Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Tuesday 28 November 2017

சரவண பொய்கை.

சரவண பொய்கையில்
பூத்திருக்கும் தாமரைகள்
அறியுமோ?
கார்த்திகை பெண்கள்
அழகின் ரகசியம்.

ந க துறைவன்.
*


அழகின் ரகசியம்.


Monday 27 November 2017

விருந்தினர்.

விருந்துக்கு வந்தவர்
சாப்பிடாமல் போனார்
காத்திருக்கப்
பொறுமையில்லாமல்...

ந க துறைவன்.


விருந்துக்கு வந்தவர்


Sunday 26 November 2017

சிந்தனைக்கு...

ஓஷோவின் சிந்தனை


பூக்கள்

பூக்கள்

சம்பங்கிப்பூ
ஆண்மைப்பூ
மல்லிகை
பெண்மைப்பூ
அல்லிப்பூ
அலிப்பூ.

ந க துறைவன்.


கல்யாணி

கல்யாணி.

கல்யாணி
எனக்கு பிடிக்ககும்
கவிதைக்கு
அவள்
அழகியல்
இசையில்
ராகத்திற்கு
கல்யாணி
அவளே என்
காதலி.

ந க துறைவன்.


கல்யாணி...


Saturday 25 November 2017

இடைவெளி

இடைவெளி.

எங்குமொரு
இடைவெளி இருக்கிறது
இடைவெளியில்லாமல்
நிகழ்கால இடைவெளி...

ந க துறைவன்.


இடைவெளி


Thursday 23 November 2017

பூஜ்யம்...!!

பூஜ்யம்.

ஒரு முறை ரமண மகரிஷியிடம் ஆட்டோகிராப் புத்தகத்தில் கையெழுத்துக் கேட்டபோது அவர் தாளில் மையப் பகுதியில் ஒரு புள்ளி வைத்து,அதனருகில், " விந்துவில் அனைத்தும் அமைந்துள்ளன. நானும் அதில் கலந்திருக்கிறேன். எனவே தனியாகக் கையெழுத்திட வேண்டிய அவசியமல்லை" என்று எழுதினார்.
ஆதாரம்: ஓஷோவின் நூல் - குரு - பாகம் - 2.
பக்கம் - 163.
தகவல்: ந க துறைவன்.


பூஜ்யம்.


யார் வந்தது...?

யார் வந்தது...?

வீடு தேடி வந்தது
பட்டாம்பூச்சி
நான் ஊரில் இல்லை
விசாரித்து விட்டு பறந்தது
மீண்டும்
பார்க்க வருவதாகச் சொல்லி
காத்திருக்கிறேன்
எப்போது வருமென்று...??

ந க துறைவன்.


Monday 20 November 2017

நிழலில்...!!

அருமையான போட்டோகிராபி.


தீபம்

தீபம்
சுடர்ந்தால் பிறப்பு
அணைந்தால் இறப்பு.

ந க துறைவன்.


தீபம்.


கூச்சல்...!! ( கவிதை )



1.
கூச்சல் கேட்டதும்
கூட்டம் சேர்ந்தது
கூச்சல் நின்றதும்
கூட்டம் கலைந்தது
2.
கூச்சல் இல்லை
விளக்கு வெளிச்சம் இல்லை
அமைதியாய் இருக்கிறது தெரு.
3.
கூச்சல்
தெருவுக்கு வந்து
நாறுகிறது
4.
கூச்சல் போட்டவன்
தந்திரசாலி
கூச்சல் போடாதவனும்
தந்திரசாலி
இருவருமே
ஏமாற்றும் புத்திசாலிகள்.
5.
கூச்சல் அதிகம்
கூட்டம் இல்லை
கூட்டம் சேர்ந்தது
கூச்சல் அதிகம்
கூட்டமோ
கூட்டம் கூட்டம்
கூச்சலோ கூச்சல்
கூச்சல்.

ந.க. துறைவன். 

Saturday 18 November 2017

அழகன்

கார்த்திகை பெண்கள்
அறுவர்
முலை உண்டான்
ஒரு முகமான
ஆறுமுகன்.

