Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Thursday 31 July 2014

சுவையான தேனீர்... { கட்டுரை ]


*
இந்திய தேசம் பழம்பெரும் தேசம். இந்தியாவின் ஆட்சி அதிகாரம் முழுமையும் அரசர்களின் கீழ் தான் நடைபெற்று வந்துள்ளன. அக்காலத்திய அரசர்களின் அரண்மனைக் கட்டிடங்கள் மிகுந்த கலைநய வேலைப்பாடுடன், கட்டிடக்கலை நுணுக்கங்களுடன் கட்டப்பட்டுள்ளது. கோட்டையைச் சுற்றி நீர் நிறைந்த அகழி, வலிமையான கற்களால் கட்டப்பட்ட மதில் சுவர்கள், நான்குப் புறமும் வாயில்கள், உள்ளே அகன்ற வீதிகள், அரசபை மண்டபம், அரசருக்காக ஆலோசனைக்கூடம், அரசர், ராணிகள் மற்றவர்க்கென்று தனித்தனி படுக்கையறைகள், தேரோடும் வீதிகள், குளிப்பதற்னெ நீராழிமண்டபங்கள், யானை குதிரை லாயங்கள், போர்பயிற்சிக் கூடங்கள், வழிப்பாட்டுக் கோயில்கள். காஜானா அறைகள்,ரகசியஆலோசனைக்கூடங்கள், சுரங்கப்பாதைகள் என சிறந்தமுறையில் கட்டப்பட்ட அரண்மனைகள், இந்து, முஸ்லிம் மன்னர்களின் நாடு பிடிக்கும் ஆசையினால் போர்கள் மூண்டுள்ளது. அதற்குப் பின்னர் வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவைத் துண்டாடி, மக்களிடையே பகைமை மூட்டி, மன்னர்களைச் சிறைப் பிடித்து, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினர். அப்போது, போர்களால் அரண்மனைகளை அழித்தும் சிதைத்தும் மிகுந்தச் சேதத்தை ஏற்படுத்தினர் அதன் எச்சங்களாகவே, இந்தியா முழுவதும் இன்றைக்கும் இருக்கின்ற கோட்டைகளை, தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சிறிசில இடங்களில் அரண்மனைகளை நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலித்து அனுமதிக்கும் காட்சிப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அரண்மனைகள் சிதைவுற்று யாரும் உள்நுழைந்த காணமுடியாத அளவில் உள்ளன. அங்கே மக்கள் யாவரும் பயத்தோடு தான் சென்று பார்க்கின்றனர். மக்கள் பார்வையிட முடியாத அளவிலும் பல கோட்டைகள் இருக்கின்றன. அக் கோட்டைகளின்  உள்ளே முன் அனுமதியின்றி யாரும் உள்ளே நுழைய முடியாது.யாருக்கும்அனுமதியுமில்லை.இருட்டும்,செடிகொடிகள் புதர்கள் நிறைந்த அவ்விடத்தை வௌவால்களும்,சிறுபறவைகளும்,எலிகளும்,
ஒணான்களும் இன்ன பிறவிலங்குகளும்,  குறிப்பாக,  வண்ணத்துப்பூச்சிகள் மட்டுமே,
*
“ அரண்மனைக்குள் நுழைய
அனுமதியில்லை யாருக்கும்
வண்ணத்துப்பூச்சிகள் மட்டும். ” – [ நா.விச்வநாதன் – “ முள்ளில் அமரும்
*
பனித்துளிகள் ” நூல் பக்கம் 18 ]  என தொன்மத்தை நினைவுகூறும் வகையில் ஹைக்கூ கவிதையினைப் படைத்துள்ளார் கவிஞர். ஒரு ஹைக்கூ கவிதையின் அழகியல் என்பது படைப்பாளி தேர்வு செய்யும் கருப்பொருளில் தானிருக்கின்றன என்பது இந்த ஹைக்கூ கவிதையில் அறியமுடிக்கின்றது.
*






கொக்குகள் நடனம்...!! [ஹைக்கூ ]


*

தரிசு நிலங்களில்
புல்லைத் தேடுகின்றன
பொறுமையாய் எருமைகள்.
*
பாதையில்லா பாதையில்
மனம் போல் திரிகின்றன
காட்டில் கரடிகள்.
*
நதிக்கரை வயல்களில்
கொக்குகள் நடனம்
வேடிக்கைப் பார்க்கின்றன வாத்துகள்.

