” இன்று குழந்தைகள்
தினம் ”
நல்வாழ்த்துக்கள்.
இளமையில் கல்வி
இனிது…!!
*
இளமையில் கற்றிடு
கல்வி
இன்பம் அளித்திடும்
கல்வி
வளமைச் சேர்த்திடும்
கல்வி
வாழ்வைக் கொடுத்திடும்
கல்வி.
*
அன்பை வளர்த்திடும்
கல்வி
அறநெறிக் காட்டிடும்
கல்வி
துன்பம் விரட்டிடும்
கல்வி
துணிவைத் தந்திடும்
கல்வி.
*
பண்பை வளர்த்திடும்
கல்வி
பகுத்தறிவைக் கொடுத்திடும்
கல்வி
எண்ணம் உயர்த்திடும்
கல்வி
எழுச்சியை ஊட்டிடும்
கல்வி..
*\
மனவளம் விதைத்திடும்
கல்வி
உடல்நலம் காத்திடும்
கல்வி
கனவை வளர்த்திடும்
கல்வி
உறவைப் பெருக்கிடும்
கல்வி
*
தன்னம்பிக்கை வளர்த்திடும்
கல்வி
தாழ்வை நீக்கிடும்
கல்வி
உண்மைப் புகட்டும்
கல்வி – புதிய
உலகைக் காட்டிடும்
கல்வி…!!
*
No comments:
Post a Comment