Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Sunday 8 June 2014

வாழ்வை அனுபவி...!! [ ஹைக்கூ ].

*
NA.GA.THURAIVAN'S HAIKU.
*
இயற்கையின் பரிந்துணர்வை
என்றுமே சலிப்பதில்லை
வாழ்வை அனுபவிக்கும் மரங்கள்.
*
யாரும் கவனிப்பதில்லை என்று
எப்பொழுதும் வருந்துவதில்லை
தும்பைப் பூக்கள்.
*
கிளிகளும் பார்த்ததில்லை
நானும் பார்த்ததில்லை
அத்தி மரம் பூப்பதை….
*
பெண்கள் அனைவரும்
அரவணைக்கிறார்கள்
கள்ளிச் செடிகளை….
*
அமைதியாயிருக்கிறது
அணில் பசியாறும் வரை
பப்பாளி பழம்.

*

நிலவு உருவானது எப்படி...?


*
பூமியை தினந்தோறும் 24 மணி நேரம் சுற்றி வருவதுடன் இரவு நேரங்களில் குளுமையும், வெளிச்சத்தையும் பூமிக்கு தரும் நிலவு உருவானது எப்படி? என்பதை ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியும், அதைப்போல அளவு கொண்ட மற்றொரு கோளும் சுமார் 4.5மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதன் அடிப்படையில் நிலவு உருவாக்கியிருக்கலாம் என்பதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
*
பூமியுடன் மோதிய அந்தக் கோளுக்கு ‘ தியா ‘ என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். ‘தியா மற்றும் பூமியின் கலவையால் நிலவு உருவாகியிருக்க வேண்டும்.
தியா கோள் பூமியிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கவேண்டும். 70 சதவீத முதல் 90 சதவீத தியா கோளின் மூலப்பொருள்களாலும், 10 முதல் 30 சதவீத பூமியின் மூலப்பொருள்களாலும் நிலவு உருவாகியிருக்க வேண்டும். எங்களின் அடுத்த கட்ட முயற்சியாக நிலவில் தியா கோளின் மூலப்பொருள்கள் எவ்வளவு அடங்கியுள்யது? என்பதைக் கண்டறிய உள்ளோம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
*
ஜெர்மனியிலுள்ள கோயட்டிங்கென் என்ற பல்கலைக்கழகத்தில் டேனியல்ஹெர்வார்ட்ஸ் என்பவர் தலைமையிலான விஞ்ஞானிகள், அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு நிலவு உருவானது குறித்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
*
ஆதாரம் ;- தினமணி – 07-06-2014 – நாளிதழ்.
*     


யார் அவர்கள்....?. [ ஒரு பக்கக் கதை ].


*
அவள் பஸ் விட்டிறங்கினாள். சற்றும் தாமதிக்காமல் அவள் முன்னால் வந்தவன், அவளை வேகமாக இழுத்து நடுத்தெருவில் வைத்து அடி அடியென்று அடித்தான். உடனே வேடிக்கைப் பார்க்கக் கூட்டம் சேர்ந்து விட்டது. யாரும் எதற்காக அடிக்கிறாய்? என்று கேட்பதற்கும், விலக்கி விடுவற்கும் துணியவில்லை. கூட்டத்தினர் ஒருவரையொருவர் பார்த்துப் பேசிக் கொண்டு, அனுதாபப்பட்டார்கள். யாரோ ஒருத்தர் துணிச்சலாய் “ ஏன்டா, அடிக்கிறாய்? என்று கேட்க வந்தவனை, அவன் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டினான். அவள் அழுதுக் கொண்டிருந்தாள். மீண்டும் அவளை அடிக்கப் போனான். அப்பொழுது அருகில் வந்துக் கொண்டிருந்த போலீஸ்காரரைப் பார்த்ததும், பவ்யமாக ஏதும் தெரியாதவன் மாதிரி “ ஏ, கழுதை வாடீ, என்ன திமிரா நிக்கிறே? வர்றியா? இல்லை போலீஸ்காரன்கிட்டே ஒப்படைக்கட்டுமா? என்று மிரட்டினான். அதற்குள் அவளும் சுதாரித்துக் கொண்டு, அந்த போலீஸ்காரர் வருவதற்குள்,   இருவரும் அங்கிருந்து மெல்ல நகர்ந்துச் சென்றனர். அவள் யார்? அவன் யார்.? எதற்காக அடித்தான் என்று எவருக்கும் விளங்கவில்லை. “ பாவி, ஒரு பொம்பளைன்னு கூட பார்க்காமே நடுத்தெருவிலே போட்டு இந்த அடி அடிக்கிறானே “ என்று பேசிக் கொண்டே கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் கலைந்தது.

*         

Saturday 7 June 2014

குபேரன் பொம்மை...!! [ ஹைக்கூ ].