*

Monday 28 July 2014

ஊருக்கு அழகு…!!. [ ஹைக்கூ ]


*
ஊற்று நீர்ப் பாய்ந்து
ஊருக்கு அழகு சேர்க்கிறது
மலைச் சரிவின் கீழ்நீரோடை.
*
வரப்பில் நடக்கும் போது
வாய் நமநமக்கிறது
செண்டாய் கம்பங்கதிர்கள்.
*
மழைநீர் வெள்ளம்
ஒடையில் பாய்கிறது
துள்ளுகின்றன மீன்கள்.

*

மண் வாசனை...!! [ கவிதை ]


*
மண்வாசனை வீசுகிறது
வரும் போலிருக்கிறது மழை.
*
பாடலின் பொருள் தெரியாமல்
இசையைக் கேட்கிறது குழந்தை.
*
நினைத்தபோது பார்க்க முடியவில்லை
நினைக்காதபோது பார்க்க முடிகிறது.

*

சேவ் செய்...!! [ கவிதை ]


*
உனது
குறுஞ்செய்திகள்
எனது செல்போனுக்கு
வரும்போதெல்லாம்
மனம்
உற்சாகத்தில் திளைக்கிறது.
ஒவ்வொரு
வரியிலும் – உன்
சத்தியவார்த்தைகள்
எனக்குப்
புதிய தெம்பைத் தருகின்றன.
நீ
அனுப்பிய – எந்த
குறுஞ்செய்தியும்
டெலிட் செய்யாமல்
பத்திரமாய் பாதுகாத்து
வைத்திருக்கிறேன்.
நான்
அனுப்பிய பதில்
குறுஞ்செய்திகளை
நீ
டெலிட் செய்யாமல்
சேவ் பண்ணி
வைத்திருக்கிறாயா?
நீ
டெலிட் செய்திருந்தால்
தோல்வி.
சேவ் செய்திருந்தால்
வெற்றி.- இதில்
உனது சம்மதம் எதுவென்று
சூசகமாய் புரிந்துக் கொள்வேன்.
சேவ் செய்து
இருவர் காதலையும்
சேப் செய்துக் கொள்வோம்
கண்ணே….!!.


சேவ. செய்..!! [ கவிதை ]


*
உனது
குறுஞ்செய்திகள்
எனது செல்போனுக்கு
வரும்போதெல்லாம்
மனம்
உற்சாகத்தில் திளைக்கிறது.
ஒவ்வொரு
வரியிலும் – உன்
சத்தியவார்த்தைகள்
எனக்குப்
புதிய தெம்பைத் தருகின்றன.
நீ
அனுப்பிய – எந்த
குறுஞ்செய்தியும்
டெலிட் செய்யாமல்
பத்திரமாய் பாதுகாத்து
வைத்திருக்கிறேன்.
நான்
அனுப்பிய பதில்
குறுஞ்செய்திகளை
நீ
டெலிட் செய்யாமல்
சேவ் பண்ணி
வைத்திருக்கிறாயா?
நீ
டெலிட் செய்திருந்தால்
தோல்வி.
சேவ் செய்திருந்தால்
வெற்றி.- இதில்
உனது சம்மதம் எதுவென்று
சூசகமாய் புரிந்துக் கொள்வேன்.
சேவ் செய்து
இருவர் காதலையும்
சேப் செய்துக் கொள்வோம்
கண்ணே….!!.


Sunday 27 July 2014

சோழியம்...!! [ கவிதை ].


*
ஆடிமாசம்
ஆத்தாளுக்குப்
பொங்கல் வை.
செவ்வாய், வெள்ளி
துர்க்கையம்மனுக்கு
எலுமிச்சை விளக்கேற்றி
வணங்கி வா...
பொன்னான
மாப்பிள்ளைப் பையன்
பொறுப்பா வந்து
கைப்பிடிப்பான் – என்று
சோழியை உருட்டி
சோசியம் கணித்து
அருள் வாக்கு சொன்னாள்
பாதையோரம்
கடைவிரித்திருந்தப்
பொன்னாத்தா கிழவி.
*

*

எதிர்திசையில்...!! [ ஹைக்கூ }.

