Labels

Haiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (20) கலை (1) கவிதை (332) கவிதை. (7) கவிதைகள். (7) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (2) குறுங்கவிதைகள் (12) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (55) ஹைபுன் (48)

Sunday, 29 March 2015

ஏமாற்றம்...!! [ கவிதை ]


*
விரைந்து வந்துவிட்டது
இறங்க வேண்டியது
பேரூந்து நிறுத்தம்.
யார் யாரோ இறங்கினார்கள்.
கூட்ட நெரிசலில்
அவள் இறங்கினாளா? என்று
தெரியவில்லை.
திரும்பிப் பார்ததேன்
சிரித்தபடி நின்றிருந்தாள்
தோழியின் அருகில்…!!

*

Saturday, 28 March 2015

மனோரஞ்சிதப் பூக்கள்....!! [ HAIKU / ஹைக்கூ ]


*         
காற்றில் சுமந்து வருகிறது வாசம்
இலைகள் மட்டும் தெரிகிறது
மலர்ந்த மனோரஞ்சிதப் பூக்கள்.
*
எல்லா நேரமும்
கவிதைக்குள்
இருப்பதில்லை மனம்.
*
தகிக்கும் வெயிலில் மூதாட்டி
புங்கம் இலைப்போர்த்திய கூடை
உள்ளே குளிர் நுங்குகள்.

*

Friday, 27 March 2015

நொடிப் பொழுது...!! [ கவிதை ]


*
உன்னதமான வாழ்க்கையை
யார் வெறுத்தாலும்
அதை ஏற்றுக் கொண்டே
வாழ்ந்திட விரும்புகிறது - நம்
மனம்
மகிழ்ச்சியாக இருக்கும்

அந்தவொரு நொடிப் பொழுது…
*

பார்வையில்....!! [ கவிதை ]


*
நினைத்தது உடனே நடக்கிறது
நினைக்காதது நடந்துவிடுகிறது.
*
ஏமாறுபவன் ஏமாளியல்ல
ஏமாற்றுபவனும் ஏமாளியே.
*
அடுத்தவர்கள் வாழ்வதைப் பார்க்காதீர்கள்
நாம எப்படி வாழணும்னுப் பாருங்கள்.

*

கை மேல் பலன்...!! [ HAIKU / ஹைக்கூ ]


*
எதையோ நினைத்தான்
நடக்கவேண்டுமென தவித்தான்
கை மேல் கிடைத்தது பலன்.
*
அயர்ந்து தூங்கும்
முயலை எழுப்பி விட்டது
படபடப்பாய் வந்த மழை.
*                                             
உரக்கக் கத்தினான்                       
எதிரொலித்தது மலை
காதலின் பெயர்.

Thursday, 26 March 2015

அறிவாள்...!! [ SENRYU / சென்ரியு ]


*
வாசலில் வந்து நிற்கிறது பசு
பசி என்று கேட்பதில்லை என்றும்
தின்னக் கொடுத்தேன் அகத்தி்க்கீரை
*
இயற்கைச் சூழல் கேடு
மனிதன் இழக்கும் கொடுமை
பகிர்ந்துக் கொள்ளும் பறவைகள்.
*
கை வைத்தியம் அறிவாள்         
பக்குவமாய் தயாரிக்கிறாள்
கற்றாழையில் கண்மை.

*

Wednesday, 25 March 2015

பூக்களின் உறக்கம்...!! [ கவிதை ]


*
என் மார்பின் மேல்
உறங்கினாய் முதலிரவு
மௌன அஞ்சலி செய்து
உன் மார்பின் மேல்
உறங்குகிறது பூக்கள்
இன்று கடைசி இரவு. .
*

Tuesday, 24 March 2015

66ஏ என்ன சொல்கிறது?


இந்தியாவில் சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்கவும் வெளியிடவும் பேச்சுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2000-வது ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66ஏ மற்றும் அதில் 2009-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, சுதந்திரமாக கருத்துகள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிறரை எரிச்சலூட்டும் வார்த்தைகள், அச்சுறத்தல், ஏளனம், புண்படுத்துதல், பகை உணர்வைத் தூண்டுதல் போன்ற கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோரை கைது செய்யலாம் என்று அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும். தற்போது இச்சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதையடுத்து, வலைதள கருத்து சுதந்திரம் மீட்கப்பட்டுள்ளது.
ஆதாரம் :- தி இந்து – 25-03-2015.
 தகவல்:- ந.க. துறைவன்.    


