13 June 2016

எத்தனை எத்தனை குடிகாரர்கள்...? ( துணுக்கு )தினமும் குடிப்பவர்கள், ஒருநாள் விட்டு ஒருநாள் குடிப்பவர்கள், மாலையில் மட்டும் குடிப்பவர்கள், காலையிலிருந்து குடிப்பவர்கள், ஞாயிறு மாலையில் மட்டும் குடிப்பவர்கள், சனிக்கிழமை இரவு மட்டும் குடித்துவிட்டு தாமதமாக வீட்டுக்கு வருகிறவர்கள், மனைவியை குழந்தையை விட்டுவிட்டு வெளியூர் வேலைக்குக் போகும்போது குடிப்பவர்கள், வெளியூரிலிருந்து வேலை முடிந்து மனைவி குழந்தைகளைப் பார்க்கிற சந்தோஷத்தில் குடிப்பவர்கள், குடிப்பவர்களுடன் துணைக்கு வந்து குடிப்பவர்களுக்காகக் குடிப்பவர்கள், குடித்து விட்டு பேசுவதற்காகக் காத்திருப்பவர்கள், பேசிவிட்டு குடிப்பதற்காகக் காத்திருப்பவர்கள், குடிக்கும்போது கடன்காரர்களுக்கு செல்போனில் பதில் சொல்பவர்கள், குடிக்கும்போது மேலதிகாரிகளுக்கு செல்போனில் பதில் சொல்பவர்கள், குடிக்கும்போது யாரும் தங்களுடன் இல்லையே என்ற வருத்தத்தில் குடிப்பவர்கள், குடிக்கும்போது இத்தனை பேர் தங்களுடன் இருக்கிறார்களே என்கிற சந்தோஷத்தில் குடிப்பவர்கள், மனைவியின் கொடுமைக்காகக் குடிப்பவர்கள், கொடுமை செய்யாத மனைவியின் அன்புக்காகக் குடிப்பவர்கள், தனக்கு அடுத்தவனின் மனைவி கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் குடிப்பவர்கள், தன் மனைவி அடுத்தவனுடன் இருக்கிறாளே என்ற துக்கத்தில் குடிப்பவர்கள், காமெடி நடிகர் வடிவேல் அடிவாங்கிக் கொள்கிற காட்சியைப் பார்த்தபடி குடிப்பவர்கள், எம்.ஜி.ஆர், சரோஜாதேவி டூயட் பாடலைப் பார்த்துக் கொண்டு குடிப்பவர்கள், கண்ணதாசன் தத்துவப்படலைக் கேட்டுக் கொண்டு குடிப்பவர்கள, தங்களை தத்துவமாக்கிக் குடிப்பவர்கள், குடிப்பது பாவம் என்று சொல்லிக் கொண்டு குடிப்பவர்கள் என்று அத்தனை பேரும் அங்கிருந்தனர்.
ஆதாரம் ;  “ மைதானம் அளவு உலகம் ” - எஸ். செந்தில்குமார் எழுதிய சிறுகதை – உயிர்மை – மே – 2016 – பக்கம் – 39.
தகவல் ; ந.க.துறைவன்.

Sunday, 12 June 2016

முகநூல் பற்றிய முக்கிய செய்திகள்.1.
இந்த ஆண்டு மார்ச் 31 –ம் தேதி வரை பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 165 கோடி.
2.
பேஸ்புக் கணக்கு வைததிருப்பவர்களில் ஆண்கள் 66% பெண்கள் 76%.
3.
140 மொழிகளில் பேஸ்புக் சேவைகள் மற்றும் தகவல்கள் பெற முடியும்.
4.
இன்று சர்வதேச அளவில் பேஸ்புக் வைத்திருப்பவர்களில் 8.7 சதவீதம் பேர் போலியான கணக்கு வைத்திருப்பவர்கள்.
5.
ஒவ்வொரு 6 லட்சம் முறை பேஸ்புக் கணக்கை திருட்டுத்தனமாக நுழைய முயற்சி செய்யப்படுகிறது.
6.
ஒவ்வொரு நொடிக்கும் ஐந்து புதிய பேஸ்புக் கணக்குகள் துவக்கப்படுகின்றன.
7.
2016  - ம் ஆண்டு மார்ச் 31 தேதி வரை பேஸ்புக் நிறுவனத்தில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 13, 598.
8.
சீனா உட்பட  மொத்த 13 நாடுகளில் பேஸ்புக் செயல்பாடுகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த தடையால் சீனாவில் மட்டும் 5 கோடி பயன்பாட்டாளர்களை பேஸ்புக் நிறுவனம் இழந்துள்ளது.
9.
பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 4,940.7 கோடி டாலர்.
10.
ஒரு நாளைக்கு 30 கோடி புகைப்படங்கள் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
11.
ஒரு நாளைக்கு 18 லட்சம் மக்கள் பேஸ்புக்கில் லைக் இடுகின்றனர்.
12.
அமெரிக்கர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் பேஸ்புக்கில் செலவிடுகின்றனர்.
13.
2015 – ம் ஆண்டு நிலவரப்படி பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த வருமானம் 1,793.8 கோடி டாலர். நிகர வருமானம் 368.8 கோடி டாலர்.
ஆதாரம்  தி இந்து – நாளிதழ் - 13-06-2016.
தகவல் ; ந.க.துறைவன்.

*

மலை...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English;
*
தொலைவில் தெரிந்தது
அருகில் போய் பார்க்க ஆசை
அது எந்த ஊர் மலை?.
*
It was far away
Near the desire to go and see
Any place that hill ?.

*

முதியோர்களே...!!கொள்வோம்…!!
*
1.
முதியோர்களின் நலனுக்காகப் பாடுபடும் ஹெல்ப்பேஜ் இந்தியா( Helpage India ) எனும் தொண்டு நிறுவனம் மற்றும் ஐக்கிய நாட்டு மக்கள் தொகை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2050 – ஆம் ஆண்டிற்குள் நமது நாட்டு மக்கள் தொகையில் முதியவர்களின் பங்கு, 20 விழுக்காடாக ஆகிவிடும் என்றும், தற்போது 10 கோடியாக இருக்கும் முதியோர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கிற்கு மேல் அதிகரித்து 32.4 கோடியாக ஆகிவிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
2.
கடந்த பத்தாண்டுகளில், 62 ஆண்டுகளாகயிருந்த ஆண்களின் சராசரி ஆயுள் காலம் 67 – ஆகவும், 64 – ஆக இருந்த பெண்களின் ஆயுள்காலம் கிட்டத்தட்ட 70 – ஆகவும் உயர்ந்துள்ளது.
3.
ஒரு நாட்டின் மக்கள் தொகையில் 15-யிலிருந்து 59 வயது வரையில் உள்ளவர்கள் உழைக்கும் மக்கள் என்றும், 0-14 வயது வரையில் உள்ள குழந்தைகளும், 60 வயதிற்கு மேல் உள்ள முதியவர்களும் உழைக்கும் மக்களைச் சார்ந்து, அதாவது அவர்கள் ஈட்டும் வருவாயைச் சார்ந்து வாழும் மக்கள் என்றும் கருதப்படுகிறார்கள்.
4.
சமீபத்தில் வெளிவந்துள்ள மத்திய அரசின் தேசிய மாதிரி கணக்கெடுப்பின் அறிக்கையிலிருந்து, நமது நாட்டு முதியோர்களில் பலர் தீராத வியாதிகளால் அவதிப்படுகிறார்கள் என்றும், அறுபது வயதைத் தாண்டியவர்களில் எட்டு விழுக்காடு பேர்களும், எண்பது வயதைத் தாண்டியவரகளில் முப்பது விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்களும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் அல்லது படுத்த படுக்கையாக உள்ளார்கள் என்றும் தெரிய வருகிறது.
முதியோர்களின் உடல்நலனைக் கவனிப்பதற்காக நமது அரசு ஒவ்வொரு மாவட்ட அரசு மருத்துவமனைகளிலு்ம் Geriatrics எனப்படும் முதியோர் மருத்துவப் பிரிவு ஒன்று இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது.
ஆதாரம் ; “ மூப்படைந்து கொண்டிருக்கும் மக்கள் தொகை ” – ரமாமணி சுந்தர் – எழுதிய கட்டுரையிலிருந்து – தினமணி நாளிதழ் – 11-06-2016.
தகவல் ; ந.க.துறைவன்.

*

Saturday, 11 June 2016

ஆகாரம்

குழிபணியாரம்
இன்று
காலை ஆகாரம்.


