Labels

Haiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (20) கலை (1) கவிதை (332) கவிதை. (7) கவிதைகள். (7) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (2) குறுங்கவிதைகள் (12) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (55) ஹைபுன் (48)

Sunday, 30 November 2014

ரசிகன்...!! [ கவிதை ]


*
சபா மண்டபத்தில்
நாட்டிய திருவிழாவில்
காலில் சலங்கைக் கட்டி
நாட்டியம் ஆடினாய்.
உன் அலங்கார அழகும்
அபிநய நளினமும்
ஆடிய ஓயிலும் இன்னும்
என் இதயக் கணினியில்
பதிவாகியிருக்குதடி…!.
பாடலுக்கு ஒலித்த – உன்
பாதச் சலங்கையொலி
சல்… சல்… என்று ஒலித்துக்
கொண்டேயிருக்குதடி…!.
மறக்க முடியாதது
இசைக்கேற்ற உதடசைவுகள்
அங்க அசைவுகள்
தாளத் துள்ளல்கள்
பார்வையின் துடிப்புகள்
உன் ரசிகனாகயிருந்து
அனுபவித்தேனடி…!.
வாழ்நாளெல்லாம்
மறக்கவே முடியாததாய்
வரலாற்றின் ஏடுகளில்
பதிவாகி விட்டதடி
இசையாய் இணைந்த
நம் காதல் நினைவலைகள்.

Thursday, 27 November 2014

சுகம்...!! [ கவிதை ]


*
அகவெளி சூன்யம்
சுகமளிக்கும் சூன்யம்.
*
சுகமிருந்தால் திருப்தி
சகமில்லையேல் விரக்தி.
*
பேசிக் கொள்வது இன்பம்
பேசாமலிருப்பது வன்மம்.
*
மண உறவு நெருக்கமானது
மன இறுக்கம் மோசமானது.

Wednesday, 26 November 2014

கட்டிப்பிடி வைத்தியம்...!!


*
அமெரிக்காவில் ஒரிகன் மாகாணத்தில் வசிக்கிறார் சமந்தா, ‘ கட்டிப்பிடி வைத்தியம் ‘ என்ற புதிய பிஸினஸை ஆரம்பித்திருக்கிறார். ஆரம்பித்த ஒரு வாரத்துக்குள் சுமார் 10 ஆயிரம் பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துக் கொண்டார்கள். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் இங்கே அனமதி உண்டு. ஒரு நிமிடத்துக்கு 1 டாலர் பணம் வசூலிக்கமிறார் சமந்தா. 15 நிமிடங்களில் இருந்து 5 மணி நேரம் வரை அவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். சுத்தமாக வரவேண்டும்., நன்றாக உடை அணிந்திருக்க வேண்டும், தீய எண்ணங்களுடன் வரக்கூடாது. என்று வாடிக்கையாளர்களிடம் எழுதி வாங்கி வைத்துக் கொள்கிறார். வாடிக்கையாளர்களைப் பொறுத்து சிலரைக் கட்டிப் பிடித்து வைத்தியம் செய்கிறார். சிலரிடம் அருகில் அமர்ந்து படிக்கிறார். சிலரிடம் ஆறுதலாகப் பேசுகிறார், தனிமையில் இருப்பவர்கள், துணையை இழந்தவர்கள், மனம் விட்டுப் பேச நினைப்பவர்கள் எல்லாம் இவரின் முக்கியமான வாடிக்கையாளர்கள். எல்லோரும் நல்லவர்களாக இருந்துவிடுவதில்லை என்ற காரணத்தால் பாதுகாப்புக்காக, சிகிச்சையளிக்கும் அறைகளில் மேராவைப் பொருத்தியிருக்கிறார். ஒருநாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்யும் சமந்தாவிடம், ஒரு வாரத்துக்கு முன்பே அனுமதி வாங்கிவிட வேண்டும்.

*ஆதாரம் ;- தி இந்து – நாளிதழ் – ஞாயிறு நவம்பர் 23 – 2014.           

