Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Wednesday 30 November 2016

நித்தியக்கல்யாணி...!! ( ஹைபுன் )



குழந்தைகள் தனக்கு தேவையான ஆடைகளைத் தானே தேர்வு செய்துக் கொள்கின்றனர். அம்மாவோ அப்பாவோ தேர்வு செய்யும் ஆடைகளை நிராகரிக்கவே செய்கின்றனர். அதற்காக அடம்பிடிக்கவும் செய்கின்றனர். குழந்தைகள் தனக்கான சுதந்திரத்தை உரிமையை விட்டுக் கொடுக்காமல் செயல்படுகின்றனர். இந்த பிடிவாத குணம் நல்லதா? கெட்டதா? என்பதை தெளிவாகப் புரிந்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது. குழந்தைகளின் இப்பிடிவாதப் போக்கை விட்டுப் பிடித்து கவனித்து வரவேண்டும் என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள். இப்போக்கு எதிர்காலத்தில் பின்விளைவுகளை எற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர்.

மரத்தின் நிழலில் வளர்ந்தது
கர்வமில்லாமல் பாதுகாப்பாய்
நித்திய கல்யாணி செடிகள்.

ந.க.துறைவன். 

Monday 28 November 2016

இருப்பு...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
உனக்குள் எதுவுமில்லை
ஆனாலும்,
எல்லாமே இருக்கிறது.

There is nothing in you
However,
Everything.
*

இனியொரு விதி செய்வோம்...!!



1.
உண்டியலில் இருக்கின்றது பணம். ATM – ல் இல்லை பணம்.
2.
பணம் இல்லாமல் இரு. டெபிட்கார்டு வாங்கு. செலவு செய்.
3.
லஞ்சம் கூட மொபைல் பேங்க் மூலம் அனுப்பும் வசதி விரைவில் வரும்.
4.
கிராமத்து மக்கள் எல்லோரும் மொபைல் வங்கியில் இணைப்பார்கள்./ இணைவார்கள்.
5.
கிராமத்து ஒரு மால் திறக்கப்படும். எல்லாருமே அங்கே பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம்.
6
இதெல்லாம் டிஜிட்டல் இந்தியாவின் புதிய திட்டங்கள். வரவேற்போம்..
வாழ்க இந்தியா   வளர்க இந்தியா.

*

தேடல்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
அதுவல்ல அதுவல்ல
அது எது அல்ல?
தேடுதல் முடிவல்ல!
That is not the case,
What is it?
Search end!

*

Sunday 27 November 2016

செம்பருத்திப்பூவே...!!


நாய்...!! ( கவிதை )




மகனுடன் ஆங்கிலத்தில் பேசாதவர்
நாயுடன் ஆங்கிலத்தில் பேசுகிறார்.
*
சொந்த மகனையே கடித்து விட்டது
சோறுபோட்டு வளர்த்த செல்ல நாய்.
*
அபசகுனமாய் நேரங்கெட்ட வேளையில்
தெருவில் அழுகின்றது நாய்.
*
போன வருஷம் நவம்பர் டிசம்பர்லே வெள்ளப்பெருக்கு
இந்ந வருஷம் நவம்பர் டிசம்பர்லே கள்ளப்பெருக்கு.
*
முதலைகளை விட்டு விட்டு
மீன்களை வேட்டையாடுகிறார்கள்.
*
கோடீஸ்வரர்கள் பாராட்டுகிறார்கள்
தொழிலாளிகள் சபிக்கிறார்கள்.


ந.க.துறைவன்.

Friday 25 November 2016

தோழருக்கு ஆழ்ந்த அஞ்சலி...



“ வரலாறு என்னை விடுதலை செய்யும் ” – என்று முழக்கமிட்டு வாழ்ந்த கீயூபாவின் அதிபர் பிடில் காஸ்ட்ரோவின் மரணம்.
உலகச் சமுதாயத்திற்கே பேரிழப்பாகும்.
அவருக்கு எனது சிரம் தாழ்ந்த செவ்வணக்கம். அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.


ந.க.து்றைவன்.

பூசணிப்பூக்கள்...!!

Haiku – Tamil / English.

ஏழையின் குடிசை அருகில் பூத்து
ஏழ்மையை நேசிக்கும்
மஞ்சள் பூசணி பூக்கள்.
*
Poor's cottage near Booth
Misery loves
Yellow pumpkin flowers.

*

பெண் காது.



சிறுவயதில் .இருந்தே சம்பவங்கள், சுவாரஸ்யங்கள், துக்கம், மகிழ்ச்சி, அழுகை, உரையாடல் என வாயின் எண்ணற்ற சொல் வெளிப்பாடுகளை அம்மா, அக்கா, மனைவி, காதலி, தோழி, மகள்…என ஏதாவது ஒரு பெண்ணின் காதுகளுக்குக் கடத்துவதில்தானே விருப்பமாக இருக்கிறோம். நிச்சயம் வெளியேறும் எனத் தெரிந்தும் பெண் காதுகளிடம் தானே ரகசியயங்களையும் பரிமாறிக் கொள்கிறோம்.
அதனால்தானோ என்னவோ… பெண்ணின் காதுக்கு மட்டுமே அவ்வளவு அணிகலன்களைப் பூட்டி அழகு பார்க்கிறார்கள். தோடு, தொங்கட்டான், திருகு, முதுமையில் சமணர்ளைப் போல் தொங்கு காது வளர்த்து தண்டட்டி, பாப்படம், காது உச்சியில் கோபுரம் என அணியும் பூடி.. வேறு எந்த நுண்உறுப்புக்கும் இவ்வளவு அணிகலன்கள் இல்லையே. வறுமையின் உச்சத்தில் இருக்கும்போதுகூட பெண் காதிடம்தானே கழற்றித் தரச்சொல்லிக் கேட்கிறோம்.
ஆதாரம்: பெண் காது – நரன் – சிறுகதை – விகடன் தடம் – இதழ் - பக்கம் ; 87.

தகவல் ; ந.க.துறைவன்.

Thursday 24 November 2016

கிலி...!! ( லிமரைக்கூ )



வெளியிலே புலி வீட்டிலே எலி
யாராச்சும் கேள்விக் கேட்டா?
மனசுக்குள்ளே ஓரே கிலி.

*

ஒன்றுமில்லை...!! (புதுக்கவிதை )



குளிர்க் காற்றின் மென்மையில்
காலை நடைபயிற்சியில் இருக்கும்போது
எதிரே வந்த நெருங்கிய நண்பர்
என்னிடம் பேச்சுக் கொடுத்து
நலம் விசாரித்தார் கவனமாய்
பரிமாற்றலுக்குப் பிறகு
மீண்டும் வேறேன்ன செய்தி என்றேன்.
ஓன்றுமில்லை என்றார்
ஒன்றுமில்லை என்று சொன்னவர்
அரைமணி நேரம் தன் சோகச்
சுமைகளைக் கொட்டித் தீர்த்தார்.
ஒன்றுமில்லை என்பதில் தான்
எத்தனை உருவகங்கள் அவர்
உள்மனதில்
புதைந்திருக்கிறதெனப் புரிந்தது.
வெங்காயத்தின்
உள்ளே ஒன்றுமில்லை தான்
அதன் மேலே அடர்த்தியாக
அடுக்கியிருக்கின்றது ஒவ்வொன்றாகக்
காய்ந்த மனவெம்மைச் சருகுகள்.


*

Tuesday 22 November 2016

பணம் பத்தும் செய்யும்...!!



1.
எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கச் செய்யும்.
2.
தேவைக்கு மேல் செலவழிக்கச் செய்யும்.
3.
உபரி பணத்தைச் சேமிக்கச் செய்யும்
4.
கள்ளத்தனமாய் பதுங்கியிருக்கும்
5.
திடீரென செல்லாதவையாகும்.
6.
புதிய நோட்டுக்கள் பிறப்பெடுக்கும்.
7.
வங்கியில் வரிசையில் நிற்கச் செய்யும்.
8.
சில்லறை மாற்ற அலையச் செய்யும்.
9.
மக்களை வதைக்கச் செய்யும். உயிரை பலி கொள்ளும்.
10.
நாட்டைச் சீர்கேட்டு பாதையில் அழைத்துச் செல்லும்.
*

இவர்கள் தான் அடுத்த தலைமுறை வேளாண்மை விஞ்ஞானிகள்.


Sunday 20 November 2016

மண்வாசம்...!! ( ஹைக்கூ )


இதழ்கள் சொல்லும் இனிய செய்திகள்.



1.
2016 அக்டோபர் 5-ந்தேதி கனடா நாடானமன்றத்தில் கரி ஆனந்தசங்கரி கொண்டு வந்த பிரேரணை, அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது. பத்து மாகாணஙகளும், மூன்று பிரதேசங்களும் கொண்ட கனடா நாடு, இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக அங்கீகரித்திருக்கிறது.
2.
கயானா பிரதமர் மோசஸ் நாகமுத்து என்பவர் தமிழர்.
3.
தென்னாப்பிரிக்கா அரசு, தமிழ்மொழியைப் பாடதிட்டத்தில் சேர்த்திருக்கிறது.
4.
முதுமையின் சிறப்பு என்ன?
மரணம் பற்றிய பயம் இல்லை
வலிக்குமோ என்கிற பயம்தான்.
      மா.அரங்கநாதன்.
ஆதாரம் :  விகடன் தடம் – நவம்பவர் – 2016. இதழ்.
தகவல் ; ந.க.துறைவன்.

*

சிந்தனைக்கு


Friday 18 November 2016


மலைகள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
பிரபஞ்ச செயல்களைக் கவனிக்கிறது
அசையாமல் உயர்ந்து நின்று
அமைதியான மலை சிகரங்கள்.

Listening to the Universe works
Stands Still Rising
Quiet mountain peaks.

*

உடந்தை...!! ( கவிதை )




தாயைத் தத்தளிக்க விட்டான்
தத்தெடுத்த ( சொந்த ) மகன்.
*
கடத்தலுக்கு உடந்தையாக இருக்கிறது
மணல் லாரிகள்.
*
குத்திய முள்ளுக்கு பொறாமையில்லை
குத்துப்பட்டவன் நெஞ்சலொம் வஞ்சம்.
*
ஒட்டாத உறவுகள் விரட்டுகின்றது
ஒட்டிய உறவுகள் பிரிகின்றது.
*
மனைவி புரிந்துக் கொண்டால் ரகசியம்
புரிந்துக் கொள்ளவில்லை கணவன்.

ந.க.துறைவன். 

Thursday 17 November 2016

இந்தியா ஔிர்கிறது...!!



1.
மல்லையா இந்தியரா? வெளிநாட்டு பிரஜையா? இருநாட்டில் வசிக்கும் அர்த்தநாரி.
2.
மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்து விட்டு, மக்களை பணத்திற்காக
நில்லும்படி செய்து விட்டார்கள்.
3.
மல்லையா இந்த நாட்டின் கடைகோடி ஏழைகளில் ஒருவர். அவர் கடனை திரும்ப கட்டமுடியாதவர் என்பதால், முழுத்தொகையும் தள்ளுபடி செய்து விட்டார்கள்.
4.
மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்யும் வங்கிகள். விவசாயி கடனைக் கட்டவில்லை என்று ஜப்தி செய்கிறார்கள். அவனோ தற்கொலை செய்துக் கொள்கிறான்.
5.
மல்லையாவைக் காப்பாற்றி விட்டு, இந்திய மக்களை நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டது மை ( ய ) அரசு.
6.
மல்லையாக்கள் யாரும் வங்கியின் வரிசையில் இல்லை.
7.
மல்லையாக்களிடம் ATM கார்டுகள் இல்லை. ஓவர்டிராப்ட்டுக்கள் தானிருக்கின்றன.
8.
மல்லையாக்களின் மால்களில்தான் மக்களின் பணம் குவிந்து கிடக்கின்றது.
9.
மல்லையா சிரிக்கிறார். இந்தியா ஒளிர்கிறது.

*

Wednesday 16 November 2016

பஞ்ச பூதங்கள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.

பஞ்ச பூதங்களுக்கு நடக்கும்
பூசை  தரிசிக்கிறார்கள்
பஞ்ச பூத மனிதர்கள்.
*
Will happen to the five elements
Repeat behold
Five dead men.

*

இவர்களிடமா கருப்பு பணம் இருக்கும்?



1.
கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வாருங்கள். பாராட்டுகிறோம். ஆனால், யாரிடமிருந்து தொடங்குவது என்பது தான் கேள்வி.
2.
குறைந்தபட்சம் இந்தியாவில் எவ்வளவு பேரிடம் கருப்பு பணம் இருக்கிறதென்பது அரசுக்குத் தெரியும். ஆனால், உழைப்பாளிகள், தொழிலாளிகள், எழைஎளியவர்கள் இவர்களிடமா கருப்பு பணம் இருக்கும்?
3.
பணம் எடுக்க ATM – வரிசையில் நின்று ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்தாரே, அவரிடமா கருப்பு பணம் இருக்கும்?
4.
உங்களுக்கு வாக்களித்தவர்கள் யார்? என்று எண்ணிப்பாருங்கள். வாக்களித்தவர்கள் வயிற்றைக் கலங்க வைத்து விட்டீர்களே? அவர்களிடமா கருப்பு பணம் இருக்கும்?
5.
உலகப் பொருளாதார வல்லுநர்கள் அறிவார்கள். கருப்பு பணம் எங்கே? எவரிடம், எவ்வளவு இருக்கிறதென்று? இந்த பாலபாடம் உங்களுக்கும் தெரியும். ஆனாலும்,  இந்திய ஆட்சியாளர்களே இந்திய மக்களை அவமதித்து விட்டீர்கள் என்பதுதான் உச்சம். உச்சம். வெட்கம். வெட்கம்.

Tuesday 15 November 2016

புதிய கள்ளு புளிக்கிறது...!!



1.
ரூ.2000/- நோட்டு
பணக்காரர்கள் வைத்துக் கொள்ளமாட்டார்கள். ஏழைகள் வைத்துக் கொள்ள மாட்டார்கள். நடுத்தர வர்க்கம் வைத்துக் கொண்டு சில்லறையாக மாற்றுவதற்கு அல்லல்படுவார்கள்.
2.
ரூ.2000/- நோட்டு
ஒவ்வொரு இந்தியப் பிரஜையையும் கண்காணிக்கின்ற நோட்டு. இந்த நோட்டு தேவையா?
3.
ரூ.2000/- நோட்டு
ஒவ்வொரு இந்தியப் பிரஜையும் தான் வாழ்கின்ற பகுதியில் எத்தனை பேரிடம் எவ்வளவு ரூபாய் நோட்டு  இருக்கிறது என்று சாட்லைட் வழியாக சொல்லிவிடும்  / தெரிந்துவிடும்.
4.
ரூ.2000/- நோட்டு
சில்லறையாக மாற்றுவதற்கு ஏற்றத் தக்கவையில் இல்லையென்பதால், இது பிரச்சினைக்குரிய நோட்டாகவே தொடரும்.
5.
ரூ.2000/- நோட்டு
சாதனை என்று சொல்லிக் கொள்ளக் கொண்டு வரப்பட்ட நோட்டே தவிர, இதன் சாதகபாதகங்கள் புரிந்துக் கொள்ள மறந்துவிட்டார்கள். இந்தியக் குடிமக்கள் தான், இதன் தொடர் வேதனைகளை அனுபவிக்கப் போகிறவர்கள்


Monday 14 November 2016

கருப்பு...வெள்ளை...தொல்லை...!!



1.
பொறியில் சிக்காத பெருச்சாளிகள் சிரிக்கின்றன.
2.
பொறியில் சிக்கிய சுண்டெலிகள் தவிக்கின்றன.
3.
எலிகளை விரட்ட கருப்புப் பூனைகள் பாதுகாப்பு.
4.
எந்த மக்களுக்காக பிரதமர் அழுகிறார்?
5.
குழம்பிய குளத்தில் தத்தளிக்கின்றன தாமரைமலர்கள்.
6.
A T M சொல்கிறது.
At a Time no Money.
7.
சுவாமி தரிசனத்திற்கு நின்று பழகியவர்கள். இப்பொழுது ATM வாசலில் நிற்கிறார்கள்.

கருப்பு... வெள்ளை...!!




இன்னும் வெளிவராமல் பதுங்கி இருக்கிறது கருப்புபூனை.
*
ஒவ்வொரு சாமான்யனின் வியர்வையின் சேமிப்பை பிடுங்கி்க் கொண்டது தாமரை.
*
போன வருஷம் நவம்பர் டிசம்பர்லே வெள்ளப்பெருக்கு
இந்ந வருஷம் நவம்பர் டிசம்பர்லே கள்ளப்பெருக்கு.
*
ரூ.500/- 1000/-, 2000/- அச்சிட்டு வெளியிட வேண்டாம். மிக எளிதில் மாற்றத்தக்க வகையில் ரூ.50/- 100/- 200/- 300/- அச்சிட்டு வெளியிடுங்கள். மக்கள் சிரமமின்றி உபயோகிப்பார்கள்.
*
ரூ.1, 2, 5, 10 –க்கே சில்லறை கொடுக்காத பஸ் நடத்துநர்கள். ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிக்கிறார்கள். தெரியுமா? மோடிஜீ. சில்லறை தட்டுப்பாட்டிற்கு வழி செய்யுங்க ஜீ.
*
இருக்கிறவங்ககிட்டே  புடுங்கலே இல்லாதவன்கி்டடே புடுங்கறாங்க.

*

பணம்.... பணம்....!!




முதலைகளை விட்டு விட்டு
மீன்களை வேட்டையாடுகிறார்கள்.
*
கோடீஸ்வரர்கள் பாராட்டுகிறார்கள்
தொழிலாளிகள் சபிக்கிறார்கள்.
*
ரூ.2000/- சாதாரண மக்கள் நோட்டு அல்ல
*
செலவழிப் பணமில்லாமல்
அலைகிறார்கள் மக்கள்.
*
அவர்கள் திறமையை அவர்களே
பாராட்டிக் கொள்கிறார்கள்.
*
ரூ.1/-, 10/-, 100/- க்கே சில்லறை கொடுக்க மாட்டேங்கறாங்க.
பஸ்கள்லே.. ரூ.2000/- க்கு  எப்படி கொடுக்கப் போறாங்க.
*

Sunday 6 November 2016

இருத்தல்...!! ( புதுக்கவிதை )




இருக்கிறேன் என்று சொன்னவர்
எங்கே இருக்கிறார் என்று சொல்லவில்லை.
அருகிலா, தொலைவிலா, வீட்டிற்குள்ளேயா?
எங்கே என்று அனுமானிக்க முடியவில்லை.
இருக்கிறேன் என்பது நிகழ்காலந்தான்
அதுவே
கடந்த காலமாகக் கூட இருக்கலாம்.
இப்பொழுது அவர் தன்னிருப்பை
இருண்மையில் உணர்த்தவே
இருக்கிறேன் என்றாரா?
இருப்பவர்களும்
கடந்துச்செல்பவர்களும் தான்
எப்பொழுதும் இருப்பார்கள்.
இருக்கிறேன் என்பது இருப்பின் நிலை
இருக்கிறவர்களின் முரண் மனநிலை.
இறக்கப் போகிறவர்களின் கனவு நிலை.

*

Saturday 5 November 2016

மன்மதக் குளிர்...!! ( கவிதை )




மழைக்கு குடையானது கையிலிருந்த நோட்புக்.
*
மழைக்கு ஒதுங்கியவள் அருகில் சூடான மனிதர்கள்.

மழையில் மரத்தில் அமர்ந்திருக்கும் கிளிக்கு மன்மதக் குளிர்.
*
மழைத்துளிகளோடு சேர்ந்து உதிர்ந்தது பவளமல்லிப்பூக்கள்.
*
மழை நின்றபின் மலர்களிடம் குளிரைப் பற்றி விசாரித்தது பட்டாம்பூச்சி.
*


Thursday 3 November 2016

சுயம்...!! ( கவிதைகள் )



சுயத்தை இழக்கவில்லை
சுகத்தை இழந்து விட்டாள்.
*
குறை இருப்பவன்தான்
மற்றவர்களைக் குறை கூறுவான்.
*
உதவ வில்லை என்றால்
உதறி விடுவார்கள்.
*
நினைத்ததும் நடக்கும்
நினைக்காததும் நடக்கும்
*
வளம் தருகின்றது விவசாயிக்கு
அளவோடு பெய்யும் மழை.