Labels

Haiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (20) கலை (1) கவிதை (332) கவிதை. (7) கவிதைகள். (7) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (2) குறுங்கவிதைகள் (12) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (55) ஹைபுன் (48)

Friday, 28 February 2014

அதீதநினைப்பு.

ஃ யாருமென் பரந்த மனசைப்
புரிந்திடவில்லை யெனப்
பலரிடம் சொல்லிப் புலம்பியவன்
பூரணமாய் மற்றவர் மனசை
உணர்ந்து நடப்பதாய்
என்னவொரு
அதீதநினைப்பு.

ஃ எதையோ பறிகொடுத்தவனாய்
எதற்காக இங்கே நிற்கிறாய் என
எனக்காகப் பரிவு காட்டியவர்க்குத்
தெரியவில்லை, பறிகொடுப்பதற்கு
என்னிடம் இன்னுமென்ன
மிச்சமிருக்கிறதென்று?

ஃ கூடிக்கூடி நிறைய
எதைப் பற்றியோ பேசினார்கள்
ஏதோ ஒன்று அப்பேச்சினால்
முடிவானதாய்ப் பாவித்து
அனைவரும் கலைந்தனர்
அதிர்ச்சியோ மகிழ்ச்சியோ
துயரமோ வெளிக்காட்டாமல்.

Thursday, 27 February 2014

ந.க.துறைவன் ஹைபுன் கவிதை


இந்திய தேசத்தில் நீதி நெறிக் குறியீடாகவும்
காந்தீயத் தத்துவத்தின் சிறப்பு நிலை அறக்
கோட்பாடாகவும் விளங்கியது அந்த உருவப்
பொம்மைகள். அப்பொம்மைகளைக் குழந்தைகளாலும்
சிறுவர்களாலும் பெரியவர்களாலும் அனைத்து
தரப்பு மதவாதிகளாலும் விரும்பி ஏற்று
ரசிக்கபட்டது. அந்த உருவப் பொம்மைகள். இன்று
எங்கும் காண்பது அரிதாகி இருக்கிறது. அது என்ன
பொம்மைகள்?
.
      பார்க்காதே பேசாதே கேட்காதே
      என்று தத்துவம் போதித்தது
      மூன்று குரங்கு பொம்மைகள்.
.

Monday, 24 February 2014

ந.க.துறைவனின் கஜல் கவிதைகள்


உனக்காகக் காத்திருந்துக்
கண்ணு ரெண்டும் பூத்தேனே
காத்து மழை அடிச்சப் பொழுது
ஓதுங்கி நின்னுப் பார்த் தேனே
.
மழைத் தூறல் நின்றப் பின்னே
மேகம் போல நடந்தாயே-என்
மனசு கடந்துப் போனாயே
மனசு கடந்துப்  போனாயே
.
எஸ்எம்எஸ் அனுப்பி வைச்சேன்
பதில் அனுப்ப மறந்தாயோ?
மிஸ்டு கால் போட்டுப் பார்த்தேன்                  
திறந்து நீ பார்க்கலையோ்?

லாப்டாப்பத் திறந்துப் பாரு                                            
ஈமெயிலைப் படிச்சிப் பாரு.
காதல் வரிப் புடிச்சிருந்தால்
சம்மதிச்சிப் பதிலைப்  போடு

செல்லுக் குள்ளே எம் படத்தையே
பதிவு செஞ்சி வைச்சிக்கோ –என்
நினைப்பு வரும் நேரத்திலே-எனைப்
பார்த்துப் பார்த்துச் சிரிச்சிக்கோ

முத்தம் ஓன்னு கொடுத்துப் புட்டு-உதடு
முந்தானையில் துடைச்சிக்கோ
வெட்கத்திலே சிரிச்சி சிரிச்சி
நெஞ்சில் அணைச்சிப் படுத்துக்கோ.
                 

Sunday, 23 February 2014

ந.க.துறைவன் சென்ரியு கவிதை


1 .அழகான வண்ணங்களில்
  அழகுபடுத்திக் கொள்கிறது
  சுவையான இனிப்புக்கள்.

2 என்ன தவறு செய்தனர்?
  இத்தனை வெட்டுக்கள்
  இரத்தம் ஓழுக இரப்பர் மரம்.

