Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Thursday 26 November 2015

நிஜம்...!! (ஹைக்கூ )

Haiku – Tamil / English;
*
எது நிஜம் எது பொய்?
எவருக்கும் தெரியாது?
எல்லாமே நிஜம்..
*
What is true and what is false?
Who knows?
Everything is real ..

*

சோகத்தை அறியுமோ மழை ...!!

கட்டுரை.
*
புயல் மழை வருவதை முன்னறியும் ஆற்றல் பறவைகள் விலங்குகளுக்கு உண்டு என்று சான்றோர்கள் சொல்கிறார்கள். இன்றும் ஆதிவாசி பழங்குடிமக்கள் வானிலையை அறி்ந்து மழை வருவதைச் முன்கூடடியே சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அக்காலத்திலும் இக்காலத்திலும்  ஜோதிடர்கள் பஞ்சாங்கம் பார்த்து அப்படி சொல்வதை அறிவேன். நவீன விஞ்ஞான வளர்ச்சியடைந்த இந்நாளில் வானிலை ஆராய்ச்சி மையம் மிகத் துள்ளியமாக உடனுக்குடன் தகவல்களை அனுப்பி மக்களை எச்சரிக்கை செய்கின்ற அளவிற்கு வளர்ந்திருக்கின்றன.
பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் பெய்து வரும் புயல்மழை வெள்ளப் பெருக்கு மக்கள் வாழ்வாதாரத்தையே புரட்டிப் போட்டுவிட்டது. எங்கும் மழைவெள்ள நீர் பெருகிப் பாய்கிறது. அணைகள், அருவிகள், ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்ப்பட்டுள்ளன. விவசாயம் விவசாயிகள் வாழ்விழந்து தவிக்கின்றார்கள்.  அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்மையால் பாதுகாப்பின்றி அவதிக்குள்ளாகி உள்ளார்கள். அவர்களுக்கான நிவாரண உதவிகள் மிகத் தாமதமாகி விட்டன என்று புகார் தெரி்க்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒடிசாவில் ஏற்பட்ட புயல் மழைக்கு அம்மாநில முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்றளவும் உலக அளவில் பாராட்டப்படுகின்றன. அந்நிகழ்விலிருந்து இன்னும் பல மாநிலங்கள் தக்கதொரு படப்பினைப் பெறவில்லை என்று சமூக ஆர்வலர்கள் விமர்சகர்கள் காட்டமாகத் தெரிவிக்கிறார்கள். இந்தியா மாநிலங்களில் தமிழகம் என்னதான் வளர்ச்சிப் பெற்ற மாநிலமாக இருந்தாலும் அரசியல்ரீதியாக மக்கள் பிரச்சினைகள்பால் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைள் பாரபட்சமானதாகவே இருக்கின்றன என்று அரசியல்வாதிகள் முதல் பொருளாதார வல்லுநர்கள் வரை தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள். இன்று தமிழக மக்கள் பெரும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளார்கள் என்பது   நிதர்சனமான உண்மையென்று சொன்னால் மிகையாகாது.
*

Wednesday 25 November 2015

அறுவை சிகிச்சை...!!


*
முல்லா ஒரு முறை அறுவை சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.. அவருக்கு அறவை சிகிச்சை செய்யும் மருத்துவர் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டார்.
“ இங்கே பாருங்க முல்லா! நாங்கள் வேகத்தை நம்புகிறோம். ஒரு நொடிப்பொழுதைக்கூட வீணாக்க மாட்டோம். அறுவை சிகிக்சை முடிந்த அடுத்த நாளே நீ்ங்கள் உங்கள் அறையில் ஐந்து நிமிடங்கள் நடக்க வேண்டும். அடுத்த நாள் மருத்துவமனைக்கு வெளியே அரைமணி நேரம் நடக்க வேண்டும். மூன்றாவது நாள் ஒரு மணிநேரம் தெருவில் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இங்கே நேரம் தான் பணம். நமக்கு இருப்பதோ குறுகிய வாழ்நாள். அதனால் பணத்தையும் நேரத்தையும் எவ்வளவு முடியுமோ? அவ்வளவு மிச்சப்படுத்த வேண்டும். என்ன புரிந்ததா? ஏதாவது சந்தேகம் இருக்கிறதா? ”
“ ஓரே ஒரு சந்தேகம் டாக்டர். அறுவை சிகிச்சை செய்யும் போதாவது நான் படுத்துக் கொள்ளலாம் அல்லவா? ”
ஆதாரம் ; ஓஷோவின் “ பாதை சரியா இருந்தால்…. – என்ற நூல் – பக்கம் – 400.
தகவல் ; ந.க.துறைவன்.

