Labels

Haiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (20) கலை (1) கவிதை (332) கவிதை. (7) கவிதைகள். (7) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (2) குறுங்கவிதைகள் (12) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (55) ஹைபுன் (48)

Sunday, 31 May 2015

மனைவி அமைவதெல்லாம்...!!


*
கம்பங்கூழ், கேழ்வரகுகூழ் செய்யத் தெரியுமா? என்று மனைவியகை் கே்ட்டான்.
நகரத்தில் பிறந்து வளர்ந்தப் பெண் சொன்னால் சொன்னாள்.
சோத்த வடிச்சி கொட்றத்துக்கு கத்துக்கவே போறும்னு ஆயிடிச்சி
இதுவேறையா?. நல்ல கிராமத்துப் பொண்ணைாப் பார்த்து் கட்டிக்கிங்க.
கூழா காய்ச்சி வைப்பா? குடிச்சிட்டு நிம்மதியாயிருக்க. இருங்க போதுமா?.
*

மனைவி அமையதெல்லாம்...!!


*
கம்பங்கூழ், கேழ்வரகுகூழ் செய்யத் தெரியுமா? என்று மனைவியகை் கே்ட்டான்.
நகரத்தில் பிறந்து வளர்ந்தப் பெண் சொன்னால் சொன்னாள்.
சோத்த வடிச்சி கொட்றத்துக்கு கத்துக்கவே போறும்னு ஆயிடிச்சி
இதுவேறையா?. நல்ல கிராமத்துப் பொண்ணைாப் பார்த்து் கட்டிக்கிங்க.
கூழா காய்ச்சி வைப்பா? குடிச்சிட்டு நிம்மதியாயிருக்க. இருங்க போதுமா?.
*

Saturday, 30 May 2015

இலைகள்...!! SNRYU / சென்ரியு ]


*
யாரிடமும் கை நீட்டி
சோசியம் பார்த்ததில்லை
மரத்தின் இலைகள்.
*
விளையாடிக் கொண்டிருந்தன நாய்கள்
வேகமாய் வந்து பிரித்து விட்டது.
வேறொரு நாய்.
*
அம்மா அப்பாவின்
விரல்கள் பிடித்து நடந்தது
மறக்க முடியாது அனுபவம்.
*

Friday, 29 May 2015

பேகூ...பேசு....!! [ கவிதை ]


*
என்னென்ன பேச வேண்டுமென
மனம் சேமித்து வைத்தவைகள்
களைத்துப் போகுமளவு
பேசிக் கொண்டேயிருக்கிறேன்
நீ மட்டும் கேட்டுக் கொண்டு
ஓரே வார்த்தையில்
பதில் சொல்லி விட்டு
மௌனமாகிறாய்.
தொடர்பில் இருக்கிறாயா? என்று
தெரிந்துக் கொள்வதற்கு கூட
இயலாமல் போகிறது   
இப்பொழுது பேசினால் உண்டு
பேசு… பேசு… மனந்திறந்து… பேசு…
கல்யாணத்திற்குப் பிறகு
பேச்சு குறைந்துவிடும்
உன் உறவு பெருகிவிடும்
களித்து விடும் உள்ளம்
மலர்ந்து விடும் இல்லம்.

Thursday, 28 May 2015

மேலக்குப்பம் டவுன் பஸ்...!! [ ஒரு பக்கக் கதை [

மேலக்குப்பம் டவுன் பஸ்….!!
*
கிராமத்து நடுத்தரப் பெண்மணிகள் காய்கறிகளை விற்றுவிட்டு வெறும் கூடையுடன் டவுன் பஸ்ஸில் ஏறி வீடு திரும்பிக் கொண்டிருந்தனர் சீட்டில் அமர்ந்தவர்கள் மடியில் கூடை. வழியிலும் கூடைகள். குசும்பும் குறும்பும் கலந்த ஒயா.தக் கிராமத்துப் பேச்சின் சத்தம். நிற்கின்ற நடுத்தர ஆண்கள் உதடு விரியாமல் சிரிக்கின்றார்கள். இளைஞர்கள் குறுகுறுவெனப் பார்த்துச் சிரிக்கின்றார்கள். அப்பேச்சினைக் கேட்டுப் பழகி விட்ட இளம்பெண்கள் வெட்கப்படாமல் செல்போனில் பாடல்கேட்டு நிற்கின்றார்கள்.
அவர்களின் கூத்தெல்லாம் பார்த்துக் கேட்டுச் சலித்தப்போன, அந்த ரூட்டில் பல வருசமாய்’ பணியாற்றி வரும் கண்டக்டர் தெமேவென டிக்கெட் கொடுத்துவிட்டு நகர்ந்து்க கொண்டிருந்தார். டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்தப் பெண், அடிக்கடி அவரைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தாள். டிரைவரும் பதிலுக்கு நகைச்சுவையாக ஏதோ சொல்ல கொள்ளென்று சிரித்தாள். என்னடீ…, சிரி்ப்பு பொங்குது. நாளைக்கும் கொஞ்சம்  வச்சிரு என்றாள் பக்கத்திலிருந்தப் பெண். யாரோ ஒருத்தி நிறுத்துங்க…நிறுத்துங்க… என்று கத்தவே டிரைவர் பிரேக் அடிக்க பயணிகள் பலரும் ஒருவர் மீது ஒருவர் மோதியணைத்துக் கொண்டார்கள். பஸ்ஸிலிருந்தவர்களின் பேச்சும் சிரிப்பும் கொஞ்ச நேரம் அடங்கியது.
*

