Labels

Haiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (20) கலை (1) கவிதை (332) கவிதை. (7) கவிதைகள். (7) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (2) குறுங்கவிதைகள் (12) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (55) ஹைபுன் (48)

Monday, 31 March 2014

"முட்டாள்கள் தினம்" {சென்ரியு }


*
முட்டாள்கள் தினம்
கொண்டாடி மகிழ்ந்தன
நன்றியுடன் நரிகள்.
*
பிரியாணி சமைப்பதற்கு
பறவைகளைச் சுட்டார்கள்
ஆட்டங் காட்டியது காக்கைகள்.
*
கூட்டம் கூட்டமோ கூட்டம்
ஒரு நைட்டி வாங்கினால்
இன்னொரு நைட்டி இலவசம்.
*
சேமித்தப் பணத்திற்குச்
செய்கூலி சேதாரம் இல்லாமல்
வாங்கினார்கள் நகைகள்.
*
கோடிக் கணக்கில் சுருட்டிக் கொண்டு
தலைமறைவாகி விட்டார்கள்
முதலீட்டாளர்கள் கவலை வேதனை.
 

" முட்டாள்கள் தினம் " நல்வாழ்த்துக்கள்

இணைய உறவுகள் அனைவருக்கும்
இனிய  “முட்டாள்கள் தின” நல்வாழ்த்துக்கள்
*
மனிதப் பிறவியில் எவரும்
அறிவாளிகள்,முட்டாள்கள் என்று
எவரும் இல்லை. எல்லாமே
சுரப்பிகளின் விளையாட்டுக்கள்.
அவர்களை முட்டாள்கள் என்று
எந்த முட்டாள்கள் சொன்னது?
முட்டாள்கள் முட்டாள்களாகவே
இருப்பார்களா என்ன?
முட்டாள்கள் முட்டாள்களாகவே
இருப்பதில்லை என்றும்
முட்டாள்கள் என்பவர்கள்
அறிவாளிகள் இல்லையா?
அறிவாளிகள் முட்டாள்களாக
இருப்பதில்லையா?
ஏதேனு மொரு கருத்தை
உள்வாங்கிக் கொண்டு
அறிவாளிகளைக் கூட
முட்டாள்களாக்கி விடுகிறார்கள்
முட்டாள்கள்.
முட்டாள்கள் தினத்தை
உலகிற்கு அறிமுகப் படுத்தி
முட்டாள்களைப் பெருமைப் படுத்திய
முட்டாள் அறிஞரைப் போற்றுவோம்…!!


Sunday, 30 March 2014

மூடுபனி...!

சத்தியம்,சிவம், சுந்தரம்
நெற்றியில் மூன்று
ஹைக்கூ வரிகள்.
*
*
கடுமையான வெயில்
புங்க மரத்தின் நிழலில்
 ஓய்வெடுக்கும் பசு.
*
ஜன்னலைத் திறந்தேன.
வெளியில் எதுவும் தெரியவில்லை
புகையாய் மூடுபனி.
*
கர்மா தீருமென
காசிக்குப் போய் வந்தார்கள்
மீண்டும் பின் தொடர்ந்தது கர்மா.
*
அழகாக இருந்தது
குழந்தையின் புன்சிரிப்பு
ஈ….ஈ…ஈ….!
*
பெண்களுக்குள் வாய்ச் சண்டை
வேடிக்கைப் பார்க்கும் பாதசாரிகள்
விலக்கியது திடீரென மழைத் தூறல்கள்.யுகாதி நல்வாழ்த்துக்கள்

*
யுகாதி நல்வாழ்த்துக்கள்
*
இணைய உறவுகள்  அனைவருக்கும்
இனிய தெலுங்குப் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்.
*
அருளுரை:
“ ஆன்மீகம் என்பது அறிவற்கான ஒரு கேள்வியல்ல.
அது வாழப்பட வேண்டிய ஒன்று. ஆன்மீகம் என்பது
வாழ்க்கை. நீ அதை வாழ்ந்தால் தவிர, அது என்ன
என்று எதுவும் உனக்கு தெரியாது”.
                        --ஓஷோ.      
-ஆதாரம்:  “ரகசியமாய் ஒரு ரகசியம்” என்ற நூல்
*           பக்கம்-225.
  