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
எந்நேரமும் விண்ணிலிருந்து
இறங்கி காற்றில் கலந்து
பூமிக்கு வருகிறது அணுத்துகள்கள்.
*
அத்துமீறும் மனம்
ஆசைகளைக் கட்டுப்படுத்தும்
வாழ்வின் அறநெறிகள்.
*
எனக்கு எதிர்திசையில்
பயணிக்கின்றன
இயற்கைக் காட்சிகள்.
*



கூழ்வார்ப்பு..!! [சென்ரியு ]

*
NA.GA.THURAIVAN'S SENRYU.
*

ஆடிமாதம் கூழ்வார்ப்பு திருவிழா
யாரும் குடிக்கவில்லை
கூழ் எல்லாம் பாழ் .
*
ஆடிக் காற்றில்
முறிந்து விழுந்தது
முருங்கை மரம்.
*
கல்யாணங்கள் செய்தால்
ஆகுமா ஆகாதா ?
ஆடி மாதம்

*

Saturday 26 July 2014

ஆறுகள் அழுகின்றன... !! [ சென்ரியு ]


*
NA. GA. THURAIVAN'S SENRYU. 
*
மனிதனின் உழைப்பையே
அன்று செழிக்க வைத்தன
ஆற்றுநீர் பாசனம்.
*
ஆறுகளின் அடையாளம்
அழித்து வருகின்றது
மணல் வியாபாரம்.
*
ஆறுகள் படுகொலை
மனிதர்கள் நரபலி
மணல் கொள்ளையர் வேட்டை.
*

சந்தேகம்...!! [ கவிதை ]


*
எவருக்கும் தெரியாமல்
மறைவாய்
செல்போனின்
இன்பாக்ஸ் திறந்துக்
குறுஞ்செய்தியைப்
படித்து வேவு பார்த்து
மனந் தெளிகிறார்கள்
சந்தேகப் பேர்வழிகள்
உஷார்… உஷார்….!!.
*

Friday 25 July 2014

ஆடிமாசம்...!! [கவிதை ]


*
திருமணமான
புதுத் தம்பதியர்களின்
இன்ப உறவைப்
பிரித்து வைத்து
ஆசைக்குத் தடுப்பு
அணைப்போட்டது
ஆடி மாசம்
இது ரொம்ப மோசம்…!!
*

ஆடைகள் எடுக்கலையோ
ஆடைகள்.
ரெண்டு எடுத்தா
ஒன்னு இலவசம்
ஆடித் தள்ளுபடியில்
ஆடைகள் எடுக்கலையோ
ஆடைகள்.

*

தேனீர்...!! [ கவிதை ]


*  
ஊற்சாகமாய் பேசி கலகலப் பாக்குகிறார்
டீ குடித்த நண்பர்.
*
நட்பை உருவாக்குகிறது
ஒரு கப் தேனீர்.

*

வலைவீச்சு...!! ஹைக்கூ ].

*
வலை வீசும் மீனவர்கள்
படகு நிறைய மீன்கள்
வட்டமிடும் கழுகுகள்.
*

Thursday 24 July 2014

பொதுச்சொத்து...!! [ கவிதை ].


*
எவருக்கும் சொந்தமில்லை
ஜீவநதிகளின் நீர்
பிரபஞ்சத்தின் பொதுச் சொத்து.
*
நரம்புகளில் ஒடும்
பூமியின் இரத்தமோ?
நதிகளின் நீர்.

*

அவமானங்கள்...!! [ கவிதை ]


*
நீ
பெற்ற பெருமை
புகழ் அனைத்தையும்
மறந்தாலும்,
நீ
பெற்ற பெரும்
அவமானங்களை
மட்டும் என்றும்
மறவாதே…!
அந்த
அவமானங்களே
உன் வாழ்வின்
உயர்வுக்கான
உந்து சக்தியாகும்
சன்மானங்களாகும்.

Friday 18 July 2014

கொஞ்சம் சிரி...சிரியேன்...? [ கவிதை ]

  
*
நேற்று எங்கே
போயிருந்தேனென்று
நீ
கேட்கமாட்டாய்?
இன்று எங்கே
போயிருந்தேனென்று
நீ
கேட்கமாட்டாய்.
நாளை எங்கே
போவேனென்று
நீ
கேட்கமாட்டாய்.
எதையும்
கேட்காமலிருக்கும்
உன் மௌனம்
என்னை இம்சிக்கிறது.
எங்கே, கொஞ்சம்
கோபமாகவோ,
சிரிச்சோ தான்
பேசேன்…கேளேன்…?.

*

Wednesday 16 July 2014

மீசை... மீசை...!! [ கவிதை].