3. முழு நிர்வாணமாய் நின்று
  அழுதுக் கொண்டிருக்கிறது 
  தெருவில் ஓரு குழந்தை.
.
4. முத்தமிடுவதற்கு
   தடையாக இருக்கிறதென்று
   வெட்டிவிட்டான் மீசை
.
5. முறைத்துப் பார்த்தாள்
   பஸ்ஸில் நின்றிருந்தவள் மேல்
   முழங்கையால் இடிபட்டது முலை.


  
.


                 

Saturday, 22 February 2014

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்


1.தாளம் போட்டு சிரித்தது
தாத்தாவின் தொந்தியைத் தட்டி
மடியில் உட்கார்ந்தக் குழந்தை.

2.மருத்துவர் கொடுத்த மருந்தால்
அழிந்தது
குழந்தை வயிற்றில் பூச்சிகள்.

3.தங்கச் சங்கலி பறித்தவன்
நம்பிக்கைத் தகர்ந்துப் போனது
கிடைத்ததோ கவரிங் நகை.

4.வலது கைமணிக் கட்டில்
கலர் கலராய்
கோயிலில் வாங்கியக் கயிறுகள்.

                 

மொழி பெயர்ப்புக் கவிதை


நிச்சயமாக
கண்களால் காதல் செய்
பூரணம் வேண்டி
பூரண மற்றதின் வெறிப்பில்
அறிவார்த்தம் காண்.

அலையின் சுழிகள்
காற்றின் அலைகள்
தழுவுகையில்
விரிந்தெழுகிறது காதல்.
கண்கள் திறந்திருக்க

காதல் பறந்து போகும்
கண்டிப்பாய்
காதல் பறந்து போகும்
கண்கள் திறந்திருக்க
.
கண்டிப்பாய்
காதல் பறந்து போகும்
கண்கள் அகலமாய் திறந்திருக்க

காதலின் பூரணத்துவம்
பூரணத்துவமற்ற
ஆசையையும்
நேசத்தையும்
காதலிப்பது
அதுவே மேன்மை.

-ஆதாரம்  “கருப்பாய் சில
          ஆப்பிரிக்க மேகங்கள்.“

          என்ற தொகுப்பிலிருந்து.

Friday, 21 February 2014

ந.க.துறைவன் புதுக்கவிதை


நிலா
எவருக்காகவும்.
அழகு படுத்திக்
கொள்வதில்லை.

மலரும் பூக்கள்
யாரையும் மயக்க
அழகு படுத்திக்
கொள்வதில்லை.

பெண்கள் மட்டும்
எப்பொழுதும்
அழகாக இருக்கவே
அழகு படுத்திக்
கொள்கிறார்கள்
.
தினம் தினம்
புதிய பொலிவுடன்
காட்சி தரும்
பனித் துளியின்
அழகைப் பார்த்துப்
பொறாமைப் படுகிறான்

காலைக் கதிரவன்.

ந.க.துறைவனின் புதுக்கவிதை


வாழ்ந்தவர்களை
வாழ்கிறவர்கள்
நினைக்கிறார்கள்.

வாழ்கின்றவர்களை                                                   
வாழ்கிறவர்களே
வெறுக்கிறார்கள்
                                                     
வாழ்கிறவர்களைப் பார்த்து
வாழப் போகிறவர்கள்
நொந்துக் கொள்கிறார்கள்.

பல சமயங்களில்
என்னடா வாழ்க்கை
இதுவென்று
சலித்துக் கொள்கிறார்கள்.

இந்த
அங்கலாய்ப்புகளைக் கேட்டு
நக்கலாய் சிரித்தது
வெளி வாராந்தவில்
 தொட்டியில் வளர்ந்து
பூத்து மலர்ந்திருக்கும்
ரோஜாப் பூக்கள்.


ந.க.துறைவனின் புதுக்கவிதை


வாழ்ந்தவர்களை
வாழ்கிறவர்கள்
நினைக்கிறார்கள்.

வாழ்கின்றவர்களை                                                   
வாழ்கிறவர்களே
வெறுக்கிறார்கள் 
                                                    
வாழ்கிறவர்களைப் பார்த்து
வாழப் போகிறவர்கள்
நொந்துக் கொள்கிறார்கள்.

