Labels

Haiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (20) கலை (1) கவிதை (332) கவிதை. (7) கவிதைகள். (7) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (2) குறுங்கவிதைகள் (12) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (55) ஹைபுன் (48)

Sunday, 31 January 2016

சிந்தனைத் துளிகள்...!!


*
இயற்கை செல்வங்கள் .இப்பூமியில் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் எதிர்நோக்கி மனம் துஞ்சாமல் துணிவோடு வாழ்கின்றன
*
நமது இந்திய சுதந்திரம் இன்னும் இறந்த மனிதர்களைப் பொது சுடுகாட்டிற்குக் கூட தூக்கிச் செல்ல அனுமதிக்கவில்லை.
*
வரி - உள்ளடக்கி வருகின்ற மாதம்..பிப்ர – வரி.  பிப்ரவரி வரும் முன்னே. பட்ஜெட் வரும் பின்னே. என்னென்ன வரிகள் எப்படி வருமென்று எதிர்ப்பார்ப்புகளோடு காத்திருப்பார்கள் வரிசெலுத்தும் மக்கள் பட்ஜெட் வெளியான பின்னர் விமர்சனங்கள் விண்ணோக்கிப் பறக்கும் பட் – ஜெட்.  *  

Saturday, 30 January 2016

தவளைகள் ( ஹைக்கூ )

Haiku – Tamil / English;
*
குளத்து நீரில் விளையாட்டு
தாமரை இலையின் கீழ்
கூட்டமாய் தவளைகள்.
*
Water tank in the game
Under the lotus leaf
Frogs mass.

*

Friday, 29 January 2016

கடிதல்...!! ( ஹைபுன் )


அவன் என்ன தவறு செய்துவிட்டான் என்று தெரியாது? உடனே உனக்கு மூளையிருக்கா? என்ன இப்படி செய்துவிட்டாய்? என்று கடிந்துக் கொள்கிறார்கள். அப்படியென்றால் மூளையின் செயல்பாடு குறைவு என்றுதானே அர்த்தம். அதன் செயல்பாட்டிற்குக் காரணம் சுரப்பிகளின் செயலின்மை முக்கிய காரணமாகத் திகழ்கின்றது. அதனால் தான் பலருக்கும் மூளைவளர்ச்சிக் குறைபாடுகள் ஏற்படக் காரணமென்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இம்மூளை வளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் மருத்துவ சிகிச்சைப் பெற்றும் / பெறாமலும் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களைப் பார்த்து திட்டுவதும் ஏளனமாகக் கேலி செய்வதும் ஏற்புடைய செயலாகுமா?
*
நினைவுகளிலிருந்து எழுகிறது
அவ்வப்பொழுது மறக்காமல்
மறக்க நினைத்தச் சம்பவங்கள்.*
*

Thursday, 28 January 2016

நினைப்பு..( ஹைக்கூ )

கைக் கூடி வந்த பின்
எதையோ செய்யத் தூண்டுகிறது
ஏதோவொரு அதீத நினைப்பு.
*
நினைவுகளிலிருந்து எழுகிறது
அவ்வப்பொழுது மறக்காமல்
மறக்க நினைத்தச் சம்பவம்.

*                                                           

Wednesday, 27 January 2016

அஸ்தி...!! ( கவிதை )


*
 அஸ்தியை
கடல் நீரில் உள்
அமுக்கியதும்
மேலெழுந்து
மிதந்து மிதந்து
முன்னும் பின்னும்
அலைகளில்
அலைகழிந்து
மெல்ல மெல்ல
கரையத் தொடங்கியது
அந்த
அஸ்தியின் வாசம்
பிடிக்காமலோ
என்னவோ
விலகி விலகி
ஓடின மீன்கள்!