Friday, 28 March 2014

குழந்தைகள் பார்லிமெண்ட்...{சென்ரியு}

*
திறந்துப் பார்த்தார் ஊழியர்
காலியாக இருந்தது
தபால் பெட்டி.
*
உள்ளங்கை அரித்தது
பணம் எதிர்ப் பார்த்தேன்
வந்து நி்ன்றான் கடன்காரன்.
*
கலாட்டா வெளிநடப்பு கிடையாது
ஆரோக்கியமான விவாதம்
குழந்தைகள் பார்லிமெண்ட்.

மொட்டை மரங்களாய்
பாதை யெங்கும்
மெட்ரோ ரயில் தூண்கள்.

*

தேர்தல் கவிதைகள்

*
தலைவர் முகத்தில் சிரிப்பு்
தொண்டர்கள் முகத்தில் சோகம்
கோஷ்டிப் பூசலில் பிளவு.
*
நேர்மையானத் தொண்டர்
கட்சித் தாவினார்
கிடைத்ததுப் பொற்கிழி விருது.
*
அரசியல் தலைவர்கள்
ஆதரவுக் கேட்டு
மதுரையில் கிரிவலம்.
*
ஆதரவின்றித் தவிக்கிறது
ஆதரவாக இருக்க வேண்டிய
ஆதார் அடையாள அட்டை.  
*
கைக் கொடுத்தவர்கள்
கையை விலக்கிக் கொண்டு
நம்பிக்கையை இழந்தது கை.
*
வரவேற்கப் பட்டார்கள்
மணக்கிறது மாற்றான்
தோட்டத்து மல்லிகைகள்.
மரியாதை { புதுக்கவிதை }


*
மரியாதைத் தெரிந்தவர்கள்
மரியாதையோடு
நடந்துக் கொள்கிறார்கள்
மரியாதைத் தெரியாதவர்கள்
மமதையோடு கர்வமாக இறுமாந்து
இருக்கிறார்கள் எப்பொழுதும்,
மரியாதை கௌரவத்தைக்
கொடுக்கும், மரியாதை யின்மை
அவமானத்தைக் கொடுக்கும்.
நேர்மறையாய் நடக்கும் எவரும்
மரியாதையை எதிர்நோக்கி
வாழ்வதில்லை. இங்கு என்னை
எவரும் மரியாதையாக நடத்துவதில்லை
என்று தேவையின்றி புலம்புகிறார்கள்
பலரும்,
மமதையோ மரியாதை யின்மைக்கு
எதிரி.
மனிதாபமானமோ
மரியாதைக்குரிய பண்பு… நட்பு…!!
*
கவிஞர்களே…!
இக்கவிதையை இன்னும் எப்படி 
எழுதலாம் என்று உங்கள் கற்பனை
வளத்தைக் காட்டி நீங்களும் கவிதை
எழுதுங்களேன்..!


தனிமை {புதுக்கவிதை}


*
தனிமையிலிருந்து
தனிமையை உணர்ந்து
அமைதி பெறலா மென்று
தனிமையிலிருந்தேன்
தனிமையிலிருக்கும்
என்னைப் பார்த்து
நக்கலாய்ச் சிரித்தது
சுவரிலிருந்தப் பல்லி.

*

Thursday, 27 March 2014

வசைத் திட்டு...

ந.க.துறைவன் லிமரைக்கூ கவிதைகள்
*
உடம்பில் இனம் புரியாத அயற்சி
நீங்க கொஞ்ச நேரம்
கண்களுக்குக் கொடுத்தான் பயிற்சி
*
இரவுக் கொசுத்தொல்லை மின்வெட்டு
பகலில் வாகன நெரிசல் நச்சுப் புகை
அவ்வப்போது மனைவியின் வசைத் திட்டு. .
*

அவன்...!!