பொழுது சாய்வதில்லை...!! [ புதுக்கவிதை ]


*
பகல்பொழுது முடிந்து விட்டது
அன்றைய பொழுது போதாமலேயே
சூரியன் சாய்ந்து விட்டான்.
மேற்கில் நிலவரம் அறிந்துக் கொள்ள,
இரவு துவங்கி விட்டது
மெலிந்து தெரிகிறாள் பிறைநிலா
கொட்டிக்கிடைகின்றன விண்மீன்கள்.
படபடப்பும் பதட்டமுமாய் எங்கோ
நினைவுகள் சிறகடித்துப் பறக்க
கனவுகள் கற்பனைகளில்
வீடு திரும்புகின்றன எல்லோர் மனமும்,  
நுகர்வோரைக் கவர்ந்திழுக்கிறது
கடைவீதிகளில் விளம்பர வெளிச்சம்
உள்ளே வியாபாரம் உச்சம்
கோயில்களில் மந்திர ஒலிச் சத்தம்
காதில் கேட்காமல் கூட,
உட்கார்ந்துப் பிரச்சினைகள்
பேசுபவர்களைப் பார்த்துப் பார்த்துப்
பழகிப் போய்விட்டன கல்தூண்கள். 
இருட்டில் சரியாகத் தெரியவில்லை
குளத்து மீன்கள்.
அருகிலிலிருந்தப் பூங்காவிற்கு
குழந்தைகளின் தொல்லைப் பொறுக்காமல்
அழைத்து வந்தப் பெற்பெற்றேர்கள்
சிரிப்பில்லாமல் எதையோ நினைந்து
சலிப்போடு உர்ரென்று முகபாவனை.
புறப்படுவற்கான ஆயத்தம்
அம்மாக்கள் போடும் சத்தம் உணர்த்தியது.
சில்லென்றிருந்தப் புல்தரை
வெப்பம் வெளிப்படுத்தியது எழுந்தபோது,
காற்றின்றி அசையாமலிருந்தது
அமைதியாகப் பூச்செடிகள்
பொழுதுப் போக்காகக் கடந்தன நேரம்.
ஆயுளில் ஒருநாள் கழிந்தது
ஒவ்வொரு நாளும் கழிந்துக்
கழிந்து தான் மறுநாள் பிறக்கின்றது.
நேரமில்லையே என்று
மனிதன் கவலைப்படுகிறான்
சூரியன் நேரம் போதவில்லை
புலம்புவதில்லையென்றும்…!!
*

Sunday, 22 March 2015

அன்பின் பகிர்வு...!! [ புதுக்கவிதை ]


*
அழுகுரல் சத்தத்தோடு விடிந்தது
அதிகாலை நேரம்
எதற்கென்று சொல்லாமல்
அழுவது குழந்தைகளின் குணம்.
சமாதானத்திற்குப் பிறகு
அழுகை நிறுத்தி சிரித்தனர்.
பால் குடிக்க மறுத்து என்னை
வினையாட அழைத்தனர்.
விளையாடினேன்.
கைபேசியை எடுத்துக் கொண்டு
அவர்கள் அப்பாவிடம் பேசி
விளையாடுவதை விளக்கினார்கள்.
பலூன்கள் ஊதிஊதி பெருசாக்கி
வெடித்து மகிழ்ந்தார்கள்.
கள்ளிச் செடியின் மடலை
ஒடித்து அதன் பசையை
முகம் கைகால்கள் எல்லாம்
தடவித் தடவிச் சந்தோஷித்தார்கள்.
என் முகமெல்லாம் தடவி விட்டு
நல்லாயிருக்கா என்று
கருத்துக் கேட்டார்கள்.
பதில் சொன்னேன்.
அவர்களின் மனசெல்லாம் பூரிப்பு.
பறந்து வந்து வேப்பமரத்தில்
அமர்ந்தச் சிட்டுக் குருவிகளை
எனக்குக் காட்டி விட்டு
கைத்தட்டி விரட்டினார்கள்.
அவர்கள் இன்னும்
பால் குடிக்கவில்லை
நானும் பல் விலக்கவில்லை
டீ குடிக்கவில்லை இப்படியே
அன்பும் பரிவும் காட்டும்
அரும்புக் குழந்தைகளோடு
பகிர்ந்துக் கொண்டு கழிகின்றன
எனக்கான பகல் நேரம்….!!
*


Saturday, 21 March 2015

உரிமை...!! [ கவிதை ]