*

Monday, 25 January 2016

குடியரசு தினம்...!! ( கட்டுரை )

குடியரசு தினம்….!!
*.
இந்திய குடியரசு தினம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். குடியரசு நமக்கு கற்றுக் கொடுத்ததென்ன? நாடு வளர்ச்சி பெற்றிருக்கிறதா? பெற்றிருக்கிறது. விஞ்ஞான முன்னேற்றம். உணவு, தொழில், பொருளாதார வளர்ச்சி பெற்றிருக்கிறோம். அரசியல் சாசனங்கள் நமக்கு வகுத்துக் கொடுத்த வழிமுறைகள் என்ன? இன்று அதன் செயல்பாட்டுத் தன்மைகள் என்ன? உலகநாடுகள் நம்மைப் பார்த்து வியக்கின்ற அளவிற்கு சாதனைகள் புரிந்து வருகின்றோம். ஆனால் மனவியல்ரீதியாகவும் பண்பாட்டு கலாச்சார ரீதியாகவும் மொழி இனம் சாதி வேறுபாடுகளால் இங்கு இன்னும் வளர்ச்சிப் பெறாமல் இருக்கின்ற தன்மைகள் நிலவுகின்றதே? இதற்கென்ன காரணம்? காரணங்கள் எல்லோருக்கும் தெரிந்தாலும் அரசியல் ராஜதந்திரச் சூழ்ச்சிகள் மக்களைப் பிளவுபடுத்தி வைத்து வேடிக்கைப் பார்க்கின்றன.. ஆதாயம் தேடும் சக்திகளால் அப்பொழுதுதான் தான் நினைத்த காரியத்தில் வெற்றி பெறமுடியும். வாக்குகள் மட்டுமே அவர்களின் வெற்றிக்களுக்கான வங்கி சேமிப்புகளாகும். மக்களின் உரிமைகள் கோரிக்கைகள் அவர்களின் உதாசீனமாகும். வசீகரமான வாக்குறுதிகள் கொடுத்து விட்டு நிறைவேற்றாமல் சாக்குபோக்குகள் சொல்கின்ற வாக்கு சாதுர்யம் படைத்தவர்கள். அரசுவரிப் பணத்தில் இலவசங்களைக் கொடுத்து இதயங்களைக் கவரும் இலட்சியவாதிகள் மக்களை சொர்க்கத்திற்கே கொண்டு சென்று வாழவைப்போம் என்று வாக்குறுதிகள் அள்ளிஅள்ளி வீசுகிறார்கள். இலவசங்கள் எத்தனைபேர் மனங்களில் வெறுப்பணர்வை வளர்த்து வருகின்றன என்பது அவர்களுக்குத் தெரியுமா?  இன்னும் சொல்ல நிறையவே இருக்கின்றன. மக்களாட்சி என்பது இப்பொழுது நடைபெறகிறதா? என்றே கேள்விகள்எழுகின்றன. கடந்த சில தினங்களில் சமூக எதிர்ப்பில் தங்களைச் கடராக்கிக் கொண்டு இளம்வயதில் தற்பொலைச் செய்துக்கொண்டகல்லூரி மாணவ / மாணவிகள் 1. ரோஹித் 2. பிரியங்கா 3. மோனிஷா 4. சரண்யா போன்று, மற்றுள்ள, எந்தவொரு குடிமக்களுக்கம் தக்கப் பாதுகாப்கமில்லை என்பதற்கு இச்சம்பவங்கள் சரியான உதாரணமாகவே திகழ்கின்றன.
மக்களாட்சி என்பது மாறி கட்சிகளின் தன்னாதிக்க ஆட்சியே நடைபெறகின்ற அவலநிலையினை இப்பொழுது காண்கின்றோம். வெளிநாட்டினர் இந்தியாவை வல்லரசு நாடாகப் பார்க்கிறார்கள். உள்நாட்டு மக்களோ நல்லரசு நாடாக காண ஆசைப்படுகிறார்கள். இந்திய மக்களின் கனவுகள் மெய்ப்பட வேண்டும். சாத்தியமாகுமா?     

*

Sunday, 24 January 2016

முல்லா கதை...!!


