Labels

Haiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (20) கலை (1) கவிதை (332) கவிதை. (7) கவிதைகள். (7) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (2) குறுங்கவிதைகள் (12) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (55) ஹைபுன் (48)

Wednesday, 30 September 2015

பறக்க ஒரு சிறகு கொடு...!!


*
1.
உன் தலையில்
சூடிய
மல்லிகையிலிருந்து
ஒன்றிரண்டு கீழே விழுகிறது
நான் ஓடி வந்து
எடுத்துவிடவில்லை.
மண் இன்று
அதிஷ்டம் செய்திருப்பதாய்
நினைத்துக் கொண்டேன்!.
*
2.
அதெப்படியோ
நான் விரைவாக வந்தால்
நீயும் விரைவாக வருகிறாய்.
தாமதமாக வந்தால்
நீயும் தாமதமாக வருகிறாய்
மனத்திற்கு மட்டுமே
நம்மை சரியாகத்
தெரிகிறது பொல!!
*
3.
நான் பெரிய பெரியதாய்
நிறைய பேசுகிறேன்,
நீ சின்னதாய்
ஒரு பார்வை மட்டும்
பார்க்கிறாய்.
எப்படியோ நீ பேசினாய்
என்பதில்
உயிர்த்துப் பேனேன் நான்!
ஆதாரம் ;- பறக்க ஒரு சிறகு கொடு - கவிஞர். வித்யாசாகர் – நூல்.

நினைவுகள்....!! [ ஹைக்கூ]

Haiku – Tamil / English.
*
இப்பொழுதும் எத்தனையோ நிகழ்வுகள்?
கடந்த கால நினைவில் மனம்
மலையை கடக்கிறது பறவை.
*
Many events now?
Remember the last time in the mind
Bird mountain passes. 

N.G.Thuraivan.

Monday, 28 September 2015

சேமிப்பு

மனக் கணினியில் மறவாமல்
சேமிப்பில் இருப்பது அவள்
என்றோ உதிர்த்த புன்னகை.


Saturday, 26 September 2015

மலைப்பு...!! [ கவிதை ]

மலைப்பு…!!
*
துணைக்கு வந்தவள் தொணதொணப்பு
தாங்கமுடியாதவள் முகம் சிடுசிடுப்பு.
*
பேசிக் கொண்டிருந்தவள் திரும்பி பார்த்தாள்
நின்றிருந்தவன் கையசைத்து கூப்பிட்டான்.
*

விலை கேட்டவர் திகைத்தார்
வாங்கியவர் மகிழ்ந்தார்.
*
எதிரே வந்தது பிணஊர்வலம்
அச்சத்தில் ஒதுங்கின வாகனங்கள்.
*
மலையைப் பார்த்து மலைத்தேன்
கீழே விரித்தப் பாய்களாய் வயல்கள்

*

விழிகள்...!!


1.
பேரூந்தில் நான்
என் கையில்
கவிதைப் புத்தகம்
முன்னால் அவள்
ஒரே நேரத்தில்
இருகவிதைகளை
எப்படிப் வாசிப்பது?
*
2.
என் கண்களின்
இமைகளுக்குள்ளே
ஒரே சுமை
அவளைப் பார்த்து பார்த்து
தேக்கி வைத்த காதல்…!!
*
3.
தண்ணீர்காணா
கானகத்து
நச்சூன்றிக்காய்
எட்டும் வரை ஆனந்தம்
எட்டியபின் நிசப்தம்…!!
நூல் :இ , தோர் கன்னிப்பெண் விழி – கௌதம்கிருஷ்ணன். – சேலம்.

*

Friday, 25 September 2015

துளிகள்...!! [ ஹைக்கூ ]

*
கருநிற மேகங்கள்
துளி துளியாக  பெய்தது
விந்து மழைத்துளிகள்.
*
Dark clouds
Season, drop by drop
Raindrops sperm.

N.G.Thuraivan.

