Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Wednesday 30 March 2016

நெருங்கிய நண்பன்...!! ( ஹைபுன் )


*
ஒருவர் மீது அன்பு மிகும்போது அது அன்பாக மாறி நெருங்கிய உறவை ஏற்படுத்துகிறது. அதுவே நட்பாக வளர்ந்து நேசிக்க வைக்கிறது. பரஸ்பரம் சிறந்த புரிதலை ஏற்படுத்தி உயிருள்ள வரை இணைப்பை உண்டாக்கி எல்லோர் மத்தியிலும் ஒரு நல்ல மனிதனாக வெளிப்படுத்தி விடுகிறது. ஆதலால் தான் சிலர் தன்னை அறியாத நண்பர்களிடம் அறிமுகப்படுத்தும் போது “ என் நெருங்கிய நண்பன் ” என்று அறிமுகப்படுத்தி வைக்கிறது. இப்படித் தான் நட்பு ஒரு தொடர் சங்கிலி போன்று நீடித்து சமுதாயத்தில் வாழ்கின்றது.
*
இணைப்புப் பாலமாய் அன்பு
உணர்ச்சியோடு நெருங்கி வைத்து
மரணம் வரைக்கும் நட்பு

*

அச்சம்...!! ( சென்ரியு )

Senryu  – Tamil / English.
*
உச்சம் நிகழ்ந்தது
அச்சம் அகன்றது
வெட்கம் கவிழ்ந்தது.
*
Pinnacle occurred
Fear cleared
Shame collapsed.
*


சம்பவம்...!! ( சென்ரியு )

Senryu – Tamil / English.
*
நினைவுகளிலிருந்து எழுகிறது
அவ்வப்பொழுது மறக்காமல்
மறக்க நினைத்த சம்பவம்.                                                         
*
Which arises from the
Remember to periodically
Wanted to forget the incident.

*

Tuesday 29 March 2016

நீலத்தாமரை...!!




1.
கிரேக்கர், எகிப்தியர்கள் முதல், இந்தியர்கள் வரை நீலத்தாமரையை போதைப் பொருளாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இதன் காய்ந்த இலைகளைச் சுருட்டி சிகரெட் போல பயன்படுத்தி யிருக்கிறார்கள். நியூசிஃபென்ரைன், அபோரின் என்ற வேதிப்பொருள் இருப்பதே, மெல்லிய தூக்கத்திற்கும் , போதைக்கும் காரணம் என்கிறது இந்திய சித்தா மற்றும் ஆயுர்வேத நூல்கள் யூஃபோரியா, குழந்தைப்பேறு இன்மை, மனம் பிறழ்தல் போன்றவற்றிற்கும், மேலும் பல நோய்ளுக்குமான மருந்துத் தயாரிப்பில் இவை முக்கிய இடம் பெறுகின்றன. மனஅமைதி தரவல்ல இந்தப் பூவின் சாறு மனநல ஊக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.
2.
வேதம், உபநிஷதம், இதிகாசப் புராணங்கள், தொடங்கி சங்க இலக்கியங்கள் வரையும், யோகம், ஆன்மீகம், தந்திர சாஸ்திரம் நூல்களிலும் இந்தப் பூக்கள் தனி இடம் பெற்றிருக்கிறது. ஆதிசங்கரர், தேவியின் அழகை வர்ணிக்கும் சௌந்தர்ய லகரியில், 57 – வது பாடலில், தேவியை, “ ஹே தேவியே! நிலா எப்படி பேதம் பார்க்காமல் எல்லோருக்காகவும் வருகிறதோ அதுபோல நீலத் தாமரை போன்ற குளிர்ந்த உன் கருணை மிகுந்த கண்களால் தகுதி பாராட்டாது என்னையும் கடாசிக்க வேண்டும் ” என்று உருகுகிறார். இந்துமதம் மட்டுமல்ல, பௌத்த மதத்தில் கூட பல நூல்களில் இந்தப் பூ பற்றி அநேகக் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. புத்தரின் காலடிச் சுவட்டில் 108 புனித குறியீடுகள் இருந்ததாகவும் அதில் ஒன்று நீலத் தாமரை என்கிறது மகாயான பௌத்தமதம்.