*
குள்ளன்…!!
*
ஒரு முறை முல்லா நசிருதீன் ஒரு சர்க்கஸ் கம்பனி நிர்வாகியைச் சந்தித்து வேலைக் கேட்டார்.
“ நான் ஒரு குள்ளன். என்னை உங்கள் சர்க்கஸில் வேலைக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ”
முல்லாவை அந்த நிர்வாகி மேலும் கீழும் பார்த்துவிட்டு எரிச்சலுடன் சொன்னார்.
“ என்ன நீ குள்ளனா?. ஆறடி இரண்டு அங்குலம் உயரம் இருப்பாய் போல் இருக்கிறது….”
“ ஆமாம், அதுதான் என் உயரம். ஆனால் இந்த உலகத்திலேயே மிகவும் உயரமான குள்ளன் நான்தான் ”.
ஆதாரம் : ஓஷோவின் “ பாதை சரியாக இருந்தால்…. ” – என்ற நூல் – பக்கம் – 224.
தகவல் ; ந.க.துறைவன்

Friday, 22 January 2016

அரட்டை...!! ( ஹைக்கூ )

Senryu – Tamil / English.
*
நெல்லிக்காய் விற்கும் பாட்டியிடம்
அரட்டை அடிப்பதில்                     
பள்ளி சிறுவர்களுக்கு சந்தோஷம்.
*
Gooseberry sells grandmother
Chat beatings
School of happy children.

*

Wednesday, 20 January 2016

உருவங்கள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / Eng;lish;.
*
உருவங்களை உருவாக்கி
பூங்காவை  அழகு  படுத்தினான்
புல்  செதுக்கும்  மனிதன்
*
Creating images
Park beauty made
Grass man carve.
*

தாகூரின் குறுங்கவிதைகள்...!!


*
ஜப்பானிய ஹைக்கூவின் பாதிப்பில் தாகூர் எழுதிய குறுங்கவிதைகள் அற்புதமான அனுபவத்தைத் தருகின்றன.
குளத்தைப் பார்த்து சொன்னது.
பனித் துளி
நான் இலைமீதிருக்கும் சிறுதுளி.
நீ தாமரை இலையின்
அடியில் இருக்கும்
பெரிய துளி.
*
கனியே
இன்னும்
எவ்வளவு தொலைவில் இருக்கிறாய்
என்றுது பூ.
உன் இதயத்தில் தான்                 
ஒளிந்திருக்கிறேன்…. பூவே
என்றது கனி.
*
ஆதாரம் : எஸ்.ராமகிருஷ்ணன் – வீடில்லாப் புத்தகங்கள் – தொடர் – தி இந்து ஜனவரி 8 2015.
தகவல் : ந.க.துறைவன்.

*

Tuesday, 19 January 2016

விண்வெளியில் பூத்தது முதல் மலர்...!!


*
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஜின்னியா பூவை மலர வைத்து, நாசா விஞ்ஞானிகள் சாதனைப் படைத்துள்ளனர்.
பல்வேறு நாடுகளின் கூட்டுப்பங்களிப்பில் விண்வெளியில், சர்வதேச நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஜின்னயா ரக செடியை நாசா விஞ்ஞானிகள் நட்டு வளர்த்தனர். தற்போது, விண்வெளியில், முதல் பூ மலர்த்துள்ளது. ஆரஞ்சு வண்ணத்தில் மலர்ந்துள்ள இந்த ஜின்னியா தான் பூமிக்கு அப்பால் மலர்ந்த முதல் மலராகும்.
இந்த மலரை அமெரிக்கா விண்வெளி வீரர் ஸ்காட்கெல்லி புகைப்படம் எடுத்து அதனை ட்விட்டரில் வெளியி்ட்டுள்ளார்.
மைக்ரோகராவிட்டி எனப்படும் நுண்ஈர்ப்பு விசையில் தாவரங்களும் மலர்களும் எப்படி வளர்கின்றன என்பதை விஞ்ஞானிகள் புரிந்து கொள்ள வாய்ப்பாக நாசா விஞ்ஞானிகள் இந்த மலர்ச்செடியை சர்வதேச விண்வெளி நிலையத்தில் வளர்த்துள்ளனர்.
இந்த மலரை மலரச் செய்ததன் மூலம் விண்வெளியில் அதிக தாவரங்கள் வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை ஏறபட்டுள்ளது. செவ்வாய் கிரகத்திலும் மனிதஇனம் வாழும் திறன்பெறும் என்பதையும் இது உணர்த்துகிறது. கெல்லி, ஸ்பேஸ்பிளவர் என்ற ஹேஷ்டேக்கில் தனது ட்விட்டரில் விண்வெளியில் மலரவைக்கப்பட்டபூவை பதிவு செய்துள்ளார்.
ஆதாரம்  தி இந்து – ஜனவரி 20 – 2016.
தகவல் : ந.க.துறைவன்.
*