கொன்றை...!! [ ஹைக்கூ ]


*
நடைபாதையில்
மஞ்சள் கம்பளம்
கொன்றைப் பூக்கள்.
*
நள்ளிரவு நேரம்
வேப்பம்பூ வாசத்தைக்
கடத்தும் காற்று்.
*
துக்க வீட்டில்
மலர்ந்த முகங்கள்
ஒடிவிளையாடும் குழந்தைகள்.
நூல் : விசும்பில் சிறுபுள் – கவிஞர். பா. சேதுமாதன். திருச்சி.

*

Wednesday, 23 September 2015

காலம்...!!


*
நிலையில்லை என்றபோதும்
தற்காலிக
ஆறுதல் தருகின்றன
சில உரையாடல்கள்.
முரண்பட்டாலும்
தவிப்பிலிருந்து மீட்டெடுக்கின்றன
சில உறவுகள்.
நகர்ந்துவிடும் என்றபோதும்
இதம் தருகின்றன துயரநாள்களில்
சில நினைவுகள்.
திரும்பப் பெறமுடியாத
நேற்று
தடுத்து நிறுத்த முடியாத
இன்று
தவிர்க்கவே இயலாத
நாளை
ஊடுபாவி ஓடுகிறது
இவற்றோடு காலம்.
ஆதாரம் : ஒளிச்சிறை - இரா. தமிழரசி – கவிதைநூல் – பக்கம். 66
தகவல் ; ந.க.துறைவன்,

*

Tuesday, 22 September 2015

விறகு...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil – English.
*
சடங்கு முடிந்த பிறகு
எல்லோரும் கலைந்தனர் குளிக்க
பிணத்தைப் பொசுக்கியது விறகு.
*
After the ceremony was over,
Everyone dispersed bath
Firewood scorched corpse.
*.

உங்கள் சிந்தனைக்கு...!!


*
இளங்காலைப் பொழுதில, அந்த பள்ளத்தாக்கு மிகவும் நிசப்தமாக இருந்தது.ஆந்தை கூட அதன் துணையை அழைப்பதை நிறுத்தி விட்டது. அதன் கனத்த குரலொலி ஒரு மணி நேரம் முன்பு வரை பேட்டுக் கொண்டிருந்தது. கதிரவன் இன்னும் உதயமாகவில்லை. நட்சத்திரங்கள். இன்னும் மின்னிக் கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் மேற்கிலிருந்த மலைப் பக்கமாக ஒரு நட்சத்திரம் மறைந்தது. கிழக்கிலிருந்து வெளிச்சம் லேசாகப் பரவத் தொடங்கியது. சூரியன் உதயமானதும், பனித்துளி படர்ந்திருந்த அந்தப் பாறைகள் தகதகவென்று மின்னத் தொடங்கின. கற்றாழை, மெருகு போட்டுக் கொண்டுவிட்டது போல வெள்ளியாய் ஜொலித்தது. அந்த நிலப்பகுதியின் அழகு விழித்தெழுந்தது.
ஆதாரம் ; ஜே.கிருஷ்ணமூர்த்தி உரையாடல்கள் – நூல் – பக்கம் 12-13.
தகவல் ; ந.க.துறைவன்.

*

கேள்வி...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English.
*
அருகில் நின்று பார்த்தேன்
யார் நீ என்று கேட்டது?
பெயர் தெரியாத பூ.
*
Standing nearby saw
Who asked you?
Flower anonymity.

*

Monday, 21 September 2015

இயற்கையின் ரகசியம்....!! [ ஹைபுன் ]

