Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Wednesday 30 October 2019

நான். ( கவிதைகள் )

நான்
1.
அவளுள்  நான்
என்னுள்  அவள்
ஐக்கியமாகி
சுதந்திரமாய்
வாழ்கிறோமெனினும்
தினந்தினம்
எங்களிருவரையும்
இருளில்
அடிமைப்  படுத்தி
வெல்கிறது   காமம்
2.
என்னுள்  நீ  பூரணமாய்
நிரம்பி  விடு
மௌனத்தை  வழங்கி  விடு
உன்னுள்
கரைகிறேன்  மறைகிறேன்
சூ†சுமமாய்,
சூன்யத்தோடு  சூன்யமாய்
உன்
இருப்பில்
நான்,
3.
மழையில்  நனைந்துக்  குளித்து
மன  அழுக்குகள்  நீக்கி
எத்தனை  உற்சாகமாய்
பூத்திருக்கிறது  அந்தப்  பூக்கள்
உலகத  துயரமெல்லாம்  மறந்தும் 

ந க துறைவன்.

கண்ணாடி ( சென்ரியு )

கண்ணாடி 

சென்ரியு

குழந்தையின்  கன்னத்தி ŒŒல்  
முத்தமிட  முயன்ற  போது 
தடையாய்  மூக்குக்  கண்ணாடி, 

கொஞ்சம்  வித்தியாசமாய் 
சேகரித்துள்ளான் 
சின  மொழிகள், 

சிறுகதையின்  தலைப்பு 
படித்து  அதிர்ந்தேன் 
"ஒரு  சுமாரான  கணவன்". 

ரூபாய்  நோ†டுப்  போன்று 
சிரிப்பிலும்  உண்டு 
கள்ளச்  சிரிப்பு, 

அம்மை  நோயா? 
சுவர்கள்  ரணமாய் 
பாழடைந்த  வீடு, 

ந க துறைவன்.



மனம். ( ஹைக்கூ கவிதைகள் )

*
இன்பம் கண்டு மகிழும்
துன்பம் கண்டு துவளும்
நிலையான மனம்.
*
காற்று, மழை, பெரும் சத்தம்
கண்ணைப் பறிக்கும் மின்னல், எங்கோ
விழுந்திருக்கணும் இடி.
*
உள்ளே சூன்ய தரிசனம்
தில்லை வெளியில் பாதுகாப்பாய்
பொன் வேய்ந்த கூரை.
*
தண்டவாளம் இல்லாத பாதையில்
வேகமாய் ஒடுகின்றன...
இரயில் பூச்சிகள்.
*
மனமாற வாழ்த்தியது வேப்ப மரம்
நிழல் நின்றிருந்த என்னை
பூக்கள் உதிர்த்து...
*
காற்று, மழை, பெரும் சத்தம்
கண்ணைப் பறிக்கும் மின்னல், எங்கோ
விழுந்திருக்கணும் இடி.
*
ந க துறைவன்.

கணிப்பு ( கவிதை )

நீ
யாரைப் பற்றி
என்ன நினைக்கிறாயோ
அவர்கள் அப்படியே
இருப்பார்களா என்ன? 
அப்படி
இருக்கத்தான் முடியுமா?
உன் கணிப்பு
சரியாகவுமிருக்கலாம்
தவறாகவுமிருக்கலாம்
அதற்காக; அவர்களை
ஏதுமறியாத
ஏமாளிகளென்றோ
கோமாளிகளென்றோ
எடை போட முடியுமா
என்ன?

ந க துறைவன்.

விலகல் விதி ( புதுக்கவிதை )