3.
இந்த ஏரி ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரிலிருந்து 3 மைல் தொலைவில் இருக்கிறது. உலகம் தோன்றிதன் அடையாளமாக புஷ்கர மேளா வெகு விமரிசையாக இன்றும் கொண்டாடப்படுகிறது. என்றாலும் அன்று காடுபோல் படர்ந்திருந்த அந்த ஏரியில் தற்போது ஒரு பூ கூட இல்லை. பேராசையின் காரணமாய் அனைத்தையும் அழித்தாகி விட்டது.  அபூர்வமாய், புனிதமாய்ப் போற்றப்பட்ட அவற்றின் பெயர், இப்போது ஐ.நா.சபையால் அறிவிக்கப்பட்டுள்ள அழிவிலிருக்கும் மூலிகைத் தாவரங்களின் பட்டியலில் சிவப்பு எழுத்தில் பொறிக்கப்பட்டு விட்டது.
ஆதாரம் : இருவாட்சி பொங்சல் மலர் – 2016. – பக்கம் 100 -101.
தகவல் : ந.க.துறைவன்.
*     

          

Monday 28 March 2016

ஆக்கிரமிப்பு...!! ( ஹைக்கூ )

aiku – Tamil / English;.
*
எல்லா  சாஸ்திரங்கள்  படித்தவர்
மனமெல்லாம்  ஆக்கிரமித்துள்ளது
காம  சூத்திரம்,
*
Studied all the scriptures
Occupies energizing
Kama Sutra,

*

மனமே...!! ( கவிதை )

வாசிப்பில் ரசித்த வைரவரிகள்.
*

கணமோரிடம் விளையாடிட
தினம் மாறிடும் மனமே
அணை மீறிடும் நதி போல – பல
வழி போவது சரியா?
நிலை மாறிடும் விலை மாதென
அலை பாய்ந்திடும் மனமே
நலமே பெற, வளம் மேவிட
புலன் வென்றிடும் தினமே
பிரிவாயிரம் உருவாகிட
நரி வேலைகள் புரிவாய்
விரிவாகி உயர்வா னென
குணங் காண்பது நலமே.
பொருள் தேடிட, இருள் மூடிய
குருடாகிய மனமே
மருள் நீங்கிய அருள் தேங்கிய
மதியேந்துக மனமே
விதி தேவதை சதியால் மதி
பறிபோவது நிஜமே
நிதி தேவதை அதி காரத்தில்
நிலை சாய்வதும் இயல்பே.
தெளிவாயுண்மை உணர்வா யெனில்
திசையாவையும் அறிவாய்
வளையாமலும் வழுவாமலும்
வலிவாகிடு மனமே.
ஆதாரம் ; கவிஞர்.சி.விநாயகமூர்த்தி – ஒளியின் நெசவு – நூல் – பக்கம். 41.
தகவல் ; ந.க.துறைவன்.

*  , 

Sunday 27 March 2016

சிவம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
சத்தியம்,சிவம், சுந்தரம்
நெற்றியில் மூன்று
ஹைக்கூ வரிகள்.
*
Truth, Shivam, Sundaram
Three on the forehead
Haiku lines.

கவலை...!! ( கவிதை )

இன்று என்ன நிகழும் என்பது
எவருக்கும் தெரியாது?
நாளை என்ன நடக்கும் என்பதும்
எவருக்கும் தெரியாது?
நேற்று நடந்ததை நினைத்து
நினைத்துக்  கவலைப்படுவதால்
நிம்மதி எதுவும் கிடைக்காது.

*

Saturday 26 March 2016

முல்லா கதை.


*
‘’ ஹோ டேய், நீங்கள் ஏன் சிரிக்காமல் இருக்கிறீர்கள்? ” என்று கேட்டார்.
அவர் தனது கண்களைத் திறந்து, “ நான் அதற்கு தயார் செய்து கொண்டு இருக்கிறேன் ” என்றார்.
கேள்வி கேட்டவரால் இதைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை.
“ நீங்கள் தயார் செய்து கொண்டு இருக்கிறேன் என்று கூறுவதற்கு என்ன அர்த்தம்? ” என்று கேட்டார்.
அதற்கு அவர் “ சிரிப்பதற்கு நான் என்னைத் தயார் செய்ய வேண்டும். நான் எனக்கு ஓய்வு கொடுத்தாக வேண்டும். நான் எனக்குள் செல்ல வேண்டும். நான் இந்த ஒட்டு மொத்த உலகையும் மறந்தாக வேண்டும்.. அப்போது நான் மீண்டும் புத்துணர்வோடு வரமுடியும். மேலும் மீண்டும் என்னால் சிரிக்க முடியும் ” என்று கூறினார்.
ஆதாரம் : ஓஷோவின் – திடீர் இடியோசை – நூல் – பக்கம் 61.
தகவல் : ந.க.துறைவன்.    