*
என்னை நீ விரும்புவதாகச்
சொன்னாய்.
உன் தோழிகளுக்கும்
பிடித்திருப்பதாகச்
சொன்னாய்.
உன் வீட்டார் பார்க்க
இருப்பதாகச் சொன்னாய்.
திடீரென்று அவர்கள் வெறுப்பதாகச்
சொன்னாய்.
இடையில் என்ன நடந்தது,?
விரும்பியதை அடைவது உரிமை
விரும்பியதைப் பறிப்பது கொடுமை.
*

Friday, 20 March 2015

ஆழம்...!! [ HAIKU / ஹைக்கூ ]


*
கண்டறிய முடியவில்லை?
வாழும் உயிரினங்களுக்கு
கடலின் ஆழம்.
*
கண்ணுக்குத் தெரியாமல் இயங்குகிறது
உடல் உறுப்புகளில் எல்லாம்
பிரபஞ்ச வெளியின் அணுக்கூறுகள்
*
தூக்கத்தின் இடைஇடையே
தொல்லைச் செய்தன கனவுகள்
விழித்திருந்தன விண்மீன்கள்.
*

Thursday, 19 March 2015

அருள்வாய் அபிராமியே...!!

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஒர்
கபடு வாராத நட்பும்,
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்,
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்.
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்,
துய்யநின் பாதத்தில் அன்பும்-உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே!
ஆதிகடவூரின் வாழ்வே !
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாய் நீ அபிராமியே!

அபிராமி அந்தாதி. 

Wednesday, 18 March 2015

அதிருஷ்டசாலிகள்...!! [ கவிதை ]


*
என் சவ ஊர்வலத்தைப்
பார்த்து அழுவதற்கு
நீயில்லை.
உன் சவ ஊர்வலத்தைப்
பார்த்து நான் அழுததை
நீ பார்க்கவில்லை.
நாம் 
எவ்வளவு
அதிருஷ்டசாலிகள் பார்…!!

*

குளிர் நிழல்...!! [ hAIKU / ஹைக்கூ ]


*
கடந்த காலம் மறந்தான்
எதிர்க்காலத்தை நினைத்தான்
தொலைத்து நிற்கிறான் நிகழ்காலம்
*.
தணியாத வெயில் தீராத தாகம்
இளைப்பாற்றுகிறது
புங்கமரக் குளிர் நிழல்.
*
யாரென்று தெரியவில்லை              
குரல் கேட்கவில்லை             
எதிரொலிக்கின்றது மலை.
*

Sunday, 15 March 2015

துவக்கம்...!! [ SENRYU / சென்ரியு ]


*
வெயிலுக்கு ஒதுங்கிட
மரநிழல் தேடுகிறது
மேயப் போகும் எருமைகள்
*
பட்ஜெட் கேட்டவர்கள் படித்தவர்கள்
பாராட்டினார்கள்
ஓட்டுப் போட்டவர்கள் ஏமாந்தார்கள்
*
சுட்டெரிக்கும் வெயில்
தாகமாய் நடக்கும் மனிதர்கள்
பாதையோரம் தர்பூசணி

*

Friday, 13 March 2015

வெள்ளிரிப் பிஞசுகள்...!! [ கவிதை ]


*
பழம் நழுவி பாலிலே வீழ்ந்தது
தோல் வழுக்கி மனிதன் வீழ்ந்தான்.
*
தர்பூசணி வரும் முன்னே
கோடை வெயில் வரும் பின்னே.
*
மண்ணுளி பாம்புகள் வண்டியில்
பசுமையான வெள்ளிரிப்பிஞ்சுகள்.

*

Thursday, 12 March 2015

அச்ச வெளிச்சம்...!! [ கவிதை ]


*
இன்டர்வியுவில் மட்டும்
கேட்கும் கேள்விக்கு
பட்பட்டென்று
பதில் சொல்கிறாய்?
உன்னிடம் நான்
கேட்கும் கேள்விக்கு மட்டும்
ஏன் பதில் சொல்ல மறுக்கிறாய்?
உனக்கு பதில் சொல்ல அச்சம்
எனக்கு உன் பதிலே வெளிச்சம்…!!
*

Tuesday, 10 March 2015

மலரின் அழுகை...!! [ கவிதை ]