Tuesday, 25 November 2014

நித்திய வாழ்க்கை...!! [புதுக் கவிதை ]


*
நல்ல காலம் பிறந்து விட்டதென்று
அவசர அவசரமாய் கல்யாணப்
பொறுப்புகளைப் படபடவென்று
பார்க்கத் தொடங்கினர்.
ஜாதகம் பார்ப்பதில் தொடங்கியது
ஒன்பது பொருத்தம் பார்த்தனர்.
இலட்சங்களை வாரி இரைத்து
இறுமாப்போடு ஊர்ப் போற்றும்
சீர்வரிசையோடு
திருமணம் செய்து முடித்தனர்.
எத்தனை நொடிகள்? நிமிடங்கள்?
எத்தனை நாள்கள்? மாதங்கள்?
எத்தனை வருடங்கள்?
தாம்பத்ய வாழ்க்கையில்
திருப்தியோடு வாழ்ந்தாய்.
சின்னச் சின்னச் சிணுங்களின்
சிக்கல்களில் விழுந்தாய்.
சிந்தைத் தடுமாறினாய்
மனஇறுக்கமானாய்
மனமுறிவு கேட்கும்
முயற்சிக்கு ஆளானாய்.
இப்பொழுது, இருவருமே
எந்த மனப் பொருத்தமும்
பொருந்தி வரவில்லையென்று
வருந்தி விலகியிருக்க
வழக்குத் தொடுத்து
வாங்கிக் கொண்டீர்கள்
விவாகரத்து.
விவாகரத்தில் இல்லை
மணவாழ்க்கை
விவேகத்தில் மட்டுமே
விதிக்கப்பட்டிருக்கிறது
நித்திய வாழ்க்கை…!!
*

Monday, 24 November 2014

பழமொழி...!! [ கவிதை ]

*
நாட்டுப்புறத்தானுக்கு நாகரீகம் இருக்கு
நகர்ப்புறத்தானுக்கு நாகரீகம் இல்லை.
பாட்டி சொன்ன பழமொழி.
*இன்புறு....!! [கவிதை ]

*
காதலர்களைக் காதலர்களே
காமுறுவர்
மற்றவரெல்லாம் சோகமுறுவர்
பொறாமைப் பட்டு.

*

யார்...? [ கவிதை ]

யாருக்கும்
கஷ்டங்கள் கொடுப்பதில்லை
எங்கோ இருக்கும்
கடவுள்.
கஷ்டங்களைக்
கொடுப்பவனாக
இங்கே நம்மிடையே
உறவாடி இருக்கின்றான்
மனிதன்
*

கடைசி...!! [ சென்ரியு ]

*
கடைசி தோல்வியில் 
தானிருந்தது
என் முதல் காதல்.
*

Sunday, 23 November 2014

பசலை நோய்...!! [ கவிதை ]


*
உன்னை மனநோயாளி என்று
முத்திரைக் குத்தி
மனசாட்சியில்லாமல்
உறவுகள் இம்சை செய்வதைப்
பார்க்க மனம்
வேதனைப்படுகின்றது.
உன் காதலைப் பிரிக்க
எதையோ சொல்லி
நம்ப வைக்க
முயற்சிப்பவர்களின்
கட்டுக்கதை தானே இது.
உன்னை எப்படி
நம்ப வைப்பதென்று
காதலன் துடிக்கிறான்.
உன்னைச் சேர்த்து விடாமல்
தடுக்க ஊர் துடிக்கிறது.
யார் அறிகிறார்களோ? இல்லையோ?
உன் காதலன் மட்டுமே அறிவான்.
உன் பசலை நோய்க்கு மருந்து.

*

Thursday, 20 November 2014

வெண்பனி....!! ஹைக்கூ ]

வெண்பனிச் சூழ்ந்தக் காலை
பாதை தெரியவில்லை
பறவைகள் திணறல்.
*
குளத்து நீரில் விளையாட்டு
தாமரை இலையின் கீழ்
ஒய்வெடுக்கும் தவளைகள்.
*
ஆற்று மணலில் செழித்து
புதராய் வளர்ந்துள்ளது
வேலிக்காத்தான் செடிகள்.
*

Wednesday, 19 November 2014

சுழல்...!! [ கவிதை ]

வாழ்வை விரும்புகிறாயா?
விரும்பு.
வெறுக்கிறாயா? வெறு.
மரபுகளை
மீறுகிறாயா? மீறு.
பழைய உறவுகளை
உதறுகிறாயா? உதறு.
புதியன உருவாக்குகிறாயா?
உருவாக்கு.
பழையது புதியதாகிறது
புதியது பழையதாகிறது
அவ்வளவே தானே
இச் சுழல் வாழ்க்கை…!!.