*

முயல்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
பாதையில் போகிறது நரி
புதரில் இருந்து பார்க்கிறது
அறிவாளி  முயல்.
*
Fox is going to be on track
Checking out from Shrub
Awesome rabbit.

*

Thursday 24 March 2016

சுயம்...!! ( கவிதை )

*
சுய அறிவு  சுகமளிக்கும்
நகல் அறிவு நஞ்சை வளர்க்கும்
*
செயல்பாட்டில் எங்குமில்லை
சொற்பொழிவு எல்லாம் தத்துவமயம்.
*
தவறு நடப்பது இயல்பு
தவறில்லாமல் நடப்பதுதான் சிறப்பு.
*
வாழ்க்கையின் நோக்கம் வாழ்வது
மரணத்தை நோக்கி நகர்வது.
*
சந்திக்க வந்தவர் பேசவில்லை
துணைக்கு வந்தவர் பேசினார்.
*
செத்தவர் மீதிருந்தது சொத்து
உறவினர் போராடினர் ஒன்று சேர்ந்து.  

*.

புனிதவெள்ளி...!!

இனிய காலை வணக்கம் நண்பர்களே
அனைவருக்கும் புனிதவெள்ளி நல்வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு பகலும் வார்த்தைகளைப் பொழிகிறது. ஒவ்வொரு இரவும் அறிவைத் தெரிவிக்கிறது.
அவைகளுக்குப் பேச்சுமில்லை. வார்த்தைகளுமில்லை. அவைகளின் குரல் கேட்பதுமில்லை.
நானோ குற்றமற்ற வாழ்க்கை வாழ்கிறேன். என்னைமீட்டுக் கொண்டு என் மேல் இரக்கமாயிரும்.
எனக்கு இணையான மனிதனும் என் வழிகாட்டியும், என் தோழனுமாகிய நீயே அவன்.
நன்றி  : பைபிள் வாசகங்கள்.

*

Wednesday 23 March 2016

உப்புநீர்...!! ( கவிதை )

வாசிப்பில் ரசித்த வைரவரிகள்.
*
கவிஞர் நீலமணின் கவிதை வரிகள்.
உப்புநீர்
கடலின் இயல்புதான்
ஒர் ஆயுதம் எப்படி
அழுகிறது?
துயிலும்போது
உள்நோக்கிக் கனவுகள்
கண்ணிலிருந்து
கரைகிறது உலகம்.
ஒன்று சொல்லியாக வேண்டும்
கண்ணீர்ப் பஞ்சம் மட்டும்
வரவே வராது.
மரணம் இனிது
உன் கொடை.
அழகானது தான்
உன் இரக்கமின்மை.
கண்களால் வாழ்க்கை
துன்ப மயம்.
காது வரை கண்
உன் தாராளமயத்தால் புண்.
அது சரி,
இரண்டு முற்றுப்புள்ளி எதற்கு?
ஆதாரம் : கவிதா மண்டலம் – மார்ச் – 2016 மாத இதழ் – பக்கம் 11.
தகவல் : ந.க.துறைவன்.

*

Tuesday 22 March 2016

பொறாமை..!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
மனசில் பொறாமை
பூமிக்குள் மறைந்த வேர்களாய்
வெளியில் சிரிக்கும் இலைகள்.                                        
*
Feel Envy
Late in the earth root
Smiling on the outside leaves.
*

நாடகம்...!!


நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்
நீ அழற மாதிரி அழு என்கின்ற அழகான
குழந்தைகள் இலவச சமூக நாடகம் அன்றாடம்
நாட்டில் அரங்கேறி வருகின்றது
காட்சிகள் மாறிக் கொண்டேயிருக்கின்றன
காண்பதற்குத் தான் நேரமில்லை
நாடு வளர்ந்து விட்டது என்கிறார்கள்
மக்கள் சுபிட்சமாக வாழ்கிறார்கள் என்று
ஆருடம் சொல்கிறார்கள்.
வளர்ச்சிப் பாதையில் இருப்பவர்கள் யார்?
*

Monday 21 March 2016

வங்கி...!!

*
வாழ்க்கையொரு வங்கி சேமிப்பு அல்ல
எப்பொழுதும் திரும்பப் பெற முடியாமல்
நிமிடந்தோறும் கழியும் செலவினங்கள்.. 
*

கழுதை...!! ( பழமொன்ரியு )


*
வைக்கோல் படப்பையை
நாய் காவல் காக்கும் மாதிரி,  அழுக்கு
மூட்டையைக் காக்கிறது கழுதை.