அவன்…!!
*
அவன் எப்படிப்பட்ட
மனம் படைத்தவ னென்று
குயிலிடம் கேட்டார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்ட
குணவா னென்று
குருவியிடம் கேட்டார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்ட                                    
இயல்புடையவ னென்று
வண்ணத்துப் பூச்சியிடம் கேட்டார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்ட
செயல்பாடுகள் நிறைந்தவன் என்று
காக்கையிடம் கேட்டார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்டப்
பேச்சாளன் என்று கிளிகளிடம்
கேட்டார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை
*
அவன் எப்படிப்பட்ட
இல்லறத்தான் என்று
அவன் வீட்டின்
பல்லியிடம் கேட்டார்கள்ர                              
அதற்குச் சொல்லத் தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்ட
விசுவாசமுள்ளவன் என்று
அவன் வீட்டில் வளரும்
நாயிடம் விசாரித்தார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை
*
அவன் எப்படிப்பட்டவன் என்று
ஒரு மனிதனிடம் கேட்டார்கள்
அவன் படபட வென்று
தப்பும் தவறுமாய்
அவனைப் பற்றின
உண்மையைப்  புராணத்தைத்
தைரியமாய் சில நொடிகளில்
புட்டுப் புட்டு வைத்தான்.
*


Tuesday, 25 March 2014

மனம் உருக...!!

*
இலையுதிர் காலம்
பொன்னிற இலைகள் உதிர்த்து
சித்திரையை வரவேற்றன.
*
எதை அறிந்து மெய்யுணர்வு
அனுபவம் பெற்று ஞானியானார்
பலருக்கும் சந்தேகம்.
*
கண்ணாடிப் பேழைக்குள் இறந்தவர்
அருகில் பாடினார் மனம் உருக

ஒதுவார் திருவாசகம்.

அய்யனாரு...!!


*
அய்யனாரு உருவம் பாரு
கண்களிலே கோபம் பாரு
கருத்த மீசை அழகைப் பாரு
பெரிய வாளைக் கையில் பாரு.
*
குதிரையிலே அய்யனாரு
குந்தியிருக்கும் ஜோரைப் பாரு
பக்கத்திலே துணையைப் பாரு
பத்தினிப் பெண் தாயைப் பாரு.
*
சுட்டெரிக்கும் வெயில் பாரு
வெட்ட வெளியின் தகிப்பைப் பாரு
வேப்ப மர நிழலைப் பாரு
வெப்பந் தணியும் உணர்ந்துப் பாரு.
*
குழந்தைகளின் ஆட்டம் பாரு
வாலிபர்கள் சேட்டைப் பாரு
கன்னிப் பெண்கள் கண்ணைப் பாரு
ஆண்களின் அரட்டைப் பாரு.
*
கிழவிகளின் பக்திப் பாரு
முதியவர்களின் குசும்பைப் பாரு.
பலியாடு முழிப்பைப் பாரு
பூசாரியின் சிரிப்பைப் பாரு.
*
பொங்கப் பானைப் பொங்குதுப் பாரு
பொண்ணுங்க முகத்தில் சிரிப்பைப் பாரு
வாழையிலைப் படையல் பாரு
மாவிளக்கு வரிசைப் பாரு.
*
கற்பூர ஆரத்திப் பாரு
கன்னத்திலே போட்டுப் பாரு
குல தெய்வத்தை வணங்கிப் பாரு
வரம் கொடுப்பாள் நாளும் பாரு.


Monday, 24 March 2014

மௌனக் கண்ணீர்

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
*
வேதனைத் தாங்க முடியாமல்
வெடித்து வெளியேறுகின்றன
அவளது மௌனக் கண்ணீர்
*
மாப்பிள்ளை பெண்ணுக்கும் போட்டி
விட்டுக் கொடுத்து யார் எடுப்பது?
குடத்திற் குள்ளிருக்கும் மோதிரம்.
*                              
வலியில் துடித்தான்
தடவினார்கள் சுண்ணாம்பு
தேள் கொட்டிய இடத்தில்.

*

மாயா ஜாலம் { புதுக் கவிதை}


*
வெளியிலிருந்துப்
பார்த்தேன்
உள்ளிருப்பது
எதுவும் தெரியவில்லை
உள்ளிலிருந்துப்
பார்த்தேன்
வெளியிலிருப்ப தெல்லாம்
நன்குத் தெரிந்ததுக்
எல்லாம், அந்தக்
கண்ணாடிக் காட்டும்
மாயா ஜாலம்.   


தென்னம் பூவே...{கஜல்} கவிதை.