வெட்ட வெளியில்
பறந்துத் திரியும்
தும்பிகள்
முகத்தருகே வந்து
யாரோடும் பேசாமல்
விலகி  விலகிப்
போகிறது தொலைவாய்,
தன் காதலைச் சொல்லவோ
ஓரு முத்தம் பெறவோ
மலர்களை நெருங்கியும்
விலகியும் மீண்டும்
நெருங்கியும் பறக்கிறது
வண்ணத்துப் பூச்சிகள்
எந்நேரமும்,
அண்மித்துப் பேசிக்
களித்திருந்தக்
காதல் கிளிகள்
அருகே வந்தமர்ந்த
காக்கையைப் பார்த்து விட்டு
வெட்கிப் பறந்தன 
இன்னொரு மரந்தேடி,
மறைவிலிருந்தப்
பூனைகள்
ஏதோவொரு
சத்தங்கள் கேட்டு
பயந்துப் பதுங்கி
விலகியோடின
வேறொரு மறைவிடந்தேடி,
பூங்காவிற்குள்
இவ்வளவு நேரமாய்
மனங்கசிந்துருகிப்
பேசிக் கொண்டக்
காதலர்கள் எழுந்து
மௌனமாய்
விலகிப் போனார்கள்
வெளியே,
இப்படி
எந்த ஜீவராசிகளிடமும்
ஆட்கொண்டிருக்கிறது
இந்த
விலகல் விதி.

ந க துறைவன்.

பாடுபொருள் நீயெனக்கு....! ( கவிதை)


பனிமலை காஷ்மீரும் பகலவனை அதிகாலை
பணிவாக வணங்கும் தென்குமரி தேவியும்
கனிவளமும் நதிவளமும் முக்கடல் வளமும்
கனிமங்கள் வளமும் கொண்ட தாயே,
கொஞ்சும்எழில் தாஜ்மகலும் சாய்ந்த கோபுரமும்
கொட்டும் மழை சிரபுஞ்சி அதிசய அழகே,
தஞ்சையில் மணிநெல்லும் பஞ்சாபில் கோதுமையும்
தன்னிறையாய் விளைவிக்கும் தாயே போற்றி !
விவசாயப் புரட்சியும் விண்கலன் எழுச்சியும்
வேதாந்த சிந்தனையும் கண்டு தெளிந்து
நவநவமாய் புதுமைகள் புனைந்து உலக
நாடுகள் வியந்திட முன்னேறும் என்னாடே,
பன்மொழிகள் சமயங்கள் சாதிகள் வேறெனினும்
பண்பால் ஓர்நிறையாய் வாழ்வோர் இதயம்
புண்ணாகும்வன்முறை எதிர்த்(து)அன்பால்ஆள்பவளே

பாடுபொருள் நீயெனக்கு பாரதத் தாயே !

Tuesday 29 October 2019

தியானம்

புத்தனின் தியானம்

கலைக்காமல்

மெல்ல விலகி செல்கிறது

ஞானம் உணர்ந்த எறும்புகள்.

ந க துறைவன்.

தேவி. ( கவிதை )

இருப்பது
நீயே
நானல்ல
தேவி.

ந க துறைவன்.

குரு ( ஹைக்கூ )

குரு இல்லை

சீடர்கள் இல்லை

வெறுமையாய் குகை.


ந க துறைவன்.

அழுகை நிறுத்தி...!! ( கவிதைகள் )

ஃ உலகத் தகவல்கள்
கைவிரல் நுனியில்
உள்ளூர் செய்திகள்
உடனுக்குடன்
ஒரு நொடியில்
இன்று, குடும்பத்தில்
என்ன நடந்ததென்றத்
துயரச் செய்தியே
தெரியாமல்போனது
அவனுக்கு
உறவினர் வந்து
தகவல் சொன்ன
விநாடி வரை

ஃ புகழ்பெற்ற பாலாறு
நீரின்றி அழுகிறது
மணல்வெளிவாழ்
நத்தைகள்
மரணித்து வீழ்கிறது
மழையே வருக
ஆறு நனைக
நீர் நிறைக

ஃ அழுதக் குழந்தையை எடுத்து
அணைத்து முத்தமிட்டபோது
கன்னத்து சிறுசிறு
ரோமங்கள் கிசுகிசு மூட்டிக்
குத்திய சொர சொரப்பான
உணர்வின் சிலிர்ப்பில்
என்ன சுகங்கண்டதோ?
அழுகை நிறுத்தி
மெல்ல சிரித்து, என்
கையிலிருந்து இறங்கி
வேகமாய் ஓடியது
வெளியில் விளையாடும்
துணைக் கிடைத்த தெம்பில்