*

முத்தப் போராட்டம்...!! [ கவிதை ]


*
ஆதிகாலத்தில் பிரபஞ்சம்
சத்தங்களிலிருந்தே தோன்றியது.
அச்சத்தங்களின் உச்சமே
அப்பரிமாணம்.
அங்கிருந்தே தோன்றினர்.
ஆதாம் – ஏவாள் என்ற
மானுடப் பிறவிகள்.
அன்று தொடங்கியது தான்
அன்பின் அடையாளமாகப்
பதிக்கப்பட்டு வருகின்ற
மதுர முத்தங்கள்.
*
இருட்டின் முத்தங்கள்
உயிர்த்துளியில் மானுட
இருப்பின் உருவங்களை
உற்பத்தி செய்கி்ன்றன.
*
அச்சத்தங்களில் எழுந்த
மொத்த முத்தங்களின்
தொகுப்பே
இப்பொழுதிருக்கும்
உலக மக்களின் தொகை.
*
காலந்தோறும் மானுட
வாழ்வின்
மொத்தப் போராட்டத்தை
உள்ளடக்கியது தான் முத்தம்.
இம்முத்தங்களில் கனிவது தான்
காதல், திருமணம், குடும்ப
வாழ்வின் எல்லைகள். இம்
முத்தங்களுக்கு எந்த
வர்க்கவேறுபாடுகளுமில்லை?
*
இனி எதிர்வரும் நாள்களில்
அம்பலத்தில் அரங்கேறாமல்
அந்தரங்கத்தில் மட்டுமே
சத்தமில்லாமல் இயங்கட்டும்
முத்தப் போராட்டம்.
*

Tuesday, 18 November 2014

மலர்ப் பாதை...!! [ கஜல் ]

*
காதலொரு
மலர்ப் பாதை என்று
மனமுருகப் பேசினாய்
இப்பொழுது, அந்தப்
பாதையில் தான்
அவனை
அனுப்பி வைக்கப்
போகப் போகிறாயோ?
பிணமாக…!!

*

உயிரிவிழி..!! [ கவிதை ]

எப்பொழுதும் இருக்கட்டும் என்மீது
உன் உயிர்விழிப் பார்வை.
*

காதலை முடி, கரம் பிடி. என
கொடுத்தாய் நெருக்கடி.
*

பெண்களின் நினைப்பு காமம்
கடவுளின் நினைப்பு நாமம்.


விளையாட்டு...!! [ சென்ரியு ]

*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
கணநேரமேனும் சிரித்து
விளையாடிக் களிக்கிறார்கள்
கிள்ளி விளையாட்டு.
*

குறியீடாக...!! [ சென்ரியு ]

*
NA.GA. THURAIVAN'S SENRYU.
காதலியின் குறியீடாக உள்ளது
கறுத்தப் பழரசம்
இனிக்கும் திராட்சைகள்.
*
மாலை மயக்கம்
எனக்குள்ளொரு தயக்கம்
போதையில்லாதப் போதை.
*
காலி வீட்டுமனை
பச்சைப் பசேலென்று
வளர்ந்திருக்கிறது புல்பூண்டுகள்.
*
வீடு கட்டுவதற்கா?
மண் உருட்டிப் போகிறது
பீ வண்டுகள்.
*
வானில் பிரகாசிக்கின்றன
எங்கே என்று கண்டுபடிப்பது?
கார்த்திகை நட்சத்திரப் பெண்கள்.

*

Monday, 17 November 2014

காதலின் புகழ்....!! [ கவிதை ]

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்
கான முண்டாஞ் சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினாற் காதல் செய்வீர் உலகத்தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்!
காதலினாற் சாகாம லிருத்தல் கூடும்,
கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்.
ஆதாரம் :- பாரதியார் பாடல்கள் – பக்கம். 496.
ந.க. துறைவன்.   


அவள்...!! [ கஜல் ]

*
சில நேரம் இனிக்கிறாள்
சில நேரம் புளிக்கிறாள்
அவள்.

*

அறிந்து சொல்...!! [ கஜல் ]

இறைவனே, நீ எல்லாம்
அறிந்தவன் என்று
சொல்கிறார்கள்.
கொஞ்சம் – என்
காதலியின் மனசில்
நானிருக்கிறேனா? என்று
பார்த்து என்னிடம்
சொல்வாயா?

