முல்லா கதை.
ஒரு சமயம் முல்லா நஸ்ருதீன் கொஞ்ச காலம் வெளியூருக்குச் சென்ற பிறகு
ஒரு நீண்ட தாடியுடன் தன் ஊருக்குத் திரும்புகிறார். அப்பொழுது அவரது நண்பர்கள் தாடியைப்
பார்த்துக் கிண்டல் செய்து “ இப்பொழுது ஏன் எதற்காக இதை வளர்க்கிறீர்கள் ” என்று கேட்டார்கள்.
அதற்கு முல்லா, தன் தாடியைப் பற்றி மிகவம் இழிவாகத் தூற்றுகிறார்கள். இதைக் கேட்ட அவரது
நண்பர்கள் ஆச்சரியம் அடைந்து, “ பிடிக்காமல் எதற்கு இந்தத் தாடியை வைத்திருக்கிறீர்கள்.
” என்று கேட்கிறார்கள்.
அதற்கு முல்லா, “ நான் இதை உண்மையிலேயே வெறுக்கிறேன் ” என்றார்.
“ அப்படியானால் அதை மழித்து எறிய வேண்டியது தானே ” என்று அவரது
நண்பர்கள் கூறுகின்றனர்.
அப்பொழுது முல்லாவின் முகத்தில் ஒரு வில்லத்தனம் ஏற்பட்டு, “ ஏனெனில்
என் மனைவியும் இதை வெறக்கிறாள் ” என்றார்.
ஆதாரம் ; ஓஷோவின் “ மனம் இறக்கம் கலை ” – நூல் – பக்கம் – 38
-39.
தகவல் ; ந.க.துறைவன்
*
No comments:
Post a Comment