Friday, 10 June 2016

பயிற்சி...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English;
*
காலை வேளையில் புல்தரையில்
யோகா பயிற்சி செய்கின்றன
கூட்டமாய் பறவைகள்.
*
On the lawn in the morning
Yoga practice is
The mass of bird..
*

Thursday, 9 June 2016

அழகின் தரிசனம்...!! ( புதுக்கவிதை )அவள் எப்பொழுதும் ஏதேனும்
ஒரு வழியில் வீடு திரும்புகிறாள்
எந்த குறுக்குப் பாதையென்று
அறிவது அறிதாகவேயிருக்கிறது
அவ்வழியை அடையாளம் கண்டு
வழிக்காட்ட மரமோ கோயிலோ
அங்கே இருப்பதாய் தெரியவில்லை.
பறவையின் இருப்பிடம் அறிந்திடலாம்
அவள் இருப்பிடம் அறிவது
அத்தனை புதிராக இருக்கிறது
தேவதையாய் மறைந்து போகிறவள்
பேரழகின் தரிசனம் காண்பதற்கு
காத்திருக்கிறது கண்கள்
தெய்வ தரிசனம் எளிது
அழகின் தரிசனம் கடினம்


*

பருவ மழை...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English;
*
பருவநிலை மாற்றம்
முன்கூட்டியே தொடங்கியது
தென்மேற்கு பருவமழை.
*
Climate Change
Started early
South West Monsoon.

*

Wednesday, 8 June 2016

குறி...!! ( சென்ரியு )பார்த்து குறி சொல்வாளா?
அம்மனுக்கு பூசைப் படையல்
கொழுக்கட்டை.யில் விரல்ரேகை.

*

முல்லா கதை.முல்லா நஸ்ருதீன் ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டு மிகப் பெரிய விஷயங்களைக் கூறிக் கொண்டு இருந்தார். மிகவும் கற்பனை வளம் மிக்கவனாக ஆகிவிட்டார். அந்தப் பெண்மணியைப் பார்த்து “ உங்களது கண்கள் ஒருபோதும் இப்படிப்பட்ட கண்கள் படைக்கப்படவில்லை. மேலும் உங்களது முகம் – அது ஒரு நிலவு போன்று இருக்கிறது. உங்களைச் சுற்றிலும் உள்ள பிரகாசம் மற்றும் நீங்கள் உருவாக்குகிற அதிர்வலை – இதுவரை நடந்திராத மிகப்பெரிய அழகான விஷயம் ” என்று இப்படி வர்ணித்துக் கொண்டே சென்றார்.

ஆனால் பெண்கள், எப்போதுமே வாய்ப் பேச்சை விடவும் செயல்பாட்டில் இறங்குபவர்கள். எனவே அந்தப் பெண்மணி “ நஸ்ருதீன் நீ என்னை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறாயா? ” என்று கேட்டார்.

உடனே நஸ்ருதீன் “ தயவு செய்து விஷயத்தை மாற்றாதீர்கள் ” என்றான்.
ஆதாரம் : ஓஷோவின் – திடீர் இடியோசை – நூல் – பக்கம் – 407.
தகவல் ; ந.க.துறைவன்.

*  

Monday, 6 June 2016

ஓஷோ சொன்ன கதை.


*
ஒரு சிறு குழந்தை வன விலங்குகள் பற்றிய படங்களுடன் கூடிய புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தது மேலும் அவன் கொடூரமான சிங்கங்களின் படங்களைப் பார்த்து மிகவும் சூழ்ச்சி நிறைந்தவனாக ஆகிவிட்டான். அதில் என்னவெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம் படிக்கிறான். ஆனால் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் அதில் பதில் இல்லை. எனவே அவன் தனது அம்மாவிடம் கேட்கிறான்
“ அம்மா, இந்த லயன் ( Lions ) கள் என்ன விதமான உடல் இன்பத்தை அனுபவிக்கின்றன? ” என்று அவனது அம்மாவிடம் கே்ட்கிறான்.
அதற்கு அவனது அம்மா, “ மகனே எனக்கு லயன்களைப்பற்றி ( Lions ) தெரியாது, ஏனெனில் உனது தந்தையின் நண்பர்கள் அனைவரும் ரோட்டேரியன்கள் ( Rotarianes ) “ என்று கூறினாள்..
ஆதாரம் ; ஓஷோவின் - திடீர் இடியோசை – நூல் – பக்கம். 66 – 67.
தகவல் ; ந.க. துறைவன்.