ந க துறைவன்

Monday 28 October 2019

கோமாளிகள்...!! ( கவிதைகள் )


வாசல்கேட்டில்
எப்பொழுதும் காத்திருக்கிறது
தபால் பெட்டி.
கடிதம் இருக்குமாவென
தினமும் திறந்துப் பார்ப்பது
வழக்கம்.
காலை நேரங்களில்
தவிட்டுக் குருவிகள்
தபால் பெட்டி மீது
அமர்ந்தும் பறந்தும் 
கொஞ்ச நேரம்
விளையாடிப் போகும்.
அவ்வப் போது தெருவில்
பந்து விளையாடும்
குசும்புக்காரப் பையன்கள்
அப்பெட்டியில்
எப்பொருளையேனும்
போட்டுக் கலாய்த்துக்
குறும்புத்தனம் செய்வர்.
ஓர் தினம் பெட்டியைக்
கவனமாய்த் திறந்துதேன்
உள்ளே
வண்ண அட்டைகளில்
முதியவர்களை,பேண்களை,
சிறுவர்களை,வீடுகளை,
குருவிகளை,விலங்குகளை,
ஸ்கெச்சில் வரைந்தக் 
கோமாளிச் சித்திரங்கள்
அச் சிறுவர்களின் கிறுக்கல்
சித்தரிப்புகளைப் பாராட்டிய
என் உதடுகள் மெல்ல
உதிர்த்தது புன்சிரிப்பு.

ந க துறைவன்.

குறை சொல்லல்...!! ( கவிதைகள் )



அம்மாவின்
கைப் பக்குவச் சமையல்
சாப்பிடும் போதெல்லாம்
குறை சொல்லவான்
எந்நாளும்,

அப்பா,அக்கா, தங்கை
தம்பி எது செய்தாலும்
தப்பாமல்
குறை சொல்வான்
எந்நேரமும்,

நண்பரிடம் இன்னொரு
நண்பரைப் பற்றி
மறைமுகமாய்
குறை சொல்வான்
சந்திப்பின் போதெல்லாம்,

திருமண வீட்டில்
சாப்பிட்டு வெளியில் வந்து
விருந்துணவுப் பற்றி
உபசரிப்புப் பற்றி
குறை சொல்வான்
மற்றவகைளிடம்,

எவரையும்
குறைசொல்லக் கூடாதென்று
தெரிந்தும்
குறை சொல்கிறான்
எதற்காகவோ?

மற்றவர்களைக்
குறை சொல்லாமலிருந்தால்
அவன்
மண்டை வெடித்திடுமோ?
குறை சொல்வது
ஓவ்வொருவரிடமும்
ஏதேனுமொரு வடிவில்
இருக்கவே செய்கிறது.

குறை சொல்லாத
மனிதர்களைக் காண்பதும்
அபூர்வத்திலும் அபூர்வம்.

ந க துறைவன்.

ந.க.துறைவனின் கவிதைகள்


*உன் வசம்

புரியாத உலகம்
புரியாத தத்துவம்
புரியாத எழுத்து
புரியாத வாழ்வெனப்
புலம்பித் தவியாதே.
மனதை இருத்து
கவனம் செலுத்து
உணர், அனுபவி,
படி,எழுது
புரியும் வரை…
குழம்பாதே,
அறிவுத் தெளிவு பெறு.
புரிந்தால் எல்லாம்
புலப்படும்,
உலக வாழ்வு
உன் வசப்படும்.

*தாய் மொழி

நர்சரியில்
ஆங்கலம் பயிலும்
அந்தக் குழந்தை
அம்மாவிடம் கேட்டது
“தமிழ் எந்த நாட்டின்
தாய் மொழி?”-என்று.

*தனிமை

கூட்டமாய் வாழும்
தென்னையைப் பார்த்து
வெறுப்போடு 
புலம்பிய வண்ணம்
ஏரிக் கரையில்
தனித்திருந்த
ஓற்றைப் பனை மரம்.

-ந.க.துறைவனின் “காற்றுக்குப் புரியும்”
என்ற தொகுப்பிலிருந்து.