Sunday, 17 January 2016

நீ எழுது...!! ( கவிதை )


*
உன்னிடம் பேசி அனுபவித்து
இரசித்துக் களித்தக்
கரும்பு வரிக் கவிதைகள்
எழுத நீ கிடைத்தாய்.
புத்தாண்டு புதிய டைரியில்..
புத்துணர்வுப் பூபாளக் கவிதைகள்
நான் எழுதுகிறேன்
நீ படி
உணர்வும் உள்ளமும் உறவாடும்
உணர்ச்சிமீகுக் காதலும் ஊடலும்
உற்சாகமாய் குறுங்கவிதைகளில்
நீ எழுது
நான் படிக்கிறேன்.
மனவெழுச்சிக்கு வழிக்காட்டட்டும் கவிதைகள்
வாழ்க்கைக்கு வழிக் காட்டட்டும் காதல்.

*

Saturday, 16 January 2016

பெயர்கள்...!!

துரியோதனன்
துச்சாதனன்
இப்பெயர்களை
எந்தப் பெற்றோரும்
தன் குழந்தைகளுக்குச்
சூட்ட விரும்புவதில்லை
ஏனெனில்
இப்பெயர்கள்
இஷ்டப்பெயர்கள் அல்ல
துஷ்டப்பெயர்கள்.

*

Friday, 15 January 2016

ஆன்மீக சிந்தனை....!!


நல்லவர்களுக்கு கஷ்டங்கள் ஏற்படுவது அவர்களுடைய நன்மைக்குத்தான். அவர்களுக்கு வேகமான முன்னேற்றத்தைத் தருவதற்காகத்தான். அவர்களுக்கு இந்தக் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தி இருக்கிறது.  இக்கஷ்டங்களை எதிர்கொண்டு முன்னேறி, தீயில் புடமிட்ட பொன்போல சுத்தத் தங்கமாக அவர்கள் ஆக வேண்டும் என்பதற்காகவே இறைவன் அவர்களுக்கு கஷ்டடங்களைத் தருகிறான்.

ஸ்ரீ அரவிந்த அன்னை.

அனுபவம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English;.
*
அலைந்து தேடுவதல்ல
உள்உணர்ந்து அறிவதே
அனுபவம்.
Wandering tetuvatalla
Reformulated ulunarntu
Experience.

*

Thursday, 14 January 2016

வசீகரம்...!! ( கவிதை )


*
எல்லோரிடமும் உண்டு தனித்துவம்
அதுவே அவரவர் மனத்துவம்
*
பிடிவாதம் என்பது அகம்பாவம்
விட்டுக் கொடுப்பது தனிசுபாவம்
*
வெளிமனம் வசீகரம்
உள்மனம் வக்கிரம்.
*
வாக்கு கொடுப்பது எளிது
வாக்கு காப்பாற்றுவது கடினம்.
*
எதிர்ப்பிலேயே வாழ்பவனுக்கு
எதிரிகளின் செயல்கள் தூசு.              

*

நல்வாழ்த்துக்கள்...!!