*

நல்வாழ்த்துக்கள்.

*
மார்ச் – 22. உலகத் தண்ணீர் தினம்.
தண்ணீர் உயிர்நீர் பருகுவோம் தூயகுடிநீர்
நல்வாழ்த்துக்கள் நண்பர்களே

*

பறித்தல்...!! ( கவிதை )


*
வெட்டவெட்ட வாழைமரம் துளிர்க்கும்
பறிக்கப் பறிக்க உலகில் காதல் மலர் பூக்கும்
*
இங்கு நடப்பது எதுவும் விடியலுக்கு தெரியாது்
விடிவது மட்டுமே அதற்கு தெரிந்தது.
*
வெட்கப்பட்டவன் துக்கப்படுகிறான்
ஆசைப்பட்டவன் தோல்வியடைகிறான்.

Sunday 20 March 2016

வெளியேற்றம்...!! ( சென்ரியு )

Senry – Tamil / English.
*
காட்டில் வாழப் பிடிக்காமல்
வெளியேறி ஊருக்குள்
புகுந்து விட்டன சிறுத்தைகள்
*
Did not want to live in the jungle
Evacuating the city
Panthers inroads

*

இருபக்கங்கள்...!!

இயற்கைக்கு இரவு பகல், காற்று புயல் மழை, வெள்ளம் குளிர் வெம்மை என்று ,இருப்பது போலவே, பலரிடம் இருக்கும் பிடித்தமான குணஇயல்புகள். சிலருக்குப் பிடிக்காது என்பதால் அவர்களை ஒதுக்க முடியாது. சிலரிடம் இருக்கும் தீய குணங்கள். மற்றவர்க்குப் பிடிக்காது என்பதால் அவர்களையும் ஒதுக்க முடியாது. நல்லன தீயன இரண்டுமே மனிதகுணங்களின் நாணயத்தின் இருபக்கங்களாகும். இச்சமுதாயத்தில் இவை எல்லாவற்றையும் வென்றுதான் மனிதர்கள் வாழவேண்டியிருக்கிறது.  இதுவேதான் வாழ்க்கையாகவும் அமைந்திருக்கிறது.
*        

Saturday 19 March 2016

எச்சம்...!! ( லிமரைக்கூ )

Limaraiku – Tamil / English.
*
அவமானத்தில் பெரும் கூச்சம்
நினைவலைகள் எங்கோ அலைகிறது?
தலையில் விழுந்தது காக்கையின் எச்சம்.
*
The great shame and shyness
Memories oscillates somewhere?
Crows fell on the head of the residue.

*.

Thursday 17 March 2016

துணிவு...!! ( ஹைபுன் )


*
மனிதர்களின் அச்சமும் துணிவும் தற்காலிகமானது. எப்பொழுதும் மனம் ஒரு நெருடலான சஞ்சல நிலையிலேயே நகர்ந்துக் கொண்டே இருக்கிறது. எந்தவொரு நிகழ்வுின் போதும் என்ன நடக்குமென்று தெரியாமல் சிலநேரங்களில் பீதியில் தடுமாறி செயல்படுகிறது. அதை புத்திசாலித்தனமாக சமாளிக்க எத்தனையோ வழிமுறைகளைக் கையாள்கிறார்கள். ஆனால்,அம்முயற்சி முழுமைப்பெறுவதில்லை. மனம் எப்பொழுதும் இரட்டை நிலையில் தான் செயல்படுவதாகவே அமைந்திருக்கிறது.
*
.எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும்
எதிர்நோக்கி கண்துஞ்சாமல்
துணிவோடு வாழ்கின்றன இயற்கை.

*

உயிர்...!!

காலையில் கண்விழித்தெழுந்தால்
என்ன கொடூரச் சம்பவம் நடக்குமோ?
அதனை எப்படிப் பார்ப்போமோ?
கேட்போமோ? என்று அச்சங்கொள்கிறது
மனம்.
வாழ்க்கையே அச்சமாகி விட்டது
மனிதமே துச்சமாகி விட்டது.
மலிவாகி விட்டது மனிதர்களின் உயிர்.

