Labels

Haiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (20) கலை (1) கவிதை (332) கவிதை. (7) கவிதைகள். (7) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (2) குறுங்கவிதைகள் (12) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (55) ஹைபுன் (48)

Monday, 31 August 2015

வெளி...!! [ ஹைக“கூ ]

Haiku – Tamil / English.
*
யாருமற்ற வெளியில்
காற்று மட்டும் இருந்தது           
திசை நோக்கி பறவைகள்.
*
Unattended outdoors
It was only the wind
Orientation towards the birds.
*

Sunday, 30 August 2015

கர்வம்

இமய சிகரத்தின் கீழ்
அடக்கமாய்
அமைதியான புற்கள்.


பேச்சு

பேசியதும் வலித்தது
பேசாமல் இருப்பதும் வலித்தது


Saturday, 29 August 2015

தனிமை...!! [ ஹைக்கூ ]தனிமையின் இன்பம்
உணர்ந்து அறிய அறிய
அனுபவ விழிப்பு நிலை.
*

Wednesday, 26 August 2015

துவக்கம்...!! [ புதுக்கவிதை ]


*
அவளொரு மலரைப் போன்று
விழித்தெழுந்தாள்
மனதில் என்னவோவொரு
புதிய சிந்தனையோடு
புன்னகைப் பூத்தாள்.
எல்லையற்ற ஆசைகளோடு
எதிர்காலச்  செயல்களைச்
சித்திரமாய் வரைந்து
இதயக் கணினியில் பதிந்தாள். 
அடிக்கடி நிலைக் கண்ணாடியில்
முகம் பார்த்து பார்த்து
புன்சிரிப்புச் சிரித்துக் கொண்டாள்
அவளுடைய அழகே கண்டே
அவள் பொறாமையோடு
முகம் சுழித்தாள்.
எதைப் பற்றியோ கேட்டு
விசாரிக்கும் அன்னியனிடம்
தலைக் கவிந்து வெட்கப்பட்டுப்
பதில் சொன்னாள்.
வாசலில் நிற்கும் சிட்டுக்குருவியை
விரட்டாமல் ரசித்து பார்த்தாள் 
செல்பேன் ஒலிக்கேட்டு
பதறாமல் எடுத்துப் பேசினாள்
முகமெல்லாம் மலர்ந்தது
தாமரைப் பூவாய்

*

Tuesday, 25 August 2015

பசுமை...!!

Haiku – Tamil / English.
*
பூமியை அழகு படுத்தி
பாதுகாக்கின்றன
பசுமையான செடிகள்.
*
The beauty of the earth
and justified Sheltering
Evergreen plants..

*

விசாரிப்பு...!! [ ஹைபுன் ]


*
வீடு, பூட்டியிருந்தது. “ எங்கே போயிருக்கிறார்கள்என்று பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்தார்.தெரியலேயே சார், எங்கே போறேன்னு யாரிடம் சொல்லிட்டுப் போறாங்கஎன்று கொஞ்சம் கடுப்பாகவே பதில் சொன்னார். அவருக்கு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. ‘ நன்றி சார்என்று சொல்லிவிட்டு நகர்ந்தவர், பக்கத்திலிருந்த மரத்தடியின் அடியில் ஒதுங்கி நின்றார்.
*
பக்கத்து வீட்டுக்காரன் பகை
எதிர் வீட்டுக்காரன் நண்பன்
உறவுக்கு கைகொடுக்கிறது மரங்கள்.
*

Monday, 24 August 2015

புத்தன்...!! [ ஹைக்கூ ]


*
மனமெல்லாம் கடந்து
தனிமையில் புத்தன்
உதட்டில் புன்னகை.