சூரியனின் சுகப் பயணத்தால் உலகமெலாம் சுகம் பெறட்டும்.
மகரசங்கராந்தி பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Wednesday, 13 January 2016

சிவலிங்கம்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 59.
யார் கண்டுகளிக்கவோ?
பனிக்காலை வனவெளியில்
தோகை விரித்தாடுகிறது மயில்
*
மார்கழி – 60.
பார்த்துக் களித்திருக்கேன்
நாகலிங்கப் பூவிற்குள்
அரூபச் சிவலிங்கம்.
*


செங்கரும்பு...!! ( ஹைக்கூ )

மார்கழி – 57.
மலையை மறைத்தது மூடுபனி
தத்துவ அறிவால்
மனதை மறைத்தது மாயை.
*
மார்கழி – 58.
ஆண்மையின் குறியீடாய்
அமோகமாய் விளைந்திருக்கு
மன்மதன் வில் செங்கரும்பு 

*

Tuesday, 12 January 2016

அணில்பிள்ளைகள்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 55
ஈரத் தென்னம் மட்டையில்
மார்கழி பனியில் விளையாடும்
அழகான அணில்பிள்ளைகள்.
*
மார்கழி – 56.
வீட்டிற்குள் போட்டாள் அம்மா
பூசைக்குச் சாம்பிராணிப்புகை
வெளியெங்கும் பனிப்புகை.

*

சூரியகாந்திப்பூக்கள்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 53.
நிலமெல்லாம் மஞ்சள் வண்ணம்
பனியில் நடுங்கின சூரியகாந்திப்பூக்கள்
சூரியனைப் பார்த்ததும் புன்சிரிப்பு.
*
மார்கழி – 54.
அச்சமா வெட்கமா பயமா?
உருகி மறைகின்றன
சூரியனைக் கண்ட பனித்துளிகள்.
*

பொன்வண்டுகள்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 51.
அங்குமிங்கும் பனிக்குளிரில் பறந்து
போக்கு காட்டுகிறது துணைதேடி
பொல்லாதப் பொன்வண்டுகள்.
*
மார்கழி – 52
எங்கு போக அவசரமோ?
உடல் முழுக்க ஈரம்
பனியில் நனைந்தப் பறவைகள்.

*

Friday, 8 January 2016

சிலையழகு...!! ( ஹைக்கூ )

மார்கழி – 47.
தொப்பை விநாயகரைச் சுமந்து
பனியில் நனைந்து போகிறது
சிரித்துக் கொண்டே சுண்டெலி.
*
மார்கழி – 48.
வீபூதி குங்குமம் பனியில் கரைந்து
அசுத்தமாக்கி விட்டன
கல்தூண்களின் சிலையழகு.
*

கோபியர்கள்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 45
குழலூதி மயக்குவான் கண்ணன்
விளையாடி மகிழும் 
அரூபப் பெண் கோபியர்கள்                       
*
மார்கழி – 46.
இன்ப ஊற்றின் மணற்கேணி
இயற்கையின் உயிர்துளியோ?
பனித்துளி நாதவிந்து

*

Wednesday, 6 January 2016

கருணை...!! ( ஹைக்கூ )

மார்கழி – 43
மலைப்பாதைச் சுற்றும் பக்தர்கள்
வேடிக்கைப் பார்க்கின்றது
மார்கழி பௌர்ணமி நிலா.
*                                          
மார்கழி – 44.
கன்னியர்கள் பிரார்த்தனைக்கு
கருணை செய்வாளா?
கல்யாணக் காமாட்சி.

*

Tuesday, 5 January 2016

கருவண்டு...!! ( ஹைக்கூ )

மார்கழி – 41.
*
காஞ்சியில் ஆட்சி புரிபவளே
காமாட்சி உன் கையில்
செங்கரும்பு செங்கோலே பேரழகு.
*
மார்கழி – 42.
*
காமனை எரித்தான் சிவன்
சாந்தம் அடைந்தாயோ?
கருவண்டு விழியாளே காமாட்சி.