*

நகரம்...!! [ கவிதை ]


*
யாருக்கும் உதவி செய்யாதவர்கள்
அருமையாய் செய்வார்கள் உபதேசம்.
*
மானுடர்கள் வாழும் நகரம்
வாகனப் புகைச் சூழ் நரகம்.
*
மரணத்திற்குள் இருக்கிறது
மன்மதன் வாழ்க்கை.

*

Saturday, 15 November 2014

முரண்...!! [ கவிதை ]

*
நான் குறிஞ்சிமலர்
நீயோ நெருஞ்சி முள்.
*

வலி...!! [ கஜல் ]

*
காலம் முச்சூடும்
தோள் கொடுப்பாய் என
நினைத்திருந்தேன்.
நீயோ, வாயால்
தேள் கொடுக்காய்
கொட்டிவிட்டாய்?
நீ கொடுத்தது வலி
அதற்கு நானல்லவா பலி.

*

Friday, 14 November 2014

பூக்காரி...!! [ சென்ரியு ]

*
அம்மா சொன்னதும்
எம்பிக் குதித்து ஓடி
பூக்காரியைக் கூப்பிடும் குழந்தைமுள்...[ கஜல் ]


*
உன் காலில் தைத்த
முள்ளைப் பக்குவமாய்
எடுத்து விட்டேன்.
நன்றியில்லாமல்
இதயத்தில் நெருஞ்சி
முள்ளைத் தைத்துப்
போய்விட்டாயே?

*

Thursday, 13 November 2014

தேன்மலர்...!! [ சென்ரியு ]

*
NA.GA. THURAIVAN'S SENRYU.

*
எது தேன் வற்றிய மலர்?
கண்டுபிடித்தது
வண்ணத்துப்பூச்சி.
*
இரவின் ஜாமத்தில்
மலர்கின்றது
காமத்திப் பூ.
*
கொட்டும் மழை
மரத்தின் கீழ் அச்சத்தில்

ஒதுங்கிய இருவர்.
*

குழந்தைகள் தினம்...!! [ பாடல் ]

” இன்று குழந்தைகள் தினம் ”
நல்வாழ்த்துக்கள்.
  
இளமையில் கல்வி இனிது…!!
*
இளமையில் கற்றிடு கல்வி
இன்பம் அளித்திடும் கல்வி
வளமைச் சேர்த்திடும் கல்வி
வாழ்வைக் கொடுத்திடும் கல்வி.
*
அன்பை வளர்த்திடும் கல்வி
அறநெறிக் காட்டிடும் கல்வி
துன்பம் விரட்டிடும் கல்வி
துணிவைத் தந்திடும் கல்வி.
*
பண்பை வளர்த்திடும் கல்வி
பகுத்தறிவைக் கொடுத்திடும் கல்வி
எண்ணம் உயர்த்திடும் கல்வி
எழுச்சியை ஊட்டிடும் கல்வி..
*\
மனவளம் விதைத்திடும் கல்வி
உடல்நலம் காத்திடும் கல்வி
கனவை வளர்த்திடும் கல்வி
உறவைப் பெருக்கிடும் கல்வி
*
தன்னம்பிக்கை வளர்த்திடும் கல்வி
தாழ்வை நீக்கிடும் கல்வி
உண்மைப் புகட்டும் கல்வி – புதிய
உலகைக் காட்டிடும் கல்வி…!!
*
பிழை...!! [ கவிதை ]

*
MISSED CALL
அனுப்புக – என்று
SMS – கொடுக்க
நினைத்தவன்
தவறுதலாக
KISSED CALL –
அனுப்புக – என்று
எழுத்துப் பிழையாய்
அனுப்பி விட்டான்.
அன்று
கலகத்தில் முடிந்தது
சந்திப்பு….!!

*

மயம்...!! [ கவிதை ]

அஞ்ஞான மயம், விஞ்ஞான மயம்
ஆட்சி கட்சி மயம், தனியார் மயம்
தாராளமயம், உலகமயம்,
துன்பமயம், இன்பமயம்
எல்லாமே சக்திமயம்.
*