*

அழுக்கு...!! ( கவிதை )


*
மற்றவர்கள்
செய்தத் தவறுகளை
நாம் எப்பொழுதும்
மன்னிப்பதில்லை
ஏனெனில் நாமே
தவறு செய்பவர்களாக
இருக்கிறோம்
சில நேரங்களில்
*
நிர்வாண
மனிதர் அணிந்த
அழுக்குத் துணிமூட்டை
சுமந்து
நிர்வாணக் கழுதை
துறைக்குப்போகிறது
எந்த அழுக்கை
வெளுக்க…?
*

Tuesday 24 November 2015

மழைக் காலம்....!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English
The rainy season
மழைக் காலம்.
*
அவ்வப்பொழுது பொழிந்து
மனம் மகிழ்கின்றன
இசை – மழை.
*
Occasional rain
Mind enjoy
Music - rain.

*

தீபத் திருநாள்...!!

*
நல்வாழ்த்துக்கள்.
*
மலையில் ஒளிரும்
திரு விளக்கு
நெய்யில் எரியும்
ஆன்ம விளக்கு
மண் இருள் போக்கும்
ஒளி விளக்கு
கார்த்திகைத் தீபத்
திரு விளக்கு.
* 

மழைக் காலம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English;.
*
மழைக் காலம்
The rainy season
*
வெளியில் போகமுடியவில்லை
புயல் மழையில் சேதமாகி விட்டது
எறும்புகள் சேகரித்த தானியங்கள்.

*
Unable to go outside
The storm has been deteriorating in the rain
Grains collected by the ants.
N.G.Thuraivan.

*

Monday 23 November 2015

வெகுளித்தனம்...!! ( கவிதை )

.
*
புத்திசாலியை, பைத்தியக்காரனைப்
புரிந்துக் கொள்ளலாம்.
புரிந்துக் கொள்ள முடியாமல் போகலாம்
புதிராகவே எப்பொழுதும்
புரிந்துக் கொள்வதற்கும்
புரியாமல் போவதற்கும்
புரிய வைப்பதற்கும்
சிரமமாக இருப்பவனே
இரண்டாங் கெட்டான்.
எப்படியோ?
சமாளிப்பான் அறி்வாளி
சங்கடப்படுவான் வெகுளி.

*

Sunday 22 November 2015

பேயோன்...!! ( நகைச்சுவை )

*
ஷாட் எப்படியிருக்கு?
சூப்பரா இருக்கு.
யார் எடுத்தது?
நான் தான் சார்?
அடுத்த படம் வாய்ப்பு
உங்களுக்குத் தான்.
நன்றி சார்
பேரென்ன சொன்னீங்க?
பேயோன்…!!
*

Saturday 21 November 2015

குன்றுகள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
அமைதியான ஓய்வு
மரங்களின் நிழலில்
சின்ன குன்றுகள்.
*
Peaceful Rest
In the shade of trees
Small dunes.

*

முல்லா கதை....!!