*

குறுந்தொகை...!! [ நகைச்சுவை ]


*
ஒரு நாள் எ.தெ.ஏகாம்பரம் தெருவில் போய்க் கொண்டிருந்தார். வாலிபர்களும் சின்னப் பையன்களும் அவருக்கு வணக்கம் சொல்லிச் சிரித்தார்கள். பதிலுக்கு ஏகாம்பரம் வணக்கம் சொல்லி சிரித்தார். என்னாங்கடா, இன்னிக்கி வணக்கமெல்லாம் பலமாயிருக்கு. என்ன சங்கதி என்று கேட்டார். அவர்கள் மழுப்பலான பதில் சொன்னார்கள்.
“ இல்லெண்ணே ஒரு சந்தேகம்? “
“ எதைப்பத்திடா? ”
“ இந்த கவிதையெ படிச்சி படிச்சி பாத்தோம். புரியமாட்டேங்குது. அதான். ”
“ எங்க அதைக் கொடு. படிச்சிப் பார்க்கிறே ”
படிச்சிப் பார்த்த ஏகாம்பரம் கொஞ்சநேரம் மௌனமாக இருந்தார்.
அவருக்கும் புரியவில்லையோ என்னவோ? முகபாவமே மாறி விட்டது.
“ என்ன அண்ணே, விளங்கிச்சா? ” எங்களுக்கு விளக்கமா சொல்லிட்டுப் போங்க ” என்றார்கள்.
அவர்களுக்கு எப்படிப் பரிய வைத்துச் சமாளிப்பது என்று யோசித்தார்.
” டேய், இது குறுந்தொகைப் பாட்டாச்சே? ” சாய்ந்திரமா வாங்கடா முழுசா பதில் சொல்றேன் ” என்றார்.
அண்ணே, இன்னொரு தரம் நல்லா படிச்சிப் பார்த்து பதில் சொல்லுங்கண்ணே ” என்றார்கள் குறும்புக்காரர்கள்.
“ டேய், அண்ணனுக்கு தெரியலேடா ” என்று கில்லடித்தார்கள்.
“ மீண்டும் ஏகாம்பரம். இது குறுந்தொகைப் பாட்டே தான் ” என்று சொல்லிச் சமாளிக்கப் பார்த்தார்.
“ இதை எப்படி குறுந்தொகைப் பாட்டுன்னு சொல்றீற்கண்ணே ” என்றார்கள்.
“ நா எத்தனையோ கவிதைப் படிச்சிருக்கேன். இது குறுந்தொகையே தான்டா?
என்றார்.
இவனுங்க கிட்ட இன்னிக்கி வசமா மாட்டிக்கி்டடோமே என்று உள்ளுக்குள் பேசிக் கொண்டார் ஏகாம்பரம்.
“ சரி, இது குறு்ந்தொகை .இல்லெண்ணா, என்ன கவிதைடா ”
“ அண்ணே, ,இது குறுந்தொகையுமில்லே, பெருந்தொகையுமில்லே, இப்ப புது எழுத்தாளர்கள் எழுதுற நவீன கவிதை ” என்றார்கள்.
“ பழைய கவிதையோ, புதுக்கவிதையோ, நவீன கவிதையோ இப்பவெல்லாம் இப்படித்தான் எழுதுறாங்களா? என்று சொல்லிக் கொண்டே நெளிந்தவாறு அவர்களிடமிருந்து மெல்ல நழுவினார் ஏகாம்பரம்.
*

Saturday, 22 August 2015

அந்தரங்கம்

பாதுகாப்பாவே அரங்கேறுகிறது
பாதுகாக்கப்படும்
அந்தரங்கம்.


Friday, 21 August 2015

வாழ்த்து

இன்று
சென்னை பிறந்த தினம்
நல்வாழ்த்துக்கள்
ந.க.துறைவன்.


சிறகு

காதலர்க்குச் சிறகில்லை
காற்றுக்கு மரணம் இல்லை.


Thursday, 20 August 2015

மொட்டை

மொட்டை அடித்தப் பிறைகும்
அழகாகவே இருக்கிறாள்
கூந்தல் இழந்தப் பெண்.


தீபம்

இராகுகாலம் துர்க்கைமுன்
பிரார்த்தனையாகப் பிரகாசித்தது
எலுமிச்சம் பழத் தீபம்.


