Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Wednesday 24 October 2018

அந்த ஒன்றை...!!

அவர் எதைக் கண்டறிந்தார்
கண்டறியாதன அந்த ஒன்றை
எப்பொழுது கண்டறிந்தார்?
கண்டறிந்ததை எப்பொழுது
வெளிப்படுத்தினார்?
எவருக்கு கற்பித்தார் ரகசியமாய்
எங்கோ பூரணமாய்
இயங்கும் காணாத
எந்த ஒன்றையும்
அந்த ஒன்றையும்...

ந க துறைவன்.


காணாத அந்த ஒன்றை...


Saturday 20 October 2018

பேனர்கள்

அரசியல் பேனர்களை
மிஞ்சி விட்டன.
சாலையோரம் எங்கும்
திருமணம்
இறப்பு
வண்ண வண்ண
டிஜிட்டல் பேனர்கள்.

ந க துறைவன்.


பேனர் விளம்பரங்கள்


விமர்சனம்

நவீன ஹைக்கூ கவிதைகள்
எழுதுவதில் தேர்ந்தவர்
ந க துறைவன்
அவர் ஹைக்கூ கவிதைகளில்
ஆழ்ந்த பொருள் இருக்கும்.
வாசிப்பவர் உள்ளத்தில்
அலைகளை உண்டாக்கி
கொண்டே இருக்கும்.
அண்மையில் வெளியிட்டுள்ள
ஹைக்கூ தொகுப்பு
' ஒரு கை ஓசை '

அரசமரத்தடியின் கீழ்
எண்ணெய் இல்லாத
அகல் விளக்குகள்.

ஒரு கை ஓசையில்
ஓர் ஓசை.

பொன். குமார்.
9003344742

மிக்க நன்றி
பொன். குமார்.

ந க துறைவன்.






ஹைக்கூ விமர்சனம்


Wednesday 17 October 2018

தவளைகள்

1.
மழைத் துளிகள் உடலில் பட்டதும்
சிலிர்த்து எழுந்தன
நீரின்றி வாடிய தவளைகள்.
2.
தவளைகள் நீண்ட உரையாடல்
மகிழ்ச்சி ஆரவாரம்
மழைக் குறித்து விமர்சனம்.
3.
எத்தனை நாளாச்சு?
ஆரோக்கியமாய் குளிச்சி
மழைநீரில் மரங்கள்.
4.
நிலவொளி அற்ற இரவு
வெளியெங்கும் மழை இரைச்சல்
வாகனங்கள் பாய்ச்சும் ஒளி.
5.
மழைக்கு ஒதுங்க
இடம் தேடி அலைகின்றன
தெரு நாய்கள்.

ந க துறைவன்.


மழைக் காலம்


Tuesday 9 October 2018

முரண் வலி

கவலைப் படர்ந்த
வெளிர் முகம்
சத்தம் எழுப்பாத
உள் மனம்
உதடுகள் அசையாத
விசும்பல்.
எதையோ இழந்து விட்ட
ஏமாற்ற உணர்வு
இன்னும் தீராத
வாழ்வின் முரண்
பெரு வலி
எந்நேரமும்
எதிர் நோக்கி...

ந க துறைவன்.


முரண் வலி


Sunday 7 October 2018

முதிராத...

விட்டு விடுதலையாகின
உதிர்ந்த மலர்கள்
முதிராத இளம் வயதில்...

ந க துறைவன்.


உதிர்தல்


Saturday 6 October 2018

சிலைகள்

செயற்கை
புல்வெளி கீழ்
புதைந்திருக்கின்றன
கடத்தப்பட்ட காக்கும்
கடவுள் சிலைகள்.

ந க துறைவன்.


கடத்தல்


Tuesday 2 October 2018

கிறுக்கல்கள்

கிறுக்கல்கள்

1.
புரியவில்லை என்றான்
எதுதான் புரிந்திருக்கிறது
அவனுக்கு
கோழி கிறுக்கல்களாய்
கையெழுத்து.
2.
தோழிகளைப் பிரிந்து
தனியாய்
யாருடன்
விளையாட வந்தது
மலையில்
இறங்கிய நிலா.
3.
மறைக்கப்பட்டது
யாருடைய முகம்?
சொல்லப்படும் கதை
எது நிஜம்?
அரசமரத்தடியில்
பிள்ளையார்கள்.
4.
குட்கா
பான்மசாலா
புகையிலை
துர்நாற்றம்
குப்குப்பென்று
வீசுகிறது
தமிழகமெங்கும்.
5.
வெளிச்சத்தில் இருட்டு
மனதில் தெளிவு
பாதையில் சரளைக் கற்கள்.
6.
சோக முகம்
உடல் மறைந்திருக்கிறது
வீட்டின் கதவுக்கு
பின்னால்.
7.
அருவி நீர் சலசலப்பு
பாறைகள்
உணர்ந்தனவா?
குரங்குகள் குதியாட்டம்.
8.
அமைதியான
தாமரைப்பூக்கள்
ஆணவத்தின் மிதப்பில்
அகன்ற
இலையில்
தத்தளிக்கும்
நீர்த்துளிகள்.
9.
தொட்டியில் பூச்செடிகள்
தும்பிகள் வருகை.
துவங்கியது
மழைக் காலம்.
10.
இசையின் ஒலி
இருளில் ஐக்கியமானது
அமைதியில்
மனம் ஒடுங்கி.

ந க துறைவன்.



03-Oct-2018 10:25:42 AM


கிறுக்கல்கள் கவிதைகள்