*
தாழ்வு மனப்பான்மை…!!
*
ஒரு முறை முல்லா நசிருதீன் என்னிடம் வந்தார். அவர் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டார்.
“ என்ன ஆயிற்று? ” என்று கேட்டேன்.
“ நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும். சமீப காலமாக எனக்குப் பயங்கரமான தாழ்வுமனப்பான்மை வந்துவிட்டது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. நீங்கள்தான் எப்படியாவது… ”.
அதைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லுங்கள். இந்தத் தாழ்வு மனப்பான்மைக்கு என்ன காரணம்? ”
“ நான்தான் இருப்பதிலேயே மிகவும் உயர்ந்தவன் என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் சமீபகாலமாக மற்றவர்களும் எனக்குச் சமமாகத்தான் இருக்கிறார்கள். என்ற உணர்வு வருகிறது. இந்தத் தாழ்வு மனப்பான்மையில் மாட்டிக் கொண்டு தவியாகத் தவிக்கிறேன். நான் மற்றவர்களை விட எல்லா விதத்திலும் உயர்ந்தவன் என்று எனக்குப் புரிய வைத்து, இந்தத் தாழ்வு மனப்பான்மையைப் போக்குங்கள்.
ஆதாரம் ; ஓஷோவின் “ பாதை சரியாக இருந்தால்… ” – என்ற நூல் – பக்கம் – 214.
தகவல் ; ந.க.துறைவன்

*

விமர்சனம்...!! ( ஹைக்கூ p

Haiku – Tamil / English
*
பத்தாண்டுகளுக்கு பிறகு
மழை குறித்த சுயமான
மக்கள் விமர்சனம்.
*
Decades later
Originality of Rain
People Review.

*

Friday 20 November 2015

மழை...!! ( ஹைக“கூ )

Haiku – Tamil / English.
*
காக்கை நடந்த கால்தடம்
அழித்து விட்டது
மழை.
*
Crow's feet
Erased
Rain.
*

Thursday 19 November 2015

விமர்சனம்

பத்தாண்டுகளுக்கு பிறகு
மழை குறித்து ஆதங்கமான
மக்கள் விமர்சனம்.


Wednesday 18 November 2015

காதல் கா கசம்...!! ( கவிதை )

காதல் கா கசம்….!!
1.
அண்டா கா கசம் அபு கா கசம்
அன்பு கா கசம் காதல் கா கசம்
திறந்திடு சீசே..
இப்பொழுது என்னிடம்
ஒப்படைத்திடு
அவளை என் வசம்.
2.
பாதுகாப்பாக இதய லாக்கரில்
பூட்டி வைத்திருக்கிறாயே
உன் தங்கம்
மீட்டுவிட்டாயா? அல்லது
எவருக்கேனும் கோட்டை
விட்டு விட்டாயா?
உருகி உருகி
வேறு நகையானதோ?
உன் சொ ( ந்த ) க்க தங்கம்.
*

Sunday 15 November 2015

மனப் புயல்...!! ( கட்டுரை )


*
புயல் மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. கரைகடந்தப் புயலினால் வயல்வெளிகள் உருக்குலைந்து விட்டன. . வீடு வாசல்கள் இழந்து மனித உயிர்கள் வாழ்வை இழந்து வெறுங்கையர்களாய் நிற்க வைத்துவிட்டது. வெள்ளம். எங்கும் பெருவெள்ளம். கரைபுரண்டு ஓடும் தண்ணீர் வெள்ளம். மக்கள் முகங்களில் தெம்பும் துயரமும் காணப்படுகின்றன. எத்தனையோ ஆண்டுகள் நீரைக்காணாத ஆறுகள் ஏரிகள் அணைகள் குளம் குட்டைகள் எல்லாம் நீர் நிரம்பி வழிகின்றன.

