Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Thursday 30 July 2020

கைத்தட்டல் ( சென்ரியு )

கைத்தட்டல் பாட்டு சிரிப்பு
திரும்பி பார்த்தனர் பலரும்
டீக்கடை வாசலில் திருநங்கைகள்.
#
கைதட்டி காசு கேட்டாள்
கன்னத்தில் கிள்ளி
திருநங்கை
வெட்கத்தில் குறுந்தாடி பயணி.

ந க துறைவன்.

Thursday 23 July 2020

ரூபம் ( ஹைக்கூ )

ஹைக்கூ

எழுத்து ரூபம்

சொற்கள் அரூபம்

பேச்சினிடையே மௌனம்.

ந க துறைவன்.

Monday 20 July 2020

நாய்க்குட்டி ( ஹைபுன் )

நேற்று இரவு பெய்த மழையில் அந்த நாய்க்குட்டிப் பட்ட அவஸ்தை பார்க்க சகிக்கவில்லை. அதன் குரல் இன்னும் வேதனை தந்தது. என்ன செய்வது? 
கேட் திறந்து போய் எடுத்து வெளி வராண்டாவில் விடலாம் என நினைத்தால், மழை இன்னும் பலமாய் பெய்தது. தெருவில் நடமாட்டம் இல்லை. யாரையும் கூப்பிட்டு சொல்லவும் வழியில்லை. ஈரமான உடல் தாளமுடியாத நடுக்கம். இறங்கி போய் பார்க்கலாமென்றால் அந்நேரம் பார்த்து சட்டென மின்தடை. டார்ச் தேடுவதற்கு நேரமில்லை. நாய்க்குட்டிக்காக அனுதாபம் பட்டது மனம். 

    * ஓய்ந்தது குட்டியின் குரல்
       குட்டையில் தவளை சத்தம்
       குழந்தை விழித்து அழுகை.*

ந க துறைவன்.

Tuesday 14 July 2020

தூக்கம் ( இருவரி கவிதை )

தூங்கினவனுக்கு சொர்க்கம்

தூங்காதவனுக்கு துக்கம்.

ந க துறைவன்.

Sunday 5 July 2020

வெளிச்சம் ( கவிதை )

மழை வருமென்று எதிர்ப்பார்க்கிறேன்
கருமேகங்கள் வேகமாய்
மின்னல் ஒளியோடு நகர்ந்து போகின்றன
எங்கோ தொலைதூரம்
பறவைகள் கூடுகளில் உள்அமர்ந்து
காத்திருக்கின்றன மழைக்காக
மேல் படிந்த தூசுகள் உதறிவிட்டு
அசைத்தபடி இலைகள்
காற்றில் உற்சாகமாய்
சிணுங்களாய் சிறுதூறல்
படபடவென ஊசிகளாய் இறங்குகின்றன மண்ணில்
பரபரப்பாய் பாதையில் பயணிகள்
மழைத்துளிகள் உடம்பில் படாமல்
பாதுக்காக்க ஒதுங்க இடம் தேடி ஓடுகிறார்கள்
கொஞ்ச தூரம் நனைந்து நடந்து
வீடு வந்தடைந்தேன்
உள்ளே மின்சாரம் இல்லை
நனைந்த உடைகள் கழற்றினேன்
அந்நேரம் பார்த்து பளிச்சென்று
மீண்டும் வந்தது
மின்சாரம் வெளிச்சம்
வெட்கப்பட்டு உள்ளறைக்குள் நுழைந்தேன்
வேறு ஆடைகள் மாற்ற...!!

ந க துறைவன்.


Thursday 2 July 2020

சாத்தான் குளம் ( சென்ரியு )

தந்தை மகன் ரத்தம்
நிரம்பி வழிகிறது
சாத்தான் குளம்.

ந க துறைவன்


மழை

மழை வருமென்று எதிர்ப்பார்க்கிறேன்
கருமேகங்கள் வேகமாய்
மின்னல் ஒளியோடு நகர்ந்து போகின்றன
எங்கோ தொலைதூரம்
பறவைகள் கூடுகளில் உள்அமர்ந்து
காத்திருக்கின்றன மழைக்காக
மேல் படிந்த தூசுகள் உதறிவிட்டு
அசைத்தபடி இலைகள்
காற்றில் உற்சாகமாய்
சிணுங்களாய் சிறுதூறல்
படபடவென ஊசிகளாய் இறங்குகின்றன மண்ணில்
பரபரப்பாய் பாதையில் பயணிகள்
மழைத்துளிகள் உடம்பில் படாமல்
பாதுக்காக்க ஒதுங்க இடம் தேடி ஓடுகிறார்கள்
கொஞ்ச தூரம் நனைந்து நடந்து
வீடு வந்தடைந்தேன்
உள்ளே மின்சாரம் இல்லை
நனைந்த உடைகள் கழற்றினேன்
அந்நேரம் பார்த்து பளிச்சென்று
மீண்டும் வந்தது
மின்சாரம் வெளிச்சம்
வெட்கப்பட்டு உள்ளறைக்குள் நுழைந்தேன்
வேறு ஆடைகள் மாற்ற...!!

ந க துறைவன்.


Wednesday 1 July 2020

திருமணங்கள்

கொரோனா காலத்து எளிய திருமணங்கள் குறித்து..