பல சமயங்களில்
என்னடா வாழ்க்கை
இதுவென்று
சலித்துக் கொள்கிறார்கள்.

இந்த
அங்கலாய்ப்புகளைக் கேட்டு
நக்கலாய் சிரித்தது
வெளி வாராந்தவில்
 தொட்டியில் வளர்ந்து
பூத்து மலர்ந்திருக்கும்
ரோஜாப் பூக்கள்.


Thursday, 20 February 2014

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்


*கனவில் தரிசிக்கும்
வண்ணண மலரி்ன் அழகு
வெல்லும் மானுடக் காதல்*
*தேன் கொடுக்கும் மலர்களை
வர்ணிக்க விருப்பமா?
பேசாத வண்டுகள்.
*அமைதியானது நீலவானம்         
ஆர்ப்பாட்டமிக்கது கடல்
இரண்டுங் கெட்டது வாழ்க்கை.
*,இரவின் மௌனம்
புணர்ச்சியில் கதறல்
சோகத்தை மறைக்கும் சுகம்
*இருளின் இசையின்
தா.ம்பத்ய உறவை
ரசிக்கும் கட்டில்.
ந.க.துறைவனின்
“சருகு இலைப் படகுகள்“
என்ற தொகுப்பிலிருந்து.


              


திருஷ்டி


உப்பின் வெட்டிப்பு
மிளகாய் நெடி, குழந்தைக்கு
திருஷ்டிச் சுற்றினாள் அம்மா.
ப்
மேகங்கள் அற்ற வானமாய்
தெளிவு பெற வேண்டும்
தடுமாறாத அறிவின் இருப்பு.
ப்
கால மிதித்து அணைத்தேன்
யாரோ வீதியில் புகைத்து
எறிந்து விட்ட சிகரெட்.

பிரபஞ்சப் பேரழகை.

மருத்துவரை நாடுவதில்லை
இயற்கையோடு இயைந்த
பறவைகள்.

ஒரே புன்சிரிப்பு
மழைநீர் தேங்கிய வீதியில்
கையில் செருப்புடன் நடக்கும் சிறுவன்

பார்வையற்றவர்கள்
பிறரிடம் கேட்டு உணர்கிறார்கள்
பிரபஞ்சப் பேரழகை.

Tuesday, 18 February 2014

கவிஞர்.முகம்மது இக்பால் கவிதை


இலட்சியம்
.
அரசியல் என்பது
இன்று ஆபாசமாய் விட்டது.
அதில் அரசாங்கம் ஓரு மாயக் கலை
இந்தக் கலையின் கருத்தோடுதான்
ஆட்சி பீடம் அமர்வார்கள்.
மக்களை அடக்கியாள்வார்கள்
.
இதனால் மக்கள்
நீண்ட உறக்கத்தில்
உறைந்து விடுவார்கள்.
அதனால்
எந்தச் சமுதாயத்தையும்
அடக்கியாள முடியாது.
காலத்தின் வேகத்தில்
கருத்துக்கள் மாறும்.
உறக்கத்தில் உள்ளவர்கள்
உணர்ச்சி பெற்று விடுவார்கள்.

அப்போது அங்கே
புரட்சிப் பூக்கள் பூக்கும்.
மக்களாட்சி முறை என்று
ஏமாற்ற முடியாது.
ஏனென்றால்,
மக்களாட்சி முறை என்பது
புதியதல்ல.
எனினும்,மக்களாட்சி என்ற
திரைக்குப் பின் அடக்குமுறை
ஆட்சிதான் நடக்கிறது.
உரிமைகள் உத்திரவாதங்கள்
சலுகைகள், சீர்திருத்தங்கள்
எல்லாம் மக்களை
அயர்ச்சியில் ஆழ்த்தும்
துôக்க மாத்திரைகள்
.
உழைப்பவர்களுக்கு உகந்த 
ஊதியம் இல்லை.
நாளை, நற்காலம் மலரும் என்ற
மனப்பான்மையுடன் உழைப்பாளி “
உழன்றுக்கொண்டிருகிறான்.