பனிரெண்டு ஆண்டுக்கொருமுறை வரும் மகாமகத் திருவிழா போன்று, ஆற்றங்கரையில் நின்று மக்கள் கூட்டம் குடும்பம் குடும்பமாய் வெள்ளத்தை வேடிக்கைப் பார்க்கிறது. கரையில் ஈரமண் மேட்டில் நின்றிருந்த இரு சகோதரர்கள் கண்ணிமைக்காமல் பார்த்து நின்றிருந்தத் தருணம் மண்சரிந்தது. இருவரும் தடுமாறி கீழே சாய்ந்தனர். சமாளித்தனர். உம்… ஏதும் முடியவில்லை. நீரில் தலைகவிழ்ந்தது தான் தாமதம் வெள்ளநீர் இருவரையும் வேகமாய் இழுத்துக் கொண்டது. கரையில் வேடிக்கைப் பார்த்து நின்றிருந்த மக்கள் செய்வதறியாது தவித்தனர். இருவர் உடல்களும் வேகவேகமாக அடித்துச் செல்லப்படுகிறது. எல்லாரும் அவர்களைக் காப்பாற்றுவதற்கு வழிதெரியாமல் திகைத்து நின்று, கதறி கதறி காப்பத்துங்க… காப்பாத்துங்க.. என்ற அழுகுரலின் ஓலங்கள் எங்கும் எதிரொலித்தன. அச்சிறுவர்களின் உடல்களை நீர்ச்சுழற்சி இன்னும் வேகவேக இழுத்துச் செல்வதைப் பார்க்கப் பார்க்க வேதனை தாங்கமுடியவில்லை. எத்தனை நொடி? எத்தனை நிமிடமிருக்கும்?. அத்தனை துரிதமான அச்சம்பவம் நடந்து முடிந்து விட்டது. இப்பொழுது அவ்வுடல்கள் கண்ணுக்குக் கூட தெரியவில்லை. அவ்வுடல்கள் எங்கேனும் கரை ஒதுங்கியிருக்குமா? எவரேனும் பார்த்துக் காப்பாற்றியிருப்பார்களா? வெள்ளநீரில் இன்னும் எங்கேனும் மிதந்துப் போய்க் கொண்டிருக்குமா? 

அச்சிறுவர்களின் விதி நீரின் விளையாட்டாய் முடிந்து விட்டது.  பெற்றவர்கள் இன்னும் கரையைவிட்டு அகலவில்லை. அவர்கள் அழுது சிந்தும் கண்ணீர்மழை வெள்ளநீரில் கலந்து பாய்கிறது. இன்னும் மழை தொடர்ந்து பெய்துக் கொண்டுதானிருக்கிறது. புயல் கரையைக் கடந்துவிடும். ஆனால் எவர் ஆறுதலும் தேறுதலும் சொன்னாலும் நிவாரணம் கொடுத்தாலும் அவர்களின்  பாசம் கரைகடந்துவிடுமா? வாழ்வில் நிம்மதிதான் கிட்டிவிடுமா?  

*

ஆய்வு...!!

புயல் மழை சேதங்கள்
பார்வையிட்டன
ஆய்வுக் குழு பறவைகள்.
ந.க.துறைவன்.


Saturday 14 November 2015

துடிப்பு...!! [ கவிதை }


*
இரவு அழகான உயிர்ப்பு
ஓசையற்று மலரும் துடிப்பு.
*
புரிந்துக் கொள்ளும் மனம் பூரிக்கும்
புரியாமல் போனால் மனம் பரிதவிக்கும்
*
மூப்பு, பிணி, சாக்காடு
மனித குல்த்திற்கு சாபக்கேடு.
*
நோன்பு பலகாரம் கொடுத்தாள்
அதில் தெரிந்தது அவள் அன்பு.
*