ஹைபுன்.
*
இயற்கையின் ரகசியம்…!!
*
*
இயற்கையோடு இயைந்த மனித வாழ்க்கையே இயல்பான வாழ்க்கை. இயற்கை தரும் கொடை அனைத்தும் பரிபூரணமானது. தூய்மையானது. வளமை மிக்கது. இயற்கையின் எல்லா சுற்றுச் சூழல்களையும் மனிதன் அனுபவிக்கப் பெற்றவன். அவனுக்காக இயற்கைப் படைத்தப் பொக்கிஷங்கள். ஏராளம். இயற்கையின் எந்தவொரு அம்சமும் பழுதடையாதது. அப்படியே பழுதடைந்தாலும் அதுவாகவே சீர்செய்துக் கொள்ளும் தன்மை வாய்ந்தது இயற்கையின் தீயவிளைவுகள் மனிதனைப் பாதித்தாலும் அவைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் இயற்கை வழியே பெறமுடிகின்றது.
*
அழியாதது செழிப்பானது
உலகையே வளமாக்குவது
இயற்கையின் ரகசியம்.
*
 விஞ்ஞானிகள் கண்டு பிடிக்கிறார்கள்
அஞ்ஞானிகள் மெய்யறிகிறார்கள்.
இயற்கையின் ரகசியம்.

 *

Saturday, 19 September 2015

பார்வை...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English.
*
யாரும் பார்த்துக் கொண்டதில்லை
ஒருவர் முகத்தை ஒருவர்
இருவருக்குமே பார்வையில்லை..
*
No one has seen
Face one another
Perspective for both ..

*

Friday, 18 September 2015

கலகலப்பு...!! [ கவிதை ]*
எனக்குக் காட்டிய
காதல் சமாதானக்
கொடியென்று
கவனிக்கிறேன்.
நீ
கூந்தலில் சூடியுள்ள
மல்லிகைப் பூ…!!
*
நீ
கலகலப்பாக இருக்கிறாய்
என்பதை உணர்த்துகின்றது
,இன்று கூந்தலில் சூடிய
கனகாம்பரம் பூ…!!
*

மனநிலை....!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English.
*
நன்றாகத் தானே பேசுகிறாள்
எல்லாம் தானே செய்கிறாள்
எப்படி பாதித்த மனநிலை?
*
Speaks alright
Doing everything right
And how that affected the mood?
*

மின்மினி...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English.
*
கையில் பிடித்தால்
சுட்டு விடுமா? ஒளிரும்
மின்மினிப் பூச்சிகள்.
*
If caught in the hand
Will shot? Flashing
Fireflies.
*

Thursday, 17 September 2015

சுகவலி...!! [ கவிதை ]


*
உன்
தலைவலிக்குத்
தைலம் தேய்த்து விட்டேனே
வலி குறைந்து விட்டதா?
இப்பொழுது தான்
எனக்கு புரிந்தது
தைல வருடலின்
ஸ்பரிச சுகத்தை
விரும்புகிறது
உன் சுய தலைவலி.
வலி சுகமானது
சுகம் வெட்கமாகது.
*

பிறந்த நாள்...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English.
*
பூமிக்கு பிறந்த நாள்
வாழ்த்து கூறுகின்றன
பூக்கள் தூவி மரங்கள்.
*
Happy Earth Day
According greeting
Sprinkle flowers on the trees.

*

Wednesday, 16 September 2015

ஹைக்கூ சித்திரம்...‘‘ [ ஹைக்கூ ]


*
புஸன் எழுதினார் :
*
இந்தச் சின்னஞ்சிறு ஹைகூக்கள் சாதாரணக் கவிதைகள் அல்ல.  மிக எளிமையாய் ஒரு வார்த்தை சித்திரம் வரைகின்றன. அழகைப் பற்றிய அனுபவமோ, சத்தியமோ, அன்போ, கவிஞனின் இதயத்தைத் தொட்டுத் தூக்கிய எதையுமே சொல்லோவியமாகச் சித்திரிக்கின்றன.

பேரிமரத்தில் பூத்திருக்கிறது
நிலவொளியில் ஒரு பெண்
வாசிக்கிறாள் ஒரு கடிதம் அங்கே
அங்கே மௌனம் பொங்குகிறது.
*
ஆதாரம் : ஒஷோவின் பிரபஞ்ச ரகசியம் – ஸென் ஹைக்கூ – நூல் – பக்கம் – 119.
தகவல் : ந.க.துறைவன்.

*

நல்வாழ்த்துக்கள்...!!