Wednesday, 27 May 2015

கனவு வீடு...!! [ SENRYU / சென்ரியு ]


*
கனவுகளிலேயே விடிவதற்குள்
கழிந்து விடுகின்றது
இனிமையான இரவு.
*
பேசிக் கொண்டிருந்தான்
மற்றவர்கள் சிரிக்கவில்லை
சிரித்தது ஒருவன் வயிறு மட்டும்.
*
விற்கப்பட்டு விட்டது
கடன் தொல்லையால்
கனவு வீடு.

கிராமத்து கைமணம்....!!


*
கோடைவெயிலுக்கு குளிர்ச்சியாய் பாதையோரக் கடைகளில் கூழ் குடிக்கிறார்கள் சனங்கள். கடித்துக் கொள்ள மிளகாய், ஊறுகாய், நெத்திலி என பல வகைகள் கிடைக்கின்றன. ஒரு சொம்பு பத்து ரூபாய். ரெண்டு சொம்பு குடிச்சா பசி தீர்ந்துப் போகிறது. மலிவு விலையில் சத்தான உணவு. நீங்களும் வாங்க குடிச்சி பசியாறலாம்.
*

Tuesday, 26 May 2015

பார்வை...!! [ கவிதை ]


*
எல்லோரும் பார்த்தார்கள் பூரணமாய்
யாரையும் பார்க்கவில்லை அம்பாள்.
*
பாதையில் காய்கின்றது
கோடை வெயிலில் பழங்கள்.
*

விமானத்தைப் பார்த்து சிரித்தது
பறந்துக் கொண்டிருந்தப் பறவை.

*

Monday, 25 May 2015

AMARAN'S POESY....!!

காதல் பார்வைகள்.
கவிதாவெளி அமரன்.
*       
1.
So happy to the eye
The pure white pen
Of you whom I dearly love.
[ Tr] R.H. Blyth.
கண்ணுக்கு குளிர்ச்சி
பெண்ணே! நின்வெண்மை விற்று
கண்ணே, என் காதல்.
பூஸன்
*
2.
Having .slept,  the cat gets up
And with great yawns
Goes outlove-matting.
*
தூக்கம் முகந்ததுமே
ஆச்சு, கொட்டாவி, பூனை
கூடணும், வெளியோட்டம!.
இஸ்ஸா – [ மொ.பெ.அமரன் ]
*
நன்றி  பொதிகை மின்னல் – மே-2015.
ந.க.துறைவன்.

                                        

ஆமைத் தலை...!! [ SENRYU / சென்ரியு ]


*
கடுமையான கோடை வெயில்
எல்மெட்டிற்குள் வியர்வை
நனைகின்ற ஆமைத் தலை.
*
பொய்கள் சிம்மானத்தில்
தண்டனையில் உண்மைகள்
வாய்மையே வெல்லும்…
*

வீட்டில் கிடைத்தது
கல்யாண மண்டபத்தில்
காணாமல் போன சீப்பு
*

நடனம்...!! [ SENRYU / சென்ரியு ]

*
மின்மினிகளின் நடனம்
இரசிக்கும்
நட்சத்திரக் கூட்டம.
*

Sunday, 24 May 2015

கண்கள்...!! [ புதுக்கவிதை ]


*
எங்கெங்கோ தேடின
கண்கள்
எங்கேயிருக்கிறாய் என்று
காட்டிக் கொடுத்தது.
உன் அசையும்
உன் சிரிப்பலையும்
அருகில் நெருங்கி வந்துப்
பார்த்தேன்…. ஏமாந்தேன்
அது நீயில்லை என்பது
உறுதியானது
உடம்பெல்லாம் வியர்த்தேன்
வெட்கத்தில் குனிந்தேன்
நடந்தச் சம்பவம்
நான் சொன்னதைக் கேட்டு
நீ சிரித்தாய் ரொம்ப நேரம்
அந்தச் சிரிப்பில் மலர்ந்த
உன் முகம் தான்
எத்தனை அழகு….!!
.ந.க.துறைவன்.    