Wednesday, 12 November 2014

பட்டுப் பூச்சி தோழியே...!! [ கவிதை [


*
பட்டுப் பூச்சி தோழியே
பக்கம்அ வந்து சிறகடி
தொட்டுப் பார்க்க ஆசையே
தோளில் வந்து சிறகடி….
வண்ணப் பூவின் இதழ்களால்
உன்னை செய்த தாரடி
பண்ணின் ஏழு சுரங்கள் போல்
பறக்கும் கீதம் நீயடி!
ஓடி…ஓடி… மலர்களின்
மனதில் அன்பைத் துவினாய்
பூமி நிறைய பூக்களால்
நந்த வனங்கள் ஆக்கினாய்…!
உன்னைப் போல பறக்கவே
எனக்கும் ஆசை நெஞ்சிலே
சிறகிரண்டு தருவையோ?
பறக்க சொல்லித் தருவையோ?
*
- ஆதாரம் ;- “ திசை காட்டி ” – எஸ். வைதீஸ்வரன் – நூல் பக்கம் – 39.

ரசித்தவர் ;- ந.க.துறைவன்.

பாலைவனம்...!! [ சென்ரியு]

*
NA.GA.THURAIVAN'S SENRYU.
*
பாலைவனம்
காதல் இல்லாத
பெண் மனம்.
*

மன்மதன்...!! [ கவிதை [


*
மரணத்திற்குள் இருக்கிறது
மன்மதன் வாழ்க்கை.
*
நெற்றிக்கண் எரித்தது
நிகழ்ந்தது
காமன் தகனம்.
*

சுமை...!! [ சென்ரியு [

*
NA.GA. THURAIVAN'S SENRYU,

*
சுமையோடு வந்தவள்
சுகப் பிரசவம் ஆனாள்
கடன் சுமையில் தந்தை.
*
எதிரிகள் இல்லாதவன்
எவனோ? அவனே
பரம எதிரி.
*
நூறுமில்லி அடிச்சவன்
வீட்டுக்கு வாங்கிப் போனான்
சாதிமல்லிப் பூ.
*
கொடுக்கவும் செய்யும்
கெடுக்கவும் செய்யும்
அதுதான் வாழ்க் “ கை ”.

*

Monday, 10 November 2014

மரங்கள் ...!! [ கவிதை ]


*
ஊழிகாலமாய்
உயிர்களைக் காத்து
உயிர்ப்பிக்கும்
கற்பக விருட்சமான
மரங்களை
வெட்டிவெட்டி
இருட்டில்
திருடிக்
கடத்துகின்றார்கள்
மனிதாபமற்ற
அரக்க மனிதர்கள்.
*

இளநீர்....!! [ சென்ரியு ]

NA.GA. THURAIVAN’S SENRYU.
*
தென்னம் இளநீர் காய்கள்
கீழே தாய்மடியில்

பால் குடிக்கும் குழந்தை.
*

ஸ்பரிசம்....!! [ சென்ரியு ]

*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
கைப் பட்டவுடன்
அச்சத்தோடு சுருங்கியது
தொட்டாற்சிணுங்கி இலைகள்.

*

மின்னல்கள்...!! [ சென்ரியு ]

*
அடக்க முடியாத கோபம்
சொல்ல முடியாத கவலைகள்
மனத் துயர மின்னல்கள்.

*

Sunday, 9 November 2014

அனுபவிக்க...!! [ கவிதை ]

காதல் இல்லாதோர்க்கு
இவ்வுலகில்லை
திருமணமில்லாதோர்க்கு
அவ்வுலகில்லை.
வாழ்க்கையை அனுபவித்து
வாழாதோர்க்கு
எவ்வுலகமுமில்லை….!!
*

மாயை...!! [ கவிதை ]

*
எல்லாமே  மாயை
என்றால்
நம்மிருப்பு மட்டும்
நிஜமென்று எப்படி
நம்புவது?
*


Saturday, 8 November 2014

ஞானம்...!! [ ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
அவமானங்கள்
இலவசமாய் கொடுக்கும்

அனுபவ ஞானம்.
*

Thursday, 6 November 2014

மிஸ்டுகால்...!! [ சென்ரியு ]

*
NA.GA. THURAIVAN'S SENRYU,
*
தொலைத்தவர்கள் தேடுகிறார்கள்
தேடுகிறவர்கள் அடைகிறார்கள்.
*
அம்மையப்பன் அரசு
தமிழ்நாட்டிற்று மிகப் பழசு.
*
உண்டி கொடுப்பவர்க்கு
உதவிகள் செய்வோரில்லை.
*
உலகில் அதிக உறுப்பினர்கள் கொண்டது

மிஸ்டுகால் உபயோகிப்போர் சங்கம்.