Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Monday 24 August 2015

குறுந்தொகை...!! [ நகைச்சுவை ]


*
ஒரு நாள் எ.தெ.ஏகாம்பரம் தெருவில் போய்க் கொண்டிருந்தார். வாலிபர்களும் சின்னப் பையன்களும் அவருக்கு வணக்கம் சொல்லிச் சிரித்தார்கள். பதிலுக்கு ஏகாம்பரம் வணக்கம் சொல்லி சிரித்தார். என்னாங்கடா, இன்னிக்கி வணக்கமெல்லாம் பலமாயிருக்கு. என்ன சங்கதி என்று கேட்டார். அவர்கள் மழுப்பலான பதில் சொன்னார்கள்.
“ இல்லெண்ணே ஒரு சந்தேகம்? “
“ எதைப்பத்திடா? ”
“ இந்த கவிதையெ படிச்சி படிச்சி பாத்தோம். புரியமாட்டேங்குது. அதான். ”
“ எங்க அதைக் கொடு. படிச்சிப் பார்க்கிறே ”
படிச்சிப் பார்த்த ஏகாம்பரம் கொஞ்சநேரம் மௌனமாக இருந்தார்.
அவருக்கும் புரியவில்லையோ என்னவோ? முகபாவமே மாறி விட்டது.
“ என்ன அண்ணே, விளங்கிச்சா? ” எங்களுக்கு விளக்கமா சொல்லிட்டுப் போங்க ” என்றார்கள்.
அவர்களுக்கு எப்படிப் பரிய வைத்துச் சமாளிப்பது என்று யோசித்தார்.
” டேய், இது குறுந்தொகைப் பாட்டாச்சே? ” சாய்ந்திரமா வாங்கடா முழுசா பதில் சொல்றேன் ” என்றார்.
அண்ணே, இன்னொரு தரம் நல்லா படிச்சிப் பார்த்து பதில் சொல்லுங்கண்ணே ” என்றார்கள் குறும்புக்காரர்கள்.
“ டேய், அண்ணனுக்கு தெரியலேடா ” என்று கில்லடித்தார்கள்.
“ மீண்டும் ஏகாம்பரம். இது குறுந்தொகைப் பாட்டே தான் ” என்று சொல்லிச் சமாளிக்கப் பார்த்தார்.
“ இதை எப்படி குறுந்தொகைப் பாட்டுன்னு சொல்றீற்கண்ணே ” என்றார்கள்.
“ நா எத்தனையோ கவிதைப் படிச்சிருக்கேன். இது குறுந்தொகையே தான்டா?
என்றார்.
இவனுங்க கிட்ட இன்னிக்கி வசமா மாட்டிக்கி்டடோமே என்று உள்ளுக்குள் பேசிக் கொண்டார் ஏகாம்பரம்.
“ சரி, இது குறு்ந்தொகை .இல்லெண்ணா, என்ன கவிதைடா ”
“ அண்ணே, ,இது குறுந்தொகையுமில்லே, பெருந்தொகையுமில்லே, இப்ப புது எழுத்தாளர்கள் எழுதுற நவீன கவிதை ” என்றார்கள்.
“ பழைய கவிதையோ, புதுக்கவிதையோ, நவீன கவிதையோ இப்பவெல்லாம் இப்படித்தான் எழுதுறாங்களா? என்று சொல்லிக் கொண்டே நெளிந்தவாறு அவர்களிடமிருந்து மெல்ல நழுவினார் ஏகாம்பரம்.
*

No comments:

Post a Comment