விநாயகனே…அருள்புரிவாய்…!!
*
எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்திற் சலன மில்லாமல்,
மதியில் இருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலைவந் திடநீ செயல்வேண்டும்.
கனக்குஞ் செல்வம், நூறுவயது
இவையும் தரநீ கடவாயே.
மகாகவி பாரதியார்.

Tuesday, 15 September 2015

எறும்புகள்...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English.
*
மழையில் நனைந்தவாறு
பாறையில் ஏறுகிறது
வரிசையாய் எறும்புகள்.
ந.க.துறைவன்.
*
Basking in
Loading rock
Ants series.

N.G.Thuraivan.

இசையாய் வாழ்ந்த இசை...!!

இன்று செப்டம்பர் 16.
இசையாய் வாழ்ந்த இசை.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த நாள்.
*
மனித இனத்தால் ஆழ்ந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும் என்பதை விளக்குவதாகவே, இசையும் கலையும் இருக்கின்றன. இவற்றின் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி நிச்சயமாய் பொருட்களால் தர இயலாது. அழகுணர்வு அனுபவங்கள் மகிழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாக இருப்பினும் அதில் புலனுணர்வும் கலந்திருக்கிறது. இசை நம் காதுகளையும் ஓவியம் / கலை நமது கண்களையும் நடனம் நமது உடலினையும் பொறுா்தே அமைகிறது. வேலை மற்றும் தொழில் முன்னேற்றத்தால் நமக்கு கிடைக்கும் திருப்தியைப் போன்றே பொதுவாக இவற்றின்மூலம் கிடைக்கிறது. ஆனால் இவை புலன்களின் மூலம் கிடைக்கிறது. அவற்றால் தாமாகவே நாம் கனவுகாணும் மகிழ்வைத் தரஇயலாது.      
ஆதாரம் ; தலாய்லாமா – வின் “ பழமையான ஞானம் புதுமையான உலகம் ” – என்ற நூலிலிருந்து – பக்கம் – 62.
தகவல் ; ந.க.துறைவன்.

*

Monday, 14 September 2015

உதிர்ந்த இலைகள்...!! [ கவிதை ]


*
எழுத நினைத்ததை மறந்து விட்டான்
மறந்துப் போனதை எழுதி வைத்தான்.
*
கேலி செய்தவனே
கேலிக் கிரையானான்
*
யாரும் துக்கத்தில் இல்லை
ரொக்கத்தில் தான் வாழ்கிறார்கள்.
*
பிரமாதமாக நடக்கிறது பிரசாரம்
யாருக்கும் மயக்கம் தெளியவில்லை.
*
அவரவர் பிரார்த்தனையாக
தண்ணீரில் மிதக்கிறது பணம்.

*

அப்பா...‘‘ [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English.
*
வாழ்வை வென்று உறவைக் கடந்து
உறங்குகிறார் சமாதியில்
சாந்தமாய் அப்பா
*
Winning career passing relationship
Rests in the grave
Mild-dad

*

Saturday, 12 September 2015

மணல்வெளி...!! [ கவிதை ]


*
பற்றை விடு பேராசை விடு
மோகத்தை விடு கோபத்தை விடு
என்கிறீர்கள்.
எல்லாம் விட்ட பின்
எவரிடம்
என்ன மிச்சமிருக்கும்?
வெறும் ஜடமனம்.
*
ஊருக்கு அழகான ஆறு
நீரில்லா மணல்வெளி
காணாமலே போய்விட்டது
மூதாதையர் புதையுண்ட
நினைவிடம்.
*

தும்பி...!! [ ஹைக்கூ ]