*

Sunday, 5 June 2016

பறவை...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English;.
*
உலகை சுற்றி வருகிறது
எந்த நாடு என்று தெரியாமல்?
கடல் கடந்து பறவை
*
Around the world
No country, not knowing that?
Shore bird

*

Saturday, 4 June 2016

உலகின் மூத்த பட்டதாரி...!!ஜப்பானைச் சேர்ந்த ஷகெமி ஹிராடா – வயது 96. இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், 2005 –ம் ஆண்டில் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் பீங்கான் மற்றும் மண்பாண்டக்கலை, வடிவமைப்புப் பிரிவில் இளங்கலை பட்டப் படிப்பில் சேர்ந்தார் தொடர்ந்து, 11 ஆண்டுகள் படித்து வந்த ஹிராடா, அண்மையில் தேர்ச்சி பெற்றார். உலகிலேயே மிக மூத்த பட்டதாரி என்ற பெருமையுடன், உலக கின்னஸ் சாதனை பட்டியலில் ஹிராடா இடம் பெற்றுள்ளார். அதற்கான சான்றிதழ் நேற்று அவரிடம் வழங்கப்பட்டது.  – ஆதாரம் ; தி இந்து – 05-06-2016.

பட்டம் பெற்று சாதனைப் படைத்துள்ள ஹிராடாவுக்கு நல்வாழ்த்துக்கள்.
                          
ந.க.துறைவன்.

Friday, 3 June 2016

தெரிந்துக் கொள்வோம்...!!


*
1.
35 குழந்தைகனைப் பெற்றெடுத்த தந்தைக்கு 100 – ஐ எட்டுவது தான் லட்சியமாம்.
பாகிஸ்தானியரின் வினோத ஆசை.
  சதம் அடித்து சாதனை புரிய வாழ்த்துக்கள்.
2.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களுக்கு மதிப்பளிப்போம்.
முதல்வர் ஜெயலலிதா உறுதி.
           சட்டசபை கூடினா தெரியும் மதிப்பு.
3.
அமெரிக்காவில் 60 பணக்காரப் பெண்கள் பட்டியலில் இரண்டு இந்தியர்கள்.
 
1.  நீரஜா சேத்தி
2.  ஜெயஸ்ரீஉல்லல்.
4.
பிரிட்டனில் ஒவ்வொரு ஆண்டும் தயாராகும் புதிய புத்தகங்களின் எண்ணிக்கை 1,50,000. ஆகும்.
தொகுப்பு ; ந.க.துறைவன்.

*

ஆணவம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
ஆணவம் மிகும் மனம்
பொறுமை கொள்கின்றன
முதிர்ந்த அனுபவங்கள்.
*
Heavy arrogant Mind
Are suffering
Mature experiences.
N.G.Thuraivan.

*

Thursday, 2 June 2016

தெரிந்துக் கொள்வோம்...!!1.
ஜுன் – 1 முதல் சேவை வரி 15 சதவீதம் உயர்வு.
-      இது அரசுக்கு தேவை வரி.
2.
.இந்தியாவில் முதல் முறையாக பெங்களுருவைச் சேர்ந்த திருநங்கை அக்கை பத்மஷாலி கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
-    நல்வாழ்த்துக்கள் அக்கை.

3.
பொருநை இலக்கிய வட்டம் சார்பில் நெல்லையில் 1,649 வாரங்களாகத் தொடர் கூட்டம் நடத்தி  சாதனை.
-    இலக்கியம் வளரட்டும்.  
தொகுப்பு ; ந.க.துறைவன்.      

*

மனம்...!! ( கவிதை )பூப் போல மனசு என்கிறார்கள்
கசக்கி எறிபவர்கள்
*
மனசுக்குள்ளிருக்கிறது சொல்வதற்கு
வெளிவரவில்லை வார்த்தைகள்.
*
மனம் லேசாகத் தானிருக்கிறது
இறுக்கம் இல்லாத வரை.
*                                       
பிடிக்கும் என்று சொல்கிற மனசு
பிடிக்காது என்றும் சொல்கிறது.
*
ஒரு மனசுக்கு
இரண்டு வாசல்கள்                          
*
மனசு சொல்வதைச் செய்கிறார்கள்
சொல்லாததையும் செய்கிறார்கள்.

ந.க.துறைவன்.