குடை

ஒரு குடையில்
நாமிருவர்
மழையின் சிரிப்பு.


Wednesday, 19 August 2015

முல்லா கதை...!!


*
முல்லா நசருத்தீன் துணிகடைக்குப் போனார். ஒரு துணியைக் காண்பித்து விலையைக் கேட்டார்.
“ ஒரு மீட்டர் ஐந்து ரூபாய் ” - கடைக்காரன்.
“ நாலரை ரூபாய்க்குக் கொடேன் ” - முல்லா
“ பெரியவரே, நாலரை ரூபாய்க்கு துணி மண்டியில் தான் கிடைக்கும். ”.
“ சரி, எனக்கு வேண்டிய தானிய மண்டியிலிருந்து வாங்கிக் கொள்கிறேன் ” – முல்லா.
இப்படித்தான் மனிதன் இசையாகப் பொருள் கொள்ள முனைகிறான்.

ஆதாரம் :- ஓஷோவின் அஷ்டாவக்ர மகாகீதை – நூல் – பக்கம் 385.
தகவல் :- ந.க.துறைவன்.

*

Monday, 17 August 2015

நினைப்பு....!! [ புதுக்கவிதை ]


*
நினைப்பதற்கு ஏதுமில்லையென்று
நிம்மதியாயிருக்கவே
நினைக்கத் தோன்றவில்லை
நினைப்புகள் மெல்ல மெல்ல
அரும்பிக் கொண்டேயிருக்கின்றன.
அது எப்பொழுதும் ஒரே நினைப்பாக
நினைவுக்கு வருவதில்லை
அடுக்கடுக்கான மடிப்புகளாய்
அலையலையாய் நிமிடந்தோறும்
வந்துக் கொண்டேயிருக்கின்றன
யாரேனுமொருவர் நினைவுப்படுத்தி
சுடராய் தூண்டிவிடுகின்றார்கள்
புதிய புதிய தகவல்களோடும்
பிர்ச்சினைகளோடும் தாவித் தாவி
நினைவுகளாய் மலர்கின்றன
எப்பொழுதும் நினைவடுக்குச்
சேமிப்பு மையத்தில்
சேகரிக்கப்பட்டவைகள் வெளியாகி
நினைவுப்படுத்தி பேச வைக்கின்றன
கணநேரமேனும் நினைக்காமல்
இருக்கலாமென்றாலும்
நினைக்கவே செய்கின்றன  
அந்தந்த முக்கிய நினைப்புகள்.
நினைப்பதற்கு ஏதுமில்லையென்று
நிம்மதியாயிருக்கலாமென்றால்
ஏதேனுமொன்று மீண்டும்
நினைவுக்கு சட்டென வந்து வந்து
நினைக்கவே தோன்றுகின்றன
ஓய்வில்லாமல் எந்தவொரு….?.
*

நினைப்ப....!! [ புதுக்கவிதை ]


*
நினைப்பதற்கு ஏதுமில்லையென்று
நிம்மதியாயிருக்கவே
நினைக்கத் தோன்றவில்லை
நினைப்புகள் மெல்ல மெல்ல
அரும்பிக் கொண்டேயிருக்கின்றன.
அது எப்பொழுதும் ஒரே நினைப்பாக
நினைவுக்கு வருவதில்லை
அடுக்கடுக்கான மடிப்புகளாய்
அலையலையாய் நிமிடந்தோறும்
வந்துக் கொண்டேயிருக்கின்றன
யாரேனுமொருவர் நினைவுப்படுத்தி
சுடராய் தூண்டிவிடுகின்றார்கள்
புதிய புதிய தகவல்களோடும்
பிர்ச்சினைகளோடும் தாவித் தாவி
நினைவுகளாய் மலர்கின்றன
எப்பொழுதும் நினைவடுக்குச்
சேமிப்பு மையத்தில்
சேகரிக்கப்பட்டவைகள் வெளியாகி
நினைவுப்படுத்தி பேச வைக்கின்றன
கணநேரமேனும் நினைக்காமல்
இருக்கலாமென்றாலும்
நினைக்கவே செய்கின்றன  
அந்தந்த முக்கிய நினைப்புகள்.
நினைப்பதற்கு ஏதுமில்லையென்று
நிம்மதியாயிருக்கலாமென்றால்
ஏதேனுமொன்று மீண்டும்
நினைவுக்கு சட்டென வந்து வந்து
நினைக்கவே தோன்றுகின்றன
ஓய்வில்லாமல் எந்தவொரு….?.
*