ஸென் குரு ஒரு ஹைக்கூ எழுதினார் :
*
தும்பியொன்று
பாறையின் மீது
நண்பகற் கனவுகள்.
ஹைக்கூக்கள் சாதாரண கவிதார்த்தத்துடன் கூடிய கவிதைகள் அல்ல. அவை கவித்துவம் நிறைந்தவை. அவை கண்களில் படரும் காட்சிகள். எனவே கண்ணுறுங்கள். ஒரு தும்பி பாறை மீதமர்ந்து பகற்கனவுகள் காணுகிறது. சுயப்பிரக்ஞை இல்லாத ஒவ்வொரு மனிதனின் நிலையும் இதுதான். தும்பி மட்டுமல்ல, நீயம் கூடக் கனவுகளிலேயே வாழ்கிறாய். விழிப்புணர்வின் தூண் ஒன்று உனக்குள் உருவாகாத வரை, நீ கனவுகளிலும், பயங்கர மனக்கிலேசங்களிலும் தான் வாழ்ந்துக் கொண்டு இருப்பாய். உன் வாழ்வே வீணாகி விடும். அது நிறைவடையாமலே, பூரணமாகாமலே, பிரபஞ்ச லயத்துடன் லயித்து ஒர் ஆழ்ந்த இரண்டறக் கலந்த அனுபவப் பூர்த்தி ஏற்படாமலே சென்று விடும். அது ஒன்றுதான் [ அனுபவத்தின் சுகந்தம் ] அனுபவிக்கத் தகுந்த சுகந்தம். ,இதைக் காட்டிலும் விஞ்சியதொன்றுமில்லை.
.ஆதாரம் : ஓஷோவின் “ பிரபஞ்ச ரகசியம் ” ஸென் ஹைக்கூ – பக்கம் 20 -21.
தகவல் : ந.க.துறைவன்.

*

Friday, 11 September 2015

சாதி மல்லிப் பூ....!! [ Haibun / ஹைபுன் ]


*
சமூகக் குழு அடையாளத்திற்காக மனிதர்கள் பெயருடன் சாதிப் பெயரை வைத்துக் கொண்டார்கள். தொழில்முறைப் பெயரும் வைத்துக் கொண்டார்கள். சாதீய எதிர்ப்பும் ஓழிப்பும் என்பது பழங்காலச் சித்தர்கள் முதல் இன்றைய அரசியல்வாதிகள் வரை ஓயாமல் பேசப்பட்டு வருகின்ற நிலையினைப் பார்க்கின்றோம். இன்றைய அரசியல்கட்சிகள். சாதியை வாக்கு வங்கியாக மாற்றி விட்டார்கள். சாதி ஒழிய வேண்டுமென்று பேசிக் கொண்டே, சாதியை வளர்த்து வருகின்றார்கள். அரசு தன் மட்டில் சாதீயச் சீர்திருத்தம் என்ற பெயரில், ஒருவருடைய பெயரிலிருந்து, வாக்காளர் பட்டியலிலிருந்து,  குடும்ப அட்டையிலிருந்து, .தெருக்களிலிருக்கும் பெயரிலிருந்து, எங்கு பெயருடன் சாதிப் பெயர் இருக்கிறதோ அதையெல்லாம் நீக்கி விடுகிறது. ஆயினும், அரசு எல்லா சாதியினருக்கும் சான்றிதழ் அளித்து அங்கீகரி்க்கிறது. ஊக்கப்படுத்தி வளர்க்கின்றது. இந்தச் சமூக முரண்பாடுடன்  தான் சமுதாயத்தில் சாதி தன் சுயமுகத்தை கம்பீரமாக்கி நடைபோடுகின்றது.
*
பெயரை நீக்கிவிட்டால் மட்டும்
மணம் மாறிவிடுமா என்ன?
சாதி மல்லிப்பூ.