*                      

Wednesday 16 March 2016

நிறம்...!! ( ஹைக்கூ )

Haiku  - Tamil / English.
*
காண்பதெல்லாம்  நிறமா?
நிறம் எதுவாயினும்
எல்லாமே ஒரே நிறம்.
*
See color?
Any color
All the same color.
*

அனுமதியின்றி...!! ( கவிதை )


*
புறவெளியின் ஒதுக்கில்
அகன்றோ குறுகியோ
நீர் நிரம்பியுள்ள குளம்.
பயன்பாட்டிற்கும் பயன்படாத    
நிலைக்குமாய் தனிமையில்
இருக்கின்றது பல்லாண்டுகளாய்…
காற்றும் தூசும் மாசும்
வெப்பமும் குளிருமாய்
நீருக்குள் வாழ்உயிரினங்கள்
பாசிப் படர்ந்தக் கொடிகள்
பசுமையாய் இலைவிரித்து
நடுவே
மெல்லிய தண்டு உயர்ந்து
மொட்டு வைத்து பின் பூத்து
மலர்ந்து அழகைக் காட்டி நிற்கிறது.
ஒற்றை ஒற்றைப் பூக்களாய்
பார்க்கும் கண்கள் பரவசப்படுகின்றன
பறிக்க நினைக்கும் கைகள்
அருகில் நெருங்கிப் போகத் துடிக்கின்றன.
எந்தப் பெண்ணின் கூந்தலையும்                     
அலங்கரிப்பதில்லை எனினும்
கோயில் வாசல்களில் சதா
காத்திருக்கின்றன.
விரும்பி வாங்கிக் கொடுப்போர்
கைநிறைய ஏந்திச் சென்று
அளிக்கின்றனர் பக்தியோடு
அப்பூக்களே தினந்தினம்
நித்யபூசையில் இறைவனின்
பாதக்கமலங்களில் சரணடைந்து
வணங்கித் துதிக்கின்றன.
தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளே நுழைய
அனுமதியில்லை
தாழ்த்தப்பட்டவர்கள் பறித்தது
அனுமதியின்றி உள்ளே நுழைகின்றன
சேற்றில் மலரந்ந செந்தாமரைகள்.

*

Friday 11 March 2016

புத்தி...!! ( கவிதை 0


*
அவனுக்கு சாம்பிராணி புத்தி என்றார்கள்.
அவனுக்கு வெங்காயம் புத்தி என்றார்கள்
அவனுக்கு களிமண் புத்தி என்றார்கள்..
அவனுக்கு கற்பூர புத்தி என்றார்கள்.
அவனுக்கு ஐஸ் புத்தி என்றார்கள்.
எல்லாத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவன்
பொறுமையாகக் கேட்டான்.
அப்போ இதிலே மாங்காய்மடையன் யார்?

*

Wednesday 9 March 2016

செயல்பாடுகள்...!! ( ஹைபுன் )


*
செயல்பாடுகள் என்பது ஒவ்வொரு மனிதரிடத்திலும் வேறுபடும். தன்மை வாய்ந்தனவாகும். ஒருவர் செய்வதை இன்னொருவர் செய்ய முடியாது. சுயமாக அவரவர்களுக்கென எப்படிச் செய்ய வேண்டுமென்ற முனைப்பு உண்டு. அப்படியே செய்து அசத்துவார்கள். அது மற்றவர்களைக் கவரும். ஒரு சிலர் அவர்கள் செய்கிறார்களே நாமும் செய்வோம் என்று செய்வார்கள். அச்செயல் பிரதி எடுப்பதாகும். இச்செயல் பலநேரங்களில் நகைப்பிற்குரியதாகவும் அமைந்து விடுவதுண்டு. செய்கின்ற செயல் நன்கு சிந்தித்து செய்தாலே, அச்செயல் செம்மையாக அமைந்துவிடும்.    
*
எந்த வேலையும் செய்வதில்லை?
சும்மாயிருக்கிறது எப்பொழுதும்
செயலற்று செயல்புரியும் மரங்கள்.
*

தும்பிகள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
புரிந்தால் தலை கவிழும்
புன்னகை புரியும்  உதடுகள்
உரசி பறக்கின்றன தும்பிகள்.
*        
Tilting the head to understand
Who is smiling lips
Scraping dragon fly fly.

*

Tuesday 8 March 2016

அவள்... ( கவிதை )


*
அவள் பார்வையே
என்னை வென்றது
பிறகொரு நாள்
அவள் வார்த்தையே
என்னைக் கொன்றது.
*

முல்லா கதை...!!