Sunday, 16 August 2015

நீர்...!! [ கவிதை ]


*
நீரே உயிர் நீரே இரத்தம்
நீரே சுவாசம் நீரே உணவு
நீரே உணர்வு நீரே உறவு
நீரே விந்து நீரே நாதம்
நீரே வாழ்க்கை நீரே சந்ததி
நீரே அமைதி நீரே நம்மதி
நீரே பிரம்மம் நீரே கர்மம்
நீரே நித்தியம் நீரே சத்தியம்!!.
*

Thursday, 13 August 2015

முல்லா கதை.

முல்லா கதை
*
முல்லா நசருத்தீன் ஒரு கடையில் பணி செய்து வந்தார். பணியில் அமர்த்திய முதலாளி முல்லாவைப் பார்த்துக் கேட்டார். “ உன்னை வேலைக்கு அமர்த்திய போது நீ சொன்னாய் “ நான் அலுப்பு களைப்பு இல்லாமல் வேலை செய்துக் கொண்ருப்பேன் “ . என்று. ஆனால் இப்போது பெரிய மேசையில் காலைப் பரப்பித் தூங்குகிறாயே?. இது நீ வேலை செய்கிற இலட்ணமா? ”.
முல்லா பதில் சொன்னார். “ ஐயா! நான் அலுப்பு களைப்பு இல்லாமல் வேலை செய்யத்தான் இப்படி ஒய்வு எடுக்கிறேன். இது என் பணியாற்றலின் ரகசியம்.
ஆதாரம் :- ஓஷோவின் அஷ்டாவக்ர மகாகீதை – பக்கம் – 386.
தகவல் :- ந.க.துறைவன்.

*  

Wednesday, 12 August 2015

தேடல்...!! [ கவிதை ]


*
நீ தேடுவது என்னிடமிருக்கிறது
நான் தேடுவது உன்னிடமிருக்கிறது
நமக்குள்ளிருக்கும் தேடல்
மின் உணர்வாகப் பாய்ந்து
இருவரையும் இணைக்கின்றது
பொல்லாதக் காதல்.
*

Tuesday, 11 August 2015

முயற்சி...!!

*
முயன்றால்
முடியாதது ஏதுமில்லை
முயல்வதே கம்பீரம்
அப்பொழுதும் இப்பொழுதும்
எப்பொழுதும் எதுவும்
நிச்சயம் முடியுமென்ற
எண்ணந்தான்
எனக்கும்உனக்கும்
சிந்தனையில் உதிக்கனும்.

*

Monday, 10 August 2015

காதல்மரம்...!!

காதல்மரம்…!!
*
பொழுதடைவதற்குள் வந்துவிடு
உனக்காகக் காத்திருப்பேன்
நூறடிச் சாலை
கல்பென்ஸில் அமர்ந்து
ஆலமரத்தின் கீழ்.
அந்தப் பேரூந்தின் நேரம்
தவறவிட்டுவிடாதே
தவறாமல் வந்துவிடு
என்னெதிரில் இருக்கும்
மலையில் மெல்ல மெல்ல
செஞ்சூரியன் மறைகிறான்
எனக்கோ பதட்டமாகவே
இருக்கிறது நீ எப்பொழுது
வந்துச் சேர்வாய் என்ற
எதிர்பார்ப்போடு நினைவுகள்
என்னைக் கடந்து
மேய்ச்சலுக்குப் போன ஆடுகள்
வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றன.
ஊர்க்காரப் பையன்கள் என்னை
விசாரித்துவிட்டுப் போகிறார்கள்
எல்லா பேரூந்துகளும்
நேரத்தோடு போய்விட்டது
நீ வரவேண்டிய பேரூந்து மட்டும்
இன்னும் காணோம்
என் முகவியர்வையைப் பார்த்து
எனக்காக விசிறிக் கொண்டிருக்கிறது
ஆலமரம்.
*

*

Sunday, 9 August 2015

வாழ்க

நொடிப்பொழுதும் என்
நெஞ்சில் நீங்காத உன்
காதல் வாழ்க.