*

Thursday, 10 September 2015

வெள்ளம்...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English;
*
பாதையில் வெள்ளம்
காலியாக இருக்கிறது
மழைநீர் நிரம்பாத குடம்.
*
Flood track
Is empty
Empty water jug.
*

Wednesday, 9 September 2015

விளையாட்டு...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamila / English
*
இணைந்துப் போனார்கள்
வெளியில் விளையாடுவதற்கு
சண்டைப் போட்ட குழந்தைகள்
*
Went collaborate
Play outdoors
Kids fight

வாழ்நாள்...!! [ கவிதை ]


*
வாழ்க்கை எதுவென்று
யாரும் கேட்பதில்லை
வாழ்க்கை இது தானென்று
எவரும் சொன்னதில்லை.
எதுவாகவோ இயங்கி
மெதுவாகவே கழிகிறது
ஆமை வேகமாய் பயணித்து
ஒவ்வொருவரின் வாழ்நாள்.
*

Monday, 7 September 2015

சூரியன்...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English.
*
மரத்தின் கீழ் நிழல்
விளக்கின் கீழ் இருட்டு
தலைக்கு மேலே சூரியன்.
*
Under the shade of a tree
Under the light of the dark
The sun overhead.
N.G.Thuraivan.

உங்கள் சிந்தனைக்கு...!!


*
இளங்காலைப் பொழுதில, அந்த பள்ளத்தாக்கு மிகவும் நிசப்தமாக இருந்தது.ஆந்தை கூட அதன் துணையை அழைப்பதை நிறுத்தி விட்டது. அதன் கனத்த குரலொலி ஒரு மணி நேரம் முன்பு வரை பேட்டுக் கொண்டிருந்தது. கதிரவன் இன்னும் உதயமாகவில்லை. நட்சத்திரங்கள். இன்னும் மின்னிக் கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் மேற்கிலிருந்த மலைப் பக்கமாக ஒரு நட்சத்திரம் மறைந்தது. கிழக்கிலிருந்து வெளிச்சம் லேசாகப் பரவத் தொடங்கியது. சூரியன் உதயமானதும், பனித்துளி படர்ந்திருந்த அந்தப் பாறைகள் தகதகவென்று மின்னத் தொடங்கின. கற்றாழை, மெருகு போட்டுக் கொண்டுவிட்டது போல வெள்ளியாய் ஜொலித்தது. அந்த நிலப்பகதியின் அழகு விழித்தெழுந்தது.
ஆதாரம் ; ஜே.கிருஷ்ணமூர்த்தி உரையாடல்கள் – நூல் – பக்கம் 12-13.
தகவல் ; ந.க.துறைவன்.

*

Sunday, 6 September 2015

எது வாழ்க்கை...?


*        
பாஷோ எழுதினார் :
வாழ்க்கை என்பதாக வாழ்ந்து கொண்டிருக்கிறோமே. அது என்ன?
ஒர் பனிக்காலச் சூறைக்காற்று
மூங்கில்களுக்கிடையில் மறைந்து
அமைதியில் ஒடுங்குகிறது.
ஒரு சிறிய நாடகமே. சிறிது நேர விளையாட்டே.அது.  பிறகு நீ மறைந்து விடுகிறாய். நாம் வாழ்க்கை என்று கருதுவது மிகவும் நிலையற்றது. அதனால் பற்றுக் கொள்வதென்பதே கூடாது. அதன் ஒரே செயல் – சரியான ஒரே செயல் – நித்யத்துவத்தைக் கண்டு உணர்வதே. ஒவ்வொரு கணத்திலும் நித்யத்துவம் ஔிர்ந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் உங்கள் பேரறிவின் ஆழத்திற்குள் ஒருபோதும் செல்லாமலேயே மேலோட்டமாகவே. நீங்கள் சென்று விடக்கூடும். அலைகளைப் போலவே ஆயிரமாயிரம் பிறவிகளிலும் நீங்கள் மேலோட்டமாகவே இருந்துவிட்டுப் போய் விடுவீர்கள். அது உங்களின் சுயத்தன்மையை, உங்களின் படைப்புத் திறனை, உங்களின் அழகை, உங்களின் உற்சாகத்தை இவையனைத்தையும் திறக்கக் கூடிய  அளவற்ற விழிப்புணர்வை உருவாக்காமலேயே வீணாக்கி விடுகிறது. ஆனால் ஒவ்வொரு கணமும் அற்புதமான நடனமாகும். நற்கணங்களாகவே இருக்கின்றது.
ஆதாரம் : ஓஷோவின் பிரபஞ்ச ரகசியம் – ஸென் ஹைக்கூ நூல் – பக்கம் – 31.