*
முல்லா நஸ்ருதீன் ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டு மிகப்பெரிய விஷயங்களைக் கூறிக்கொண்டு இருந்தார். மிகவும் கற்பனைவளம் மிக்கவனாக ஆகிவிட்டார். அந்தப் பெண் மணியைப் பார்த்து “ உங்களது கண்கள் – ஒருபோதும் இப்படிப்பட்ட கண்கள் படைக்கவில்லை. மேலும் உங்களது முகம் அது ஒரு நிலவு போன்று இருக்கிறது. உங்களைச் சுற்றிலும் உள்ள பிரகாசம் மற்றும் நீங்கள் உருவாக்குகிற அதிரவலை – இது வரை நடந்திராத மிகப்பெரிய அழகான விஷயம் ” என்று இபபடி வர்ணித்துக் கொண்டே சென்றார்.
ஆனால் பெண்கள்,  எப்பொழுதுமே வாய்ப்பேச்சை விடவும் செயல்பாட்டில் இறங்குபவர்கள். எனவே அந்தப் பெண்மணி, “ நஸ்ருதீன் நீ என்னை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறாயா? என்று கேட்டார்.
உடனே நஸ்ருதீன், “ தயவு செய்து விஷயத்தை மாற்றாதீர்கள். ” என்றான்.  
ஆதாரம் : ஓஷோவின் “ திடீர் இடியோசை ” – என்ற நூல் – பக்கம் – 407.
தகவல் : ந.க.துறைவன்.
*

Monday 7 March 2016

உலக மகளிர் தினம் நல்வாழ்த்துக்கள்.


*
சியா ஜென் : குடும்பம்.
*
குடும்பம்
பெண்ணின் விடாமுயற்சி தொடர்கிறது
குடும்பம் ஒழுங்காக இருக்கும்போது
மனிதனின் எல்லா சமூக உறவுகளும்
ஒழுங்காக இருக்கும்,
விடாமுயற்சியும் ஒழுங்கான முறைகளும்
வெற்றியைத் தரும்.
கதகதப்பான, உதவிகரமான
சூழலையும் தன்மைகளையும் உங்களுக்குள் வளர்த்து,
அதனால் அடுத்தவர்களிடம்
சிறந்ததை வெளிக் கொணருங்கள்.
*                           
ஆதாரம் : “ ஐ சிங் ” -  ( சீன நாட்டு அறிவுரைகள் ) – நூல். பக்கம் 50.
தமிழில் : பி. உதயகுமார்

தகவல் “ ந.க.துறைவன்.

சிவநடனம்...!!

சிவனுடன் ருத்ரமாய்
சுடலையில் நடனமாடின
இறந்த ஆன்மாக்கள்.

ந.க.துறைவன்.

Sunday 6 March 2016

ஒரு பக்கக் கதை...!!