Thursday 24 October 2019

பலூன் சிரிப்பு ( ஹைபுன் )

பலூன் சிரிப்பு {ஹைபுன்}
*
திருமண மண்டபத்திற்கு வெளியில் காற்றோட்டமாய் கூடி நின்று
 சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள்.,நகைச் சுவையாய், அவர்கள்
 பார்வையை வேறு வேறு திசையில் பாய விட்டுச் சிரித்துக்
கொண்டிருந்தார்கள். பலரும் பேசுபவர்களை வேடிக்கைப் பார்த்துக்
கொண்டே “ அப்படி என்ன தான் நகைச்சுவையாகப் பேசிக்
கொள்கிறார்கள்” என்று கேட்காமல், முகத்தை வேறொரு பக்கம்
திருப்பி வைத்துக் கொண்டுக் கடந்துப் போகிறார்கள்.
வேகவேகமாய் ஊள்ளிருந்து வெளியில் வந்தவர், அவர்களின்
சிரிப்பில் பங்குக் கொள்ள முயன்றார். அவரைப் பார்த்த போதே
பேசிக் கொண்டிருந்தவர்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டு.
கலர்கலராய் முகூர்த்தப் பட்டுப் புடவையில் சிரிப…சிரிப்….என்று
சத்தமிட்டுப் போகும் பெண்களின் மீதுப் பார்வைப் பதித்து,
அனைவரும் அமைதியானார்கள்.
      குழந்தைகளின் கைகளில் இருக்கும்
      பலூன்களின் பறக்கும் சிரிப்பை
      வேடிக்கைப் பார்க்கிறது குரங்குகள்.
ந க துறைவன்.
*






 



  

  

மனம் உருக...!! ( ஹைக்கூ கவிதைகள்)

*
இலையுதிர் காலம்
பொன்னிற இலைகள் உதிர்த்து
சித்திரையை வரவேற்றன.
*
எதை அறிந்து மெய்யுணர்வு
அனுபவம் பெற்று ஞானியானார்
பலருக்கும் சந்தேகம்.
*
கண்ணாடிப் பேழைக்குள் இறந்தவர்
அருகில் பாடினார் மனம் உருக
ஒதுவார் திருவாசகம்.

ந க துறைவன்.

ஆலமரம் { சென்ரியு }

ஆலமரம் {சென்ரியு}

சுற்றிச் சுற்றி விளையாடும்
குழந்தைகளைப் பார்த்து சிரிக்கிறது
பெரிய ஆலமரம்.
*
குழந்தைகள் புத்தகம் படிக்கிறார்கள்
புத்தகம் குழந்தைகளைப் படிக்கிறது
வளரும் தென்னம்பிள்ளைகள்.
*
உணவே மாத்திரை
மாத்திரையே உணவு
உண்போமா ஆரோக்கிய உணவு.

ந க துறைவன்.

குழல் பூக்கள் ( ஹைக்கூ )

பர்ஸ் ( மினி கவிதை )

துணிக்கடைக்குள் இருந்து
வெளியில் வந்தவன்
பர்ஸ் 
திறந்து பார்த்துக் கொண்டான்
ஒருமுறை.

ந க துறைவன்.

நகர்தல்

புலப்படாமல்...( கவிதை)

எனக்காகவும் அதில்லை
உனக்காகவும் அதில்லை
யாருக்காகவும் அதில்லை
எல்லோருக்காகவும் அதில்லை
அதிருப்பது
எதுக்காக என்று
அதற்கே தெரியாத உண்மை
தெரியாத ஒன்றுதான்
தெரிவது போல தெரியாமல்
இருக்கிறது எங்கோ?
வெகு தொலைவில்
கண்ணுக்குப் புலப்படாமல்...

ந க துறைவன்.

Wednesday 23 October 2019

ஒன்று தான்....( இருவரி கவிதை

எத்தனையோ இருக்கிறது என்றான்?

இருப்பது ஒன்று தானே...

ந க துறைவன்.

வம்பு...!!

அதைக் குறும்புத்தனமாக விமர்சித்த குரு சொன்னது.