தகவல் : ந.க.துறைவன்

Saturday, 5 September 2015

முகமற்ற ச - முகம்...!!

*
Haibun / ஹைபுன்.
*
விடிந்தப் பொழுதுகளிலிருந்து துவங்கும் ஒவ்வொரு நாளும் மனிதர்களின் அவசர வேலைப்பாடுகளால் பரபரப்புடன் காணப்படுகின்றது. சூரிய வெளிச்சம் இல்லையெனில் மானுடர் எவரையும் கண்டு ரசிப்பது என்பது அதிசயமாகிவிடும். முகம் வெளிக்காட்டாமல் ஹெல்மெடடால் மறைக்கப்பட்டு பயணிக்கிறார்கள். தலைநிமிர்ந்து நடப்பதில்லை பலரும், புன்னகை இழந்து பயஉணர்வோடு பயணிப்பதாகவே தென்படுகின்றார்கள் பெண்கள்.. தனியார்க் கல்விக் கூடங்களின் நச்சரிப்பில் மனஉலைச்சலில் சிரிப்பை இழந்து தவிக்கின்றார்கள் குழந்தைகள். எங்கேனும் ஓரிடத்தில் மனிதர்களின் அவலக்குரல் கேட்டுக் கொண்டேயிருக்கின்றது. வாழ்க்கையை வாழ வேண்டியவர்கள் வாழ்வையே தொலைத்துவிட்டு தவிப்போராய் தெரிகின்றார்கள் 
*
தெளிவாகத் தெரிகிறது சூரியன் முகம்
வாழ்வுரிமையை இழந்து விட்டது நிலம்
சாரமில்லாமல் வாழ்கிறது மனித ச-முகம்.

*

தூசி...!! [ Limaraiku / லிமரைக்கூ ]

*
தெருவெங்கும் புழுதி மண்தூசி
எங்கோ மறைந்திருக்கிறது அவன்
தொலைத்து விட்ட சின்னஊசி.
*

Thursday, 3 September 2015

படகு...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English
*
ஆற்றைக் கடக்கும் படகு
நீந்தும் முதலைகள்
பயம் சூழ்ந்த மனம்.
*
Crossing a river boat
Crocodiles swimming
Fear surrounding the heart.

*

Wednesday, 2 September 2015

ஆய்வு...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English
*
வரலாறு ஆய்வு செய்கிறதா?
கோட்டையில்
வசிக்கும் புறாக்கள்.
*
Does the study of history?
Castle
Doves residence.

N.G.Thuraivan. 

விதி....!! [ கவிதை ]


*
அதிகாலை வேளைத் தவிர
மற்ற பொழுதுகளில்
கொதிப்பேற்றும் வெயிலில்
பாதையோரச் செடிகளில்
காய்ந்து கருகி வாடுகிறது
மலர்கள்
மனிதன் வாடினால் விதி
மலர்கள் வாடினால் நியதி.
*
நடந்ததை வெளியில்
சொன்னால் வெட்கம்
எவரிடமேனும் சொல்லி
பகர்ந்திடாவிட்டால்
தாங்கமுடியாதத் துக்கம்.
மனமொரு
இருதலைக்கொள்ளி.
இதற்கில்லை முற்றுப்புள்ளி.

*

Tuesday, 1 September 2015

மௌனம்....!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English;.
*
கதிர் விரிந்தது
பூ மலர்ந்தது
மௌனப் பேச்சு
*
Ray expanded
Flower blossomed
Silent speech.

*

ஈரம்...!! [ கவிதை ]


*
மனசு கல்நெஞ்சம்
மணலுக்குள் ஈரம்.
*
பேசியதும் வலித்தது
பேசாமல் இருந்ததும் வலித்தது
*
பூ வாங்கிக் கொடுத்தான்
பூக்காரி சிரித்தாள்.
*