*
ஆண்கள் முகத்தில்
மீசையை விதவிமாய்
வைத்துக்கொண்டு
கம்பீரமாய் தெரிகிறார்கள்.
மீசையொரு
கௌரவ அந்தஸ்துப்
பெற்று மற்றவர்களின்
கவனத்தைப் பெற்றுவிடுகிறது.
மீசை
வைத்திருப்பவர்கள்
எதற்காகவோ அதை
எடுத்து விடுகிறார்கள்.
மீசை
இல்லாமலிருந்தவர்கள்
ஆசையோடு அதை
வைத்துக் கொள்கிறார்கள்.
மீசை
அழகின் அடையாளமா?
ஆண்மையின் அடையாளமா?
அகத்தின் ஆசையே
முகத்தில் மீசை….!!
*


நதிக்கரைகளில்...!! [ ஹைக்கூ கவிதைகள் ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
மரணித்தவர்கள் எல்லாம்
வாழ்கிறார்கள் என்றும்
நதிக் கரைகளில்…
*
பயிர்களுக்கு உயிர் தருகிறது
மனிதருக்கு உணவு தருகிறது
நதிக்கரை நிலங்கள்.
-ந.க. துறைவன் ஹைக்கூக்கள்.


Tuesday 15 July 2014

தேடுகிறார்கள்...!! [ கவிதை ]


*
நீரின் அழுக்கைச் சுத்தப் படுத்தி
சுகாதாரமாய் வாழ்கின்றன மீன்கள்.
*
பொறாமைகள் தீயில் எரிகிறது
திகுதிகுவென்று குப்பைத் தொட்டி.
*
சுத்தம் பாதி குப்பைகள் பாதியாய்
என்றும் காட்சியளிக்கிறது நகரவீதி.
*
குப்பையில் தேடியெடுக்கிறார்கள்
பொருட்கள் விற்று பிழைப்பதற்கு….

*

Monday 14 July 2014

சிறகு விரித்து...!! [ சென்ரியு ]

*
NA.GA.THURAIVAN'S SENRYU.
இரக்கமில்லா இயற்கையே
ஏழைகளை ஏன் படைத்தாய்?
ஏழ்மை ஒழிக, ஏழைகள் வாழ்க.
*
பூவுலகின் சிறுவர்கள்
சிறகு விரித்துப் பறக்கும்
கள்ளமில்லாப் பறவைகள்.


*

குரல்கள்...!! [ கவிதை ]


*
இருப்பவர்களின்
குரல்கள் எப்போதும்
எடுபடாமல்
அடங்கிப் போகிறது.
இறந்தவர்களின்
குரல்கள் எப்போதும்
நினைவுக் கூர்ந்து
எதிரொலிக்கிறது
இன்றும்… என்றும்… !!

*

தொப்பைப் பையன்...!! [ சென்ரி ].


*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
எல்லோரும் சிரித்தார்கள்
டீச்சர் அதட்டினாள்
வகுப்பில் குண்டுப் பையன்.
*
சிரிக்கச் சிரிக்க
குலுங்கி ஆடியது
குண்டு பையன் தொப்பை.
*
குண்டு பையனைப் பார்த்துவிட்டு
தூர விலகிப் போனது
தெருவில் நாய்க் குட்டி.

*

Sunday 13 July 2014

வேட் டி அணிவதைக் காப்போம்...!! [ புதுக் கவிதை ].


*
வேட்டி அணிவது கம்பீரமான
கலாச்சார வாழ்க்கை
தமிழனின் அடையாளம்.
மேட்டிமைக் கிளப்புகளின்
கலாச்சாரத் தாக்குதலைத்
தடுத்து
வேட்டி அணிவதைக் காப்போம்.
தமிழ்மொழியை
இழந்து வருகிறோம்.
இப்பொழுது
வேட்டியை இழக்கப் போகிறோமா?
சட்டம் யார்
கைகளிலிருக்கிறது?
ஏசி அறைகளின் பார்களில்
வேசித்தனப் பொழுதுப் போக்கில்
நேரம் வீணடிக்க வைக்கும்
“ கிளப் ”
உரிமையாளர்களின்
அநீதிக்
குரல்களைக் கண்டிப்போம்…!!

*

சட்டைப் பட்டனில் மாட்டிய பூச்சரம்..!!