*
வம்பு பேசுவதும் அதைப் பரப்புவதையும் வழக்கமாகக்
கொண்டிருந்தான் ஒரு சீடன். தனக்கு அந்தக் கெட்ட பழக்கம்
இருப்பதையும் ஒப்புக் கொண்டான்.
“ வம்பை அப்படியே பரப்புவது மட்டும் அவ்வளவு
பிரயோஜனப்படாது: உனக்குக் கிடைத்த வம்போடு
கொஞ்சம் உன் சொந்த சரக்கையும் ஏற்றி அதைப்
பரப்ப வேண்டும். “ என்றார்.

-ஆதாரம் :-  “ அந்தோணி டி மெல்லொ “ வின்
             “ நொடிப் பொழுதில் ஞானம் “-
              என்ற நூலிலிருந்து.  

  

வண்டுகள் ( கவிதை )

*
வண்டுகள்…!! 
*
இல்லாமல் இல்லை இங்கு
இருப்பது எல்லாமே.
*
ஊதுபத்தி நறுமணம்
நுகருமா துளசிச் செடிகள்?.
*
வண்டைத் துரத்துகிறது வண்டு
பூக்களுக்குச் சிரிப்பு..
*
கூப்பிட்டவுடன் வந்து
அருகில் நின்றது நாய்க்குட்டி
*
பகலில் வழி தெரியாமல்
அலைகின்றன பன்றிகள்.
*** 

நன்றி சொல்லுங்கள்...!! { ஹைக்கூ }.


*
சூரியனை சிறைப் பிடிக்க
தாமரையின் முயற்சி
முழ்கித் தவிக்கும் மரம்.
*
மௌனத்தில் கசியும்
ஆரவாரமற்ற நெஞ்சு
இயலாமையற்று சோகம்.
*
பிளவுப்பட்டது
ஒன்றுபட்ட வீடு
தடை மீறும் குருவிகள்.
*
மலர்ந்தும் மௌனம்
இறந்தும் கவனம்
நிரந்தரமற்ற உயிர்ப்பு.
*
நன்றி சொல்லுங்கள்
உங்களுக்காய் தவம்
பேரூந்து நிழற்குடை.
***
ஆதாரம் : jதிரு. செல்லம்மாள் கண்ணனின்“
“ காலச் சிறகு ” – என்ற கவிதை நூல்.
***


உறவு...!! { ஹைபுன் /

*
உறவு { ஹைபுன் / HAIBUN }.
*
வீடு, பூட்டியிருந்தது. “ எங்கே போயிருக்கிறார்கள் ” என்று பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்தரார். “ தெரியலேயே சார், எங்கே போறேன்னு யாரிடம் சொல்லிட்டுப் போறாங்க ” என்று கொஞ்சம் கடுப்பாகவே பதில் சொன்னார். அவருக்கு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. ‘ நன்றி சார் ‘ என்று சொல்லிவிட்டு நகர்ந்தவர், பக்கத்திலிருந்த மரத்தடியின் அடியில் ஒதுங்கி நின்றார்.
*
பக்கத்து வீட்டுக்காரன் பகை
எதிர் வீட்டுக்காரன் நண்பன்
உறவுக்கு கைகொடுக்கிறது மரங்கள்.
*  



நாய்க் குட்டி..!! { சென்ரியு }.

*
Na.Ga.Thuraivan's Senryu.
*
தாய்ப்பால் நினைவோடு
அம்மன் சிலையைப் பார்த்து
அழுகை நிறுத்தியது குழந்தை.
*
தாய்ப்பால் கேட்டு
அழுவதில்லை
பால்காரியின் குழந்தை.
*
கன்று பால் குடிப்பதை
அருகில் நின்று பார்க்கிறது
நாய்க் குட்டி.  