அவனது நம்பிக்கை,அவனது முயற்சி
அவனது இலட்சியத்தை
அழித்து விட முடியாது.
இது, நீலநெடுவானுக்கும் அப்பால்
நிலைப் பெற்றிருக்கும் உண்மை
முஸ்லிமின் இலட்சியம்
.
-ஆதாரம்:- “அல்லாமா முகம்மது இக்பால்
          கவிதைகள்”-என்ற தொகுப்பிலிருந்து.
தமிழில்:- அப்துல் வஹ்ஹாப்.

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்


*நீரின் இசையில்
  சுகமாய் துôங்கும்
  கூழாங் கற்கள்
 
*மாதுளை முத்துக்கள்
  ஓவ்வொன்றிலும் பார்க்கிறேன்
  எனது இரத்தத் துளிகள்
.
*பாதை கடந்துச் செல்லும் வரை
  உடன் வருகிறது
  அறிமுகமில்லாத நாய்.

அப்பாலுக்கு அப்பால்


அப்பாலுக்கு அப்பால் அதற்குமப்பால்
அமைதியாய் ஏதோவொன்று இயங்குகிறது
பூரணப் பெருவெளியில் விண்ணிற்கும் அப்பால்
பஞ்சபூதங்களுக்கும் அப்பால்,பெரு
உருண்டை பூமியில் விதைப்பால்
புல்லாகி பூண்டாகி மரமாகி மானிடராய்
ஆண்பால் பெண்பால் பூப்பால்
வாலிபத்தின் துடிதுடிப்பால் வீர்ய
புலனின்பத்திற்கப்பால் காதல் 
உணர்ச்சிக்கப்பால் புணர்ச்சிக்கப்பால்
பனித்துளி விந்திற்கப்பால் சேய் பிறப்பிற்க்கப்பால்
தாய்ப்பாலுக்கப்பால் வளர்ப்புக்கப்பால்
அன்பிற்கப்பால் ஆசைகளுக்கப்பால்
உறவுகளின் நெருக்கடிகளுக்கப்பால்
துயரதுன்பங்களுக்கப்பால் சேர்த்த
சொத்துக்கப்பால் சுகபோகத்திற்கப்பால்
சகித்துத் துய்த்து வாழ்ந்த வயதின்
அனுபவத்திற்கப்பால் உண்மைக்கப்பால்
எனக்கும் அப்பால் என் மகனுக்கப்பால்
வாரிசுகளின் வாரிசுகளுக்கப்பால் விருட்சமாய்
மண்ணில் தொடரும் மானுடரின் இன்பப்பால்
அனைத்தும் இப்பாலுக்குள் அடங்கும் பால்
அதுவே சுவைக்கத் தெவிட்டாத பால்
அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால்
முப்பாலுக்கும் அப்பால் வேறுபால் தானுண்டோ?.

குல விளக்கு

குடும்பத்தின் குல விளக்கு
இருவர்க்குள் ஏற்பட்டப் பிணக்கால்
கோரினர் மணவிலக்கு.

பழுதுப் பார்க்காமல் ரொம்ப காலம்
உபயோகமின்றி மோசமாய்
உடைந்துக் காட்சியளிக்கிறது பாலம்.

கடற்கரையில் கொஞ்ச நேரம் தங்கு
அங்கே விற்பனையாகும் பாரு
அழகான வலம்புரிச் சங்கு.

யாரோ கட்டிய வைத்த மடம்
பாழடைந்திருக்கிறது; அதிலே
உடைந்து தொங்கு(கிற)து ஒரு படம்.

தென்னந்தோப்புக்குள்ளே எங்க நைனா
வேலை நடப்பதைப் பார்க்கையிலே
மரத்தில் அமர்ந்து கூவுது மைனா.