*
உயரமாக வளர்ந்திருக்கும்
தென்னம் பூவே
உனைத் தழுவிக் கொண்டு
ரசிக்கிறேனே கீழே நின்னு
*.
கூட்டத்திலே நீயொருத்தி
அழகுடியோ எந்தன் கண்ணே
உனைத் தொடுவதற்கு வெட்கமா
இருக்குதடி தென்னம் பெண்ணே
*.
சிரிக்கும் போது வெடிக்குதடி
தென்னம் பாளை- அந்த
சிரிப்பினிலே சொக்கி போயி
நிக்கிறேனே இந்தக் காளை.
*
காற்றினிலே ஆடியாடி ஓய்யாரமா
அலையுதடிப் பச்சைச் ஓலை
எனக்கு வெஞ் சாமரமாய்
விசுறுதடி விடியற் காலை.
*
யாரும் பார்க்கக் கூடா தென்றா?
சின்னச் சின்ன மஞ்சள் பூவே
மறைந்து நீயோ அழகாகப்
பூத்திருக்கிறாய் தென்னம் பூவே
*.
உதிர்ந்து வந்து விழுந்து விடு
என் இதயத்தின் மேலே
உனை நெஞ்சில் அணைச்சி
கொஞ்சிடுவேன் தென்னம் பூவே
*.
குலை குலையாய் தொங்குதடி
இளநீர்க் காய்கள்
உன் மேலே விழுந்துப் புரண்டுத்
திரியுதடி சின்னச் சின்ன அணில்கள்
*
உனை வெட்டும் போது
துடிக்கும் எனது இதயத்தைப் பாரு
உதட்டில் வைச்சிக் குடிக்கும் போது
நெஞ்சுக்குள்ளே இறங்குதடி இளநீரு
*.
இளநீரு கொடுத்து எம் மனசை
இளக வைத்தாயே  - எப்போ
என் காதல் வேகத் தாகத்தையே
தணிய வைக்கப் போ.கிறாய்?
*
இந்தத் தோப்புக் குள்ளே விளையாடி
கொஞ்சி மகிழ்ந்திடு வோமா?
அந்த நிலவைத் தூரப் போகச் சொல்லி
ஆணை யிடுவோமா?  
*
3

Saturday, 22 March 2014

தேர் {ஆறு}தல் } சென்ரியு கவிதைகள்

இப்பொழுது எங்கே இருக்கிறது
தமிழ்,தமிழர் பண்பாடு,தமிழர் கொள்கை
வளர்த்தத் திராவிடம்.
*
பரபரப்பான பிரவேசம்
விரித்த வலையில் வீழ்கிறது
ஊழலை எதிர்த்தக் கட்சி.
*
பேசாமல் இருந்து சாதனைப் புரிந்தப்
பாராளமன்ற உறுப்பினருக்கு
பாராட்டுக் கேடயம் பரிசளிப்பு.
*
கட்சியிலிருந்து நீக்கப் பட்டவர்
பத்து நாளில் துவங்கினார்
புதிய கட்சி..
*
கூட்டணி விருந்தில்
பரிமாறப் பட்டது
சுவையான மாங்கனி.
*தேன்{ கஜல் } துளிகள்.{சென்ரியு}


*
முத்தமிட்டால் இனிக்கும்
உன் கன்னம் தேனடை.
கண் விழிகளிலே பார்க்கிறேன்
கண்ணீரின் சிற்றோடை.
*
ஏனிந்தக் கண்ணீர் குயிலே
ஏக்கத்தின் காரணம் சொல்
தீர்வுக்காண வழி காண்பேன் மயிலே
என்னையே அடைவாய் புகல். .Friday, 21 March 2014

ந.க.துறைவன் {ஹைபுன்} கவிதை

*
கிராமத்தில் உறவினர் ஒருவரின் சாவிற்கு செல்ல
நேர்ந்தது. அங்குப் போய்ச் சேர்ந்தவுடன், அங்குள்ள
பெண் உறவினர்கள் எங்களைப் பார்த்தவுடன் எழுந்து
வந்துக் கட்டியணைத்து அழுதார்கள். வாங்கி வந்த
பூமாலையை கண்ணாடியின் மேல் வைத்து அஞ்சலி
செய்துக் கொஞ்ச நேரம் நின்றேன். அருகில் வந்து
நின்ற மற்றொரு உறவினர், என்னை அழைத்துச்
சென்று நாற்காலியில் உட்கார வைத்து விட்டு
நடந்துக் கொண்டிருந்தக் காரியங்களைப் பற்றி
விவரித்தார். பாடைக் கட்டும் வேலைகள் வேகமாக
நடந்தேறிக் கொண்டிருந்தன.
*
அழுதவர்கள் ஒய்வெடுத்தனர்
புதியதாக வந்தவர்கள் அழுதார்கள்
கண்ணீரில் குளித்தன கண்கள்.