*
குலைகுலையாய்…!!
*
ஒருநாள் தாத்தா தன் பேரனை அழைத்துக் கொண்டு  வயல்வெளி பக்கம் போனார். அங்கு வீசிய காற்றும் வெயிலும் அழகான காட்சிகளும் அவனுக்கு பரவசமாக இருந்தது. அவன் தன் தாத்தாவின் பின்னாடியே பேசிக்கொண்டு நடந்தான். அவன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சலி்க்காமல் பதில் சொன்னார் தாத்தா. ஊருக்கு வெளியிலிருந்த அம்மன் கோயிலை நெருங்குகையில், அங்கிருந்த  பெரிய ஆலமரம் அவன் கண்ணில் பட்டது.
உடனே அவன் ஒண்ணும் தெரியாதவன் மாதிரி கேலியாக, “ கோயில்கள்லே குழந்தையில்லாதப் பெண்கள் பிரார்த்தனைத் தொட்டில்கள் கட்டித் தொங்கவிட்டிருக்கிறதைப் பார்த்திருக்கேன்.  ஆனா அதென்ன தாத்தா ஆலமரத்திலே பெரிசுபெரிசா பலாக்காய் காய்க்கிறாப் போல, நிறையக் காய்ச்சி தொங்குது? ” என்றான்.
பேரனின் கேள்வியினைக் கேட்டு சிரித்துக்கொண்டவர். “ டேய், அது பலாக்காய் இல்லேடா?. சின்னச்சின்ன மூட்டைங்கடா ” என்றார்..
“ என்ன மூட்டைங்கன்னு சொல்லுங்க தாத்தா ” என்றான்.
அதைப்பற்றி எப்படி பேரனுக்கு விளக்கி சொல்வதென்று  புரியாமல் திணறினார் தாத்தா?.
“ என்ன தாத்தா யோசிக்கிறீங்க என்று மீண்டும் கேட்டான் ” பேரன்.
அதைப்பற்றிச் சொல்லாவிட்டால் விடமாட்டான் போலிருக்கே, என்று நினைத்துக் கொண்டவர்.
“ பக்கத்திலே வந்து நில்லுடா சொல்றேன் ” என்றார்.
பேரன் அருகில் வந்து நின்றான்.
“ கண்ணா, நீ நகரத்திலே வாழறே. செயற்கைப் பொருள்களோட அதிகம் புழுங்குறே. கிராமத்திலே நடக்கிற எத்தனையோ  சம்பவங்க மனசை அதிரவைக்கவே செய்யும்டா டேய், நீ கேட்டியே, அது  பலாக்காயுமில்லை.  பூசணிக்காயுமில்லே.  பசுமாடு எருமைமாடு இருக்கில்லே அதுங்க பிரசவமாயிருந்து கன்னுபோடும். அப்போ அதுங்க கருப்பையிலேயிருந்து கொடிகொடியா சுத்தியிருக்கும் நரம்புகளும் நிறைய ரத்தமும் நீரும் வெளியே வந்து கொட்டும். அந்த சமயத்திலே மாடுங்க எவ்வளவு வலி பொறுத்திருக்கும் பாரு. அப்ப கன்னுக்குட்டி வெளியே வந்து விழுந்ததும், அதை நல்லா துடைச்சி சுத்தம் பண்ணுவாங்க. பிறகு எல்லா கழிவுகளையும் வாரியெடுத்து, கீழே சிந்தாம பாதுகாப்பான கோணிப்பை இல்லேன்.னா துப்பட்டா துணியிலே இறுக்கமா சின்ன மூட்டையா கட்டி கொண்டு வந்து ஆலமரத்திலே ஏறி உயரத்திலே கட்டிட்டுப் போவாங்க. அந்த மூட்டையை பறவைங்க எதுவும் கொத்தி சாப்பிடாது. சேதப்படுததாது. காத்துலேயும் வெயில்லேயும் மழையிலேயும் பாதுகாப்பாயிருந்து, சிலநாள்கள்லே மெல்ல காஞ்சி உதிர்ந்துப்போகும்டா ” என்று விளக்கினார் தாத்தா.
“ நா கேலியா தான் கேட்டேன். ஆனா, நீங்க வாயில்லாப் பிராணிகளின் இயற்கைப் பிரசவத்தில் இத்தனைப்பாடு இருக்கு என்கிறதை நல்லாவே புரியவைச்சிட்டீங்க தாத்தா ” என்றான் பேரன்.
*

சிவராத்திரி நல்வாழ்த்துக்கள்.


தாயான கருணையும் உனக்குஉண்டு, எனக்குஇனிச்
      சஞ்சலம் கெடஅருள்செய்வாய்
சர்வபரி பூரண அகண்டதத் துவம்ஆன
      சச்சிதா னந்தசிவமே!.
சிவனருள் பெற்று சுகம் பெறுவீர்.

*

Saturday 5 March 2016

புத்தம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tami / English.
*
புத்தாவின் புத்தம்
என்னுள் ஒளிர்கிறது         
விழிப்புணர்வு புத்தம்.
*
Buddha's brand
Shining me
Brand awareness.
N.G.Thuraivan.

*

Friday 4 March 2016

ஹைக்கூ என்றால் என்ன?


*
பிளித், ஹைக்கூ பற்றிக் கூறியிருப்பது, நம் கவனத்திற்குரியது. “ ஹைக்கூ செய்யுள் அல்ல. இலக்கியமல்ல. அது நம்மைத் தட்டி அழைக்கும் கை. பாதி திறந்திருக்கும் கதவு. சுத்தமாகத் துடைக்கப்ட்ட கண்ணாடி. இயற்கையின்பால் நம் கவனத்தை ஈர்க்கும் இலக்கிய வடிவம். குளிர்கால மழையையும் மாலைப் பறவையையும் உஷ்மான பகலையும் நீண்ட இரவையும் நம் முன் உயிர் பெறச் செய்யும் உத்தி. பேசாமல் பேசி, நம் மனிதாபிமானத்தில் பங்கு கொள்ளும் இலக்கியச் சாதனம்.
இலக்கிய வடிவங்களில் ஹைக்கூ எளிய, ஆனால் நுண்ணிய உணர்வுகள் கொண்டது. கபடமற்ற எளிய தன்மை அதன் சிறப்பம்சம். கலைப் படைப்பா அவ்லது இயற்கையின் படைப்பா என்று மயங்க வைக்கும் தன்மையுடையது.
ஆதாரம் ” ஜென் கதைகள் – கவிதைகள் – நூல் பக்கம் 46.