குடும்பத்தின் குல விளக்கு
இருவர்க்குள் ஏற்பட்டப் பிணக்கால்
கோரினர் மணவிலக்கு.
ப்
பழுதுப் பார்க்காமல் ரொம்ப காலம்
உபயோகமின்றி மோசமாய்
உடைந்துக் காட்சியளிக்கிறது பாலம்.
ப்
கடற்கரையில் கொஞ்ச நேரம் தங்கு
அங்கே விற்பனையாகும் பாரு
அழகான வலம்புரிச் சங்கு.
ப்
யாரோ கட்டிய வைத்த மடம்
பாழடைந்திருக்கிறது; அதிலே
உடைந்து தொங்கு(கிற)து ஒரு படம்.
ப்
தென்னந்தோப்புக்குள்ளே எங்க நைனா
வேலை நடப்பதைப் பார்க்கையிலே
மரத்தில் அமர்ந்து கூவுது மைனா.

குல விளக்கு

குடும்பத்தின் குல விளக்கு
இருவர்க்குள் ஏற்பட்டப் பிணக்கால்
கோரினர் மணவிலக்கு.

பழுதுப் பார்க்காமல் ரொம்ப காலம்
உபயோகமின்றி மோசமாய்
உடைந்துக் காட்சியளிக்கிறது பாலம்.

கடற்கரையில் கொஞ்ச நேரம் தங்கு
அங்கே விற்பனையாகும் பாரு
அழகான வலம்புரிச் சங்கு.

யாரோ கட்டிய வைத்த மடம்
பாழடைந்திருக்கிறது; அதிலே
உடைந்து தொங்கு(கிற)து ஒரு படம்.

தென்னந்தோப்புக்குள்ளே எங்க நைனா
வேலை நடப்பதைப் பார்க்கையிலே
மரத்தில் அமர்ந்து கூவுது மைனா.
பூரணமாய் நிரம்பி விடு

ஃ எறும்பு கடித்ததென்றோ
ஏகப் பசியென்றோ
மூத்திரம் பெய்த
ஈரமென்றோ
எதையோ உணர்த்திட
வீரிட்டழுது தரையில்
புரண்டுக் கொண்டிருந்தது
வாய்விட்டு எதையும்
சொல்லத் தெரியாதப்
பிஞ்சுக் குழந்தை

ஃ என்னுள் நீ
பூரணமாய் நிரம்பி விடு
மௌனத்தை வழங்கிவிடு
உன்னுள்
கரைகிறேன், மறைகிறேன்
சூட்சுமமாய்
சூன்யத்தோடு சூன்யமாய்
உன்
இருப்பில்
நான்.

ஃ பிறக்கும்போதும் சரி
மரணிக்கும்போதும் சரி
இருகைகளும்
வெறுமையாய்
காலியாகவே
இருப்பதனைப்
பார்த்திருக்கிறாயா?
பார்,
வெறுமையாகவே வந்தவன்
வெறுமையாகவே போகிறான்.
Monday, 17 February 2014

ஸ்ரீ சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்


*உங்களைத் திட்டுபவர் அல்லது துன்புறுத்துபவர் மீது
உங்கள் இதயத்தில் எந்தவிதமான பகைமை உணர்ச்சியையும் 
கொள்ளாதீர்கள். இது வெளிப்படையாக கோபத்தைக் காட்டுவதை
விட மிகவும் மோசமானது. இது மானசீகப் புற்று நோய். பகைமையை
வளர்க்காதீர்கள். மறவுங்கள். மன்னியுங்கள். இது ஏதோ வெறும் 
லட்சியவாத பழமொழி அல்ல. உங்கள் அமைதியைப் பாதுகாக்க
ஓரே வழி இது தான்.

*உங்களுக்குப் பிடித்தமான வேலை அல்லது பொழுது போக்கில்
நீங்கள் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்களானால் உங்களுக்கு மிகுந்த மன
அமைதி கிட்டும்.

*உங்களுக்கு மன அமைதி வேண்டுமானால் நீங்கள் செய்யக் கூடாது
என்று எதையெல்லாம் நினைக்கறீர்களோ அந்த எல்லாக் காரியங்களையும்
செய்யாமல் நிறுத்துங்கள். அதே போல நீங்கள் செய்ய வேண்டும் என்று
நினைக்கும் காரியங்களை உடனே செய்யத் தொடங்குவதும் அதை போல
முக்கியததுவம் வாய்ந்ததாகும்
.
*ஓரு சில நம்பமான நண்பர்களிடம் மட்டுமே பழகுங்கள். பழக்கத்தைப்
பெருக்க வேண்டாம். எவருடனும் அதிகமாக நெருக்கிப் பழக வேண்டாம்.
அதிக நெருக்கம் அலட்சியத்தை உருவாக்கி உணர்ச்சிகளை உருக்கலைத்து
மன அமைதியைக் கெடுக்கிறது.