*
Na. Ga. Thuraivan's Haiku.
*
உடலைச் சிலிர்த்துத்
துவட்டிக் கொள்கின்றன
மழையில் நனைந்தப் பறவைகள்.
*
குழந்தைக்குப் பால்
கொண்டு வரச் சொல்லி
கொக்கை அழைக்கிறாள் தாய்.
*
முகத்தைச் சுளித்து
வாயிலிருந்ததைத் துப்பினான்
புளிப்புத் திராட்சை.
*
பணம் சேரும் என்ற நப்பாசை
குபேரன் பொம்மை வாங்கி வைத்தான்
உடைத்துவிட்டுச் சிரித்தது குழந்தை.
* .



Friday 6 June 2014

வளம் நிறைந்த கடல் [ சென்ரியு ].

*
Na.Ga. Thuraivan' Senryu.
*
இயற்கையின் கொடை
மீனவர்க்கு வாழ்வளிக்கும்
வளம் நிறைந்தக் கடல்.
*
இரக்கமில்லா இயற்கையே
ஏழைகளை ஏன் படைத்தாய்?
ஏழ்மை ஒழிக, ஏழைகள் வாழ்க.
*
பூவுலகின் சிறுவர்கள்
சிறகு விரித்துப் பறக்கும்
கள்ளமில்லாப் பறவைகள்.
*
கவிiதைகள், பாடல்கள் அழிவதில்லை
தினந்தினம் காற்றினில் மிதந்து வரும்
இசையில் வாழ்கிறாய் முத்தைய்யா.

இலைகளை அசைத்து...!! [ ஹைக்கூ ].

*

Na.Ga. Thurauvan's Haiku, 
*

எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்
பருவமழை தொடங்கி வி்ட்டதா?
மேகமூட்டமாயிருக்கிறது வானம்.
*
கருத்து வருகிறது மேகம்
குளிர்க் காற்றில்
பறந்து திரிகின்றன ஈசல்கள
*
பருவமழையை
மரங்கள் வரவேற்கின்றன
இலைகளை அசைத்து…
*
உயர்ந்தும் தாழ்ந்தும் மிக
வேகமாய வருகின்றன
ஆர்பாட்ட அலைகள்.
*
சேமித்துக் கொள்கிறது
மழை நீரை
வளமான பூமி.
*


மாயை...!! [ கவிதை ].


*
மந்திரத்தால்
காய்த்த மாங்காய்,
*
இரும்பைப்
பொன்னாக்கிடும்
ரசவாதத்தால்
கிடைக்கும் பணம்,
*
மாயாஜாலத்தால்
கைக்குட்டைக்குள்ளிருந்து
சிறகு விரித்து
வெளியில் வந்திடும்
புறாக்கள்.
*
பெண்ணைப்
பெட்டிக்குள் பூட்டி
வெட்டிக் காட்டும்
அதிர்ச்சி ஜாலம்.
*
இதுவரை
நடந்தேறாத
கீரிப் பாம்பு சண்டை.
*
இதிலெல்லாம்
மனிதனுக்கு ஏதோவொரு
மயக்கமிருக்கிறது
அதனால் தான்
என்றென்றும்
மாயைப் பார்த்து
மயங்குகிறான்
மனிதன்…!!.

*

Thursday 5 June 2014

காற்றும் அல்ல, கொடியும் அல்ல. *

*
ஜென் கதை….!!

*
ஒரு கொடியைப்பற்றி, இரண்டு சந்நியாசிகள் வாக்குவாதம் செய்துக் கொண்டிருந்தார்கள்.
ஒருவன் “ இந்த கொடி அசைகிறது ”.
அடுத்தவன், “ இல்லை காற்றுதான் நகருகிறது. ”
ஆறாவது ஜென் மடாலயத்துத் தலைவர், அந்த வழியே போக நேர்ந்தது. அவர்களது வாக்கு வாதத்தைக் கேட்ட அவர், காற்றும் அல்ல, கொடியும் அல்ல, மனம்தான் நகருகிறது ”. என்றார்.
-    ஆதாரம் :- “ 100 ஜென் கதைகள் ”  - நூலிலிருந்து.
-        

Wednesday 4 June 2014

நிகழும் தருணம் எதுவோ? [ சென்ரியு ].


*
எப்பொழுது நிகழ வேண்டுமோ?
அப்பொழுது தான் நிகழுமா!
நினைத்தக் காரியங்கள் எதுவும்…
*
அளவுக்கு மீறி நம்பிக்கை வைப்பது
ஆபத்தாக முடியு மென்பது உண்மையா?
பிரிந்த நண்பன் அறிவான் வேதனை.
*
ஏதோவொரு தோல்வியால்
தற்கொலைக்கு தேடி வந்தவனை
தடுக்க இயலவில்லை கடலால்…

*

கொடிகள்...!! [ சிறுவர் பாடல் ].