*
கண்ணிமைகளின் நுனியில் - அப்
பெண்ணின் கண்ணீர்த் துளிகள்
திரண்டு ஈரம் படிந்திருக்கின்றது
மறைவாய் போய் துடைத்து
வெளிக் காட்டாமல் இயல்பாய்
அழுகையை உள்ளுக்குள்
அமுக்கி அடக்கிக் கொண்டு
யாரிடமும் எதையும் சொல்லாமல்
இப்படியும் அப்படியும் உலவி
மறைத்து வருகின்றாள் பல நாளாய்
அவளின் நடவடிக்கையைச்
சந்தேகித்து கவனித்து வருகின்ற
தாயோ தங்கையோ கேட்பதற்கு
அஞ்சி மௌனமாய் வாடிய முகமாய்
அவரவர் வேலைகளைக் கவனிப்பர்
அவளின் உள்மனதில் புழுங்கும்
அந்த இம்சையின் வேதனையின்
முகாரி ராகம் நரம்பின் வழியே
புடைத்து எழும்பிடும்போது
அவளுள் ஆத்திரமான ஆவேசம்
வெளிப்படுத்த  எண்ணுகையில்
அதனை வெளிப்படுத்தாமல்
தவிர்த்து விம்மி விம்மி பொருமி
முந்தானையால் மறைத்து மறைத்து…
கல்லென கனத்து விட்ட மனதில்
எதற்கான அழுகையென்று
எவருக்கும் இன்னும் அணுவளவும்
தெரியாமல் ரகசியமாய் நெஞ்சில்
புதைத்து வெம்பிக் கொண்டிருக்கிறாள்.
அவளின் கண்ணீர்த் துளியில் தான்
மையங் கொண்டிருக்கிறதோ
அவளின் காதல் துயரக் கதை…!!
*   

ஓதுக்கல்...!! [ கவிதை ]


*
மீண்டும் கிடைக்கப் போவதில்லை
கடந்துப் போகின்ற மணித்துளிகள்.
*
ஒதுங்கியவன் நெருங்கி வந்தான்
ஒதுக்கியவன் விலகிப் போனான்.
*
ஊரோடு ஒத்து வாழ்வதில்லை
வேறுப்பட்டுத் தான் வாழ்கிறார்கள்.
ந.க. துறைவன்.

*

Monday, 9 March 2015

பனிப்பூக்கள்...!!

ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்
ENGLISH / TAMIL - ஆங்கிலம் /  தமிழ்.
1.
பிரபஞ்சத்தின் பேரழகு
கவிதையி்ன் உயிர்
புல்லின் நுனியில் பனிப்பூ.
ELEGANCE OF UNIVERSE
THE LIFE OF VERSE
DEW FLOWER
ON THE TIP OF GRASS.
2.
உச்சிக்குச் செல்ல விரும்புகிறேன்
மலையோ உயரமாக இருக்கிறது
வாழ்க்கையோ பள்ளத்தாக்கில்…
TO TOP I WANT TO GO
MOUNTAIN IS HIGH
OH! LIFE IN VALLEY.
3.
அழகானதொரு காலைக் காட்சி
பச்சை நிறம் மாறின
கிளையெங்கும் கொக்குகள்.
IN BEAUTY SCENE OF MORN
CHANGED COLOUR OF GREEN
STORKS ON BRANCHES.
4.
ஊரில் அவர்தான் பெரும்புள்ளி
எதிர்க்கட்சிக்காரர் காட்டிக் கொடுத்ததால், இன்று
இலஞ்ச ஊழலில் சிக்கிய கரும்புள்ளி.
HE ONLY IN VILLAGE, GREAT PERSON
ON BETRAYAL OF OPPOSITION PARTIES,
NOW, IN SCAM OF BRIBE, BLACK MARAK,
5.
மக்கள் மீது என்றும் பாசம்
நாடாறு மாசம் காடாறு மாசம்
கொடநாட்டில் குளுகுளு வாசம்.
ON PEOPLE EVER IN ATTACHMENT
EVERY SIX MONTHS
IN COUNTRY AND FOREST IN TENT
IN KODANAADU, PLEASING STAYAL.
^
IN TAMIL ;-  N.G. THURAIVAN, VELLORE.

IN ENGLISH ; - PAZHANI EZHILMARAN. PALANI. 