*வாழ்க்கையில் நேரிடும் ஓவ்வொரு அனுபவத்தையும் அது வரும் விதத்திலேயே
ஏற்றுக் கொள்ளுங்கள். முணுமுணுக்காதீர்கள். எரிச்சல் கொள்ளாதீர்கள்.
வருந்தாதீர்கள். மகிழ்ச்சி அடையவும் வேணடாம். அமைதியாயிருங்கள்.


-ஆதாரம்:- ஸ்ரீ சுவாமி சிவானந்தரின் “மன அமைதி”-என்ற சிறு
          பிரசுரத்திலிருந்து.

முல்லாவின் கதை


ஓரு நாள் முல்லா நசுருதீன் பூச்சி பிடித்துக் கொணடிருந்தான்
அவன் சிலவற்றைப் பிடித்தான். பிறகு தன் மனைவியிடம்
“நான் இரண்டு ஆண் பூச்சிகளையும் இரண்டு பெண் பூச்சிகளையும்
பிடித்தேன்.” என்றான்.

அவன் மனைவி “அதிசயமாக உள்ளதே, பூச்சி ஆணா,பெண்ணா
என எப்படி கண்டுபிடித்தீர்கள்?”என கேட்டாள்.

அதற்கு அவன் “இரண்டு கண்ணாடியின் மேல் உட்கார்ந்துக்
கொண்டிருந்தன. இரண்டு செய்தித் தாள் மீது உட்காந்துக் 
கொண்டிருந்தன?” என்றான்.

-ஆதாரம்:-பகவான் ஓஹோ-வின் “ரகசியமாய் ஓரு ரகசியயம்”
என்ற புத்தகத்திலிருந்து.

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்


* காலில் தைத்த முள்
  நெஞ்சில் வலி
  தாயின் ரத்த பாசம்.

*மண்ணில் பிறந்து வளர்ந்து
 மண்ணிற்கே உரமான இலை
 என் உடம்பு.

*வீண் சண்டைக்குப் போய்
 வாலிழந்து வந்தது
 சவரில் வசிக்கும் பல்லி.

*பயிருக்குப் போட்ட
 உரத்தைத் தின்றது
சத்தில்லாத மண்.

*இறந்த கரப்பானின்
 இறுதி ஊர்வலத்தில்
 கலந்துக் கொண்டன எறும்புகள்.

*புணர்ச்சியின்றி கருவுற்று
காய்த்தன கனிகள்
காற்று கொடுத்த மகரந்தம்.

-ந.க.துறைவனின் “நதிக்கரைகள்”-என்ற
தொகுப்பிலிருந்து. 

Sunday, 16 February 2014

மௌனப் புயல்


வண்ணத்துப் பூச்சியின்
மௌனம்
மலருக்குப் புரியும்.

காற்றின் மௌனம்
மரங்களுக்குப் புரியும்.

மேகத்தின் மௌனம்
பயிர்களுக்குப் புரியும்.

காவிரியின் மௌனம்
கரைகளுக்குப் புரியும்.

விதையின் மௌனம்
மண்ணுக்குப் புரியும்.

பிறந்தப் பூமியில்
வாழ்வினை வெறுத்து 
அமைதியற்று 
வேதனைப் புலம்பலை
மௌனமாய் அடக்கி
வாழும் மானுடத்தின்
மௌனம்
யாருக்குப் புரியும்?.