ந க துறைவன்.


கார்த்திகை திருவிழா மாதம்


Thursday 16 November 2017

Life

Life...


பலூன்...! ( ஹைக்கூ )



Haiku – Tamil / English.


விண்ணை தொடும் ஆசை
வேடிக்கை பார்க்கும் பறவைகள்.
பலூன்கள் பறக்க விடும் குழந்தைகள்.

The desire to touch the sky
Funny birds watching.
Children who fly balloons.


N G T huraivan,

Monday 13 November 2017

அடிவாரம்...!! ( ஹைக்கூ )



Haiku – Tamil / English.

மலை அருகில் நிலா
அடிவாரத்தில் கீழ்
நானும் நிழலும்…

The mountain near the moon
Under the foot
I shadows ...

N G Thuraivan. 

Sunday 12 November 2017

தூங்காமல் தூங்கி...!! ( கவிதை )




தூங்குவது போன்று பாசாங்கு
தூங்கவில்லை
தூங்க முயற்சிக்கிறாள்
தூக்கம் வரவில்லை
தூக்கம் வர என்னென்னவோ
நினைக்கிறாள்
தூக்கம் வரவில்லை
நினைப்பதும் தூக்கத்திற்கு
தடையென நினைப்பை
நிறுத்துகிறாள்
தூக்கம் வரவில்லை
அருகில் துணையில்லை
அன்பு காட்ட குழந்தையில்லை
தனிமையில் விக்ரதி
தூக்கம் வரவில்லை
நினைப்பின் ஊடே
எப்பொழுது தூங்கினாளோ
அவளுக்கே தெரியாது?
தூங்காமல்
தூங்கிக் கொண்டு இருக்கிறாள்
சட்டென வெளியில் சத்தம்
பதறி எழுந்து போகிறாள்
கதவைத் திறக்க
மெல்ல திறந்தாள் அதிர்ந்தாள்
வெளியில் யாருமில்லை
எவரின் சுவடுமில்லை
வாடைக் காற்று உள்ளே நுழைந்தது
எவராயிருக்கும் இப்படி செய்தது?
கேள்விக்குள்ளொரு பிரமை.
ந.க. துறைவன்.


Saturday 11 November 2017

நூல் அறிமுகம்.




தலைப்பு  : கவிக்கோ அப்துல் ரகுமான் படைப்புகளில்
            வடிவமும் உள்ளடக்கமும்.

ஆசிரியர் : முனைவர். இரமேஷ்

வெளியீடு : அன்பு நிலையம்
            11, புண்ணியகோட்டி நகர்,
            சலவன்பேட்டை, 
            வேலூர் – 632 001.
பக்கம்   : 304

விலை  : ரூபாய். 300/-

         - இலக்கியம், மதம், திராவிட அரசியல் ஆகிய முப்பரிமாணத்தின் மீது அமர்ந்து கோலோச்சிய படைப்பாளி கவிக்கோ அப்துல் ரகுமான். அவருடைய முழு படைப்பும் வியந்தும், நயந்தும், மிகுந்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளைக் கவிக்கோ வாசக ரசிகர்கள் கொண்டாடப்படலாம். ஆய்வாளர்கள் முரண்படலாம்.

ஆய்வாளர் முனைவர் ம. ரமேஷ் – க்கு எனது பாராட்டுக்கள்
நல்வாழ்த்துக்கள்.


ந.க. துறைவன். 

முடிவு அல்ல...!!

ஹைக்கூ

பாதையற்ற பாதையில்
சலிக்காத எறும்புகளின்
தொடர் பயணம் முடிவல்ல...

ந க துறைவன்.
*


தொடர் பயணம்...


Thursday 9 November 2017

Monday 6 November 2017

அதிசயங்கள்...!!

Wonder / அதிசயம்.