Sunday, 8 March 2015

மனவெப்பம்...!! [ senryu / சென்ரியு ]


*
கோடை வெப்பம் வெளியில்
மன வெப்பம் உள்ளுக்குள்
முகமெல்லாம் வியர்வைத் துளிகள்.
*
எந்த காரியமும் நடக்கவில்லை
சலிப்போடு உள்நுழைந்தார்
எதிரே வந்தவளைச் சபித்தார்.
*
வாசலில் விழுந்திருந்தது தபால்கள்
எடுத்து வந்து தருகிறாள்
தாத்தாவிடம் செல்லப் பேத்தி.
*

Friday, 6 March 2015

சுமுகமானத் தீர்வு...!! [ கவிதை ]

சுமுகமானத் தீர்வு…!!
*
எப்பொழுதுப் பிரச்சினைகள் எவரால் வெடித்து
எழுமென்று யாரும் எதிர்ப்பார்க்க முடியாது
எதிர்ப்பார்த்து நிகழ்வதுமல்ல பிரச்சினைகள்
எதிர்பாராமல் நொடியில் நடந்தேறி
எல்லோரையும் கதிகலங்கச் செய்து
எல்லோர் முகங்களிலும் துயர ரேகை
படர விட்டு மற்றவர்கள் எள்ளி நகையாட
செவ்வாய்க்கு கிடைக்கும் அவலாய்
அமைந்து விடுகின்றது பிரச்சினைகள்.
தேடினால் கிடைப்பதில்லை
பிரச்சினைக்குத் தீர்வு
தேடாமலேயே சுயமாய் உதிக்கிறது
சுமுகமானத் தீர்வு….!!

Tuesday, 3 March 2015

பொருத்தமாய்...!! [ கஜல் ]


*
புடவைக்கு மேட்ச்சாக
ஜாக்கெட் அணிகிறாய்.
நெற்றி பொட்டு வைக்கிறாய்.
உதட்டுச் சாயம் பூசுகிறாய்
கையில் வாட்ச் கட்டுகிறாய்
காலில் செருப்பு அணிகிறாய்
தோளில் பை மாட்டுகிறாய்
உனக்கு எல்லாமே மேட்ச்சாக
அமைய வேண்டுமென்று தானே
என்னை நீ தேர்வு செய்தாய்.
உனது தேர்வு பொருத்தமானதே
எனக்கும் அது சம்மதமானதே…!!
*

Monday, 2 March 2015

பிரச்சினைகள்...!! [ கவிதை ]


*
பிரச்சினையிலேயே தொடங்குகிறது
பிரகாசமான மனித வாழ்க்கை.
பிரச்சினையிலேயே துவங்குகிறது
பிறப்பு வளர்ப்பு

பிரச்சினையின்றி அமையாது நட்பு
பிரச்சினையின்றி அமையாது காதல்
பிரச்சினையின்றி அமையாது குடும்பம்
பிரச்சினையின்றி அமையாது திருமணம்
பிரச்சினையின்றி அமையாது வாழ்நாள்
பிரச்சினையின்றி அமையாது நோய்கள்
பிரச்சினையின்றி அமையாது மரணம்.
*

தலையாட்டல்...!! [ கவிதை ]தலையை ஆட்டாமல்
யாரேனும்
பேசுவதைக் கேட்பதைப்
பார்த்திக்கிறீர்களா?
பேசுபவரோ கேட்பவரோ
ஒவ்வொருவரும்
வெவ்வேறு மாதிரியாய்
தலையாட்டுவதைப்
பழ[க்]கியுள்ளார்கள்.
தலையை ஆட்டுவது
சிலரின் பேச்சைக் கேட்டு
சரியென்று சம்மதிப்பதற்கோ   
தவறு என்று சுட்டுவதற்கோ
மௌனப் பதிலாக
வெளிப்படுத்துகிறார்கள்.
தலையை ஆட்டிக் கொண்டே
ஒருவர் பேசுவதை
இன்னொருவர்
கேட்டுக் கொண்டிருப்பார்
எதற்கு இவர்
தலையாட்டுகிறார் என்றும்
மற்றவர்க்கு எதுவுமே
புரியாது.
பெரிய மனிதர்கள்
சிலரின் தலையாட்டலே
சாதக பாதகங்களினால்
காரியம் சாதிக்கும், சிதைக்கும்
சாமர்த்திய ரகசிய
சங்கேத மொழியாகப்
பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
தலையை, கையை
ஆட்டாமல்
கவிதைப் படித்தால்
அவனுக்கு
சுளுக்கென்றோ
ரோபோ வென்றோ
நினைத்துக் கிண்டல் செய்து
நகைப்பார்கள்.
எல்லோருக்குமே
ரசிக்கும்படியாக இருக்கிறது
வீட்டின் செல்லப் பேரன்
சாருஹாசன்
மழலைப் பேசுவதைத்
தலையை ஆட்டியாட்டி
கேட்டு மகிழ்கிறது
தஞ்சாவூர் பொம்மை….!!
*