மலைப்பு…!!
*
துணைக்கு
வந்தவள் தொணதொணப்பு
தாங்கமுடியாதவள்
முகம் சிடுசிடுப்பு.
*
பேசிக்
கொண்டிருந்தவள் திரும்பி பார்த்தாள்
நின்றிருந்தவன்
கையசைத்து கூப்பிட்டான்.
*
விலை
கேட்டவர் திகைத்தார்
வாங்கியவர்
மகிழ்ந்தார்.
*
எதிரே
வந்தது பிணஊர்வலம்
அச்சத்தில்
ஒதுங்கின வாகனங்கள்.
*
மலையைப்
பார்த்து மலைத்தேன்
கீழே
விரித்தப் பாய்களாய் வயல்கள்
*
No comments:
Post a Comment