*
பேருந்தில் நின்றுக் கொண்டே பயணிக்கும்போது செல்போனில் நீ அழைத்தாய். பேசுகிறேன். பக்கத்திலிருப்பவர்கள். என்ன பேசுகிறேன்.
யாரிடம் பேசுகிறேனென்று பேச்சை உற்றுக் கேட்கிறார்கள். இன்னும்
சிலரும் என்னையே பார்க்கிறார்கள். ஏதோவொரு நிறுத்தத்தில் இறங்க
முயன்ற பெண் எரிந்து விழுந்துக் கடக்கும்போது, அவள் கூந்தலில் சூடியிருந்தப் பூச்சரம் என் சட்டைப் பட்டனில் மாட்டிக் கொண்டிருக்சிறது.
எடுத்துவிட்டுப் பிறகு பேசுகிறேன். “ இரு… இரு… இப்பப் பேசுறேன் கேட்கிறதா?. எடுத்துவிட்டுவிட்டேன். அவளும் போய்விட்டாள். இப்பச் சொல்…
பேசு… உம்… துண்டிக்கப்பட்டிருந்தது செல் இணைப்பு.

*

Saturday 12 July 2014

நீ...நீ...!! [கவிதை ]

                  
*
மென்மையான
பூவைப் போன்றவள்
நீ.
தெளிவான உணர்வில்
நீரைப் போன்றவள்
நீ
தூய்மையாக சுவாசிக்கும்
மூச்சுக் காற்று
நீ.
எந்த மனச் சஞ்சலத்திலும்
தடுமாறதவள்
நீ.
என் பார்வையில்
உட்புகுந்து ஒளி பிம்பமாய்
நெஞ்சில் பதிவாகியிருக்கிறாய்
நீ.

நேற்று இரவு
சந்தித்த போது
கவனித்தாயா?
ஏனோ தெரியவில்லை?
உன்னையும் என்னையும்
பார்த்து சிரித்ததே - அந்தப்
பௌர்ணமி நிலா….!!

*

பிம்ப இரயில்...!! [ ஹைக்கூ ].

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
நதியில் நீர் பெருக்கு
கரையை இணைக்கும் பாலம்
பாய்ந்து கடக்கும் இரயில்.
*
பாலத்தில் ஒடுகிறது
நதி நீரின் கீழ்
பிம்ப இரயில்.
*

Friday 11 July 2014

உள்ளத்தின் ஒளி...!! [ ஹைக்கூ ].

*
NA. GA. THURAIVAN'S HAIKU.

*
அகலில் எண்ணெய்
எரியும் திரி, அலையும் புகை
உள்ளத்தின் உண்மை ஒளி.
*
வரங்கேட்டு சன்னதியில்
பிறவாமை, இறவாமை
நெஞ்சில் பொறாமை.
*
கட்டிய வீட்டில் நிம்மதியாய்
முதுமையில் சிந்தனை
மோட்ச வீடு.
*


மனக் குப்பை...!! [கவிதை].


*
மக்காதக் குப்பைகள் போலாகி விட்டது
மனிதர்களின் எண்ணங்கள்.
*
மக்கும் குப்பைகள் பூமிக்கு உரம்
மக்காத குப்பைகள் பூமிக்கு நஞ்சு.
*
வாரி வாரி போகிறது நகராட்சி
லாரி நிறைய குப்பைகள்..

*

கண்விழித்து...!! [ ஹைக“கூ ].

NA. GA. THURAIVAN'S HAIKU.
*
*
தூர்வாரிய குளத்தில் கிடைத்தன
நூற்றாண்டு கால
ஐம்பொன் சிலைகள்.
*
வாழைத் தோப்பை அழித்தன
நீர்த் தேடி ஊருக்குள் புகுந்தக்
காட்டு யானைகள்.
*
மாந்தோப்புக்கு காவல்
இரவு கண்விழித்து
மௌனமாய் ஆந்தைகள்.

Thursday 10 July 2014

உடனே புறப்பட்டு வா...!! [ கவிதை ]


*
ஒட்டல் சாப்பாடு
சரியில்லையென்று
குறைப்பட்டுச் சொல்லி
ஊருக்குப் போன
மனைவியை
உடனே பறப்பட்டு
வரச்சொல்லி
குறுந்தகவல்
அனுப்பனான்
கணவன்.

Wednesday 9 July 2014

துப்புவது துப்பாய..!!. [ கவிதை ]


*
அவ்வப்போது துப்புகிறான்
வாய்
குதப்பிக் குதப்பித்
காரித்துத் துப்புகிறான்.
துப்பித் துப்பித்
துடைக்கிறான்.
வாய் வழியாக
வழிகிறது சொள்ளு.
தெளிவில்லாத
அரைமயக்கம்
கண்களில் கிறக்கம்
அவனருகில் யாரையும்
நெருங்கவிடவில்லை
சகிக்க முடியாதப்
போதைப் பொருள்
பான்பராக் துர்நாற்றம்
துப்புவது துப்பாய
துப்பாய துப்புவது
பான்பராக் பான்பராக்…!!