*
சமாதானம் என்றால்
என்ன கொடி? அது
வெள்ளை கொடி.
*
அபாயம் என்றால்
என்ன கொடி? அது
சிவப்புக் கொடி.
*
எதிர்ப்பு என்றால்
என்ன கொடி? அது
கருப்புக் கொடி.
*
தொற்று நோய் என்றால்
என்ன கொடி? அது
மஞ்சள் கொடி.
*
புயல் எச்சரிக்கை என்றால்
என்ன கொடி? அது
எண்கள் இட்டக் கொடி.
*
கொடிகளின் நிறங்கள்
நமக்கு எச்சரிக்கையாகும் – அதன்
அர்த்தம் புரிந்து நடப்பதே
நமது கடமை யாகும்…!!
*   


Tuesday 3 June 2014

அடம் பிடித்தல்...!! [ கவிதை ].


*
பெற்றோர்களிடம்
பெற்ற குழந்தைகள்
அடம் பிடிக்கின்றன
*
பெற்ற குழ்ந்தைகளிடம்
பெற்றோர்கள்
அடம் பிடிக்கிறார்கள்.
*
அடம் பிடித்து சாதிப்பது
குழந்தைகளின் சாதனை.
பெற்றோர்க்கு
அக் கவலையால்
நாளும்
மனவேதனை….!!.
*  

Monday 2 June 2014

இரக்கப்படுகிறது இரவு..! [ கவிதை ]. ]


*
ஜீவராசிகளுக்கு மனமிரங்கி
ஒய்வளிக்கிறது இரவு.
*
சூரியன் சந்திரன் அறிவார்களோ?
இரவின் இரகசியத் தத்துவம்.
*
இரவில் எங்கே போய் ஒளிந்துக் கொள்கிறது
பகலில் அலையும் வண்ணத்துப்பூச்சிகள்.
*
பெண்களுக்காக பரிதாபப் பட்டு
என்றும் இரக்கப்படுகிறது இரவு.
*
இரவின் உயிர்த் துளியே
புல்லின் நுனியில் பனித்துளிகள்.
*
 


அன்பு செய்...!! [ சிறுவர் பாடல்.]


*
கனவுகள் மனதில்
     விதைத்திடுவோம்
கடமையாய் முயற்சியில்
     உழைத்திடுவோம்.
*
படிப்பினில் முதன்மை
     பெற்றிடுவோம்
பணியில் சேர்ந்து
     உயர்ந்திடுவோம்.
*
வாழ்வில் நன்மைகள்
     ஆற்றிடுவோம்
ஏழ்மை நிலைதனை
     அகற்றிடுவோம்.
*
வேற்றுமை உணர்வை
     மறந்திடுவோம்.
ஒற்றுமையாய் வாழ்ந்து
காட்டிடுவோம்
*
பண்பு பணிவில்
     பழகிடுவோம்
அன்பால் உலகை
     வென்றிடுவோம்…!!.
*

*

பூக்காரியின் கிண்டல்...!! [ சென்ரியு ].

*
Na.Ga. Thuraivan's Senryu,

அழுகின்ற குழந்தையை
அடித்தால் அழுகை நிறுத்துமா?
அடிப்பது தாயின் வன்முறை.
*
தாழ்ந்துக் கிடப்பது தெரியாமல்
கண்கள் மூடிப் பிடித்திருக்கிறாள்
சமநீதி தராசு.
*
மல்லிகைப் பூவைக் கேட்டார்
முதியவரைத் தினுசாய் பார்த்து
கிண்டலடித்தாள் பூக்காரி.

*

Sunday 1 June 2014

சிணுங்கல்கள்...!! [புதுக்கவிதை ].


*
அக்காவுக்கும் மாமாவுக்கும்
எப்பொழுதும் எதற்காகவேனும்
ஒன்றுமில்லாதற்கெல்லாம்
சின்னச் சின்னச் சண்டைகள்
அரங்கேறும்.
யார் தோற்பார்கள்?
யார் ஜெயிப்பார்கள்?
என்பதெற்கெல்லாம்
யாரும் கவலைப்படுதில்லை.
எல்லோருக்கு மிது
பழகிப் போய்விட்டது.
அனைவரும் அமர்ந்து
சாப்பிடும் வேளையில்,
மாமா எதையேனும்
பேசி மழுப்பிச் சிரிப்பார்.
தொலைக் காட்சி
தொடர் நாடகம் பார்க்கும்
அக்கா,
சிரித்துச் சிரித்துச்
சண்டையை மறப்பாள்.
அவரவர்கள் அறைக்குள்
ஆமையெனப் பதுங்கிக் கொள்வர்
உறங்கச் செல்ல,
குளிர்ச்சாதன அறையின்
குளிர்ச்சியில் மனம் அடங்கும்.
இருட்டில் மெல்ல மெல்ல
சிணுங்கல் சிரிப்பும் அடங்கும்.
*