தேர்{ஆறு}தல்} கவிதைகள்{சென்ரியு}


*
வெற்றி பெறுவதற்கு
யாகம் செய்கிறார்கள்
வேட்பாளர்கள்
*
சுறுசுறுப்பாகச் சுற்றிய
சுயமரியாதைப் பம்பரம்
தாமரையிடம் தஞ்சம்.
*
வாரிசுகள் வருகை
வரவேற்கிறதா? வெறுக்கிறதா?
வருங்கால அரசியல்.
*
கையெடுத்து கும்பிடுகிறார்கள்
காலில் விழுந்து எழுகிறார்கள்
ஐந்தாண்டுகளுக் கொரு முறை.
*
 எதிர்ப்பு, குழப்பம், மௌனம்
மூத்தத் தலைவர்கள் தத்தளிக்கிறார்கள்

தாமரை இலைத் தண்ணீராய்… 

இன்று அதிகம்….!! {புதுக்கவிதை}


*
நம்பிக்கை,அவநம்பிக்கை என்பது
அவரவர்களின் மனநிலைத்
தீர்மானக்கும் செயல்
ஒருத்தரை எப்படி நம்புவது
என்றொரு சந்தேகம் மனதில்
எழுகிறது அனைவருக்கும்.
நம்பிக்கையாளன் என்று
நம்புவதற்கு ஏதேனும்
அளவுக் கோல் உண்டோ? உண்டு.
நம்பிக்கையானவர் என்று
நம்புவதற்கு நம்பிக்கையான
ஒருவர் உறுதியளித்தால்
நம்பி்க்கையாளன் என்று
நம்புகிறார்கள் சந்தேகத்தோடு,
எப்பொழுதும், யாரையும் எடுத்த
எடுப்பிலேயே நம்புவதில்லை.
நம்பிக்கையான மனிதர்களைப்
பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது
.இன்று.
சொல்லும் செயலும்
நம்பிக்கைக் குரியதாக இருந்தாலும்
ஏனோ, அவர்களின் மீது
நம்பிக்கை வருவதில்லை சட்டென
நம்பிக்கையோடு நம்புவர்கள்
கொஞ்சம் பேர் தான்.
நம்பிக்கையோடு ஏமாறுபவர்கள் தான்
அதிகம் இன்று…!!Thursday, 20 March 2014

நன்கொடை.{கஜல்}

ந.க.துறைவன் கஜல் கவிதைகள்
*
நன்கொடை.{கஜல்}

நான் கேட்டக் கேள்விக்குப்
பதில் சொல்ல உனக் கென்ன தடை
என் மனம் தவிக்கிறது தினம் தினம்
யோசித்துச் சொல் நல்லதொரு விடை.
*
உன் அழகு பிடிச்சிருக்கு செந்தாமரையே
என்னிடமே உன்னை ஒப்படை
நீ பதில் சொன்னதுமே தந்திடுவேன்
என்னையே உனக்கு நன்கொடை.
*
தேர்{ஆறு}தல்} சென்ரியு கவிதைகள்


*
யாருக்கு ஓட்டளிப்ப தென்று
இலவசம் பெற்றுக் கொண்டவர்கள்
இருதலைக் கொள்ளியாய் தவிப்பு.
*
கூட்டணியிலிந்தவர்கள் விலகினார்கள்
விலகியவர்கள் கூட்டணியில் சேர்ந்தார்கள்
உருவானது கூட்டணித் தத்துவம்.
*
விவாதத்தில் பங்கு கொள்ளாத
பாராளமன்ற உறுப்பினர்
ரசித்துக் கொண்டிருந்தார் ஆபாசபடம்.

*
பரபரப்பாகப் போனார் காரில்
பிரியாணிச் சாப்பிட
மாணவி பலி.
*
தனித்துப் போட்டி என்று
அறிக்கை விட்டார்கள்
தவித்துப் போனார்கள் தொண்டர்கள்.
*
தேர்தல் பேச்சு
தேனாய் இனித்தது
கசக்கிறது பொய் வாக்குறுதிகள்.