தூங்கு

நிம்மதியா தூங்கு
இல்லேன்னா
நினைச்சி ஏங்கு.


வழுக்கி

எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்
தெருவில் விழுந்தார்
சாணி வழுக்கி.


பூனை

பூனை செய்வது குறும்பு
அதைஅடிச்சா பாவம்
ஆடிக்காவிட்டால் தாவும்.


Saturday, 8 August 2015

சின்னமாய்...!! [ கவிதை ]


*
அந்த மலைக்கோட்டையை
ஒரு வழியாய்
பாதையற்றப் பாதையில்
கால்நடையாய் நடந்து
உச்சியில் சேர்ந்து விட்டோம்
அக் கோட்டையின் மதில்கள்
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து
எத்தனை உறுதியாய் நிற்கிறதென
எண்ணிப்பார்த்து கணநேரம்
பிரமித்துப் போனோம்.
அங்கே மன்னர்கள் தங்கி
கழித்த நாட்களை விட
சிப்பாய்கள் காவல்காத்து நின்று
காலங்கள் தான் அதிகமென்று
அந்த மதில்சுவர்களே
சாட்சியம் சொல்கின்றன.
இன்னும் மக்கள் பார்வைக்கு
வரலாற்று நினைவுச் சின்னமாய்
காட்சியளிக்கின்றது
அந்த மலைக்கோட்டை.
சந்திப்பின் சாட்சியாக
பெயரைப் பதிவு செய்வோம்
நம்பெயரைப் பார்க்கும்
எதிர்கால காதலர்கள்
நினைவுகூறட்டும்.
கோட்டையை அழித்துவிட்டார்கள்
காதலையும் அழித்துவருகிறார்கள்
இப்பொழுது இரண்டுமே
பசுமையான நினைவுச் சின்னமாய்…!!

*

Friday, 7 August 2015

வசந்தம்...!! கவிதை ]

வசந்தம்…!!
*
 வாழ்க்கையின்
விதியை
எப்படி மாற்றி
அமைத்து விடுகிறது?
இந்த
அற்புதமான
ஒரே
ஒரு நொடி!

*
வாழ்வே
வீணாய்ப் போனதென
வருத்தப்படுவதில்
அற்தமில்லை
வசந்த காலம்
 எந்த ஆண்டும் பிறக்காமல்
இருப்பதில்லை
தினம் தினம்
தவறாமல் பூக்கிறது
செடியில் ஒரு பூ!
ந.க.துறைவன்

*

Thursday, 6 August 2015

நினைப்பு...!!


*
யாருமென் பரந்த மனசைப்
புரிந்திடவில்லை யெனப்
பலரிடம் சொல்லிப் புலம்பியவன்
பூரணமாய் மற்றவர் மனசை
உணர்ந்து நடப்பதாய்
என்னவொரு
அதீதநினைப்பு.
*
 எதையோ பறிகொடுத்தவனாய்
எதற்காக இங்கே நிற்கிறாய் என
எனக்காகப் பரிவு காட்டியவர்க்குத்
தெரியவில்லை, பறிகொடுப்பதற்கு
என்னிடம் இன்னுமென்ன
மிச்சமிருக்கிறதென்று?

*

Wednesday, 5 August 2015

வண்டு...!!


*
1.
வண்டை என்னிடம்
ஒப்படைத்து விட்டுப்
போங்கள் என்று
காற்றைத் தடுத்து
நிறுத்தினாள் மலர்.
2.
வெட்கமில்லாமல்
ஓலைத் தடுப்பில்
எட்டிப் பார்க்கிறது
குறும்பு ஓணான்.
*


Monday, 3 August 2015

கைப்பிடித்து...!!