புதுமனை புகுவிழா

.
புதுமனை புகுவிழா. உறவினர்களெல்லாம் இரவே வந்து விட்டார்கள்.
விடியற்காலை வாஸ்து,பூசை.பால்காய்ச்சுதல், புதுத் துணிக் கொடுத்தல்,
அன்பளிப்பு என எல்லாச் சடங்குகளும் சுபமாகவே நிகழ்ந்தேறின.
காலை டிபன் முடித்து வெளியில் வந்து வீட்டின் முன் நின்று சிலர்
முகப்பின் அமைப்பை மகிழ்ச்சியாகப் பார்த்துப் பேசிக் கொண்டனர்,
சிறுவர்கள் தெருவில் உற்சாகமாக விளையாடினர். குறும்பு செய்யும்
குழந்தைகளை அவரவர் அம்மாக்கள் திட்டி அதட்டி விரட்டினர்
.
      புது வீட்டின் மேல் மாடி முலையில் கட்டி வைக்கப்
-பட்டிருந்த அசிங்க உருவத் திருட்டிப் பொம்மையைப் பார்த்து
சிறுவர்கள் மௌனமாய் சிரித்துக் கொண்டார்கள். பெரியவர்கள் கண்டும்
காணாததும் போலிருந்தனர். பெண்கள்,அந்தப் பொம்மையைப் பார்த்து
விட்டு கூச்சத்தோடு வெட்கித் தலைக் குனிந்து வேறு பக்கம் போய்
நின்றனர். அப்பொழுது,திருட்டிப் பொம்மையை யாரோ ஓரு சிறுவன்
அவிழ்த்துக் கீழே இறக்கிக் கிழித்துக் கொளுத்தி விட்டான் என்று
சொல்லி, அவனை உறவினர் ஓருவர் அடித்து விட்டார். கும்பல் கூடி
விட்டது.கொஞ்ச நேரத்தில், கிரகப் பிரவேசம் முடித்த புது வீடு கலவரப்
பிரவேசமாக மாறி அமர்க்களப்பட்டது.

பொம்மைகள்ñö¬ôŠ «ð²Aø¶‚ °ö‰¬î
î¬ôò£†® ݆®‚ «è†Aø¶
î…ê£×˜ ªð£‹¬ñ,

憮Š ðö°õ
ðJŸC â´‚Aø£¡ ¬ðò¡
K«ñ£† 臆«ó£™ 裘,

°Š¬ðJ™ Aì‰î¶
àœÀ˜ HóºèK¡
MC†®ƒ 裘´,

°‡´ ñQî˜ ãP G¡ø£˜
CKˆî¶ Cô ªï£®èœ
â¬ì Þò‰Fó‹,

MKõ£è M÷‚Aù£˜
î¬ô õ¿‚¬èŠ ðŸP
õ¿‚¬è M¿‰î 죂ì˜,


ந.க. துறைவன் ஹைபுன்


அந்தச் சம்பவம் நடக்கா தென்று தான் நினைத்தார்கள்
எப்படியோ நிகழ்ந்து விட்டது?. எதிர்ப்பாராமல் நிகழ்ந்து
விட்டதற்காக யார் வருத்தப்படடு, என்ன பயன் விளையப்
போகிறது?. நிகழும் சம்பவம் எந்த நொடியிலும் 
நிகழ்ந்தேறி விடலாம்
.
எவரிடம் இருக்கிறது நடக்கவிருக்கும் சம்பவத்தைத்
தடுத்து நிறுத்தும் மாய மந்திரச் சக்தி. எப்படியோ,எவருக்கும்
புரியாமல் புதிராகவே புதைக் குழிக்குள்ளேயே மறைந்துப்
போனது குயிலியின் மரணம்.

    விரைந்து வருகின்றன
    எரி நட்சத்திரங்கள
    பூமியில் விழுந்து தற்கொலை.

காதல் பாட்டு.

உள்ளம் உருகும் மெட்டு
கிராமத்து மண்வாசம் வீசும்
நாடோடிக் காதல் பாட்டு.

கையேந்தி பவனில் உண்டாள் விருந்து
வயிற்றுக் கோளாறால்
உட்கொண்டாள் மருந்து.

தாயிடம் சோறுண்ணும் சேய்
வேடிக்கைப் பார்த்து நிற்கிறது
அருகில் நன்றியுள்ள நாய்.

நிலவு இல்லாத இரவு
நடந்ததாம் அடுத்த தெருவில்
யாருமில்லாத வீட்டில் களவு

முகத்தில் தெரியுது மினுமினுப்பு
ஊர்வம்பு பேசுகிறார்கள் சிலர்

யாரைப் பற்றியோ கிசுகிசுப்பு.