Friday 13 November 2015

புயலே...மழையே...!! [ மரபு }


*
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
புயலாக மாறி வந்தது கண்ணம்மா.
கனமழை பெய்து புரண்டு ஊரெங்கும்
வெள்ளமாக பாயுதடி கண்ணம்மா.
*
கடைகண்ணி போய்வர முடியலை
மருத்துவமனை நாட முடியலை கண்ணம்மா
டெங்கு மலேரியா நோய் கொடுமை
எங்கும் தாண்டவமாடுதடி கண்ணம்மா.
*
நெற்பயிர்கள் தலைசாய்த்து நீரில்
நீச்சலடித்து மிதக்குதடி கண்ணம்மா.
வாழைமரம் குலையோடு தலைசாய்ந்து
வாழ்வை இழந்து தவிக்குதடி கண்ணம்மா.
*
வீடு இழந்து உழைப்பு இழந்து மக்கள்
காசு தேட வழியில்லை கண்ணம்மா
ஏரி குளம் உடைப்பெடுத்து வெள்ளநீரு
ஊருக்குள்ளே பாயுதடி கண்ணம்மா
*
பட்டமரம் போலாகி அல்லல்படும்
வாழ்க்கையாச்சுதடி கண்ணம்மா - இந்தப்
பரிதாப நிலைமைப் பார்க்க யாரும்
பறந்துவர நேரமில்லையடி கண்ணம்மா??.


*

குழந்தைகள் தினம்...!!


*
அன்புக் குழந்தைகள் வாழ்க
ஆசைக் குழந்தைகள் வாழ்க
நேசக் குழந்தைகள் வாழ்க – இந்நிய
தேசக் குழந்தைகள் வாழ்க.
உலகக் குழந்தைகள் வாழ்க.
*

Thursday 12 November 2015

புயல்...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English;
*
வாழ்க்கையைச் சூழ்ந்து
மையம் கொண்டிருக்கிறது
புயல் சின்னம்.
*
Life surrounded
Contains Center
Storm logo.

*

புயல் சீற்றம்...!! [ கட்டுரை ]


*
இயற்கையின் பணிகள் என்னவென்று எவருக்கும் எதுவும் தெரியாது? அவை நியதியோடு செயல் புரிவது எப்படி என்று எதுவும் தெரியாது? ஐம்பூதங்களின் நற்பணிகள் உயிர்வாழ்வதற்கான ஆதார சக்திகளாகத் திகழ்கின்றன. அவைகளின் செயல்பாட்டடில் கூட மௌனமும், சீற்றமும் கூட உள்ளடங்கியிருக்கின்றன. ,வெப்பம், மழை, குளிர் புயல் பூகம்பம் என அந்தந்தக் காலங்களில் தாங்கமுடியாத அழுத்தங்களிளால் அவைகள் வெளிப்படுத்தி விடுகின்னறன. அதுவே  வெயில், குளிர், புயல், பூகம்பம் என்று பருவம்தோறும் தன்னை வெளிப்படுத்தி ஆசுவாசப்படுத்திக் கொள்கி்ன்றன. ,இயக்கச் செயல்பாடுகளைப் புதுபப்பித்துக் கொள்கின்றன. இவற்றினால் பாதிக்கப்படும் கோடானகோடி மக்கள் பாதிக்கப்படும்போது வாழ்வின் நிலைப்பாடுகள் நிலைக்குலைந்துப் போய்விடுகின்றன. அதனால் தாங்கமுடியாதத் துயரமும் துன்பமும் வாட்டிவைக்கின்றன. இந்நிலையிலிருந்து அவர்கள் மீள்வதற்கு எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளும் என்றும் சொல்வதற்கில்லை.ஆயினும், இச்சமுதாயம் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் அதனை வேடிக்கைப் பார்க்கின்ற தன்மையிலேயே ஆட்சியதிகாரங்கள் இருக்கின்றன. பாரபட்சமான செயல்திட்டங்களைக் கொண்டு மக்களுக்காகச் சேவைகளையாற்றி விளம்பரப்படுத்திக் கொண்டு பணியாற்றி வருகின்ற போக்கே மிகுதியாகத் தென்படுகின்றன. இதனால் மக்களுக்கு என்ன ஆறுதல் நிவாரணம் கிடைத்துவிடுகின்றன. எல்லாமே கேள்விக்குறியாகவே இருக்கின்றன. இயற்கையின் சீற்றத்தை விட அதிகாரவர்க்கத்தின் நிர்வாகச் சீற்றமே மக்களின் மீது வேகப்பாய்ச்சலாகி தடுமாற வைக்கின்றன. .மேலும் அவர்களை நிர்கதிக்கு ஆளாக்கி வதைக்கின்றன என்றே சொல்லலாம்.  எத்தனையோ காலமாக வந்து வந்து புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்ற இந்தப் புயல்மழைலிருந்து நாமும் நம் அரசு நிர்வாகமும் கற்றுக் கொண்ட பாடம் தான் என்ன?
*

நினைவில்...

