முல்லா நஸ்ருதீன் ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டு மிகப் பெரிய விஷயங்களைக்
கூறிக் கொண்டு இருந்தார். மிகவும் கற்பனை வளம் மிக்கவனாக ஆகிவிட்டார். அந்தப் பெண்மணியைப்
பார்த்து “ உங்களது கண்கள் ஒருபோதும் இப்படிப்பட்ட கண்கள் படைக்கப்படவில்லை. மேலும்
உங்களது முகம் – அது ஒரு நிலவு போன்று இருக்கிறது. உங்களைச் சுற்றிலும் உள்ள பிரகாசம்
மற்றும் நீங்கள் உருவாக்குகிற அதிர்வலை – இதுவரை நடந்திராத மிகப்பெரிய அழகான விஷயம்
” என்று இப்படி வர்ணித்துக் கொண்டே சென்றார்.
ஆனால் பெண்கள், எப்போதுமே வாய்ப் பேச்சை விடவும் செயல்பாட்டில்
இறங்குபவர்கள். எனவே அந்தப் பெண்மணி “ நஸ்ருதீன் நீ என்னை திருமணம் செய்துக் கொள்ளப்
போகிறாயா? ” என்று கேட்டார்.
உடனே நஸ்ருதீன் “ தயவு செய்து விஷயத்தை மாற்றாதீர்கள் ” என்றான்.
ஆதாரம் : ஓஷோவின் – திடீர் இடியோசை – நூல் – பக்கம் – 407.
தகவல் ; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment