Labels

Haiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (20) கலை (1) கவிதை (332) கவிதை. (7) கவிதைகள். (7) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (2) குறுங்கவிதைகள் (12) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (55) ஹைபுன் (48)

Friday, 31 October 2014

சிலந்தி...!! [ கவிதை ]


*
எப்பொழுது
வெளியேறலாமென்று
எதிர்ப்பார்த்துக்
காத்திருக்கின்றது
அடக்கி
வைக்கப்படடடிருக்கும்
பெருந் துக்கம்.
*
உறவினருக்கு
உபசரிக்கக் கொண்டு
வந்து வைத்தப்
பிஸ்கடடும் மிக்ஸரும்
மறைக்கின்றன
பீங்கான் தட்டில்
வரைந்துள்ள
அழகான ஓவியங்கள்.
*

கவலையைப் பற்றி
கவிதை எழுத
நினைத்தேன்.
சிரித்துக் கொண்டே
வலையில் நகர்ந்தது
சிலந்தி.

*

Wednesday, 29 October 2014

சமாதானம்...!! [ சென்ரியு ]

*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
தீராத வாக்குவாதம்
மகனுக்கும் தந்தைக்கும்
சமாதானம் செய்வாள் அம்மா.
*
ஊரிலிருந்து அக்காள் வந்தாள்
வீட்டில் அனைவருக்கும்
வயிற்றைக் கலக்கும்.
*
என்னதான் பேசிப்பார்களோ?
தாயும் மகளும்
யாருமில்லாத சமயம்.
*

மழை...!! [ கவிதை ]


*
பகலெல்லாம் மரங்களுக்கு
ஒய்வில்லை.
வேகமானக் காற்று வீசி
மரங்களின் உடலை
உலுக்கி எடுத்தது
இலைகள் உதிர்ந்து
பூக்களும் உதிர்ந்து
தரையெங்கும் பரவியது
கருத்த மேகங்கள் வானில்
பஞ்சுப் பொதியைாய்
திரண்டு நகர்ந்துப் போய்க்
கொண்டிருந்தன.
சின்னச் சின்னச் சிணுங்கல்
தூறல் போடத் தொடங்கின
பரபரவென ஜனங்கள் நடந்து
ஒதுங்க இடந்தேடினர்.
மேய்ந்துக் கொண்டிருந்த
மாடுகள் அப்படியே அசையாமல்
நின்று உடலை அசைத்தன.
நாய்கள், பன்றிகள்
பாதையிலிருந்து எங்கோ ஒடின.
பலத்த மழைப் பிடித்துச்
சோவென பெய்யத் தொங்கின
வாகன ஓட்டிகள் விரைந்தனர்
மக்கள் நனைந்தும்
நனையாமலும் நடையில்
வேகம் காட்டினர்.
பலத்த இடியோசை மனதை
கொஞ்சம் அதிர வைத்தது
இந்த இடி எங்கோ
விழுந்திருக்கணுமென்று
பலரும் பேசிக் கொண்டனர்.
மழை இன்னும் நின்றபாடில்லை.
அவசரமாகப் போக நினைத்தவர்கள்
.ஆங்காங்கே நின்று தலைத்துவட்டி
காத்திருந்தனர் எப்போது நிற்கும்
யாருக்கும் தெரியவில்லை?
எப்பொழுது நிற்க வேண்டுமென்று
நேரம் கணித்துக் கொண்டா
பெய்கின்றது மழை?

*

Sunday, 26 October 2014

அற்புதம்...!! [ ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
இயற்கைப் படைப்பின் அற்புதம்
தரிசிக்கத் தோன்றுகிறது
நாகலிங்கப் பூக்கள்.
*
உற்சாகமாய் கொண்டாடுகின்றன
உறவுகளோடு பறவைகள்
பிறந்த நாள்.
*
காற்றில் மிதந்துப் பறக்கின்றன
பறவைகள் உதிர்த்த
இறகுகள்.
*
தேடுவது கிடைக்காமல்
தேடிக்கொண்டேயிருக்கின்றன
இரவில் மின்மினிகள்.
*


Friday, 24 October 2014

சாதுர்யமாய்...!! [ஹைபுன் ]

NA.GA, THURAIVAN'S HAIBUN.
*
அவன் தன்னம்பிக்கையூட்டும் புத்தகங்களை நிறையப் படிப்பது வழக்கம். பலரும் அவனை புத்தகப்புழு என்று கேலி பேசினாலும், “ ஏதோ பைய விஷயம் கொஞ்சம் தெரிஞ்சி வைச்சிருக்கான்னு ” - அறிந்தவர்கள்  பாராட்டுவார்கள். பக்கத்துப் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் ஏதேனும் பிரச்சினை என்றால் அவனிடம் வந்து, ஆலோசனைக் கேட்பார்கள். அவனும் உடனடியாக அதற்கான தீர்வு சொல்லி அனுப்பி வைப்பான். இதனால், அவனுக்கு நிறைய பேர் “ பட்டப்பெயர் “ வேறு வைத்து அழைக்கத் தொடங்கினார்கள்.
இவ்வளவு அறிவா இருக்கே…
பொழப்புக்கு வழி தேடலையா?
பெரியவரின் பாராட்டுக் கேள்வி.

*

Thursday, 23 October 2014

சொல்...!! [ கவிதை ]


*
சொல்வதற்கு ஒன்றுமில்லையென்று
சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.
*
சொல்வது யாருக்கும் எளிது
சொல்லாமல் இருப்பதுதான் கடினம்.
*
படபடவென்று பேசுவோர்கள்
பயன்படுத்துவர் பயனற்ற பலசொல்.
*
சொல்பேச்சை யாரும் கேட்கவில்லை என்று
சொல்லிக் குறைபடுவர் பெற்றோர்.
*
உபயோகமான சொல் அன்பு வளர்க்கும்
உதவாதச் சொல் உபத்திரம் தரும்.
*  


பலூன“காரன்...!! [ கவிதை ]


*
காற்றை
கைது செய்தான்
பலூன்காரன்
பறக்க விட்டு
விளையாடியபின்
உடைத்து
விடுதலை செய்தான்

பையன்….!! 

வாழ்த்துக்கள்...!!

தீபாவளி
விருந்தின் சுவையோடும்
உறவுகளின் இணைப்போடும்
மகிழ்ந்திருக்கும்
அனைத்து நண்பர்களுக்கும்
இனிமையான 
நல்வாழ்த்துக்கள்.
இரவு வணக்கம்.

*

Wednesday, 22 October 2014

வசந்தம்...!! [ சென்ரியு ]

*
NA.GA.THURAIVAN'S SENRYU.

*
கால நியதியோடு
மலர்ச்சி பெறுகிறது
வாழ்வில் வசந்தம்.
*
ஊன் உடம்பு உறுப்புகள்
உற்சாகமாய் இயங்குகின்றன
எங்கே இருக்கிறது மனம்.
*
இளம் இரத்தம் பாய்ச்சல்
சுரப்பிகளின் விளையாட்டு

விழிக்கின்றது காதல்.
*

நோம்பு விரதம...!! [ புதுக்கவிதை ]


*
நிர்மலமான வானம் வெண்மேகங்களால்
தெளிந்திருந்தது கதிரொளியின் வெப்பத்
தகிப்பின் தீவிரம் இன்னும் தணியவில்லை.
காற்றின்மையால் மரங்களில் அசைவில்லை.
எங்கும் மேயப் போகாமல் மரநிழலில்
ஒய்வெடுக்கின்றன மாடுகள்.
பாதையில் வாகனங்களின் இரைச்சல். 
சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் சத்தம்.
குடும்ப வேலைகளைக் கருத்தாகக்
கவனித்துக் கொண்டு தீபாவளி
விடுமுறையினைக் கழிக்கும் ஆண்கள்
பத்திரிகைச் செய்தியில் முகம்
மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  
பெண்கள் அடுக்களையில் விதவிதமாய்
சமைத்துக் கொண்டு, அவ்வப்போது
தேனீர் அருந்தி பசியடக்கிக் கொண்டு
நோம்பு விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.
தலை தீபாவளி கொண்டாடும்
மாப்பிள்ளை – பெண்
காலையிலிருந்தே சிரிப்பு வெடிப்
போட்டுக்கொண்டிருக்கிறார்கள்,
குழந்தைகள் நேற்று வாங்கி
வைத்திருந்தப் பலகாரங்களை
அடம்பிடித்துக் கேட்டு வாங்கிப் போய்
நண்பர்களோடு மகி்ழ்ச்சியாய் பகிர்ந்துச்
சாப்பிடுகிறார்கள். பரபரப்பில்லாமல்
தட்டுகளில் பலகாரம் பூ பழங்கள் கயிறு
எல்லாம் அடுக்கி வைத்துப் பின்னர்
அழகான புதியப் பட்டுப் புடவையில்
கௌரிப் பூசைக்காக கோயிலுக்குப்
புறப்படுகிறார்கள் அங்கு வரிசையில்
காத்திருக்கும் பெண்களின் கூச்சல்
பட்டாசு வெடிச் சத்தத்தை மிஞ்சியது.
கோயிலுக்குப் போனவர்கள் வரும் வரை
வீட்டில் பூசைக்காகக் காத்திருக்கிறாள்
அலங்கார பூஷிதையாய் அம்மன்.
அப்பாக்களை நச்சரிக்கிறார்கள்
பசி தாங்க முடியாத சிறுவர்கள்
இன்னும் சிறிது நேரத்தில்
முடியப் போகிறது நோம்பு விரதம்….!!
*எழுச்சி...!!

*
அலாரம் ஒலி
பறவைகளின் சத்தம்
குழந்தையின் அழுகை
கோயில் பக்திப் பாடல்
மனைவியின் வேலைகள்
என்னை
விடியற்காலையில்
எழுப்பி விடுகின்றன
தினம் தவறாமல்…!!
*
தீபாவளி நோம்பு விரதம்
நல்வாழ்த்துக்கள்
இனிய காலை வணக்கம்
நண்பர்களே…
ந..க. துறைவன்.

*

வெடிச் சிரிப்பு...!!


*
புத்தாடையணிந்து
பாட்டாசு வெடித்து
மகிழும் சிறுவர்களின்
முகமெல்லாம் மத்தாப்பு
சிரிப்பு.
“ டேய்… அவன் பார்டா
டபுள் வெடி வெடிக்கிறான் ”
என்று கேளிக்கைப் பேச்சிலும்
வாய்வரிசைக் காட்டினார்கள்
பெரிய வெடிச் சத்தத்தில்
அவன் சொன்னது யார்
காதிலும் விழவில்லை.

*

Tuesday, 21 October 2014

சுகம்...!! [ சென்ரியு ]


*
வாழ்நாளெல்லாம் எந்நேரமும்
தேடியலைகின்றார்கள்
வாழ்க்கைச் சுகம்.
*
யாருமில்லாத தனிமை
அவரோடு துணையிருந்தது
செல்ல நாய்க்குட்டி.
*
மனிதர்களின் மகிழ்ச்சியாய்
வானில் உயர்ந்துச் செல்கின்றது
பட்டாசுப் புகை.


தீபாவளி...!! [ புதுக்கவிதை ]


*
விடியல்பொழுதின் நேரம்
விழிக்கும் பறவைகளெல்லாம்
குரல் கொடுக்கவில்லை.
மரக்கிளைகள் எங்கும்
அசைவற்று கிடக்கின்றன.
மேகமூட்டமாயிருக்கின்றன
மழைத் தொடருமென்று அடிக்கடி
வானிலை மையம் அறிவிக்கின்றது.
இன்று தீபாவளி என்பதால்
விழித்துக் கொண்ட மக்கள்
ஆண்கள், பெண்கள், குழந்தைகள்
என அனைவரும் உற்சாகமாய்
குளித்து மங்கலகரமாய்
அழகான புத்தாடையில்
காட்சியளிக்கின்றார்கள்.
பட்டாசு வெடிக்கும் சிறுவர்களுக்கு
உதவியாகப் பெற்றோர்கள்
அருகில் நின்று பாதுகாப்பு
எச்சரிக்கையோடு குரல் கொடுத்து
மகிழச்சியோடு சிரிக்கிறார்கள்.
பாதையில் போவோர் வருவோர்
வெடிகள் வெடித்தப் பிறகே
பாதையிலிருந்து நகர்ந்துப்
போகின்றார்கள்.  
செல்போனில் வாழ்த்துச்
செய்திகள் சொல்பவர்களுக்கு
வெடிச் சத்தம் பெரும்
இடைஞ்சலாகவே இருக்கின்றது.
பறவைகள், விலங்குகள் எல்லாம்
ஓயாத வெடிச் சத்தங் கேட்டுப்
பாதுகாப்பான இடந்தேடிப் போய்
பதுங்கியிருக்கின்றன.
பட்டாசுப் புகை வான்நோக்கி
உயர்ந்துச் செல்கின்றன
மனிதர்களின் மகிழ்ச்சியின்
பெருங் கொண்டாட்டமாய்….!!
 பவழமல்லிகள்...!!