நீலவானப் போர்வைப்
பூமிக்கு அதிசயம்
பாதையற்ற பாதையில் பயணிக்கும் மேகங்கள் அதிசயம்
நட்சத்திரக் கோலங்கள் அதிசயம்
வட்ட நிலா பேசாமல் போவது அதிசயம்
நீளவாக்கில் கம்பிகளாய்
பொழிகின்ற மழைத்துளிகள்
அதிசயம்
பசுமையான மரங்கள்
விசிறி விடுதல் அதிசயம்
வயல்வெளி நாற்றுகள்
நடனமிடுதல் அதிசயம்
மூங்கில் காட்டில் இசைக்கும்
பாடல் ராகம் அதிசயம்
மலைமுகட்டில் தனித்திருக்கும்
ஓற்றை மரத் தனிமை அதிசயம்
என் வீட்டின் சாரளத்தில் குடியிருக்கும் சிட்டுக்குருவி அதிசயம்
காதலுக்கு கண்ணசைத்து பச்சைக்கொடி காட்டிய காதலி அதிசயம்
பிரபஞ்சததில் நிகழ்வன எல்லாமே அதிசயம்
மனித வாழ்க்கை அதிசயம்
மரணம் ஒருநாள் வரும் நிச்சயம்.

ந க துறைவன்.







வாழ்க்கை அதிசயங்கள்


Saturday 4 November 2017

விட்டில்கள் கொண்டாட்டம்...!! ( கவிதை )




இருள் சூழ்ந்த நேரம்
மரங்கள் அசையவில்லை
ஈரக்குளிர்
மின்விளக்குகள் எரிந்தாலும்
கருமை படர்ந்த வெளிச்சம்
மழைத்துளிகள் சொட்டுகின்றன
விட்டில்கள்
தெரு மின்விளக்கைச்
சுற்றிச் சுற்றி விளையாடுகின்றன
பாதசாரிகள் யாரும்
அந்த விளையாட்டைப் பார்த்து
களிக்கவில்லை
ஆனந்த உற்சாகத்தில்
காமும் அன்பும் பரஸ்பரம்
பகிர்ந்து மகிழ்கின்ற காட்சி
இரகசியம் போல. நிகழ்கிறது
அக்கணத்தில்
விட்டில்கள் அம்பலத்தில்
பேரின்ப வாழ்க்கையைத்
திருவிழா கொண்டாடுகின்றன!!

ந.க. துறைவன். 

Friday 3 November 2017

விமர்சனம்...!! ( கவிதைகள் )




1.
நதியை விமர்சிக்காதே
ஓடக்காரனை விமர்சிக்காதே
மழையை விமர்சிக்காதே
ஆனால், இப் பெருவெளியை
விமர்சம் செய் எப்போதும்
ஏற்கும் இயற்கை.
2.
விமர்சனத்தைப் பார்த்து
ஏன் எரிச்சல் படுகிறார்கள்?
நெஞ்சைத் தைக்கிறது
நெருஞ்சி முள்.
3.
பட்டாம்பூச்சியின் காதலை
எல்லோரும் விமர்சிக்கிறார்கள்
ஆனால், தினந்தினம்
புதியதாய் மலர்கிறது காதல்.
4.
ஆத்திகனைப் பேச வைக்கிறான்
நாத்திகனைப் பேச வைக்கிறான்
எல்லோர் விமர்சனத்தையும்
உவந்து ஏற்கிறான்
வேலை வெட்டி இல்லாத
சமத்துவ சிவன்.
5.
யாரையும் நீ விமர்சிக்காதே
உன்னையே நீ விமர்சித்துக் கொள்
அன்றே நின்று கொல்லும் மனசாட்சி.
6.
விமர்சனம் செய்யாதே
சிவனே என்று சும்மாயிரு.
7.
கடவுளை விமர்சனம் செய்
கோபப்பட மாட்டார்
மனிதனை…???
8.
தேவலோகத்தின்
அரசியல் கலக
விமர்சகர் நாரதர்.
9.
கவிதையை, கவிஞனை
விமர்சிக்காதே
வெறுக்கப்படுவாய்
விலகப்படுவாய் நீ..நீ..!!
ந.க. துறைவன்.