*

Monday, 4 January 2016

கிளியழகு...!! ( ஹைக்கூ )

மார்கழி -39.
*
எதற்காக வெட்டவெளி பாதையில்
பனியில் நின்றிருக்கிறாய்?
சளி பிடிக்கப் போகிறது ஆஞ்சநேயா!!
*
மார்கழி  40.
*
சொக்கனுக்கு மணவாட்டி
சொக்க வைக்குதடி மீனாட்சி
உன் தோளில் கிளியழகு.
ந.க.துறைவன்.

*

Sunday, 3 January 2016

அழகின் உறவு....!! ( ஹைபுன் )


*
அழகின் உறவு…!!
*
இலையுதிர்காலத்தில் மரங்களிலிருந்து பசுமையான பொன்னிறமான இலைகள் அழகிய வண்ணங்களில் வாழ்வை அனுபவித்து விட்டு உதிர்ந்துவிடுவது எவ்வளவு அழகானது. அவ் வசந்தக்காலப் பூக்களின் நறுமணம் காற்றில் கலந்து எத்தனை ரம்மியமான சூழலை உருவாக்கி விடுகிறது? கீழே உதிரும் இலைகள் காற்றில் உருண்டு உருண்டு செல்வதைப் பார்க்கப் பார்க்க எத்தனை ஆசைக் கொள்கிறது மனம்?. பூக்கள் காய்கள் புழு பூச்சி எறும்புகளுக்கு நித்தம்  சுவையான இலவச உணவாகின்றன. பறவையினங்கள் இயற்கையின் எழில்கொஞ்சும் அழகின் உறவில் வாழ்நாளை இனிமையாக  வாழ்ந்து மகிழ்ந்து கழிக்கின்றன.
*
இயற்கைச் சூழல் கேடு
மனிதன் இழைக்கும் கொடுமை
எதிர்கொள்கின்றன பறவைகள்..

*

பூமாலைகள்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 37.
*
எந்த ஆண்டவனை, ஆசாமிகளை
அலங்கரிப்போமென்று பனியில்
ஈரமாய் தொங்கும் பூமாலைகள்.
*

மார்கழி – 38.
*
பனிக்குளிரில் எரியும் நெய்விளக்கு
நோ்த்தி கடன் செய்வார்கள்
கல்யாணம் வரம்கேட்டு கன்னியர்கள்.

*               

Saturday, 2 January 2016

பூசணிப்பூ...!! ( ஹைக்கூ )

மார்கழி – 35
*
பூ காய்கறி வாழையென
சுமந்து நகர்வந்த தாய்மாரின்
உழைப்பை உணர்வாயோ கோவிந்தா!!
*
மார்கழி – 36
*
உள்வீட்டில் உட்பூசல்கள்
வெளிப்புறத்துக் கொல்லையிலே
மங்கலமாய் பூத்திருக்குப் பூசணிப்பூ.

*

Friday, 1 January 2016

பசு...!! ( ஹைக்கூ )

*
மார்கழி – 33
*
அசைப்போட்டு நின்றிருக்கும் பசு
கன்று பின் துள்ளி நிற்கும்
மடிபிடித்து கறப்பான் பால்காரன்.
*
மார்கழி – 34.
*                                                
ஈர வைக்கோல்கள்
தவிட்டு நீருண்டு
பசிதீர்க்கும் ஆவினங்கள்.

*

டைரி...!! ( கவிதை )


*
உன்னைப் பார்த்த நாளிலிருந்து
டைரி எழுதுவதை நிறுத்தி விட்டேன்
என் நினைவுகளையெல்லாம்
உன்னுள் பதிவாகி விடுகிறதே…
நான் கேட்காமலே
ஒவ்வொரு நிகழ்வையும்
நீயே
நினைவுபடுத்தி
சொல்லி விடுகிறாய்
பிறகெதற்காக
எழுத வேண்டும்  டைரி
என்றும் நீதானே
என் சிவசக்தி மெமரி…!!