Friday, 22 May 2015

இரவு...!! [ சென்ரியு ]

*
கனவுகளிலேயே விடிவதற்குள்
கழிந்து விடுகின்றது
இனிமையான இரவு.
*

ஆமைத் தலை...!! [ SENRYU/ சென்ரியு ]


*
கடுமையான கோடை வெயில்
எல்மெட்டிற்குள் வியர்வை
நனைகின்ற ஆமைத் தலை.

ந.க.துறைவன்.

Wednesday, 20 May 2015

அனுபவம்....!! [ HAIKU / ஹைக்கூ ]


*.
மனிதனுக்கு உணர்த்துகிறது
வாழ்க்கை அனுபவத்தை
துயரமில்லாதத் தும்பைப் பூக்கள்.
*
விண்ணில் மண்ணில் தேடினும் 
எளிதில் கிடைக்குமா?
வாழ்த்கை இரகசியம். .
*
சலிப்பில்லாத உறவு
வெறுப்பில்லாத அன்பு
தேடுகின்றது மனம்.

*

Tuesday, 19 May 2015

பூவிதழில்...!! [ SENRYU / சென்ரியு ]

*
எழுத்தில்லாதச் சுவடு
பூவிதழில் காதல் வாசகம்
படிக்கும் பட்டாம்பூச்சிகள்

*

வாசம்...!! [ HAIKU / ஹைக்கூ ]


*
காற்றில் அலைகிறது தூசு
உள் புழுக்கி அழுகிறது குப்பை
எப்பவும் தூய்மையானது மனம்.
*
காற்றில்லை வெளிச்சமில்லை
தவளைச் சத்தமில்லை
மழை இரவு.
*
விடியல் பனிக் காலை
சுமந்து வருகின்றன காற்று
மகிழம் பூக்கள் வாசம்.
*

மின்மினிகள்...!! [ ஹைக்கூ ]

*
யாரைத் தேடுகின்றன?
அந்த இருட்டில்
மின்மினிப் பூச்சிகள்.
*

Monday, 18 May 2015

தலையணை....!! [ கவிதை ]

*
எல்லோரின் கோபத்தை
ஏற்றுக் கொள்கின்றது
வெறுக்காது தலையணை.
*

Sunday, 17 May 2015

ஈச்சங்குலை...!! [ கவிதை ]


முயற்சி செய்கிறார்கள் எல்லோரும்
மனஉளைச்சலிலிருந்து விடுதலை.
*
காத்திருக்கிறோம் எப்பொழுதும்
காத்திருப்பதில்லை நேரம்
*
யார் அமர வைக்கிறார்களோ?
அவர்களே இறக்கி விடுகிறார்கள்.
*

இரவு....!!

காற்றில்லை வெளிச்சமில்லை
தவளைச் சத்தமில்லை
மழை இரவு.

அறிவிப்பு.

லேப்டாப் பழுதுப் பா்படர்க்கப்பட்டு செயல்படத் துவங்கியுள்ளது.
இனி படைப்புகள் தொடரும் நண்பர்களே..
ந.க.துறைவன். 

Tuesday, 5 May 2015

நாய்...!!

*
காத்திருக்கிறேன் வெகுநேரமாய்
பரிதாபமாய் பார்த்தது
அருகில் வந்து நின்ற நாய்.
*

Monday, 4 May 2015

கதவு....!! [ SENRYU / சென்ரியு ]

*
உள்ளே நின்றிருந்தவளை
பளிச்சென்று காட்டியது
தாளிடாதக் கதவு.
*

தேனீர....!! [ SENRYU / சென்ரியு ]

*
பேசிக் கொண்டே பருகினோம்
இருவரும்
கவிதைத் தேனீர.
*

Sunday, 3 May 2015

நீ ...நான்...!! [ கவிதை ]


*
உன் விழிகளில்
நானிருக்கிறேன்
உன் உணர்வுகளில்
என் எண்ணங்கள்
ஊர்கின்றது
உன் உதடுகளில்
என் எச்சில் இருக்கின்றது
உன் காதுகள் எப்பொழுதும்
என் வார்த்தைகளுக்காகக்
காத்திருக்கின்றது.
உன் மூச்சு சுவாசம்
என் மீது வீசி தழுவுகின்றது
உன் வெட்கங்கள்
என்னைக் கண்டதும் வந்து
மௌனமாக்கி விடுகின்றது
நம் சந்திப்புக்கு சமாதானம்
செய்து வைக்கின்றது
வெறுப்பை விரட்டி
மகிழ்கின்ற இருமனங்கள்.
நீ நான் நான் நீ
நான் நீ… சங்கமம்….!!
*