*
மழையை வரவேற்று
புன்னகையோடு உதிர்க்கின்றன
பவழமல்லிப் பூக்கள்.

உயிர்த் துளிகள்
விழித்தெழுவதற்குத் 
துணை செய்கின்றன இரவு.
*

Sunday, 19 October 2014

மழை...!! [ கவிதை ]


*
சென்னையில் மழை
மழையில் சென்னை
செய்தியில் மழை.
*
தீபாவளி மழையில்
நனைந்து அலைகிறது
மக்கள் கூட்டம்.
*
மழை…மழை மழை
எங்கும் மழை
தமிழகமெங்கும்
பருவமழை.
*
மழையில்
நான்
எனக்குள்
மழைத்துளிகள்.
*


Saturday, 18 October 2014

தோழி...!! [ சென்ரியு ]

*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
சம உரிமைப் பெற்றவள்
பூ மெத்தைப் படுக்கையில்
உறங்கும் பூனைத் தோழி.
*
சாப்பிடும்போது வாசலில்
கீச்கீச் குரல் கொடுக்கிறது

சிட்டுக்குருவிகள்.
*

Friday, 17 October 2014

துளிகள்...!!

மாலையில் வந்து பெய்தது
சிறுசிறுவாக
நாத விந்து மழைத்துளிகள்.

Tuesday, 14 October 2014

*
NA.GA THURAIVAN'S SENRYU.
*
பரபரப்பாக நகர வீதிகள்
கடைகளில் மக்கள் வெள்ளம்
முகத்தில் புத்தாடைச் சிரிப்பு.
*

Monday, 13 October 2014

துணை...!! [ கவிதை ]


*
பாதையில்
நடந்துப் போகையில்
அழகானப் பெண்
எதிரில் வந்தாள்.
ரசிக்காமலிருக்க
முடியவில்லை
யார் அந்தப் பெண்?
இளம் பசுமாடு….!!
*
தூக்கம்
வரவில்லையென
தவிப்பவர்க்கு
தூக்க மாத்திரையே
துணை…!!
*


Sunday, 12 October 2014

அதீதம்...!! [ கவிதை ]


*
ஆபத்தானதாகி விடுகிறது
அதீதமான சிந்தனை.
கனவுகள் பொய்யல்ல, எப்போதேனும்  
நிஜமாகின்றன கனவுகள்.
*
குழந்தைகள் கற்றுக் கொடுக்கிறார்கள்
பெரியவர்களுக்குப் பாடங்கள்.

*

Saturday, 11 October 2014

காதல்...!!

*
காதலைப் பயில்
காதலை ரசி
காதலை களவு காண்.
காதலைப் புசி….!!


Wednesday, 8 October 2014

கசிந்து...!!

காதலாகி கசிந்து
கண்ணீர் மல்கி
இன்றைய தமிழகம்.

ந.க.துறைவன்.

நாயின் ரத்தம் பூனைக்கு…!!


*

ப்ளோரிடாவில் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த பூனைக்கு அவசரமாக ரத்தம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. ரத்தம் கிடைக்கவில்லை. நாயின் ரத்தத்தை எடுத்து பூனைக்கு ஏற்றினார்கள். மிகமிக அரிதாகத்தான் இப்படி வேறு இன உயிரின ரத்தத்தை இன்னோர் உயிரினத்துக்கு ஏற்றுவார்கள். நாயின் ரத்தம் ஏற்றப்பட்ட பூனை உயிர் பிழைத்துக்கொண்டது. இப்படி உயிர் பிழைப்பதும் அரிதான நிகழ்வுதான் என்கிறார் கால்நடை மருத்துவர் சீன்பெர்ரி.
*
ஆதாரம் – தி இந்து – நாளிதழ் – 07-10-2014.
தகவல் :- ந.க.துறைவன்.


மண்குதிரை...!! [ ஹைக்கூ ]


*
ஆற்றில் இறங்கி
வேகமாய் நடக்கின்றது
மண்குதிரை.
*
ஆணவம் மிகும் மனம்
சிதைவடைகின்றன
முதிர்ந்த அனுபவங்கள்.
*
உறங்குகின்றன அயர்ந்து
பூ மெத்தையில்

வண்டுகள்.

