*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
காதலியின் குறியீடாக
உள்ளது
கறுத்தப் பழரசம்
இனிக்கும் திராட்சைகள்.
*
மாலை மயக்கம்
எனக்குள்ளொரு தயக்கம்
போதையில்லாதப்
போதை.
*
காலி வீட்டுமனை
பச்சைப் பசேலென்று
வளர்ந்திருக்கிறது
புல்பூண்டுகள்.
*
வீடு கட்டுவதற்கா?
மண் உருட்டிப்
போகிறது
பீ வண்டுகள்.
*
வானில் பிரகாசிக்கின்றன
எங்கே என்று கண்டுபடிப்பது?
கார்த்திகை நட்சத்திரப்
பெண்கள்.
*
No comments:
Post a Comment