அன்பு செய் ( கவிதை )

அன்பு செய்…!!
*
கனவுகள் மனதில்
     விதைத்திடுவோம்
கடமையாய் முயற்சியில்
     உழைத்திடுவோம்.
*
படிப்பினில் முதன்மை
     பெற்றிடுவோம்
பணியில் சேர்ந்து
     உயர்ந்திடுவோம்.
*
வாழ்வில் நன்மைகள்
     ஆற்றிடுவோம்
ஏழ்மை நிலைதனை
     அகற்றிடுவோம்.
*
வேற்றுமை உணர்வை
     மறந்திடுவோம்.
ஒற்றுமையாய் வாழ்ந்து
காட்டிடுவோம்
*
பண்பு பணிவில்
     பழகிடுவோம்
அன்பால் உலகை
     வென்றிடுவோம்…!!.
*

*

புறப்பட்டு வா...!! ( கவிதை )

*
உடனே புறப்பட்டு வா…!!
*
ஒட்டல் சாப்பாடு
சரியில்லையென்று
குறைப்பட்டுச் சொல்லி
ஊருக்குப் போன
மனைவியை
உடனே பறப்பட்டு
வரச்சொல்லி
குறுந்தகவல்
அனுப்பனான்
கணவன்.
*
= ந.க. துறைவன் கவிதை.

*

மாதிரி...!! [ கவிதைகள் ]

*
மாதிரி…!! [ இருவரிக் கவிதை )
*
வருத்தப்படுவது மாதிரி தெரிகிறார்கள்
யார் முகத்திலும் வருத்தமில்லை.
*
உடல் பரிசோதனைச் செய்கிறார்கள்
பாதையோரம் குடையின் கீழ்….
*
இன்னும் நோஞ்சானகவே இருக்கிறார்கள்
சத்துணவு சாப்பிடும் குழந்தைகள்.

*

பேனா இல்லாத பாக்கெட்...!! [ புதுக்கவிதை ]

*
பேனா இல்லாத பாக்கெட்…!!
*
அலுவலகம் கதவுகளைத் திறந்து
விழிப்போடு வரவேற்கின்றன
வாடிக்கையாளர்களை அன்போடு,
கண்ணாடிப் பெட்டிக்குள்ளிருக்கும்
அலுவலர்கள் தலைத் தொங்க
இமைகள் கணினியின்மீது பதியப்
பணியாற்றுகிறார்கள் எத்தனையோ
மனஉளைச்சலோடு,
*
உள்ளே வருவதும்
வெளியே போவதுமான
வாடிக்கையாளர்கள்
கவுண்டர் கவுண்டராய்
கால்கள் கடுக்க நின்று
அவசரஅவசரமாய் தன்
பணிகளை முடிக்கடிவெனப்
பரபரப்பான மனஉணர்வோடு,
*
வேலைமுடிந்தவர்கள்
புன்சிரிப்போடும்
வேலைமுடியாதவர்கள்
கடுகடுப்போடும்
வெளியேறுகின்றார்கள்
அலுவலகம் விட்டு,
*
விண்ணப்பங்களை எழுதுவதும்
தவறுகளைத் திருத்துவதுமாகப் பலர்
எழுதுபலகையின் மீது வைத்து
எழுதிக் கொண்டிருக்கிறார்கள்
தவறு நேராமல் கவனம் வைத்து,
*
அவசரஅவசரமாய்
அருகில் வந்து நின்ற ஒருவர்
குனிந்த தலைநிமிராமல்
எழுதிக் கொண்டிருந்தவரிடம்
“ சார், கொஞ்சம் பேனா
கொடுக்க முடியுமா? “ என்றார்.
நிமிர்ந்துப் பார்த்தவர்
கண்களின் வழியே
பதில் சொன்னார்.
பேனா, கேட்டவர் மீண்டும்
அடுத்த நபரை நோக்கிப் போய்க்
கேட்டு நின்றார்.
அவர் கொடுத்தவுடன்
எழுதத் தொடங்கினார்.
நன்றாக எழுதுகிறது போலும்
அந்த இரவல் பேனா.
பேனா இல்லாத பாக்கெட்டே
பாக்கெட் அல்ல
பேனா இருக்கும் பாக்கெட்டின்
தனிப் பெருங் கருணையே
தனிப்பேரழகு….!!
*


Monday 21 October 2019

குங்குமம் பொட்டு ( கவிதை)

நெற்றில் வைத்த குங்குமப் பொட்டு
வியர்வைியல் கரைகின்றது
ஸ்டிக்கர் பொட்டு கரைவதில்லை.
செயற்கையாகின்றது
இயற்கையான வாழ்க்கை

ந.க. துறைவன்.