சிறுவனாக இருக்கும்போது அருகில் அமர வைத்து தீபாவளி முறுக்கு எள்ளுஅடை அதிரசம் தின்னக் கற்றுக்கொடுத்த அம்மாவின் பாசம் பரிவை இன்று நினைக்கும்போதும் நெஞ்சம் நெகிழ்கிறது. ந.க.துறைவன்.


Sunday 8 November 2015

வாழ்த்துக்கள்...!!

உங்களுக்கு நீங்களே  தீபங்களாக இருங்கள்.
புத்தர்.
*
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நண்பர்களே
ந.க.துறைவன்.

தேர்வு...!! [ கவிதை ]

தேர்வு…!!
*
இந்த வார்த்தைகளில்
உனக்குப் பிடித்தமானது
எதுவென்று
தேர்வு செய்துக் கொள்
உன் வாழ்வின்
பரிமாணத்தையே
மாற்றிவிடும் வல்லமைப்
பொருந்தியவை,
அவைகள்
ஒன்று
=ஆமாம்+
இன்னொன்று
=இல்லை+
இதில்
எது உனக்கு வசதி?

*

Thursday 5 November 2015

மோட்சம்...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English;.
*
தருமராசா கோயில்
வெளி கல்மண்டபத்தில்
வேலையற்றோர் சூதாட்டம்.
*
துரியோதனன் மாண்டான்
திரௌபதி கூந்தல் முடித்தாள்
தீமிதித்து பக்தர்கள் கொண்டாட்டம்.
*
விடியற்காலை மோட்சம் அடைந்தாள்
கர்ணமோட்சம் தெருக்கூத்து
இரவெல்லாம் பார்த்தக் கிழவி.

*

Wednesday 4 November 2015

செயல்...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English;.
*
எல்லாம் அவன் செயல்
எல்லாம் அவள் செயல்
எல்லாமே செயலற்ற செயல்.
*
All is by almighty
She is everything
Everything is inactive.
*

Monday 2 November 2015

கவிதை...!!

Haiku – Tamil / English.
*
அழகிய ஹைக்கூ கவிதை
எந்நேரமும் எழுதுகிறது
வண்ணத்துப்பூச்சி.
*
Haikku beautiful poetry
Anytime writes
Butterfly. 
*    

Sunday 1 November 2015

பாடு பொருள் நீயெனக்கு....!!


*
பனிமலை காஷ்மீரும் பகலவனை அதிகாலை
பணிவாக வணங்கும் தென்குமரி தேவியும்
கனிவளமும் நதிவளமும் முக்கடல் வளமும்
கனிமங்கள் வளமும் கொண்ட தாயே,
கொஞ்சும்எழில் தாஜ்மகலும் சாய்ந்த கோபுரமும்
கொட்டும் மழை சிரபுஞ்சி அதிசய அழகே,
தஞ்சையில் மணிநெல்லும் பஞ்சாபில் கோதுமையும்
தன்னிறையாய் விளைவிக்கும் தாயே போற்றி !
விவசாயப் புரட்சியும் விண்கலன் எழுச்சியும்
வேதாந்த சிந்தனையும் கண்டு தெளிந்து
நவநவமாய் புதுமைகள் புனைந்து உலக
நாடுகள் வியந்திட முன்னேறும் என்னாடே,
பன்மொழிகள் சமயங்கள் சாதிகள் வேறெனினும்
பண்பால் ஓர்நிறையாய் வாழ்வோர் இதயம்
புண்ணாகும்வன்முறை எதிர்த்(து)அன்பால்ஆள்பவளே
பாடுபொருள் நீயெனக்கு பாரதத் தாயே !

*