Tuesday, 7 October 2014

மாற்றம்...!! [ கவிதை ]


*
மாற்றத்தை தானே செய்துக் கொள்கின்றன
மாற்றத்தை விரும்பும் இயற்கை.
*
மாற்றத்தை செய்து காட்டுவார்கள்
மாற்றத்தை விரும்பும் மக்கள்.
*
வலிந்து திணிப்பதல்ல மாற்றம்
மனதிலிருந்து எழுவதே மாற்றம்.
*
மாற்றத்திலிருந்து உதிப்பதே
மாற்றுச் சிந்தனை.
*
மாற்றங்களையும் ஏமாற்றங்களையும்
பகுத்தறிந்துக் கொள்ளும் அறிவு.

*

Monday, 6 October 2014

குணம்...!! [ கவிதை ]


*
வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய்யும் நீதி.
*
வக்கிரமான குணமாகும்
வற்புறுத்தி காரியம் சாதிப்பது.
*
அலைகழிந்து அல்லல்படுகிறது
அன்பு பாராட்டும் மனம்.
*
வம்பு செய்தால் வம்பு வரும்
அன்பு செய்தால் பண்பு மலரும்.
*
மனம் தளர்வாக இருப்பது ஆரோக்கியம்
இறுக்கமாக இருப்பது நோய்.


*

Sunday, 5 October 2014

விட்டில்கள்...! ஹைக்கூ ]


*
மகிழ்ச்சியாக உறவைத் தேடி
விளக்கின் அருகில்
அலைகின்றன விட்டில்கள்.
*

Saturday, 4 October 2014


க்ளீன் இந்தியான்னு
சொல்லுடான்னா, 
கிளிந்தியான்னு
சொல்றான் பையன்.
*

குப்பை 
குவிப்புக்கும் 
ஒரு
வழி
பிறந்திருக்கிறது.
*

Thursday, 2 October 2014

உயிரின் சுடர்...!! [ கவிதை ]


*
நான் இறந்த பிறகு எனது கல்லறையைத் திறந்தால்
அங்கே ஒரு புகை மண்டலம் கிளம்புவதைக் காண்பீர்கள்.
அந்தப் புகை
இறந்து போன என் இதயத்திலிருந்து எரியும்
நெருப்பினால் உண்டானது.
ஆம்
அது என்றுமே அழியாத என்
உயிரின் சுடர்
*
நான் இறந்த ஒரு நூறு
ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும்
அவளுடைய கூந்தலின் மணம்
என்னுடைய சமாதியைக் கடந்து சென்றால்
உளுந்துப் போன எலும்புகளிலிருந்து
உயிர்த்தெழுந்து
நடனமிடுவேன்.
*
காதலையும் தர்க்கத்தையும்
ஒப்பிட்டுப் பார்த்தேன்
சமுத்திரத்தில் வீழும்
ஒரு மழைத்துளிதான்
தர்க்கம்.
*
மேற்கண்ட பாடல்கள் க்வாஜா ஷம்சுத்தீன் ஹஃபீஸ் [ 1326 – 1390 ] என்ற பெர்ஷிய கஸல் கவிஞர் பாடியவை. கஸல் இசையின் பிதாமகர்களில் ஒருவரான ஹஃபீஸின் பாடல்களை தா-ஸாஸ் குழுவினர் பாடியிருக்கின்றனர்.
ஆதாரம் :- “ கடவுளும் நானும் ” – சாரு நிவேதிதா – வின் நூல். பக்கம் – 56.

*

Wednesday, 1 October 2014

வார்த்தைகள்...!! [ கவிதை ]

*
பன்னீர்ப் பூக்களாய்
உதிர்ந்த
உன் வார்த்தைகள்
சத்தியமானதென
நம்பினேன்.
அது,
சக்தியற்ற வெறும்
சக்கையென பிறகு தான்
தெரிந்தது.
வார்த்தைகளால்
இணைவதல்ல காதல்
மெய் இதயங்களால்
இணைவது தான்
உயிர்க் காதல்.

*

வெளிச்சம்...!! [ ஹைக்கூ ]


*
இருளைக் கண்டு அச்சப்பட்டது
வெளிச்சம் கண்டதும்
துணிச்சல் பெற்றது மனம்.
*
அந்தரங்கமானவள் அம்மா
அறிந்தவள் மகள்
உதிரமே உதிரம் அறியும்.
*
பகிர்ந்துக் கொள்வதற்கு
பக்குவமான மனம் வேண்டும்
உணர்த்துகின்றன பறவைகள்.
*