தகவல். ” ந.க.துறைவன்.

Thursday 3 March 2016

சிரிப்பு...!! ( ஹைக்கூ )

*
Haiku – Tamil / English.
*
  • கோபுர சிலைகளின்

அழகை கண்டு       
புறாக்களுக்கு சிரிப்பு.
*
The statues tower
View Charm
Laughter pigeons.
*

காதல்...!!

வாசிப்பில் ரசித்த வைரவரிகள்.
*
‘’ காதல் என்பது ஆதிமனிதன் நம்மீது திணித்த இயற்கையான பலவீனம் .”
ஆனால், ஆண்மை நிறைந்த வாலிபன் ஒருவன் ஆவேசமாய் மறுப்புச் சொன்னான்.
“ காதல் நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் வருங்காலத்தையும் ஒன்றிணைக்கிறது. ”
துயரம் நிரம்பிய முகத்தோடு பெண் ஒருத்தி கூறினாள்.
“ நரகத்திலிருந்து வெளிவந்த கொடிய நாகம் நமது உடம்பில் செலுத்திய விஷமே காதல்.
பனித்துனி போலத் தூய்மையுள்ள அந்த விஷத்தைத் தாகமுற்ற ஆன்மா மகிழ்வோடு பருகுகிறது.
அதைப் பருகி மயங்கியவர்கள் மெல்ல மெல்ல மடிகிறார்கள்.
 “ காதல், குருட்டு அறியாமை, அதனால் இளமை தொடங்குகிறது. பிறகு, முடிந்துபோகிறது. ”
சிரித்தவாறு மற்றொருவன் கூறினான்.
“ காதல் ஒரு தெய்வீக ஞானம்.  
அது கடவுளைப் போல இந்த உலகில் உள்ளவற்றையும் மனிதனையும் பார்க்க வைக்கிறது். ”
ஆதாரம் : கலீல் கிப்ரானின் “ தத்துவ தரிசனங்கள் ” – பக்கம் 24 – 25.
தமிழில் ” துறவி.
தகவல்  ந.க.துறைவன்.

*

துப்பட்டா...!! ( ஹைக்கூ )

Haiku  - Tamil / English.
*                                       
மனிதர் எவரும் காணவில்லை
பாறையின் மேல் இருக்கிறது.
கம்பளித் துப்பட்டா.
*
No one person is missing
It is the top of the rock.
Woolen stole.
*

Wednesday 2 March 2016

சிந்தனைக்கு...!!


*
பூவை வைச்ச இடத்திலே பொண்ணு வைச்சிப் பார்க்கணும் என்று சும்மாவா சொன்னாங்க. நல்லாதான் சொன்னாங்க. இருந்தாலும் பூவும் பொண்ணும் இரண்டுமே வாடியிருப்பதைப் பார்க்கும்போது  மனசு கொஞ்சமா சங்கடப்படுகிறது.
*
செய்திகள் எப்பொழுதும் மகிழ்ச்சியும் துக்கமும் அதிர்ச்சியும் தருகின்றன. ஆனால் அதற்காக யாரும் மனச்சோர்வு அடைவதில்லை. .அதனை  இயல்பாகவே எடுத்துக் கொண்டு தங்களின் வேலைகளைப் பார்க்கிறாரக்கள்.

*

அச்சமே ஆபத்து...!! ( கவிதை )

*
அன்றைய காதலர்களின்
காதல் கடிதங்கள்
பாதுகாக்கப்பட்டன.
வரலாற்றில் பதியப்பட்டன.
இன்றைய காதலர்கள்
கடிதம் எழுதுவதை மறந்து
எஸ்எம்எஸ்
குறுஞ்செய்திகளில்
பரிமாறிக் கொண்டு
அடுத்த நொடியே
அழகியல் கற்பனை வரிகளை
அழித்துவிட்டு   
ஆசுவாசப்படுத்திக் கொண்டு            
பாதுகாப்பு தேடிக்கொள்கிறார்கள்.    
சமுகச் சங்கிலியில் சிக்குண்டு
அச்சத்தில் வாழ்வது சாதல்
அச்சமின்றி வாழ்வது காதல்.
*