*
1.
எந்த மொழியில்
பேசுகிறான் என்று
தெரியவில்லை
சூரியன்.
2.
பார்வையற்றவரைக்
கைபிடித்து
அழைத்துப் போகிறான்
காற்று.

*

Sunday, 2 August 2015

ஆடிப் பெருக்கு....!!

அனைத்து முகநூல் நண்பர்களுக்கும் / நண்பிகளுக்கும்
ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்.
*
காவிரித் துள்ளிப் பாய்ந்து வரும்
கழனியெலாம் செழித்து வரும்
உணவு பொருள் விளைச்சல் தரும்
உழவுத் தொழில் நடந்து வரும்.
*
மங்களம் தேடி வரும்
மனசுப் பொங்கி வரும்
அகல்விளக்கு ஏற்றி விடு
அலைகளிலே படகு விடு.
*
ஆசைகள் சொல்லி விடு
ஆனந்தம் பகிர்ந்து விடு
ஆடிப் பெருக்கு நாளிலே
அன்னையிடம் வேண்டி விடு.
ந.க.துறைவன்.

*

Saturday, 1 August 2015

அயல் கவிதை ...!!


*
கலாமுக்கு அஞ்சலி.
*
அழகும் அமைதியும்
வளமும் செயல்திறனும்
உடையதாய் இந்தியத் திருநாடு
2020 – ஆம் ஆண்டில் வல்லரசாக
மெய்ப்படுவது உன்
தொலைநோக்கின் வெளிப்பாடு!
அறிவுச்சுடரே!
எண்திசையிலும் எங்கள் தீவிலும்
உன் இன்சுவைக் குரல்
ஒலித்த வண்ணமிருக்கிறது
கவின்மிகு பாரதத்தின்
குழந்தைகளையும்
இளைஞர்களையும்
வழிநடத்திச் சென்றவரே!
நீருள்ளளவும் நிலமுள்ளளவும்
காடுள்ளளவும் கவிதையுள்ளளவும்
வையம் உள்ளவரை
வாழும் உன் வான் புகழே!
தைவான் கவிஞர். யூஷி.
ஆதாரம் ; தி இந்து – 02-08-2015.
*

எதிரொலி...!! [ புதுக்கவிதை ]


*
மலையடிவாரத்து பசுமையான
வயல்வெளியிலிருந்துக்
கூப்பிட்டக் குரல் எதிரொலித்தது
எனது குரல் தானா என்று
யோசிக்கையில் அடுத்த நொடியே
எங்கிருந்தோ இன்னொரு குரல்
எதிரொலித்தது என் குரலை மீறி
அது யார் குரலாகயிருக்கும் என்று
நினைக்கையில் அவள் குரலாய்
இருக்குமோவென எதிர்ப்பார்ப்பு
வீண்போகவில்லை. அது
அவள் குரல் தானென்று மனம்
உறுதிப்படுத்த சில நொடிகள் கழிந்தன
என் குரல் கேட்டவளும் அப்படித்தான்
நினைத்திருப்பாளோ என்று தெரியவில்லை?
இருக்கும் வேலையை விட்டுவிட்டு
வருகிறாளா என்று கண்கள் மேய்ந்தன.
யாரோ தொலைவில் வருகிற மாதிரி
காலடிச்சத்தம் மெல்லக் கேட்கிறது
.அருகில் வந்த பிறகு தெரிந்தது
அவள் பக்கத்து வயலில்
வேலைப் பார்க்க வந்திருக்கும்
தினக் கூலிப் பெண்
பொன்னம்மாள் என்று.
யார்தான் எவர்தான் எப்பொழுது
ஏமாற்றுவார்கள் என்றில்லை
பலரையும் இப்படித்தான் போலியாக
எதிரொலித்து ஏமாற்றி விடுகிறது
நம்பியவர்களை எதிர்க்குரலொலி.
*