பழைய டைரி ( கவிதைகள் )

பழைய டைரி…!!
*
பரணையிலிருந்து கிடைத்தது
தாத்தாவின் பழைய டைரி
பிரித்துப் படித்தால்
பக்கமெல்லாம் எழுதியிருந்தது
கடன் கணக்கு.
*
அந்தக் காலத்துப்
பாட்டிகளெல்லாம்
குடும்பத்திற்கு
வழிகாட்டிகள்
இப்பொழுது
அனைவருக்கும்
அவர்கள் வெறும்
மூதாட்டிகள்.
*


*
தாத்தா நிலம்
வாங்கிப் போட்டார்.
அப்பா வீடு
கட்டி வாழ்ந்தார்.
விற்று தீர்த்தான்

குடிகார மகன்.

வாசிப்பு...!! ( ஹைக்கூ )


NA.GA. THURAIVAN'S HAIKU.
*
ஆழ்ந்தப் புத்தக வாசிப்பு
வரிகளின் வசீகரிப்பு
இடையிடையே புன்சிரிப்பு.
*
பெண்ணின் கண்ணீராய்
சொட்டிக் கொண்டிருந்தது
தெருக் குழாய்.
*
கைக் கூடி வந்த பின்
எதையோ செய்யத் தூண்டுகிறது
ஏதோவொரு அதீத நினைப்பு.
- ந.க. துறைவன் ஹைக்கூக்கள்.

*

சுகம் ...( சென்ரியு )

வாழ்நாளெல்லாம் எந்நேரமும்
தேடியலைகின்றார்கள்
வாழ்க்கைச் சுகம்.
*
யாருமில்லாத தனிமை
அவரோடு துணையிருந்தது
செல்ல நாய்க்குட்டி.
*
மனிதர்களின் மகிழ்ச்சியாய்
வானில் உயர்ந்துச் செல்கின்றது
பட்டாசுப் புகை.

ந.க. துறைவன் சென்ரியு கவிதை.

சிலந்தி...!! [ கவிதை ]


*
எப்பொழுது
வெளியேறலாமென்று
எதிர்ப்பார்த்துக்
காத்திருக்கின்றது
அடக்கி
வைக்கப்படடடிருக்கும்
பெருந் துக்கம்.
*
உறவினருக்கு
உபசரிக்கக் கொண்டு
வந்து வைத்தப்
பிஸ்கடடும் மிக்ஸரும்
மறைக்கின்றன
பீங்கான் தட்டில்
வரைந்துள்ள
அழகான ஓவியங்கள்.
*

கவலையைப் பற்றி
கவிதை எழுத
நினைத்தேன்.
சிரித்துக் கொண்டே
வலையில் நகர்ந்தது
சிலந்தி.

*

Sunday 20 October 2019

மயம்

அஞ்ஞான மயம், விஞ்ஞான மயம்
ஆட்சி கட்சி மயம், தனியார் மயம்
தாராளமயம், உலகமயம்,
துன்பமயம், இன்பமயம்
எல்லாமே சக்திமயம்.

*

முள்...!! [ கஜல் ]

*
உன் காலில் தைத்த
முள்ளைப் பக்குவமாய்
எடுத்து விட்டேன்.
நன்றியில்லாமல்
இதயத்தில் நெருஞ்சி
முள்ளைத் தைத்துப்
போய்விட்டாயே?

*

மன அமைதி...!! [ ஹைக்கூ ]

*
N. G. THURAIVAN"
உள்ளே வைத்துக் கொண்டு
எங்கெங்கோ தேடியலைகிறார்கள்
மன அமைதி.
*

Saturday 19 October 2019

சேடிஸ்ட்....!! [ இருவரி கவிதை ]

சேடிஸ்ட்….!!
*
மற்றவர்களை ஏமாற்றி வந்தவன்
வேறொருவனிடம்  ஏமாறினான்.
*
ஒரு சேடிஸ்டை இன்னொரு
சேடிஸ்டே அறிவான்.
*
மற்றவர்க்கு கிடைத்தால் பொருமுகிறான்
தனக்குக் கிடைத்தால் சந்தோஷப்படுகிறான்.

*